குழந்தைகள் இல்லை' என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சையில் அறிவியலும், ஆராய்ச்சியும் பெரும் பங்காற்றி வருகின்றன.
பல நவீன சிகிச்சை முறைகள் இப்போது உள்ளன. 1990-இல் குழந்தையின்மை சிகிச்சையில் 10 சதவீதம் வெற்றி கிடைத்தது. இப்போது குழந்தையின்மைக்கு மிகச் சிறு காரணமாக இருந்தாலும் அது எது என்று கண்டறிந்து தனித்தனி சிகிச்சையளிக்க முடியும்.
ஸ்கேனில் 3ஈ, 4ஈ டாப்லர் (ரத்த ஒட்டம் பார்ப்பது) ஆகிய நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பப் பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை ஹிஸ்டீரோ சால்பின்கோக்ராம் (Hystero Salphingogram) என்னும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர் கோர்த்தல் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கலாம்.
ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறையில் மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம். நுட்பமான முறையில் விந்தின் குறைகளைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கின்றன.
மருந்துகள் மூலமும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப்பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார்க் கட்டிகள், நீர்க் கட்டிகள், ரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவற்றை ஸ்கேனில் 3ஈ லாப்ராஸ்கோப்பி, ஹிஸ்ட்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சையளித்து முழுமையாகக் குணப்படுத்தலாம்.
3ஈ லாப்ரோஸ்கோப்பி முதல் முறையாக சென்னையில் பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில்தான் உபயோகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மிக நுட்பமாக அறுவை சிகிச்சை செய்வதால் ரத்தக் கசிவு குறைவாக உள்ளது. கட்டிகளை எடுத்த பின் தையல் போட்டு அதை சாதாரண நிலைக்கு எடுத்து வருவதால், கர்ப்பம் அடையும் வாய்ப்பும் கர்ப்பத்தில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உபயோகமாக இருக்கிறது. 3ஈ விஞ்ஞானத்தின் மகிமை இது என்று கூறலாம்.
இவ்வாறு நவீன அறுவை சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவீதம் பேருக்கும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும். மீதமுள்ள 10 சதவீத பெண்களுக்கு கருப்பையில் விந்து செலுத்துதல் (IUI) அல்லது டெஸ்ட்டியூப் பேபி (ஐவிஎஃப் அல்லது இக்ஸி) விந்தை முட்டையில் செலுத்துதல் முறை தேவைப்படுகிறது. ஐமஐ ஆறுமுறை தோல்வி அடைந்தால் ICSIமுறைக்கு மாறுவது நல்ல பயனை அளிக்கும்.
1990-ஆம் ஆண்டு ஐவிஎஃப் முறையில் 8-10 சதவீத பெண்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான முறைகளினால் 60-85 சதவீதம் வரை கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். நவீன கருவிகளையும் முறைகளையும் உபயோகிப்பதே இந்த மகத்தான வெற்றிக்கு காரணம்.
IVF லேப்பில் ஹ்யுமிடிக்ரிப் என்னும் முட்டையையும், கருவையும் நம் உடலில் இருக்கும் வெப்ப நிலை, ஆக்சிஜன் போன்ற வாயுக்களையும் நம் உடலில் இருக்கும் நிலை ஆகியவற்றுடன் வைக்க உதவுவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதைத் தவிர, லேசர் கணினி உபயோகிப்பதால் 38 வயது தாண்டியவர்களுக்கும் பலமுறை தோல்வி அடைந்தவர்களுக்கும் கார்ப்பமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 5வது நாள்கருவை (பிளாஸ்டோசிஸ்ட்) கர்ப்பபையில் செலுத்துவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்து, கர்ப்பப்பை இவை மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன.
எல்லோருக்கும் எவ்வளவு வயதானாலும் அவர்களுடைய முட்டைதான் வேண்டும் என்று நினைப்பது சகஜம். இன்றைய மருத்துகளும் உபயோகிக்கும் முறையில் உள்ள முன்னேற்றங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. "ஐவிஎஃப் லைட் ப்ரோட்டாக்கால்' என்ற முறையைக் கடைப்பிடித்து பிறகு 42 வயது வரை உள்ள பெண்களுக்கு தன்னுடைய முட்டையை உபயோகித்து கரு உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
விந்தணு தரத்தை அதிகரிக்க மருந்துகளும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சையும் உள்ளன. இதைத் தவிர, மிகவும் அதிநவீன (ஐ.எம்.எஸ்.ஐ) முறையினால் விந்தணுவை கணினி (கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் இமேஜ்) மூலம் 7000 மடங்கு பெரிதாக பார்த்து மிகவும் சிறப்பான விந்தை தேர்வு செய்யலாம்.
சிறப்பான கருவை உருவாக்கி அதில் மிகவும் சிறப்பான கருவை தேர்ந்தெடுப்பது எப்படி? எம்ப்ரியோஸ்கோப் என்பது மிகவும் அதிநவீன கருவி. இந்த இன்குபேட்டரில் கருவை பாதுகாப்பாக வைக்கிறோம். இதில் கேமரா உள்ளதால் கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிஷமும் பதிவு செய்ய முடியும். இதனால் வளர்ச்சியில் குறை இருந்தால் அதைக் கண்டுபிடித்து கருப்பையில் செலுத்தும் முன் சிறந்த கருவை தேர்ந்தெடுக்க முடிகிறது. இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பை 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.
கர்ப்பப் பையின் உட்புறச் சுவரின் ஒட்டும் தன்மையை அதிகரிப்பதற்கு எம்ப்ரியோக்ளு எனும் பசை உள்ளது. இதைத் தவிர, ஹிஸ்டெரோஸ்கோப்பி மூலம் கர்ப்பப்பையின் உள் பகுதியை நோக்கி ஸ்கிராட்ச் டெஸ்ட் மூலம் சிறு அளவில் சதையை சுரண்டி எடுப்பதால் வளர்ச்சிக் காரணிகள் அதிகரித்து கரு கருப்பையில் ஒட்டி வளருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை அனுபவத்தால் கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு விந்து, கரு, கருப்பை ஆகியவைகளின் ஆரோக்கியம் நவீன சிகிச்சை முறைகளாலும் நவீன சாதனங்களாலும் சிறப்பாக்கப்படுவதால் கர்ப்பமாகும் வாய்ப்பு 10-20 சதவீதம் அதிகரிக்கிறது. கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு 10 சதவீதம் குறைகிறது.
பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரையாகக் கூற வேண்டுமானால் திருமணம் ஆன ஓர் ஆண்டுக்குள் கர்ப்பம் அடையவில்லையென்றால், மருத்துவரை அணுகலாம். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்யத்தில் சிக்கல் இருந்தாலும் மருத்துவரை அணுகலாம். முக்கியமாக 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.