Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 21 February 2014

“அந்தக் கால வண்ணான் ‘வெளுத்ததும்’ இப்போது நாம் ‘வாஷ்’ பண்ணுவதும்” ஒரு சுவாரசியமான பார்வை !!

“அந்தக் கால வண்ணான் ‘வெளுத்ததும்’ இப்போது நாம் ‘வாஷ்’ பண்ணுவதும்” ஒரு சுவாரசியமான பார்வை !!

அந்தக் காலத்தில் சில நாட்களுக்கு ஒருமுறை வண்ணான் வீடு வீடாக வந்து ‘அழுக்கு’ எடுத்துக்கொண்டு போவான். துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி, கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ, கால்வாய்க்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவான். சவக்காரம் போட்டு, வெள்ளாவி வைத்து வெளுத்து, வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி, வெயிலில் காயப்போட்டு, எல்லா துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதைமேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவான்.

அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை அவற்றில் தான் சோரங்கொட்டை சாற்றால் தயாரித்த ‘வண்ணான் மை’யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து (ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ் நடத்தலாம்) தனித் தனியாக பிரித்து, இஸ்திரி போட்டு, கட்டி, வீடுகளுக்குப் போய் கொடுப்பான். இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள், சிலர் தானியம் கொடுப்பார்கள், இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல், சோளம், பயறு வகைகளை கொடுப்பார்கள்.

அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள், கொலை செய்யப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண, அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது.

இதில் இப்போது ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள்:

முதலாவது, சலவை தொழில் செய்பவரை சிறுவர் சிறுமியர் உட்பட அனைவரும் ‘அவன்’ ‘இவன்’ என்று ஒருமையில் பேசுவது மாறிவிட்டது.

கழுதைக்குப் பதிலாக டிவிஎஸ் போன்ற மொபெட்கள் உபயோகத்திற்கு வந்துள்ளன. இதனால் இப்போது தெருக்களில் கழுதை நடமாட்டமும் குறைவு.

வீட்டிற்கு வந்து ‘அழுக்கு’ எடுத்துக்கொண்டு போவது நின்றுவிட்டது.

வீடுகளில் ‘வண்ணான் கணக்கு’ எழுதுவதற்கென்றே வைத்திருக்கும் பழைய நோட்டு இப்போது யார் வீட்டிலும் இல்லை.

ஊருக்கு ஊர் லான்டிரிகள் (சலவை கடைகள்) வந்துவிட்டன. நாமே போய் நம் துணியை வெளுப்பதற்காக அங்கு கொடுத்துவிட்டு வருகிறோம். லான்டரிக் கடைக்காரர் கொடுக்கும் சீட்டை பத்திரமாக வைத்திருந்து, இரண்டு அல்லது மூன்று நாளைக்குப் பின் போய் அதைக் கொடுத்து வெளுத்த துணியை வாங்கிக்கொண்டு வருவதும் நாம்தான்.

உடைகளில் ‘வண்ணான் குறி’ எதுவும் இப்போது கிடையாது. அதற்குப் பதிலாக லான்டிரிகாரர் நமக்குத் தந்த சீட்டில் இருக்கும் நம்பரை ஒரு சிறிய அட்டையில் அல்லது துணித் துண்டில் எழுதி அதை நம் துணியில் டேக்-ஆக‌ நூலால் கட்டி விடுகிறார்.

தெருவுக்குத் தெரு ‘அயரன்’ போட்டுத் தரும் கடைகள், தள்ளு வண்டிகள் வந்துவிட்டன. துணிகளை வீட்டில் துவைத்து, காய்ந்த பின் அங்கு கொடுத்து ‘தேய்த்து’ வாங்கிக் கொள்ளுவது பலருக்கு வழக்கமாகிவிட்டது.

வீட்டிலேயே துவைத்த துணியை தாமே அயர்ன் பண்ணிக்கொள்ளும் பழக்கமும் இப்போது மிக அதிகமாகிவிட்டது.

வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு. புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்த துணியை உடுத்திருக்கும்போதும் கிடைக்கும். இப்போது இதை இழந்துவிட்டோம்.

