"தொட்டால் தொடரும்" அறிமுக இயக்குனர் கேபிள் சங்கர் இயக்கி கொண்டிருக்கும் படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய இயக்குனர் கேரக்டருக்கு பொருத்தமான ஹீரோயின் படத்தின் வெற்றிக்கு முக்கியம் மேலும் ஹீரோயின் அருந்ததி ஏற்கனவே சுண்டாட்டம் படத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பாரா என்பதை அவருக்கு டெஸ்ட் ஷூட் நடத்திய பிறகுதான் முடிவு செய்தோம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வின்சென்ட் அசோகன் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் ஷேக், பாலாஜி வேணுகோபால் உள்ளிட்டோர் நடிக் கின்றனர். துவார் சந்திரசேகர் தயாரிக்கிறார். விஜய் ஆர்ம்ஸ்டிராங் ஒளிப்பதிவு.
பி.சி.சிவன் இசை. மீடியம் பட்ஜெட் படமாக இது தயாரிக்கப்பட்டாலும் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஹெலி கேம் கேமரா வெளிநாட்டில் இருந்து வரவழைத்து பல காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது.
0 comments:
Post a Comment