Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 13 March 2014

விர்ர்ர்ருனு ஒரு நெடுஞ்சாலை!

'' 'சில்லுனு ஒரு காதல்’ பண்றதுக்காக கதை சொல்ல நிறையப் பேர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கேன். 'ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிக்கணும்’னு சொன்னதும் பல நடிகர்கள் ரொம்ப யோசிச்சாங்க. சூர்யா மட்டும்தான் முன்வந்தார். அதுக்குப் பிறகு 'நெடுஞ்சாலை’ படக் கதையைச் சொல்லப் போனா, அதைக் கேட்கக்கூட யாரும் முன்வரலை.


'முதல் பட வாய்ப்புக்கு ஒருத்தன் கஷ்டப்படலாம்.ஆனா, முதல் படம் ரசிகர்கள்கிட்ட நல்ல பேர் வாங்கின பிறகும், ரெண்டாவது படத்துக்கு அதைவிட கஷ்டப்படணுமா?’னு தோணுச்சு. இனி யார்கிட்டயும் போய் நிக்க வேணாம்னு முடிவு பண்னேன். புது முகங்களைத் தேடிப் பிடிச்சோம்; உற்சாகமா வேலை பார்த்தோம். இதோ... இப்ப டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு. படத்தைப் பத்தி பாசிட்டிவ் செய்திகள் கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின், எங்க படத்தை ரிலீஸ் பண்றார்!'' - சோகம், தாகம் கடந்த வேகத்துடன் பேசுகிறார் இயக்குநர் கிருஷ்ணா.


''நெடுஞ்சாலை... அது ஒரு பிரமாண்டமான கேரக்டர். கன்னியாகுமரியில் இருந்து இமயமலை உச்சி வரை நீண்டுகிடக்கும் ஒரு எலிமென்ட். முழுக்கவே ஒரு 'ரோட் மூவி’ தமிழ்ல பார்த்திருக்க மாட்டோம். இது அப்படியான ஒரு படம். தேனி வட்டாரத்தில் கேரள நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபாதான் கதையின் மையப்புள்ளி. அந்த தாபாவை நோக்கி மற்ற கதாபாத்திரங்கள் வரும். அந்த தாபாவை நடத்தும் பெண்தான் ஹீரோயின். அங்கே காசு இல்லாம சாப்பிட்ட ஹீரோவுக்கும் அவளுக்கும் ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குது காதலும் கதையும்! ஆனா, தேனியில் மட்டுமே கதை நிக்காது. நூல் பிடிச்சு ரோடு பிடிச்சு இந்தியா முழுக்கப் பயணிக்கும். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கு நம்மளை இழுத்துட்டுப் போவாங்க!


படத்துக்கு லொகேஷன் பிடிக்கிறதுதான் பெரிய சவாலா இருந்தது. ஏன்னா... இது 80-களில் டிராவல் ஆகும் கதை.          30 வருஷத்துக்கு முன்னாடி  இருந்த இந்திய சாலைகளுக்கும் இப்போதைய சாலைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதனால இந்தியா மேப்ல இல்லாத ஊர்களுக்குப் போய் எங்களுக்குத் தேவையான சாலைகளைக் கண்டுபிடிச்சோம். அதுக்கே ஆறு மாசம் ஆச்சு!''


''புதுமுகங்கள் ஒரு படத்துக்கு ப்ளஸ்தான். ஆனா, அவங்களே படத்தை மேக்சிமம் ரீச் பண்ணவெச்சிருவாங்களா?''


''பட கேரக்டர்கள் ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னு புதுமுகங்களை ஃபிக்ஸ் பண்ணோம். 'முருகன்’  கேரக்டர் ஆடிஷனுக்கு ஆரி வந்து நின்னப்போ, கரடுமுரடான உடம்பு வேணும்னு சொன்னேன். ரெண்டே மாசத்துல உடம்பை அப்படி டோன் பண்ணிட்டு வந்து நின்னார். 'மங்கா’ என்கிற மலையாளப் பெண் கேரக்டருக்கு மலையாளப் பெண் ஷிவதாவைப் பிடிச்சோம்.


படத்துல இவங்களையும் தாண்டி ஒரு கேரக்டர்தான் ஹீரோ. அது ஒளிப்பதிவு! ஒளிப்பதிவாளர் என் நண்பர் ராஜவேல் ஒளிவீரன். நைட் மோட், மோஷன் கேப்சர்னு இதுவரையிலான அத்தனை ஒளிப்பதிவு முயற்சிகளுக்கும் அடுத்த லெவலுக்கு முன்னேறி இருக்கோம். அனிமேஷன் ஸ்டோரி போர்டு செட் பண்ணோம். எங்கே கேமரா செட் பண்ணணும், சீன்ல எங்கே மூவ்மென்ட் இருக்கும், அதுக்கேத்த மாதிரி கேமரா எந்த ஆங்கிள்ல நகரணும்னு எல்லாமே முன்னாடியே முடிவு பண்ணிருவோம். இதனால் படப்பிடிப்பின்போது கேமராவை நாம எதிர்பார்க்காத கோணங்களில் நகர்த்திக்கலாம். பிரபு சாலமன்,  சீனு ராமசாமினு நண்பர்கள் பலர் படம் பார்த்துட்டு ஒளிப்பதிவைத்தான் முதல்ல குறிப்பிட்டுப் பாராட்டினாங்க. இத்தனைக்கும் ஒரே லென்ஸ், ஒரே கேமரா... அதுலயே அத்தனை வித்தை காமிச்சிருக்கார் ஒளிவீரன்!


பட டிரெய்லர் பார்த்துட்டு சிம்பு பேசினார். 'இந்த லைனை என்கிட்ட சொல்லியிருந்தா, நானே பண்ணி யிருப்பேன். ஏன் சொல்லலை?’னு கேட்டார். இந்த 'நெடுஞ்சாலை’ உற்சாகப் பயண அனுபவம் கொடுக்கும்!''

“படத்துல கதை மட்டுமில்லை... ‘க’ கூட இல்லை!”

''இந்தப் பேட்டியில் நான் கதை பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன். ஏன்னா, தயாரிப்பாளர்கிட்டகூட நான் கதை சொல்லலை. அட, கதை ஏங்க..? 'க’கூட சொல்லலை!'' - ஆரம்பத்திலேயே பன்ச் வைத்தார், 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தை இயக்கிவரும் பார்த்திபன்.

'' 'இதுவரை நான் யாரையும் காப்பி அடிச்சது இல்லை. என் ஒவ்வொரு படத்தையும் சின்சியரா எடுத்திருக்கேன். காலத்துக்கும் பேசப்படும் படம்’னு சொல்றதெல்லாம் எனக்கான பெருமைதானே தவிர, 'ஓடுச்சா... இல்லையா?’ங்கிறதுதான் இங்கே கடைசியாத் தொக்கி நிக்கிற கேள்வி. அதனால், 'குடைக்குள் மழை’ பட ரிஸ்க் எல்லாம் எடுக்காம, என் அடையாளத்தையும் மிஸ் பண்ணாம, கல்லா நிறைப்பதற்கான கமர்ஷியலைச் கச்சிதமாக் கலக்கியிருக்கேன்!

இந்தப் படத்துக்குள்ளேயே இன்ஃபிலிம் மாதிரி ஒண்ணு பண்ணியிருக்கேன். அதில் ஒருத்தன், 'ஏண்டா... வசனமே இல்லாம கமல் 'பேசும் படம்’ எடுத்திருக்கார். நாம கதையே இல்லாம ஒரு படம் பண்ணா என்ன?’னு கேப்பான். '120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர்றவன், 'கதை எங்கடா?’னு சொக்காயைப் பிடிச்சுக் கேட்டா, என்னடா பண்ணுவ?’னு சொல்வான் இன்னொருத்தன். 'அப்ப, 'எ ஃபிலிம் வித்தவுட் எ ஸ்டோரி’னு டேக் லைன் போட்டு, ரசிகர்களை ஆரம்பத்திலேயே ட்யூன் பண்ணிக் கூட்டிட்டு வருவோம்’பான். அவ்ளோதான் படம்! மெல்லிய இழைக்கும் அடுத்த ரக மெல்லிய இழை அளவுகூட படத்தில் கதை இல்லை!''

''ஆக, இப்போ கமர்ஷியல் பக்கம் திரும்பிட்டீங்களா?''

''சமீபத்தில்... 82 வயசுப் பெரியவர் ஒருத்தரைச் சந்திச்சேன். 'அப்பப்ப நினைவு தப்புது தம்பி. எதுவும் ஞாபகம் இருக்கிறது இல்லை. உங்க 'ஹவுஸ்ஃபுல்’ பாத்திருக்கேன்’னு சொல்லி சீன் பை சீன் சொல்லிப் பாராட்டினார். நினைவு தப்புதுனு சொல்றவர் நினைவில், நம்ம படம் இருக்கிறது சந்தோஷம்.

நான் சினிமாவுக்காக அம்மா-அப்பாவை விட்டு, ஊரைவிட்டுக் கிளம்பி வந்தவன் இல்லை. சென்னை அரும்பாக்கத்துல வீடு. சினிமா வாய்ப்புத் தேடி தேனாம்பேட்டை லாட்ஜ் ரூம்ல தங்கியிருந்தேன். அந்தப் பிரிவுக்கே தினமும் மூணு தடவை அழுவேன். முதல் வெற்றி, தொடர் தோல்வினு ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாச்சு. இருந்தாலும் நான் விரும்பும் சினிமாவை, நான் ஆசைப்பட்ட மாதிரி எடுத்திருக்கேன்னு ஒரு சந்தோஷம் மனசுல இருக்கு. இப்போ இந்தப் படத்தில் ஒரு டைரக்டர் கேரக்டர், 'இனிஷியல் மட்டும் இல்லை... குழந்தையும் எனக்குப் பிறந்ததா இருக்கணும்’பார். அப்படி என் படங்கள் என் படங்களா மட்டுமே இருந்திருக்கு. அது இங்கே ரொம்பப் பெரிய விஷயம்!''

''படத்துல வேற என்ன புதுமை?''

''தலைப்பே புதுமை... அதுலயும் ஒரு புதுமை வெச்சிருக்கேன். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’கிற நான்கு வார்த்தைகளை ஆளுக்கொரு வார்த்தையா நான்கு இயக்குநர்கள் எழுதியிருக்காங்க. அந்தக் கையெழுத்தையே டைட்டில் டிசைன் ஆக்கிட்டோம். 'இந்தத் தலைப்பை எழுதித் தந்த அந்த நான்கு மாஸ்டர் இயக்குநர்கள் யார்னு கண்டுபிடிக்கச் சொல்லி ஒரு போட்டி வெக்கலாம்னு யோசனை. பார்ப்போம்!''

''புதுமுகங்களோட களம் இறங்கிருக்கீங்க... ஆனா, விஜய் சேதுபதி, ஆர்யானு பெரிய தலைகளும் தட்டுப்படுறாங்களே!''

''நான் நடிக்காம டைரக்ஷன் மட்டுமே பண்ணும் முதல் படம் இது. 'மைனா’ல ஆரம்பிச்சு 'குக்கூ’ வரை நான் சம்பந்தப்படலைன்னாலும், என்னை இம்ப்ரெஸ் பண்ணின படங்கள், டிரெய்லர் பத்தி முடிஞ்சவரைக்கும் தகவல் பரப்புவேன். இப்படி என் சினிமானு இல்லாம, எனக்குப் பிடிச்ச சினிமாக்களையும் புரமோட் பண்றதை முழு நேர வேலையாவே வெச்சிருக்கேன். அதன் பாசிட்டிவ் சைடு எஃபெக்ட்தான் விஜய் சேதுபதி உள்பட பல பிரபலங்கள் என் படத்தில் நடிக்கிறது. விஜய் சேதுபதிகிட்ட, 'நீங்க அப்படியே விஜய் சேதுபதியாகவே வந்துட்டுப் போற மாதிரி ஒரு சீன்’னு சொன்னதும், 'நான் நாளைக்கே வந்துடவா சார்?’னு கேட்டார். இதேபோல சேரன், ஆர்யா போல சில பிரபலங்கள் நிஜ முகத்தோடவே வர்றாங்க!''

''இளைஞர்களின் குறும்பட டிரெண்டுக்கு ஏத்த மாதிரி நீங்களும் இறங்கி அடிக்கிறீங்களா?''

''என் மகன் ராக்கி, விஸ்காம் படிக்கிறார். நான் 100 வார்த்தை பேசினா, மூணு வார்த்தையில பதில் சொல்வார். அவர்கிட்ட, 'நீ வந்து ஒருதடவை என் படத்தைப் பார்த்துட்டு போ...’னு சொன்னேன். 'விச் ஃபிலிம்?’னு கேட்கிறார். அவங்க வேவ்லெங்த்துக்கு நான் இல்லைங்கிற ஃபீலிங்ல இருக்காரோ என்னவோ!

சமயங்கள்ல அவரை கார்ல லாங் டிரைவ் அழைச்சுட்டுப் போய், இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணுவேன். ஆனா, அவர் வெளியே பார்த்துட்டே இருப்பார். ஒருதடவைகூட அவர் என்னை இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணதே இல்லை. அவருக்கு போட்டோகிராஃபியில் ரொம்ப இஷ்டம்.

சமீபத்துல, ஒரு ஆள், ஒரு நாய், ஒரு பாட்டில் சேர்ந்து இருக்கும் போட்டோ எடுத்து, அதுக்கு 'தேவதாஸ்’னு கேப்ஷன் வெச்சு ஃபேஸ்புக்ல போட்டிருந்தார் ராக்கி. 'உனக்கு தேவதாஸ் பத்தி எப்படித் தெரியும்?’னு கேட்டேன். 'சும்மா பழைய படங்களை கோ-த்ரூ பண்ணேன். அதில் இருந்து பிடிச்சேன்’னு சொன்னார். இதெல்லாம் எதுக்குச் சொல்றேனா, இன்றைய இளைஞர்கள் எதிர்காலம் குறித்த எந்த அச்சமும் அவசரமும் இல்லாமல் இருக்காங்க. ரொம்பத் தெளிவாவும் இருக்காங்க. அவங்கவங்களுக்கு அவங்கவங்க ஸ்டைல்!

என்ன கேட்டீங்க இறங்கி அடிக்கிறீங்களானுதானே? நான் இறங்கவே இல்லை. இன்னும் இளைஞனாவே இருக்கிறதுனால அவங்க எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யிறது ஒண்ணும் கஷ்டமா இருக்காது. அதை இந்தப் படம் மூலம் நீங்க புரிஞ்சுப்பீங்க!''

பாலா, ஹரி, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்!

'பாண்டிய நாடு' வெற்றிக்குப் பிறகு கவனமாக காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் விஷால். இனி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் சுவடாக இருக்க வேண்டும் என்பதால் முன்பைவிட முனைப்போடு இருக்கிறார்.


திரு இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன், சரண்யா பொன்வண்ணன் நடிக்கும் 'நான் சிகப்பு மனிதன்' வரும் ஏப்ரல் 11 அன்று ரிலீஸ் ஆகிறது.


ஏப்ரல்14ல் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய பட பூஜை நடக்க இருக்கிறது. பூஜையைத் தொடர்ந்து முதல் நாள் ஷூட்டிங்கும் அன்றே தொடங்குகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதை விஷால் சொந்தமாக தயாரிக்கிறார்.


இந்தப் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார், விஷால். வேந்தர் மூவிஸ் மதன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஹீரோயின், மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு இன்னும் நடைபெறவில்லை.


இதற்கடுத்து பாலா படத்தில் விஷால் நடிக்கிறார். தொடர்ந்து வெவ்வேறு மாதிரியான மூன்று சப்ஜெக்ட்டுகளில் விஷால் நடிக்கிறார். 

இந்தியா-இங்கி., முயற்சியில் டிஜிட்டல் வடிவில் ராமாயணம்!

இந்தியா-இங்கிலாந்து நிபுணர்களின்  கூட்டு முயற்சியில் டிஜிட்டல் வடிவில் ராமாயணம் தயாரிக்கப்பசடுகிறது.


இங்கிலாந்கில் உள்ள பிரி்ட்டிஷ் நூலகம் இந்தியாவில் மும்பைில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் வாஸ்து அருங்காட்சியகம் ஆகியவற்றின் நிபுணர்கள், இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு  நாடுகளிலும் சிதறி இருந்த  சுமார் 150 ஆண்டு பழமையான மேவார் ராமாயணத்தின் பிரதிகளை  திரட்டினர்.


ஏற்கெனவே மும்பையில் இருந்த வேல்ஸ் அருங்காட்சியகம் இவற்றை திரட்டி இருந்தது. இந்த மேவார் ராமாயணம் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கருதப்படுகிறது. கடந்த 1649-ம் ஆண்டு மேவார் அரசர் முதலாம் ரானா ஜகத்சிங் காலத்தில் ராமாயணப் பிரதிகள் முழுவதும் திரட்டப்பட்டு 400 அழகிய வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய ஓவியங்களும் சேர்த்து எழுதும் பணி நடைபெற்றது.


