Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 March 2014

சார்லி சாப்ளின் - வாழ்க்கை வரலாறு!


வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.


பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்களுக்கு நகைச்சுவை எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.


1889 ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.


அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலி வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14 ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.


1913 ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழயங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார் 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும் கண்ணாடியும் அணிந்து நடித்தார்


பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.


1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.


சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான தி கிட் 1921 ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925 ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.


அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.


"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"


என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.

கொடிய வியாதி "பொறாமை" - அவசியம் படிக்க வேண்டியக் கட்டுரை!

“எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருத்துவம் கண்டேனா?”

என்று கவிஞர் கண்ணதாசன் சொல்ல மறந்த கொடிய நோய் என்ன தெரியுமா? பொறாமை!

அடுத்தவர் நன்றாய் வாழ்ந்தால்
அடுத்தவர் நல்ல உடை உடுத்தினால்
அடுத்தவர் உயரமாய் இருந்தால்
அடுத்தவர் கணவர் பொருத்தமாய் இருந்தால்
அடுத்த வீட்டு பெண் வசதியாய் இருந்தால்
பொறாமை

யார் எப்படி பொறாமைப்படுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. முதலில் பொறாமையின் தன்மையை நாம் ஆராய முற்பட வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ தான் 200 ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழப்போவதாகவும், அதனால் தான் நினைத்த காரியம் நடத்திக்காட்டி, தான் பெரியவன் என்று உலகத்தார் மூக்கின் மேல் விரல் வைக்குமாறு காட்டப் போகிறேன் என்று எண்ணத்தில் நான்தான் எல்லாரையும் விட சிறப்பாக இருக்க வேண்டும், என்னைவிட அதிக குணநலன்கள் உடையவனை எனக்கு பிடிக்காது. என் விருப்பத்துக்கு மாறாக நடப்பவர்களை வெறுக்கிறேன். அவர்களை எப்படியாவது கஷ்டப்பட வைத்து அதைக் கண்டு ஆனந்தம் அடையப்போகிறேன்! என்று மனக்கணக்குகள் போடுகிறான்.

இதுதான் மற்றவரைப்பார்த்து பொறாமைப்படும் அனைவரது மனநிலையாகும். இந்தக் கொடிய நோயான பொறாமை எப்படி கையாள்வது, இதிலிருந்து எப்படி மீள்வது? இப்போது சில உதாரணங்களைக் காணலாமா?

1. ஒரே குடும்பத்தில் ஒரு தாய் தனக்குப் பிடித்த மகனை விட, மற்றவர்கள் முன்னேறுவதைக் கண்டு பொறாமைப்படுவது.

2. வியாபாரத்தில் இருப்பவர் நிரந்தர அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவரைப் பார்த்து ஏங்குவது.

3. திருமணத்தில் மற்ற பெண்களின் நகைகள், புடவைகளைப் பார்த்து பெருமூச்சுவிடும் பெண்கள்.

4. தனது கீழ் பதவி வகிக்கும் அதிகாரி, தன்னை விட திறமையானவராகவும், தன்னைவிட அதிக மதிப்பைப் பெற்றவனாகவும், மனைவி குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்கிறான் என்ற பொறாமையால் அவரை வெகு தூரத்துக்கு மாற்றல் வாங்கி அவன் குடும்பத்தை எப்படியாவது பிரிந்து துன்பப் பட வைக்க வேண்டும் என்று அலையும் உயர் அதிகாரிகள்!

இப்படியாக பொறாமையின் வெளிபாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஆதரமாய் அமைவது சமுதாயத்தில் நாம் உயர்ந்த அந்தஸ்த்தில் வாழ மற்றவர்களின் முன்னேற்றம் தனக்கு தடைக்கல்லாக மாறக்கூடாது, என்ற தற்குறித்தனம்தான். அந்த எதிர்மறை எண்ணம் மிகக் கொடிய வியாதியாய் மாறி அந்த மனிதரை பாடாய் படுத்துகிறது.

இந்த நோய்க்கு மருந்துதான் என்ன? எப்படி வெல்வது?

நாம் வாழ்க்கையின் குறிக்கோளைப் புரிந்து கொண்டால் போதும் எல்லா பிரச்சினைகளும் விலகி விடும்.

எதற்கு வாழ்கிறோம்? இதை ஆராயமல், பிறந்ததற்குக் காரணம் என்ன? தெரியாது! ஏதோ பிறந்தோம் வளர்கிறோம். திருமணம் ஆகிறது. அவரவர்க்கு ஏதோ வேலை கிடைக்கிறது. சிலர் வியாபாரி ஆகிறார்கள். சிலர் ஊர் புகழ, உலகம் புகழ உயர் வாழ்க்கை, உயர்ந்த அந்தஸ்து, கார், பங்களா என வசதிகள் பெருகி மிகச்சிறப்பாக வாழ்கிறார்கள்.

செப்டம்பர் 11, 2002ல் இரண்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகள் அத்தனை பேரும் உயிர்விடப் போகிறோம் என்று நினைத்தார்களா? சிறிது நேரத்தில் அமெரிக்க வணிக வளாகத்தில் மோதி நாம் உயிர் விடப்போகிறோம் என்று உணர்ந்த சில பயணிகள் மனநிலைமை எப்படி இருந்து இருக்கும்?

உயிருக்கு உயிராய் நேசித்தவர்களை விட்டுவிட்டு சில நிமிடங்களில் உயிர் பிரியப்போவதை எண்ணி எப்படி துடித்திருக்கும் அந்த ஆன்மாக்கள்?

“கொடுத்தவன் உயிரை கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா?” விமானத்தில் இறந்தவர் போக வணிக வளாகத்தில் ஆயிரக்கணக்கில் இறந்தார்கள்! எத்தனை கனவுகளை கலைத்துவிட்டு, எத்தனை உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்திவிட்டு நொடியில் மறைந்து விட்டனரே?

நேற்றைய கோடீஸ்வரன் தெருவில் சாப்பாட்டுக்காக பிச்சை எடுக்கும் கொடூரத்தை குஜராத் பூகம்பம் காட்டியது. வழியனுப்பியவர்களுக்கு கையைசைத்துவிட்டு விமானத்தில் ஏறிய முன்னால் மத்திய அமைச்சர் மாதவராய் சிந்தியா 30 நிமிடத்தில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பார் என்று எவருக்குத் தெரியும்? எவ்வளவு தூரத்து கனவுகள் தவிடுபொடியாயின?

இப்படி துக்க நிகழ்ச்சிகளை நான் கோடிட்டுக் காண்பித்தன் நோக்கம் ஒன்றேதான்?

இவற்றை எல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துச் சொல்லத்தான்! வாழ்க்கை எனும் இரயிலில் இறங்கும் இடத்துக்கு பயணச்சீட்டு வாங்கிவிட்டு ஏறிவிட்டோம். பயணம் முடியும் முன்னர் பாவ மூட்டைகளை வீசி எறிந்து விட்டு வெறும் கையுடன் போகலாம். இல்லையெனில் புண்ணியம் எனும் சிறப்புகளைக் கண்டு செல்லலாம். எதை எடுத்துச் செல்வது, எதை விட்டுச் செல்வது என்ற நாம்தான் முடிவு செய்ய வேண்டும். தெரிந்தே பல சுமைகளை சுமந்து செல்லத்தான் வேண்டுமா? சிறிது யோசியுங்கள்.

ஒரு மனிதனால் அவர் எண்ணங்கள் பல கொடிய பாவங்களைச் செய்யத் தூண்டுவது கொடுமைதான். அடுத்தவனை ஒழிக்க வேண்டும் என்றுதான் மனிதன் தவறுக்குமேல் தவறு செய்கிறான். அடுத்தவனைக் கெடுக்க எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் கொடிய நாகம். திரும்ப வந்து நம்மையே கொத்தும் என்பதை உணர்ந்தால் 95% தவறுகளைநாம் செய்யமாட்டோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே!
வெல்வதற்கே! வீழ்வதற்கல்ல.

சிலருக்குப் பசுமையான தோட்டமாகவும், சிலருக்கு கொடிய பாலைவனமாகும் வாழ்க்கை அவரவர் விளவுகளுக்கேற்றபடி இயற்கையாக அமைகிறது. அதே சமயத்தில் மனிதன் பிறந்த பிறகு தன் வாழ்க்கையைப் பாலைவனமாகவும், சோலையாகவும் மாற்றும் திறன் நம் உள் மனத்தில் புதைந்து உள்ளது என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்.

நாம் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படத்தின் கதை, ஒரு கப்பல் உடைந்து கரையில் ஒதுக்கப்பட்ட நபர் வருடக் கணக்கில் தனியாகவே ஒரு தீவில் வாழ்ந்து எப்படி தப்பி மறுபடியும் நகரத்துக்கு வருவது என்பதுதான். ஒரு மனிதன் பேச்சுத் துணைக்குக்கூட இல்லாத நேரத்தில் ஒரு பொம்மை உருவம் தயாரித்து அதற்குப் பேர் வைத்து நண்பனாகப் பாவித்து தினமும் அதனுடன் பேசுகிறான். கடைசியில் அந்த பொம்மை கைவிட்டுப் போகும்போது கதறி அழுகிறான். அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்து வரும் போட்டி பொறாமை?

பொறாமையின் இன்னொரு பக்கம். ‘நான்’ என்ற அகந்தை,

வாழ்ந்தவர் கோடி; மறைந்தர் கோடி; மக்கள் மனதில் நின்றவர் யார்?

அகந்தைதான் அழிவுக்கு அடிக்கல் என்று எத்தனையோ பேர் உலகில் தோன்றி பாடங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பாவம் மனிதனின் மனம் திரும்பத் திரும்ப தவறுகள் இழைத்துக் கொண்டே இருக்கிறது.

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா
இதில் ஆறடி நிலமே சொந்தமடா” என்றார்
உவமைக் கவிஞர் சுரதா

ஒரு முஸ்லீம் பெரியவர் சொன்னார்,
எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பற!
கீழே விழுந்தால நீ செல்லாக்காசு”

நேற்றுவரை தான் என்ற அகந்தையில் அடுத்தவரை ஏளனப்படுத்திய, பாடகர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் முதலியோர் இன்று எல்லாமிழந்து அகந்தயின் விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்பும்

“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”

என்ற உண்மையை உணர மறுக்கிறது மனித மனம்.

பலரது விஷம் ஏறிய நெஞ்சங்கள், உறவு என்ற அழகிய விலை உயர்ந்த கண்ணாடிப் பாத்திரத்தைத் தெரிந்தே போட்டு உடைக்கின்றன! உடைந்த கண்ணாடிப் பாத்திரம் எவ்வளவு ஒட்டினாலும் சேராது. தெரிந்தே அடுத்தவரை வருத்தப்பட வைக்கும் மனிதப் பிறவிகள் நரகத்தின் வாசலை உயிரோடு இருக்கும்போதே தட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

பாவத்தை உரம் போட்டு வளர்க்கும் சகோதர சகோதரிகளே, வேண்டாம், வேண்டாம், வேண்டாம், சற்றே யோசித்து பாதையை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.

