Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 15 February 2014

அமைதியாக சாதித்த மோகன்... பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி!


முக்தா சீனிவாசனின் சகோதரர் வி.ராமசாமி, 1982ல் தயாரித்த படம் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’. மேடை நாடகமான இது படமாக எடுக்கப்பட்டது. கே.சுந்தரம் திரைக்கதை, வசனங்களை எழுதியிருந்தார். முக்தா சீனிவாசன் இயக்கினார். எம்.எஸ்.வியின் இசையில் உருவான படம். சிவாஜி, சுஜாதா, பூர்ணிமா, மனோரமா நடித்தனர். நாடகத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன், அதே வேடத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு படத்தில் டபுள் ரோல்

526 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம், ‘பயணங்கள் முடிவதில்லை’. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைதம்பி தயாரித்தார். கதையும் அவரே. திரைக்கதை, வசனங்கள் எழுதி ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். இளையராஜாவின் இசை, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மோகன், பூர்ணிமா, எஸ்.வி.சேகர், நாகேஷ், கவுண்டமணி நடித்தனர். கமல், ரஜினி திரையுலகில் ஆர்ப்பாட்டத்துடன் வெற்றிகளை தந்து கொண்டிருந்த நேரம் அது. காதல் கதை, மெலடி இசை ஆக¤யவற்றை பக்க பலமாக கொண்டு அமைதியாக வெற்றிகளை பதிவு செய்து கொண்டிருந்தார் மோகன். அவரது வளர்ச்சியும் அமைதியாகவே இருந்தது. ‘பயணங்கள் முடிவதில்லை’ படம், அவரது கேரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மோகன் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு விநியோகஸ்தர்கள் அப்படத்தை வாங்கிச் செல்லும் நிலையை உருவாக்கிவிட்டார்.

பாக்யராஜின் வித்தியாசமான கதை அமைப்பில் உருவானது ‘பொய்சாட்சி’. பாக்யராஜ், சுமித்ரா, ராதிகா நடித்தனர். ராமகிருஷ்ணன் இயக்கினார். ஆனால், அவரது இயக்கத்தில் பாக்யராஜுக்கு திருப்தி இல்லை. படம் வெளிவரும் நேரத்தில் இது தொடர்பாக பெரிய பிரச்னை ஏற்பட்டது. படத்தில் டைரக்டர் பெயர் நீக்கப்பட்டது. ‘சூட்டலு உன்னாறு ஜாக்ரதா’ தெலுங்கு படத்தின் தமிழாக்கம் போக்கிரிராஜா. ஏவிஎம் தயாரித்தது. 180 நாட்கள் ஓடியது. பாலய்யாவின் கதைக்கு பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனங்களை எழுதினர். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். எம்.எஸ்.வி இசை. ரஜினிக்கு இரட்டை வேடம். ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், அசோகன் நடித்தனர்.

கவிதாலயாவின் ‘புதுக்கவிதை’ படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். கன்னட படத¢தின் ரீமேக்தான் இந்த படம். ரஜினி, தேங்காய் சீனிவாசன் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். 100 நாட்கள் ஓடியது. தெலுங்கில் ‘டைகர் ரஜினி’ என டப¢ செய்யப்பட்டது. ஏவிஎம்மின் மற்றொரு வெற்றிப் படம் ‘சகலகலா வல்லவன்’. கமல்ஹாசன் டபுள் ரோலில் நடித்து செம ஹிட்டான படம். குமரன், சரவணன், பாலசுப்ரமணியம் இணைந்து தயாரித்தனர். ரஜினி கேங்கை சேர்ந்த எஸ்.பி.முத்துராமன், கமலுடன் கூட்டண¤ அமைத்து இந்த மெகா ஹிட் படம் தந்தார். பஞ்சு அருணாசலம் கதை மற்றும் வசனங்களை எழுதியிருந்தார். ‘பல்லடுரு சிம்மம்’ என தெலுங்கிலும், ‘வசந்தோம் சவம்’ என மலையாளத்திலும் டப் ஆன படம். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. கமலுடன் அம்பிகா, சில்க் ஸ்மிதா, தேங்காய் சீனிவாசன், விகேஆர் நடித்தனர்.

முக்தா பிலிம்ஸ் நிறுவனத்துக்காக வி.ராமசாமி தயாரித்த படம் ‘சிம்லா ஸ்பெஷல்’. முக்தா சீனிவாசன் இயக்கினார். கதை, திரைக்கதை, வசனங்களை விசு எழுதியிருந்தார். எம்.எஸ்.வி. இசையமைத்தார். கமல், ஸ்ரீபிரியா, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோரமா, புஷ்பலதா நடித்தனர். Ôசினேகாபிஷேகம்Õ என இந்தப் படம், தெலுங்கில் மொழிமாற்றமானது. தமிழில் ராமநாயுடு தயாரித்த படம் ‘தனிக்காட்டு ராஜா’. கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி வி.சி.குகநாதன் இயக்கினார். வாலியின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்தார். ரஜினியுடன் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ் நடித்தனர். ‘கிராம கச்சலு’ என இந்தப் படம், தெலுங்கில் மொழிமாற்றமானது.

மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படும் த்ரிஷா!

மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் த்ரிஷா.


சமீபத்தில் கொச்சின்  சென்றிருந்தார் த்ரிஷா. அங்கு அவர் அளித்த பேட்டி: தமிழ் படங்கள் கேரளாவில் நன்றாக ஓடுகிறது என்பது எனக்கு தெரியும்.


தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்தையும் கேரள ரசிகர்கள் வரவேற்று ரசிக்கிறார்கள்.


எனக்கும் மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் நிச்சயம் நடிப்பேன்.


மல்லுவுட் ஹீரோ மோகன்லால்தான் எனக்கு பிடித்தமான ஹீரோ. கேரளா எனக்கு மிகவும் பிடித்த இடம்.


3 மாதத்துக்கு ஒருமுறை நான் கேரளாவுக்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறேன். எனது நிறைய பட ஷூட்டிங் இங்கு நடந்துள்ளது.


கவுதம்மேனன் இயக்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா‘ படமும் இங்குதான் படமானது.


என்னுடைய பாட்டி பாலக்காட்டில்தான் வாழ்ந்து வருகிறார். அவரை பார்க்க அடிக்கடி நான் பாலக்காடு வருவேன்.


 நான் நடித்துள்ள ‘பூலோகம்‘ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


தற்போது கன்னட படமொன்றில் நடித்து வருகிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார். 

நயன்தாராவுக்கு சம்பளம் எவ்வளவு? இயக்குனர் பதில்!

நயன்தாராவுக்கு வித்யாபாலனைவிட அதிக சம்பளம் தரப்பட்டதா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் சேகர் கம்முலா.


 பாலிவுட்டில் வெளியான கஹானி தமிழில் ‘நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் அனாமிகா என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படம் பற்றி இயக்குனர் சேகர் கம்முலா கூறியதாவது:


இதுவரை ரீமேக் படங்கள் இயக்கியதில்லை. இதில் நயன்தாரா நடித்தது மிக பொருத்தமாக அமைந்தது. இந்தியில் நடித்த வித்யாபாலனைவிட சிறப்பான நடிப்பை வெளியிட்டிருக்கிறார்.


வித்யாபாலனைவிட நயன்தாராவுக்கு அதிக சம்பளம் தரப்பட்டதா? என்கிறார்கள்.


அவருக்கு தரப்பட்ட சம்பளம் அவரது தகுதிக்கு பொருத்தமானதுதான். சம்பளம் எவ்வளவு கொடுத்தார் என்பது தயாரிப்பாளருக்குத்தான் தெரியும். ஆனால் நயன்தாராவின் நடிப்பு எனக்கு திருப்தி தந்தது.


