Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

சினிமாத்துறை இப்பதான் உருப்படியான வேலை செய்கிறது....?

தமிழ முன்னாள் முதல்வரும், தி.மு.க நிறுவனருமான அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை அறிஞர் அண்ணா என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்க இருக்கிறார்கள்.


திராவிடன் மனமகிழ்வுகள் என்ற புதிய நிறுவனமும், அண்ணா பேரவையும் இணைந்து இதனை தயாரிக்கிறது. வேள் கதிரவன் என்பவர் இயக்குகிறார். இசைக்கினியன் இசை அமைக்கிறார். கண்ணியப்பன் ஒளிப்பதிவு செய்கிறார்.


அண்ணா துரையின் வளர்ப்பு மகன் டாக்டர்.அண்ணா பரிமளம், பேரன் மலர்வண்ணன் பரிமளம் கதை, வசனம் எழுதியுள்ளனர்.


அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி, பெரியார், காமராஜர், ராஜாஜி, மதியழகன், சம்பத் உள்ளிட்ட முக்கிய கேரக்டர்களில் நடிப்பதற்கு அவர்களின் முகச் சாயல் கொண்டவர்களை தேடி வருகிறார்கள்.


அண்ணாதுரை மற்றும் கருணாநிதி கேரக்டரில் நடிப்பவர்கள் மட்டும் முடிவாகி இருக்கிறது. அவர்களை கொண்டு முதல்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment