மனதளவில் துவண்டு போய், "தாம் எதற்குமே லாயக்கில்லை" என முடிவு செய்து வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு "எந்த ஒரு செயலையும் திறம்பட செய்ய முடியவில்லையே" என்ற வருத்தத்தோடு, ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு இப்பதிவு கட்டாயம் ஒரு புத்துணர்வு அளிக்கும் 'டானிக்' ஆக அமையும்.
முயற்சி இல்லாமல் யாரும் முன்னேறமுடியாது. முன்னேறுவதற்கு மட்டுமல்ல சாதாரணச் செயல்களுக்குக் கூட முயற்சி தேவை.
இறையருள், அதிர்ஷ்டம், நல்ல நேரம் ஆகியவற்றின் துணை இல்லாமல் யாரும முன்னேற முடியாது என்று பொது மக்களின் மத்தியில் ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.
ஆனால், எந்த வித முயற்சியும் இல்லாதவர்களுக்கு இறையருள், அதிர்ஷ்டம், நல்ல நேரம், ஆகியவைக்கூடக் கூடிவரச் சாத்தியமில்லை. ஏன்கனவே முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்குத் தான் இவை மூன்றும் அனுகூலம் செய்கின்றன.
மனித இனத்தின் தலை சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான தாமஸ் ஆல்வா எடிசன் நூற்றுக்கும் மேற்பட்ட பதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். ஆனால், இவருடைய எந்தக் கண்டுபிடிப்பும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில்,
திரும்பத் திரும்ப முயன்று ஒவ்வொரு நிலையாக உயர்ந்து தவறுகளையும், குறைகளையும் களைந்து அவற்றைச் சரிசெய்த பின்னரே எடிசன் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார். அவர் அதுபோல விடாமல் முயற்சி செய்யாமலிருந்தால், ஒரு கண்டு பிடிப்பைக் கூட, அவரால் உருவாக்க முடியாமல் போயிருக்கலாம்.
எத்தனையோ பேர் விமானத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த முயற்சிகளிலெல்லாம் தோல்வியடைந்தாலும், அந்த முயற்சிகளிருந்தும் கற்றுக்கொண்ட பாடத்தினால் தான் ரைட் சகோதரர்களின் முயற்சி வெற்றி பெற்றது. ஆனால், ரைட் சகோதரர்கள் உருவாக்கிய முதல் விமானம் கூடச் சில அடி தூரமே பறந்தது.
அதன்பின்னரும், விமானத்தைச் சீரமைப்பதற்காகத் தொடர்ந்து மேற்கொள்ளபட்ட முயற்சிகளினால் தான், இன்றைய சொகுசான விமானப் போக்குவரத்து சாத்தியமானது.
ஒரு செயலைச் செய்வதற்கான முயற்சிக்குத் தடையாக எத்தனை விதமான காரணிகள் இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பார்ப்போமா?
அந்தச் செயலைப்பற்றி நினைத்ததுமே, தோல்வி ஏற்பட்டு விடுமோ என்று நமக்கு ஏற்படுகின்ற பயம் அந்த செயலை மேற்கொளவதற்கான முயற்சிக்கு முதல் தடையாக இருக்கின்றது.
சரிதானே வாசகர்களே.. உங்களுக்கு இதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கும்..
அதைச் செய்தால் மற்றவர்கள்நம்மை எப்படியெல்லாம் விமர்சிப்பார்களோ என்னும் அச்சம், ஒன்றைச் செய்தால் நன்றாகச் செய்ய வேண்டும். இல்லையெனில் அதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது என்னும் நம்முடைய எண்ணம், நமக்கெல்லாம் இது சரிப்பட்டு வராது என்னும் தாழ்வு மனப்பான்மை இவை எல்லாம் தான் முயற்சிக்குத் தடையாக இருக்கின்றன.