Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 March 2014

விதைக்கப்படும் தூக்குக்கயிறுகள்...

விதைக்கப்படும் தூக்குக்கயிறுகள்...

சாக்கடைகள், கழிவுநீர்ப் பாதைகள், கொல்லைப்புறத் தோட்டம், கிணற்று மேடு என நீர் ஓடும் இடங்களில் எல்லாம் இன்று நம்மால் தூக்கி எறியப்படுகிற சாதாரணக் கடிகார பேட்டரிகள்….. ஒரு பயங்கரமான உயிர்க்கொல்லி என்பது நம்மில் பலருக்கு இன்னும் தெரியாது.

தூர் அடைந்து, துருப்பிடித்துத், துகிலுரிந்த நிலையில் இந்நேரம் அவைகள் எலும்புக் கூடாகியிருக்கும். அந்த மின்கலத்திலுள்ள பொட்டாசியம் ஹைட்ராக்ஸட் எளிதில் நீருடன் சேர்ந்து மின்கலனை அரித்து, உள்ளிருக்கும் பாதரசப் பயில்வானை மண்ணில் கலந்துவிடுகிறது.

பாதரசம் என்பது மூளை நரம்புகளைப் பாதிக்கும் ஒரு வேதிப்பொருளாகும், இது எளிதில் காற்றில் அல்லது நீரில் கலந்து மனித உடலுக்குள் சென்று, மனப்பிறழ்ச்சி, கோமா, தற்கொலையுணர்வு எனப் பலவிதமான உபாதைகளை ஏற்படுத்துக்கூடிய வல்லமை பெற்றது.

இதற்குக் காரணம் யார்?


பாதரசமற்ற கலங்களைத் தயாரிக்காத நிறுவனமா?

அதைத் தரநிர்ணயம் செய்ய அலட்சியம் காட்டுகிற அரசுகளா?

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாத உள்ளாட்சி அமைப்புகளா?

அல்லது இதை அறியாமல் இன்னமும் குப்பையில் வீசிக்கொண்டிருக்கிற நாமா?

பதில் எதுவாக இருப்பினும்…… பலியாகப் போவது நமது சந்ததிகள்தான்.

எம்.ஜி.ஆர் வாங்கிய கடன்...?


‘நாடோடி மன்னன்’ எம்.ஜி.ஆர், பானுமதி

எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே மாபெரும் வெற்றியைக் குவித்த படங்களில் ஒன்று ‘நாடோடி மன்னன்’. ஆனால் இந்தப் படத்தை எடுத்து முடிக்க, அவர் பட்ட பாடுகள் அதிகம்.

சொந்தப்பட நிறுவனம் தொடங்கிய போதே எம்.ஜி.ஆருக்கு மறைமுக அர்ச்சனைகள் நடந்தன. “'நடிச்சு நாலு காசு சம்பாதிச்சோம்னு இல்லாம இதெல்லாம் தேவையா?” என்று பலரும் அக்கறை(?)ப்பட்டார்கள் . அவர்தான் இயக்கப்போகிறார் என்பதை அறிந்ததும் விமர்சனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் களத்தில் இறங்கினார் எம்.ஜி.ஆர். தனக்கு திருப்தி தராத காட்சிகளை மீண்டும் மீண்டும் படம்பிடித்தார். காட்சிகளின் நேர்த்தி கருதி, ஆயிரக்கணக்கான அடி பிலிம் சுருள்களை வீணாக்கவேண்டிய சூழ்நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஸ்டுடியோக்களில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஒரு படத்துக்கான பிலிம் ரோல்களை வாங்கமுடியும். ஆயிரம் அடி பாசிட்டிவ் பிலிமின் நியாயமான விலை 75 ரூபாய் மட்டுமே. அதுவே வெளிமார்க்கெட்டில் 500 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டி இருந்தது. ஆனாலும்

எம்.ஜி.ஆர் காசைப்பற்றிக் கவலைப்படாமல் பிலிம் ரோல்களை வாங்கிப் படமெடுத்தார்.

படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தன. படத்தை சென்சாருக்கு அனுப்பவேண்டிய கட்டம் வந்தது. கூடவே கஷ்டமும் வந்தது. பாசிட்டிவ் பிலிம் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கவேண்டிய நிலை. யாரிடமாவது கடன் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

எதிரிக்கும் கொடுத்துப் பழகிய எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு உதவ, ஒரு ராமச்சந்திரன் வந்து சேர்ந்தார். அவர்தான் 'கெயிட்டி' திரையரங்கத்தை நடத்திவந்த ராமச்சந்திர ஐயர். ஏவி.எம் நிறுவனத்தில் பேசி, தேவையான தொகையை வாங்கித்தருவதாக உறுதி யளித்தார். எம்.ஜி.ஆரின் முகத்திலும் அகத்திலும் பரவிய மகிழ்ச்சி ரேகையை அழிப்பதற்காகவே புறப்பட்டவர்போல வந்துசேர்ந்தார் எம்.கே.சீனிவாசன். அவரது ஆலோசனைப்படிதான் ஏவி.எம் நிறுவனம் கொடுக்கல்- வாங்கல்களுக்கு சம்மதம் சொல்லும்.

கடன் வாங்கவேண்டும். ஆனால் கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர் கையெழுத்துப் போடும் சூழ்நிலை வந்துவிடக்கூடாது, வந்தாலும் ஒப்புக்கொள்ளக்கூடாது என் பதில் உறுதியாக இருந்தார் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன். “கடன் கொடுப்பதற்கு ஏவி.எம் நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், எம்.ஜி.ஆரின் கையெழுத்து அவசியம்” என்றார் எம்.கே.சீனிவாசன்.

கடைசியாக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்தார் ஆர்.எம்.வீரப்பன். “எங்களது தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தின் இலங்கை வெளியீட்டு உரிமையை சினிமாஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த நிறுவனம் எங்களுக்குத் தரவேண்டிய தொகையை, நாங்கள் வாங்கும் கடனுக்கு அடமானமாக வைத்துக்கொள்ளும் வகையில், ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை உங்களிடம் தந்துவிடுகிறோம். நானும் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியும் கையெழுத்துப் போடுகிறோம்”என்று சீனி வாசனிடம் சொன்னார் ஆர்.எம்.வீரப்பன். இந்த டீல் ஓகே ஆனது.

பணம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, பிலிம் சுருள் வாங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். பணம் வாங்கி வருவதற்காக எவிஎம்முக்குச் சென்றார் ஆர்.எம்.வீ. “எந்த பத்திரத்திலும் எம்.ஜி.ஆர் கையெழுத்துப் போடமாட்டார் என்கிறீர்கள். ஆனால், இலங்கை சினி மாஸ் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத் தில் எம்.ஜி.ஆர்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தை அட மானம் வைத்துதான் கடன் கேட்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் வாங்க விரும்பும் தொகைக்கான கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டும்” என்று கறாராக சொல்லிவிட்டார் சீனிவாசன்.

ஆர்.எம்.வீயும் சக்ரபாணியும் எம்.ஜி.ஆருடன் ஆலோசனை நடத்தினார்கள். அவர்களிடம் எம்.ஜி.ஆர் ஒரு அணுகு முறையை சொல்லி அனுப்பினார். அதையே ஆர்.எம்.வீரப்பன் பின்பற்றினார். “ இலங்கை சினிமாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எங்களது படக்கம்பெனியின் பெயர் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று இருந்தது. அந்த நேரத்தில் அதன் நிர்வாக இயக்குநராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனால் ஒப்பந்தத்தில் அவரது கையெழுத்து இடம்பெற்றது. இப்போது கம்பெனியின் பெயர் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்று மாற்றப்பட்டுவிட்டது. நிர்வாக இயக்குநராக நான்தான் இருக்கிறேன். எனவே, நானும் இன்னொரு இயக்குநருமான சக்ரபாணியும் கையெழுத்துப் போட்டாலே செல்லுபடி ஆகும்” என்றார் ஆர்.எம்.வீரப்பன். கம்பெனியின் பெயர்மாற்றம் தொடர்பான கோப்புகளையும் ஒப்படைத்தார்.

