Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 14 March 2014

இளையராஜாவின் முதல் முதல் அனுபவம் அருமையானது..படித்துப்பாருங்க..?

சிவகுமார் - சுஜாதா இணைந்து நடித்த இளையராஜா இசை அமைத்த முதல் படம் 'அன்னக்கிளி.' இதில் சிவகுமாரும், சுஜாதாவும் இணைந்து நடித்தனர்.

திருமணத்துக்குப்பிறகு, 1975-ல் 'எங்க பாட்டன் சொத்து', 'புதுவெள்ளம்', 'மேல்நாட்டு மருமகள்', 'தங்கத்திலே வைரம்' உள்பட 10 படங்களில் சிவகுமார் நடித்தார்.

இவற்றில், 'மேல்நாட்டு மருமகள்' படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கினார். சிவகுமாருக்கு ஜோடியாக மேல்நாட்டுப் பெண்ணே நடித்தார். படத்தில் அவர் தமிழ்ப்பெண் போல உடையணிந்து, பரதநாட்டியம் ஆடி அசத்தினார்.

இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர், குன்னக்குடி வைத்தியநாதன். ஏற்கனவே, காரைக்கால் அம்மையார் படத்தில் 'தகதகதக தகதக என ஆடவா' பாடலுக்கு இசை அமைத்து மிக புகழ் பெற்று விளங்கிய அவர், இந்தப் படத்தில் பிரபல 'பாப்' இசைப் பாடகி உஷா உதூப்பை பாட வைத்தது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசன் ஆடிய நடனம் ஒன்றும் இடம் பெற்று இருந்தது.

சிவகுமார் நடித்த மிக முக்கியமான படங்களில் ஒன்று 'அன்னக்கிளி.' இளையராஜா முதன் முதலாக இசை அமைத்த படம் இதுதான். பாடல்கள் எல்லாம் மிகப் பிரமாதமாக அமைந்ததால், இளையராஜா சீசன் தொடங்கியது.

சிவகுமாரும், சுஜாதாவும் இணைந்து நடித்த இந்தப் படம் பஞ்சு அருணாசலம் தயாரித்ததாகும். டைரக்ஷனை தேவராஜ் - மோகன் கவனித்தனர்.

மலையடிவாரம், வயல்வெளி, ஆற்றுப்படுகை என, படம் முழுவதும் வெளிப்புறத்திலேயே படமாக்கப்பட்டது.

1976 மே 14-ந்தேதி படம் வெளியாயிற்று. முதல் இரண்டு நாட்கள், 'ஹவுஸ்புல்' ஆகவில்லை. படம் நன்றாக இருப்பதாக, பார்த்தவர்கள் செய்த வாய்மொழி விமர்சனங்கள் பரவப் பரவ கூட்டம் அதிகரித்தது. பிறகு தினமும் ஹவுஸ்புல்தான்!

பல ஊர்களில் இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. கோவை இருதயா தியேட்டரில் 205 நாட்கள் ஓடியது.

படத்தின் இடைவேளைக்குப்பிறகு, 'சொந்தமில்லை, பந்தமில்லை வாடுது ஒரு பறவை' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. பி.சுசீலா பாடிய இப்பாடல், 2-ம் நாள் நீக்கப்பட்டது.

இசைத்தட்டில் இப்பாடலைக் கேட்ட ரசிகர்கள், படத்தில் பாடல் இடம் பெறாததைக் கண்டு கலாட்டா செய்தனர். அதனால், அந்தப்பாடல் காட்சி மீண்டும் சேர்க்கப்பட்டது.

சிவகுமார் நடித்து இதே ஆண்டு வெளியான 'பத்ரகாளி' மற்றொரு 'சூப்பர் ஹிட்' படம்.

ஆனால், படம் வெளி வருவதில் எதிர்பாராத சோதனை ஏற்பட்டது. படம் 5 ஆயிரம் அடி வளர்ந்திருந்த சமயத்தில், கதாநாயகி ராணி சந்திரா, மும்பை விமான நிலையத்தில் நடந்த விபத்தில் பலியாகி விட்டார். இதனால் படத்தை எப்படி முடிப்பது என்று பட அதிபரும், டைரக்டருமான ஏ.சி.திருலோகசந்தர் கலங்கிப்போனார்.

இதுபற்றி சிவகுமார் கூறியதாவது:-

'துபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு மும்பை திரும்பிய ராணி சந்திரா, மறுநாள் அமெரிக்கா புறப்பட வேண்டும். ஆகவே அன்றிரவே சென்னை சென்றுவிட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு பயணமாக விரும்பிய அவர், விமானத்தில் ஏறினார்.

200 அடி கூட பறந்திராத விமானம் தீப்பற்றி எரிந்து, ராணி சந்திரா உள்பட பயணிகள் பலியாயினர்.

'தமிழ்நாட்டு ரசிகர்கள் தங்கமானவர்கள். கலையை உயிராக நேசிப்பவர்கள். நான்கு படங்கள் நடித்த பின், சென்னையிலேயே வீடு வாங்கி, குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று பலமுறை என்னிடம் கூறிய ராணி சந்திராவின் கனவுகள் கானல் நீராகிவிட்டன.

இந்தப் படத்தை பெரிதாக நம்பியிருந்தார், டைரக்டர். கறுப்பு வெள்ளை படமாக இருந்தாலும், ரசித்து ரசித்துப் படமாக்கினார். விபத்து பற்றி அறிந்ததும் கலங்கிப் போனார். வீட்டுக்குச் சென்று, அவரை சமாதானப்படுத்தினேன். 'எப்படியும் படத்தை முடித்து விடலாம், சார்' என்றேன்.

'எப்படி சிவகுமார் முடியும்? படத்தில் மூன்றில் ஒரு பங்கு பாக்கியிருக்கிறது. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி இருக்கிறது. அவர் இல்லாமல் இக்காட்சிகளை எப்படி எடுப்பது? கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை' என்று வேதனையோடு கூறினார், டைரக்டர் திருலோகசந்தர்.

மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, வீடு திரும்பினேன். இரவெல்லாம், தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். ராணி சந்திரா முகச்சாயலில் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். விடியற்காலையில் ஒரு பொறி தட்டியது.

'பட்டிக்காட்டுராஜா' படத்தில், நடனக்காட்சி ஒன்றில் என்னோடு ஆடிய பெண் புஷ்பா. 'தங்கத்திலே வைரம்' படத்திலும் சில காட்சிகள் என்னோடு நடித்திருந்தார்.

மறுநாள் காலை டைரக்டர் வீட்டுக்கு ஓடினேன். புஷ்பா பற்றி கூறினேன். படக் கம்பெனிகள் மூலமாக, அந்தப் பெண்ணின் விலாசத்தைக் கண்டுபிடித்து, அவரை அழைத்து வரச் செய்தோம்.

ஒளிப்பதிவாளர் விஸ்வநாத்ராயை வரவழைத்து, புஷ்பாவை படம் பிடித்துப் பார்த்தோம்.

ராணி சந்திராவுக்கும், புஷ்பாவுக்கும் கண்ணிலும், மூக்கிலும் மட்டும் சிறிது வித்தியாசம். மற்றபடி உயரம், உருவம், நெற்றி, முகத்தோற்றம் எல்லாம் ஒரே மாதிரி இருந்தன.

டைரக்டர் திருலோகசந்தர் சார், மிக சாமர்த்தியமாக ராணி சந்திராவுக்கும், புஷ்பாவுக்கும் வித்தியாசம் தெரியாதபடி காட்சிகளை படமாக்கி, படத்தை முடித்தார்.'

இவ்வாறு சிவகுமார் கூறினார்.

திரையிட்ட இடங்களில் எல்லாம் வெள்ளி விழா கொண்டாடியது 'பத்ரகாளி.'

இறந்து போன கதாநாயகிக்கு பதிலாக இன்னொரு பெண்ணை வைத்து, வித்தியாசம் தெரியாமல் பல காட்சிகளைப் படமாக்கி வெற்றி பெற்றது சரித்திரச் சாதனை.

இதே ஆண்டு வெளியான மற்றொரு படம் 'மதன மாளிகை.'

பட அதிபர் என்.வி.ராமசாமி, மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 36 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, இந்தப் படத்தை எடுத்தார். சிவகுமார் இப்படத்தில் பல தோற்றங்களில் தோன்றினார்

விபரீத ஆசைக் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்! என்னங்க அது..?

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–


கஜினி படத்தை தெலுங்கில் மகேஷ்பாபுவை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. எனவே மீண்டும் மகேஷ்பாபுவை வைத்து பெரிய படம் ஒன்றை இயக்கப் போகிறேன். இப்படம் மகேஷ்பாபு நடிக்க சம்மதிக்காவிட்டால் ராம்சரன் தேஜாவை தேர்வு செய்வேன்.


பணம் சம்பாதிப்பதற்காக நான் சினிமா தயாரிப்பாளர் ஆகவில்லை. திறமையான இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே பட அதிபர் ஆனேன். ஒவ்வொரு படத்திலும் திறமையான புது ஆட்களை அறிமுகம் செய்வேன். சிறு பட்ஜெட் படங்கள் எடுப்பது, ஆபத்தானது. எனவேதான் பெரிய பட்ஜெட் படங்களை இயக்குகிறேன்.


ஹாலிவுட்டில் வருவது போல் திரில்லர் படம் இயக்க ஆசை. விரைவில் அது நடக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.

எடை குறைப்பு சம்பந்தமாக ஒழிக்கப்பட வேண்டிய 15 கற்பனைகள்!

      எடை குறைப்பு சம்பந்தமாக ஒழிக்கப்பட வேண்டிய 15 கற்பனைகள்

அதிக உடற்பயிற்சியும் குறைவாக உணவு உட்கொள்ளும் பழக்கமும் எடை குறைப்பிற்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! எனினும் உடல் எடையை குறைக்க விரும்பும் ஒருவர், எளிமையான ஆனால் தவறான பழக்கங்களை மேற்கொள்வதில் பொழுதை கழிப்பாரேயானால், அவர் அதே நிலையிலேயே தொடர நேரிடும்.


கட்டுக்கோப்பான உடல்தகுதியை பெற விரும்பும் ஆர்வலர்களான நாம், எடை குறைப்பின் கற்பனைக்கும், எடை குறைப்பின் உண்மைக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டினை புரிந்து கொள்ள வேண்டும்.உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவும் 14 சிறந்த வழிகள்!


ஸ்கெட்ச் க்ளினிக்ஸின் எடை குறைப்பு மேலாண்மை குறித்த ஆலோசகர் ரிட்டேஷ் ஜேனி, எடை குறைப்பு சம்பந்தமான நடை முறையில் நாம் கொண்டிருக்கும் 15 கற்பனைகளை தகர்த்து கருத்து தெரிவிக்கிறார்.


கற்பனை: 1

உணவினை தவிர்ப்பது, எடை குறைப்பிற்கு சிறப்பான டயட் முறையாகும்

உண்மை

உணவினை தவிர்ப்பது நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் போக்கை மெதுவாக்குகிறது. உணவினை தவிர்க்கும் போது அது வளர்ச்சிதை மாற்றத்தின் தேவையை மெதுவாக்குவதன் மூலம் சேமிக்கப்பட்ட கலோரிகளை பாதுகாத்து உடலிலேயே தக்க வைக்கிறது. ஒரு வேளைக்கான உணவினை தவிர்த்து விட்டு, அடுத்த வேளை உணவினை எடுத்து கொள்ளும் போது, அதிக அளவிலான உணவினை உட்கொள்ள வாய்ப்பு அதிகம். ஒரு நாளில் சீரான இடைவெளியில் மூன்று முறை உணவருந்த வேண்டும். எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் உணவினை சிறு சிறு பகுதிகளாக பிரித்து கொண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக உணவருந்துதல் சிறந்தது.


கற்பனை: 2

உடற்பயிற்சி தேவை இல்லை. உணவு கட்டுப்பாடு மட்டும் போதுமானது.

உண்மை

எடையை குறைக்க விரும்பும் ஒருவர் உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியையும் சேர்ப்பது அவசியமாகிறது. நமது பசியையோ அல்லது நமக்கு விருப்பமான அனைத்து உணவினையும் உண்ணும் ஆவலையோ நம்மால் தடை செய்ய முடியாது. ஆனால் உணவினை உண்பதால் கிடைக்கும் கலோரிகளை உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க நம்மால் முடியும். நமது தினசரி பழக்கங்களில் உடற்பயிற்சியை சேர்த்து கொள்வதன் மூலம், முயற்சி செய்து அடையக்கூடிய எடை குறைப்பினை நம்மால் பெற முடியும். இதய துடிப்பினை அதிகமாக்கும் வேகமான நடைபயிற்சியை தினமும் 30 நிமிடங்கள் மேற்கொள்வதன் மூலம் வியக்கத்தக்க அளவு எடையினை நம்மால் குறைக்க முடியும். உடற்பயிற்சியை முறையாக தொடர்ந்து மேற்கொள்ளும் போது ,நல்வாழ்வுக்கான சிறந்த உணர்வுகளையும் இதயம் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ஆகியவற்றை நாம் கூடுதல் பலன்களாக பெறலாம்.


கற்பனை: 3

கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தீமை செய்வன.

உண்மை

உடல் என்கிற இயந்திரத்திற்கு முதன்மையான எரிபொருள் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். கொழுப்பை போலவே, கார்போஹைட்ரேட்டுகளும் ஒவ்வொரு கிராமிலும் பாதி அளவு கலோரிகளை கொண்டுள்ளன. மக்களின் இன்றைய உணவு பழக்கத்தில் உள்ள சிக்கல் யாதெனில் அவர்கள் தங்கள் உணவினில், எளிமையான கார்போஹைட்ரேட்டுகளான சர்க்கரை மற்றும் உயர்ந்த ஃபுருக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் ஆகியவற்றை எடுத்து கொள்கின்றனர். குறைந்த கார்போஹைட்ரேட்கள் கொண்ட உணவினை எடுத்து கொள்ளும் போது, அவை மிக உயர்ந்த கலோரி கார்போஹைட்ரேட்களை அவை குறைக்கின்றன மற்றும் எடை குறைப்பிற்கும் வழி வகுக்கின்றன.

இந்த மாதிரியான எடை குறைப்பு நீடித்து நிலைப்பதில்லை. எனினும் குறைந்த கொழுப்பு மற்றும் பல பகுதிகளை கொண்ட சிக்கலான கார்போஹைட்ரேட்கள் கொண்ட உணவு பொருட்களான முழு தானியங்கள் மற்றும் ஸ்டார்ச் உணவு பொருட்கள் உடலுக்கு நன்மை செய்வன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


கற்பனை: 4

குறைவான கொழுப்பு மற்றும் கொழுப்புகளற்ற உணவுகளில் குறைவான கலோரிகள் காணப்படுகின்றன.

உண்மை

குறைவான கொழுப்பு அல்லது கொழுப்புகளற்ற உணவுப்பொருள் குறைந்த அளவு கலோரிகளை கொண்டோ அல்லது கலோரிகளே அல்லாத உணவு பொருளாகவோ தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குறைவான கொழுப்பினை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிற பல உணவு பொருட்களிலுள்ள, கார்போஹைட்ரேட்கள் மற்றும் சர்க்கரை ஆகியன, கொழுப்புகள் நிறைந்த உணவு பொருட்களிலுள்ள, கலோரிகளையோ அல்லது அதற்கும் அதிகமான கலோரிகளையோ தரலாம். உதாரணமாக ஆப்பிளில் குறைவான கொழுப்பே உள்ளது. எனினும் அது குறைந்த அளவு கலோரிகளை கொண்டிருக்கும் என்று அர்த்தமில்லை. எனவே சாப்பிடும் முன் உணவிலுள்ள கலோரிகளை சோதித்து அறிந்து பின் சாப்பிட வேண்டும்.


கற்பனை: 5

உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரே நேரத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் பயிற்சி செய்தல் அவசியம்.

உண்மை

வெறும் 30 நிமிட நடைபயிற்சியே கலோரிகளை எரிக்க போதுமானது. தினமும் 30 நிமிடங்கள் பொழுதுபோக்குடன் கூடிய உலாவினை தினமும் 5 முறை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். உடற்பயிற்சி வேடிக்கையுடன் கூடிய வகையில் அமைந்தால், அதில் ஆனந்தமாக ஈடுபடலாம். நாளடைவில் நேரத்தை அதிகப்படுத்தி, விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.


கற்பனை: 6

இரவில் தாமதமாக உணவருந்துதலோ அல்லது படுக்கைக்கு செல்லும் சற்று முன் உணவருந்துதலோ, எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

உண்மை

கலோரிகள் என்பவை எப்பொழுதும் கலோரிகளே! உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் அதிகமான உணவினை மேற்கொள்ளும் போது எடை அதிகரிப்பு உண்டாகிறது. தாமதமாக உணவினை உட்கொண்ட பின் படுக்கைக்கு செல்வது என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல! நாம் அதிகமாக உணவினை உண்ணும் போது நாம் உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை கொழுப்புகளாக சேமித்து வைக்கும் அற்புத ஆற்றல் படைத்தது. உடலுக்கு தேவைப்படும் கலோரிகளை விட அதிகமான கலோரிகளை உணவாக எடுத்து கொள்ள நேரிடுகிறது என்பதால் தான் பெரும்பாலான மக்கள் இரவில் தாமதமாக உணவருந்தக் கூடாது என்கின்றனர்.

கற்பனை: 7

குறைவான வளர்ச்சிதை மாற்றத்தால் உடல் எடை அதிகரிக்கிறது.

உண்மை

எடை அதிகரிப்பதால் உடலில் கொழுப்பு மட்டுமே அதிகரிப்பதில்லை அந்த கொழுப்பிற்கு உறுதுணையாக தசையும் உடலில் அதிகமாகிறது. உடல் எடையில் தோராயமாக 20% முதல் 30 % வரை வரை தசை ஆகும். தசை திசுக்கள் கலோரிகளை எரிக்கின்றன. எனவே அதிக எடையை கொண்டவரின் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே அதிக உடல் தசையை கொண்டவர் சிறப்பான வளர்ச்சிதை மாற்றத்தை கொண்டவர் ஆவார். உடலின் இயக்க செயல்பாடுகளால் எரிக்கப்படும் கலோரிகளை இது உள்ளடக்கியது அல்ல.

கற்பனை: 8

ஃபேட் டயட் நிரந்தர எடை இயல்பிற்கு சிறப்பான துணை புரிகிறது.

உண்மை

ஃபேட் டயட்கள் (சௌத் பீச் டயட், ப்ளட் க்ரூப் டயட், அட்கின்ஸ் டயட், கிளிசெமிக் டயட் போன்றவை). எடையை குறைக்கவும் மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும் சிறந்தது அல்ல. இந்த டயட்களினால் நாம் உடல் எடையை சிறிது இழக்கலாம். எனினும் இந்த வகையான டயட் அட்டவணைகள் கொண்டிருக்கும் குறைவான கலோரிகள் கொண்ட உணவினை தொடர்ந்து பின்பற்றுவது கடினமானதாகும். ஆரம்பத்தில் ஆர்வத்துடன் பின்பற்றும் மக்கள் நாளடைவில் களைப்படைந்து, மீண்டும் தங்கள் பழைய உடல் எடையை பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு 800 கலோரிகளுக்கு குறைவான கலோரிகளை கொண்ட உணவினை உட்கொள்ளும் போது, அது இதய துடிப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். இது அபாயகரமானதாகும். ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை மிதமான பகுதி உணவாக உண்டு, உடல் இயக்க செயல்பாடுகளை தினசரி வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்துவதன் மூலம் உடல் எடையை வாரத்திற்கு ½-2 கிலோ வரை குறைக்க முயற்சி செய்வதே உடல் எடையை குறைத்து, மேலும் அதை அதிகரிக்காமல் தொடரும் சிறந்த வழி என்று ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் போது, டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது.

கற்பனை: 9

அதிக புரதம் கொண்ட உணவு வகைகளை உண்பது, உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும்.

உண்மை

தினமும், அதிக புரதங்கள் கொண்ட இறைச்சி, முட்டை, சீஸ் போன்ற உணவு வகைகளிலிருந்து தேவையான கலோரிகளை பெறுவது என்பது சமச்சீரான உணவு திட்டம் அல்ல. அதிகமான கொழுப்பு நிறைந்த உணவினை உட்கொள்ளும் போது, இதய நோய் ஏற்படலாம். மலச்சிக்கலை ஏற்படுத்தும் குறைந்த அளவு நார்ச்சத்தினை கொண்ட சில காய்கறிகளையும், பழங்களையும் நாம் அதிகமாக உண்ணலாம். இதனால் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் குறைபாடு ஏற்படலாம். இதே போல உயர்ந்த அளவு புரதம் கொண்ட டயட் அட்டவணையை நாம் பின்பற்றும் போது, களைப்பு, பலவீனம், குமட்டல் ஆகிய குறைபாடுகள் தோன்றலாம்.


கற்பனை: 10

எடை அதிகரிப்பு மரபு சம்பந்தப்பட்டது, பெற்றோர் வழியாக அது குழந்தைகளை அடைகிறது.

உண்மை

கொழுப்பு ஜீன் என்று எந்த ஒரு ஜீனும் கிடையாது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களை மேற்கொள்ளும் பருமனான பெற்றோரிடமிருந்து. அவர்களின் குழந்தைகளும் அவற்றை கற்கின்றனர். இதனால் ஆரோக்கியமற்ற கேடு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் குடும்பம் என்கின்ற மரத்தில் கடத்தப்படுகின்றன.


கற்பனை: 11

உடல் எடையயை குறைக்க விரும்புபவர் ஏரோபிக் என்று அழைக்கப்படும் கார்டியோ உடற்பயிற்சியை அதிக அளவு மேற்கொண்டாக வேண்டும்.

உண்மை

எடையை இழக்க முயற்சி செய்யும் போது நாம் உடலுக்கு ஏதேனும் அதிர்ச்சியை தர வேண்டும். அதாவது ஏதேனும் உடற்பயிற்சியை நம் உடல் மேற்கொள்ள வேண்டும். எந்த உடற்பயிற்சியும் செய்திருக்காத நிலையில் தினமும் ஓடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் பயிற்சி நிச்சயம் நம் உடலை அதிர்ச்சிக்கு ஆட்படுத்தும். இதன் காரணமாக ஆரம்பத்தில் நாம் எடையையும் இழக்கலாம். எனினும் இழந்த எடையை எத்தனை நாளைக்கு தக்க வைக்க முடியும் என்பது கேள்வி குறியாகிறது. நாளடைவில் நாம் எடை குறைப்பின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதன் பின்னர் தொடர்ச்சியான ஒரே மாதிரியான உடற்பயிற்சியின் காரணமாக மீண்டும் நமது பழைய எடையயை நாம் அடைய தொடங்குவோம். இவ்வாறு செய்வதற்கு பதிலாக யோகா, எடை தூக்கும் பயிற்சி மற்றும் கார்டியோ ஆகிய பல வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நமது எடை அதிகரிப்பதை கொண்டு, உடற்பயிற்சி செய்யும் முறையை சரி செய்யலாம். அதாவது நீடித்த எடை மேலாண்மையின் பொருட்டு செய்யும் உடற்பயிற்சியில் தேவைப்படும் மாறுதல்களை செய்வது அவசியமாகிறது.


கற்பனை: 12

வறுக்கப்படாத ஆனால் வேக வைத்த சிற்றுண்டிகளை எவ்வளவு வேண்டுமானாலும் விருப்பம் போல உண்ணலாம்.

உண்மை

பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை என்று சொல்லப்பட்டு, சந்தையில் அவை அளவிற்கு அதிகமாகவே கிடைக்கின்றன. மக்களும் தங்கள் அறியாமையில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இன்றி, வறுக்கப்பட்ட உணவு வகைகளை தாங்கள் உண்ணவில்லை என்ற மகிழ்ச்சியில் இந்த வகையான பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுகின்றனர். மேலோட்டமாக பார்க்கும் போது இந்த முறை சரியானதே!

ஆனால் அது எந்த மாதிரியான பேகிங் செய்யப்பட்ட உணவு வகையை நாம் உண்கிறோம் என்பதை பொறுத்தது. உதாரணமாக எண்ணெயில் பொறித்த சிக்கனுக்கு பதில் பேக்கிங் செய்யப்பட்ட சிக்கனை நாம் உண்ணலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகப்படியான எண்ணெயை நம்மால் தவிர்க்க முடிகிறது.

இது ஆரோக்கியமான உணவு தேர்வாகும். ஆனால் மாறாக நாம் பேக்கிங் செய்யப்பட்ட சக்ரீஸ் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட பக்கர்வாடிஸ் ஆகியவற்றை உண்ணும் போது அவை கொண்டிருக்கும் உயர்ந்த அளவிலான சோடியம் மற்றும் மைதா ஆகியவற்றின் காரணமாகவும், மிக அதிகமாக பதப்படுத்தப்படுவதன் காரணமாகவும் அவை ஆரோக்கியமான உணவுகள் என்று சொல்வதற்கில்லை. நாம் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கையில் இது போன்ற உணவு வகைகளை எடுத்து கொள்வோமேயானால், இவை நமது உடல் எடையை அதிகப்படுத்தவே செய்யும்.


கற்பனை: 13

எடையை இழக்க விரும்பும் போது, கூடுதல் ஊட்டச்சத்து துணைப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

உண்மை

எடையை குறைக்க ஊட்டச்சத்து துணை பொருட்களை எடுத்து கொள்வது பரிந்துரைக்கப்படுவதில்லை. முதலாவதாக எடை இழப்பு துணை பொருட்கள். நமது குடலின் இயக்க அதிர்வுகளை அதிகப்படுத்துகின்றன. இதனால் நம் உடலின் இயல்பான குடல் இயக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் மூலம் நம் உடலில் வறட்சி மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாடுகள் தோன்றுகின்றன. இரண்டாவதாக இன்னும் பிற ஊட்டச்சத்து துணை பொருட்கள் மலத்தை வெளியேற்றுவதன் மூலம், நாம் உண்ணும் டயட் உணவிலுள்ள அனைத்து கொழுப்புகளையும் அழிக்கின்றன. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து கொழுப்பு அமிலங்களையும் நாம் இழக்க நேரிடுவதால், இது பரிந்துரைக்கபடுவதில்லை.


கற்பனை: 14

வாழைப்பழங்கள் எடை குறைப்பில் பங்கு கொள்ள முடியாது.

உண்மை

ஆரோக்கியமான உணவு அட்டவணையில் வாழைப்பழங்களும் இடம் பெறுகின்றன. மேலும் இது எடை குறைப்பில் நாம் ஈடுபட்டிருக்கும் போது கொழுப்பினை குறைக்கவும் செய்கின்றன. எனினும் எந்த ஒரு உணவு பொருளும் தானாகவே ஒருவருக்கு எடையை இழக்க துணை புரிவது இல்லை. எடையை இழக்கக் விரும்பும் ஒருவர் பற்றாக்குறையான கலோரியை கொண்டவராக இருக்க வேண்டும் அதாவது ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளை விட அதிகமாக பெறப்பட்ட கலோரிகளை எரிக்க வேண்டும். 10% முதல் 15% வரையிலான கலோரி பற்றாக்குறை சிறந்த முறையில் எடை குறைப்பில் செயலாற்றுகிறது. சிறந்த கலோரி பற்றாக்குறையை கொண்டவர், கொழுப்பை இழப்பதை விட தேவைக்கு அதிகமாக உள்ள தசையை இழக்கிறார்.


கற்பனை: 15

போதை உணவு நீக்கப்பட்ட உணவு திட்டமே எடை குறைபிற்கு சிறந்தது.

உண்மை

தொடர்ச்சியாக பல வாரங்கள் இரவில் பணி புரிந்து ஜங்க் ஃபுட், கூடுதலான செயற்கை உணவுகள் என்று சொல்லப்படுகிற உணவு வகைகளை உட்கொள்ளும் போது ஏற்படுகிற களைப்பினால் மனதளவில் நீங்கள் எடையை இழந்து விட்டது போல உணர்வீர்கள். திட்டமிடப்பட்ட சமசீரான போதை நீக்க உணவு திட்டம் உங்களில் தந்திரம் புரிந்திருக்கிறது. இங்கே சமசீரான போதை நீக்க உணவு திட்டம் என்பது வெறும் பழரசமோ அல்லது சிறந்த தூய்மை மற்றும் நீர் போன்ற நம்மை பலவீனமாக்கும் போதை நீக்கும் உணவுகளல்ல. சமசீரான உணவு திட்டம் என்பது பதப்படுத்தப்பட்ட ட்ரான்ஸ்பரண்ட் கொழுப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அடங்கிய உணவு வகைகளை தவிர்ப்பதாகும்

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சென்டிமென்ட வைப்பீங்க பாஸ்ஸ்....?

வெங்கட்பிரபு கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து விளையாட்டாக எடுத்த படம்தான் சென்னை 28. அது அவரது முதல் படம் என்பதோடு, ஜெய், சிவா, பிரேம்ஜி, விஜயலட்சுமி என முற்றிலும் புதுமுகங்களை வைத்து அப்படத்தை எடுத்தார்.


ஆனால் படம் வெளியாகி தாறுமாறாக ஓடி, அனைவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது.


அதையடுத்து வெங்கட்பிரபு உள்பட அப்படத்தில் நடித்த அனைவருமே வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாகி விட்டனர். இந்த நிலையில், தற்போது கிரிக்கெட்டை மயமாக வைத்து ஆடாம ஜெயிச்சோமடா என்றொரு படத்தை இயக்குகிறார் பத்ரி.


அப்படத்தில் நடிப்பதற்கும் சென்னை 28ல் நடித்த சிவாவையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதோடு, சிவாவும் ஒரு கிரிக்கெட் பிளேயர் என்பதால் அப்படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்திருக்கிறார் பத்ரி.


மேலும், இப்படத்தில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தவர்கள், அதே சென்னை 28 படத்தில் அறிமுகமான விஜயலட்சுமியையே புக் பண்ணியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சரியான படமே இல்லாமல் ஓய்ந்திருந்த நேரத்தில் இந்த படவாய்ப்பு கிடைத்திருப்பதால் உற்சாகம் பீறிட களத்தில் இறங்கி விட்டார் விஜயலட்சுமி.


 அதோடு, நான் அறிமுகமான முதல் படத்திலும் கிரிக்கெட், இந்த படத்திலும் கிரிக்கெட், ஆக கிரிக்கெட் செண்டிமென்ட் மீண்டும் எனக்கு ஒரு பெரிய ஹிட்டை கொடுக்கப்போகிறது என்கிறார் விஜயலட்சுமி.

இவனயாரு கூப்டாங்க இந்த படத்துக்கு ஹீரோவா நடிக்க....?


அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் அடுத்து தயாரித்து வரும் படம் முண்டாசுபட்டி, விஷ்ணு, அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார்கள். நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் முதல் இடம்பிடித்த முண்டாசுபட்டி குறும்படத்தை அப்படியே பெரும்படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ராம். பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. முண்டாசு பட்டியின் கதை இதுதான்.


1980களில் நடக்கிறது கதை. அப்போது கேமரா வைத்திருப்பவன் பெரிய சமூக அந்தஸ்தை பெற்றவனாக இருப்பான். கார் வைத்திருப்பவர்களையும், கேமரா வைத்திருப்பவர்களையும் பெருமையோடு பார்ப்பார்கள். ஆனால் முண்டாசுபட்டி மக்களுக்கு மட்டும் கேமராவை கண்டாலே பிடிக்காது. போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்பதை உறுதியாக நம்புகிறவர்கள். அதனால் ஊர் எல்லையில் "யாரும் கேமராவுடன் ஊருக்குள் வரக்கூடாது, படம் பிடிக்க கூடாது" என்று போர்டே வைத்திருப்பார்கள்.


படத்தின் ஹீரோ விஷ்ணு, கேமரா பைத்தியம் எதையாவது போட்டோ எடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை. முண்டாசுப்பட்டியில் ஒரு பெரியவர் இறந்து விடுகிறார். ஒரு சொத்து சம்பந்தமான வழக்கிற்கு அவரது போட்டோ தேவைப்படுகிறது. இதனால் இறந்த பெரியவரை போட்டோ எடுக்க விஷ்ணுவும் அவரது நண்பர்களும் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை கண்டதும் கிராம மக்கள் வீட்டை பூட்டி ஒளிந்து கொள்வார்கள். காரணம் நம்மை போட்டோ எடுத்துவிடுவார்களோ என்ற பயம். இறந்த பெரியவரை படம் எடுத்து வந்து பிலிமை கழுவிப் பார்த்தால் டெக்னிக்கல் ப்ராப்ளம். போட்டோ பதிவாகவில்லை.


இறந்த பெரியவரை அவர்கள் புதைத்து விடுகிறார்கள். இனி அவரை போட்டோ எடுக்க முடியாது, எடுத்த போட்டோவும் பதிவாக வில்லை. இதனால் ஆத்திரம் அடையும் பெரியவர் குடும்பம் விஷ்ணு அண்ட் கோவை அள்ளிக் கொண்டு வந்து ஒரு தண்டனை கொடுக்கிறது. அந்த தண்டனையை விஷ்ணுவும் அவரது நண்பர்களும் எப்படி அனுபவிக்கிறார்கள். அதற்கு பெரியவர் குடும்பத்து பெண் நந்திதாவை விஷ்ணு எப்படி காதலிக்கிறார் என்பதுதான் கதை.

அந்த தண்டனை என்னவென்று சொல்லட்டுமா... அஸ்கு புஸ்கு படம் ரிலீசானதும் தியேட்டர்ல பாருங்க.

டுபாக்கூர் பார்ட்டியா இருப்பாங்களோ... கோச்சடையான்!


உலக அளவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் முறையில் அவதார் படத்தை எடுத்து சாதனை நிகழ்த்தியவர் ஜேம்ஸ் கேமரூன். 237 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஐந்து ஆண்டுகளாக இப்படம் உருவாக்கப்பட்டது.


ஆனால், 3000 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது இப்படம். இப்படம் உருவான மோஷன் கேப்சர் டெக்னாலஜியை தழுவித்தான் ரஜினி நடித்துள்ள கோச்சடையானும் உருவாகியிருக்கிறது.


 ஆனால் 125 கோடி பட்ஜெட்டில் 2 வருடங்களில் படத்தை முடித்துள்ளார்கள். இப்படியொரு படம் இந்தியாவில் உருவாகியிருக்கிற விசயம் ஜேம்ஸ் கேமரூனுக்கு தெரிந்ததையடுத்து, கோச்சடையான் படத்தை தான் பார்க்க வேண்டும் என்று படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளாராம் அவர்.


 அதைத் தொடர்ந்து, தற்போது படத்தை ஏப்ரலில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையிலும், விரைவில் ஜேம்ஸ் கேமரூனுக்கு கோச்சடையானை திரையிட்டு காண்பிக்கவும் முடிவு செய்திருக்கிறார் செளந்தர்யா.