 பின்னர் இது பல்வேறு நாடுகளுக்கும் சிதறி விடவே தற்போது இதன் 80 சதவீத பக்கங்கள் டிஜிட்டல்மயப்படுத்தப் பட்டது. மீதமுள்ள பக்கங்கள் பரோடா  மியூசியம், ராஜஸ்தான் கல்வி மையம் ஆகியவற்றிலிருந்து  கொண்டுவரப்பட்டு முழுமைப்படுத்தப்படுகிறது.


இதன் டிஜிட்டல் பிரதி வரும்  21-ம் தேதி  வெளியிடப்படும் என இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். கடந்த ஆண்டு மும்பை வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் ச் கேமரூன் அவற்றைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை  அறிவித்தார். 

கவுண்டமணி vs வடிவேலு !


ஏப்ரல் மாதம் ஸ்டார் வார் ஸ்டார்ட் ஆகிறது. இந்த வார் நடப்பது இரண்டு காமெடியன்களுக்கு நடுவில். ஒருவர் கவுண்டமணி, இன்னொருவர் வடிவேலு.


அரசியல் வனவாசம் சென்ற வடிவேலு ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்துடன் ரீஎன்ட்ரியாகிறார். வயோதிகத்தால் வனவாசம் சென்ற கவுண்டரின் ரீஎன்ட்ரி படம் 49ஓ. கவுண்டர் விவசாயியாக நடித்திருக்கும் இதுஒரு அரசியல் நையாண்டி படம்.


இரண்டு படங்களும் இறுதிகட்டத்தில் உள்ளன. இரண்டின் தயாரிப்பாளர்களும் படத்தை ஏப்ரலில் வெளியிடும் திட்டத்தில் உள்ளனர். கவுண்டமணியின் வசவுகளையும், உதைகளையும் வாங்கி வளர்ந்தவர் வடிவேலு.


அவையெல்லாம் அவரிடத்தில் ஆறாத வடுக்களாக உள்ளன. சிங்காரவேலன் படத்தில் கவுண்டர் விட்ட எத்துகளை தனி காமெடியன் ஆனபிறகும் வேதனையோடு பகிர்ந்திருக்கிறார் வடிவேலு.


யார் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பது இருவருக்குமே இமேஜ் பிரச்சனை.


கவுண்டரா, வடிவேலா?


யார் ஜெயித்தாலும் ஏப்ரலில் என்டர்டெய்ன்மெண்டுக்கு பஞ்சமிருக்காது.

அட, இது நல்ல ஐடியாவா இருக்கே...?


படம் பார்க்க தியேட்டருக்கு யாருமே வர்றதில்லை. முதல் ஷோ-வுக்கே மூணு பேர்தான் வர்றாங்க. அவங்களுக்காக படத்தை ஓட்ட முடியுமா?


தமிழ்நாட்டில் பரவலாக கேட்கிற சோகக்குரல்தான் இது. முன்னணி நடிகர்களின் படங்களைத் தவிர மற்றவர்களின் படங்கள் மூன்று நாளை தாண்டவே முக்குகிறது. இது ஒருபுறம் என்றால்,



அவுட்டோர் போகவே முடியலைங்க. ஸ்டார்ஸை பார்க்க ஆயிரக்கணக்கில் வண்டி கட்டிட்டு வந்திடுறாங்க என்ற புலம்பல் இன்னொரு பக்கம். கண்ணனின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படப்பிடிப்பிலும் அதுதான் நடந்தது.


இந்தப் படத்தில் ரயிலும் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. நிறைய காட்சிகள் ரயிலில்தான். இதற்காக மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருந்தனர்.


பாடல் காட்சியை படமாக்கையில் ப்ரியா ஆனந்தையும், விமல், சூரியையும் பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டனர். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் லாரியில் வந்தவர்கள் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இருப்பார்கள் என்றார் கண்ணன் (கட்சி மாநாட்டுக்கே இப்போ அவ்வளவு பேர் கூடுறதில்லையே).


ஒன்றரை லட்சம் பேர் கூடி கூச்சலிடும் போது எப்படி படப்பிடிப்பை நடத்த முடியும்? விமல், ப்ரியா ஆனந்த், சூரி மூவரையும் கேரவனுக்குள் அனுப்பியும் கூட்டம் கலையவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த கூச்சல் குழப்பத்துக்கு நடுவில் படப்பிடிப்பை நடத்தினாராம் கண்ணன்.



சரி, செய்தியின் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறதே. ப்ரியா ஆனந்தை திரையில் பார்க்கதான் வரமாட்டேங்கிறாங்க. பேசாம ஷுட்டிங் ஸ்பாட்டில் அவரை பார்க்க டிக்கெட் வசூலித்தால் பிலிமும் மிச்சம் காசும் மிச்சம்.


ஒன்றரை லட்சம் பேருக்கு தலைக்கு பத்து ரூபாய் வைத்தாலும் பதினைந்து லட்சங்கள் வருகிறதே. மயிலாடுதுறைக்கு இது அதிகமில்லையா.


அது மாஸ்க் இல்லப்பா என்னோட ஃபேஸ்!



பொதுவாக கமல் படம் வெளியான பிறகுதான் அது அந்தப் படத்தோட காப்பி, இல்லை இந்தப் படத்தோட தழுவல் என்று கச்சேரி களைகட்டும். உத்தம வில்லனில் போஸ்டரிலேயே தொடங்கியது குடுமிப்பிடி.


மலபாருக்கு வந்த பிரெஞ்சு போட்டோகிராஃபர் தெய்யம் கலைஞரை எடுத்த புகைப்படத்தை கமல் காப்பியடித்துவிட்டார் என்று இணையம் அலறியது. மீடியா வழிமொழிந்தது. வழக்கம் போல இதற்கும் கமல் சைலண்ட்.



தமிழகத்தை தாண்டினால்தான் கமலுக்கு மனத்தடை விலகும். இப்போதும் அப்படியே. மும்பையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் தந்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கலை தெய்யம். அந்த முகவண்ணத்தை வரைந்தது மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு கலைஞர்.



தெய்யம் கலை, தமிழின் கூத்து இரண்டும் கலந்த பியூசன் படத்தில் உள்ளதால் அந்த மேக்கப்பை தேர்வு செய்தாராம் கமல்.


இணையத்தில் பலரும் எழுதியது போல் அது மாஸ்க் கிடையாதாம். அது கமலின் ஃபேஸ். கமலின் முகத்தில் தெய்யம் கலைஞரின் முகவண்ணத்தை வரைய நான்கு மணிநேரங்களானதாம்.



தமிழ்நாட்டிலேயே இப்படியொரு விளக்கத்தை தந்திருக்கலாமே.

வித்யாபாலனின் தென்னக வெறுப்பின் பின்னணி!

ஹீரோவுக்கு இணையாக இந்தியில் பார்க்கப்படுகிறவர் வித்யாபாலன். கரீனா கபூர், கர்தினா கைப் எல்லாம் இருந்தாலும் ஹீரோ இல்லாமல் ஒரு முழுப்படத்தை தாங்கிப் பிடிக்கிற வலிமை வித்யாபாலனுக்கே உள்ளது.


தொடர் ஹிட்கள் தந்து கொண்டிருக்கும் வித்யாபாலன் தமிழ், மலையாளப் படங்கள் என்றால் சட்டையே செய்வதில்லை, அது எவ்வளவு பெரிய நடிகர், இயக்குனராக இருந்தாலும். குரு இந்திக்கு முக்கியத்துவம் தந்து உருவான படம் என்பதால் அதில் மட்டும் நடித்தார்.


வித்யாபாலனுக்கு ஏனிந்த தென்னிந்திய வெறுப்பு?


இந்தியில் அறிமுகமாவதற்கு முன் தமிழில் நடிக்க முயற்சி செய்தார் வித்யாபாலன். போகிற இடமெல்லாம் சினிமாவுக்கேத்த முகம் இல்லை, ஹைட் இல்லை என்று வரவேற்பறையிலேயே விரட்டிவிட்டனர். கடைசியில் ஒரு படத்தில் கமிட்டாகி படப்பிடிப்புக்குப் போனால், நடிக்கத் தெரியலை என்று கழற்றிவிட்டனர்.


மலையாளத்தில், நீங்க ராசியில்லாத நடிகை, பெயரை வித்யா ஐயர்னு மாற்றினால் ஒருவேளை ராசி மாறலாம் என்று கடுப்படித்தனர். அதன் பிறகே இந்தியில் நடித்து இந்திய அளவில் முன்னணி நடிகையானார்.


இப்போது வித்யாபாலனின் முறை. தன்னை அவமானப்படுத்திய தமிழ், மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும்போதெல்லாம், இது ஆவுறதில்லை என கதவை சாத்திவிடுகிறார்.


வித்யாபாலனின் வெறுப்புக்கு காரணம் இருக்கத்தான் செய்கிறது. 

கௌதம் கார்த்திக் படத்துக்கு யு சான்றிதழ் !


கடல் படத்துக்குப் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை என்று பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார்.


இவற்றில் முதலில் வெளிவருவது என்னமோ ஏதோ.


ஆந்திராவில் ஹிட்டடித்த தெலுங்குப் படத்தின் தழுவல்தான் என்னமோ ஏதோ.



ரவி தியாகராஜன் இயக்க ரவி பிரசாத் புரொடக்சன் படத்தை தயாரித்துள்ளது.



டி.இமானின் இசையில் பாடல்கள் வெளியாகி பரவலான கவனிப்பை பெற்றுள்ளது.


 கௌதம் கார்த்திக்கின் ஜோடியாக நடித்திருப்பவர் ராகுல் ப்ரீத் சிங்.


மார்ச் 28 வெளியாகவிருக்கும் இப்படம் சென்சாருக்கு திரையிடப்பட்டது.


படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்துள்ளனர்.


 ஆக, வரிச்சலுகைக்கான அனைத்து தகுதிகளும் இப்போது என்னமோ ஏதோவுக்கு உண்டு.

உத்தம வில்லனில் ஊர்வசியும் சேர்ந்துவிட்டார்....!


கமலின் உத்தம வில்லன் படத்தில் ஊர்வசி, ஜெயராம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


உத்தம வில்லனின் கதை மற்றும் கதாநாயகி குறித்து பல கதைகள் பேசப்படுகின்றன. தயாரிப்பு தரப்பும், இயக்குனர் தரப்பும் இதுவரை கப்சிப். எதுவும் பேசவில்லை.


பூ பார்வதி, பாலசந்தர் நடிக்கின்றனர் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் உத்தம வில்லனில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஜெயராம் கூறியுள்ளார். படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் ஊர்வசி.


தமிழ் சினிமா ஊர்வசியை சுத்தமாக மறந்த நேரம் மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் அவரை நடிக்க வைத்து மீண்டும் ஊர்வசியை தமிழில் பிஸியாக்கியவர் கமல்.


அதேபோல் ஜெயராமுக்கும் தெனாலி, பஞ்சதந்திரம் படங்களில் முக்கிய வேடம் தந்து அவரின் நகைச்சுவை நடிப்பை (தமிழில்) வெளிக்கொணர்ந்தவரும் கமலே.


உத்தம வில்லனில் இவர்கள் இருவரும் நடிக்கிறார்கள் என்பது எதிர்பாராத சர்ப்ரைஸ்.


கமல் கதை, திரைக்கதை எழுத உத்தம வில்லனின் வசனத்தை கிரேஸி மோகன் எழுதுகிறார். இசை ஜிப்ரான், இயக்கம் ரமேஷ் அரவிந்த்.


லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

தெனாலிராமன் - வெளிவராத தகவல்கள்! உங்களுக்காக....!


காமெடி நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடிக்கிறார். சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.


நாயகியாக மீனாட்சி தீட்சித் நடிக்கிறார்.


ராதாரவி, மனோபாலா, மன்சூர்அலிகான், சந்தான பாரதி, ஜி.எம்.குமார் போன்றோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார்.


இம்மாதம் இறுதியில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.


வடிவேலு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இம்சை அரசன் 23–ம் புலிகேசியில் இரு வேடங்களில் வந்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது.


அதுபோல் இதுவும் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கின்றனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) படம் ரிலீசாகும் என தெரிகிறது.

வசனகர்த்தாவாக மாறிய நடிகர் சிவா!

‘சென்னை 600 028’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார்.


சிவா நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில்தான் சிவா வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.


இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து காமெடியாக உருவாகி வருகிறது.


இப்படத்தில் ‘சூது கவ்வும்’ புகழ் கருணாகரன், ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ புகழ் சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, ‘ஆடுகளம்’ நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் இவர்களுடன் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக ‘தளபதி’ தினேஷ் மகன் ஹரி தினேஷ் அறிமுகமாகிறார்.



சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இசை வெளியீடு ஏப்ரல் மாதமும், படத்தை மே மாதம் கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்

அறிமுகப் பாடலுடன் மாஸ் ஹீரோவாகும் சிவ கார்த்திகேயன்..!

ஸ்டுடியோ வட்டாரங்களில் சிவ கார்த்திகேயனின் செல்லப் பெயர், நவீன ராமராஜன். ராமராஜனும் ஒருகாலத்தில் இப்படிதான் தொடர்ந்து ஹிட்கள் கொடுத்து திரையுலகை திணறடித்தார்.


இன்றைய தேதியில் ரஜினி, விஜய் படங்களுக்குப் பிறகு விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிகம் நம்புவதும், விரும்புவதும் சிவ கார்த்திகேயனின் படங்களைதான்



அதற்கேற்ப நாளொரு பகட்டும் பொழுதொரு மினுக்குமாக சிவ கார்த்திகேயனின் ஸ்டார் வேல்யூ பளபளக்கிறது.



மாஸ் நடிகர்களுக்குதான் படங்களில் அறிமுகப் பாடல் வைப்பார்கள். முதல்முறையாக சிவ கார்த்திகேயனுக்கு மான் கராத்தே படத்தில் அறிமுகப்பாடல் வைத்துள்ளனர்.



 ராயபுரம் பீட்டர் என்ற அந்தப் பாடலை அனிருத் இசையில் சிவ கார்த்திகேயனும், பரவை முனியம்மாவும் பாடினர்.



பாடல் காட்சியிலும் சிவ கார்த்திகேயனுடன் பரவை முனியம்மாவும் ஆடியுள்ளார்.



இந்தப் பாடலுடன் மான் கராத்தேயின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது.

தலைவா... வாய்ஸ் மட்டும் போதும்..?


கோச்சடையான் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியான பிறகு படம் குறித்த பேச்சு அதிகப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் பாடல்கள் சாதனைப் படைக்கிறது.


ட்ரெய்லரை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்தவண்ணம் உள்ளனர். முதலில் வெளியிட்ட டீஸருக்கு இது பல மடங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.


கான்ட்ரவர்ஸிகளும் இல்லாமல் இல்லை. ஐபிஎன் தனது இணையத்தில் கோச்சடையான் குறித்து எதிர்மறையாக கட்டுரை எழுதியுள்ளது.


ஒரு நடிகரின் உடலசைவுகளை கேப்சர் செய்து அதனை 2 டி யில் உருவாக்கப்பட்ட படத்தில் இம்போஸ் செய்து உருவாக்குவதுதான் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம்.



கோச்சடையானில் ருத்ரதாண்டவம் ஆடுவதும், சண்டையிடுவதும் ரஜினி கிடையாது, அவரது உடலசைவும் கிடையாது, ஏன் பாடி டபுளும் கிடையாது.


அனைத்தும் மொத்தமாக ஸீஜியில் உருவாக்கியது என்று ஒரு பொறாமை குண்டை வீசியுள்ளது.

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்!


வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப் போகிறது.


 இந்தப் படத்தை வெற்றிமாறன் கட்டி காப்பாற்றியவிதம் சுவாரஸியமானது.


படத்தில் நடித்திருப்பது பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறுவர்கள். கமர்ஷியல் படம் என்றாலும் விருதையும் குறி வைத்து படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன்.


 படத்துக்கு இசை ஜீ.வி.பிரகாஷ். இப்போதுதான் படம் கடைசிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.


படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கும் சிறுவர்களை வடசென்னை பக்கமிருந்து தேர்வு செய்தனர்.

மூணே மூணு வார்த்தை, தியேட்டர்ல 4 பேர்

ஏதாவது புரிகிறதா? இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. மூணே மூணு வார்த்தை, தியேட்டர்ல 4 பேர் இரண்டுமே தமிழில் தயாராகும் படங்களின் பெயர்கள்.


படத்தின் பெயரிலேயே ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்க வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து இயக்குனர்களிடமும் இருக்கிறது. அதன் விளைவே இந்தப் பெயர்கள்.


மூணே மூணு வார்த்தை படத்தை இயக்குகிறவர் மதுமிதா. வல்லமை தாராயோ, கொலகொலயாய் முந்திரிக்கா படங்களுக்குப் பிறகு இந்த மூணே மூணு வா‌ர்‌த்தையை இயக்குகிறார்.


வித்தியாசமான முயற்சிகளை மட்டுமே தயாரிக்கும் எஸ்.பி.பி.சரண் இதன் தயாரிப்பாளர்.


அர்ஜுன் சிதம்பரம், அதிதி செங்கப்பா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் அறிமுகங்கள். இன்னொருவர் சுட்டகதையில் நடித்த வெங்கடேஷ் ஹரிநாதன்.