‘வெளுப்பது’ என்ற வார்த்தையே இப்போது புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டது. தாமே துவைப்பவர்கள் ‘துவைப்பது’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். இதுவும் மறைந்து இப்போது ‘வாஷ்’ பண்ணினேன் என்று சொல்லுவது பரவலாக ஆகிவிட்டது.

ஹேராம் உள்பட 4 படங்களில் நடித்தார், வாலி!

ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்'' உள்பட 4 படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் நடித்த படங்களுக்கும், அந்தக் காலகட்டத்தில் உருவான மற்ற படங்களுக்கும் இரவு - பகலாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தபோது, படங்களில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை வாலி ஏற்கவில்லை.

பிற்காலத்தில், நண்பர்களின் அழைப்பின் பேரில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

கே.பாலசந்தர் இயக்கிய "பொய்க்கால் குதிரை'', கமலஹாசனின் "ஹேராம்'', "சத்யா'', "பார்த்தாலே பரவசம்'' ஆகிய 4 படங்களில் நடித்ததுடன், "கையளவு மனசு'', "அண்ணி'' ஆகிய டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்.

ஏராளமான கவிதை நூல்கள் எழுதியிருப்பதுடன், "அவதாரபுருஷன்'' (ராமாயணம்), "பாண்டவர் பூமி'' (மகாபாரதம்), ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.

"நானும் இந்த நூற்றாண்டும்'' என்ற தலைப்பில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார்.

1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.

அப்போது "ஒளிவிளக்கு'' படத்தில் வாலி எழுதியிருந்த "இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'' என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.

இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

"எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன்.

"உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை'' என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.

என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் அண்ணியாரிடம், "அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்'' என்று சொன்னேன்.''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் 10 ஆயிரத்துக்கு மேல். அவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏறத்தாழ 3 ஆயிரம் பாடல்களுக்கும், இளையராஜா சுமார் 3 ஆயிரம் பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.

வாலியின் பாடல்களில் பி.சுசீலா பாடியவை சுமார் 1,500. டி.எம்.சவுந்தரராஜன் பாடியவை ஏறத்தாழ 700.

"திரை உலகில் நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். இதுவரை வெளிவந்துள்ள படங்களில் உங்களுக்குப் பிடித்த 20 படங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

"அந்தக் காலத்துப் படங்களில், பாகவதர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது "சிவகவி.'' இதைவிட நீண்ட காலம் ஓடிய படம் "ஹரிதாஸ்'' என்றாலும், சகல அம்சங்களிலும் சிறப்பான படம் "சிவகவி.''

பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் என்னைக் கவர்ந்தது "குபேர குசேலா.''

சில ஆண்டுகளுக்கு முன் கமலஹாசன் நடித்த "கல்யாணராமன்'' படத்தை இன்றைய தலைமுறையினர் பலர் பார்த்திருப்பார்கள். இதே கதை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "இது நிஜமா'' என்ற பெயரில் வெளிவந்தது. எஸ்.பாலசந்தர் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார். நான் மிகவும் ரசித்த படம் அது.

1947-ல் வெளிவந்த "ஏவி.எம்'' தயாரித்த "நாம் இருவர்'', கே.சுப்பிரமணியம் தயாரித்த "தியாகபூமி'', ஜெமினியின் "நந்தனார்'', "அவ்வையார்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

என் மனதில் இடம் பெற்ற சிறந்த படங்களின் பட்டியலில் உள்ள மற்ற படங்கள்:-

மந்திரிகுமாரி, மனோகரா, நாடோடி மன்னன், பெற்றால்தான் பிள்ளையா, உலகம் சுற்றும் வாலிபன், தில்லானா மோகனாம்பாள், வியட்னாம் வீடு, அபூர்வ சகோதரர்கள் (கமல்), நாயகன், இருகோடுகள், புவனா ஒரு கேள்விக்குறி, அந்த 7 நாட்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்.''

இவ்வாறு வாலி கூறினார்.

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை 4 முறை பெற்றவர் வாலி.

1972-ல் "கலைமாமணி'' விருது பெற்றார்.

"கலை வித்தகர்'' என்பதற்கான தமிழக அரசின் பாரதிதாசன் விருது, தமிழக அரசின் பாரதி விருது (ரூ.1 லட்சம்) முரசொலி அறக்கட்டளை விருது (ரூ.1 லட்சம்), ஆழ்வார் மையத்தின் தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது (ரூ.25,000) முதலான விருதுகள் கிடைத்துள்ளன.

இவர் கதை - வசனம் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே'' படம், மத்திய அரசின் விருது பெற்றது.

வாலி -திலகம் தம்பதிகளுக்கு ஒரே மகன் வி.பாலாஜி. "எம்.ஏ'' பொருளாதாரம் படித்தவர். சொந்த தொழில் செய்கிறார்.

தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை திரையில் ஒலித்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனக்குப் பிடித்த 20 பாடல்களை வாலி கூறுகிறார். (தான் எழுதிய பாடல்களை அவர் தவிர்த்துள்ளார்.)

1. வள்ளலைப் பாடும் வாயால்...

(படம்: `சிவகவி' பாடியவர்: பாகவதர் பாடலாசிரியர்: பாபநாசம் சிவன் இசை: ஜி.ராமநாதன்)

2. மானமெல்லாம் போனபின்னே...

(`கண்ணகி' பி.யு.சின்னப்பா உடுமலை நாராயணகவி எஸ்.வி.வெங்கட்ராமன்)

3. காற்றினிலே வரும் கீதம்...

(`மீரா' எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்கி எஸ்.வி.வெங்கட்ராமன்)

4. வெண்ணிலாவே...

(`அவ்வையார்' கே.பி.சுந்தராம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வரராவ்)

5. சிந்தையறிந்து வாடி...

(`ஸ்ரீவள்ளி' பி.ஏ.பெரியநாயகி பாபநாசம் சிவன் சுதர்சனம்)

6. இந்த உலகில் இருக்கும் மாந்தரில்...

(`கஞ்சன்' எம்.எம்.மாரியப்பா அய்யா முத்து எஸ்.எம்.சுப்பையா நாயுடு)

7. வாழ்க்கை என்னும் ஓடம்...

(`பூம்புகார்' கே.பி.சுந்தராம்பாள் கலைஞர் மு.கருணாநிதி சுதர்சனம்)

8. அருள் தரும் தேவமாதாவே...

(`ஞானசவுந்தரி' பி.ஏ.பெரியநாயகி கம்பதாசன் எஸ்.வி.வெங்கட்ராமன்)

9. ஆடல் காணீரோ!...

(`மதுரை வீரன்' எம்.எல்.வசந்தகுமாரி உடுமலை நாராயணகவி ஜி.ராமநாதன்)

10. மணப்பாறை மாடு கட்டி...

(`மக்களைப் பெற்ற மகராசி' டி.எம்.சவுந்தரராஜன் மருதகாசி கே.வி.மகாதேவன்)

11. துணிந்தபின் மனமே...

(`தேவதாஸ்' கண்டசாலா கே.டி.சந்தானம் சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன்)

12. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்...

(`நான் பெற்ற செல்வம்' டி.எம்.சவுந்தரராஜன் கா.மு.ஷெரீப் ஜி.ராமநாதன்)

13. மயக்கமா, கலக்கமா?...

(`சுமைதாங்கி' பி.பி.சீனிவாஸ் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)

14. சோதனை மேல் சோதனை...

(`தங்கப்பதக்கம்' டி.எம்.சவுந்தரராஜன் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)

15. நான் ஒரு சிந்து...

(`சிந்துபைரவி' சித்ராறீ வைரமுத்து இளையராஜா)

16. வசந்த கால கோலங்கள்...

(`தீபம்' எஸ்.ஜானகி கண்ணதாசன் இளையராஜா)

17. சின்னச்சின்ன ஆசை...

(`ரோஜா' மின்மினி வைரமுத்து ஏ.ஆர்.ரகுமான்)

18. ஆயிரம் நிலவே வா...

(`அடிமைப்பெண்' எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுசீலா புலமைப்பித்தன் கே.வி.மகாதேவன்)

19. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...

(`கந்தன் கருணை' சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன்)

20. அன்புக்கு நான் அடிமை... 

அரண்மனையில் சுவாரசியமான ஒரு போட்டி!

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் மற்றும் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலா ம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.

அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!

ரோபோ - எந்திரன் வரலாறு.!

ரோபோ - எந்திரன் வரலாறு.!

“ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.

கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், காலம் காலமாக மனிதர்கள் ரோபோக்களை உருவாக்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அல் சசாரி என்றவர் நிறைய “ஆட்டோமேட்டான்”களை வடிவமைத்திருக்கிறார். தானாகவே இயங்கக்கூடிய எந்தக் கருவியையும் ஆட்டொமேட்டான் என்று கூறலாம்.

சரி.. ரோபோட்டுகளுக்கும் இவைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஆட்டொமேட்டான்களுக்கு பேட்டரி தேவையில்லை, அவைகள் சின்னச் சின்ன மெக்கானிகல் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அலிபாபாவின் குகையை (அடியில் அடிமைகள் இல்லையென்று வைத்துக்கொள்வோம்!) யாரேனும் தொட்டவுடன் அது திறந்துகொண்டால் எப்படியிருக்கும்? அதுதான் ஆட்டொமேட்டான். மின்சார்ந்த ஆட்டொமேட்டான்களை இன்று ரோபோ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம்.

ரோபோ என்றால் என்னவென்ன்று கேட்டதற்கு ஜோசஃப் எங்கெல்பர்கர் சொல்கிறார், “ரோபோ என்றால் என்னவென்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது. ஆனால், ஒரு ரோபோவை நான் பார்த்தால், இது ஒரு ரோபோ என்று அடையாளம் கண்டுகொள்ளத் தெரியும்!”

அவர் சொல்வது சரியே. விதவிதமான வேலைகளைச் செய்வதற்காக ரோபோக்களைப் பிரயோகிப்பதால், அவையனைத்தையும் ஒரு சொல்லில் விளக்குவது சிரமமாகிறது.

மனிதனை ஒத்த உருவத்துடன்ன் இருந்தால்தான் அதற்குப் பெயர் ரோபோ என்பது தவறு. தொழிற்சாலைகளில் நிறைய ரோபோக்களைக் காண முடியும். கார் தயாரிக்கும் இடங்களில் பெரிய பெரிய கைகள் (கைகள் மட்டுமே!) உடைய ரோபோக்களைப் பார்க்கலாம் (“மைனாரிடி ரிபோர்ட்” திரைப்படம் பார்க்க!).

ஐரோபோ என்றொரு கம்பெனி வீடுகளை சுத்தம் செய்வதற்கு “ரூம்பா” என்றொரு ரோபோவைத் தயாரித்து விற்று வருகிறது. அதன் விலை, கிட்டத்தட்ட பதினாறாயிரம் ரூபாய். யுத்தங்களில் வேவு பார்ப்பதற்கும், சுடுவதற்கும்கூட ரோபோக்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நூறு ரோபோக்களில் நாற்பது ஜப்பானில் தான் தயாராகின்றன. மனிதர்களை உரித்து வைத்தாற்போல ரோபோக்களைத் தயாரிக்கிறார்கள். மிட்சுபிஷி என்றொரு பிரபல கம்பெனி, “இனி மனிதர்களும் ரோபோக்களும் ஒருவரோடு ஒருவர் ஒன்று வாழும் காலம் பக்கம்தான்!” என்று சொல்கிறது.

பாம்பய் - பிரம்மாண்ட திரைவிமர்சனம்!

ரோம பேரரசால் தன் குடும்பம் முழுமையாக அழிக்கப்பட்டு சிறுவயதிலேயே அடிமையாக கொண்டு வரப்படுகிறார் நாயகன் ஹாரிங்டன். அங்கு கிளாடியேட்டர் வீரனாக அவர் வளருகிறார்.