“கடன் கொடுப்பதற்கு சம்மதிக்கிறோம்” என்றார் சீனிவாசன். கையெழுத்துகள் பதிவானது. இந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும்போது வேறொரு அறையில் இருந்தார் ஏவி.எம் முதலாளியான ஏவி.மெய்யப்ப செட்டியார். பிறகு பஞ்சாயத்து அறைக்கு வந்தார். “எம்.ஜி.ஆரின் கையெழுத்தைக் கடன்பத்திரத்தில் வாங்கிவிடவேண்டும் என்று நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டோம். கடைசியில் அவர்தான் ஜெயித்துவிட்டார்” என்று ஆர்.எம்.வீயிடம் சொன்ன செட்டியார், உடனடியாக பணத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

படிப்பது அவர்கள் விருப்பம் !!!

படிப்பது அவர்கள் விருப்பம் !!!

குழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, ""டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,'' என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒரு வீட்டில் இருந்த கோழியை திறமைசாலியென நினைத்த மரங்கொத்தி, வாத்து, குயில் ஆகியவை அதனிடம் பாடம் படிக்க வந்தன. ஒருமுறை, அவை பயிற்சிக்காக வெளியே கிளம்பின. செல்லும் வழியில் கோழியிடம் குயில், ""களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடட்டுமா!'' என்றது.

""ஐயையோ வேண்டாம்! பாடினால் தொண்டை கட்டிக்கொள்ளும். பிறகு உன் அம்மாவிடம் என்னால் பதில் சொல்ல முடியாது,'' என்றது.

அவை ஒரு ஆற்றங்கரையை அடைந்தன. வாத்து கோழியிடம்,""எனக்கு நன்றாய் நீந்தத் தெரியும்! நான் இதில் நீந்தட்டுமா!'' என்றது.

''சரியாப் போச்சு! தண்ணி உன்னை அடிச்சுட்டு போயிட்டா, உன் அப்பாவுக்கு யார் பதில் சொல்றது! கப்சிப்! பேசாமல் என்னுடன் வா,'' என கண்டித்தது.

மரங்கொத்தி கோழியிடம், ""நீங்க குயிலிடமும், வாத்திடமும் சொன்னது வாஸ்தவம் தான். ஆனால், நான் என் அலகால் இந்த மரத்திலுள்ள புழுக்களைக் கொத்திப் போடுகிறேன். எல்லாரும் விருந்துண்ணலாமே!'' என்றது.

""அதுவும் வேண்டாம்'' என்ற கோழி, ""மரத்தில் கொத்தும்போது, உன் அழகான அலகு உடைஞ்சு போனா, அதுக்கு யார் பொறுப்பு?'' என்றது.

அந்தந்த பறவைகள் அதனதன் சுபாவத்தில், திறமை வாய்ந்தவையாக இருந்தும், கோழி தன்னைப் போலவே அவற்றையும் நினைத்துக் கொண்டதால், அதனதன் துறையில் மிளிர விடாமல் தடுத்து விட்டது.

இந்தக் கோழியைப் போல் இல்லாமல், அவரவருக்கு விருப்பமான துறையில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்.

இன்றைய உண்மைகள்...!!!

இன்றைய உண்மைகள்...!!!

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து...!

                                          எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

பாத்திரங்களாலும் உண்டு பலன்...!

உணவு, நீர், தானியங்கள், தயிர், மோர், நெய், சாறு, எண்ணெய் போன்ற பொருள்களைச் சேமிக்கவும், சமைக்கவும் பாத்திரங்கள் தேவைப்படுகின்றன.


பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாத்திரங்கள் காலத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்துள்ளன.
உலோகங்கள் கண்டறியபட்டாத காலத்தில் மண், கல், பீங்கான், மரப்பட்டை, மூங்கில், பரங்கி, சுரக்காய், தேங்காய், திருவோடு, இலைகள் போன்றவை பாத்திரங்களாகப் பயன்பட்டன. பின்னர் உலோகங்கள் கண்டறியப்பட்டன. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமனியம், இரும்பு, வெண்கலம், எவர்சில்வர் முதலியவை பயன்படுத்தப்பட்டன. தற்போது, காகிதம், பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எளிதாகக் கிடைக்க வேண்டும்; பயன்படுத்தும்போது இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, புத்தம்புது பாண்டங்கள் தோன்றின.

செல்வந்தர்களும், மன்னர் போன்றவர்களும் விலை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களைச் சேர்த்துக்¢கொண்டனர்.
உதாரணமாக, தங்கம், வெற்றி பாத்திரங்கள் ஏழை எளிய மக்களால் பயன்படுத்த முடிவதில்லை. வருவாய் குறைந்தவர்கள், மட்பாண்டமோ, அலுமினிய பாத்திரமோ பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.


பாத்திரங்களைப் பயன்படுத்தும் முன் அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கருத்திற் கொண்டால், உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். பயன்கருதாது பயன்படுத்துவோர் ஏராளம். மாவீரன் நெப்போலியன், தான் உணவு உண்பதற்காக அலுமினியத்தினால் செய்யப்பட்டு தட்டு வைத்திருந்தாராம். அன்றைய காலத்தில் அலுமினியம் விலை மதிப்புடையதாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அது ஏழைகளின் பாத்திரமாக ஆகியிருக்கிறது.


பாத்திரங்களினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைக் குறிப்பிட வரலாற்று நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடலாம். மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தார். அப்போரில், ஈடுபட்ட போர் வீரர்கள் தீராத வயிற்று வலியினால் அவதியுற்றனர். ஆனால் போர்ப் படைத்தளபதிகள் எவ்வித நோயும் இல்லாமல் நலமுடனே இருந்தார்கள். அதற்குக் காரணம், படைவீரர்களெல்லாம் நீர் அருந்துவதற்காக வெள்ளீயத்தினாலான குவளைகளைப் பயன்படுத்தினர். படைத்தளபதிகளோ வெள்ளியினாலான குவளைகளைப் பயன்படுத்தினர்.

வெள்ளிக் குவளையைப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த நோயுமில்லை. வெள்ளீயத்தைப் பயன்படுத்தியவர்கள் வயிற்று வலியால் அவதியுற்றனர். படைவீரர்களுக்கு ஏற்பட்ட வயிற்று நோயினால், போரிட போதிய வீரர்கள் இல்லாமல் போயினர். அதனால், மாவீரர் அலெக்சாண்டர் தன்னாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது. ஆகவே, பாண்டங்களைப் பயன்படுத்துமுன் அதனால் உண்டாகக்கூடிய நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.


அறிவியல் ஆய்வின்படி, வெள்ளியில் நோய்களை உண்டாகக்கூடிய 650 நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது. மேலும் ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தஞ்செய்ய 0.1 கிராம் வெள்ளியே போதுமானது. தண்ணீரிலுள்ள நுண்கிருமிகளை வெள்ளி தூய்மைப் படுத்துவதால், பாலை வெள்ளிப் பாத்திரத்திலிட்டு அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட வெள்ளியில் பாத்திரங்களைச் செய்துகொண்டு, அதில் உணவுகளை உட்கொண்டால் பெரும்பகுதி நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். வெள்ளி விற்கும் விலையில் வெள்ளிப் பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்கிறீர்களா? விடுங்கள் கவலையை, அடுத்ததைப் பார்க்கலாம்.


செம்பு பாத்திரம்


தமிழர் நாகரிகம் செம்பு நாகரிகத்தில் தொடங்கியதாகக் கூறுவர். செம்பு அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால் தேவையான கருவிகளும் பாத்திரங்களும் செம்பினால் செய்து கொண்டனர். சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள் அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பய்னபடுத்தியுள்ளனர். அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்துவதனால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலார்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காகவும் செம்புப் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்கள். சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தது. இயற்கையாகவே செம்பினாலான பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.


செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், ரத்தத்திலுள்ள பித்த நோய்கள், சந்தி, கபம், பிலீகம், மந்தம், வெண்மேகம், அழலை, சூதக நோய், புண், பிரந்தி, சுவாசநோய்கள், கிருமி தாதுநட்டம், கண் நோய் ஆகியவை நீங்கிவிடும் என்பது தெரிகிறது. உலக நல நிறுவனம் குடிநீரைப் பற்றிக்கூறும் செய்தியில், குடிநீரில் கோலிஃபோர்ம் பாக்டீரியா உள்ள நீரைப் பருகினால் டைபாஃய்ட் சுரமும், வயிற்றுப் போக்கு நோய்களும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் கோலிஃபார்ம் பாக்டிரியா முற்றிலும் அழிந்துவிடுகிறது.


தூக்கம்

உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம். சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.


விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் 'அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும். தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாக மகிழச்சியாக இருப்பானோ, அத்தகைய மகிழச்சியைத் தருகிறது, கிழக்கு.

வேலை செய்வதற்காகவோ வேறு காரணத்துக்காகவோ பிறந்த ஊரை வட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழக்கை நடத்துகின்றவனுக்குக் கிடைக்கக் கூடிய மகிழச்சியைத் தருவது,மேற்கு.

பிறந்த ஊர், குடிபெயர்ந்த ஊர் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, மனைவியின் ஊராகிய மாமியார் ஊரில் வந்து தங்கும்போது மாப்பிள்ளைக்குக்கிடைக்கும் சுகத்தைத் தருகிறது தெற்கு.

எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம், வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது. பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும. உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள். குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.


கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்று மருத்துவம் நூலார் கூறியுள்ளனர். நோயின்றி இருப்பதுடன் சுகமாகவும் நலமாகவும் இருக்க விரும்பின்றவர்கள் தங்களுக்குப் பிடித்த திசையில் படுக்கலாம். தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். ஆகையால், நேரந்தவறாமல் தூங்க வேண்டும்.


தூங்குவதற்கு ஏற்ற படுக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 'இலவம் பஞ்சில் துயில்’ என்று கூறப்பட்டிருப்பதை நினைவில் கொள்வது நலம்.
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.


இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலது புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். வலப்புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று செல்லும்போது, நல்ல தூக்கம் வரும். உடம்புக்குத் தேவையான வெப்பம்கிடைக்கும். இடது புறமாக ஒருக்களித்துப் படுக்கும் நோயாளிக்கு நோய் விரைவாகக் குணமாகும்.


எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.

குருவியும் ராஜாவும் குட்டிக்கதை!

ஒரு ராஜா வேட்டைக்கு போகும்போது காட்டில் உள்ள மரத்தில் ஒரு குருவி உட்கார்ந்து பாடியதை கேட்டாராம் .....


குருவி :..... ''என்கிட்டே ஒரு காசிருக்கு யாருக்கு வேணும் , இஷ்டமிருந்தா என்ன கேட்டு வாங்கிக்கொள்ளலாம் .... '


' மீண்டும் மீண்டும் பாடியதை கேட்டு தொந்தரவு தாங்க முடியாமல் "காசை" ராஜா வாங்கிக்கொண்டாராம்.....



.உடனே குருவி :....'' ''ஒருகாசுக்கு விதி இல்லாத ராஜா தானுங்க ....இந்த ராஜ என்னிடம் காசை வாங்கிக்கொண்டாரம் ...''
என்று பாடியதாம்

'' அட சே....''என்று சொல்லி ராஜா காசை திருப்பி கொடுத்து விட்டாராம் .....

உடனே குருவி
" எனக்கு பயந்து ராஜ காசை திருப்பி தந்தாராம் ....இந்த ராஜ , இந்த நாட்டை எப்படி ஆழ்வாராம்"....


என்று பாடி முடித்ததாம் ..


" சில நேரங்களில் , நம்மில் சில மனிதர்களும் இப்படித்தான் இருப்பாய்ங்களோ ............

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி...!

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.

சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.

கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.

கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.

கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.

கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.

கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.

கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.

கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.

இது தலைமுடிக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது.
கருஞ்சீரகத்தை 4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு லேசாக வறுக்கவும். 250 மி.லிட்டர் நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டு வேக விடவும். (எண்ணெய் புகை வரம்படி காயக்கூடாது). பின் ஆறியதும், இந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்து வரலாம்.

சர்க்கரை வியாதி குறைய:

கருஞ்சீரகத்தை அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் சர்க்கரை வியாதி குறையும்.

குறிப்பு: கருஞ்சீரகத்தைப் எப்பொழுதும் சிறிது சூடாக்கி பொரியவிட்டு உபயோகிக்க வேண்டும்.

ஆலிவ் எண்ணெயின் அற்புதமான அழகு நன்மைகள்!!!

                           ஆலிவ் எண்ணெயின் அற்புதமான அழகு நன்மைகள்!!!

இயற்கையாக கிடைக்கும் மதிப்பு மிக்க ஆலிவ் எண்ணெய் பல காலங்களகாவே பல்வேறு ஆரோக்கிய பலன்களை தன்னிடம் கொண்டுள்ளது. உயர்தரமான அழகு சாதனங்கள் மேற்கிலிருந்து உதயமானாலும், அதன் பலன்களும், அழகின் இரகசியங்களும் உலகெங்கிலும் பரவியுள்ளன. அமெரிக்க சந்தைகளில் முடி மற்றும் தோல் பராமரிப்பு சாதனங்கள் விணணையெட்டும் சந்தை மதிப்புகளைப் பெற்றுள்ளன.


மக்கள் எதிர்பார்க்கும் மிகச்சிறந்த நிவராணிகள் மற்றும் அழகு சாதன பொருட்களைப் பற்றி அதிகமாக விற்கும் அழகு சாதான நிறுவனங்கள் ஆய்வுகளும் செய்து வருகின்றன. வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட அழகு சாதனங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு, இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதே இந்த ஆய்வுகளின் முடிவுகளாக உள்ளன.

மிகவும் பாதுகாப்பான இந்த வழிமுறைகள் உங்கள் அழகில் ஆச்சரியங்களை வரவழைக்கும் திறன் கொண்டவையாகும். இந்த அழகு சாதன பொருட்களில் ஆலிவ் எண்ணெய் முக்கியமான இடுபொருளாக உள்ளது என்பது தான் ஹைலைட். இயற்கையாக கிடைக்கும் இந்த ஆலிவ் எண்ணெய் தோலுக்கு மிகவும் ஏற்ற நிவாரணியாகும். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் அழகிய மற்றும் சுத்தமான சருமம் கிடைக்கும். எனவே, ஆலிவ் எண்ணெய் வழங்கும் அழகு மற்றும் ஆரோக்கிய இரகசியங்களை இங்கே திறந்து பார்த்திடுவோமா?

மாய்ஸ்சுரைசர்களில் ஆலிவ் எண்ணெய்

முகம் மற்றும் உடலின் எந்த பகுதியில் தடவினாலும் எளிதில் ஊடுருவிச் செல்லவும் மற்றும் சருமத்தால் எளிதில் கிரகிக்கப்படுவதாகவும் ஆலிவ் எண்ணெய் இருக்கும். பகல் அல்லது இரவு என எந்த வேளைகளிலும் பாதிக்கப்பட்ட தோலை பதப்படுத்தும் பணியை ஆலிவ் எண்ணெய் செவ்வனே செய்யும். ஆலிவ் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் தோலில் தடவினால் உங்கள் சருமம் வழுக்கிச் செல்லும் வகையிலான வழவழப்பையும், புத்துணர்வையும் பெறுவதற்கான பர்ஃபெக்ட் மாய்ஸ்சுரைசர் ரெடி. சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் நெடுநாட்களுக்கு வைத்திருக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இயற்கையான நிவாரணிகளுடன், ஆலிவ் எண்ணெய் கலந்து விற்கப்படும் அழகு சாதன பொருட்களையும் நீங்கள் வாங்கலாம்.