 இந்தி ரீமேக்காக இருந்தாலும் இப்படத்தின் திரைக்கதையை முற்றிலும் மாற்றி இருக்கிறேன். மேலும் கர்ப்பிணிபோன்ற கதாபாத்திரமும் மாற்றப்பட்டது. பெண்கள் துணிச்சலானவர்கள். எனவே கர்ப்பிணி வேடம்போட்டு அந்த கேரக்டருக்கு கருணை தேடவிரும்பவில்லை.


 ‘இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு நயன்தாரா வராதது ஏன்? என்கிறார்கள்.


அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மரகத மணி இசை. விஜய் சி.குமார் ஒளிப்பதிவு.


 தெலுங்கில் நான் இயக்கிய லீடர் படத்தை தமிழில் ரஜினியை பார்க்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் நடித்து அப்படத்தை இயக்கவேண்டும் என்பது என் கனவு. இவ்வாறு சேகர் கம்முலா கூறினார். 

ரஜினியின் ‘கோச்சடையான்’ பாடல் வெளியீடு மார்ச் மாதம்!

ரஜினியின் கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழா மீண்டும் தள்ளிப் போகிறது.


இவ்விழாவை வருகிற 28–ந்தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. தற்போது அடுத்த மாதம் (மார்ச்) இரண்டாவது வாரத்துக்கு பாடல் வெளியீட்டு விழாவை தள்ளி வைத்தனர். கடந்த மாதமே பாடல்களை விழா நடத்தி வெளியிட திட்டமிட்டனர். இப்போது இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


‘கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11–ந்தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வருகிறது. மொத்தம் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.


கோச்சடையான் படம் அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் போன்று தயாராகியுள்ளது. மோஷன் கேப்ஷர் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு உள்ளது.


இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மணி, விஜயகுமார், ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசைமையத்துள்ளார். வரலாற்று கதையம்சத்தில் உருவாகியுள்ளது.

கவலைப்படாதீர்கள் பாலு, உங்கள் படைப்புகள் வாழும் - கமல்ஹாசன்!



நமது சினிமாவில் எது நல்ல அம்சம், எது அப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருந்ததில்தான் பாலுமகேந்திராவின் மேதமை அடங்கியிருந்தது.

புத்திசாலிகள் நிறைந்த ஊரில், அறிவும் ஞானமும் பெற்ற மனிதர் அதிகப் பயனுள்ளவராக இருப்பார். பாலுமகேந்திரா படித்தவர். அதனாலேயே எங்களுக்குச் சினிமா அறிவு இருக்க வில்லை என்று சொல்லிவிட முடியாது. புதிய ஊடகமாக சினிமா வடிவம் இருந்ததால், நாடகம் மற்றும் இலக்கியத்திலிருந்து பெற்றிருந்த முன் அனுபவத்தை சினிமா என்ற முற்றிலுமான புதிய ஊடகத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்தப் புதிய ஊடகத்துக்கு வேறு வகையான கவர்ச்சி இருந்தது.

சினிமாவின் இலக்கணத்தை ஒவ்வொருவரும் அவரவர் துணிகரத்தில், இழப்பில்தான் கற்றுக்கொண்டார்கள் - சில நேரங்களில் மற்றவரின் இழப்பிலும். தமிழ் சினிமாவில் சாதனையாளர்களாக அப்போது இருந்தவர்கள் அனைவரும், கடும் உழைப்பின் வழியாகவே தங் களை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்போது குருகுலம் போன்ற பயிற்சி முறை இருந்தது. நாங்களும் அதை பின்பற்றினோம்.

பாலுவும் அவரது நண்பர்களும் புனே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பள்ளியில் படித்து வந்தவர்கள். இந்திய சினிமா புதிய காற்றைச் சுவாசித்தது மட்டுமின்றி, அந்தக் காற்று இந்தியச் சினிமாவையே மாற்றியது. அப்போ திருந்த சினிமா தொழில்துறை தங்களுக்குத் தகுதியானதல்ல என்று பாலுவின் தலைமுறை மாண வர்களில் சிலர் நினைத்தார்கள். ஏனெனில், அவர்கள் சர்வதேசத் தரத்திற்குப் பயிற்சிபெற்றவர்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டார்கள்.

அவர்களில் ஒருவர் அல்ல பாலுமகேந்திரா. அவருக்குத் தமிழராக இருப்பதில் பெருமை இருந்தது. தமிழ் சினிமாவைக் கேலி செய்யாமல், தனது நன்றியறிதலைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

நன்கு படித்த ஒரு மனிதன், கிராமத் துக்குத் திரும்புவதை போல அவர் திரும்பினார். அவருக்கு எந்த அம்சம் வலுவானது, எது தவறானது என்பது முழுமையாகத் தெரிந்திருந்தது. அவரது கணிப்பு சரியாகவும் இருந்தது. அப்படித் தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.

வித்தியாசமான பாணி

நாங்கள் பிரபலமாக ஆவதற்கு முன்பே, மிகுந்த தன்னம்பிக்கை உள்ள இளைஞனாக அவரைப் பார்த்து ஆச்சரியம் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. "யார் இந்த ஆள்? இவரது எழுத்து நடையே வித்தியாசமாக உள்ளது" என்று கேட்டிருக்கிறேன். அவர் சம்பிரதாயமான முறையில் வேலை செய்யவில்லை.

ஷாட்களுக்கு அவர் ஒளியூட்டும் முறை எனக்கு மிகவும் பிடித்தமானது. புகழ்பெற்ற இயக்குநர் ராமு காரியத்துடன் பணியாற்றப் போகிறார் என்று என்னிடம் கூறப்பட்டது. அத்துடன் சேதுமாதவனோடு சேர்ந்து பணிபுரியலாம் என்றும் சொன்னார்கள்.

இயக்குனர் சுகதேவ் அலுவாலியா போன்றவர்கள், அவரது செட்டுக்கு வருவதைப் பார்த்து நான் ஆச்சரியமடைந் திருக்கிறேன். சுகதேவ் எனக்கு ஹீரோவைப் போன்றவர். அவரது விளம்பரப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். தனிப் பாணி கொண்டவை அவை. பாலுவுக்கு எப்படியான சகாக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். நானும் அவரது நண்பனாக மாறிவிட்டேன்.

பாலு முதலில் ஒரு படத்தை இயக்க விரும்பியபோது, நான்தான் ஹீரோ என்று சொன்னார். வெறும் நட்பார்ந்த உறுதிமொழியாக அதைச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், கோகிலா படம் எடுத்தபோது அவர் வார்த்தையை நிரூபித்தார்.

நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்த கனவு நனவானது. நாங்கள் அணியாகச் சேர்ந்து வேலையும் செய்தோம். நான் நடித்த பல படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

நாங்கள் தொடர்ந்து சந்தித்தோம். சினிமா பற்றிப் பேசினோம். கிசுகிசுவாகக்கூட ஒரு படம் ஏன் கிளாசிக்காக ஆகவில்லை என்பதைத்தான் பேசுவோம். தனிப்பட்ட நபர்களைப் பற்றிப் பேசியதே இல்லை.

நிறைய நினைவுகள்

அவருடன் சேர்ந்து பல நினைவுகள் எனக்கு உண்டு. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி விழும் இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நீந்திக் குளிப்போம். அருவியின் குறுக்காக யார் நீச்சலடித்துச் செல்ல முடியும் என்று பந்தயம் வைப்போம். நீரோட்டம் உங்களைக் கடுமையாக இழுக்கும். அந்த நூறு மீட்டரை வேகமாகக் கடக்க வேண்டும். நாங்கள் கடந்தோம்.

