Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

சிம்பு நயன்தாரா சேர்றாங்க.... கார்த்தி தமன்னா சேர்றாங்க. என்னய்யா நடக்குது இங்கே?

பையா, சிறுத்தை என கார்த்தி-தமன்னா ஜோடி சேர்ந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட். அதனால் அவர்களது நெருக்கமும் இறுக்கமானது. அதையடுத்து, இனி எனது எல்லா படங்களிலுமே தமன்னாதான் நாயகி என்று கார்த்தி அறிவிக்கயிருந்த நேரத்தில், இது ஆபத்தாயிற்றே என்று அவரது அபிமானிகள் ஒன்றினைந்து அவர்களது கூட்டணிக்கு குண்டு வைத்தனர். அதனால், இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.


ஆனால், என்ன காரணமோ, தமன்னா கார்த்தியை விட்டு பிரிந்த நேரம், அவரை விட்டு அதிர்ஷ்ட தேவதையும் பிரிந்தது போலாகி விட்டது. நடித்த எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் மறுபடியும் தமன்னா வீரம் படத்தில் நடிக்க வந்தபோது மீண்டும் அவருடன் இணைந்து, வெற்றிக்கனியை பறிக்க ஆசைப்பட்டார் கார்த்தி.


அதை நிறைவேற்றி வைக்க அவரிடம் கதை சொன்ன சில டைரக்டர்கள் நான் நீயென்று முன்வந்தபோதும், இப்போது ஆரம்பம் படத்தையடுத்து கார்த்தியை இயக்கப்போகும் விஷ்ணுவர்தன், அதை நடைமுறைப்படுத்தப்போகிறாராம. ஆனால், உங்களது ஆஸ்தானே நடிகை நயன்தாராவாயிற்றே? என்று அவரிடம் கேட்டபோது, என்னைப்பொறுத்தவரை ஹீரோக்களுக்கு பொருத்தமான ராசியான நடிகைகளைத்தான் இணைக்க நினைப்பேன். அப்படித்தான் பில்லாவில் நடித்தபோத அஜீத்-நயன்தாரா கூட்டணி ஒர்க்அவுட் ஆனதால் ஆரம்பத்திலும் அது தொடர்ந்தேன். அதேபோல் கார்த்தி-தமன்னா நடித்த படங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருப்பதால், அந்த செண்டிமென்ட் தொடர வேண்டும் என்பதற்காக இந்த படத்திலும் அவர்களை இணைக்கிறேன் என்றாராம் விஷ்ணுவர்தன்.

0 comments:

Post a Comment