Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 February 2014

வாலு படத்திற்காக ஒரே பைக்கில் வந்த அஜித்-விஜய்!

சிம்பு தற்போது நடித்து வரும் படங்களில், ’வாலு’ திரைப்படமும் அடங்கும். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


இந்த படத்தை சிம்புவின் நண்பர் விஜய்சந்தர் இயக்கிவருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாம். இதனிடையே படத்தின் ஆடியோ காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது- ஆனால், படத்தின் ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு சிம்பு ஏமாற்றிவிட்டார்.


சமீபத்தில் படத்திற்கான ஒரு காட்சி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்ட் என்ற ஓட்டலில் படமாக்கப்பட்டது. சிம்புவும் சந்தானமும் பைக்கில் வருவது போன்றும், அதில் சிம்பு அஜித்தின் முகமூடியையும், சந்தானம் விஜய்யின் முகமூடியையும் அணிந்து வந்தனர். அஜித்தும் விஜய்யும் ஒரே பைக்கில் வருவதை பார்த்து அந்த ஒட்டலில் இருந்தவர்கள் ஆச்சரியப்படுவது போன்றும் அதன்பின்னர் அவர்கள் முகமூடியை கழட்டி அவர்களை கேலி செய்வது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டன. இது சிம்புவின் ஐடியாதானாம்.


திரையரங்கில் இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று சிம்பு நம்புகிறார். மேலும் விஜய்யும் அஜித்தும் இனிமேல் திரையில் சேர்ந்து நடிப்பது என்பது முடியாத காரியம் என்றும் நாமே இதுபோல் ஏதாவது காட்சிகள் எடுத்து அவர்களை இணைத்துவைத்தால்தான் உண்டு என்றும் நகைச்சுவையுடன் சிம்பு கூறினாராம்.


படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் சிம்பு!

அஞ்சான் படத்தில் - சூர்யா முதன் முறையாக....?

அஞ்சான் படத்தில் சூர்யா முதன் முறையாக டூயட் பாடல் ஒன்றை பாடப் போகிறாராம்.


சிங்கம்-2 படத்திற்கு பிறகு ”சூர்யா” நடித்து வரும் படம் ”அஞ்சான்”. இந்த படத்தை ”லிங்குசாமி” தயாரித்து இயக்குகிறார். முதல் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ”சமந்தா” நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், துப்பாகி பட வில்லன் வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்நிலையில் அஞ்சான் படத்திற்காக சூர்யா முதன் முறையாக பாடல் ஒன்றை பாடப் போகிறார். ஏற்கெனவே அவர், விளம்பரப்பாடல் ஒன்றை பாடி நடிக்கவும் செய்துள்ளார். எனவே, அவரிடம் படத்தில் பாடல் ஒன்றை பாடும்படி இயக்குனர் லிங்குசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.


இதையடுத்து சூர்யா வேறு வழியின்றி ஒரு டூயட் பாடலை பாட ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் இணைந்து இளம் முன்னணி நடிகை ஒருவரும் பாட இருக்கிறாராம். விரைவில் இந்த பாடலுக்கான ஒலிப்பதிவு நடைபெற உள்ளதாம்.


கமல்ஹாசன், விஜய், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் பாடுவதோடு மட்டுமின்றி பிற படங்களிலும் நட்புக்காக பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கோச்சடையான் படத்தில் கூட ரஜினிகாந்த் ஒரு பாடலை பாடியுள்ளார்.


இந்த வரிசையில் தற்போது சூர்யாவும் தன்னை இணைத்துக்கொண்டார். பல புதுமைகளுடன் உருவாகி வரும் இப்படத்தினை ‘ரெட் டிராகன்’ என்ற அதிநவீன கேமராவை வைத்து படம் பிடித்து வருகிறார் சந்தோஷ் சிவன். உலகிலேயே இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் திரைப்படம் ‘அஞ்சான்’ என்பது குறிப்பிடத்தக்கது.

'' 'இதயம் பார்ட்-2’ வில் - அதர்வாவா....?

''ஒருநடிகனுக்கு, மூணாவது படத்துலயே உச்சம் தொடுற அளவுக்கு நல்ல பேர் கிடைக்கிறது சாதாரண விஷயம் இல்லை. எனக்கு அது கிடைச்சதுக்குக் காரணம் பாலா சார். கொஞ்ச நாள் அந்த சந்தோஷத்தை அனுபவிச்ச பிறகு யோசிச்சுப் பார்த்தா, எனக்கு பொறுப்பு ஜாஸ்தியாகி இருக்குனு தோணுது. இனி என் படங்களைப் பத்தி நானே பேசாம, ஆடியன்ஸைப் பேசவைக்கணும்!''  - குறுகுறு கண்களும் கன்னக்குழி சிரிப்புமாக அதர்வாவிடம் பேசும்போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது.

'' 'பரதேசி’ படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. அதில் எதுவும் வருத்தம் உண்டா?''

''நான் தேசிய விருது எல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா, பாலா சாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். அவருக்கு விருது கிடைக்காமப்போனதில்தான் எனக்கு வருத்தம்!''

''ஃபீல்டுக்கு வந்து நாலு வருஷத்தில் மூணே படங்கள்தான்... இந்த ஸ்பீடு போதுமா?''

''எல்லா ஹீரோக்களுக்கும் வருஷத்துக்கு மூணு படம் பண்ணணும்னுதான் ஆசை இருக்கும். ஆனா, நான் பண்ற படங்கள் அப்படி சின்ன கேப்ல முடிக்க முடியாததா இருக்கு. 'பாணா காத்தாடி’க்கு ஷூட்டிங் நாட்கள் கம்மி. ஆனா, முதல் படம் என்பதால், ரிகர்சல் அதிகம் எடுத்துக் கிட்டேன். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்’ டெக்னிக்கலா நேரம் எடுத்துக்கிச்சு. 'பரதேசி’ பட லுக் காரணமா, மத்த படங்களில் நடிக்க முடியலை. இப்போ நான் ஓடவேண்டிய நேரம் வந்திருச்சு. அதான் 'ஈட்டி’, 'இரும்புக் குதிரை’னு வரிசையா கமிட் ஆகியிருக்கேன்!

இதுல ஒவ்வொண்ணும் 'பரதேசி’க்கு சம்பந்தமே இல்லாத படங்கள். 'இரும்புக் குதிரை’யில் பைக் ரேஸர் கேரக்டர். 'ஈட்டி’யில் அத்லெட் கேரக்டர். படம் முழுக்க ஓடிட்டே இருக்கணும். என்னை நீங்க அத்லெட்னு நம்பணும்கிறதுக்காக, சிக்ஸ்பேக் வெச்சிருக்கேன்!''

'' 'இதயம் பார்ட்-2’ படம் எடுத்தா நடிப்பீங்களா?''

''என்ன கதை, கான்செப்ட்னு தெரியணும். 'இதயம்’ அப்பாவுக்கு பெரிய அடையாளம் கொடுத்த படம். பெரிய அளவில் பேசப்பட்ட படம். அதை பீட் பண்ற அளவுக்கு நல்ல கதை கிடைக்கணும். 'இதயம்’ படத்தைவிட 'இதயம் பார்ட்-2’ கதை நல்லா இருந்தா, கண்டிப்பா நடிப்பேன்!''

''ஜனனி அய்யரோட சம்திங்... சம்திங், ப்ரியா ஆனந்த் உங்களைக் கலாய்ச்சுட்டே இருக்காங்கனு ஏதேதோ கேள்விப்படுறோமே!''

''அதெல்லாம் கிசுகிசு அளவுக்குக்கூட வொர்த் இல்லைங்க. சமந்தா, அமலா பால், ஜனனி அய்யர், ப்ரியா ஆனந்த்... இவங்க எல்லாரோடவும் நடிக்கும்போது ஃப்ரெண்ட்லி டச் உண்டு. ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, 'ஹாய்... ஹலோ’கூட சொல்லிக்கிறது இல்லை. ப்ரியா செம சேட்டை. 'இரும்புக் குதிரை’ செட்ல கஷ்டமான ஒரு சீன். அதுக்கு எட்டு டேக் ஆகும்னு நான் சொன்னேன். 10 டேக் மேல போகும்னு ப்ரியா பெட் கட்டினாங்க. 12 டேக் போச்சு. அதான் சைக்கிள் வாங்கித் தரணும்னு என்னைக் கலாய்ச்சுட்டு இருந்தாங்க. வேற ஒண்ணும் இல்லை!''

''முரளி பையனா இருந்துக்கிட்டு லவ் பண்ணலைனா எப்படி?''

''இப்போ எதுவும் தோணலைங்க. சினிமாவில் இன்னும் டிராவல் பண்ணவேண்டியது நிறைய இருக்கு. இப்போதைக்கு என் சினிமா கேரியர் மேல மட்டும்தான் எல்லாக் கவனமும். 24 வயசுதானே ஆகுது. இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும். ஒட்டுமொத்தமாத் தீபாவளி கொண்டாடிடலாம்!''

''முதல் படத்துக்கும் மூணாவது படத்துக்கும் இடையிலான சினிமா பத்தின உங்க ஐடியா எந்த அளவுக்கு மாறியிருக்கு?''

''ஒரு கதை இருந்தா, அந்த கேரக்டர் தானா டெவலப் ஆகிடும்னு ஆரம்பத்துல நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சுவாரஸ்யமான, சவாலான ஒரு கேரக்டர் இருந்தா, அதைச் சுத்தி பிரமாதமான கதை பிடிச்சிடலாம்னு 'பரதேசி’யில் நடிச்ச பிறகு தெரிஞ்சுக்கிட்டேன்.

அதே மாதிரி க்ளோசப் ஷாட்ல என்ன நடிச்சுட முடியும்னு முன்னாடி நினைப்பேன். ஆனா, வைட் ரேஞ்ச்ல எடுத்த ஒரு ஷாட்டுக்கு, முக ரியாக்ஷன்களை மட்டும் க்ளோசப்ல எடுக்கும்போது, எக்கச்சக்கமா பெர்ஃபார்ம் பண்ண வேண்டியிருக்கும். அந்த வித்தியாசத்தை இப்போ தெளிவாப் புரிஞ்சுக்கிட்டேன். சினிமா அவ்வளவு ஈஸி இல்லை சார்!''

மூன்று முகம் ரீமேக்கில் - கார்த்தி, தமன்னா!

விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார்.


அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த 'மூன்று முகம்'. இதில் கார்த்தி நடிக்கிறார்.


கார்த்தி ரஜினி படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.


'பாட்ஷா' படத்தை ரீமேக் செய்தால் நடிக்கத் தயார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்.


'மூன்று முகம்' படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரான 'அலெக்ஸ் பாண்டியன்' என்பதைத் தன்  படத்துக்கான டைட்டில் ஆக்கினார்.


இப்போது 'மூன்று முகம்' ரீமேக்கில் நடிக்கிறார். ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார்.


'பையா', 'சிறுத்தை' படங்களில் கார்த்தி - தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது.அந்த இரண்டு படங்களும் ஹிட்டானது.


அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது.

பாலாவின் டவுசர் காலம்!


 எல்லோரையும் புரட்டி எடுத்துப் புரோட்டா பிசையும் இயக்குநர் பாலாவோட டவுசர் காலத்தைக் கொஞ்சம் அலசி ஆராய்வோமா?

லீவ் லெட்டரில் கூட, 'ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ என எழுதாமல் 'ஐ யம் சஃபரிங் ஃப்ரம் சைக்கோ’ என எழுதி வாத்தியார்களைக் கதிகலங்க வைத்திருப்பார்.

தன்னை அடித்த வாத்தியாரின் பிரம்பைப் பறித்துத் திரும்ப ஸ்கூல் டாய்லெட்டுக்குள் விரட்டி பயமுறுத்திய சம்பவம் உண்டு.

கொட்டாங்குச்சி, பனங்காய், போண்டா... இந்த ஹேர் ஸ்டைல்களிலும் சமயங்களில் இவை எல்லாவற்றையும் கலந்து கட்டிய ஹேர் ஸ்டைல்களிலும் வந்து ஒட்டுமொத்தப் பள்ளிக்கூடத்தையும் மெர்சலாக்கியிருப்பார்.

ஃபேவரைட் ஸ்பாட்டே சுடுகாடுதான். பல்லாங்குழி, கிட்டிப்புல், பம்பரம் எல்லாமே சுடுகாட்டில்தான் விளையாடி இருப்பார். ஆட்டத்துக்கு யார் வராவிட்டாலும் தனியாளாக விளையாடிக் குடும்பத்தையே பயமுறுத்தி இருப்பார்.

ஃபெயிலானதால் மண்டையில் குட்டிய வாத்தியாரைப் பார்த்து வெகுண்டெழுந்து, 'லூஸாப்பா நீ?’ எனக் கேட்டதால், வாத்திகள் ரவுண்ட் கட்டி வெளுத்திருப்பார்கள்.

ஓட்டப் பந்தயத்தில் கையை வீசி ஓடாமல் அட்டென்ஷனில் குடுகுடுவென ஓடியிருப்பார்.

வீட்டில் எத்தனை யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்தாலும் வாரத்துக்கு ஒரே சட்டையையும் டவுசரையும் போட்டு அழுக்கோடு பள்ளிக்கூடம் போவதைப் பெருமையாக நினைத்திருப்பார்.

சத்துணவு சாப்பாடு நிறையக் கொடுக்காவிட்டால், துரத்தி துரத்தித் தட்டாலேயே சத்துணவு வாத்தியை அடி வெளுத்திருப்பார்.

வீட்டில் இருந்தால் நாள் முழுவதும் விட்டத்தைப் பார்த்து படுத்துக்கிடப்பதும் வெளியே கிளம்பிப் போனால் லங்கர், லேகிய வியாபாரி, கழைக்கூத்தாடி, நடன நாட்டியக் குழு என யார் பின்னாலாவது கூடவே சென்று வேடிக்கை பார்ப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார்.

டீச்சர் சொல்லிக் கொடுத்த ரைம்ஸை மறந்து மயான ரைம்ஸான, 'நான் ஆத்தாளப் பார்க்காத சுடுகாட்டுப்புள்ள...’யை அப்பவே மனப்பாடமாய் ஒப்பித்து எல்லோரையும் கடுப்பேற்றியிருப்பார்!

உதாரணத்திற்கு ரஜினி சாரை பாருங்கள் – சிவகார்த்திகேயன்!

எடிசன் திரைப்பட விருதை வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் சிவ கார்த்திகேயன். அடுத்து ‘மான் கராத்தே’ படத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம். நீங்கள் நடித்த எல்லா படங்களுமே ஒரே வகைப்படங்களாகவே இருக்கின்றதே? ‘எதிர்நீச்சல்’ மாறுபட்ட படம் என்று நினைக்கிறேன். சவாலான பாத்திரங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.


ஆனால் அதற்கு சிறிது கால அவகாசம் தேவை. எனக்கு நகைச்சுவை நன்றாக வரும் என்ற பிம்பத்தை தொலைக்காட்சி கொடுத்திருக்கிறது. அதை உடைத்துக்கொண்டு வெளியே வர சிறிது காலம் பிடிக்கும். எனது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் எனது நகைச்சுவையில் கலகலப்பான நடிப்பைத்தான் பார்க்க வருவார்கள். இன்னொரு விஷயம், திரையில் கலகலப்பாக நடிக்கும் நாயகர்கள் தான் இன்றும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.


உதாரணத்திற்கு ரஜினி சாரை பாருங்கள்.” தனுஷுடனான ஆழமான நட்பு எப்படி சாத்தியமானது? “முன்பு ‘3’ படத்தில் என்னை நடிக்கச் சொன்னதே அவர் தான். இவன் பெரிய நடிகனாக வருவான் என்ற நம்பிக்கை அவருக்கு அப்போதே இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் என்னை வைத்து ‘எதிர்நீச்சல்’ படம் தயாரித்தார். சொந்த அண்ணனுடன் பழகுவது போல பயம் கலந்த மரியாதையுடன் தான் பழகுவேன்.


உடன்பிறவா அண்ணனாக அவர் இருந்தாலும், சார் என்று தான் அழைப்பேன். அது அவரது திறமைக்கு நான் கொடுக்கும் மரியாதை. அவருடனான நட்பை வைத்து என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நான் என்றுமே நினைத்ததில்லை. சில உறவுகள் அதுவாக அமையும். தனுஷ் சார் எனக்கு அப்படி.”

லோகோவிலே கலக்கறாங்க ..‘வா டீல்’ படக்குழுவினர்!

அருண்விஜய், கார்த்திகா இணைந்து நடிக்கும் புதியபடம் “வா-டீல்”. மேலும் இப்படத்தில் சதீஷ், சுஜா வாருணி, ஜெயபிரகாஷ், கல்யாண், வம்சி, ரேணுகா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சிவஞானம்.


 தமன் இசையமைத்திருக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை பெதர் டச் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் லோகோவை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளனர்.


இருங்காட்டுகோட்டையில் நடந்துகொண்டிருக்கும் கார்பந்தயம் பார்முலா-3 இல் ‘வா-டீல்’ டைட்டில் லோகோவை வெளியிட்டுயிருக்கிறார்கள். புதுமையான முறையில் லோகோவை வெளியிட்ட காரணத்தைப் பற்றி படக்குழு கூறுகையில்,


இப்படத்தில் கார், பைக் ரேஸ் போன்ற அம்சங்கள் கதைக்குள் இருப்பதாலும், ரேஸ் காரின் வேகம் போல் திரைக்கதை அமைந்திருப்பதாலும், சென்டிமென்டாக இருக்கும் என்பதற்காக வித்தியாசமான முறையில் “வா-டீல்” டைட்டில் லோகோவை வெளியிட்டிருக்கிறோம் என்று படக்குழு கூறியுள்ளது.


இந்தியாவில் வளர்ந்து வரும் கார் பந்தய வீரர் மிஹிர் தர்க்கர் ஒட்டிய கார் நம்பர் 9-இல் ‘வா-டீல்’ லோகோ பொருத்தப்பட்டது.


படப்பிடிப்பு முடிந்துள்ள இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளது. 

பாடல் எழுதியது கண்ணதாசனா? வாலியா?

கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

ஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்! அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்?'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?'' என்று கூறினார்.

என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.

என் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

"கண் போன போக்கிலே

கால் போகலாமா?

கால் போன போக்கிலே

மனம் போகலாமா?

மனம் போன போக்கிலே

மனிதன் போகலாமா?

மனிதன் போன பாதையை

மறந்து போகலாமா?''

என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.

பிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?'' என்று எழுதியிருந்தார்.

இது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.

ஏனென்றால், நண்பர் நடராஜன் அவர்களும், மனோரமா அவர்களும், ஜீவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.

நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகமாகும்.

`வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

`நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.

இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை கண்ணதாசன் சிலாகித்துப் பேசியுள்ளார்.

"கண்ணதாசனும், வாலியும் எனக்கு இரண்டு கண்கள்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவுக்கு புது அண்ணனும், சித்தப்பாவும் கிடைச்சிட்டாங்க...?

‘ராஜாராணி’ என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘குக்கூ’. இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்கிறார். ராஜமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


இப்படம் பார்வையற்ற இருவரின் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நாயகன், நாயகி இருவருக்குமே இப்படத்தில் கண் பார்வை தெரியாது. இவர்களுக்குள் உள்ள காதலை சொல்லும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.


இதில், நடிகர்கள் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, இயக்குனர்கள் பாண்டிராஜ், லிங்குசாமி, சேரன் அட்லி, பா.ரஞ்சித், கார்த்திக் சுபாராஜ், நவீன், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் ஆடியோ சிடியை கமல் வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார்.


இவ்விழாவில் சூர்யா பேசும்போது, ‘குக்கூ’ மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும். இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும். கமல் எனக்கு அண்ணன். நான் வித்தியாசமான படங்கள் எல்லாம் பண்ணுகிறேன் என்றால் அதற்கு காரணம் அவர்தான். நான் என்ன பண்ணுகிறேன் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவரை பின்பற்றித்தான் நான் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றார்.


கமல் பேசும்போது, சூர்யா என்னை அண்ணன் என்று சொன்னார். அவரை நான் கவனித்து வருகிறேன் என்றும் சொன்னார். அது எல்லாமே உண்மைதான். ஆனால், சூர்யா தனிமையில் இருக்கும்போது மட்டும்தான் அவருக்கு நான் அண்ணன். அவருடைய அப்பா சிவகுமாருடன் அவர் இருக்கும்போது நான் அவருக்கு சித்தப்பாவாகத்தான் இருப்பேன்.


 பொதுவாக எனக்கு இரட்டை வேடங்களில் நடிக்க ரொம்பவும் பிடிக்கும். சூர்யா விஷயத்தில் நான் இரண்டு வேடத்தில் இருப்பது ரொம்பவும் மகிழ்ச்சி என்று பேசினார். மேலும், குக்கூ படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், இது நல்ல படமாக இருக்கும் என நம்பிக்கை கொள்வதாகவும் கூறினார்.

ஒருவழியாக சர்ச்சை முடிந்தது - விஷாலுக்கு கல்லா கட்டப்போகுது!

விஷாலின் 'மதகஜராஜா' படம் சர்ச்சைகளில் சிக்கி நீண்டகாலமாக வெளிவராமல் முடங்கி கிடக்கிறது.


 விஷால் கதாநாயகனாகவும் அஞ்சலி, வரலட்சுமி நாயகிகளாகவும் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார்.


இந்த படத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு அதில் இருந்து பொங்கலுக்கு வெளிவர இருந்தது.


 விஷாலே இப்படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார். ஆனால் மீண்டும் பிரச்சினைகள் முளைத்தன. இதனால் விரக்தியான விஷால் அப்படத்தை ரிலீஸ் செய்யும் முடிவை கைவிட்டார்.


இந்த படத்தை வெளிக்கொண்டுவர தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது இப்பிரச்சினையில் தீர்வு ஏற்பட்டுள்ளது.


வருகிற 7–ந்தேதி தமிழகம் முழுவதும் இப்படம் ரிலீசாகிறது.

அஜீத்தை தழுவும் சூப்பர் ஸ்டார்!

சினிமா கதாநாயகர்கள், முதுமையானாலும் உடம்பிலும், தலையிலும் முதிர்ச்சி தென்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். குறிப்பாக, தலையில் ஒரு முடி வெள்ளையாக தெரிந்தாலும் கருப்பு சாயம் பூசிக்கொண்டு தங்களை இளமையாக வெளியில் காட்டிக்கொள்வார்கள்.


ஆனால், இப்படியிருந்த இமேஜை ரஜினிதான் முதலில் உடைத்தார். டை அடிக்காத வெள்ளைத்தலை, தாடியுடன் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


அவரைத் தொடர்ந்து மங்காத்தா, வீரம் படங்களில் பாதி கருப்பு, வெள்ளையுமாக இருக்கும் தனது நிஜ தலைமுடி கெட்டப்புடன் நடித்தார் அஜீத். ஆனால் அதுவே இப்போது ஒரு பேஷனாகி விட்டது.


தமிழ்நாட்டில் இதை யாரும் பின்பற்றாதபோதும், மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ் ஆகியோர் தற்போது தாங்கள் நடிக்கும் படங்களில் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்து வருகிறார்கள்.


அந்த வகையில், மோகன்லால் ஜோஷி இயக்கும் படத்திலும், மம்மூட்டி கேங் ஸ்டார் என்ற படத்திலும், ப்ருதிவிராஜ் செவன்த்டே என்ற படத்திலும் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.


 இதில் மோகன்லால், மம்மூட்டிக்கு ஏற்கனவே நரைமுடிகள்தான் என்பதால் அப்படியே நடிக்கிறார்கள். ஆனால், ப்ருதிவிராஜ் இந்த படத்திற்காக தனது தலைமுடியை ஒயிட்டாக மாற்றிக்கொண்டு நடிக்கிறாராம்.

விஜய்சேதுபதி பதில் சொல்லுவார்..?

ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' என அடுத்தடுத்து இரண்டு படங்கள் விஜய்சேதுபதிக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று தராத நிலையில் அவரை பற்றி ஒரு வதந்தி கோலிவுட்டில் சமீபகாலமாக கோலோச்சி வருகிறது.


அதாகப்பட்டது, இந்த இரண்டு படங்களிலும் அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருக்கிறார் விஜய்சேதுபதி! அதனால் அவரது வீட்டுக்காரம்மா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்னும் வதந்திதான் அது!


இதுப்பற்றி விஜய்சேதுபதியின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது... யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது நேற்றுகூட தன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனையும், பிரிகேஜி படிக்கும் மகளையும், மனைவியையும் பைக்கில் அழைத்து கொண்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்கு இரண்டு ரவுண்ட் அடித்தார் என்றனர்!


குடும்பத்துடன் பைக்கில் போய் ரொம்பநாள் ஆச்சு என்பதால் ஹெல்மட் உதவியுடன் இப்படி ஒரு ரவுண்டாம்! நம்புவோம்! இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாதே? எனும் கேள்விக்கு விஜய்சேதுபதி தான் பதில் சொல்ல வேண்டும்!!

அஞ்சானின் அழகுப்புயல் சமந்தா!

ஆந்திர சினிமாவில் பெரிய பெரிய கவர்ச்சி வெடிகுண்டுகளெல்லாம் வெடித்து சிதறிக்கொண்டிருந்தபோதும், அவர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணி விட்டு மார்க்கெட்டில் தில்லாக நின்று கொண்டிருக்கிறார் சமந்தா. அதோடு, ஆரம்பத்தில் மயிலிறகாய் மனதை வருடியவர், நாளடைவில் கவர்ச்சி புயல்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, தானும் வரிந்து கட்டிக்கொண்டு தொடை தட்டி எதிரிகளை முறியடித்தார்.


இதனால் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாகவே தொடர்ந்து வலம் வந்து கொண்டிருப்பவர், இப்போது விஜய், சூர்யாவின் புதிய படங்கள் மூலம் கோலிவுட்டிலும் அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதோடு, தமிழிலும் டாப் நடிகையாகவே இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, இந்த படங்களில் ரசிகர்களை அதிரடியாக அட்டாக் பண்ணும் வகையில் கவர்ச்சி கோதாவிலும் குதித்திருக்கிறார் சமந்தா.


மேலும், சமந்தாவுக்கு தோல் நோய். அதனால் அவரது அழகு மங்கிப்போய் விட்டது என்று சிலர் சினிமா வட்டாரங்களில் அவரைப்பற்றி தவறான கருத்து பரப்பி வருவதால், தனது அழகை பளிச்சிட வைக்கும் வகையில், மேக்கப் மற்றும் காஸ்டியூம்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. மேலும், பவர்புல்லான கேமரா லைட்டுகளுக்கு முன்பு நடிக்கும்போதுதான் தனது தோலில் அலர்ஜி ஏற்படுகிறது என்பதால், எந்த லைட்களையும் தாங்கிக்கொள்ளும் வகையில், தற்போது சில க்ரீம்களை உடம்பில் பூசிக்கொண்டு தனது கவர்ச்சியை அழகாக காண்பித்து வருகிறாராம் சமந்தா.


இதனால் ஆரம்பத்தில் சமந்தாவுக்கு அஞ்சான் படத்தில் நடித்தபோது மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தியைக்கேட்டு சந்தோசத்தைக்கொண்டாடி வந்த சில கோலிவுட் கதாநாயகிகள், இப்போது சமந்தா அழகு புயலாக உருவெடுத்து நிற்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கைக்கோர் கீதம் பாடிய சிம்பு!

டி.ராஜேந்தர் படம் என்றாலே செண்டிமென்டுக்கு பஞ்சமிருக்காது. அம்மா செண்டிமென்ட், தங்கை செண்டிமென்ட் என பிழிந்து ஊற்றி விடுவார்.


தனக்கு 10 வயதாக இருக்கும்போதே குழந்தையாக இருக்கும் தங்கையை சீராட்டி, சோறூட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்குபவர், பின்னர் தங்கைக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைப்பார். அந்த ஒவ்வொரு சூழலுக்கேற்ப தங்கைக்கோர் கீதம் பாடி, தான் செண்டிமென்ட்டான அண்ணனாக உயர்ந்து நிற்பார்.


அப்படி டி.ஆர்., தான் இயக்கிய படங்களில்தான் பாசமான அண்ணனாக உயர்ந்து நின்றார் என்றால், இப்போது அவரது மகனான சிம்புவோ நிஜத்தில் பாசமான அண்ணனான உயர்ந்து நிற்கிறார்.


அதாவது, சமீபத்தில்தான் சிம்புவின் ஒரே தங்கையான இலக்கியாவின் திருமணம் நடைபெற்றது. அதையடுத்து அவர் புகுந்த வீட்டுக்கு சென்று விட்டார். அதனால் சிறு வயதில் இருந்தே கூடவே வளர்ந்த அன்பு தங்கச்சியின் பிரிவு தன்னை வாட்டியெடுப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சிம்பு.


மேலும், நான் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் நாட்களில், இலக்கியாவுடன்தான் அரட்டையடித்தபடி விளையாடிக்கொண்டிருப்பேன். ஆனால் இப்போது தங்கை இல்லாமல் வீடே வெறிச்சோடிக்கிடக்கிறது. அதனால், என்னையுமறியாமல் அழுகை வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று டுவிட் செய்து தான் ஒரு பாசமான அண்ணன் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிம்பு.

சுந்தர்.சிக்கு வந்த சோதனை!

தீயா வேலை செய்யனும் குமாரு படத்திற்கு பிறகு மதகஜராஜா படத்தை விஷாலை வைத்து இயக்கினார் சுந்தர்.சி ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.


 அதனால் தற்போது ஹன்சிகா, விஜய், ஆண்ட்ரியா நடிப்பில் அரண்மனை என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் தானே ஹீரோவாக நடித்துள்ளார். இன்னும் அப்படம் திரைக்கு வரவில்லை.


இந்நிலையில், ஏற்கனவே விமல், சிவாவைக்கொண்டு தான் இயக்கிய கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால், இப்போது அந்த முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார் சுந்தர்.சி., மாறாக, அடுத்து முற்றிலும் இளவட்டங்களுக்காக ஒரு யூத்புல்லான கதையை படமாக்கப்போகிறாராம். வெறும் பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல் இளைஞர்களுக்கு இப்படம் மூலம் கருத்து சொல்ல வருகிறாராம் சுந்தர்.சி.,


மேலும், பிரபலமான ஹீரோக்களை வைத்து அந்த கருத்துக்களை சொன்னால் எடுபடாது என்பதால், படத்தில் நடிக்கும் மூன்று ஹீரோக்களையும் புதுமுகங்களாகவே தேடுகிறாராம். அதேபோல் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளும் புதுமுகங்கள்தானாம்.


இந்த படத்தில் டைரக்டராக மட்டுமே செயல்படும் சுந்தர்.சி., காமெடியைகூட தனது முந்தைய படங்களைப் போன்றில்லாமல் இப்போதைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப இன்னும் வித்தியாசப்படுத்தப்போகிறாராம். ஆக, அரண்மனை திரைக்கு வரும் முன்பே, புதிய பட வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார் சுந்தர்.சி.,

கமலுக்கு இன்னமும் ஜோடி கிடைக்கலயாம்...என்ன கொடுமை சார் இது!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிப்பது உறுதியாகிவிட்டது.


மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் படத்தை இயக்கப்போகிறார்.


இதில் கமல் ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதலில் மீனா நடிப்பதாக சொன்னார்கள்.


ஆனால் மீனா த்ரிஷியத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் தமிழில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார். அடுத்து சிம்ரன் என்று கூறப்பட்டது. சிம்ரன் முகத்தில் முதிர்ச்சி வந்துவிட்டதால் கமலே வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.


த்ரிஷா, அசின், தமன்னா போன்ற இளம் நடிகைகளுக்கு கமலுடன் நடிக்க ஆர்வம் இருந்தபோதும் 3 குழந்தைகளின் தாயாக நடிக்க தயக்கமும் இருக்கிறது.


இதனால் அவர்கள் விலகிச் செல்வதாக கூறப்படுகிறது தாய்மையும் அழகும் நிறைந்த நடிகை தேவை என்பதால் அப்படி ஒரு நடிகையை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

என்னமா யோசிக்கிறாங்க... வித்தியாசமான ஒரு படத்தின் தலைப்பு பதிவில் உள்ளது!


எதையாவது செய்து தங்கள் படத்தை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதுதான் இன்றைய டிரண்ட். சிலர் தலைப்பிலேயே அந்த வித்தியாசத்தை தொடங்கி விடுகிறார்கள்.


அதில் ஒன்றுதான் ஒரு படத்துக்கு  "இன்றைய சினிமா"  என்று தலைப்பு வைத்திருப்பது.


வி.கே.சிதம்பரம் என்பவர் டைரக்ட் செய்யும் இன்றைய சினிமாவில் ஜி.கே என்பவர் ஹீரோவாகவும், ஆஷா, பார்வதி ஆகியோர் ஹீரோயின்களாகவும் அறிமுகமாகிறார்கள். வெற்றிவேல் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கான தலைப்பின் காரணத்தை பற்றி இப்படி விளக்குகிறார் டைரக்டர் வி.கே.சிதம்பரம்...


"நாடக கலையால் பிரிந்த குடும்பம், சினிமாவில் ஒன்று சேர்கிற கதை. ஒரு ஜமீன் குடுபத்து வாரிசுக்கு நாடகம் என்றால் உயிர் ஆனால் அந்த குடும்பத்துக்கு கலை ஆகாது. ஜமீன் வாரிசு நாடக நடிகையை திருமணம் செய்து கொள்ளவதால், அவரை கொன்று விடுகிறார்கள் ஜமீன் குடும்பத்தினர் இது 100 ஆண்டுக்கு முன்பு நடந்தது.


இப்போது அதே ஜமீன் அரண்மணையில் படப்பிடிப்பு நடத்தச் செல்கிறது ஒரு படக்குழு, அதில் நடிக்கும் நடிகைக்கும், இப்போதைய ஜமீன் வாரிசுக்கும் காதல் வருகிறது. அன்று நடிகையை கல்யாணம் செய்தவரை கொலை செய்த குடும்பம் இன்று என்ன செய்கிறது என்பதுதான் கதை. அதுதான் இந்த தலைப்பு" என்கிறார்.

இவர் எப்படி வேண்டுமானாலும் நடிப்பாராம்....?

களவாணி படத்தில் அறிமுகமானவர் ஓவியா.


அதில், அவருக்கு பள்ளி மாணவி வேடம் என்பதால், அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தார். அதையடுத்து நடித்த, கலகலப்பு படத்தில், அஞ்சலியுடன் போட்டி போட்டு கொண்டு, கவர்ச்சியில் வெளுத்துக் கட்டினார்.


இதன்பின், உடலில் சற்று சதை போட்டு, கவர்ச்சியாக நடிக்க தகுந்தாற்போல், மாறினார். சமீபத்தில் வெளியான, புலிவால் படத்தில், கவர்ச்சி வேடங்களில் பட்டையை கிளப்பியிருந்தார்.


 ஓவியா கூறுகையில், அசின் மாதிரி, பெரிய நடிகையாக வேண்டும் என, ஆசைப்பட்டேன். ஆனால், நடிப்பு திறனை வெளிப்படுத்தும் விதமான கேரக்டர்கள் அமையவில்லை.


அதனால், சொந்த விருப்பு, வெறுப்புகளை தள்ளி வைத்து விட்டு, சினிமாவிற்கேற்ப மாறி விட்டேன்.


கதையை கேட்டபின், அந்த கதைக்கேற்ற நடிகையாக மாறி விடுவேன். மேலும், கவர்ச்சி காட்சிகளிலும், தாராளமாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.


முன்னணி ஹீரோக்களுடன் குத்தாட்டம் ஆடவும் ரெடி என, பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஓவியாவின் இந்த அதிரடி ஸ்டேட்மென்ட், கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 இனி, ஓவியாவுக்கு, வாய்ப்புகள் குவியும் என்று நம்பலாம்.

'விக்ரமசிம்ஹா' & 'கோச்சடையான் Vs மார்ச் 10ம் 9ம்!

 'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ரஜினிகாந்த் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஆதி, ஜாக்கி ஷெராப், ருக்மிணி, ஷோபனா, உள்பட பலர் நடிப்பில் தயாராகி உள்ள படம் 'கோச்சடையான்'. பாடல்களை வைரமுத்து எழுத ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தந்தை, மகன் என இரு வேடங்களில் ரஜினி வருகிறார். ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

'கோச்சடையான்' திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். 6 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

பலமுறை இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மார்ச் 9ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் 'கோச்சடையான்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இன்று கமலுடன் ஒரு சந்திப்பு!

 ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 'குக்கூ' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

'குக்கூ' படத்தின் இசையை நடிகர் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். படத்தின் டிரெய்லரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட இயக்குநர் லிங்குசாமி பெற்றுக் கொண்டார்.

இயக்குநர்கள் சேரன், வெற்றிமாறன், பாண்டிராஜ், அட்லீ, கார்த்தி சுப்புராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

அவ்விழாவில் படத்தின் இசையை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது,

"நான் உழைப்பிலும், சிந்தனையிலும் அதிகளவு நம்பிக்கை உடையவன். அந்த உழைப்பையும், சிந்தனையும் நான் பார்த்த காட்சியிலே பார்க்கிறேன். கதை புலப்படுகிறது. கதாபாத்திரங்களுக்கு கண் தெரியவில்லை என்றாலும், அவர்கள் காட்சியை நோக்கி நமக்கு கண் திறக்கிறது.

நாவல்களில் மட்டுமே பார்க்க கூடிய விஷயங்கள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று குரல் எழுப்பி கொண்டிருந்த கூட்டம் இருந்தது. நானும் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் தான். பெரிய தயாரிப்பாளர்கள் காதில் விழாவிட்டாலும், நல்ல சிந்தனையாளர்கள் காதில் விழத்தான் செய்திருக்கிறது. அதற்கான அடையாளம் தான் 'குக்கூ'

வைக்கம் முகம்மது பஷீர் பற்றி ராஜுமுருகன் பேசியதில் இருந்தே எனக்கும் அவரை பிடித்துவிட்டது. இன்னும் நல்ல படங்களை ராஜுமுருகனிடம் எதிர்பார்க்கலாம். 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்வதற்காக வடநாட்டிற்கு சென்றுவிட்டு வந்ததால் தாமதமாக வந்து சேர்ந்தேன்.

என் ஊரில் என் தம்பிமார்கள் இதே போன்ற சினிமாக்களை எடுத்து வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்து கோவிலில் சிலுவை போட்டவனிடம் விபூதி அடிக்கும் பூசாரி முதலில் எனது மனதில் தங்கிவிட்டார். அதைப் போல நிறைய காட்சிகள் இருக்கிறது. கண் இல்லாதவர்கள் காற்றைத் தொட்டு பார்க்கும் காட்சி அதற்கு சான்று. அதைப் பார்க்கும் போது வைரமுத்து கவிதை தான் ஞாபகம் வருகிறது. ”உங்களுக்கு எல்லாம் ரெண்டு கண்கள். எங்களுக்கு எல்லாம் இருபது கண்கள். இருபது நகக் கண்கள்” என்று எழுதியிருப்பார். தினேஷ் அவர்களின் பயிற்சி, தேடல் எல்லாம் மாறுபட்டு நடிக்க வேண்டும் என்று மாறுக்கண்ணோடு நடித்தது உட்பட. தினேஷிற்கு என் வாழ்த்துகள்.

முக்கியமாக ராஜுமுருகனிடம் தொடங்கி தொழில்நுட்பக் குழு, நட்சத்திரங்கள் என்பது கிடையாது என்பது தான் உண்மை என்றாலும் வர்த்தகம் நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானது தான் நாங்கள் எல்லாம். ஆனால் உண்மை இதன் அடிநாதம் என்று பார்க்கும் பொழுது உண்மையான திறமையும், தொழில்நுட்பமும் தான் என 100 வருட திரையுலகம் நிரூபத்து வருகிறது. அந்த திறமைக்கு தான் சூர்யா வணங்கினார். அவர் வணங்கியது போன்று எல்லாருமே வணங்க வேண்டும்.

சூர்யாவை பொறுத்தவரை எனக்கு ரெட்டை வேஷம் தான். சித்தப்பாவும் நான் தான், அண்ணனும் நான் தான். அப்பா சிவக்குமார் இருந்தார்ன்னா சித்தப்பாவா மாறிடுவேன். இல்லன்னா அவருக்கு கோபித்துக் கொள்வார். நான் தானே அண்ணன், நீ எப்போ எனக்கு மகன் ஆனே.. என் வயசை எதற்கு கூட்டுறனு கோபிச்சுகுவார். அதனால ரெண்டுமே நான் தான். சூர்யாவின் முயற்சியையும் நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ரசித்துக் கொண்டு இருக்கிறேன்.

தகுதியானவர்களுக்கு கிடைத்த வெற்றி எல்லாம், அதிர்ஷ்டத்தால் கிடைத்தது அல்ல என்று ஒரு பழமொழி உண்டு. இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம், டிரெய்லரைப் பார்க்கும் போதே ரசிகர்கள் மனதில் உருவாக்கும் என்று நான் எண்ணுகிறேன். இப்போது எல்லாம் நல்ல நல்ல தமிழ் படங்கள் வருகிறதாமே என்று என்னிடம் மத்திய பிரதேசத்தில் கேட்டார்கள். அந்த பெருமையை சேர்த்த கூட்டத்தில் நீங்களும் ஒருவர் ராஜுமுருகன்.

இங்கு வந்திருப்பவர்கள் அனைவருமே என் மீது மிகுந்த அன்பு உடையவர்கள். என் தகுதிக்கு சற்று மேலாக தான் என்னை பாராட்டுவார்கள். அதற்கு நன்றி சொல்வதோடு, அதற்கு என்னை தகுதியுள்ளவனாக என்னை இனிமேல் தான் ஆக்கி கொள்ள வேண்டும் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன். தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இன்னும் நிறைய தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும். நல்ல திறமைகளை ஊக்குவிப்பது புதிய பழக்கமல்ல. பல மாகாணங்களாக அதை ஹாலிவுட்டில் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை இங்கேயும் செய்வது நமக்கு பெருமை. தென்னகத் திறமைகள் உலகை நோக்கி பயணிக்கும் நேரம் நெருங்கி விட்டதாக நான் உணர்கிறேன்." என்று பேசினார்.

விழாவில் பேசிய இயக்குநர் ராஜுமுருகன், "'குக்கூ' படத்தின் கதைக்கு எனக்கு மிகவும் உதவிய முருகேசனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறி அவரை மேடையில் அழைத்து மரியாதை செய்தார். அதுமட்டுமன்றி இளங்கோ, நந்தினி என்ற இரண்டு நிஜமான பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகளை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ”2014ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படம் 'கோலி சோடா' தான்.” என்று கூறினார்.

'கண்ணு இருக்குற ஆம்பள எல்லா இடத்துலயும் இருக்கான். மனசு இருக்குற ஆம்பள எல்லா இடத்துலயுமா இருக்கான்?' உள்ளிட்ட டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

எதற்கெடுத்தாலும் கோபப்படும் கணவனை சமாளிப்பது எப்படி?

 அழகான உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் அல்லது மோதல்கள் இருந்தால் தான், அந்த உறவு சற்று விறுவிறுப்போடு, நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு ஒன்றாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறு சண்டைகள் வரும் போது, ஈகோ வந்துவிட்டால், அது அந்த உறவையே முறித்துவிடும். அதிலும் வாழ்க்கை துணை கோபப்படுபவராக இருந்தால், நிறைய பொறுமை மற்றும சிறு சிறு விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் காதலன் அதிகம் கோபப்பட்டால், சில சமயங்களில் அனைத்தும் இருவருக்கும் இடையில் முடிந்துவிட்டது போல் பேசுவார்கள்.


அதிலும் தவறுகளை ஆண்கள் செய்துவிட்டால், அவர்கள் அந்த தவறை ஒப்புக் கொள்வார்கள். ஆனால் அதையே பெண்கள் செய்துவிட்டால், அதைப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகவே ஆண்கள் கோபப்படும் போது பெண்கள் சற்று பொறுமையாக இருந்து, அவர்களை ஒரு சிலவற்றால் சமாதானப்படுத்த வேண்டும். அது எப்படியென்று அனுபவசாலிகள் கூறுவதை படித்து பாருங்களேன்...

பெண்களே...

* உங்கள் கணவன் கோபமாக இருக்கும் உங்களுடன் பேச தயாராக இருந்தால், அப்போது அவர்களிடம் அவர் கோபமாக இருப்பதற்கான காரணத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டோ அல்லது நீங்கள் தவறு செய்ததால் கோபப்பட்டால், அதனை பற்றி தெளிவாக அவரிடம் பேசி, அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். இல்லை அவர்கள் பேச தயாராக இல்லையென்றால், அப்போது அவர்களுக்கு மெசேஜ் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.

* நிறைய ஆண்கள் நீங்கள் தவறு செய்துவிட்டதால் கோபப்பட்டு விட்டு, அந்த கோபத்தை குறைக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் சமாதானப்படுத்தி பேச வரும் போது, அந்த பேச்சை ஏற்க நீங்கள் ஏதேனும் ப்ரூப் காண்பிக்க வேண்டும். இல்லை நீங்கள் தவறு செய்யாமல், காதலன் கோபப்பட்டுவிட்டால், அந்த நேரம் நீங்களும் கோபப்படாமல், அந்த பிரச்சனையை அவர்களுக்கு பேசி புரிய வைக்க வேண்டும். அப்படியிருந்தும் நம்பவில்லையென்றால், நம்பிக்கை இல்லாத உறவு நிலைக்காது. மேலும் அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், அவர்கள் கோபமும், நிச்சயம் போய்விடும்.

* சில ஆண்கள் கோபமாக இருக்கும் போது தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால், அவர்கள் பிறகு யோசித்து புரிந்து கொண்டு, பின்னர் வந்து பேசுவார்கள். ஆனால் சிலருக்கு அத்கைய இடைவெளி தேவைப்படாது. அபபோது அவர்களிடம் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பேச வேண்டும். இல்லையென்று விட்டுவிட்டால், அந்த உறவு எதையும் சரியாக தெரியாமல், பின்னர் முறிந்துவிடும்.

* உங்கள் உறவுகளை நீட்டிக்க வேண்டுமென்றால், அனைவரிடமும் பொறுமை இருக்க வேண்டும். சில சமயங்களில் கோபத்தால் பாசமே மறைத்துவிடும். அந்த நேரத்தில் உறவு நீடிக்க வேண்டுமென்றால் பொறுமையாகத் தான், அவர்களை சமாதானப்படுத்தி, குளுமையாக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலை அவர்கள் முன்பு செய்து, சிறு ஜோக்குகள் செய்தும் சமாதானப்படுத்தலாம்.

* நீங்கள் தவறு செய்தால், அப்போது மறக்காமல் உங்கள் கணவனிடம்  மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்பது என்பது பெரிய விஷயம் அல்ல, அவ்வாறு தவறு செய்து விட்டு, ஈகோவால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க மறுத்தால், பின் பிரிவைத் தான் சந்திக்க நேரிடும்.

* நீங்கள் தவறே செய்யாமல் இருக்கட்டும். இருந்தாலும் உங்கள் உறவு நிலைக்க, அந்த பொய்யை உண்மையாக்கி, ஒப்புக் கொள்ளுங்கள். அதுவே தவறு செய்திருந்தால், அந்த தவறை மறுக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த பொய்யே அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி, உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் சற்று நடந்து பாருங்கள்.உங்கள் கணவன் சமாதானமாகிவிடுவான்

வாகனங்களுக்கு இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவதே இலாபகரமானது .!

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள்.


பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும்.


பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.


மதியம், மாலையில் பெட்ரோல் நிரப்பினால், அளவு சரியாக இருக்காது. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதே புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.


அளவு சரியாக இல்லாதபட்சத்தில் வாகனத்தின் மைலேஜ் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவது நல்லது.

ஸ்ப்ரேகளை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்!

உங்கள் அன்பு குடும்ப உறுப்பினர்களை மிகவும் நேசிப்பவராக இருந்தால் இதை படியுங்கள்... படித்துவிட்டு எரியும் நெருப்பினருகில் Hit Spray போன்ற பொருட்களை உபயோக்கிககூடாது என்று உறவினர்களுக்கு வலியுறுத்துங்கள். ஏனெனில் அவை எளிதில் தீப்பற்றி எரியக்கூடியவை, அது மட்டுமில்லாமல் அவை வெடிக்கும் தன்மையும் கொண்டது..

மகராஷ்டிரா மாநிலம் பூனாவில் ஒரு பெண் எரியும் அடுப்பினருகில் "Hit" spray உபயோகபடுத்தியதால்  வெடித்து  தீ பற்றி இறந்தார், அவரை காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் கருகி காயமுற்றார்...

அந்த பெண் அடுப்பில் சமைத்துகொண்டிருக்கும்போது கரப்பான் பூச்சிகள் அடுப்படியில்  அலைந்துதிரிவதை  கண்டு ஆத்திரம் அடைந்து அவைகளை கொள்வதற்காக கரப்பான் கொள்ளும் Hit sprayஐ அவைகள் மீது அடித்தால் துரதிர்டவசமாக அது எரியும் நெருப்பில் பட்ட உடன் வெடிகுண்டு போல பலத்த சத்தத்துடன் வெடித்து அந்த பெண்ணின் உடல் முழுக்க தீப்பற்றியது..அவளின் அலறல் சத்தம் கேட்டு அவளை காப்பாற்ற முயன்ற கணவரும் தீப்பற்றி படுகாயம் அடைந்தார்...

இறுதியில் அந்த பெண் தனது அறியாமையால் தன் இன்னுயிர் நீத்தார்.. அவளுடைய கணவர் அதிர்டவசமாக தீ காயங்களுடன் உயிர் பிழைத்துக்கொண்டார்..

இந்த மாதிரி நடக்க காரணம் என்ன ?

இது போன்ற பூச்சிகளை கொள்ளும் sprayerகளில் எளிதில் ஆவியககூடிய எரிபொருள் கலக்கப்பட்டுள்ளது இவை தீபற்ற ஒரு சிறு நெருப்பு பொறி மட்டுமே போதுமானது..தீபற்றியவுடன் புட்டிக்குள் அடைதுவைக்கபட்டுள்ள அணைத்து திரவங்களும் உடனடியாக அதிக அழுத்தத்துடன் வெடிக்கும் தன்மை கொண்டது...

நீங்கள் அன்றாடம் உபயோக படுத்தும் Body spray போன்றவைகளும் இந்த வகையறாக்களை சார்ந்தவைகளே...எனவே சற்று அக்கறையுடனும் ஜாக்கிரதையாகவும் இது போன்ற உபகரணங்களை கையாளுமாறு உங்கள் உறவினர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்...

பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கான ஆலோசனைகள் !

வார இறுதி அல்லது விடுமுறையை கழிக்க பைக்கில் நீண்ட தூரம் டரிப் சென்று வருவது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதுபோன்று, பைக்கில் நீண்ட தூரம் செல்பவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடனும் ,கூடுதல் முன்னேற்பாடுகளுடன் செல்வது மிக மிக மிக அவசியம்.
நீண்ட தூர பயணம் செல்பவர்கள் மிகுந்த திட்டமிடுதலுடன் செல்ல வேண்டும். இதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

1. உங்களது பயணத்தை சுகமானதாக்குவதற்கு டயர்களின் பங்கு மிக முக்கியம். எனவே, டயர்கள் அதிக தேய்மானம் கொண்டதாக இருந்தால் மாற்றிவிடுங்கள். பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டாம்.

2.கிளட்ச், பிரேக் ஷூ ஆகியவை நன்றாக வேலை செய்கிறதா என்பதை பரிசோதித்து விடுங்கள்.

3.ஹெட்லைட், இன்டிகேட்டர், டேஞ்சர் விளக்குகள் சரியாக இயங்குகிறதா என்பதை செக்கப் செய்யுங்கள். குறிப்பாக, ஹெட்லைட் டிம், பிரைட் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

4.எஞ்சின் ஆயில் மாற்றவேண்டியிருந்தால் மாற்றிவிடுங்கள்.

5.மோட்டார்சைக்கிளின் ப்ரேம், சஸ்பென்ஷன் நன்றாக இருக்கிறதா? பார்த்து விடுவது நல்லது.

6.பஞ்சர், பிளக்கை சரிபார்க்க உதவும் ஸ்பானர்கள் மற்றும் டூல்ஸ் கிட்டை எடுத்துச் செல்வது அவசியம்.

7.மெல்லிய ஆடைகள் மற்றும் தடிமனனான ஆடைகள் இரண்டையும் எடுத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை எடையை குறைத்து எடுத்துச் செல்லுங்கள்.

8.பையில் பொருட்களை வைக்கும்போது கனமான பொருட்களை கீழேயும், எடை குறைந்த பொருட்களை மேலேயும் அடுக்கி எடுத்துச் செல்லுங்கள். இதனால், பைக்கின் பேலன்ஸ் அதிகரிக்கும்.

9. பிற மாநிலம் அல்லது அடுத்த நாட்டு எல்லையை கடக்க வேண்டியிருந்தால் அந்த பகுதியின் போக்குவரத்து விதமுறைகள் மற்றும் ஹெல்மெட் அவசியமா உள்ளிட்ட விபரங்களை அறிந்து செல்வது மிக முக்கியம்.

10.கையில் ஒரு ரூட் மேப் இருக்க வேண்டும். எரிபொருள் அளவை அறிய உதவும் ஸ்கேல் இருந்தாலும் கையில் வைத்துக்கொள்வது நல்லது.

11.பயணம் செல்லும் நாட்களின்போது தட்பவெப்பம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே ஒரு ஐடியாவோடு செல்வது அவசியம். கையில் ஒரு சிறிய பாக்கெட் ரேடியோ இருந்தால் உதவிகரமாக இருக்கும்.

12. உங்கள் பயணத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து ஒரு பட்ஜெட்டை போட்டு, அதைவிட கொஞ்சம் கூடுதலான தொகையை எடுத்துச் செல்வது அவசியம். கையில் அதிக பணத்தை எடுத்துச் செல்லாமல் டெபிட், கிரெடிட் கார்டுகளாக இருந்தால் நல்லது.

13. பயணத்திற்கு உங்களது உடல்நிலை ரொம்ப முக்கியம். எனவே, உடல்நிலையை கருத்தில்கொண்டே பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

14.கையில் எனர்ஜி பார் மற்றும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

15.இரவில் எங்கு தங்கவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

16. எதிர்பாராதவிதமாக விபத்து நடந்தால், உங்களை பற்றிய விபரங்கள் எளிதில் தெரியும் வகையில், சிறிய டைரி அல்லது அட்டைகளை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுஙகள். சிகிச்சை ஏதாவது மேற்கொண்டு வந்தால் அந்த விபரங்களும் முழுமையாக எழுதி கையில் வைத்துக்கொள்வது முக்கியம்.