இறந்த செல்களை நீக்கும் ஆலிவ் எண்ணெய்

வறண்ட மற்றும் சொரசொரப்பான சருமங்களை ஆலிவ் எண்ணெய் கொண்டு சிறப்பாக சரி செய்ய முடியும். கடல் உப்புடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தோலில் தேய்க்கும் போது இறந்த தோல் பகுதி நீக்கப்பட்ட மற்றும் வறண்ட தோல் பகுதி புத்துயிர் பெறும். லாவண்டர் எண்ணெயுடன் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை கலந்து குளியல் போட்டுப் பாருங்கள் - அற்புத அனுபவம் கிட்டும். இது தோலை ஆற்றுப்படுத்துகிறது, உடலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு செல்லையும் அமைதிப்படுத்துகிறது.

நகம் மற்றும் புறத்தோல் பாதுகாப்பு

நமது நகங்களும், வெளித்தோல் பகுதியும் தான் அதிகளவில் சேதமடைகின்றன. இவை கடுமையான சுற்றுச்சூழல்களை எதிர்கொள்வதால் அவற்றிற்கு முறையான பராமரிப்பு அவசியம். அதிகபட்சமாக சுத்தமான ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி வறண்ட நகங்கள் மற்றும் வெளித்தோல்களை பாதுகாக்க முடியும். இவற்றிற்கு ஆழமான மசாஜ் தேவையில்லை. மெதுவாக ஆலிவ் எண்ணெயை நகங்கள் மற்றும் வெளித்தோல் பகுதிகளில் தேய்த்து விட்டாலே போதும். அந்த இடங்களில் ஈரப்பதம் ஆழமாக நிலைநிறுத்தப்படும்.

மேக் அப்பை கலைக்க வேண்டுமா...

கண்கள் மிகவும் உணர்வுப்பூர்வானவை. அங்கே நாம் வேறெந்த செயற்கைப் பொருட்களையும் நம்பக் கூடாது. கண்களில் தடவப்பட்டுள்ள மேக்கப் பொருட்களை சுத்தமாக துடைத்தெடுக்க ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய் இருந்தால் போதும். கண்ணின் உணர்வு மிக்க பகுதிகளை பாதிக்காமல் ஆலிவ் எண்ணெய் அங்குள்ள மேக்கப்களை நீக்கி விடும். இந்த நிவாரணத்தை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் வேளைகளில், கண்களைச் சுற்றியுள்ள தோலில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படவும் மற்றும் அந்த பகுதி மிகவும் மென்மையாக இருக்கவும் செய்ய முடியும்.

தலைமுடி பராமரிப்பும்.. ஆலிவ் எண்ணெயும்..

தலைமுடியில் ஆலிவ் எண்ணெய் செய்யும் சாதனைகளுக்காக நாம் தலை வணங்க வேண்டும். இந்த அற்புதமான எண்ணெய் தலைமுடியை மென்மையாக்குவதுடன், அதற்கு பிரகாசத்தையும் கொடுக்கிறது. ஆலிவ் எண்ணெயை ஆழமாக முடிகளில் தடவி மசாஜ் செய்தால் அது பொடுகுகளை கட்டுப்படுத்தவும் மற்றும் ஆழமான கன்டிஷனர் ஆகவும் செயல்படுகிறது. தலைக்கு ஷாம்பு போட்ட பின்னர் ஆலிவ் எண்ணெயை தண்ணீருடன் கலந்து மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு மசாஜ் செய்த 5 நிமிடங்களுக்குப் பின்னர் தலைமுடியை தண்ணீர் கொண்டு நன்றாக அலசுங்கள். இதற்குப் பின்னர் உங்கள் முடிக்கு கிடைக்கும் பொலிவும் அழகும் அளப்பரியதாக இருக்கும்.

கருக்கலைப்பா.. இதப் படியுங்க!

ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் 165 கருக்கலைப்புகள் நடப்பதாக வெளியாகியுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2012 – 13 கால கட்டத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 59,470 கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக தமிழகத்தின் குடும்ப நலத் துறை பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கையினால், இந்தியாவில் கருக்கலைப்பு அதிகம் நடக்கும் மாநிலங்களின் வரிசையில் உத்தரப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிராவை அடுத்து தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.

இதிலும், இன்னும் பதிவு செய்யப்படாத சில சிறிய மருத்துவ மையங்களிலும், ஏராளமான பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். இதுவும் பதிவு செய்யப்பட்டால், தமிழகம் இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வரவும் வாய்ப்பு உண்டு.

கடந்த 6 ஆண்டுகளாக எடுத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் கருக்கலைப்பு எண்ணிக்கை எந்த வகையிலும் மாறாமல் ஒரே அளவில் உள்ளது.  இது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பாடததையே காட்டுகிறது.

கர்ப்பிணிகளுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசுகள், கருக்கலைப்பு என்ற ஒரு சமூக பிரச்னையை இதுவரை கருத்தில் எடுத்துக் கொள்ளாததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

கணவரின் கையெழுத்து, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம், மருத்துவ ஊழியர்களின் நடவடிக்கை, பயம் போன்ற காரணங்களால் ஏராளமான பெண்கள் பதிவு செய்யப்படாத மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர்.

முன்பிருந்ததை விட, தற்போது ஏராமான அரசு மருத்துவமனைகளும், மையங்களும் ஆங்காங்கே வந்து விட்ட நிலையிலும், அரசு மையங்களுக்கு பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள வருவது அதிகரிக்கவில்லை என்பதும், கருக்கலைப்பு எண்ணிக்கை குறையவில்லை என்பதும், இந்த விஷயத்தில் மாநில அரசுகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றன.

இது மட்டும் அல்லாமல், ஆணுறையை தவிர்த்து பெண்களின் உடல் நலத்தை பாதிக்காத கர்ப தடுப்பு முறைகள் இந்தியாவில் மிகவும் குறைவு என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்:

                         கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்:

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இப்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

வாய் துர்நாற்றம்

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.
வெளுத்த சருமம்

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.


மஞ்சள் நிற கண்கள்

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.


வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
வயிறு வீக்கம் கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரிசெய்யும் சில இயற்கை நிவாரணிகள்!!!

வேகமான வாழ்க்கை முறைகள் மற்றும் சுகாதாராமில்லாத உணவுகள் ஆகியவற்றால் இதுவரையிலும் கண்டிராக மற்றும் கற்பனைக்கும் எட்டாத பிரச்சனைகள் நமது வாழ்க்கைக்கு முன் வருகின்றன. இவற்றில் சில பிரச்சனைகள் இப்போதைக்கு மிகவும் சிறியதாகவே இருந்தாலும், முறையான சிகிச்சைகள் செய்யாமல் விட்டு விட்டால் மிகப்பெரிய சுகாதார சவால்களாக வலிந்து வளரத் தொடங்கி விடுகின்றன.

கல்லீரலில் கொழுப்பு மிகுந்து விடும் பிரச்சனைகளுக்கு எளிதாகவும் மற்றும் மிகவும் திறமையாகவும் வீட்டிலேயே நிவாரணங்களை செய்ய முடியும். இந்த நிவாரணங்கள் பல தலைமுறைகளை கடந்து பயன்படுத்தப்பட்டு மனிதனின் கல்லீரல்களுக்கு உதவி வருகின்றன.

கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சனையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன. இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில்தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது. நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கான சிகிச்சைகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.

மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரணமாக உள்ளன. இந்த பிரச்சனைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியோ துவங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது. இதோ இந்த கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில நிவாரணங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.

