Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

தமிழில் முத்தக்காட்சி இடம் பெற்ற முதல் படம்!

தமிழில் தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர்கள் மூவர் மட்டுமே, கே.வி.மகாதேவன் அவர்கள், இளையராஜா, ரஹ்மான்.

லைலா மஜ்னு, தேவதாஸ், அனார்கலி, என்ற 3 காதல் காவியத்திலும் நடித்த பெருமை நாகேஸ்வரராவ் அவர்களுக்கு உண்டு.

திரைப்பட துறையில் தெலுங்கில் தான் அதிக படங்கள் எடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 140 படங்கள் வரை. இதுவரை ஒரே ஒரு படம் மட்டுமே எடுக்கப்பட்ட மொழி சம்பாபுரி என்ற இந்திய மொழி. 2 படங்கள் படகா மொழியில் வந்துள்ளது.

30 ஆண்டுகள், எண்ணூற்று அறுபது படங்கள், குறையாத இளமையோடு கவர்ச்சி ஆட்டம் போட்டவர் நடிகை ஹெலன். யாரடி நீ மோகினி - சிவாஜியோடு ஆடியவர்.

திரை உலகில் முதலில் நுழைந்த திராவிட இயக்க தலைவர் அண்ணாவோ, கலைஞரோ இல்லை. பாரதிதாசன் தான் 1935-ல் கவிகாளமேகம் என்ற படத்துக்கு கதை வசனம் பாடல்கள் எழுதினர்..

தமிழில் முத்தக்காட்சி இடம் பெற்ற முதல் படம் ஹரிதாஸ்.

நாவலை கொண்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் பாவை விளக்கு. அகிலன் அவர்கள் நாவல் இது.

ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் மணமகன் தேவை.

முதன்முதலாக ஸ்லோ மோஷன் காட்சி எடுக்க பட்ட படம் வசந்தமாளிகை.

0 comments:

Post a Comment