“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவர் உறவு கலவாமை வேண்டும்” என்று வள்ளலார் எத்தனையோ முறை கெஞ்சிக்கேட்டும் திருந்த மாட்டேன் என்கிறதே நம் சமுதாயம்?

நான் என்றால் உதடுகள் ஒட்டுவதில்லை. நாம் என்னும்போதுதான் ஒட்டுகிறது.

தன் வீட்டில் ஆயிரம் ஓட்டை இருந்தும், அதை சுத்தம் செய்ய எண்ணம் இல்லாமல் அடுத்த வீட்டு செல்வ நிலைமைப்பார்த்து பொறாமைப்படுதல் எப்படி நியாயம்?

இயற்கையின் மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நாம் செய்யும் எந்த செயல்களும் கண்ணுக்குத் தெரியாத சுற்றல் மோதி அதே வேகத்தில் நம்மிடம் திரும்பி வரும் என்பதுதான். ஆகாயப் பதிவேடுகளில் உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. பதிக்கப்பட்டு வருகின்றன.

கண்ணுக்குத் தெரியாத ஒரு வீடியோ கேமரா நம்மைப் படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது இரகசியம் என்பது நம் மனதுக்குள் தான் படைத்தவனது பார்வையில் இல்லை என்பதை உணர வேண்டும். உடலில் உயிர் பிரிந்த பின்பு நம் செயல்களைப் படமாகப் பார்க்கும்போது நம்மால் அதைக் கண் கொண்டு பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட அவச்செயல்களை செய்யத்தான் வேண்டுமா?

எப்படிப்பட்ட அருமையான பிறவி மனிதப் பிறவி? வீணாக அடுத்தவரை துன்புறுத்தும் செயல்களில் செலவிடுவது, எப்படிப்பட்ட மகத்தான முட்டாள்தனம்?

நான் சொன்னவற்றை ஒரு முறை சுருக்கமாக புரட்டிப் பார்ப்போம்.

வாழ்க்கையின் குறிக்கோளை புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வின் நிலையாமையை உணர வேண்டும்.

‘தான்’ என்ற அகந்தை – நீக்க வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்பதை உணரவேண்டும்.

மேற்கண்டவற்றை ஆராய்ந்தது நம்மிடம் அந்தக் குறைகள் இருந்தால் அவற்றை உடனே நீக்கி வாழ்வில் மகிழ்ச்சி அடைய முயற்சிக்கலாமே?

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

                                    ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?


1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.

சருமத்திற்கு தேவையான பேஷியலின் வகைகள்

பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தை குறைத்து விடுகின்றனர். இதனால் அழகும், பொலிவும் தொய்ந்து போகும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே பேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் 25 வயது முதல் பேஷியல் செய்து கொள்ள வேண்டும்.

சூரிய வெப்பத்தினாலும், தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பேஷியல் செய்ய வேண்டியது அவசியம். முதலில் பேஷியல் செய்வதற்கு முன்பு என்னென்ன பேஷியலில் பல வகைகள் உள்ளன எந்த எந்த சருமத்தற்கு எந்த வகையான பேஷியல் செய்வது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் மட்டுமே பேஷியல் செய்ய வேண்டும்.

இதில் பல வகை உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உள்ளன. பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், ஹெர்பல் பேஷியல், கால்வானிக் பேஷியல், பேர்ல் பேஷியல், கோல்டு பேஷியல், அரோமா பேஷியல் என பல வகை உண்டு.

கோல்டன் பேஷியல்


இம்முறை பேஷியல் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சருமம் நிறும் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுகள், சுருக்கங்கள் நீக்கப்படும். இதில் முதலில் ஷாதானியம், முட்டை, பன்னீர், முதலிய கலவையை முகத்தில் 10 நிமிடம் தடவ வேண்டும். பிறது அதன் மேல் பால் தெளித்து மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கோல்ட்ஜெல் (அழகு சாதனங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்) தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தினை துடைத்து கோல்ட் பாக் தடவி கண்களை சுற்றி ஷாவீட் என்ற லோஷனை தடவ வேண்டும். கண்களின் மேல் குளிர்ச்சியான பன்னீரை காட்டனில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து துடைத்துவிட்டு ஷா பேஸ் என்ற க்ரீம் தடவ வேண்டும். இதுவே கோல்டன் பேஷியல். இது நன்றாக மாநிலம் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

பேர்ல் பேஷியல்


மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு கோல்டன் பேஷியல் அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பேர்ல் பேஷியல் கிட் என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். அதில் நான்கு வகையாக கிரீம்கள் உள்ளன. அம்முறைபடி செய்தால் முக பொலிவாக மாறும்.

கால்வானிக் பேஷியல்


உலர்ந்த சருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் பேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத்திட்டுகள் டபுள்ஸ்கின், தொங்கு கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

செல்லமாக வளர்க்கும் பூனைகள் நிச்சயம் சாப்பிடக்கூடாத உணவுகள்!

செல்லமாக வளர்க்கும் பூனைகள் நிச்சயம் சாப்பிடக்கூடாத உணவுகள்!

செல்லப் பிராணிகளில் சிறந்த ஒன்றாக இருப்பது பூனையாகும். இவற்றை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் அவைகளின் உடல் நலக்கேடு நம்மை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி விடும். பூனைகள் எதையாவது எடுத்து உண்டால் அது அவைகளுக்கு நலமாய் இருக்குமா என்பது அவைகளுக்குத் தெரியாது.

