Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 23 December 2014

இழந்த பற்களை மீண்டும் நிலையாகப் பொருத்த...


பல் மருத்துவத்தில் பற்களை பொருத்துவது ("இம்பிளாண்ட்') பிரபலமாகி வருகிறது.



மேல் தாடையிலோ கீழ் தாடையிலோ அனைத்து பற்களும் இல்லாதவர்களுக்கு மேல் அண்ணம் முழுவதும் அக்ரிஸிக் பிளேட் மூலம் மூடி பற்களைப் பொருத்தலாம். ஆனால், சிலருக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும்.



அதே போன்று கழற்றி பொருத்தும்படியான பற்களைப் பொருத்தலாம். இதுவும் சிலருக்குப் பிடிக்காது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு பற்களை பதிக்கும் முறையே (Teeth Implantation) சிறந்தது. இந்த செயற்கைப் பற்கள், இயற்கையான பற்களை போன்றே செயல்படும்.



ஒவ்வொரு தாடைக்கும் 4 முதல் 6 பதிக்கப்படும் பற்களைக் கொண்டு மொத்த பல் செட்டையும் நிலையானதாக பொருத்த முடியும். பொருத்தப்பட்டவர் இயற்கையான பற்களினால் கடிப்பது போல் உணர்வார்கள்.



எடுத்து மறுபடியும் வைக்கும் செயற்கைப் பல்லைக் காட்டிலும் நிலையாக பதிப்பது கொறிப்பதற்கு வசதியாக இருக்கும். பற்கள் ஆடுதல், ஈறுகளில் வலி மற்றும் வீக்கம் ஆகியவை நிலையாகப் பதிக்கும் செயற்கைப் பல்லால் தவிர்க்கப்படுகின்றன

முகச்சுருக்கம் நீங்க…

சிறிது தேன், வாழைப்பழம், முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கி முகத்திலும் கைகளிலும் தடவிப் பதினைந்து நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் அலசி விடவும்.



இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கிப் புதுப் பொலிவு பெறுவீர்கள்.பப்பாளி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நல்லது.



தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.



இது தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது மேலும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது.



எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். முகச் சுருக்கம் மறைந்து விடும்.



பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும்.



மேலும் தண்ணீரையும் நிறைய குடிக்க வேண்டும்.