Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 19 March 2014

குரலை வைத்துதான் சசிகுமாரை அடையாளம் கண்டு கொள்ள முடியுமாம்...?

எப்படி டி.ஆரையும், தாடியையும் பிரிக்க முடியாதோ, அதேபோல்தான் சசிகுமாரையும், தாடியையும் பிரிக்க முடியவில்லை. கிராமத்து கதைகளாக இருந்தாலும் சரி, நகரத்து கதைகளாக இருந்தாலும் சரி, இதுவரை தான் நடித்த எல்லா படங்களிலுமே தாடியுடன்தான் காட்சி கொடுத்தார் சசிகுமார்.


ஆனால், இப்போது பாலாவின் பட்டறைக்குள் அவர் சென்றிருக்கிறார். விளைவு, சீயான் விக்ரம் தொடங்கி, சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா என அனைவரையும் போன்று இப்போது சசிகுமாரையும் தனது கதை பக்குவத்திற்கேற்ப அவரது தாடி, மீசையை எடுத்து விட்டு கெட்டப்பை அப்பட்டமாக மாற்றி விட்டிருக்கிறார் பாலா.


இப்படி அவரை உருமாற்றியிருக்கும் பாலா, சில டைரக்டர்களைப்போன்று என் படம் முடிகிற வரைக்கும் வெளியில் தலைகாட்டக்கூடாது என்று எந்த கண்டிசனும் போடவில்லையாம். காரணம், இப்போது இருக்கிற கோலத்துடன் சசிகுமார் வெளியில் சென்றால் அவரே சொல்லாமல் யாருக்குமே அவரை அடையாளம் தெரியாதாம்.


இதை பரிசோதனை செய்து பார்ப்பதற்காக, பொது இடத்தில் உள்ள ஒரு கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றிருக்கிறார் சசிகுமார். அங்கே இருந்த யாருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லையாம். ஆக, படத்தில்கூட சசிகுமாரின் குரலை வைத்துதான் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியுமாம். அந்த அளவுக்கு அவரை முழுசாக உருமாற்றியிருக்கிறாராம் பாலா

சினிமாவில் குடும்ப ஆதிக்கம் செலுத்தும்.... வரிசையில் இவர்கள்!

ஏற்கனவே தான் இயக்கி, இசையமைத்து நடித்த பல படங்களில் தனக்குத்தானே பின்னணியும் பாடியவர் டி.ராஜேந்தர். குறிப்பாக தங்கையை நினைத்து உருகிப்பாடும் பாடல்களென்றால் அதை கேட்கும் அத்தனை அண்ணன்மார்களையும் கரைய வைத்து விடுவார் மனிதர்.


அப்படிப்பட்ட டி.ஆர்., தனது மகன் சிம்புவுக்காகவும் அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தறியாடி -என்று ஒரு ஹிட் பாடலை பாடினார். அதையடுத்து மீண்டும் சிம்புவுக்காக, இது நம்ம ஆளு படத்திலும் தனது இளைய மகன் குறளரசனின் இசையில் இன்னொரு பாடலை பாடப்போகிறாராம் டி.ஆர்.,


குறளரசனைப்பொறுத்தவரை இது தனக்கு முதல் படம் என்பதால், எப்படியும் மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாகியிருக்கிறார்.


அதனால் படத்திற்கேற்ப மொத்த டியூன்களையும் ரெடி பண்ணி விட்ட அவர், அதில் தனது, தந்தை டி.ராஜேந்தரும், அண்ணன் சிம்புவும், பாடினால் சிறப்பாக இருக்கும் என்று அவர்களிடம் தனது விருப்பத்தை சொல்ல, உடனே ஓ.கே சொல்லி விட்டார்களாம்.


ஆக, தனது முதல் படத்திலேயே அப்பா, அண்ணன் என இருவரையும் பின்னணி பாட வைத்த பெருமையை பெறுகிறார் குறளரசன்.

பூமிக்கு வெளியில் உயிரினங்கள் உள்ளன என்பது ஆய்வில் நிரூபணம்!

இலங்கையில் 2012-ம் ஆண்டின் இறுதியிலும் 2013-ம் ஆண்டின் முற்பகுதியிலும் விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக பாதுகாக்குமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானியான சந்திரா விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதன்படி, பொலநறுவையை அண்டிய அரலகங்வில பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடமாக பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக பிபிசியிடம் பேசிய விஞ்ஞானி சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் கிடைத்த விண்கற்கள், பூமியை கடந்தும் உயிர்கள் வாழக்கூடும் என்பதற்கு நிரூபணம் என்று சந்திரா விக்ரமசிங்க கூறினார்.

அரலகங்வில என்ற கிராமத்தில் விவசாயிகள் கண்டெடுத்திருந்த கற்களை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தி இருந்தோம்.

ஆனால் ஆரம்பத்தில் அவை வழமையான விண்கற்களுக்குரிய அடிப்படை தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை என்று கருதப்பட்டதால் பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மட்டுமன்றி எங்களாலும் அவை விண்கற்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் இருந்தன என்றார் விக்ரமசிங்க.

அவை ஏற்கனவே கிடைத்திருக்கின்ற விண்கற்களைவிட முற்றிலும் வேறுபட்டு இருந்தமையால் தான் இந்த சந்தேகம் வந்திருந்தது.

ஆனால் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட உயர் ரக இரசாயன ஆய்வுகளின் முடிவில் இவை உண்மையில் விண்கற்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

இலங்கையில் கிடைத்த இந்த விண்கற்கள் முன்னெப்போதும் வழங்காத, இன்னொரு புதிய வரலாற்று திருப்புமுனையான தகவலையும் தந்திருப்பதாக பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த விண்கற்களில் நுண்ணுயிர் படிமங்கள் இருப்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி உறுதியாகியிருந்தது. வானிலிருந்து விழுந்த இந்த விண்கற்களில் இவ்வாறான உயிர்படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் உயிர் என்பது பூமியையும் தாண்டிய பேரண்ட பண்புகளைக் கொண்டது என்பது நிரூபணமாகியிருக்கிறது என்றார் அவர்.

உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்ட ஒரு விடயமல்ல என்பதுதான் இந்த விண்கற்கள் மூலம் கிடைத்துள்ள முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் அவர்களே, இந்தக் கற்கள் பூமியில் வந்து விழுந்த பின்னர் தான் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பூமியில் வந்து சேர்ந்த பின்னர் கூட அவற்றில் இந்த மாற்றங்கள் நடந்திருக்கலாம் அல்லவா? என்று  பிபிசி வினவியது.

இந்தக் கற்கள் பூமியில் நீண்டகாலத்திற்கு இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாகப்படலாம். ஆனால் அதற்கு நீண்டகாலம் எடுக்கும். ஆனால், இங்கு நாங்கள் ஆராய்ச்சி நடத்திய கற்கள் விழுந்து சில மணிநேரங்களில் கண்டெடுக்கப்பட்டவை.


அவை வானிலிருந்து விழுந்தவை தான் என்பதிலும் சந்தேகம் ஏதுமில்லை. அதில் நுண்ணுயிர் படிமங்கள் இருந்தன என்பதிலும் சந்தேகமில்லை என்றார் பிரிட்டனின் பாக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண் உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரும் முன்னணி விஞ்ஞானியுமான பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க.

உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்டது என்கின்ற கோட்பாடுகளுக்கு மாறான வாதத்துக்கு இலங்கையில் கிடைத்த விண்கற்கள் ஆதாரமாக அமைவதாகவும் பேராசிரியர் விக்ரமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

இதனாலேயே, குறித்த விண்கற்கள் கிடைத்த அரலகங்வில பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீட்ரோய்ட் எனப்படும் விண்கற்கள், கொமெட் எனப்படும் வால் வெள்ளிகள் அல்லது எரிநட்சத்திரங்களின் சிதைவுகள். அதாவது வால்வெள்ளிகள் சூரியனுக்கு அருகில் வரும்போது அவை எரிந்து விழும் சிதைவுகளே விண்கற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!


ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!


தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

மட்டன் - 1/2 கிலோ

நெய் 250 கிராம்

தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)

பூண்டு - 100 கிராம்

இஞ்சி - 75 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 50 கிராம்

எலுமிச்சை - 1

பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு

கேசரிப்பவுடர் - சிறிதளவு

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு


சமையல் குறிப்பு விபரம்:

செய்வது: எளிது

நபர்கள்: 4

கலோரி அளவு: NA

தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)



முன்னேற்பாடுகள்:

1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்

3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.


செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.


பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம்


சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.



இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார்.



இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என யூ டியூப்பில் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.



மேலும் இந்த விண்கலம் பூமியில் தயாரிக்கப்பட்டுள்ள விமானத்தை விட மிகப் பெரியது என்றும், அதி நவீன தொழில் நுட்பம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

Crome Browser - மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு கண்டுபிடிப்பு !!!



கணினியில் இணையதளங்களைப் பார்வையிட உதவும் கூகுள் க்ரோம் ப்ரௌசரில் மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



இதன்படி, இயங்கிக் கொண்டிருக்கும் கணினிக்கு அருகே நடக்கும் பேச்சுகள், கூட்டங்கள் ஆகியவற்றை வேறொரு கணினியின் மூலம் ஒட்டுக் கேட்க முடியும்.



இஸ்ரேலைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி ஒருவர் கூகுள் க்ரோமில் உள்ள இந்தக் குறைபாட்டைக் கண்டுபிடித்துள்ளார்.



எனினும் க்ரோமை பயன்படுத்துவோருக்கு உடனடியாக இதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது?


எந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன. இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும்



ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்குகின்றன. இப்படிக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களின் செயல்பாடு, வைரஸ் கண்டறியும் திறன் மற்றும் பயன் நிலை ஆகியவை குறித்து, சுதந்திரமாக ஆய்வு செய்திடும் அஙகூஞுண்t என்னும் நிறுவனம், ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும், நம்மைப் போன்ற நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும் எடுத்து ஆய்வு செய்தது. இங்கு நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் செயல்பாடு குறித்து, AVTest வெளியிட்ட தகவல்கள் தரப்படுகின்றன.


இந்த சோதனைகள் அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பயன்நிலை (Protection, performance and usability) ஆகியவற்றின் அடிப்படையில் இவை சோதனை செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 0 முதல் 6 வரை மதிப்பெண் அளவு வைத்துக் கொள்ளப்பட்டது.


பாதுகாப்பு என்பது, எந்த அளவிற்க்கு இந்த புரோகிராம்கள், வைரஸ் மற்றும் மால்வேர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்தின என்ற அடிப்படையில் காணப்பட்டது. 6 மதிப்பெண் வாங்கியவை முழுமையாக இவற்றைத் தடுத்து நிறுத்தின. செயல் திறன் என்பது, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இவை இயங்கும் வேகம் குறித்தது. பயன்நிலை என்பது அவை நுகர்வோருக்கு எந்த அளவில் பயன்படுகின்றன என்ற அளவில் அறியப்பட்டது ஆகும்.


இவற்றில் Bitdefender Internet Security 2014, 18 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தைப் பெற்றது. இதே நிலையில் 18 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை Kaspersky Lab Internet Security 2014 பெற்றுள்ளது. Avira Internet Security 2014, 17.5 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. அடுத்ததாக FSecure Internet Security 2014 (16.5), BullGuard Internet Security 14.0 (15.5), Trend Micro Titanium Maximum Security 2014 (15.5), Panda Security Cloud Antivirus FREE 2.3 (15.5), AVG Antivirus Free Edition 2014 (15), Symantec Norton Internet Security 2014 (15), McAfee Internet Security 2014 (14.5), ஆகியவை இடம் பெறுகின்றன.



Bitdefender and Kaspersky ஆகிய இரண்டும் முழு மதிப்பெண்கள் பெற்று, மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக இடம் பெற்றுள்ளன. சில பாதுகாப்பு வழங்குவதில் முழு மதிப்பெண்கள் பெற்றாலும், அவை சிஸ்டம் இயங்குவதில் சிக்கலை உண்டாக்குவதாய் அமைந்துள்ளன.



AVTest ஆய்வு நிறுவனம், வேறு சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்து, முடிவை அறிவித்துள்ளது. அவை முதல் சில இடங்களைப் பிடிக்கவில்லை; மேலும் நம்மிடையே அவ்வளவாக அறிமுகம் ஆகாதவை ஆகும். எனவே இங்கு காட்டப்படவில்லை.



இது ஒரு நிறுவனம் நடத்திய சோதனைகளின் முடிவே. பல வாடிக்கையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் மிகச் சிறந்த பாதுகாப்பினை வழங்குவதாக நம்பிக்கை கொண்டிருந்தால், அவர்கள் அவற்றுடனே தொடரலாம். அதில் சிக்கல் ஏற்படுகையில், மேலே கொடுத்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.



ஆனால், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்தாலும், அவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமான செயல்பாடாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம்!

பிட்கிளவுட் இது என்ன புது பிட்டு படமானு கேக்குறவங்களுக்கு பதில் “நோ”. பிட் கிளவுட் என்பது ஒரு புது வகை இன்டர்னெட், இதை கொண்டு வர நினைப்பது பிட்காயின்ஸ் மக்கள். ஒகே பிட் காயின்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் அதைப் பார்க்காதவர்களுக்கு இதோ மினி விளக்கம்:



உலகில் இப்போது இருக்கும் கரன்ஸி / கிரடிட் கார்ட் / ஆன்லைன் பேங்கிங் முறையில் தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மிடில்மேன் என்ப்படும் பேங்குகள் தான் பெரும் பணம் சம்பாதிக்கின்றன. அது போக சில அரசுகள் சில நேரம் அவர்களுக்கு எதிராக நடக்கும் ஆட்கள் / நிறுவனங்கள் உதாரணத்திர்க்கு விக்கிலீக்ஸ் போன்ற கம்பெனிகள் அவர்களுடைய ஆன்லைன் வர்த்தகத்தை நிறுத்தின. இதற்க்கு காரணம் உலகின் மிக பெரிய கிரடிட் கார்ட் பார்ட்னரான விஸா மற்றூம் மாஸ்டர் கார்ட் தான் உலகத்தின் 96.5% ஆன்லைன் கிரடிட் கார்ட் வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றன. இதனால் ஆன்லைன் கரென்ஸின் ஒன்றை கொண்டு வந்தனர் பிட் காயின் மக்கள். ஒரு வேளை / அல்லது ஒரு பொருளை நீங்கள் பணம் இல்லாமல் வாங்க இந்த பிட்காயின்கள் உதவும்.


உதாரண்த்திர்க்கு உங்கள் பழைய போனை நீங்கள் பிட்காயினுக்கு விற்கலாம் / பிட் காயின் மூலம் வாங்கலாம் இப்படி ஆரம்பித்த பிட் காயின் பெரும்பாலும் பிரபலம் அடைந்தது ஃப்ரீலான்ஸர்ஸ் என்னும் சாஃப்ட்வேர் பொறியாளர்களாள் தான். இவர்கள் தான் தன் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுக்க செய்து வாங்க இந்த பிட்காயின்களை கொண்டு வந்து இப்போது சக்கை போடு போடுகிறது. இந்த பிட்காயின்களை வர்ச்சுவலாக எங்கு வேண்டுமேனாலும் செலுத்தலாம் தக்க வைத்து கொள்ளலாம் அதனால் பிரச்சினையே இல்லை இதை தொலைக்கவோ உங்கள் அக்கவுன்ட்டை ஹாக் செய்யவோ முடியாது.


இதனாலேயே இப்போது சக்கை போடும் ஒரு பிட் காயினின் தற்போதைய விலை 49,913 ருபாய்கள் ஆகும். ஸோ உங்களுக்கு ஒரு வேலை ஆன்லைனில் ஆக வேண்டும் என்றால் நீங்கள் பிட் காயின் மூலம் இந்த வேலையை செய்து கொள்லலாம். உங்களிடம் பிட்காயின் இல்லையெனில் 49,313 கொடுத்து பிட் காயின் வைத்திருப்பவர்களிடம் இருந்து நீங்களும் பிட்காயின் ஓனர் ஆகலாம். சில கல்லூரிகள் கூட தன் ஃபீஸை பிட்காயின் மூலம் உலகமெங்கும் வாங்க் அளவுக்கு ஃபேமஸ்.


தற்போது பிட்கிளவுட் வந்தால் தனி இணைய வழி அதாவது கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் மூலம் உங்கள் வேலைளை நடத்த முடியும், ஒட்டு கேட்டல் , உளவு பார்த்தல், களவு செய்தல், ஹேக் செய்தல் நடக்காது. உங்களுக்கு தேவையான தகவல் சர்வருக்கு நேராய் அல்லது கணணியுடன் தன் நெட்வொர்க்கை கிரியேட் செய்ய இந்த பிட்கிளவுட் டெக்னாலஜி உதவும். எனக்கு அப்டேட் வரும்போது உங்களுக்கு தகவல் தருகிறேன்

ஆப்பிளின் ஐ வாட்ச் - அதிக சிறப்புகள் இங்கே..!

இன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பது ஆப்பிளினி ஐ வாட்ச்சை பற்றி தான் இதுகுறித்து ஆப்பிள் ஒரு சிறு தகவலை கூட ஆப்பிள் வெளியிடாமவ் ரகசியம் காத்து வருகின்றது.

அந்த அளவுக்கு இதில் பல புதிய தொழில் நுட்பங்கல் வர இருக்கின்றது என்னவோ உறுதி, தற்போது சந்தையில் கிடைக்கக் கூடிய சோனியின் ஸ்மார்ட் வாட்ச்சை விட பல அதிக சிறப்பு வசதிகளுடன் இது வெளிவர இருக்கின்றது என கூறுகின்றனர்.

இதில் புளுடூத் உள்ளது இதன் மூலம் இந்த வாட்ச்சை உங்களது ஐ போனில் நீங்கள் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் இதுவரை வெளிவந்துள்ள ஸ்மார்ட் வாட்சுகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இதில் இதன் திரையும் மிகப் பெரியது ஆகும் அதோடு இதில் எனர்ஜி பேன்டும் இதிலேயே இருக்கும்.

அதாவது இதன் முலம் உங்களது உடலின் வெப்பநிலை இரத்த அழுத்தம் ஆகியவற்றை இந்த வாட்ச் மிகத் துல்லியமாக கணக்கிட்டு கூறிவிடும்.

மேலும் இதிலேயே பேஸ்புக். டவிட்டர் ஆகியவற்றை நாம் பார்த்து கொள்ளலாம் இதை உங்கள் ஐ போனுடன் கனெக்ட் செய்தால் உங்களுது மொபைலுக்கு வரும் கால், மெசேஜ் அனைத்தையும் இதில் காணலாம்.

 இதில் ஒரு சிறிய கேமராவையும் வைத்திருக்கிறது ஆப்பிள். வெகுவிரைவில் இதுகுறித்த அறிவிப்பை ஆப்பிள் வெளிவிடும் எனத் தெரிகிறது இதோ அந்த ஐ வாட்ச்சின் படங்களை பாருங்கள்.

துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!

கார் அல்லது இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது விருப்பமான துணிகளில் கிரீஸ் கறை படிந்துவிட்டதா? அத்தகைய கறைகளைப் போக்குவது கஷ்டம் என்று நினைத்து, விருப்பமான அந்த துணியை தூக்கி எறிவதோ அல்லது வீட்டைத் துடைக்கவோ பயன்படுத்துகிறவர்களா?

அப்படி உடுத்தும் துணிகளில் கிரீஸ் படிந்துவிட்டால், அப்போது அதனை தூக்கிப் போட நினைக்காமல், அதனை எப்படி ஈஸியாக நீக்குவது என்று யோசிக்க வேண்டும். அதிலும் கறை படிந்த உடனேயே எதனைக் கொண்டு அலசினால், உடனே கிரீஸ் கறை நீங்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் துணிகளில் கிரீஸ் படிந்து நன்கு உலர்ந்துவிட்டால், பின் அந்த கறையைப் போக்குவது கடினம்.

எனவே கறை படிந்த உடனேயே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை கறை படிந்த உடனேயே செய்தால், நிச்சயம் கிரீஸ் கறையானது விரைவில் நீங்கிவிடும். சரி, இப்போது துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க உதவும் வழிகளைப் பார்ப்போம்.
       
டால்கம் பவுடர்

துணிகளில் கிரீஸ் படிந்துவிட்டால், அப்போது நீரைக் கொண்டு தேய்த்தால், கறை தான் பரவும். ஆனால் அந்நேரம் டால்கம் பவுடர் அல்லது பேபி பவுடரை கறை படிந்த இடத்தில் தூவி தேய்த்தால், கறையானது போய்விடும்.

உப்பு

மற்றொரு சிறப்பான வழியென்றால் அது உப்பு தான். அதற்கு 1 பகுதி உப்பில் 4 பகுதி ஆல்கஹால் சேர்த்து நன்கு தேய்க்க வேண்டும். குறிப்பாக அப்படி தேய்க்கும் போது கவனமாக தேய்க்கவும். இல்லாவிட்டால், துணியின் ஃபேப்ரிக் பாழாகிவிடும்.

பேக்கிங் சோடா


பேக்கிங் சோடா கூட ஒரு சூப்பரான கிரீஸ் கறையை நீக்க உதவும் பொருள். அதிலும் அந்த பேக்கிங் சோடாவை கறை படிந்த இடத்தில் தூவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால், கிரீஸ் கறையானது ஈஸியாக நீக்கிவிடும்.

வினிகர்

எலுமிச்சை மற்றும் வினிகர் கலவையும் நல்ல தீர்வைத் தரும். அதற்கு இந்த கலவையை கறை படிந்த இடத்தில் தெளித்து 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு தேய்த்தால் கறை மங்க ஆரம்பிக்கும். இல்லாவிட்டால் வினிகர் மற்றும் உப்பு கலந்து, அதனை கறை உள்ள இடத்தில் பயன்படுத்தினாலும், கறை போய்விடும்.

கார்ன் ஸ்டார்ச்

டால்கம் பவுடரைப் போன்றே கார்ன் ஸ்டார்ச்சும் கிரீஸ் கறையைப் போக்க உதவும். ஆகவே அந்த கார்ன் ஸ்டார்ச்சை கறை படிந்த இடத்தில் தூவி தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் டிடர்ஜெண்ட் சோப்பு பயன்படுத்தி துவைத்தால், கறை எளிதில் நீங்கிவிடும்.

சரும சுருக்கங்கள் நீங்க சில டிப்ஸ்…

முட்டை மற்றும் க்ரீம் மாஸ்க்:

முட்டையில் உள்ள பயோடின், புரதச்சத்து, மற்றும் வைட்டமின்கள் தோலை இறுகச் செய்து சுருக்கங்களை தடுக்க வல்லவையாகும். முட்டை கருவில் வயதாகுவதை தடுக்கும் சக்தியுள்ளது. இதன் க்ரீம் தோலை மென்மையாகவும் பொலிவாகவும் தோன்றச் செய்யும். ஒரு முட்டையுடன் அரை கோப்பை க்ரீம் எடுத்து கலந்து முகத்தில் மாஸ்க் போன்று போட வேண்டும். 15 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த கலவையை தினமும் பயன்படுத்தினால் நல்ல மாற்றங்களை காண முடியும்.

வாழைப்பழம் மற்றும் கேரட் மாஸ்க்:

இந்த இரண்டையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் இவை மிகுந்த அற்புதங்களை செய்யும் பழங்களாகும். தோலை திடப்படுத்தவும் சுருக்கங்களை குறைக்கவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இவ்விரண்டு பழங்களிலும் உள்ளன. தலா ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு கேரட் வைத்து இவற்றின் பசையை தயாரித்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர்:


சருமத்தில் நிறைய அழுக்குகள் மற்றும் கழிவுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். இவையும் சுருக்கங்களை உருவாக்கக் கூடும். தூங்கப் போகும் முன் ரோஸ் வாட்டரால் முகத்தை சுத்தம் செய்வது அழுக்குகளை நீக்கும். இதை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்கள், வீக்கங்களை குறைத்து புதிய சருமத்தை உருவாக்கும். ஒரு பஞ்சு உருண்டை கொண்டு ரோஸ் வாட்டரில் நனைத்து, வட்ட வடிவில் முகத்தில் தடவ வேண்டும். இத்தகைய வட்ட அழுத்தங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கில் மிகச்சிறந்த ப்ளீச் செய்யும் சக்தியும், வயதை குறைவாகக் காட்டும் சக்தியும் உண்டு. தினமும் ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பையும், சுருக்கங்களையும், மெல்லிய கோடுகளையும் நீக்க முடியும். உருளைக்கிழங்கை மாஸ்க் ஆகவும் பயன்படுத்த முடியும். ஒரு கிழங்கை மசித்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு முகத்தில் போட்டதும் 5-10 நிமிடங்கள் விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரால் கழுவவும். தொடர்ந்து இதை பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காண முடியும்.

தயிர் மாஸ்க்:


தயிரில் உள்ள வைட்டமின்கள் திசுக்களை சரி செய்து அதை மீண்டும் கட்டி எழுப்பும். தயிரை தினமும் உண்பதும் சருமத்திற்கு மிகுந்த நன்மையை தரும். தயிரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவினால் அது முகத்திற்கு பொலிவூட்டி சுருக்கங்களை குறைக்கின்றது. இதை 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும். இத்தகைய வீட்டிலேயே செய்யக் கூடிய அழகு சாதன பொருட்களை கொண்டு செய்யப்பட்ட க்ரீம்களை பயன்படுத்தி அழகான மாற்றத்தை காணுங்கள்!

அழுத்தமில்லாத மனசு…

உறக்கம் விற்று மெத்தை வாங்கினேன்.
பசியை விற்று உணவு வாங்கினேன்.


என்ற வசனங்களை நாம் பலமுறை கேட்டிருப்போம். இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒரே காரணம்தான். பணம், புகழ் என்று கிடைத்தற்கரிய அனைத்தும் இன்று சாத்தியப்பட்டுவிட்டது.

இவற்றிக்கு வெகுமானமாக நாம் வழங்கியிருப்பவை நம் மன அமைதியையும் ஓய்வையும். பரிசாகப் பெற்றிருப்பது மன அழுத்தத்தை. இன்றைய மாணவர்கள் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பட்டத்துடன் சேர்த்து ஏதோ ஒரு நிறுவனத்தின் வேலை நியமன ஆணையையும் வாங்கி விடுகிறார்கள். கை நிறைய சம்பளத்தோடு அவர்களுக்கு மனம் நிறைய அழுத்தமும் இலவசமாக வழங்கப்பட்டு விடுகின்றன. நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மன அழுத்தம் தீவிரம் அடைகிற போது நம் அலுவலகங்களையும் தாண்டி அவை நம் வீடு வரை பயணித்து விடுகின்றன.

மன அழுத்தத்தை அகற்றி மகிழ்ச்சி காண இதோ சில சக்ஸஸ் டிப்ஸ்:

1. எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தன் கருத்துக்களை பரிமாற இன்று பெரிதும் பயன்படுத்தும் கருவி தொலைபேசி. தொலைபேசியை எடுத்து நீங்கள் அழைக்க வேண்டிய நபரின் எண்ணை அழுத்துகையிலேயே உங்கள் அழுத்தங்களை தளர்த்திக் கொள்ளும் விதமாக, நீளமாக மூச்சை உள்ளிழுத்து மூன்று முறை வெளியேற்றலாம். இது உங்கள் நுரையீரல் அழுத்தத்தைக் குறைக்கும்.

2. இன்று நாகரீகம் வளர்ந்த சூழ்நிலையில் நின்று செய்ய வேண்டிய வேலையை உட்கார்ந்தும் உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலையை நின்று கொண்டும், நடந்து கொண்டும் செய்கிறார்கள். பெரும்பாலும் உணவு உட்கொள்கிற போது உட்கார்ந்து உணவை அருந்தலாம். மகிழ்ச்சியான சூழ்நிலையில் நிதானமாக உணவருந்துதலும் மனதிற்கு மாற்றத்தையும் ஓய்வையும் அளிக்கும்.

3. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு அல்லது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்லும் போதும் பலர் ஓடுகிற வாகனத்துக்குள்ளேயே மனத்தளவில் பதட்டமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். வண்டி இன்னும் வேகமாகப் போகுமென்று முன்சீட்டைத் தள்ளுபவர்களும் உண்டு. ஏனிந்த பதட்டம்? பயணங்களின் போது, நல்ல இசையைக் கேட்கலாம். அல்லது உங்களை உற்சாகப் படுத்தக்கூடிய உரைகளைக் கேட்டு ரசிக்கலாம். மனதிற்கு நிறைவான புத்தகங்களை வாசிக்கலாம்.

4. உங்கள் பரபரப்பான வேலை நாட்களிலும் ஒரு சில நிமிடங்களை கடவுளுக்கு நன்றி செலுத்த செலவிடுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவராக இருந்தால் நீங்கள் நம்பும் எதுவாக இருந்தாலும் அவற்றிற்காக சில நிமிடங்கள் நன்றி செலுத்துங்கள்.

5. மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மோதல். அந்த நாளில் உங்களை யாரேனும் காயப்படுத்தியிருந்தால் ஒரு நிமிடம் உங்கள் மனதை தளர்த்திக் கொண்டு, ஆழமாக மூச்சையிழுத்து பின் உங்கள் மனம் முழுவதும் அவர்களுக்கான மன்னிப்பை நிரப்பி விடுங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியும் மகிழ்ச்சியும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணுங்கள்.

6. இன்று உங்கள் வாழ்நாளில் மிக முக்கிய நாள் என்ற நினைப்பில் ஒவ்வொரு நாளையும் உச்சபட்ச மகிழ்ச்சியுடன் வாழுங்கள். இந்த நாள் இணையற்ற நாளாக இருக்க வேண்டும் என்ற முனைப்பை அதிகப்படுத்துங்கள்.

7. நீங்கள் தோற்றுப்போனதாக நினைக்கிற தருணங்களில் நீங்கள் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திடுங்கள்.

8. உங்களை நீங்களே விரும்பப்படுகிற போதுதான் மற்றவர்களால் நீங்கள் விரும்பப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

9. கடந்து விட்ட கடந்த காலத்தை கணக்கில் கொள்ளாமல், நிகழும் காலத்தில் நீங்கள் உருவாக்குகிற மகிழ்ச்சிதான் உங்கள் எதிர்காலம் என்பதை அறிந்து செயல்படுங்கள்.

10. உங்களிடமுள்ள ஏதேனும் ஒன்றை யாருக்கேனும் தினசரி கொடுக்கலாம். அது உங்கள் நேரமாகவோ, உங்கள் உழைப்பாகவோ உங்கள் அன்பாகவோ, உங்கள் நம்பிக்கையாகவோ கூட இருக்கலாம்.

அழுத்தம், பயம், சந்தேகம் என இன்னும் பல தடைகளை தகர்த்தெறியும் சில உத்திகள்தான் இவை. உங்கள் வெற்றிக்கதவுகளை திறக்கும் மந்திர சாவி உங்கள் மனமன்றி வேறில்லை!!