 நாம் தான் கவனத்துடன் அவைகளை குழந்தைகள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை கெட்டுப் போன பொருட்களை சாப்பிடாமல் இருப்பதை பார்த்து, அவைகளுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணி விடாதீர்கள். கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

 பூனைகள் பொதுவாக சாப்பிடக் கூடாத உணவுகள் என சில உள்ளன. உங்கள் செல்லப் பிராணிக்கு உணவு கொடுக்கும் ஆசையில் தவறான உணவை கொடுத்து அவைகளை சிரமத்திற்கு உண்டாக்காதீர்கள். இதை பற்றித் தெரிந்து கொள்ள மற்றும் என்னென்ன உணவுகளை அவைகளுக்கு கொடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.
   
சாக்லெட்


மனிதர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் சாக்லெட்டுகளை பூனைகளிடம் கொடுத்தால் பெரும் ஆபத்தை விளைவிக்கும். இதை நீங்கள் சாப்பிடும் போதும், உங்கள் குழந்தைகள் சாப்பிடும் போதும் மறந்தும் கூட கொடுத்துவிடக் கூடாது. சாக்லெட்டில் உள்ள தியோபுரோமைன் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. இவை பூனையின் ஆரோக்கியத்தை பாழாக்கிவிடும். ஆகையால் இந்த உணவு பொருளை பூனைகளுக்கு கொடுக்காமல் இருப்பது சிறந்தது.

மீன் வகைகள்

பொதுவாகவே மீன்கள் பூனைகளுக்கு பிடித்த உணவாகும். ஆனால் அதையும் பார்த்து தான் தர வேண்டும். சில வகை மீன்களில் மெர்குரி அளவு அதிகமாக உள்ளது. அத்தகைய மீன்களை நாம் குறைவாக கொடுக்க வேண்டும். இல்லையெனில் இவை பூனைக்கு தீங்காகிவிடும்.

பச்சை முட்டை


பச்சை முட்டைகளை நமது செல்லப்பிராணிகளின் எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். இதில் உள்ள பாக்டீரியா மற்றும் இதர கிருமிகள் பூனையின் வயிற்றுக்குள் சென்று சிரமத்தை கொண்டு வந்து விடுகின்றன.
   
காளான்


மனிதர்கள் மத்தியில் காளான்கள் மிகவும் பிடித்த உணவாகும். ஆனால் இது பூனைகளுக்கு பொருந்தாது. சில பூனைகளுக்கு ஒத்துப் போனாலும், பல பூனைகளுக்கு காளர் சிறந்த உணவு கிடையாது. ஒருவேளை நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டால் அது பூனையின் உடல் நலத்தை பாதித்துவிடும். ஆகையால் காளான்களை உண்பதை விட தவிர்ப்பதே சிறந்தது.

பச்சை நிற தக்காளி


பூனைகள் பொதுவாக சிவப்பு தக்காளியை சாப்பிடலாம். இது நிச்சயம் தீங்கிழைக்காது. ஆனால் இதே வகையில் பச்சைத் தக்காளியையும் எண்ணி விடக்கூடாது. இதை சாப்பிட்டால் பூனைகளுக்கு வாய்வு கோளாறுகள் வரக்கூடும். ஆகையால் இந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்.

பூண்டு மற்றும் வெங்காயம்


வெங்காயம் நாம் பொதுவாக சமைக்காமல் சாப்பிடும் ஒரு காய். அதற்காக இதை பூனையும் சாப்பிடலாம் என்று எண்ணி விடாதீர்கள். வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை பூனைக்கு அபாயமூட்டும் உணவுகளாகும். இதை உண்டால் பூனைக்கு இரத்த சோகை ஏற்படும். வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சமைத்தோ அல்லது சமைக்காமலோ கொடுப்பது தவறு. இதனால் உங்கள் செல்லப் பிராணி இருக்கும் இடத்தில் இத்தகைய பொருட்களை வைக்க வேண்டாம்.

மது அருந்துதல்

நீங்கள் வார இறுதியில் உங்களை மகிழ்விக்க மது அருந்துவது வழக்கமாக இருக்கலாம். ஆனால் இதை உங்கள் பூனைக்கும் கொடுத்து விடாதீர்கள். மது அருந்தினால் பூனையின் மூளை செயல்பாடும், ஈரலின் செயல் திறனும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்...!

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், “பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.”

சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் (மய்ண்ஸ்ங்ழ்ள்ங்) பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் (இர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) ஆழ்மனம் (நன்க்ஷஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

“உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம் வாழ்ந்த நாட் களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

உற்சாகமாக நடப்போம்...!

ஆறுமனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!

ஆறு என்றால் வழி, அறுத்துச் செல்வது என்று ஆறு என்று, ஆற்றுப்படை பற்றிப் பேசும்போது விளக்குவார்கள்.

1. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

புறநகர்ப் பகுதியில் ஒரு புதிய குடியிருப்பு. எனில், நீங்கள் தேடும் முகவரி ஒரு நீண்ட கட்டுரை போலத்தான் இருக்கும். ஃப்ளாட் எண் 19 ஜி, நான்காவது மாடி, மேட் ஃபார் ஆல் மேன்ஷன், 3487/12 ஈ, நாற்பதாவது குறுக்குத் தெரு, ஏழாவது ஸ்டேஜ், புதிய அம்பேத்கார் நகர் விரிவு, மகளிர் மருத்துவமனை அருகில், இன்னும் தாலுகா, பின்கோட் என்று தொடரும் போட்டு எழுதும் அளவிற்கு ஒரு முகவரியை வைத்துக் கொண்டு நீங்கள் முழி பிதுங்க நின்று கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்குத் தோன்றுகிற முதல் எண்ணம், பேசாமல் வந்த ஆட்டோவிலேயே திரும்பிப் போய்விடலாம் என்பதுதான். பூதம் காத்த புதையலின் குறிப்பை வைத்துக்கொண்டு மயான பூஜைக்கு வந்தது போல்தான் மருள்கிறீர்கள். ஆனால், வீட்டைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும். அப்போது உங்களை வரவேற்கிறது ஒரு பெரிய கான்க்ரீட் வரைபடம். அதில் அந்தக் குடியிருப்பைப் பற்றிய எல்லா விவரங்களும் உள்ளன. ஆனால் காய்ச்சலில் வரும் கனவுகள்போல் ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் ஓர் அம்புக்குறி உங்கள் உதவிக்கு வருகிறது. அதைக் கண் பற்றித் தொடர்ந்தால் அது =நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்கிறது. ஆஹா! அந்தப் பிடிமானத்தை வைத்துக்கொண்டு நீங்கள் மழைக் காலத்தில் தண்ணீர் விரைவது போல் மிக இயல்பாக முகவரியைக் கண்டுபிடித்து விடுகிறீர்கள். இவ்வளவுதான் சாமி விஷயம்!

இருக்கும் இடம் புரியாமல் இம்மியும் நகர முடியாது. சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல், சுமை விலகாது, சுகம் வராது.

சரி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், சென்னையா? கேரளக்காரர்கள் எந்த மொழியையும் எளிதில் கற்றுக் கொள்வார்கள் என்றும் எந்த மொழியானாலும் அதை மலையாளத்திலேயே பேச வல்லவர்கள் என்றும் அறிவோம். அது போலத்தான் சென்னையில் புழுக்கமான கோடை, புழுக்கமான மழை, புழுக்கமான மார்கழி என்ற ஒரு சிறப்பு உண்டு. மனிதாபிமானம் உள்ளவர்கள் அங்கே இருமுறை குளிப்பார்கள், அரை வாளியை அண்டாவாக நினைத்துக் கொண்டாவது.

நீங்கள் இருப்பது ராஜஸ்தானில் ஒரு கிராமம் என்றால்? பேய் வெய்யில். ஆனால் குளிக்கத் தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம். மதுரையில் அதிகாலையில் குளித்து விட்டு மீனாட்சி கோயிலுக்குச் செல்வார்கள். கேதார்நாத்தில் அது கின்னஸ் சாதனை. பூசாரி எப்போதாவது குளிப்பாரா என்ற கேள்வி நமக்கு எப்போதும் உண்டு. தமிழ்நாட்டில் இரவெல்லாம் தூங்காத நகரங்கள் உண்டு. காஷ்மீரில் பெரும் பாலான நாட்கள் 144 அல்லது 1440. கோவையில், நாளை திருமணம் என்றால் இன்று போய் எதையும் வாங்கலாம். எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொள்ளலாம். கல்கத்தாவில் சேர்ந்தாற்போல் இரண்டு கடையடைப்பில்லாத நாட்களைக் காண்பது அரிது.

புத்தர் அகிம்சைதான் போதித்தார். ஆனால், புலால் உண்ணாமை திபெத்தில் ஒத்துவராது. அந்தப் பனிப்பாலைவனத்தில் நீங்கள் எந்தப் பயிரை வளர்த்துப் பொங்கல் கொண்டாடுவீர்கள்? அதனால்தான், =என் மக்களுக்கு எது கிடைக்கிறதோ அதையேனும் தின்னட்டும்+ என்று அகிம்சா வாதிகளை விரட்டிவிட்டார் விவேகானந்தர்.

வண்டிகள் செல்வது இங்கே இடதுபக்கம் என்றால் அமெரிக்காவில் வலது பக்கம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சூப்பர் கண்டக்டிவிடி ஆராய்ச்சி பண்ணித் தீருவேன் என்றால் நடக்குமா?

பிறந்த மண், குடும்பச் சூழல், வளர்க்கப்பட்ட முறை இவற்றைப்போல் நாம் புலம்பெயர்ந்து சென்ற இடத்தின் தாக்கமும் தவிர்க்கப்பட முடியாதது.
இதை, எளிதாகப் புரிந்து கொள்ளலாம்:

அம்மாவின் சமையல் அலுத்துப்போய், அவ்வப் போது நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு பிடித்துப் போய் பிறகு பிடிக்காமல் போய், வேலைக்காக வெளியூருக்குச் சென்று குடல் காயும்போது அம்மாவின் சமையல் அருமையாகத் தெரிகிறது. மனைவியின் மீது கொண்ட காதல் அவள் சமையல் மீதும் தொற்றிக் கொண்டு, சில காலம் கழித்து, தொய்வடைந்து அம்மாவின் வற்றல் குழம்புக்கு ஆஸ்திரேலியாவை எழுதி வைக்கலாம் என்று நண்பர்கள் நடுவே பேசி, மனைவியின் சமையலில் காரம் ஏறிவிடுகிறது.

இங்கே ஆங்கிலம் பேசத் திணறியவன்தான், அமெரிக்கா சென்று ஒரு வருடம் கழித்துத் திரும்பி வரும்போது அவன் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாமல் நாம் திணறுகிறோம்.

ஆனால், அடிப்படையில், பிறந்த மண்ணின் வாசம் ஒவ்வொருவனின் ஆன்மாவிலும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அது போகவே போகாது.

அதனால்தான், =நீங்கள் இந்தியனை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடலாம். ஆனால் ஓர் இந்தியனிடமிருந்து ஒருபோதும் இந்தியாவை வெளியேற்றிவிட முடியாது+ என்று ஒரு விளம்பரம் சொல்லும். வர்ன் ஸ்ரீஹய்’ற் த்ன்ம்ல் ர்ன்ற் ர்ச் ஹ்ர்ன்ழ் ள்ந்ண்ய் என்ற ஆங்கிலப்பழமொழியின் ஆழமான பொருள் இதுவே.

நாடு முழுவதும் ஒரே பண்பாடுதான் என்றாலும், அது வெளிப்படும் முறை மாநிலத்திற்கு மாநிலம், ஏன், வீட்டுக்கு வீடு மாறு படுகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் பிரத்யேகமாகச் சில பழக்கவழக்கங்கள் உண்டு. ஒவ்வொரு நாட்டுக்கும் அதுபோல் உண்டு.

ஆகவே, உணவில் ருசியிலிருந்து தொடங்கி, இலக்கிய ரசனை வரை, நமது அபிப்பிராயங்கள், தீர்மானங்கள், உணர்வு களின் போக்கு, இவையாவற்றையும் பெருமளவிற்கு நாம் இருக்கும் இடமும் நமது சூழ்நிலைகளும் நிச்சயிக்கின்றன.
எனவே, நாம் எங்கே இருக்கிறோம், நமது சூழ்நிலைகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது நமது மனநிலைக்கும் பொருந்தும்.

இந்த வாரம் ஒன்றை கற்போம்..?


இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு / இறப்பு சான்றிதழ். சில பேரிடம் இது போன்ற சான்றிதழ்கள் தொலைத்திருக்க வாய்ப்புண்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பியை டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் போதும் பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம்.

அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பரிமாறிக் கொள்ளலாம். இதை நம்மூர் ஆட்களும் வெளியூர் ஆட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது பிறந்த தேதி அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் A-Z ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேண்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது SAVE பண்ணி கொள்ளுங்கள்.

அது போக பிறந்த இறந்த சர்ட்டிஃபிக்கேட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கேட்டுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு. அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும், இதே போல மருத்துவமனையில் பிறந்த / இறந்தவர்களின் டீட்டெயிலும் இங்கே கிடைக்கும்.டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மணி. 1998 முதல் அத்தனை பேரின் டீட்டெயிலும் இங்கே உள்ளது.

உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற – For Birth Cert http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள – Corrections in the Birth Cert-

http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற – Death Cert

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள – Corrections in the Death Cert

http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

மருத்துவமனை பிறப்பு இறப்பு டீட்டெயில்ஸ் இங்கே – Hospital Birth / Death

http://218.248.24.70:8080/birthdeath/

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்……..

கோயம்புத்தூர் ஆட்களுக்கு – Birth

https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் ஆட்களுக்கு – Death –

https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை ஆட்களுக்கு –
http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி ஆட்களுக்கு –  https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் – http://210.212.242.67/birth/deathindex.htm


கற்ப மூலிகை - பித்தம் தணிக்கும் கொத்தமல்லி!

உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.

மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன. இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.

கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.

நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.

கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள். அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.

பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.

நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை. இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.

இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.

கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
கச்சுமுலை மாதே! நீ காண்


-அகத்தியர் குணவாகடம்

பொருள் -


சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.

கொத்தமல்லியின் பயன்கள்

· சுவையின்மை நீங்கும்.

· வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

· செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.

· வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

· புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

· கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும் கண் சூடு குறையும்.

· சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

· உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

· நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மன அமைதியைக் கொடுக்கும்.

· உடலுக்கு வலுவைக் கொடுக்கும். விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.

· நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

· வாய் நாற்றத்தைப் போக்கும். பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.

சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

கொத்தமல்லி இலை - 1 கைப்பிடிசின்ன வெங்காயம் - 5
மிளகு - 10
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிகறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு


எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.

கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி சூரணம்

கொத்தமல்லி - 300 கிராம்
சீரகம் - 50 கிராம்
அதிமதுரம் - 50 கிராம்
கிராம்பு - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
சன்னலவங்கப்பட்டை 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்

இவை அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும். இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.

கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.

இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

நினைவாற்றலை பெருக்கும் கிழட்டு தன்மையை தடுக்கும் வல்லாரை கீரை!


நினைவாற்றலை பெருக்கும் கிழட்டு தன்மையை தடுக்கும் வல்லாரை கீரை

நினைவாற்றலை பெருக்க வேண்டும் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது ‘வல்லாரை’ தான். ஆனால் வல்லாரைக்கு இதை தவிர வேறு சில நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. வல்லாரைக்கு ‘சரஸ்வதி’ என்ற பெயரும் உண்டு. ஒருவரை புத்திமானாக்கும் அற்புத சக்தி இருப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் வல்லாரையை கீரையாகவோ, துவையலாகவோ சமைத்து சாப்பிடுகிறார்கள். இது மிக நல்லது. வல்லாரையை அப்படியே உலர்த்தி பொடி செய்து மாத்திரையாகவும் தருகிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Centelle asiatia (linn) Urban. மண்டூகபரணி, ஆரை, சிங்கி, சண்டகி, குடகம், விக்கிராத்தா, குளக்குறத்தி, குணச்சாலி குணத்தி என்ற பெயர்களும் உண்டு.