க்ரீன் டீ

க்ரீன் டீ குடிப்பதன் காரணமாக இந்த கல்லீரல் பிரச்சனையை பெருமளவு பின்னோக்கி தள்ள முடியும். உங்களுடைய தினசரி உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொண்டு, அதிலுள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களின் உதவியுடன் நல்ல பலன்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண விரும்பினால் வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு கை கொடுக்க காத்திருக்கின்றன. ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்துப் பாருங்கள் - விளைவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.


பாகாற்காயின் பாதுகாப்பு

பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. ஒரு கப் அல்லது ½ கப் பாகற்காயை தினமும் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும். மேலும், நீங்கள் இதை சாறாகவும் குடிக்க முடியும்.

பால் நெருஞ்சில்

பால் நெருஞ்சில் என்ற மூலிகை உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கி, உடலில் பல்வேறு வகையான ஆச்சரியங்களை ஏற்படுத்தும் குணம் கொண்டதாகும். கல்லீரலில்சேதமடைந்துள்ள செல்களை குணப்படுத்த விரும்பினால் தினமும் இந்த மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முழு தானியங்கள்

முழு தானியங்களுக்கு கல்லீரல் கொழுப்பை உடைத்து அவற்றிலுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை வெளியேற்றும் குணங்கள் உள்ளன. உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால், பதப்படுத்தப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்கள் மற்றும் அவற்றின் பகுதிப் பொருட்களை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள்.

தக்காளி


தினமும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கல்லீரல் கொழுப்பை நீக்க முடியும். மிகவும் எளிதாக கிடைக்கும் தக்காளியை தினமும் சாப்பிட்டு, கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளுக்கு தீர்;வு காணுங்கள்.


இதர வழிகள்

கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை சமாளிக்க எண்ணற்ற இயற்கையான வழிகள் உள்ளன. ரோஸ்மேரி, அதிமதுரம், டான்டேலியன் மற்றும் அது போன்ற பிற மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பினை குறைக்க முடியும். எனினும், இந்த மூலிகைகளை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதை மறந்து விட வேண்டாம்.


கல்லீரல் கொழுப்பு பிரச்சனையிலிருந்து விடுபட நினைத்தால், மனம் போன படி உணவு உண்ணுவதை நிறுத்துவதுடன், ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட்ட உடலை வளர்க்க வேண்டும். பட்டினி கிடந்து உடலின் கொழுப்புகளை குறைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது மிகவும் தவறு. உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் கல்லீரல் அபாயத்திற்குள்ளாகி, கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வரச் செய்து விடும் சூழல்களும் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுடன், இயற்கையான பழச்சாறுகள் மற்றும் நிறைய தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்!


ஆல்கஹால் மற்றும் சிகரெட் போன்றவற்றை குறைப்பதால் மட்டும், நாம் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் ஏற்கனவே எந்த அளவுக்கு நமது கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை, நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதற்கான அறிகுறிகள் எதாவது தெரிவதற்கு முன்பிருந்தே நாம் ஜாக்கிரதையாக இருந்தால் தான், நமது ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

கல்லீரல் ஆரோக்கியம் பற்றிய நிஜமான கவலை இருந்தால், முதலில் வயிற்றில் சதை விழாமல் பார்த்துக் கொள்வது அவசியம். கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான முதல் அறிகுறியே உப்பிய வயிறு தான். உணவு முறை சரியாக இருந்து, உடற்பயிற்சியும் இருந்து அடிவயிற்றில் சதை விழுந்தால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது அவசியம். கல்லீரல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான சில அத்தியாவசிய குறிப்புகளை இங்கே உங்களுக்காக தருகிறோம். ‘வந்த பின் வருந்தாமல், வருமுன் காப்பதே சிறந்தது' என்பதே இவற்றின் அடிப்படை.

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு உணவுகள் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். ஏனெனில் கல்லீரலின் முதல் எதிரி இவை தான். கொழுப்பு உணவுகள் மூலமாக உடலில் சேரும் அதிக பட்ச கொலஸ்ட்ரால், கல்லீரலின் இயக்கத்தை பலவிதங்களில் பாதித்து சேதப்படுத்திவிடும்.

மிதமிஞ்சிய மதுப்பழக்கம்

மது எந்த அளவுக்கு கல்லீரலை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். மதுபானம் அதை அருந்துபவருக்கு எந்த பலனையாவது அளிக்கிறதோ இல்லையோ, முதலில் கல்லீரலுக்கு கெடுதலை மட்டும் அளித்துவிடுகிறது. மது விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 பெக்குகளுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. அதிகபட்சம் 4 பெக்குகள் என்று கொண்டாலும், அதற்கு மேல் குடிப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து, அந்த பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிப்பது நல்லது.


புகைப்பழக்கம்

சிகரெட் பிடிப்பது கெடுதல் என்று தெரிந்திருந்தாலும், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது சிலருக்கு சிரமமாகத் தான் இருக்கிறது. இந்த போதை கடைசியில் நமது கல்லீரல் மற்றும் நுரையீரல்களை முற்றிலும் அழித்துவிட்டுத் தான் ஓயும். அப்படி ஒரு போதைச் சாத்தானுக்கு நாம் ஏன் அடிமையாக வேண்டும் என்ற கேள்வியுடன் புகைப்பழக்கத்திற்கே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிலும் உடலை சீரழித்து, ஆயுளைக் குறைக்கும் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?

உடற்பயிற்சியின்மை


உடலுக்கு எந்த விதமான உடற்பயிற்சியும் இல்லாமல், மந்தமான, சோம்பலான வாழ்க்கை முறையை பின்பற்றினால், வியாதிகள் நம்மை தேடி வந்து சேரும் என்பது தான் உண்மை. கொஞ்சமாவது நடக்க வேண்டும், கை மற்றும் கால்களை அசைத்து வீட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அப்போது தான் உடலில் உயிர்ப்பு இருக்கும். ஏ.சி சொகுசு மற்றும் யாவற்றுக்கும் மற்றவர் உதவி என்று சோம்பலான வாழ்க்கையை வாழ்ந்தால், வியாதிகள் தான் உருவாகும். பின்னர், எல்லாம் இருந்தும் ‘ஆரோக்கியம் இல்லை - ஆயுளும் இல்லை' எனும் துரதிர்ஷ்டத்திற்குத் தான் உட்பட வேண்டியிருக்கும்.
தவறான டயட்

உடலை சிக்கென்று வைக்கிறேன் பேர்வழி என்று ஏதாவது ஒரு ‘ஃபேன்சி டயட்டிங்' முறையை பின்பற்றினால், முதலில் பாதிப்படைவது கல்லீரல் தான். நல்லதை செய்கிறோம் எனும் போலி மனமயக்கத்தில், உடலில் நிஜமாக நடப்பது என்ன என்பதை நம்மால் உணர முடியாமல் போய்விடும். எனவே கல்லீரலின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய ‘கடுமையான டயட்' முறைகளை தவிர்த்து, ஒரே சீரான உணவுமுறை மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது

குறிப்பு

கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது மாத்திரம் இல்லை. வேறு சில விசேஷ மருத்துவ வசதிகளையும் பின்பற்ற கொள்ள வேண்டும். ஏனெனில் இதனாலும் கல்லீரல் சிக்கல்களை குணப்படுத்தி விட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக கல்லீரல் அழற்சி தடுப்பூசி, அவ்வப்போது இரத்த பரிசோதனைகள், காட் லிவர் ஆயில் மாத்திரைகள் மற்றும் பாதுகாப்பான உடலுறவு போன்ற எல்லா ஏனைய அம்சங்களும் கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள உதவுகின்றன.

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

தினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும். ஏன் என்று தெரியுமா? உடலுக்கு ஏற்ற வயிறு இல்லாமல், கர்ப்பிணி போன்று வீங்கி இருப்பதாலே ஆகும். அதே சமயம் அனைவரது மனதிலும் இனிமேல் நாம் கடுமையான டயட்டை பின்பற்றி, ஒல்லியாக மாற வேண்டுமென்ற எண்ணமும் எழும். ஆனால் சிலரைப் பொறுத்தவரை அது வெறும் பேச்சாக இருக்கும். சிலரோ சரியாக சாப்பிடாமல், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காதவாறு டயட் இருப்பார்கள்.

ஆனால் அப்படி கடுமையான டயட் இல்லாமல், மிகவும் ஈஸியாக, டயட்டில் இருப்பது போன்றே தெரியாதவாறு, எப்போதும் இருப்பது போல் சாதாரணமாக இருந்தாலே தொப்பையை குறைக்கலாம் என்று சொன்னால், அதிலும் இரண்டே வாரங்களில் எளிதாக தொப்பையைக் குறைக்கலாம் என்று சொன்னால் நம்பமாட்டோம். ஆனால் அந்த வழியைக் காண அனைவரும் ஏங்குவோம். என்ன சரி தானே!
இதைப் படித்து அவற்றை பின்பற்றி தொப்பையை இரண்டே வாரங்களில் குறையுங்கள்.

நன்கு தூங்கவும்

நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.

உப்பை தவிர்க்கவும்

தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்.

காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்

இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.

கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும்

உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.

தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.

நன்கு மூச்சு விடவும்


தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும்

இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை நண்பர்களாக்கவும்


நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நடக்கவும்

எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.

சைக்கிள் ஓட்டவும்

சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.


நீர்ச்சத்துள்ள பழங்கள்


நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.

மெதுவாக சாப்பிடவும்

எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல் இருக்கும்.

நன்கு வாய்விட்டு சிரிக்கவும்

தொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்பயிற்சியாகும். மேலும் வாய்விட்டு சிரித்தால், நோயின்றி வாழலாம்.

பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி


தினமும் உடற்பயிற்சி செய்யும் போது பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தொப்பை குறைவதில் நல்ல மாற்றம் தெரியும்.

உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்.

உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்.

தேவையான பொருட்கள்:


தேன் - 2 டீஸ்பூன்


பட்டை - 1 டீஸ்பூன்


தண்ணீர் - 1 கப்


செய்முறை:


முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்க கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின் அதில் பட்டையை போட்டு, வெதுவெதுப்பாகும் வரை தனியாக மூடி வைக்க வேண்டும்.

நீரானது வெதுவெதுப்பானதும், அதில் தேன் சேர்த்து கலந்து, அதில் பாதியை இரவில் படுக்கும் முன்பும், மீதியை மூடி வைத்து, மறுநாள் காலையில் எழுந்தும் குடிக்க வேண்டும்.


குறிப்பு:


காலையில் குடிக்கும் போது அதனை சூடேற்ற வேண்டாம்.

எது மூட நம்பிக்கை..? - கவிஞர் கண்ணதாசன்

எது மூட நம்பிக்கை..? - கவிஞர் கண்ணதாசன்

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?

நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது? திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அதன் கதி என்ன?

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.

ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.

தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.

"ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்'' என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், "நான் ஒரு மூடன்' என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.

முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் "ஒன்றுமே இல்லை' என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு மயிர்க்காலையும் பார்த்து, ""இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச் சாகிறான்.

"சுடு' என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்... பகுத்தறிவு மிஞ்சும்... நாடு மிஞ்சாது!

போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தான் சொன்னான்.
-
"போர்' என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது' என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை வலியுறுத்துகிறது. கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.
-
"மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

ஸ்கிப்பிங் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

                  ஸ்கிப்பிங் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சனையும் படிப்படியாக குறையும்.

* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.

* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. இடுப்பு வலி உள்ளவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.

* ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்

‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்!

‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்!

கொட்டிவாக்கத்தில் இருந்து வந்திருந்த சுந்தர்ராஜன் என்பவரின் அனுபவம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னது:

“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை! நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்! அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.

நான் பேசத் தொடங்கியதும், அருகில் உட்காரமுடியாமல் சிலர் எழுந்து போய்விடுவார்கள். ‘நான் பேச ஆரம்பித்தவுடன் ஏன் அவர்கள் எழுந்து போகிறார்கள்’என்று காரணம் தெரியாமல் ஆரம்பத்தில் அவதிப்பட்டேன். பின்னர்தான் தெரிந்தது... ‘என்னுடைய வாயில் இருந்து வெளிவரும் நாற்றம்தான் அதற்குக் காரணம்’என்று.

நீண்டநேரம் பல் துலக்குவேன். அப்படியாவது, ‘வாயிலிருந்து வரும் துர்நாற்றம் போய்விடாதா?’ என்று நப்பாசை. ஆனால், அப்படியும் நாற்றம் போகவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரை நான் சந்திக்க நேரிட்டது.

மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர் ஆயிற்றே, அவரிடம் என் குறையைக் கூறினால், அதற்கு ஒரு விடிவு பிறக்கும் என்று எண்ணினேன்.

எனக்கு இருக்கும் வாய் துர்நாற்றம் பற்றி அவரிடம் கூறினேன். தாமதிக்காமல் சொன்னார்: ‘தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல் போவதை நீங்களே உணர்வீர்கள்’என்றார்.

அவர் கூறியதில், அப்போது எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தும், போகாத துர்நாற்றம், நல்லெண்ணெய்யால் எப்படி போகப் போகிறது என்று கிண்டலாக நினைத்தேன்.

இருந்தாலும், அதையும் செய்துதான் பார்த்து விடுவோமே என்று, மறுநாளில் இருந்தே, ‘ஆயில் புல்லிங்’செய்யத் தொடங்கினேன். பத்து நாட்களில் படிப்படியாக என்னுடைய வாய் துர்நாற்றம் இல்லாமல் போவதை நானே உணர்ந்தேன்.

பதினைந்து நாட்கள் கடந்தபிறகு, நூறு சதவீதம் துர்நாற்றம் மறைந்து விட்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை! ‘நல்லெண்ணெய்க்கு இப்படியொரு மகத்தான மருத்துவ குணமா..?’

இப்போது நண்பர்கள் என்னுடன் அமர்ந்து, சிரித்த முகத்துடன் கலகலப்பாக உரையாடுகிறார்கள்.

‘வாயில் இருந்த துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று எல்லோரும் கேட்டார்கள்.

நான், ‘ஆயில் புல்லிங்’பற்றி சொன்னேன். அவர்கள் நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தார்கள்.

‘நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், இப்போது முழுமையாக நம்புகிறேன். பலனை உண்மையாகக் கண்டபிறகுதான் நல்லெண்ணெய்யின் சிறப்பே எனக்குத் தெரிய ஆரம்பித்தது’என்றேன்.

இதற்கு இடையில், எனக்கு ஆலோசனை கூறிய நண்பர், மருத்துவக் கல்லூரி பேராசிரியரை ஒருநாள் உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். என் வாய் துர்நாற்றம் முழுமையாக பறந்தோடிவிட்ட செய்தியைக் கூறி, அதற்கு மூலகாரணமாக இருந்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன்.

சந்தோஷ முகத்துடன் என்னைப் பார்த்தார்... ‘நல்லெண்ணெய்யால் வாய் துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று அவரிடமே கேட்டேன்.

அதற்கு, ‘பாக்டீரியாக்கள்தான் வாயில் துர்நாற்றம் உண்டாகக் காரணம். பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்தி, நல்லெண்ணெய்க்கு இருக்கிறது. நல்லெண்ணெய் இருக்கும் இடத்தில், பாக்டீரியாவால் உயிர் வாழமுடியாது.

நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து, துர்நாற்றம் இல்லாமலே போய்விடும்’என்றார்.

இப்படி, மிகக் குறைந்த செலவில் குணப்படுத்தக் கூடிய நல்லெண்ணெய்யின் சிறப்பு தெரியாமல், இவ்வளவு காலமும் இருந்திருக்கிறேனே!

எனக்கு நல்லெண்ணெய் வைத்தியத்தை அறிமுகம் செய்த பேராசிரிய நண்பருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறி முடித்த சுந்தர்ராஜன் முகத்தில் வாய்கொள்ள முடியாத அளவு சிரிப்பு ரேகை படர்ந்திருந்தது!

எலுமிச்ச பழச் சாறையும், புதினாச் சாறையும் சரிபாதியாக அரை லிட்டர் நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் உடையவர்கள் ‌கிரா‌ம்பை வா‌யி‌ல்போ‌ட்டு மெ‌ன்று வ‌ந்தா‌ல் அ‌ந்த தொ‌ல்லை‌யி‌லிரு‌ந்து ‌விடுபடலா‌ம்.

வாய் நாற்றத்தை போக்க எலுமிச்ச பழத்தை ஒரு தம்ளர் நீரில் பிழிந்து அதனுடன் சிறிது அளவு உப்பு கலந்து சாப்பிட்டு வரவும். அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தாலும் நல்லது.

"வாய் துர் நாற்றம்" உடையவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிறில் குறைந்தது நாலு_ட்ம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாயை உப்புகரைத்த நீரில் கொப்புளித்து சுத்தமாக_வைத்திருப்பதும், பற் குழிகளை பல் மருத்துவர்களிடம் சென்று அடைத்துகொள்வதும், தினம் இரண்டு முறை பல் துலக்குவதும் வாய் நாற்றத்தை தவிர்க்க உதவும்.

கொள்ளுப்பால்---உணவே மருந்து!

கொள்ளுப்பால்---உணவே மருந்து!

இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

கையெழுத்துப் போடும்ஸ்டைலில் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?

நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?

1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..

8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு ...?

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
?

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சொயில் பெராக்சிடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்

இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
உலகில் பல நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம்
நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

ஸ்கைப்பில் பேச புதிய விதிமுறை!

ஸ்கைப்பில் பேச இனிமேல் தனி அக்கவுண்ட் தேவையில்லை…..!

இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம்.

இதனைப் பயன்படுத்த, இந்த புரோகிராமில் நமக்கென ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதற்கான பாஸ்வேர்டையும் அமைக்க வேண்டும். இனி, இது போன்ற தனி அக்கவுண்ட் தேவையில்லை.

பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், ஸ்கைப் புரோகிராமில் நுழைந்து செயல்படலாம். அண்மையில், விண்டோஸ் 8 வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னர், ஸ்கைப் இதனை அறிவித்தது.

இதே போல மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வசதியையும் அளித்துள்ளது. இதனை ஸ்கைப் பதிப்பு 6 எனப் பெயரிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இத்துடன், ஸ்கைப் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் லைவ் மெசஞ்சர், ஹாட்மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம் ஆகிய தளங்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பவும் இயலும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம், சென்ற ஆண்டில் 850 கோடி டாலர் கொடுத்து, ஸ்கைப் நிறுவனத்தினை வாங்கியது. அப்போது, தன் சாப்ட்வேர் தொகுப்புகளுடன், ஸ்கைப் புரோகிராமினை இணைந்து இயக்கும் வகையில் மாற்றி மேம்படுத்தப் போவதாக அறிவித்தது.

அதன் அடிப்படையில், தற்போதையே மேம்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே நிகழ்வில், விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கான ஸ்கைப் பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள இயக்க முறைகளின் படியே, ஸ்கைப் தொகுப்பும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 போல, மேலும் ஆறு மொழிகளில் கூடுதலான இயக்கத்தினையும் ஸ்கைப் தற்போது கொண்டுள்ளது.

மேக் சிஸ்டத்தினைப் பொறுத்த வரை,ஸ்கைப் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் சேட் செய்திடும் வசதியினைத் தந்துள்ளது. மேலும் ஆப்பிள் தரும் ரெடினா டிஸ்பிளேயினையும் ஸ்கைப் சப்போர்ட் செய்கிறது.

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு!!

                                       
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.

இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.

பெருமளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகளையும் நாம் கைவிட மறுக்கிறோம். இத்தகைய தவறான கணிப்புகளையும், எண்ணங்களையும் இக்கட்டுரையில் காண்போம். அதிலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் முதலில் சரி என்று எண்ணிய பின் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அப்படி உண்மை என்று நினைக்கும் சில பொய்யான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
   
   
குளிர்காலத்தில் ஈரமான தலையுடன் வெளியே சென்றால் சளி பிடிக்கும்


தலையில் தொப்பி போடு அல்லது உனக்கு மிகுந்த சளி பிடிக்கும்' இப்படி எல்லா அம்மாகளும் குளிர்காலம் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது சகஜம் தான். இது சம்மந்தமான பல கணிப்புக்களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. இந்த அடிப்படையில் குளிர்காலத்தில் வெளியே செல்பவர்களை விட குளிர்காலத்தை அனுபவிக்காதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நிருபணமான உண்மை. இதில் ஈரமான தலை அல்லது ஈரமில்லாத தலை என்றெல்லாம் எந்தவித வித்தியாசமும் கிடையாது.
   
சர்க்கரை குழந்தைகளை சுட்டியாக்கும்

அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனின் பத்திரிக்கை குழந்தைகளையும் சர்க்கரையையும் வைத்து 23 ஆராய்ச்சி பாடங்களை வெளியிட்டது. அதன் முடிவு சர்க்கரை குழந்தையின் நடத்தையை பாதிப்பதில்லை. ஆனால் இது உண்மையானதாக நம்மில் திணிக்கப்பட்டுள்ளது.
   
   
உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்கும்

98 சதவிகித உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்குகின்றது எனவும், ஆதலால் தான் குளிர்காலத்தில தொப்பி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் கூறுவது உங்கள் உடம்பில் இருந்து வெளியேரும் சூட்டின் அளவு பெரும்பாலும் பரப்பளவை பொறுத்ததே - தொப்பி அணியாத தலையை விட குளிர் நாளில் விரிவடைந்த கால்கள் மூலமோ அல்லது கைகள் மூலமோ தான் அதிக சூடு வெளியேறுகிறது.
   
சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படும்


இது நியாயமானதாக தோன்றினாலும் உண்மையல்ல. சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படாது. மேலும் எந்த சான்றும் இதை நிரூபிக்கவும் இல்லை மற்றும் சிறிய ஆராய்ச்சிகள் இவற்றில் நடத்தப்படும் போது, சுடக்கு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் சுடக்கு உடைக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூட்டு வீக்கம் ஏற்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவந்தது. மருத்துவத்துறையில் சுடக்கு உடைப்பதால் எழும்பை சுற்றியுள்ள தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது தசை நார்கள் இடப்பெயர்வுக்கும் தான் இணைப்பு இருப்பதே தவிர சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான இணைப்பு இல்லை.
   
   
நெப்போலியன் குள்ளமானவர்

நெப்போலியின் பிரெஞ்ச் நாட்டு அரசர். அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பல வரலாற்று வல்லுனர்கள் தற்போது அவரது கூடுதல் உயரத்தை தந்துள்ளனர். அவர் பிரெஞ்ச் யூனிட்ஸ் பயன்படுத்தி அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று கணக்கிடபட்டுள்ளது. இந்த பிரஞ்ச் யூனிட்ஸ்சை இம்பீரியல் யூனிட்ஸ்சாக மாற்றப்பட்டால் அவரது உயரம் 5 அடி 7 அங்குலம் என்று மாறுகிறது. இந்த உயர அளவு பொதுவான பிரெஞ்ச் நாட்டு மனிதரின் சராசரி உயரத்தை விட அதிகமாவே உள்ளது.
   
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்

வாம் அப்' அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். ஸ்ட்ரெட்ச் செய்து பின்னர் ஓடினால் அது 5 சதவிகிதம் குறைச்சலான இயக்கு திறன் காணப்படும். அதே சமயத்தில் இத்தாலிய வல்லுனர்களின் கருத்துப்படி ஸ்ட்ரெட்ச் செய்வதால் செயல் திறன் குறைகிறது. மேலும் இந்த கூற்று சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
   
முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்திற்கு கேடு விளைவிக்கும்

உணவில் சேர்க்கப்படும் கொழுப்பு வகைகளும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்களும் மற்றும் அதற்கான உணவு கட்டுப்பாட்டு முறைகளும், இரத்த குழாய் சார்ந்த நோயை உண்டாக்குபவை பற்றிய ஆராய்ச்சியில் 1960-ல் சிறிதளவு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஆனால் இதை தவறு என்று உணர்த்த மிருகங்களிடையே தேவையை விட அதிக அளவு கொழுப்பு சத்தை சேர்த்த போதும், அது உடலில் கொழுப்பை அதிகப்படுத்தவில்லை. ஆனால் சாச்சுரேட்டட் கொழுப்பை (இறைச்சிகளில் உள்ள கொழுப்புக்கள்) உட்கொள்ளும் போது தான் அதிகரிக்கிறது. ஆகையால் முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்தை பாதிக்காது.
   
நாயின் ஏழு வயது ஒரு மனித ஆண்டு


மூன்று வயது நிரம்பிய நாய்க்கு மனிதர்களின் வாழ்நாளில் 21 ஆண்டுகள் என்பது சரியா? வல்லுநர்கள் இதை தவறு என்கிறார்கள். ஒருமித்த கருத்து என்னவென்றால் மனிதர்களை விட நாய்களின் முதிர்ச்சி வேகமாக இருக்கும். 21 ஆண்டு முதிர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்து பின்னர் மெதுவாக குறைந்து ஒரு வருடத்திற்கு நான்கு மனித ஆண்டாக மாறும். டாக் விஸ்பரர் சீசர் மில்லன் நாயின் மனித ஆண்டை பின் வருமாறு கணக்கிட வேண்டும் என்கிறார்: நாயின் வயதில் இரண்டை கழித்து அதை நான்கால் பெருக்கி அதோடு 21-ஐ கூட்ட வேண்டும். என்ன கணக்கு புரிந்ததா?
       
ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பற்கள் இருந்தது

20 வயதிலிருந்தே பற்களை இழக்க நேர்ந்த முதல் அமெரிக்க ஜனாதிபதிக்கு மரத்தால் ஆன பற்கள் இருந்தது என்பது தவறான கூற்று. அவருக்கு பற்கள் விழுந்தது உண்மை தான். அவரிடம் நான்கு பொய்யான பற்கள் இருந்தது அவை தங்கம், நீர்யானை தந்தம், ஈயம், மனித மற்றும் மிருகங்களின் பற்களால் ஆனவை. அக்காலத்தில் கழுதை மற்றும் குதிரையின் பற்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த பற்களை ஒன்றாக பிடித்துக் கொள்ள பற்களுக்கிடையே போல்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திறப்பதற்கு உதவியாக ஸ்பிரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை முயற்சி அவருக்கு பிடித்த உணவான மேரி வாஷிங்டனின் சுவையான ஜிஞ்சர் பிரட் ஆகியவற்றை உண்ண முடிந்தது.

இரத்த அழுத்தத்திற்க்கான (பி.பி) ஹெல்த் ரெசிப்பிகள் கருப்பரிசி, சிவப்பரிசி தோசை!

 
இரத்த அழுத்தத்திற்க்கான (பி.பி) ஹெல்த் ரெசிப்பிகள்
கருப்பரிசி, சிவப்பரிசி தோசை

தேவையானவை:

கருப்பரிசி (பச்சரிசி),

சிவப்பரிசி (புழுங்கலரிசி) - தலா ஒரு கப்,

உளுந்து, காய்ந்த மிளகாய்,

துவரம் பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,

இஞ்சி - சிறு துண்டு,

தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன் (வேண்டுமெனில்),

தக்காளி - மூன்று,

சீரகம், மிளகுத் தூள் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் - தேவையான அளவு,

இந்துப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

அரிசி, பருப்புகள், வெந்தயம் அனைத்தையும் களைந்து தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, இந்துப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவில் மற்ற பொருட்களைச் சேர்த்து, மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் 

முதல் வீதி ....First rule ...

அதிகாரத்தில் கை வைக்க கூடாது
"No power of the house"
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்
நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension

Second Rule ...

அடிப்பெனு மிரட்ட கூடாது
"No unwanted scaring"

ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது

Third rule ...

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

And 4'வது Rule ....

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது

And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது
...

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும்
கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது .

குபேரனாகும் சந்தர்ப்பம் !!!

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,""டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,'' என்றார்.

"ஆஹா...இப்படி ஒரு வேலையா?' பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.

சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்... மகிழ்ந்தான்...
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்கை முறையில் நீக்க சில வழி முறைகள்:-

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்கை முறையில் நீக்க சில வழி முறைகள்:-

மூக்கின் ஓரங்களில் தங்கியுள்ள கரும்புள்ளிகளை தேய்த்து தேய்த்து சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அதனைப் போக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். சரி, இந்த கரும்புள்ளிகள் எப்படி வருகிறதென்று தெரியுமா? சருமத்துளைகளானது எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களால் அடைக்கப்படுகிறதோ, அப்போது தான் கரும்புள்ளிகள் உருவாகின்றன.

பொதுவாக இந்த கரும்புள்ளிகள் மூக்கு, தாடை, நெற்றி மற்றும் கன்னங்களில் அதிகம் காணப்படும். ஏனெனில் அந்த இடங்களில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது. எனவே தான் முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை மேற்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி ஸ்கரப் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, அருமையான முறையில் கரும்புள்ளிகளை போக்கலாம். இப்போது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்று பார்ப்போம்.

ஓட்ஸ் :-

ஓட்ஸ் பவுடரை பாலில் கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகளானது எளிதில் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

தயிர் :-

தயிரில் தேன் மற்றம் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைத்து, தண்ணீர் ஊற்றி மீண்டும் ஸ்கரப் செய்ய வேண்டும்.

எலுமிச்சை :-

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், அதனைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கிவிடும். மேலும் முகமும் வெள்ளையாகும்.

ஆரஞ்சு தோல் :-

ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து, உலர விட்டு கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

பேக்கிங் சோடா :-

பேக்கிங் சோடாவும் ஒரு சூப்பரான கரும்புள்ளியைப் போக்கும் பொருள் தான். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முகத்தில் அதனைக் கொண்டு மசாஜ் செய்தால், கரும்புள்ளிகளுடன் முகப்பருக்களும் நீங்கிவிடும்.

பப்பாளி :-

பப்பாளியும் கரும்புள்ளியைப் போக்கும் பொருட்களில் சிறந்தது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து அலச வேண்டும்.

கடலை மாவு :-

கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

கற்றாழை :-

கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

வேப்பிலை :-

வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப் பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

சந்தனம் :-

சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பட்டை :-

பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி :-

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், கரும்புள்ளி போவது உறுதி.

பாதாம் :-

பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

வெள்ளரிக்காய் :-

முகத்திற்கு ஆவிப்பிடித்து 10 நிமிடம் கழித்து, வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்.

ஆலிவ் ஆயில்:-

5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கு :-

உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் போல் அரைத்து, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கொத்தமல்லி :-

கொத்தமல்லியை அரைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் லேசாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பாக இருக்கும் நீரில் அலச வேண்டும்.

முள்ளங்கி :-

முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும்.

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ?

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா?

ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.


இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.(மீண்டும் ஒரு முறை), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!


இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது.


பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.


பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.


பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !!


பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !


இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !!


வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். —