Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 25 February 2014

மார்ச் 3 ல் ஜிகர்தண்டா இசை வெளியீடு!

சித்தார்த், லக்‌ஷ்மிமேனன் இணைந்து நடித்துவரும் ஜிகர்தண்டா திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வருகிற மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பீட்சா திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இரண்டாவது திரைப்படமான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கட்டுரையில் ஆரம்பித்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர்
மற்றும் போஸ்டர்களால் அதிகரித்துள்ளது.

குரூப்ஸ் கம்பெனி மற்றும் ஸ்ரீ மீனாட்சி கிரியேசன்ஸ் இணைந்து இப்படத்தினைத் தயாரித்துவருகின்றனர். ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சுமார் ஐந்து லட்சம் ஹிட்டுகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜிகர்தண்டா திரைப்படத்தில் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். தாதாக்களைப் பற்றிப் படமெடுக்கவிரும்பும் இயக்குனரின் வாழ்க்கை பற்றிய படமாக இப்படம் உருவாகிவருவதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் கமல் - சிம்ரன் ஜோடி!

மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி மெஹா ஹிட்டடித்த படமான திரிஷ்யம் ரீமேக்கில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருப்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீத்து ஜோஷப் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ஜுன் மாதத்தில் துவங்கலாம் என்று தெரிகிறது. இப்படத்தின் ஹீரோயினாக மலையாளப் படத்தில் நடித்த மீனா நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது சிம்ரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்த பம்மல் கே சம்மந்தம் மற்றும் பஞ்ச தந்திரம் ஆகிய வெற்றிப் படங்களில் சிம்ரன் நடித்துள்ளார் என்பதால் இப்படத்தில்
நடிப்பதற்கும் சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சிம்ரனும் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஷ்வரூபம் -2 படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கவுள்ள உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இப்படத்திற்குப் பிறகு திரிஷ்யம் ரீமேக் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன.

விஜயை முந்துவாரா அஜித்?

வீரம் திரைப்படத்திற்குப் பிறகு தல அஜித் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தினை தீபாவளி வெளியீடாக வெளியிடவுள்ளதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

கடந்த பொங்கல் தினத்தில் விஜயின் ஜில்லா திரைப்படமும், அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒன்றாக வெளியாகிப் பரபரப்பூட்டின. அதே போல இந்த வருட தீபாவளிக்கும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படமும், அஜித் - கௌதம் மேனன் திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அஜித் - கௌதம் மேனன் திரைப்படம் செப்டம்பரிலேயே வெளியாகும் என்று பேசப்பட்டுவருவதால் விஜய் - அஜித் மோதல் இருக்காதென்று தெரிகிறது.

மங்காத்தா திரைப்படத்தில் தொடங்கிய அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் கௌதம் மேனன் படத்தில் தொடராது என்றும், மேலும் அஜித் ஸ்லிம்மாகத் தோன்றுவார் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் புது லுக்கைக் காண ரசிகர்கள் பேரார்வத்தில் உள்ளனர்.

பாவனா திருமணம் நின்றுவிட்டது!

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பாவனா சமீபமாகத் தான் ஒரு தயாரிப்பாளரைக் காதலித்து வருவதாகவும், அவர் யாரென்று சொல்ல விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளரான நவீனை அவர் காதலிப்பதும், இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்டில் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகின. தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே கன்னடப் படங்களில் வாய்ப்புக்கள் வந்ததால் தொடர்ந்து கன்னடப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பாவனா. அப்பொழுது கன்னடத் தயாரிப்பாளரான நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததாகத் தெரிகிறது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் ஓகே சொல்லிவிட்டதால் ஆகஸ்டில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

ஆனால் இச்செய்திகளை மறுத்துள்ளனர் பாவனாவின் குடும்பத்தினர். பாவனா தற்பொழுது ஐந்திற்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவருவதால் அவர் படப்பிடிப்புக்களில் பிஸியாக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கள் நிறைவடைந்த பின்னரே திருமணம் பற்றிப் பேசப்படும் என்றும், செய்திகளில் வெளியானபடி ஆகஸ்டில் திருமணம் நடைபெறாது என்றும் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் நவீனும் தங்களது திருமணத் தேதியைக் குறித்து வந்த செய்திகள் உண்மையில்லை என்று அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாவனா தற்பொழுது நடித்துவரும் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்ததும் திருமணம் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

யாருமே கண்டுக்காம 750 படங்களுக்கும் மேல கெடக்குது - கேயார்!

சமீபமாக நடைபெற்ற ஸ்னேகாவின் காதலர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான கேயார் சுமார் 750 படங்களுக்கும் மேலான திரைப்படங்கள் சேட்டிலைட் சேனல்களால் வாங்கப்படாமல் சும்மா கிடப்பதாகவும், இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே கோலி சோடா திரைப்படம் மட்டுமே வெற்றிப்படமென்றும் மற்றவை எல்லாம் தோல்விப்படங்களே என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த ஆண்டு விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய திரைப்படங்கள் வெளியானதால் அவர் மறைமுகமா அந்தப் படங்கள் படு தோல்வியைத் தழுவியதாகவும், ஆனால் போலியான பாக்ஸ் ஆபீஸ் விபரங்களை அனைவரும் வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து தற்பொழுது அவர் பிரபல நடிகர்களைப் பற்றியும் பரபரப்பாகப் பேசியுள்ளார். ட்ரெயின் டிக்கட் கூட புக் செய்யத் தெரியாத பிரபல
ஹீரோக்கள் தங்களின் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் விபரங்களைச் சொல்லி அதிகச் சம்பளம் கேட்பதாகவும் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் திரைப்படங்கள் திரையரங்களில் சரியாக ஓடாவிட்டாலும் சாட்டிலைட் சேனல்களுக்கு விற்பதன் மூலம் வருமானம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைப்பதாகவும், ஆனால் சுமார் 750 ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் டிவி சேனல்களால் வாங்கப்படாமல் கிடப்பது பற்றி அவர்களுக்குச் சரியான விழிப்புணர்ச்சி இருப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

சென்ற முறை பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்களைப் பற்றிக் கூறிய கேயார் இந்த முறை நடிகர்களையே குறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டாருடன் மோதுவதில் பயமில்லை - திரு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கோச்சடையான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 11ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் கோச்சடையான் திரைப்படம் உலகெங்கும் சுமார் 6000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கோச்சடையான் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிந்ததும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடலாம் என்று நினைத்திருந்த ஒரு சில தயாரிப்பாளர்கள் உடனே தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அடுத்தடுத்த மாதங்களில் வெளியிட முடிவு செய்துவருகின்றனர்.

ஆனால் விஷால்- லக்‌ஷ்மிமேனன் இணைந்து நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் திரைப்படம் கோச்சடையான் வெளியாகவுள்ள அதே ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் திரு அளித்துள்ள பேட்டியில், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் நான் சிகப்பு மனிதன் திரைப்படம் வெளியாவதில் தனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார்.

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஷால் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



ரஜினியாகிறார் சிம்பு!

சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் வாலு திரைப்படத்தில் சிம்பு ரஜினியைப் போல் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஜினி மற்றும் அஜித் ஆகியோரின் தீவிர ரசிகரான சிம்பு தனது படங்களிலும் அவர்களைப் போல் தான் தோன்றும் சிற்சில காட்சிகளில் நடித்திருப்பார். அதே போல வாலு படம் வழக்கமான சூப்பர் ஸ்டார் படங்களைப் போன்ற காமெடி, செண்டிமெண்ட் மற்றும் ஏக்சன் காட்சிகள் நிறைந்ததாக உருவாகிவருவதாகவும், சிம்புவும் ரஜினிகாந்தைப் போலவே அனைத்து உணர்ச்சிகளுக்கும் ஏற்றதுபோல் கச்சிதமாக நடித்துள்ளதாகவும் படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துவரும் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளால் படப்பிடிப்பில் தாமதமாகி வந்தது. சமீபமாக இப்படத்தின்
பிரச்னைகள் முடிவடைந்து, படு வேகமாகப் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஒரு சண்டைக் காட்சி நாளை முதல் ஹைதராபாத்தில் படமாக்கப்படவுள்ளது.

தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீடு கடந்த பிப்ரவரி 14 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.