மலை வல்லாரை, கருவல்லாரை என்ற இருவகைகள் உள்ளன. இது கணுக்களில் வேர்விட்டு தரையோடு படரும் சிறு செடி இனம். இதன் இலைகள் கரும்பச்சை நிறமாக இருக்கும். வட்ட, அரைவட்ட வெட்டு பற்களுடன் கூடிய கை வடிவ நரம்பு அமைப்புகளுடன் நீண்ட காம்புடைய ஆழமான இதய வடிவ இலைகளை கொண்டது. இதன் பூ ரோஸ் நிறத்திலும், பழங்கள் சிறிய முட்டை வடிவிலும் இருக்கும். கசப்புடன் கூடிய துவர்ப்பு சுவை உடையது. இதன் மகத்துவம் மிகப்பெரியது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.

இந்த மூலிகையில் asiaticoside, resins போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இது நினைவாற்றல், அறிவு, மனதை ஒருமுகப்படுத்துவது, துடிப்போடு இருக்க செய்வது ஆகிய செயல்களை தூண்டி, மூளையின் திசுக்களை புதுப்பிக்கவும் செய்கிறது. வல்லாரையில் இருக்கும் antiascorbic acid தோலில் ஏற்படும் பலவித நோய்களையும் குணப்படுத்தும். இது தொழுநோயை கூட குணப்படுத்தும் சக்தி படைத்தது. இதில் இருக்கும் ஹைட்ரோகாட்டிலின் நம் மூளையின் செயல்களை முடுக்கி விடுகின்றன. வல்லாரையில் இருக்கும் வல்லாரின் என்கிற அல்கலாய்டு நரம்புகளுக்கு மிகப்பெரிய சக்தியை தருகிறது.

நோயை நீக்கவும், உடலை பலப்படுத்தவும், வியர்வையை அதிகப்படுத்தவும், தாதுபலத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

மூலாதார நரம்புகள் புதுப்பிக்கப்பட்டு கபால நரம்புகள் செயல்பட்டு நல்ல நினைவாற்றலை தருகிறது.

வல்லாரையுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி, சிறு பருப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் கடைந்து தக்காளி, சிறிது கடுகு சேர்த்து தாளித்து வைத்துக்கொண்டு வெயில் நேரத்தில் உண்டு வந்தால் நரம்புகள் நல்ல வலுப்பெற்று சுருக்கத்தை போக்கி சீராக வைத்துக்கொள்கிறது.

வல்லாரை இலையை உலர்த்தி பொடி செய்து சிறிது நெய் சேர்த்து உணவில் பிசைந்து ஒரு பிடி அளவு சாப்பிட்டால் வாதம், வாயு, அண்டவீக்கம், யானைக் கால், குஷ்டம், நெறிகட்டி, கண்ட மாலை, மேகரணம் குணமாகும்.

வல்லாரை சூரணத்தை ஒரு சிட்டிகை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் வீக்கம், தோல் வியாதிகள், மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள், இளநரை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் குணமாகும். உடல் கிழட்டுதன்மை அடைவதை தடுக்கும். தோலுக்கு நிறத்தையும் மினு மினுப்பையும் தரும்.

வல்லாரை இலையுடன் தூதுவளை இலையை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து 20 துளியை மட்டும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர தொண்டை கரகரப்பு, சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் குணமாகும்.

பல மருத்துவ குணங்கள் வல்லாரைக்கு உண்டு. மூலிகைகள் பல இருந்தாலும் அவற்றில் வல்லாரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 108 காயகல்ப மூலிகைகளில் வல்லாரை ஒரு தளபதி நிலையில் உள்ளது.

உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்குவதில் வல்லாரைக்கு முக்கிய பங்கு உண்டு. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும் வல்லாரை தனி இடம் வகிக்கிறது.

சிலருக்கு வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே என்ற தவிப்பான மனநிலை (anxiety) இருக்கும். இதை செய்யலாமா, அதை செய்தால் சரியாகிவிடுமா என்ற மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்களது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கும் வல்லாரையில் தீர்வு இருக்கிறது.

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த Scleroderma (ஸ்கிளீரோடெர்மா) என்ற இணைப்பு திசுக்கள் கடினமாதல் மற்றும் தண்டுவட பிரச்னைக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது. வல்லாரை குளம், குட்டை போன்ற சிறிய நீர் நிலைகளில் அமோகமாக வளரும். இது குறிப்பாக மலைபாங்கான இடங்களில் தானாகவே வளர்கிறது.

விஷத்தை நீக்க வேண்டும்

வல்லாரையை பச்சையாக உபயோகிக்க கூடாது. இதில் ஒருவித விஷத்தன்மை உள்ளது. எனவே சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும். புதிய மண் சட்டியில் பசும்பால் முழுவதும் ஊற்றி ஒரு வெள்ளை துணியை கட்டி அதில் வல்லாரை இலைகளை போட்டு மூடி வைத்து சிறு தீயில் எரிக்க வேண்டும். பால் ஆவியாகி வல்லாரையிலுள்ள விஷத்தன்மையை முறித்து கீழே தள்ளிவிடும். பின்னர் இலையை உலர்த்தி இடித்து பொடியாக்கி பயன்படுத்தவேண்டும்.

வல்லாரை கேப்சூல் ஆபத்து

வல்லாரையின் மொத்த செடியும் மருந்துதான். ஆனால் சிலர் வல்லாரையிலுள்ள அல்கலாய்டுகளை சிந்தெடிக் முறையில் பிரித்து கேப்சூல்களாக விற்கிறார்கள். இது தவறு. காரணம் இயற்கை எப்போதும் தன் படைப்புகளில் ஒரு சமநிலையை வைத்திருக்கிறது. அதை பிரிப்பதால் நிச்சயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை கேப்சூல்களை தவிர்த்து நேரடியாக தயாரிக்கப்பட்ட மாத்திரை அல்லது சமைத்து சாப்பிடலாம்.

நல்லாரை காண்பதும் நன்றே! வல்லாரை உண்பதும் நன்றே!

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்!


தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.


2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.


3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.


4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.


8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்

வெள்ளைத் தங்கம் “அஸ்பாரகஸ்”

                                          
                                              வெள்ளைத் தங்கம் “அஸ்பாரகஸ்”


அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும், நீண்டகாலம் வாழும் தன்மையுடையது.

இந்த தாவரம் உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை கொண்டும் காணப்படுகிறது.இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும்.

இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும்.

இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும்.

ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து உறுப்புக்களும் ஒரே பூவில் காணப்படும்.

இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.

இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டதாகும்.

இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.


பயிரிடுதல்

கடல்சார்ந்த பகுதிகளில் தான் அஸ்பாரகஸ் அதிகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.

ஏனெனில், அஸ்பாரகஸ் விளையும் நிலம் மிகவும் உப்பு நிறைந்ததாக இருக்கும்.


சத்துக்கள்

இதில் கொழுப்புச் சத்து இல்லை, குறைந்த அளவில் கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் ஆரோக்கியமான உணவு என்றும் கூறலாம்.

போலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் உள்ளது.

இதனை வெள்ளைத் தங்கம் என்றும் அழைப்பர், வெள்ளை அஸ்பாரகசை விட பச்சை அஸ்பாரகசில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

மருத்துவ குணம்

அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், சிறுநீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது, நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது.

சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதனுடைய நார் சத்து மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது.

அஸ்பாரகஸ், மனச்சோர்விலிருந்து பாதுகாப்பளித்து, மன நிலையை லேசாக்கக் கூடியது.

ஏனெனில் இதில் போலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவைகள் நிறைந்து காணப்படுகிறது.


இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை, போலேட் மட்டுப்படுத்துகிறது என ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், போலேட் குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் இழப்பு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு குட்டி கதை!

                                                            ஒரு குட்டி கதை:

ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்துபலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான்,''இல்லை ,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.

ஏழை சொன்னான், ''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள், ''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்

எப்படிச் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, "உணவே மருந்து" என்ற விஷயம் நமது உணவு முறையில் ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது. இன்றைக்கு ஒரு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரைத் தேடி ஓடுகிறோம் அல்லது அலோபதி மருந்துகளைச் சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் நமது வீட்டுப் பெரியவர்களோ மருந்துக்குப் பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.

அப்படிக் காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், நமது மிகப் பெரிய பொக்கிஷம். அப்படிப்பட்ட ஆரோக்கிய உணவு முறைகளைப் பற்றி மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்:

வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஹோட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது.

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.

உணவைச் சவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்ஸைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று குறிப்பிட்டார்கள்.

உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்ச ருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.

இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.

சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்குச் சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்?

அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின் டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிஃபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில் பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவது நல்லது.

அதேபோலச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும், உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். பித்தம் (உடல்சூடு) இருப்பவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டிப் பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும்.

நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல் சரிவிகித உணவாகவும் இருந்தது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துகளும், செரிமானத்துக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன. அந்தப் பழைய முறையைத் தெரிந்துகொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்!

                                     சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்!

இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.

''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும்.

''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்'' என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரியும் ஷீலா பால் கூறுகிறார்.

''சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பைத் தவிர உடலுக்கு வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. இனிப்புகளை நிறைய சாப்பிடுவதால்தான், உடலில் சர்க்கரைச் சத்து சேர்ந்துவிடுகிறது. எனவே, தவிர்ப்பது முக்கியம்'' என்கிற ஷீலா பால், சர்க்கரை நோய்க்கான சில ஸ்பெஷல் ரெசிபிகளைச் சொல்ல, அவற்றைச் செய்து காட்டி அசத்தினார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

சத்துமாவு பாசிப்பருப்பு அடை

தேவையானவை:

எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு, பாசிப்பருப்பு - தலா அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

கம்பு தயிர் சாதம்

தேவையானவை:

கம்பு - ஒரு கப், தண்ணீர் - 5 கப், பால் - ஒன்றரை கப், தயிர் - ஒரு கரண்டி, தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, 'விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல் போய்விடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.

உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, பால் சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல்

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - 4, மாங்காய் இஞ்சி - 50 கிராம், கொத்துமல்லித் தழை - கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, புளி - சிறு அளவு, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

 மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.

சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்’ தயார்.

கலர்ஃபுல் குடமிளகாய் சாலட்

தேவையானவை:

 சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் - தலா பாதி அளவு, லெட்டூஸ் இலை - சிறிதளவு, தக்காளி - 1, ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன், வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மூன்று நிற குடமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும். லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: நகரங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 'ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.

முளைகட்டிய பாசிப்பயறு சூப்

தேவையானவை:

முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி.

செய்முறை:

 வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.

விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.

நச்சுக்கொட்டைக் கீரை மிளகுப் பொரியல்

தேவையானவை:

கழுவி நறுக்கிய நச்சுக்கொட்டைக் கீரை - 2 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 6 பல், வறுத்துப் பொடித்த மிளகுத்தூள், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

பூண்டு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, கீரையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.

குறிப்பு: நச்சுக்கொட்டைச் செடி எல்லா இடத்திலும் பரவலாக வளர்ந்து கிடக்கும். பொதுவாக யாரும் தேடாமல் கிடக்கும் இந்த இலைகள், அதிக சத்து நிரம்பியவை. அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது