Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 8 March 2014

இன்று மாலை 6.30 மணி முதல் திரையரங்குகளில் நிமிர்ந்து நில்!

சமுத்திர கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் ராகினி திவேதி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இப்படம் நேற்று (07.03.2014) வெளியாவதாக இருந்தது. ஆனால், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குமிடையே ஒருசில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி நேற்று வெளியாகவில்லை.


நேற்று வெளியாகும் என்று திரையரங்குக்கு சென்ற ரசிகர்கள் படம் திரையிடப்படாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.


இந்நிலையில் படத்தை வெளிக்கொண்டுவர விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தை இன்று காலை முடிவுக்கு வந்தது.


அதனால், இன்று மாலை 6.30 மணி காட்சி முதல் இப்படம் வெளியாகவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கோச்சடையான் விழாவில் ரஜினி புது பட அறிவிப்பு

ரஜினியின் கோச்சடையான் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் எடுத்துள்ளனர்.


இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தி நடிகர் ஷாருக்கான் பங்கேற்கிறார்.


இந்த விழாவில் ரஜினி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுறிது. எந்திரன் படத்துக்கு பின் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அந்த படத்துக்கு ராணா என பெயரிட்டனர்.


ஆனால் பட பூஜையில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படம் நின்று போனது. அதன் பிறகு உடல் நிலை சரியான பிறகு சவுந்தர்யா இயக்கிய கோச்சடையானில் நடித்தார். இது 3டி மோஷன் பிக்சர்ஸ் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.


ஏப்ரல் மாதம் இப்படம் ரிசீலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு பிறகு ரஜினி கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகின்றனர். இந்த படம் பற்றிய முழு தகவலையும் நாளை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏண்டா பசங்களா... சும்மா இருங்கடா...


பெண்களை டீஸ் செய்துதான் பாடல்கள் எழுதப்படும். கள்ளப்படத்தில் பெண்கள் பார்வையில் ஆண்களைப் பற்றிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது.


கள்ளப்படத்தை மிஷ்கினின் உதவி இயக்குனர் வடிவேலு இயக்குகிறார். படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. உதவி இயக்குனர் ஒருவர் படம் எடுக்க முயற்சிக்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என இந்த நால்வர் அணி அதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்கிறது என்பது கதை.


இந்த நால்வராக கள்ளப்படம் படத்தின் இயக்குர் வடிவேலு மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரே நடிக்கின்றனர்.


இந்தப் படத்தில் ஹீரோயின் ப்ரியா மகாலட்சுமியின் பார்வையில் ஆண்களைப் பார்த்து பாடப்படும் பாடல்தான், ஏண்டா பசங்களா... சும்மா இருங்கடா...


மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தப் பாடலை வெளியிடுகிறார்கள். ஆண் மரியாதை போல இது பெண்களுக்கான மரியாதையாம்.

கோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..?- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி

கோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.


கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான்.


அவர் படங்களின் வர்த்தகம் உலகளாவியது. தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் சந்தைப்படுத்த காரணமாக இருந்தவரும் ரஜினிதான்.


ஆனால் அவரோ தனக்கு இருக்கும் செல்வாக்கை வசூலாக மாற்றுவதிலோ... அரசியலாக்குவதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். பதவி வாய்ப்புகள் எதையும் ஏற்பதும் இல்லை.


சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா என்ற கேள்வியும் அவருக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பாபா படம் வெளியானபோதே கிட்டத்தட்ட இந்த முடிவை எடுத்திருந்தார். நண்பர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, மூன்றாண்டுகள் கழித்து சந்திரமுகியை வெளியிட்டார்.


இப்போது மீண்டும் இதே போன்ற கேள்வியை தன் நெருங்கிய நண்பரான கே பாக்யராஜிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து இயக்குநர் பாக்யராஜ் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், "என்னோட பத்திரிகையாள நண்பர் தமிழ்வாணன் அவரோட மனைவி குழந்தைகளோட என் வீட்டுக்கு வந்திருந்தார். 'என் பெண் குழந்தைக்கு பிறந்த நாள்... நீங்க ஆசிர்வதிக்கணும்'னு சொன்னார். நானும் உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தேன்.


ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தவர், 'சார் என்னோட குழந்தையை ரஜினி சார் ஆசிர்வாதம் செய்யணும். அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்'னு கேட்டார். பொதுவாக நான் யாரையும் ரஜினியிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்திப் பழக்கம் இல்லை.


ஆனாலும், என் நண்பர், குழந்தை சமாசாரத்தைச் சொன்னதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. ரஜினிக்கு போன் செய்தேன். மறுமுனையில் பேசின ரஜினி, 'என்ன சார் இப்படி சொல்றீங்க! நீங்க இதுமாதிரி எல்லாம் கேட்டதே இல்லையே... நான் வீட்லதான் இருக்கேன் அழைச்சுட்டு வாங்க!' என்றார்.


நான் அந்தப் பத்திரிகையாளர் குடும்பத்துடன் ரஜினி வீட்டுக்குப் போனேன். குழந்தையை ஆசிர்வாதம் செய்து அனுப்பிவிட்டு, 'வாங்க கொஞ்சம் பேசலாம்'னு தனியாக அழைச்சுகிட்டுப் போனார்.''


 'தமிழ் சினிமாவுல யங் ஸ்டார்ஸ் நிறைய பேர் நடிக்க வந்துட்டாங்க. இனி நான் தொடர்ந்து நடிச்சு என்ன ஆகப்போகுது? அதனால, 'கோச்சடையான்' படத்தோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க...' என்று படபடன்னு பேசினார் ரஜினி. நான் அதிர்ந்துட்டேன்.


'என்ன ரஜினி திடீர்னு இப்படிப் பேசுறீங்க... உங்களுக்கு என்னாச்சு? உங்ககூட ஆரம்பத்துல இருந்து சினிமாவுல நடிக்க வந்தவங்க நிறைய பேர் இப்போ ஃபீல்டுலயே இல்லை. இருக்கிற சிலரும் அப்பா, சித்தப்பான்னு சின்னச் சின்ன ரோல் பண்ணிட்டு இருக்காங்க. அப்போ இருந்து இப்போ வரைக்கும் சூப்பர் ஸ்டார்னா அது நீங்க மட்டும்தான். இந்தப் பெருமையும் புகழும் யாருக்கும் கிடைக்காது.


உங்க உதட்டுல இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தமிழ் மக்கள் ரசிச்சு ரசிச்சு சந்தோஷப்படுறாங்க. இப்போ எதுக்கு நீங்க நெகட்டிவா யோசிக்கிறீங்க? 'கோச்சடையான்' வெளியானதும் நீங்க அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடணும்'னு சொன்னேன்.


அதுக்கு ரஜினி, 'உங்ககிட்ட சொன்ன இதே விஷயத்தை அமிதாப் சார்கிட்டயும் சொன்னேன். அவரும் இதே பதிலைத்தான் சொன்னாரு. எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க'னு கேட்டு குழந்தை மாதிரி சிரிச்சாரு,'' என்று கூறியுள்ளார்.

சிநேகாவின் மேளம் கொட்டு தாலி கட்டு சீசன் 2

புதுயுகம் தொலைக்காட்சியில் வழங்கும் புத்தம் புதிய மங்களகரமான ரியாலிட்டி நிகழ்ச்சி, ‘மேளம் கொட்டு தாலி கட்டு.' சீசன்-2 தொடங்கியுள்ளது.


இந்த நிகழ்ச்சியை நடிகை சிநேகா தொகுத்து வழங்குகிறார். இந்த புதுமையான நிகழ்ச்சியில் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கு காத்திருக்கும் மூன்று இளம் பெண்கள் தங்கள் வருங்கால ஜோடியுடன் கலந்து கொள்ளலாம்.


போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை புதுயுகம் தொலைக்காட்சி வழங்குகிறது.

மணப்பெண்களுக்குத் தேவையான கல்யாண சீர்வரிசைப் பொருட்களை கேள்விகளை கேட்டு வழங்கும் ரியாலிட்டி ஷோ மேளம் கொட்டு தாலி கட்டு

திரைப்பட நடிகை சிநேகா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அழகான ஆடைகள், அழகழகான நகைகள் என அசத்தலாக வந்து கேள்விகள் கேட்பது நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான சுற்றுகளுடன் விறுவிறுப்பான போட்டியாளர்களுடன் இரண்டாவது சீசன் (சீசன்-2) இன்று தொடங்குகிறது. தொடர்ந்து சனிக் கிழமைதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆறு சுற்றுகளில் இரண்டு லட்சம் மதிப்புள்ள பரிசுகளை போட்டியாளர்கள் வெல்லலாம்.

சுற்றுகள் அனைத்தும் திருமணம் ஆகப்போகும் தம்பதியர் தங்கள் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட கேள்விகள் இடம் பெறுகின்றன.

நாளைய மணமக்கள் இருவருக்குள் இருக்கும் புரிந்து கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை வெளிப்படுத்தும் விதமாக கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, வெற்றி பெரும் பெண்ணிற்கு அவரது திருமணத்திற்கு தேவையான பொருள்கள் பரிசாக கிடைக்கும். "தாலிக்கு"தேவையான தங்கத்தில் தொடங்கி, வீட்டு உபயோக பொருட்கள், திருமணஆடை,அணிகலன்கள் வரை ஒவ்வொன்றாக, இந்நிகழ்ச்சியின் ஆறு சுற்றுகளில் பரிசாக வழங்கப்படும்.


வெற்றி பெரும் போட்டியாளருக்கு ஒரு ரொக்க தொகையும் உண்டு.


பங்கு பெறும் மணப்பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கைப் பயணத்தை நிகழ்ச்சி மூலம் இனிமையாக தொடங்க புதுயுகம் தொலைக்காட்சி வழி வகுக்கிறது என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

திருட்டு விசிடியில் படம் பார்க்கும் லட்சுமிமேனன்! -சித்தார்த் திடுக் தகவல்...

பெரும்பாலான நடிகைகள் சினிமாத்துறைக்குள் வரும்போதுதான் நடிப்பில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், லட்சுமிமேனன் அப்படியல்ல, கும்கி படத்தில் நடித்தபோது எப்படி ஆர்வமாக இருந்தாரோ அதில் துளியும் குறையாமல் இருக்கிறார்.


எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டி நடிக்கிறார். தன்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.


அதன்காரணமாக, படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து நடித்து விட்டு கேரவனுக்குள் செல்பவர், இந்திய அளவில் வெளியான நல்ல படங்களை டிவிடியில் போட்டுப்பார்க்கிறாராம். மற்ற நடிகர்-நடிகைகள் எப்படி எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து அதில் நல்லதை தனது நடிப்புக்கும் பயன்படுத்திக்கொள்கிறாராம்.


அதேபோல்தான், சித்தார்த்துடன் ஜிகர்தண்டா படத்தில் நடித்து வந்தபோதும், திடீர் திடீரென்று கேரவனுக்குள் ஓட்டம் பிடிக்கும் லட்சுமிமேனன். டிவிடியில் படம் பார்த்துக்கொண்டிருந்தாராம். அதோடு, ஏராளமான படங்களின் சிடிக்களையும் ஒரு சூட்கேசில் வைத்திருந்தாராம். அத்தனையும் திருட்டு விசிடிக்களாம்.


இதை ஜிகர்தண்டா படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியின்போது கிண்டலாக சித்தார்த் சொல்லப்போக, அங்கு வந்திருக்கும் சினிமா பிரபலங்கள் தன் மீது பாய்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்தார் லட்சுமிமேனன்.

அண்ணன் தனுசை அசர வைத்த தம்பி சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனை தான் நடித்த 3 படத்தில் தனது நண்பனாக அறிமுகப்படுத்தியவர் தனுஷ். அதையடுத்துதான் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் கதாநாயகனாக நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் அதன்பிறகு தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனையே நடிக்க வைத்தார் தனுஷ்.


அந்த படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஹிட்டாக அமைந்ததோடு, மார்க்கெட்டில் அவரது தரத்தை உயர்த்தியது. அதனால் அதிலிருந்து தனுஷை தனது அண்ணனாக ஏற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன்.


 அதேபோல் தனுசும் சிவகார்த்திகேயனை தனது தம்பியாக ஏற்றுக்கொண்டார். ஆக, அவர்களது அண்ணன்-தம்பி உறவு தொடர்ந்து வருகிறது.


இந்தநிலையில், மீண்டும் தனது தம்பியாகிய சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கிறார் தனுஷ். இன்றைய நிலையில் பல முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களையே போட்டு பார்த்த பிறகுதான் விலை பேசுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.


ஆனால், சிவகார்த்திகேயன் படத்தை இன்னமும் தனுஷ் தொடங்காதபோதே, சிலர் அவரை அணுகி, விலை பேசுவதோடு, பாதி பணத்தை இப்போதே தந்து விடுகிறோம் என்கிறார்களாம்.


ஆக, தம்பியின் இந்த அசுர வளர்ச்சியைக்கண்டு அசந்து நிற்கிறார் தனுஷ்.

15 வருடமாக காத்திருந்தவருக்கு கால்சீட் கொடுத்த ரஜினி!

கோச்சடையானுக்குப்பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், கே.எஸ்.ரவிக்குமார். ஷங்கர் என சிலரது பெயர்கள் அடிபட்டுக்கொண்டேயிருக்கிறது.


ஆனால் ரஜினி தரப்போ, கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகுதான் அடுத்தப் படத்தைப்பற்றி வாய் திறப்பது என்பதில் உறுதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில், அடுத்த படத்தை இயக்குபவர் பற்றி எதுவும் சொல்லாத ரஜினி, தனது அடுத்த படத்தை தயாரிக்கயிருப்பது கர்நாடகத்தைச்சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ் என்பதை கூறியுள்ளாராம். கன்னடத்தில் படங்கள் தயாரித்து வரும் இவர், தமிழில் விக்ரம் நடித்த மஜா என்ற படத்தை தயாரித்தவர்.


ஆனால் அதற்கு முன்பிருந்தே சுமார் 15 ஆண்டுகளாக ரஜினியிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். அப்போது, சரியான நேரம் வரும்போது நானே அழைக்கிறேன் என்று சொல்லியிருந்த ரஜினி, இப்போது அதற்கான சூழல் வந்திருப்பதால், தனது அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை அவரிடமே விட்டிருக்கிறாராம்.


ரஜினியின் இந்த முடிவினால், அடுத்து அவர் நடிக்கிற படத்தை தயாரிப்பதற்கு தயார் நிலையில் இருந்த சில முன்னணி கோலிவுட் பட நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளன. 

பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்!

சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

"சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

"நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.

இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளியூருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.

நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.

ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை-கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

"நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.

"என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.

"இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

"ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''

- இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

"இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மீண்டும் சொன்னார்.

எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.

"இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.