பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் படம் யான் இப்படத்தில் ஜீவா, துளசி நாயர் நடித்து வருகிறார்கள் மேலும் இப்படத்தில் நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மொராக்காவில் படமாக்கி உள்ளனர். மொராக்கோ கட்டுப்பாடான முஸ்லிம் நாடு. அந்த நாட்டில் சர்வதேச தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் ஜீவா அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை ஷூட் பண்ண வேண்டும். அந்த நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கும் போது படத்தின் ஸ்கிரிப்டை கொடுக்க வேண்டும். யான் ஸ்கிரிப்டை படித்த அந்த நாட்டு அதிகாரிகள், எங்கள் நாட்டில் சர்வதேச தீவிரவாதிகள் இல்லை. இங்குள்ள மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். என்று அனுமதி மறுத்தனர்.
வேறு நாட்டு தீவிரவாதிகள் மொராக்கோ வழியாக செல்கிறார்கள் என்று சமாதானம் சொல்லி அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இதற்காக 8 மாதங்கள் வரை காத்திருந்தார்கள். அனுமதி கிடைத்தும் கிளம்பிச் சென்று 3 வாரங்கள் அங்கு தங்கி படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர், இதுவரை கண்டிராத வகையில் இந்த வருடம் பெய்த கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், சண்டைக் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர்.
இவ்வளவு வேகத்தில் படப்பிடிப்பை நடத்திய ரவி.கே.சந்திரனின் வேகத்தையும், படமாக்கும் நேர்த்தியையும் உலகத்தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் வந்திருக்கிறது. ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இப்போது படம் எடிட்டர் டேபிளில் இருக்கிறது" என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் ரவி.கே.சந்திரன்.

0 comments:
Post a Comment