'கழுகு' கிருஷ்ணா நடித்திருக்கும் படம் 'வானவராயன் வல்லவராயன்'. காமெடி, செண்டிமென்ட், காதல் என கமர்சியல் கலவையாக உருவாகும் இந்த படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், எங்கள் முன்னோர்களின் பெயரை சினிமா படத்துக்கு வைத்து களங்கப்படுத்தக்கூடாது என்று கொங்கு நாட்டைச்சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம்.
இது தவறான படமல்ல, ஒரு ஜாலியான படம். அண்ணன் தம்பியின் பாசத்தை சொல்லும் படம் என்று படத்தில் உள்ள அனைத்து ப்ளசான விசயங்களையும் எடுத்துச்சொல்லியும் அவர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லையாம்.
இதையடுத்து கொங்கு மண்டலத்தைச்சேர்ந்த சினிமா கலைஞர்களான ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட சிலரை அணுகி சமரசம் செய்யும் முயற்சிகள் நடத்தப்பட்டதாம். ஆனபோதும், சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லையாம்.
அதனால், மெளனம் காத்து வரும் படக்குழு, படத்தின் டைட்டீலை மாற்றி வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், வானவராயன் வல்லவராயன் என்பது இப்போது தலைப்பான போதும், ஏற்கனவே ரஜினி நடித்த எஜமான் படத்தில் ரஜினி, வானவராயனாகவும், நெப்போலியன் வல்லவராயனாகவும் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment