Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

பாவம் பவர்ஸ்டாரையே ஏமாத்திட்டாங்கப்பா!

கோலி சோடா படத்தில் நடித்த தனக்கு அந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் மில்டன் பணம் தராமல் ஏமாற்றியதாக பவர் ஸ்டார் சீனிவாசனம் புலம்பியுள்ளார்.


 இன்றைய சினிமா எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், "கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டார்கள்.


ஆனால் மூன்றே நாட்களில் முடித்துவிட்டார்கள். இதில் நடிக்க ஒரு சிறிய தொகையை மட்டும் முதலில் கொடுத்தாங்க.


மீதிப் பணத்தை அப்புறம் தர்றதா சொன்னவங்க, கடைசி வரைக்கும் தரவே இல்லை. கேட்டா, கொடுக்க முடியாது போய்யா..


 யார் கிட்ட வேணா சொல்லிக்க'ன்னு கேவலமாக பேசறாங்க.


ஆனா பலரும் நான்தான் அடுத்தவங்களை ஏமாத்தறதா சொல்றாங்க.


உண்மையில நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அந்த உழைப்புக்குக் கூட உரிய பணம் தராம ஏமாத்தறாங்க," என்றார்.

0 comments:

Post a Comment