Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 10 March 2014

ஏன் சுதீப்பை ரஜினியின் வில்லனாக தேர்ந்தெடுத்தார்கள்...?

ராணா படத்தின் பூஜை அன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய ரஜினியை இரண்டு ஆண்டுகள் வரை கடினமான கதைகளில் நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.


அதன்காரணமாகவே இந்த இடைவெளியில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்தார். இப்போது அப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவும் தயாராகி விட்டது.



இந்தநிலையில், ரஜினி அடுத்து நடிக்கும் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.



 மேலும், தீபிகா படுகோனே அல்லது இன்னொரு பிரபல பாலிவுட் நடிகை நடிக்கயிருக்கும் இப்படத்தில், நான்ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் வில்லனாக நடிக்கிறாராம்.



ஏப்ரலில் கோச்சடையான் திரைக்கு வந்தபிறகு மே மாதத்தில் ரஜினி-கே.எஸ்.ரவிக்குமார் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

அரசிடம் அடம்பிடிக்கும் உதயநிதி!

இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. ஆனால் வரிவிலக்கு கமிட்டி வரிவிலக்கு கொடுக்க மறுத்து விட்டது.


 இதை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது,


நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு உத்தரவு நாளிலிருந்து வரிவிலக்கு அளித்தது. படம் ஓடி முடிந்து பெட்டி திரும்பிக் கொண்டிருக்கும்போது கிடைத்திருக்கும் வரிவிலக்கால் எந்த பயனும் இல்லை.


அதனால் படம் வெளியான நாளிலிருந்து வரிவிலக்கு கேட்டு புதிய மனு ஒன்றை அவரது வழக்கறிஞர் ராமன்லால் மூலம் அளித்திருக்கிறார்.


நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று உத்தரவிடுமானால் அரசு வசூலித்த வரியை திருப்பிக் கொடுக்கும். சில கோடிகள் உதயநிதிக்கு கிடைக்கும்.

கின்னஸ் சாதனைக்காக உருவாகும் படம்!

கின்னஸ் சாதனைக்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள். ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள்.


சமீபத்தில் அகடம் என்ற படம் ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது கின்னஸ் சான்றிதழ் பெற்றது. ஆனால் தியேட்டரில் ஒரு நாள்கூட ஓடவில்லை.


இப்போது 48 மணி நேரத்துக்குள் ஒரு படம் எடுக்க போகிறார்கள்.


கதை எழுதுவதில் ஆரம்பித்து முழு படமும் 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்டு விடுமாம்.


படத்தின் பெயர் எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார்.


கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.


கன்னட இயக்குனர் ரஜினீஸ் பவன் இயக்குகிறார்.


 இதன் படப்பிடிப்புகள் பெங்களூரில் கின்னஸ் ஜூரிகள் முன்னிலையில் நடக்க இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி! மான் கராத்தே பாடல் காட்சி மீண்டும் படமாக்கப்படுகிறது..!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் படம் மான் கராத்தே. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரிக்கிறார். அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார்.


அனிருத் இசை அமைத்துள்ளார். படம் முழுவதும் எடுக்கப்பட்டு ஏ.ஆர்.முருகதாசிடம் காட்டப்பட்டது.


அதைப் பார்த்த முருகதாஸ் சில காட்சிகளை நீக்கச் சொன்னதோடு சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆடிப் பாடிய ஒரு பாடல் காட்சி முழுவதையும் நீக்கிவிட்டு மீண்டும் எடுக்கச் சொல்லியிருக்கிறார்.


 ஐதராபாத்தில எடுக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சியை மீண்டும் சென்னை துறைமுகத்தில் படமாக்கி வருகிறார்கள்.


 இதற்காக ஹன்சிகா மேலும் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.


இந்த பாடல் காட்சி ரீ ஷூட் செய்த வகையில் 50 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாம்.

இட்லி என்று பெயர் எப்படி வந்தது...?

இட்லி என்று பெயர் எப்படி வந்தது

வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தம்
மஹான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது மடத்திற்கு அரிசி, பருப்பு, உளுந்து என்று பக்தர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு தடவை பக்தர் ஒருவர் தன் தோட்டத்தில் பயிரான கருணைக்கிழங்கை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்தார். மடத்தில் சிப்பந்திகள் மிகவும் திருப்தியாக அதை மசியல் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாப்பிட்டவர்கள், முதலில் அதை எடுத்து வாயில் போட்ட பிறகு அதைத் தொடவே இல்லை. இலையில் மூலையில் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். ஏனெனில் கிழங்கு மசியல் நாக்கில் பட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் ஒதுக்கிவிட்டார்கள்.

இந்த ’மசியல் பகிஷ்காரம்’ மஹானின் காதுக்குப் போகாமல் இருக்குமா?

சமையல் செய்தவர்கள் மஹானின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு விசாரணையை எதிர்பார்க்கும் குற்றவாளிகளைப் போல் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதியான குரலில் மஹான் கேட்டார்:

“எப்படிச் சமையல் செய்தாய்?”

“கழுநீரில் நன்றாக அலசியபிறகு புளிவிட்டுக் கொதிக்க வைத்தேன்… இந்தக் கிழங்கு அதற்கெல்லாம் மசியவில்லை… அதனுடைய குணம் மாறவில்லை..” என்று பிரதம சமையல்காரர் குறைப்பட்டுக் கொண்டார்.

பெரியவா சிரித்தபடியே சொன்னார்:

“கருணைக்கிழங்கை வெந்நீரில் வேகவைக்கும்போது அதோடு வாழைத்தண்டை சிறிதாக நறுக்கிப் போட வேண்டும். இரண்டும் நன்றாக வேகும்போது, கருணையின் குணம் மாறிவிடும்” என்றார்.

மறுநாள் இந்த முறைப்படி சமைத்தபோது எல்லோரும் விரும்பி, கேட்டுச் சாப்பிட்டார்கள்.

சமையல் விஷயத்தில் மஹானின் இன்னொரு அனுபவம்.

பண்டிதர் ஒருவர் மஹானிடம் பேச வந்தார். அவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு, மஹான் ’‘இட்லி’ என்று ஏன் பெயர் வந்தது?’ என்று கேட்டார்.

ஏதோ புதிய விளக்கம் தருவதாக நினைத்த அந்தப் பண்டிதர் சொன்னார்:

“இலையில் இட்லியைப் போட்டவுடன் அது காலியாகி விடுகிறது. இட்டு+இல்லை=இட்டிலை-இட்லி” என்றார்.

மஹான் சிரித்துக்கொண்டே அவரிடம் கேட்டார்:

“இலையில் இட்லி விழுந்ததும் எல்லோரும் அதை இல்லையின்னு ஆக்கிடும் சாத்தியம் நம்பும்படியாக இல்லையே. என்னை மாதிரி எத்தனையோ பேர் அதை இலையிலேயே வச்சிண்டு உட்கார்ந்து இருக்காளே, அதனால் நீங்கள் சொல்ற விளக்கம் சரியில்லை.”

”பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்….”

“ஏதாவது நாம் சமைக்கிறோமுன்னா, அதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கணும் இல்லையா?”

“அடுப்புப் பக்கத்துலேயே நிக்கணும். கருகிப் போகாமப் பாத்துக்கணும். இல்லேன்னா பக்குவம் கெட்டுப் போகும் இல்லையா? இட்லியை எடுத்துக்கோங்கோ. அதை ஊத்தி வச்சுட்டு பத்து நிமிஷம் அதை மறந்து அந்தண்டை போய் வேறு வேலையைக் கவனிக்கலாம். தானாக வெந்து, பக்குவமாக இருக்கும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வருவதை இடுதல் என்கிறார்கள். ‘இடுகாடு, இடுமருந்து’ என்பது போல் இட்லி என்று பெயர் வந்திருக்கலாம்” என்று முடித்தார் எல்லாம் தெரிந்த ஞானியான மஹான்.

மிகப்பெரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் விளக்கங்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன. சமையல் விஷயமாக அவர் சொன்ன கருத்துக்கள் காஞ்சிமடத்தில் இன்றும் உலா வருகின்றன.

ஒருநாள் மடத்து சமையல்காரர் ஒருவர், மடத்திற்கு சமையல் செய்ய பெருங்காயம் அதிகமாகத் தேவை என்று விண்ணப்பம் கொடுக்க, “சாம்பார், ரசம் வைக்கும்போது தனித்தனியாக பெருங்காயத்தை போடக்கூடாது. நீ பருப்பை சாம்பாருக்காக வேக வைக்கும்போது அதில் பெருங்காயத்தைப் போட்டுடு. அதே பருப்பு தானே சாம்பார், ரசம் வைக்க உதவுகிறது. அதில் பெருங்காய வாசனை இல்லாமலா போகும்? இப்படி செய்து பார். அதிகப் பெருங்காயம் தேவைப்படாது…” என்று மஹான் விளக்கமாகச் சொன்னார். இத்தனை நாள் சமையல் செய்யும் தனக்கு இந்த உத்தி தெரியவில்லையே என்று புலம்பினார் சமையல்காரர்.

இன்னொரு சம்பவம் – ‘ரசமான விவாதம்’ :

அதாவது குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?

“இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா? இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து விட்டார் மஹான்.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை. இவர் சகலமும் தெரிந்தவர் என்பதற்கு இதைப் போல் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள், தெய்வீகத்தைத் தவிர அவருக்கு வேறு ஏதும் தெரியாது என்று நினைப்பவர்கள், மஹானை சரிவர அறியாதவராகத்தான் இருப்பார்கள்.

சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில சூப்பர் டிப்ஸ்..?

சருமத்தில் உள்ள தழும்புகள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? குறிப்பாக இத்தகைய தழும்புகளானது பெண்களுக்கு தான் முகத்தில் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும். மேலும் ஆண்களுக்கு காரை துடைக்கும் போது என்ஜினில் கையை சுட்டுக் கொண்டு தழும்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது. சரி, அவற்றையெல்லாம் விடுங்கள், குறிப்பாக பருக்களால் பலருக்கு முகத்தில் கருமையான தழும்புகள் படிந்து, முகத்தின் அழகே பாழாகிக் கொண்டிருக்கிறது.


  இத்தகைய தழும்புகளானது நிரந்தரம் அல்ல. அவற்றை ஒருசில பொருட்கள் மற்றும் பராமரிப்புக்களின் மூலம் போக்கிவிடலாம். அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். இங்கு அந்த தழும்புகளை போக்கும் சில சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள்.


பொதுவாக கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும். அதிலும் தினமும் இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு, மற்ற பிரச்சனைகளும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.


பேக்கிங் பவுடரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளானது மறைந்துவிடும்.


நிச்சயம் அனைத்து வீடுகளிலும் தேன் இருக்கும். அத்தகைய தேன் உடலுக்கு மட்டும் நன்மையைக் கொடுப்பதுடன், சருமத்திற்கும் நன்மையை வழங்க வல்லது. அதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். எனவே தினமும் தேன் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள்.


தழும்புகளைப் போக்குவதற்கு உள்ள சிறந்த பொருட்களுள் ஒன்று தான் வெந்தயம். அதற்கு வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து முகத்திற்கு தடவி, உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இன்னும் நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், வெந்தய பேஸ்ட்டை இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.


பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும்.அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவ ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடும்.

பற்களில் காரை படிந்துள்ளதா....?இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.


நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.


பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.


இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..


கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.


வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.


முயற்சித்துப் பாருங்களேன்.