17.முதலுதவி பெட்டி ஒன்றை கையில் எடுத்துச்செல்லுங்கள்

18.நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை வீட்டிலோ அல்லது நண்பர்களிடத்திலோ அவ்வப்போது தெரியப்படுத்திவிடுங்கள்

19.உங்கள் பயணத்தின் பதிவுகளை படம் பிடிக்க கண்டிப்பாக கேமரா ஒன்றையும் எடுத்துச்செல்லுங்கள்.

20.கண்டிப்பாக மது அருந்திவிட்டு மோட்டார்சைக்கிளை ஓட்டாதீர். 

நீங்கள் உங்கள் ஜீன்சை எப்படி துவைக்கிறீர்கள்? இப்படித்தான் துவைக்கணும் !

நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர்.

 அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர். ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான முறையில் நிறம் போகாமலும், அதன் தன்மை மாறாமலும் இருக்க அழகாக துவைக்கலாம். அதற்கு உப்பு தான் சிறந்த பொருள். எப்படியெனில் உப்பை வைத்து ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, துணியின் தன்மையும் அப்படியே இருக்கும். இப்போது உப்பை வைத்து எப்படி துவைப்பது என்று பார்ப்போமா!!!


உப்பை வைத்து எப்படி துவைக்க வேண்டும்?

முதலில் பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டீஸ்பூன் உப்பை சேர்த்து, ஜீன்ஸை போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் அந்த ஜீன்ஸை எடுத்து, வாஷிங் மிசினிலோ அல்லது கையிலோ லேசாக சோப்பு போட்டு துவைத்து, நீரில் அலச வேண்டும். அதிகமாக தேய்த்து விட வேண்டாம். ஏனெனில் பின் அதில் உள்ள துணியின் தன்மை குறைந்துவிடும்.

பின்பு மற்றொரு பக்கெட்டில் நீரை ஊற்றி, அதில் உள்ள நுரை போகும் வரை நன்கு அலச வேண்டும். பின் அதனை காய வைக்க வேண்டும்.

முக்கியமாக ஜீன்ஸ் துவைக்கும் போது, உட்பகுதி வெளியே இருக்க வேண்டும். பின் காய்ந்ததும், அதனை ஐயர்ன் செய்து சரியாக மடித்து வைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நன்கு புதிது போன்று அழகாக சுத்தமாக இருக்கும்.

எதற்கு ஜீன்ஸை உப்பை வைத்து துவைக்க வேண்டும்?

* புதிய ஜீன்ஸை உப்பை வைத்து துவைத்ததால், ஜீன்ஸில் உள்ள நிறம் போகாமல், புதிது போன்று காணப்படும்.

* உப்பு துணிகளில் படியும் கறைகளை எளிதில் நீக்கிவிடும். அதாவது கறைகளை கஷ்டப்பட்டு தேய்த்து நீக்க வேண்டும் என்று இருக்காது.

* ஜீன்ஸை எப்போது துவைக்கும் போதும், உட்பகுதி வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சாயம் போய், வெளுப்புடன் காணப்படுவதைத் தடுக்கலாம்.

* உப்பை சேர்த்து துவைத்தால், துணிகளில் உள்ள சாயம் வெளி வராமல் இருக்கும். மேலும் மற்ற துணிகளில் இருந்து வரும் சாயமும் எந்த துணிகளோடும் கலக்காமல் இருக்கும்.

* அதிலும் உப்போடு, சிறிது வெள்ளை வினிகரை கலந்து துவைத்தால், நல்லது.

* எப்போதும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை துணியில் உள்ள நிறத்தை முற்றிலும் வெளியேற்றிவிடும், பின் துணியின் தன்மையையும் குறைத்துவிடும்.
ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸை சூப்பராக இருப்பதோடு, லாண்டரியில் துணிகளை போட வேண்டிய அவசியமில்லை.

பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை வாங்கப் போகிறீர்களா?


பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது சிறந்த யோசனைதான். இருப்பினும், பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று வாங்கினால் அதன் பிறகு படும் அவஸ்தைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடும். எனவே, யூஸ்டு கார்களை வாங்கும்போது சில கார் மாடல்களை தவிர்ப்பது நலம். பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போது தவிர்க்க வேண்டிய சில கார் மாடல்களையும், அதன் விபரங்களையும் காணலாம்.

மிட்சுபிஷி லான்சர்

லான்சர்...  இது சிறந்த கார் என்பதை மறுப்பதற்கில்லை. ராலி பந்தயங்களில் பங்கேற்கும் விதமான உறுதியான சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிரு்பபது இதன் சிறப்பம்சம். ஆனால், போதுமான சர்வீஸ் நெட்வொர்க் இல்லாததும், ஸ்பேர் பார்ட்ஸ் தட்டுப்பாடும் இந்த காரை புறக்கணிக்க வேண்டியிருக்கிறது. அதிக அளவில் விற்பனையாகாத மாடல். ரிப்பேர் ஆகிவிட்டால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் ரூ.1.95 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் கிடைக்கிறது.


ஸ்கோடா ஆக்டாவியா

அந்தஸ்தை விரும்புபவர்களின் முக்கிய தேர்வில் ஸ்கோடா ஆக்டாவியாவுக்கும் இடம் உண்டு. மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னையால் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. ஆக்டாவியா அறிமுகம் செய்யப்பட்டபோது தரமான கட்டமைப்பும், சிறந்த வடிவமைப்பும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட கார்களில் அதிகம் விற்பனையான மாடல் இது. அதேவேளை, பயன்படுத்தப்பட்ட ஆக்டாவியாவை வாங்குவது நல்ல முடிவாக இருக்காது.  ஸ்பேர் பார்ட்ஸ் விலை மிக அதிகம். உதாரணத்திற்கு, இதன் ஹெட்லைட் செட்டின் விலை ரூ.30,000ஐ தாண்டுகிறது. இதேபோன்று, சஸ்பென்ஷன் மற்றும் எஞ்சின் பாகங்களை மாற்றுவதற்கும் அதிக தொகையை அழ வேண்டியிருக்கும். நல்ல கன்டிஷனில் உள்ள ஆக்டாவியா யூஸ்டு மார்க்கெட்டில் கிடைத்தால் கூட ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து வாங்குவது உத்தமம்.

டாடா இண்டிகோ

சிறந்த மைலேஜ், குறைந்த ஆரம்ப விலை கொண்ட என்ட்ரி லெவல் செடான் என்பது இண்டிகோவுக்கு பலம். புதிதாக வாங்கும்போது பணத்திற்கு மதிப்புமிக்க கார் என்றே கூறலாம். ஆனால், பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட் என்று வரும்போது இண்டிகோ சிறந்த டீலாக இருக்காது. ஏனெனில், நீண்ட ஆயுட்காலத்திற்கான தரத்தை இண்டிகோ கொண்டிருக்கவில்லை. இதேபோன்று, சிறந்த பராமரிப்பு கொண்ட இண்டிகோ கார்களும் பயன்படுத்தப்பட்ட மார்க்கெட்டில் அரிதாகவே கிடைக்கின்றன. மேலும், பராமரிப்பு மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் விலை குறைந்ததாக இருந்தாலும், அடிக்கடி சர்வீஸ் சென்டருக்கு செல்ல வேண்டியிருப்பதாக உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


ஃபோர்டு ஐகான்


பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கும் மாடல். ஓட்டுவதற்கு சிறந்த கார் என்றாலும் இதன் ஸ்பேர் பார்ட்ஸ் விலை நம்மை தலை சுற்ற வைத்துவிடும்.

செவர்லே ஏவியோ

சிறந்த இடவசதி என்பது ஏவியோவின் பலம், ஆனால், மேற்கண்ட கார்கள் போன்றே இந்த காருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் விலை மிக அதிகம். தவிர, ஸ்பேர் பார்ட்ஸ் தட்டுப்பாடும் இருக்கிறது. எனவே, இந்த பட்டியலில் உள்ள கார்களை வாங்கும்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பதுடன், நல்ல மெக்கானிக்குகளிடம் ஆலோசனை பெற்று வாங்குவது நலம்!

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் !

புதிதாக கார் வாங்கும்போது அதன் வடிவமைப்பு, பெர்ஃபார்மென்ஸ் என ஒவ்வொன்றாக பார்த்துத்தான் வாங்குகிறோம். ஆனால், அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கார் புத்தம் புதிது போல் இருப்பது உரிமையாளர் கையில்தான் இருக்கிறது.

 காரை புதிது போல் பாதுகாத்து பராமரிப்பது ஒரு விஷயமாக கருதுவது தவறு. விடுமுறை நாட்களில் ஓய்வு நேரங்களில் சொந்தமாகவே சில எளிய பராமரிப்புகளை மேற்கொண்டு வந்தாலே கார் புத்தம் புதிது போல் இருக்கும். இதற்காக குறைந்த விலையில் பாலிஷ் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இந்த பகுதியில் அதற்கான சில உபாயங்களை காணலாம்.


கார் ஷாம்பூ 

தூசிகள் மற்றும் பறவை எச்சங்களால் புதிய கார் கூட பழைய கார் போல காட்சியளிக்கும். காரின் அழகை கெடுக்கும் முக்கிய காரணிகள் இவை. இதனை போக்குவதற்கு கார் ஷாம்பூவை போட்டு ஒரு வாட்டர் வாஷ் வீட்டிலேயே அடித்தால் தூசி, பறவை எச்சங்கள் பஞ்சாய் பறந்து போய்விடும். காரின் பெயிண்ட்டுக்கும் கார் ஷாம்பூ பாதிப்பு ஏற்படுத்தாது என்பதோடு காரையும் புத்தம் புதுசு போல் ஆக்கிவிடும்.

கிரீம் பாலிஷ் 

கார் ஷாம்பூவை போட்டு வாட்டர் வாஷ் அடித்தால் ஓரிரு நாளைக்கு மட்டும் சுத்தமாக இருக்கும். ஆனால், அதன் பின்னர் கிரீம் பாலிஷை காட்டன் துணி கொண்டு கார் வெளிப்புறம் முழுவதும் தடவினால் கார் நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்கும். தூசி படிவதையும் தவிர்க்கும் என்பதோடு பெயிண்டுக்கும் பாதுகாவலனாக இருக்கும்.

டேஷ்போர்டு பாலிஷ்

 வெளிப்புறத்தை விட உட்புறத்தை அதிக பொலிவுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்தானே. டேஷ்போர்டுக்கென பிரத்யேக பாலிஷ் விற்கப்படுகிறது. உங்களது காரின் டேஷ்போர்டின் தன்மையை கூறி அதற்கேற்ற பாலிஷ் வாங்கி உபயோகப்படுத்துவது அவசியம். மிக ரம்மியமான உணர்வை தரும்.

இருக்கை மற்றும் தரைவிரிப்பு கிளினர்

 காரின் உட்புறத்திலேயே அதிக தூசிகள் படியும் இடம் தரைவிரிப்புதான். இதேபோன்று, வியர்வை மற்றும் திண்பண்டங்களை போடுவது உள்ளிட்ட காரணங்களால் இருக்கைளும் அழுக்கடைவது தவிர்க்க முடியாது. சில சமயங்களில் நாற்றம் கூட அடிக்கும். இதனை தவிர்க்க இருக்கைகளின் தன்மைக்குத் தக்கவாறு பாலிஷ் உபயோகிக்க வேண்டும். தரைவிரிப்புகளுக்கும் கிளினர் போட்டு சுத்தப்படுத்துவதுடன் இதற்கு முன்பாக கார் வாக்கம் கிளினர் மூலம் சுத்தப்படுத்திக்கொள்வதும் அவசியம்.

இது எஞ்சினுக்கானது...!! 

எஞ்சின் ஆயிலை மாற்றும்போது அதற்கு முன்பாக எஞ்சின் ப்ளஷ் என்ற திரவத்தை ஊற்ற வேண்டும். எஞ்சினில் உள்ள தேவையற்ற பிசிறுகள், கெட்டி ஆயிலை கூட அடித்துக் கொண்டு வந்து வெளியில் கொட்டிவிடும். அதன்பிறகு புதிய ஆயிலை மாற்றினால் எஞ்சின் ஸ்மூத்தாக இருக்கும்.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பாலிஷ், கிளினர்கள் மற்றும் எஞ்சின் ப்ளஷ் ஆகியவை கார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடைகளில் எளிதாக கிடைக்கிறது. மேலும், இவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் பல மாதங்கள் வரை உபயோகமாக இருக்கும். உங்களது பட்ஜெட்டையும் பெரிய அளவில் பாதித்துவிடாத விலையிலேயே இவை கிடைக்கின்றன. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் சில ஆண்டுகள் கழித்து காரை விற்பனை செய்யும்போது கூட கூடுதல் விலையை பெற்றுதரும்.

குறிப்பு: 

டேஷ்போர்டு, இருக்கைகளுக்கு பாலிஷ் வாங்கும்போது தன்மையை(உ.ம், லெதர் இருக்கைக்கு தனி பாலிஷ்) எடுத்துக் கூறி வாங்குவது அவசியம்.

காதல் தோல்வியால் ஏற்பட்ட துன்பத்திலிருந்து மீள்வது எப்படி?

ஒருவர் காதலிலிருந்து பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபத்துடன் பிரிதலால் எந்த ஏமாற்றமும் பெரிதாக பாதிக்காது. இன்னொன்று வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இருக்கும் காதலை வெட்டிவிடுவது. இதை காதல் என்று சொல்லலாகாது. மற்றொன்று ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து அவரவர் குடும்பத்தினருக்காக பிரிவது ஒரு வகை. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாணத்திற்கு முன், இன்னொன்று கல்யாணத்திற்கு பின். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் பெரும் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மீள்வது சிறிது கடினமே. அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்திலிருந்து மீள்வதற்கு சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

1. அதிர்ச்சி 

தொடக்கத்தில், நம் துணைவர் இன்னொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் ஏற்காது. முதலில் நம்ப மறுக்கும். நாம் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவர் என்பதை முற்றிலும் மனம் ஏற்க இயலாது. அதிலும் உங்கள் துணைவர் உங்களை தவிர வேறு ஒருவருடன் உணர்வுபூர்வமாக நெருங்கி பழகுவதை பார்க்கும் பொழுதோ, உங்களை சுற்றி ஏதோ இழிவான செயலில் ஈடுபடுவதைக் கண்டாலோ, என்ன நடக்கிறது என்று உணர்வது மிக கடினம். இதெல்லாம் கெட்ட கனவா, இல்லை வெறும் பிரம்மையா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கும் போது, ஒரு மூடுபனியில் இருப்பது போல் இருக்கும். இந்த கட்டத்தில் நீங்கள் உங்களை உணர்வது அவசியம்.

2. ஆத்திரம் 

அது 'கெட்ட கனவும்' இல்லை வெறும் ஒருவித பிரம்மையும் அல்ல, அது உண்மைதான் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது. உடல் நிலை மோசமாக மாறும். எந்த செயலையும் செய்ய முடியாது. நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்க மறுப்பீர். வேலைக்கு செல்லாமலும், அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமலும், சதா காதல் நினைவையே மனம் நாடும். நடந்தவற்றையே நினைத்து சிந்தித்து கொண்டிருப்பர். பின் பொருட்களை தூக்கி உடைப்பது, கத்துவது, அனைவரிடமும் சண்டை போடுவது மற்றும் தன் சுய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது போன்றவைகள் நிகழும். அழுது புலம்புவர். சில நாட்களுக்கு பின் இந்த நிலை மாறும். ஆனால் மனதில் வலி மட்டும் வேரூன்றி இருக்கும். இந்த நிலை போக போக சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.

3. கோபம் 

இந்த கட்டத்தில், ஆரம்பத்தில் வன்முறை செயலில் ஆத்திரம் கொண்டு, பின் அந்த வலியிலிருந்து மீண்டு, மனமானது கல்லாகி, ஒரு சாதாரண நிலையை அடைந்திருப்பீர். இந்த நிலையில் தான் பொதுவாக நீங்கள் சமரச கருத்து தொடங்குவது அல்லது விவாகரத்து பற்றிய முடிவு எடுப்பது நடக்கும். ஆழமான காயம் கொண்டிருந்தாலும், நடைமுறை வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது நல்லது. அதை விட்டு பழி வாங்குவது என்பது முட்டாள்தனம். ஆகவே இந்த நேரத்தில் துயரத்திலிருந்து வெளிவர வாழ்க்கையின் இலக்குகளை அடைய மிகுந்த ஆர்வத்தை காட்டலாம் அல்லது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.

4. நினைவு சின்னங்கள் 

உங்கள் துணைவருடன் சென்றிருந்த சில இடங்கள், பொருட்கள், மற்றும் நினைவூட்டும் அனைத்தையும் மனதில் இருந்து அழிப்பது நல்லது. காதல் கொண்ட வேளையில் கேட்ட சில பாடல்கள், அவர்களுடன் சென்ற ரெஸ்டாரென்ட், இல்லையேல் அவர்கள் கூறிய வார்த்தைகள், அவர்களால் ஏற்பட்ட நட்பு, உறவுகள் போன்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.

5. புது உறவு

இப்படிப்பட்ட சம்பவம் நடந்த உடனே வேறு ஒருவரை நம்பி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். சில நாட்கள் கழித்து பழகி, பேசி, ஒருவரை புரிந்து பின் மணம் முடிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைக்கு மற்றொரு நபரை தேர்ந்தெடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். இதனால் மறுபடியும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.

6. இலக்குகள் 

காதல் தோல்வி அடைந்துவிட்டோம் என்று மனம் தளர்ந்து விடாமல், இலக்குகளை தொடர வேண்டும். சதா அதே நினைவாக இருக்காமல், புத்தகம் படிப்பது, பிடித்த வேலைகளை செய்வது, எங்காவது தூரமாக சென்று ஒரு மாத காலம் மன நிம்மதியுடன் இருந்து வருவது, எப்போதும் நம்மை பிஸியாக வைத்து கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால், விரைவில் அந்த துயரத்திலிருந்து மீண்டு, இலக்குகளை அடைய முடியும்.

ஆகவே எப்போதும் நம்மை நாமே புரிந்து கொண்டு, பின் வாழ்க்கையை தொடர்வது மிக முக்கியம். வாழ்க்கையில் அனைத்துமே பாடமாக அமையும். நிறைய கற்று கொள்ள நேரிடும். ஒவ்வொருவரையும் எப்படி சமாளிப்பது என்பதை அறிய வேண்டும். எனவே காதல் தோல்வி ஏற்பட்டால், அவற்றை மறந்து, நம் வாழ்கையை தொடர நமக்கு எப்போதும் சந்தோஷம் கொடுக்கும் நம் நண்பர்ககளோடு சேர்ந்து சிரித்து பேசி வாழ்கையை அனுபவியுங்கள்.

ஆண்கள் யாரிடமும் சொல்ல விரும்பாத ரகசியங்கள் !


* ஆண்கள் தங்கள் சம்பளம் எவ்வளவு என்பதை மற்றவர்களிடம் மறைக்க விரும்புகிறார்கள். அதுபோல் தங்கள் செலவையும் ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய வரவு - செலவுகளை மற்றவர்கள் கணக்கிடுவதை விரும்பமாட்டார்கள். வருமானம் என்பது அவர்களுடைய பலம். செலவு என்பது பலவீனம். இரண்டுமே மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆண்கள் எது எதற்கு செலவிடுகிறார்கள் என்பதை அறிந்தாலே, அவர்களுடைய பலவீனம் வெளிப்பட்டுவிடும். அதனால் செலவை மிகமிக ரகசியமாக பாதுகாக்கிறார்கள்.

* ஆண்கள் தங்கள் வாகனம் ஓட்டும் திறமையை மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை வெறுக்கிறார்கள். ஆண் தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்று கூறும்போது, அவரோடு நெருக்கமாக பழகும் பெண், ‘உங்களை நம்பி நான் காரில் ஏறலாமா?’ என்று கேட்டு விடக்கூடாது. தன்னிடம் அந்தப் பெண் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு ஆணுக்கு ஏற்பட்டு, தனது ஆண்மைக்கே அது ஒரு சவால் என்று நினைத்துவிடுகிறார்கள். அதனால் பெண்கள், தங்களுக்கு பிடித்தமான ஆண் கார் ஓட்டுவதில் சந்தேகம் இருந்தால் அதை அவரிடம்   நேரடியாக தெரிவிக்காமல், ‘நாம் வாடகைக்காரில் சென்றால் அதிக மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று கூறலாம். வேறு டிரைவரை நியமிப்பது தங்களது மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயல் என்றும் கூறலாம்.

* எப்போதும் தங்கள் தாய்மீது அதிக பற்று வைத்திருப்பார்கள். அந்த பற்று திருமணத்திற்கு பின்பும் தொடரும். இதை தடுக்க நினைத்தால் குடும்பத்தில் பிரச்சினைகளே மிஞ்சும். அவர்கள் தங்கள் தாய்மீது வைத்திருக்கும் அன்பால் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் விளையாது என்பதை மனதில் கொண்டு, அவரை போட்டியாளராக நினைக்காமல் வாழ்வதே அமைதிக்கு வழி. அது மட்டுமல்ல ஆண்களை எளிதில் வசப்படுத்த, அவர்களுடைய தாய்மீது அன்பு செலுத்துவதே குறுக்கு வழி. தங்களுடைய தாயை மற்றவர் மிகுந்த மரியாதையோடு நடத்த வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பார்கள். மாறாக தாயின் குறைகளை மற்றவர்களிடம் கூறுவதையோ, மற்றவர்கள் முன்னிலையில் தாயை மோசமாகநடத்துவதையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

* நட்புக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் தங்கள் நண்பர்களைப் பற்றிய ரகசியங்களை காப்பார்கள். திருமணமான பின்பு, தனது மனைவியும் மற்றவர்களும் தங்கள் நண்பர்களை தன்னைப்போல் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தன் நண்பன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நல்லவன் என்ற மேல்பூச்சு பூசுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் நட்பு விஷயத்தில் யாரும் தலையிட்டால்அவர்களுக்குபிடிக்காது.

அஞ்சான் படத்தில் சமந்தாவின் " ஜீவா" கேரக்டர்!

சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.


தமிழில் ஒரே சமயத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.


