Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

"ஆஹா கல்யாணம்"மும் - சிம்ரனின் புது அவதாரமும்!



நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கும் படம் 'ஆஹா கல்யாணம்'. பிரபல இந்திப்பட நிறுவனமான யாஷ் சோப்ரா நிறுவனம் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் இசையில், கார்கியின் வரிகளில் படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளன. திருமண ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்தும் இருவருக்கு இடையில் வரும் காதலை கலகலப்பாக சொல்லும் படம்.


படத்தின் இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, தனது முதல் பட அனுபவத்தைப் பற்றி கூறுகையில், " இந்த படத்தின் மேல் எனக்கு உள்ள காதல் இது என்னுடைய முதல் படம் என்பதால் மட்டுமல்ல. படத்தின் தரமும், இந்தியாவின் மிக சிறந்த காதல் படமான ‘ பேண்ட் பஜா பராட்‘ படத்தை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றி வழங்கி உள்ளேன் என்ற பெருமையும் தான்.


படத்தின் முதல் பிரதியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சக்தியாக நாணியும், ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி திரையில் இவர்களில் இளமை குறும்பு கொப்பளித்து கொண்டே இருக்கும். எந்த ஒரு காதல் கதையின் வெற்றிக்கும் இளமையான நல்ல நாயக, நாயகி, இனிமையான இசை, கண்ணை கவரும் காட்சி அமைப்பு, மற்றும் இளமையான பாடல் வரிகள் அடிப்படை உத்திரவாதம். இந்த அனைத்து அம்சங்களும் அமைய பெற்ற இந்த படத்தை இயக்குவது எனது அதிர்ஷ்டமே. எங்களது ஒட்டு மொத்த குழுவுக்கும் சராசரி வயது 26க்கு மேல் இருக்காது.


அதனால் மட்டுமே எங்களால் இந்த காதலர் மாதத்தில் காதலர்களை மட்டுமல்ல எல்லோரையும் கவரும் படமாக இப்படத்தை வழங்க முடிந்திருக்கிறது . இதற்கெல்லாம் மேல் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு படம் வாய்பளித்த ‘ யாஷ் ராஜ் பட ‘ நிறுவனத்தினர், படத்தை பார்த்து பாராட்டியது தான் எனக்கு கிடைத்த மாபெரும் வரம். புதிய இயக்குனரான நான் வெற்றி பெற்றால் பல்வேறு புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்புகள் பெருகும் என்பதால் என் பொறுப்புணர்ச்சியும் அதிகமாகிறது என்றார். படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.


0 comments:

Post a Comment