கேமராக்கள் குறித்தும் நாங்கள் நிறைய பேசியுள்ளோம். அவருக்கு எல்லாவற்றைப் பற்றியும் தெரியும். அப்போது தமிழகத்தில் ஒரே மாதிரியான திரையிடல் முறை இல்லாததால், ஒரு ஒளிப்பதிவாளரின் ப்ரேமிங் எந்த நேரத்திலும் மோசமாகிவிடும் வாய்ப்புண்டு. என்ன ப்ரேமை படத்தில் வைக்கிறோமோ அது தியேட்டரில் இருக்காது. ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு விதமான திரையிடல் இருந்தது.

உலகளாவிய அளவிலான தரநிலை அப் போது இல்லை. ஒரு அங்குல அளவுள்ள பொருள், திரையில் பெரிதாகத் தெரியும். நெருக்கமான ப்ரேமில், உதடுகளும், மூக்கின் முனையும் வைக்கப்பட்டிருந்தால், கிராமத்துத் திரையரங்கில் நம்மால் உதடுகளைப் பார்க்க முடியாது. அல்லது பாதி உதடுகள் தெரியும்.

பாலுமகேந்திரா அந்தத் திரையிடல் குறைபாடுகளைச் சின்ன ஒரு உத்தியைப் பயன்படுத்திச் சரிசெய்தார். அதை யாரும் செய்வதற்குத் துணியவில்லை. கேமராவின் செவ்வக ஆடியில் ஒரு தடுப்பை (மாஸ்க்கை) பொருத்தினார். கேமராவுக்கு வெளியே உள்ள உலகை அவர் சரிசெய்யாமல், தனது வேலைப் பரப்பைக் குறைத்துக்கொண்டார். அவர் ஏற்படுத்திக்கொண்ட முறையில் தவறே நிகழாது. நீங்கள் அதீதமாகக் குவித்தாலும், கருப்பு ப்ரேம்தான் வரும். அதை அதிகம் சுருக்கவும் முடியாது.

எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர் அதைச் செய்தார். அதனால்தான் அவர் முன்னோடியாக இருந்தார். நாங்கள் சந்திக்கும்போது, உலகச் சினிமா மேதை கள் அனைவரின் படங்களையும் அவர் பார்த் திருந்தார். முக்கியமான திரைப்பட கர்த்தாக் கள் சிலரையும் நேரில் சந்தித்திருந்தார்.

விதிகளை உடைத்தவர்

பாக்ஸ் ஆபீசுக்கும் நல்ல சினிமாவுக்கும் இடையில் முதல் பாலத்தைக் கட்டியவர் பாலுமகேந்திராதான். அவர் எடுத்த மூன்றாம் பிறை வெள்ளி விழா கண்ட படம். தேசிய விருதும் பெற்றது. விருது வாங்கும் படங்கள் ஓடாது என்ற எழுதப்படாத விதியை அவர் உடைத்தார். ஒரு திரைப்பட இயக்குநராக எனது வளர்ச்சியில் பங்குபெற்றவர் அவர்.

ஒரு திரைக் கலைஞனாக எனது வளர்ச்சியில் பாலுமகேந்திராவின் பங்கு முக்கியமானது. எனது வளர்ச்சியில் கே. பாலச்சந்தரின் பங்கு முற்றிலும் மாறுபட்டது, அது தனிக்கதை. பாலுமகேந்திராவிடம் இருக்கும் பெரிய புகார் என்னவெனில் அவர் நிறைய படங்களைச் செய்திருக்கலாம். குறைந்த பட்சம் கூடுதலாக 20 படங்கள். நிறைய படங்களில் ஒளிப்பதிவாளராகவாவது பணியாற்றியிருக்கலாம்.

மூன்றாம் பிறை கதையை முதலில் அவர் என்னிடம் சொன்னபோது, 20 நிமிடம்தான் கேட்டேன். ஒப்புக்கொண்டேன். கிளைமாக்ஸை மட்டும் சரி செய்ய வேண்டும் என்று கூறினேன். மனம் உடைந்த மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை அதிகபட்சமாக நிகழ்த்து வதற்கு முயற்சித்தோம். மண்ணில் புரண்டு, மழையில் உருளும் அந்தக் காட்சி மறக்க முடியாதது. மூன்றாம் பிறையின் இந்தி வடிவமான சத்மாவின் கிளைமாக்ஸில் மழைக்காகக் காத்திருந்தோம். சரியாக மழையும் பெய்தது. பாலு அதை மந்திரத் தருணம் என்று சொன்னார்.

பாலுவைக் கொண்டாடுவோம்

நாங்கள் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருந் தோம். அவரது மரணத்தால் நான் நிலை குலைந்து போய்விடவில்லை. மரணம் நம் எல்லாருக்கும் வரும் என்று எனக்குத் தெரியும்.

அவர் நிறைய படங்களைச் செய்திருக்கலாம் என்பது மட்டுமே எனது ஒரே குறை. ஆனால், அவரது மாணவர்கள் அதைப் பூர்த்தி செய்துவிட்டார்கள். பாலுமகேந்திராவைப் போன்ற மனிதரை இழப்பதில் உள்ள சோகமான விஷயத்தை, அவருடன் எனக்கு ஏற்பட்ட மகத்தான தருணங்கள் பூர்த்தி செய்யும். அவரது மரணத்துக்காகத் துக்கிப்பதைவிட, அந்தத் தருணங்களைக் கொண்டாட வேண்டும்.

நான் அவரை மரணப் படுக்கையில் பார்த்தி ருந்தாலும், இதைத்தான் சொல்லியிருப்பேன். "கவலைப்படாதீர்கள் பாலு, உங்கள் படைப்புகள் வாழும்." 

பாலுமகேந்திரா குறித்து மனம் திறக்கிறார் மௌனிகா!

 சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல ஒரு சிறந்த குடும்பத்தலைவராகவும் பாலுமகேந்திரா இருந்தார் என்று மௌனிகா கூறியுள்ளார்.

மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான நடிகை மௌனிகா கூறியதாவது.

‘‘சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் பாலு மகேந்திரா. 1985-ம் ஆண்டு வெளியான ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அறிமுகமானேன். எங்கள் திருமணம் 2000 ல் நடந்தது. 28 ஆண்டுகால அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது. சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல அவர் சிறந்த குடும்பத் தலை வராகவும் இருந்தார்.

என் இயற்பெயர் விஜயரேகா. அவரின் நிறைய படங்களில் நாயகியின் பெயர் விஜியாகவே இருக்கும். என்னை சந்திப்பதற்கு முன்பே ‘மூன்றாம் பிறை’ படத்தில் நாயகிக்கு விஜி என்கிற பெயரை வைத்திருப்பார். என்னை சந்தித்தபின், “உன்னை பார்க்க இருந்திருக்கிறேன் என்பதால்தான் அந்தப்பெயர் எனக்கு பிடித்ததாக அமைந்திருக்கிறது” என்று சொல்வார்.

சமீபத்தில் வந்த ‘தலை முறைகள்’ படத்தில்கூட நாயகிக்கு விஜி என்ற பெயரைத்தான் வைத்திருந்தார். அந்த படத்தில் அவர் இறந்துவிடுவதுபோல காட்சி அமைந்ததாலேயே இது வரைக்கும் அந்தப்படத்தை நான் பார்க்கவே இல்லை. என்னை அழகழகாக படம் பிடிப்பது அவருக்கு அத்தனை இஷ்டம். அவர் என்னை எடுத்த படங்களையெல்லாம் பெட்டகமாக வைத்திருக்கிறேன்.

சமீபத்தில் 20 வயது பெண்ணை தத்தெடுத்து வளர்க்கப்போகிறேன் என்று அவர் சொன்னபோது எல்லோருக்கும் எழும் கோபம் எனக்கும் வந்தது. அதனால் அவ்வப்போது பேசாமல் இருந்தவர், எப்போதும் என் நினைவுகள் இல்லாமல் இருந்ததில்லை. அவர் யார் மீது கோபம் கொண்டாலும் அது நிரந்தரமாக இருந்ததில்லை. அவருக்கு யார்மீதும் வெறுப்பே வராது. சமீப காலமாக அவருடைய வயோதிகம் என்னை பாதித்துவிடக்கூடாது என்று எங்கள் நெருக்கமான நண்பரிடம் சொல்லிச்சென்றதாக கூறியிருக்கிறார்.

அவருக்கு இரண்டாவது முறையாக அட்டாக் வந்தபோதுதான் எங்களுடைய திருமண விஷயத்தை தெரியப் படுத்தினார். ஆபீஸ் போய்விட்டு திரும்புகிறேன் என்று சொன்னவர். பத்திரிகை யாளர்களை அழைத்து திருமண விஷயத்தை சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதி லிருந்துதான் அவருடைய முதல் குடும்பம், நெருக்கமான உறவினர்களிடம் இருந்து நான் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நான் உன்னை பிரிந்துவிட்டால், நீ நிச்சயம் அழாமல் வந்து என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு உடனே சென்றுவிட வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தார்.

எங்கள் இருவரின் அன்பைப் பற்றி அவரே, இயக்குநர் பாரதிராஜாவிடம் நிறைய சொல்லி வைத்திருக்கிறார். இப்போதும் அவரை கடைசியாக பார்க்க முடியாதோ என்கிற ஏக்கத்தில் இருந்தபோது இயக்குநர் பாரதிராஜா, விடுதலை, வெற்றிமாறன் உள்ளிட்டவர்களின் முயற்சியால் அவரது முகத்தை கடைசியாக பார்க்க முடிந்தது.

அவருடைய மகன் கௌரி சங்கரிடம், ‘ஒரே ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்!’ என்று கண்ணீருடன் போனில் கேட்டேன். அவரும் எந்த மறுப்பும் இல்லாமல் பார்க்க அழைத்தார். தந்தையின் அந்த இரக்க குணம் மகனுக்கும் இருப்பதைத்தான் இது உணர்த்தியது.

என்னை, அவரைப் பார்க்க விடாதவர்கள் பற்றி எதுவும் பேச வேண்டாம். எல்லோர் மனதிலும் இடம் பிடித்த அந்த ஆன்மா.. இனி இல்லை. அந்த துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சிக்க வேண்டும். பார்க்கலாம். 

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.

இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு,எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.

ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான்.

அவுஸ்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை
கரையச் செய்கிறது.

இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும்.

பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நம்ம ஊரு அரசியல்வாதிங்க இதை படிச்சா நல்லா இருக்கும்...

படத்தில் இருக்கும் இந்த பெரியவரின் பெயர் Dobri Dobrev.98 வயதாகும் இவர் இரண்டாம் உலக போரின் போது கேட்கும் திறனை இழந்தவர் [ காது கேளாதவர்]



தான் வசிக்கும் கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் நடந்து சென்று சோஃபியா என்னும் நகரத்தில் தினந்தோறும் பிச்சை எடுக்கிறார்.


அவர் பிச்சை எடுக்கும் அத்தனை பணத்தையும் அனாதை இல்லங்களுக்கு கொடுத்து விடுகிறார்.இவர் இதுவரை தோராயமாக 40,000 யுரோக்களை [28 லட்சம்] தானமாக கொடுத்துள்ளார்.


தனக்கு மாதம் தோறும் வரும் பென்சன் பணம் 80 யுரோக்களையும் அனாதை இல்லங்களுக்கே கொடுத்து விடுகிறார்.



நம்ம ஊரு அரசியல்வாதிங்க இதை படிச்சா நல்லா இருக்கும்...

’MRPன்னா…என்ன?’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’

சூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மாலை 6:10 ஆகியிருந்தது. அருகில் என்ன தியேட்டர் இருக்கிறது என்று பார்த்தால், குமரன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. உடனே அதே சாலையில் சென்று குமரனை அடைந்தேன்.

டிக்கெட்டில் இருக்கை எண் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். அட! என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றால், வாங்கிய 80 ரூபாய்க்கு, தியேட்டர் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. மால் அளவு எதிர்பார்க்காமல் இருந்தால், நல்ல தியேட்டர்தான். இடைவேளையில், தண்ணீர் தாகமெடுக்க, குடிநீர் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று கேண்ட்டீனை அணுகினால், 25 ரூபாய் சொன்னார்.

நான், அதன் MRP 20 தான். நீங்கள் அந்த விலைக்குத்தான் கொடுக்கவேண்டும். என்று சொன்னவுடன்,

’MRPன்னா…என்ன?’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’ என்று அந்த ஆள் திமிராகச் சொல்ல,

’ஏன் தியேட்டர் என்ன எத்தியோப்பியாலயா இருக்கு! மொத்த இந்தியாவுக்கும் ஒரே சட்டம்தான் . நீங்க அதிகபட்ச சில்லறை விலைக்குத்தான் கொடுக்கணும்’ என்றேன்.

’இல்லை சார்! அதெல்லாம் தர முடியாது… கொஞ்சம் நகருங்க!’ என்று வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். அதுவும் பல புரட்சியாளர்கள் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

எனக்கு தண்ணீர் தாகம் வேறு.. ஆனால், அ.சி.வி (அதிகபட்ச சில்லறை விலை) விட ஒரு ரூபாய்கூட அதிகம் கொடுத்து வாங்குவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். மீண்டும் அவரை சத்தமாகக் கேட்டேன். என்னைக் கண்டுகொள்வதாகவே இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்தால், மேலாளர் அறை அருகிலேயே இருந்தது. அங்கு சென்றேன். அது கண்ணாடிக்கதவு. நான்கைந்து பேர் உள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நான் வெளியில் நிற்பதைப் பார்த்துவிட்டு, கதவைத்திறந்துகொண்டு வந்தார்.

மேனேஜரைப் பார்க்கணும் என்றேன்.

உள்ள ஓனர் உக்காந்திருக்காரு! என்ன விஷயம்? என்றார்.

“சார்! நான் வாட்டர் பாட்டில் வாங்க வந்தேன். 20 ரூபாய் பாட்டிலை 25 ரூபாய்க்கு விக்கிறாங்க! அது சட்டப்படி குற்றம். அ.சி.வி க்கு மேல் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும் என்னால் பறிமுதல் செய்ய வைக்க முடியும். நீங்கள் சொந்தமாக பாக்கெட் போட்டு விற்கும் பொருளுக்கு என்ன விலை வைத்தாலும் அது உங்கள் பொறுப்பு. ஆனால், விலை அச்சிடப்பட்டுள்ள பொருளில் அதைவிட அதிகமாக விற்கக்கூடாது.” என்றேன்.

ஒரு நிமிஷம் இருங்க! என்றுவிட்டு உள்ளே சென்றார்.

மீண்டும் வெளியில் வந்தார். நேராகக் கேண்ட்டீன் சென்றார். விற்பனையாளரிடம் ஏதோ பேசினார். ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தார். என்னிடம் வந்தார். கொடுத்தார்.

நான் 20 ரூபாய் பணம் கொடுத்தேன்.

அதெல்லாம் வேண்டாம் சார்! என்றார்.

நான் உங்களிடம் சும்மா கேக்கலை. அதிக விலை வைத்து விக்காதீங்கன்னேன். இதுக்கான விலையை வாங்கிக்குங்க என்று பணத்தை நீட்டினேன். வாங்கி கடைக்காரரிடம் கொடுத்தார். கேட்டால் கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இதை எவ்வளவுக்கு விக்கிறீங்க என்றார்…

25 என்றான் இன்னொரு விற்பனையாள இளைஞன்.

ஏண்டா இவ்ளோ ஜாஸ்தியாக்கிட்டீங்க… என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்துவிட்டார்.


எல்லாப் பொருட்களுமே திரையரங்க கேண்ட்டீன்களில் விலை அதிகமாகத்தான் இருக்கின்றன. இதை யாரும் கேட்பதும் இல்லை. வாடிக்கையாளர் குறைவு..! முழுநேரக் கடை இல்லை.. என்ற பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், உங்கள் திரையரங்கில் நுழைந்த ஒரு காரணத்துக்காகவே வந்தவனின் டவுசரை உருவுவது எந்தவிதமான வியாபார நோக்கம் என்று புரியவில்லை.

ஆனால், இதில் நான் முழுமையாகக் குற்றம் சாட்ட விரும்புவது பொதுமக்களைத்தான். நான் அவ்வளவு நேரம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். யாரும் கண்டுகொள்ளக்கூட இல்லை. குறைந்தபட்சம் 15 பாட்டில்கள் விற்பனை ஆகியிருந்தன. ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல், தனக்கான தீனியில் மையம் கொண்டிருந்தார்கள். இவர்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது.

தனக்கு முன்னால் நடக்கும் சிறு தவறைக்கூட தட்டிக்கேட்க திராணியற்ற கூட்டத்துக்கு , தன் இனத்துக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகங்களை தட்டிக்கேட்க எங்கிருந்து திராணி வரும்..?

காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்!

தி.மு.க வை சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் தோல்வியுற்றார் காமராஜர்.


அப்பொழுது தி.மு.க வினர் "படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்" என சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.


அதற்கு பதிலடியாக ஒரு சுவரொட்டி அதே பகுதிகளில் ஜொலித்து சிந்திக்கவும் வைத்தது...


அது "படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்" என்று....

அந்த சுவரொட்டியை ஒட்டியது அய்யா தந்தை பெரியார்.


அந்தளவு காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்.


சொந்தமாய் கல்வி நிலையம் தொடங்கி கோடிகளை சுரண்டவோ, நிலம் புலங்களை வாங்கி சொத்து சேர்க்கவோ அல்ல..


முதுகெலும்பில்லாமல் சாய்ந்து இருந்த தமிழ் சமூகம் சுயமரியாதையோடு நிமிர, அதிகாரத்தில் இருந்த பச்சை தமிழன் காமராஜரை பயன்படுத்திகொண்டார் அய்யா பெரியார்.


அவருக்கு வளைந்து கொடுத்தார் கல்வி கண் திறந்த காமராஜர். தன்னின் குடும்பத்தை வளர்த்து கொள்ளவோ, மாளிகைகளை கட்டவோ அல்ல....

தான் வளைந்தாவது தன் தமிழ் சமூகம் நிமிர வேண்டும் என்று... சுய சாதிக்குள் அடைந்து போனவர் அல்ல காமராஜர். சாதியம் மறைந்து சமத்துவம் உருவாக உழைத்த உத்தமர்.


இரண்டு போராளிகள் சேர்ந்து தமிழினம் சுயமரியாதை பெற சாதி ஒழித்து, கல்வி அறிவு பெற்று, சம நிலை மனிதம் மலர பாடுபட்டனர்.


இந்த இரண்டு போராளிகளும் தமிழகத்தை சீர்திருத்தாமல் இருந்திருந்தால்..... அனைத்திலும் பின்தங்கி இருக்கும் ஒரு சில வட மாநிலங்கள் போல தமிழகம் இன்று இருந்திருக்கும்.

சென்னை - பெயர்க்காரணம்!

சென்னை - பெயர்க்காரணம்:

சென்னை:

சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :-

முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் -

கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்:

1). மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.

2). மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை:

சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:-

ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:-

1).ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது)

2). செயிண்ட் தாமஸ் மலை என்று ஒரு வெள்ளையரின் பெயரால் அழைக்கப்பட்டு, சென்னையர்கள் வாயில் அப்பெயர் நுழையாததால் பரங்கி மலை என்று மருவியது. [பரங்கியர் = வெள்ளையர்]

சேத்துப்பட்டு:

மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

'துப்பாக்கி' படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி என்பதாலும், விஜய்க்கு இது 57வது படம் என்பதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கல்கத்தாவில் விஜய் வில்லனைத் துரத்தும் காட்சிகளை இரவு பத்து மணியில் இருந்து அதிகாலை நான்கு மணி வரை படமாக்கி இருக்கிறார்கள்.

விஜய்க்கு வில்லனாக  பெங்காலி நடிகர் டோடா ராய் சௌத்ரி நடிக்கிறார். கதைப்படி டோடா ராய் ஒரு இன்டர்நேஷனல் தாதா. அவரை இந்தியாவுக்குத் தந்திரமாக வரவைத்து பிடிக்க லோக்கல் கிரிமினலான விஜய்யின் உதவியை போலீஸார் நாடுகிறார்கள்.

அப்படி திட்டமிட்டு வில்லனை கொல்கத்த வரவைத்த விஜய், அவரை சேஸ் செய்து பிடிக்கும் காட்சிகளைத்தான் தற்போது படமாக்கிவருகிறார்களாம்.இதனால் ஜெயிலுக்கு செல்கிறார் டோடா ராய். அதற்குப் பிறகு விஜய்யைப் பழிவாங்கப் புறப்படுகிறார். ஆனால், விஜய் மாதிரி இரண்டு பேர் இருப்பதைப் பார்த்து குழப்பம் அடைகிறார்.

இதில் யார் கிரிமினல் விஜய்? இன்னொரு விஜய் என்ன செய்கிறார்? வில்லனுக்கும் - விஜய்க்கும் ஏற்படும் மோதல் எப்படி முடிகிறது? என்பதுதான் படத்தின் கதை. விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.

டோடா ராய் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகளை எடுப்பதற்காக வரும் பிப்-21ல் ராஜமுந்திரிக்கு கிளம்புகிறார்கள் படக்குழுவினர்.இன்னும் பெயர் ஏதும் வைக்கப்படாத இந்தப்படம் தற்போதைக்கு விஜய்யின் 57வது படம் என்றே சொல்லப்பட்டு வருகிறது.

18 கோடி சம்பளம் வாங்குகிறாரா முருகதாஸ்?


ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் படத்தின் படப்பிடிப்பு  வேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

'துப்பாக்கி' படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி என்பதாலும், விஜய்க்கு இது 57வது படம் என்பதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தை lyca புரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

அனல் அரசு சண்டைப் பயிற்சியைக் கவனிக்கிறார். லால்குடி என். இளையராஜா கலை இயக்கத்தில் ஈடுபடுகிறார்.

பெரிய அளவிலான டெக்னிக்கல் டீமுடம் முருகதாஸ் களம் இறங்கி இருப்பதால், படத்தின் பட்ஜெட் 100கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிக்க விஜய்க்கு 22கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 18 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

காமெடி, கீமெடி பண்றாங்க!

நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த விஷயங்களில் ஒன்று வடிவேலு டயலாக். வடிவேலு காமெடி அட்ராசிட்டி டயலாக்குகள் இப்போதும் உலகத் தமிழர்களுக்குத் திருவாசகம். ஊரப்பாக்கம் ஓ.எம்.ஆர். பக்கத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வரும் சாஃப்ட்வேர் மக்களுக்கு வடிவேலுதான் இப்போதைக்கு எவர்க்ரீன் என்டர்டெய்னர். இதோ ஒரு நாளில் நம் இன்ஜினீயர் நண்பரின் மைண்ட் வாய்ஸில் வடிவேலு எத்தனை இடங்களில் ஒளிந்திருக்கிறார் என சின்னதாய் அலசிப் பார்ப்போமா?

காலையில எழுந்திருக்கும்போதே 'துரை இன்னிக்கு சீக்கிரமாக் கௌம்பிட்டாரு போல’ என ரூம் மேட்ஸ் தங்களுக்குள் கிசுகிசுப்பார்கள். 'ஆஹா, கௌம்பிட்டாய்ங்கய்யா கௌம்பிட்டாய்ங்கய்யா... ஒண்ணு கூடிட்டாய்ங்களே... இன்னிக்கு நாமதான் சமையல் செய்யணும்கிறதை ஞாபகப்படுத்தி ஃபிகரைப் பார்க்கவிடாமப் பண்ணிடுவாய்ங்களோ?’ என டர்ராகிவிடுவீர்கள்.

' டே நாறப் பயலே... வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கெல்லாம் இன்ஃபோசிஸ் பொண்ணுக்காகப் போய் பஸ் ஸ்டாப்புல‌ தேவுடு காக்குறியே... அந்த நேரத்துல நாலு லாங்வேஜ் கத்துக்கிட்டு இருக்கலாம். வேற நல்ல கம்பெனிக்காச்சும் ஷிஃப்ட் ஆகி இருக்கலாம். பொறம்போக்கு பொறம்போக்கு’ என்று திட்டித் தீர்ப்பார்கள். 'யூ மீன் வேஸ்ட் லேண்ட்... மணி கம் டுடே. டுமாரோ கோஸ்யா... பட் லவ் எவர் லாஸ்ட்டிங். ஸிங் இன் தி ரெயின்... ஐ அம் சொய்ங் இன் தி ரெய்ன்’ எனப் பாட்டுப் பாடி அங்கிருந்து எஸ்கேப் ஆகப் பார்ப்பீர்கள். ஆனால், பாத்ரூமில் இருந்து வந்த ஒருவன் புதுசாய் விட்ட இடத்திலிருந்து கன்டினியூ பண்ணுவான். 'ஆஹா... ஒரு மார்க்கமாத்தான்யா போய்க்கிட்டு இருக்காய்ங்கே’ என நினைப்பீர்கள். உங்கள் காதலுக்கு ஜால்ரா அடிக்கும் சீனியர் ஒருவரைத் தட்டி எழுப்பி சப்போர்ட்டுக்கு அழைப்பீர்கள். அவரோ, 'போன மாசம்தானடா லவ்வு கிவ்வெல்லாம் விட்டுட்டுப் படிக்கப்போறேனு தலையில அடிச்சு சத்தியம் பண்ணினே... அதெல்லாம் பொய்யா?’ என கேட்பார். 'அது போன மாசம்... இது இந்த மாசம்’ என்று டபாய்ப்பீர்கள்.

புதுசா ஒரு புரொஜக்ட் ஆரம்பிச்சு சிஸ்டத்தில் பிள்ளையார் சுழி போட்டால் ரொம்ப நேரமா சிஸ்டம் ஆஃப்லைன்ல சைலன்ட்டா இருக்குன்னு வையுங்க. நீங்க என்ன நினைப்பீங்க? 'என்ன இவ்வளவு யோசிக்குது.. எதுவும் சதி கிதி பண்ணப்போகுதா..?’னுதானே?

'டே, நீதான் அத்தனை டாஸ்க்கையும் ஒரே நாள்ல முடிக்கிற ஆளாச்சே. நீயே ஆன்ஸைட் ஒர்க்கை எல்லாம் பாருடா’ என எந்தப் பக்கியாச்சும் உங்களை பெரிய டார்கெட்டில் கோர்த்துவிடப் பார்க்கும். 'என்னா வில்லத்தனம்’ என்பதைப் புரிந்துகொண்டு, ' டே என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திவிட்டுத்தான்டா பூரா வேலையவும் என் தலையில கட்டிவிட்டுட்டு ஜோடிஜோடியா மாயாஜால்ல போய் உட்கார்ந்துக்கிறீங்க’ என்பீர்கள்.

எப்படியோ சமாளித்துத் தப்பித்தாலும் டார்ச்சருக்குப் பிறந்த டார்ச்சர்... மேனேஜரிடம் ஒரு நாள் எக்குத்தப்பாய் மாட்டிக்கொள்வீர்கள். அவர் ரூமுக்கு அன்பாக அழைத்து பவர்பாயின்ட்டில் படம் காட்டி ஃப்ளோ சார்ட், கிராஃப் அது இதுன்னு விளக்க வெங்காயம் உரித்து, கடைசியில் உங்கள் கண்ணில் நீர் வரவழைத்து லெக்சர் கொடுப்பார். 'சார் நான் பண்ணுற ஒர்க்ல என்ன தப்பு?’ என அப்பாவியாய்க் கேட்பீர்கள். 'ஆமா, நீ புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான். எப்போதான்யா ஒழுங்கா டீமை லீட் பண்ணப்போறே? உன்னை எல்லாம் எவன்யா ரெக்ரூட் பண்ணினான்?'' எனச்  சொல்லிக் காயப்படுத்துவார். அப்போது, 'இப்பவே கண்ணைக் கட்டுதே... ஆத்தி இம்புட்டு கோவக்காரன்னு நினைச்சுக்கூட பார்க்கலையே.

 ஷேவிங் பண்ண குரங்காட்டம் இருக்கானே... கடிச்சுவெச்சிருவானோ?’ என்று அப்பாவியாய் மைண்ட் வாய்ஸ், மைலாப்பூர் வரை போகும். ஒரு கட்டத்தில் உஷ்ணமாகி, 'கட்டத்துரைக்குக் கட்டம் சரியில்லை... நம்மகூட வெளாடுறதே வேலையாப்போச்சு’ என மனசுக்குள் மணியாட்டியபடி, 'எங்க அம்மா சத்தியமா நான் நல்லா வேலை செய்வேன் சார்... இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்’ என வான்ட்டடாக வண்டியில் ஏறிக்கொள்வீர்கள். ஒருவழியாகச் சமாளித்து சீட்டுக்கு வந்து உட்கார்ந்தால், ' உள்ளே அவருக்கே லெக்சர் கொடுத்த போல இருக்கு. சூப்பர்டா. உன் டேலன்ட் வருமா?' என கைப்புள்ளயாக்குவான் ஒரு டோங்கிரி மண்டையன். ஆனால், உள்ளே நடந்ததை ஒருத்தி ஒட்டுக்கேட்டிருப்பாள். 'என்னடா அவரு இந்த வாங்கு வாங்குறாரு. சைலன்ட்டா நின்னுட்டு இருந்தே. கம்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சவன்தானே நீயி... அப்புறம் ஏன்டா பேஸிக் விஷயத்துலகூட அவர் கேட்ட கொஸ்டீனுக்கு முழிச்சே?' என அலப்புவாள்.

பார்டரில் பாஸாகி டிகிரி வாங்கிய நீங்களோ ரொம்ப நல்லவனாய் மாறி, '’பில்டிங்கு ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்கு' என வெள்ளந்தியாய் சிரித்து சமாளிப்பீர்கள்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, ''இப்படி ஒரே மொக்கைத்தனமாவே எழுதிட்டு இருக்கீங்களே பாஸ்... வேற ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணுங்களேன்'  என்றார்.  அவருக்கு நான் சொன்ன பதில்... 'ஆங்... அப்படின்னா ஒரு பேங்க் வெச்சுக் குடுங்க நடத்துறோம்’

அவரோட ரியாக்ஷன்... ''அவ்வ்வ்வ்வ்வ்வ்!'

பக்கா விமர்சனம் - பண்ணையாரும் பத்மினியும்!

ஒரு 'பண்ணையாரும் பத்மினி’ காரும்... அவ்வளவுதான் கதை!

தொலைபேசி, தொலைக் காட்சிப் பெட்டி என தன் கிராமத்துக்கு எதையும் அறிமுகப் படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு விடும் பாசக்காரப் பண்ணையார் ஜெயப்பிரகாஷ். அவரிடம் ஒரு ஃபியட் பத்மினி கார் வந்து சேர்கிறது. ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி துளசி, கார் டிரைவர் விஜய் சேதுபதி என அனைவரின் பிரியத்¬யும் சம்பாதிக்கிறது பத்மினி. இந்த நிலையில் பண்ணையார் குடும்பம் அந்தக் காரைப் பிரிய வேண்டிய சந்தர்ப்பம். பண்ணையார் - பத்மினி இடையிலான அன்பு என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்!

யூ-டியூப் ஹிட், டி.வி. ஷோ விருது... எனக் கவனம் குவித்த குறும்படத்தை, திரைப்படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண்குமார். சிகரெட், புகையிலை, மது... என போதைச் சமாசாரங்கள் படத்தில் இல்லை. அட, படத்தில் வில்லன்கூட இல்லை. இப்படி நல்லன மட்டுமே காட்டி ஒரு படம் தந்த இயக்குநருக்கு... அன்லிமிட்டெட் அன்பு!

படத்தின் ஹீரோ... ஜெயப்பிரகாஷ். வெள்ளந்திப் பாசக்காரராக, 'எனக்கு டபுள்ஸ் ஓட்டத் தெரியாதே’, 'கியர் கம்பி இல்லைன்னா என்னடா.. வந்து தேடிக்கலாம். முதல்ல வண்டியை எடு’ என்று நிலவரம் புரியாமல் கலவரம் பண்ணும்போதும், காரைப் பார்க்கும்போதெல்லாம் துள்ளல் நடையோடு ஓடிவருவதும், தானே துடைத்து மகிழ்வதுமாக... அசத்தல். பண்ணையாரின் மனைவியாக துளசி... பக்கா. ஜெயப்பிரகாஷ§டன் இணைந்து முறைத்துக்கொள்வது, இடித்துக் கொள்வது, காதலில் நெகிழ்வது என கிளாசிக் ரொமான்ஸ் கொடுத்திருக்கிறார். (அதுவே சமயங்களில் 'ஓவர் டோஸ்’ ஆவதைத் தவிர்த்திருக்கலாம்!)

'செகண்ட் ஹீரோ’ விஜய் சேதுபதிக்கு, பண்ணையாரின் காதல் அத்தியாயத்துக்கு இடம்விட்டு, கிடைத்த இடத்தில் 'டாப் கியர்’ தட்ட வேண்டிய நெருக்கடி. ஐஸ்வர்யா மீதும், பச்சைக் கலர் பத்மினி மீதும் காதல்கொண்டு அலையும் இடங்களில் சடசடவென கியர் மாற்றி ரசிக்கவைப்பவர், ஆங்காங்கே கலகலக்கவும் வைக்கிறார்.

'பீடை’யாக வரும் பாலசரவணன்தான் படத்தின் காமெடி ஏரியாவுக்கான மொத்தக் குத்தகை. 'பட்டப்பேருதான் பீடை.. பெத்தவங்க வெச்ச பேரு பெருச்சாளி’ என்று கெத்துக் காட்டும்போது, 'அண்ணே ரொம்பப் பேசுறாய்ங்க... நான் வேணா 'நல்லா இருங்க’னு சொல்லட்டா’ என்று கொதிக்கும்போதும் அதிருது அரங்கம்!

கதை நிகழும் காலகட்டத்தில் ஏன் இத்தனை குழப்பம்? 'அண்ணாமலை’ படம், சக்திமான் சீரியல், மாட்டுவண்டி, மினி பஸ்... எனத் தாறுமாறாக எகிறுது டைம்லைன். பண்ணையார் பத்மினியை ஓட்டுவதைத் தவிர, எந்தச் சவால் சுவாரஸ்யமும் திரைக்கதையில் இல்லை. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் திரும்பத் திரும்ப காரை ஓட்டிக்கொண்டே இருப்பது... சரியா சார்?

வருடல் பாடல்களில் வசீகரிக்கும் ஜஸ்டின் பிரபாகரனின் அறிமுக இசை, எண்பதுகளின் காலகட்ட பின்னணி இசையிலும் செம ஸ்கோர். பத்மினியின் உள்ளிருந்து, மேல் இருந்து, வெளியில் இருந்து... அந்தக் காரையும் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறது கோகுல் பினோய்-யின் ஒளிப்பதிவு.

சின்னக் கதை. ரொம்ப நீ...ளமான திரைக்கதை. பத்மினியில் பயணம் அழகுதான். ஆனால், அலுப்பு அதிகம்!

சிவாஜி தி பாஸ்!

சிவாஜி கணேசன் மகத்தான நடிகர். ஆனால், சில படங்களைப் பார்த்தபோது சிவாஜி தவிர வேறு யாரும் அந்தக் காட்சிகளில் நடித்திருக்க முடியாது எனத் தோன்றியது. அப்படிப்பட்ட சில சிவாஜி எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளைப் பார்த்து யாம் பெற்ற இன்பத்தை நீங்களும்...

'திரிசூலம்’ படத்தில் குரு, சங்கர் என்று அண்ணன் தம்பிகளாக இரண்டு சிவாஜிகள். பிரிந்த அண்ணன் தம்பிகளை தேங்காய் சீனிவாசன் சேர்த்துவைத்ததும்,  கடத்திச் செல்லப்பட்ட தங்கள் அம்மா(?) கே.ஆர்.விஜயாவை மீட்க இருவரும் கிளம்புவார்கள். வழக்கமாக அம்மாவை மீட்கக் கிளம்பும் டபுள் ஹீரோக்கள் வெறிகொண்ட வேங்கைகளாக, சினம்கொண்ட சிறுத்தைகளாகக் கிளம்புவதுதான் தமிழ் சினிமாவின் வழக்கம்.

 ஆனால், 'திரிசூலம்’ படத்திலோ இரு சிவாஜிகளும் மூணாறு ஹில்ஸ் வியூ பார்க்கச் செல்பவர்கள்போல் ஓப்பன் ஜீப்பில் ஏறி 'இரண்டு கைகள் நான்கானால்...’ என பாட்டுப் பாடி ஜாலி ட்ரிப் அடிப்பார்கள். கொஞ்சம் சாதுவான சிவாஜி லேசாக ஹம் செய்தபடி ஜீப் ஓட்ட, குறும்புக்கார சிவாஜி ஜீப்பின் கம்பிகளைப் பிடித்தபடி மிகுந்த சிரமப்பட்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் சிவாஜியின் தோள்களில் ஏறி அமர்ந்து ஜாலி ரியாக்ஷன்கள் காட்டுவார்.

 உலக சினிமா வரலாற்றில் அம்மாவை மீட்கச் செல்லும் மகன்கள் ஜாலி காட்டுவதும், வண்டி ஓட்டுபவர் தோளில் ஏறி அமர்ந்து உறவுகளின் நெருக்கத்தைக் காட்டி ரசிகர்களை உறையவைத்ததும் சிவாஜி என்ற ஒருவர்தான்.

ஒரு நாள் டி.வி. சேனல் மாற்றிக் கொண்டிருந்தபோது சிவாஜி பட்டுச் சட்டை வேஷ்டி அணிந்து யாரிடமோ பவ்யமாக பதில் அளித்துக்கொண்டிருந்தார். இடையிடையே

'கிழிச்ச

மூஞ்சியப் பாரு...

ச்சீய்

மடையா

பல்லை உடைப்பேன் ராஸ்கல்

அறிவு கெட்டவனே

ஏண்டா பாவி

மனுசனா நீ ?’ என ஏகத்துக்கும் வசவுகள் வேறு.

பிறகுதான் புரிந்தது. சிவாஜி சண்டை போட்டுக்கொண்டிருந்தது அவரின் மனசாட்சியுடன் என்று. கிழி கிழி கிழி என்று கிழித்தது மனசாட்சி தான். கொஞ்ச நேரம் அமைதி யாக வசவு வாங்கிக்கொண்டிருந்தவர் திடீரென மனசாட்சியை வெறிகொண்டு வெளியே தள்ளி கதவைத் தாழிடுகிறார். ரூமிற்குள் சென்றவர் இருப்புக்கொள் ளாமல் அங்குமிங்கும் அலைந்துவிட்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்து,

'அப்பா மனசாட்சி, எங்கடா போயிட்ட?

நீயும் என்ன தனியா விட்டுட்டுப் போயிட்டியா?

கோவிச்சுக்காத. வாடா’ என கட்டிங் குடிக்கக் காசு கொடுக்காததால் கோபித்துக்கொண்டு சென்ற பக்கத்து மேன்சன் நண்பனைக் கூப்பிடுவதுபோல மனசாட்சியைக் கூப்பிடுகிறார். மனசாட்சியும் கதவைத் திறந்து உள்ளே வந்து 'சக்கப்போடு போடு ராஜா’ என்று பாடுகிறது. மனசாட்சியுடன் மானாவாரியாக மல்லுக்கட்டியது  சிவாஜி ஒருவர்தான். 'பாரதவிலாஸ்’ படம் பாருங்கள். சிவாஜியின் மனசாட்சி சண்டைக் காட்சியைப் பார்த்து சிலிர்த்திடுங்கள்.

'திருப்பம்’ என்று ஒரு படம்.

சவுக்குக் காட்டிற்குள் பீச் மணலில் சிவாஜி மிகுந்த சிரமப்பட்டு ஒரு சவப்பெட்டியை இழுத்துக் கொண்டு புதையப் புதைய நடந்து வருவார். திடீரென நாலைந்து ரவுடிகள் சிவாஜியைச் சூழ்ந்துகொண்டு ''ஏய்! மரியாதையா பெட்டிக்குள் இருக்கிறத எடு'' எனக் கேட்க சிவாஜியும் பம்மிப் பயந்தவராக மெல்ல அந்தப் பெட்டியை திறக்க, அங்கதான் இருக்கு ட்விஸ்ட்.

பெட்டிக்குள் இருந்து. ஏ.கே.47-ஐ எடுத்து அத்தனை வழிப்பறிக் கொள்ளையர்களையும் என்கவுன்ட்டர் செய்வார்.

அதற்குப் பின்தான் தெரிகிறது சிவாஜி புதிதாக அந்த ஊருக்கு ரவுடிகளை ஒழிக்க வந்திருக்கும் போலீஸ் அதிகாரி என்று.

சவப்பெட்டி விற்கும் நாகர்கோவில் சூசை என்றுதானே சிவாஜி கெட்-அப் பார்த்த யாருமே நினைக்க முடியும். பாவம், அந்த வெள்ளந்தி ரவுடிகளும் அப்படித் தானே நினைத்திருப்பார்கள். இப்படி போங்கு ஆட்டம் ஆடிட சிவாஜி ஒருவரால்தான் முடியும். அதனால்தான்,  சிவாஜி... தி பாஸ்!

மருத்துவ குணம் மிக்க `தவுண்’


மருத்துவ குணம் மிக்க `தவுண்’

பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருளான தவுண், தென்காசி பகுதியில் மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.

கர்ப்பகதருகு

மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.

பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது, அதில் கிடைக்கும் பச்சைக் குருத்து உண்ண சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். வீடுகள் வேயவும், படுக்கவும், உட்காரவும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பனை ஓலை பயன்படுகிறது.

கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகள் குளுமையான காற்று தருபவை.

இயற்கைகள் 


பனைமர பாளையிலிருந்து பதநீர் கிடைக்கிறது. அதில் சுண்ணாம்பு கலக்காமல் விட்டால், அது சுவையானதாகவும், இயற்கையான, ‘கள்’ என்ற பானம் கிடைக்கும். பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.

பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுண்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

அளவில்லா மருத்துவ குணங்கள்


பனைமரத்தின் பயன்பாட்டை சித்த மருத்துவர்கள் பட்டியலிடுகிறார்கள்.

மனிதரின் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல் வீடுகள் கட்டுவதற்கும் இம்மரங்கள் துணையாக இருந்தன. பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெயிலில் உலர்த்தி, உரித்து எடுக்கப்படும் நார் கயிறாக பயன்பட்டது.

வீடுகளில் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பற்ற வைக்க, பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், காய்ந்த ஓலைகளும் தேவைப்பட்டன. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயன்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

பனைமரங்கள் வெட்டி அழிக்கப்படு வதுடன் பனைத்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருகாலத்தில் பிரதான தொழிலாக இருந்த பனைத்தொழில் இப்போது மெல்லமெல்ல தேய்ந் து கொண்டிருக்கிறது. பனைமரத்தி லிருந்து வெட்டி எடுக்கப்படும் நுங்கு, பதநீர் ஆகியவை சாலையோரங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

60 நாள் மட்டும் 


ஆனால், பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) கொட்டைகளை மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறப்படும் தவுணை, 25 ஆண்டுகளுக்குமுன்புவரை பலரும் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள். இப்போதைய தலைமுறையினருக்கு தவுணை குறித்து பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மருத்துவ குணமிக்க இந்த தவுண் திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையில் ராமச்சந்திரப்பட்டினம் பகுதியில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. பனைஓலையால் உருவாக்கப்பட்ட பட்டையில், 20 துண்டுகள் வரையிலான தவுண் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்தளம்பாறை கிராமத்தில் பெரும்பாலானவர்கள் பனைத் தொழிலாளிகள். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்பகுதியில் தவுண் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், ஜூன், ஜூலை மாதங்களில் குற்றால சீசன் நேரங்களிலும் பழைய குற்றாலம் பகுதியில் ஒரு பட்டை தவுணை ரூ.60-க்கு விற்க்பப்படுகிறது.

டாக்டர்கள் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு இது அருமருந்தாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாக இது இருக்கிறது. நுங்கு விற்பனை செய்யும்போது தவுணையும் கூடவே விற்பனை செய்கிறார்கள்.

பாலில் கலப்படம்..! உஷார்...!

பாலில் கலப்படம்..! உஷார்...!

நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான். ஆனால், தற்போது, வட மாநிலங்களில் நடக்கும் பால் கலப்படம், உயிரையே பறித்து விடும் ஆபத்து கொண்டது எனக் கூறினார் இத்துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர்.

உ.பி., ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருவதாகவும் கூறினார் நண்பர்!

"சிந்தெடிக்' பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?

* காஸ்டிக் சோடா.
* தண்ணீர்.
* ரீபைன்ட் ஆயில்.
* உப்பு.
* சர்க்கரை.
* யூரியா.

இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்!

பாலை சோதனை செய்யும் நிமித்தம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டு இருக்கிறார் நண்பர். அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு, "டிடர்ஜென்ட்' சோப் பவுடருக்கு ஏக, "டிமாண்ட்' இருப்பதைக் கண்டு இருக்கிறார். இந்த கிராக்கிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை புலப்பட்டுள்ளது.

இந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால், அதில் இருந்து வரும் வாசனை, பால் வாசனை போலவே இருந்ததாம். இந்த சோப்புத் தண்ணீரை, பாலுடன் கலந்து விற்பனை செய்து விடுகின்றனராம்!ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனை மேற் கொண்ட, 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற கலப்படம் நடப்பதை நண்பர் கண்டு பிடித்துள்ளார்!

பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!

இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, "ஹோமோஜினைஸ்' என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, "குளோபுயூல்ஸ்' - சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!

பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டுமா?

பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டுமா?

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை!

உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.

தேவையான பொருள்கள் :

கொள்ளு – 4 ஸ்பூன்

பூண்டு – 5 பல்

தக்காளி – 2

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

துவரம்பருப்பு – 1 ஸ்பூன்

பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

தாளிக்க

நல்லெண்ணெய் – சிறிது

கடுகு – சிறிது

வரமிளகாய் – 2

செய்முறை :

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம். கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு,கொள்ளு சூப் ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.சளி காணாமல் போகும்.