இதில் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சமந்தா கேரக்டரின் பெயர் வெளியாகியுள்ளது. அவர், படத்தில் ஜீவா கேரக்டரில் வருகிறாராம். அஞ்சான்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன் கூட பணியாற்றிவர் மறைந்த ஒளிப்பாதிவாளர் ஜீவா.


அவரது நினைவாகதான் சமந்தாவுக்கு இந்தப் படத்தில் ஜீவா என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

“அங்குசம் - திரைப்படம் யாரை தாக்கி எடுக்கப்பட்டது...?

அங்குசம் திரைப்படம் யாரையும் தாக்கி எடுக்கப்பட்டது அல்ல என்று பாடலாசிரியர் திரவியன் கூறினார்.

அங்குசம் திரைப்படத்தின் பாடலாசிரியர் திரவியன், தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் சீனிவாசன் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது கூறியதாவது:–


அங்குசம்

அங்குசம் திரைப்படத்தை இயக்குனர் மதுக்கண்ணன் இயக்கி உள்ளார். படத்தில் ஸ்கந்தா கதாநாயகனாகவும், ஜெய்த்தி குகா கதாநாயகியாகவும் நடித்து உள்ளனர். இந்த படம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

நம் நாட்டில் உள்ள பல படங்கள் வெளியில் வராமல் சென்று உள்ளன. இந்த படம் யாரையும் தாக்கி எடுக்கப்பட்ட படம் அல்ல. படம் வருகிற 21–ந் தேதி வெளியாகிறது.

விழிப்புணர்வு

படத்தின் கதை திருச்சி சீனிவாசனின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட தாக்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தை 4 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். 2 சதவீதம் பேர்தான் ஆழமாக அறிந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சட்டத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் உருவாக்கப்பட்டதே அங்குசம் படம் ஆகும்.

இவ்வாறு கூறினர்.

விஸ்வரூபம் 2 - ஏன் தள்ளிப்போகிறது?

கமலின் விஸ்வரூபம் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறது. முழு ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் இந்த படம் இந்த மாதம் ரிலீசாகும் என முதலில் கூறப்பட்டது.


ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியாததால் படம் தாமதமாகி வருகிறது. இதற்கிடையில் ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.


இதனால் அந்த நாளில் விஸ்வரூபம் 2 ரிலீஸ் செய்ய வேண்டாம் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.


அதேபோல் கோச்சடையான் பட ரிலீசை ஒட்டியோ அதற்கு பிறகு ஒரு வாரம் கழித்தோ கூட விஸ்வரூபம் 2 வெளியிட வேண்டாம் என திரையுலகினர் கூறி வருகிறார்களாம்.


ஒரே சமயத்தில் 2 பெரிய ஹீரோக்களின் படம் வந்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதாலே இந்த கோரிக்கையாம்.


இதனால் பட ஆடியோ, டிரெய்லர் என எதுவும் வெளியிடப்படாததால் அடுத்த மாதமும் விஸ்வரூபம் 2 ரிலீசாகாது என கூறப்படுகிறது. இந்த படம் மே மாதத்துக்கு தள்ளிப்போகும் என தெரிகிறது.

பட்டையக் கிளப்பும் ஜிகர்தண்டா!

இந்த வருஷத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படங்கள்ல ஒண்ணா போர்ஃப்ஸ் பத்திரிகையால் குறிப்பிடப்பட்ட ஒன் அண்ட் ஒன்லி தமிழ்ப் படம் 'ஜிகர்தண்டா’.


இப்போ 7-ம் தேதி அந்த படத்துடைய டீஸர் ரிலீஸ் ஆகி பட்டையைக் கிளப்பிக்கிட்டிருக்கு.


வெளியான முதல் நாள்லேயே ரெண்டு லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.


டீஸருடைய லுக் செம ஸ்டைல்,


அதுலேயும் ஜிகர்தண்டாவுக்குக் கொடுக்கிற அந்த விளக்கமும் குரலும் மிரட்டல்னு அலசி ஆராய்ஞ்சு டீஸருக்கே அதிக விமர்சனம் வாங்கினது இந்தப் படமாதான் இருக்கும்.


ஆல் தி பெஸ்ட் ஜிகர்தண்டா டீம்!

மணிரத்னத்தின் டவுசர் காலம்!

மணி மணியாய், ரத்தினச் சுருக்கமாய் பேசும் இயக்குநர் மணிரத்னத்தின் டவுசர் காலம் இதோ...

'எல்லோரும் நாளைக்கி ஹோம்வொர்க் பண்ணிட்டு வந்திடணும்’னு மிஸ் சொன்னால், இவர் மட்டும் 'ஏன்?, எதுக்கு? எப்படி?’ எனத் தவணை முறையில் கேள்வி கேட்டு அடி வாங்கியிருப்பார்.

பக்கத்து பெஞ்சில் தூங்கி விழும் கேர்ள்ஃப்ரெண்ட் அஞ்சலியை, 'ஏந்திரி அஞ்சலி ஏந்திரி... ஏந்திரி அஞ்சலி ஏந்திரி... மிஸ் வந்துட்டாங்க’ எனக் கத்தியே பக்கத்து க்ளாஸ் அஞ்சலிகளையும் எழுப்பியிருப்பார்.

ஃப்ரெண்ட்ஸ் என்றால் அலாதிப் பிரியமான இவர், க்ளாஸ் ரூமில் கூட ஃப்ரெண்டின் தோளின் மேல் கைபோட்டபடிதான் பாடம் படித்திருப்பார்.

பக்கத்து வீட்டு குட்டிப்பசங்களைத் தூக்கிச்சென்று காடு கரை, கண்மாயெல்லாம் ஒளித்துவைத்து, வீட்டில் உள்ளவர்களைத் தேடி அலையவைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

வகுப்பில் வாத்தியார் என்ன கேள்வி கேட்டாலும், அரை மணி நேரம் கழித்து சாவகாசமாக ஹஸ்கி வாய்ஸில் ரிப்ளை கொடுப்பது இவரின் தனி ஸ்டைல்.

கூடப் படிக்கும் பசங்க இவரிடம், 'ஏன்டா?’ என்றால் 'எல்லாம்’ என்றும் 'என்னாச்சு?’ என்று கேட்டால், 'புரியல’ என்றும் சம்பந்தமே இல்லாமல் பேசிக் குழப்பியிருப்பார்.

டீச்சரை வழிமறித்து, 'மிஸ் நீங்க நல்ல மிஸ். நான் பாஸாவேன்னு நினைக்கலை. ஆனா ஃபெயிலாயிடுவேனோனு பயமா இருக்கு. யோசிச்சு மார்க் போடுங்க’னு சொல்லிவிட்டு ஓடியிருப்பார்.

நான் பிரதமரானால் கட்டுரைக்கு ஒரே வரியில் 'எல்லாம் செய்வேன்’ என எழுதி மடித்துக் கொடுத்ததற்காக, இம்போசிஷன் எழுதியிருப்பார்.

எக்ஸாமில் மேப் வரைவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இருந்திருக்க மாட்டார்கள். இந்தியா மேப் மட்டும் இல்லாமல் இலங்கை, பாகிஸ்தான் மேப்களையும் கூட இம்மி பிசகாமல் வரைவதில் கில்லாடியாக இருந்திருப்பார்.

பிடிக்காத ஃப்ரெண்டுங்களையெல்லாம் கருப்பு சாத்தான், குட்டிச் சாத்தான், குண்டு சாத்தான் எனப் பட்டப்பெயர்கள் வைத்தே அழைத்திருப்பார். ரயில், ஏரி, காடுகளில் டிராவல் பண்றதுனா, கொள்ளைப் பிரியமான இவருக்கு காஷ்மீர்தான் ஃபேவரைட் டூரிஸ்ட் ஸ்பாட்!

டுவிட்டரில் திறமையைக் காட்டப்போகும் - சினேகா!

தமிழ் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் இணைந்து, தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபலங்கள்தான் இன்னும் இந்த சமூக வலைத்தளத்தில் இணையாமல் உள்ளனர்.


இந்நிலையில், கடந்த 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்து டுவிட் செய்துள்ளார்.


அந்த டுவிட்டில், 'சினேகா டுவிட்டரில் இணைந்துள்ளார். இந்த உலகம் எவ்வளவு இனிமையானது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்’ என்று சினேகாவின் டுவிட்டர் முகவரியோடு குறிப்பிட்டு இருக்கிறார்.


சினேகாவின் டுவிட்டர் தளத்தில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இதுகுறித்து சினேகா கூறும்போது, ‘மிகக் குறுகிய நேரத்திலேயே இத்தனை பேர் என்னுடைய தளத்தை பின்தொடர்வார்கள் என்று நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கிடைத்த வரவேற்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். 

‘காதலன் யாரடி? - திரைவிமர்சனம்!

நடிகர் : சிவஜித்

நடிகை : சில்பா

இயக்குனர் : ராஜேஷ் க்ரவுன்

இசை : அஸ்வின் ஜான்சன்

ஓளிப்பதிவு : ராஜேஷ் க்ரவுன்


நாயகி மாயாவின் அம்மா அந்த மாவட்டத்தின் கலெக்டர். மாயா ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் சேது என்பவரும் படித்து வருகிறார். சேதுவும், நாயகன் சக்தியும் நண்பர்கள். சக்தி மெக்கானிக் ஷெட் நடத்தி வருகிறார்.

நாயகியின் அம்மா ஒருநாள் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்படுகிறார். இவருடைய சாவுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று போலீசும், பொதுமக்களும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த கொலையை செய்தது அந்த ஊரில் பிரபல ரவுடியாக இருக்கும் நாகாதான் என்பது நாயகிக்கு தெரிய வருகிறது.

அவனை பழிவாங்க தன்னுடன் படிக்கும் சேது மற்றும் அவரது நண்பன் சக்தியுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறாள். இதனிடையே, நாயகிக்கு, நாயகன் சக்தி மீது காதல் வந்துவிடுகிறது.

இறுதியில் நாயகி ரவுடி நாகாவை பழிவாங்கினாரா? நாயகனும், நாயகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் சிவஜித் வளர்ந்த தாடி, முரட்டுத்தனமான தோற்றத்துடன் மிரட்டுகிறார். ரவுடி கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தோற்றம் கொண்டவரை நாயகனாக நடிக்க வைத்து வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவருடைய நடிப்பு சரியில்லை. நாயகி ஷில்பா அழகாக இருக்கிறார். அழுகை, கோபம் எல்லாம் நன்றாக வருகிறது. காதல் காட்சிகளில்தான் நடிப்பு வரவில்லை. நாயகனின் நண்பனாக வருபவருடைய நடிப்பும் பேசும்படியாக இல்லை.

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு, இயக்கம் என ஒட்டுமொத்தத்தையும் கையில் எடுத்திருக்கும் ராஜேஷ் க்ரவுன், கதாபாத்திரங்கள் தேர்விலேயே கோட்டை விட்டு விட்டார். அதன்பிறகு கதையை எங்கே தேடுவது? ஒட்டுமொத்தமாக படத்தை சொதப்பியிருக்கிறார். அஸ்வின் ஜான்சன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை சொதப்பல்.

மொத்தத்தில் ‘காதலன் யாரடி?’ தேடத்தான் வேண்டும்.