ரோம பேரரசு பாம்பய் என்ற புதிய நகரத்தை உருவாக்குகிறது. அந்த நகரத்துக்கு அடிமை வீரனாக ஹாரிங்டன் அழைத்து வரப்படுகிறார். அவரின் திறமையால் கவரப்பட்டு கதாநாயகனை விரும்புகிறார் நாயகி எமிலி. பாம்பய் நகரத்தின் நிர்வாகியின் மகளான அவளை ரோம பேரரசின் தளபதி அடைய நினைக்கிறார். அதனால் தளபதி கதாநாயகனை கொல்ல நினைக்கிறார்.

கொலோசியம் மைதானத்தில் அடிமை வீரர்கள் சண்டையில் நாயகனை கொல்ல முயற்சிக்கும் போது நகரத்தின் அருகாமையில் இருக்கும் எரிமலை வெடித்து நகரம் அழிகிறது. அந்த அழிவிலிருந்து கதாநாயகன் நாயகியை காப்பற்றினானா? என்பதே முடிவு.

கதாநாயகன் கிட் ஹாரிங்டன் (Kit Harington) நிஜமாகவே கிளாடியேட்டர் வீரன் போல் உடல் தகுதியோடு இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் இறுதியில் கதாநாயகியை காப்பாற்ற முயற்சிக்கிற காட்சியிலும் நம் கவனத்தை அவர் மீது படும்படியே சிறப்பாக செய்திருக்கிறார்.

கதாநாயகியாக வரும் எமிலி ப்ரொவ்னிங்க் (Emily Browning) அழகாக இருக்கிறார். அதைத் தவிர படத்தில் அவருக்கு ஏதும் வாய்ப்பு இல்லை. கதாநாயகனின் நண்பராக வரும் அடிமை வீரர் அக்பஜே மிரட்டலாக இருக்கிறார்.

கதாநாயகனுக்கு அடுத்து அவரே படத்தில் நம் மனதில் நிற்கிறார். படத்தின் பிரமாண்ட காட்சிகள், எரிமலை வெடிக்கும் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. நகரம் அழியும் காட்சிகளில் விஷுவல் எபெக்ட் குழு கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கிளிண்டன் இசை படத்தை மேலும் பிரமாண்டமாக்கி காட்டுகிறது.

கொலோசியம் மைதானத்தில் அடிமை வீரர்களும் ரோம படையும் சண்டையிடும் காட்சியில் பின்னணி இசை நம்மையும் உற்சாகமாக்கி கைதட்ட வைக்கிறது. பாம்பய் நகரத்தை டாப் ஆங்கிளில் காட்டும் காட்சிகளில் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.

இறுதி காட்சிகளில் எடிட்டிங் செய்யப்பட்ட விதம் படத்தோடு ஒன்ற வைக்கிறது. முதலிலேயே எரிமலை வெடிக்க போகிறது என்று தெரிந்து விடுவதால் படத்தின் முடிவு இப்படிதான் இருக்கும் என்று கணிக்க முடிவது படத்தின் பலவீனம்.

எரிமலை வெடித்து சிதறும் காட்சிகளில் கதாநாயகன், நாயகி பாதிப்பு இல்லாமல் ஓடிவருவது என்னதான் ஹாலிவுட் பிரமாண்டம் என்றாலும் நம்பக தன்மையை குறைக்க வைக்கிறது.

முதுகுவலிக்கு முதலுதவி இருக்கு...!

முதுகு வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. ஏதேனும் விபத்து மூலமாகவும் விளையாடும் போதும் கீழே விழுதல், அதிக எடையுள்ள பொருட்களைத் முதுகில் தூக்குதல் அல்லது தோள்பட்டையில் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குதல் மேலும் உடற்பருமன் போன்ற காரணங்களால் முதுகு வலி வருவதுண்டு. மேலும் அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, உட்காருவது, தவறான நிலையில் உட்காருதல், நடத்தல் அல்லது படுத்தல், முதுகை வளைத்து உட்காருதல், தவறான முறையில் சுமை தூக்குதல் போன்ற காரணங்களாலும் முதுகுவலி வருவதுண்டு.

முதுகு வலி வந்ததும் சில நாட்களுக்கு முதுகுக்கு ஓய்வு தரவும். முதுகுக்கு சுமை தரக்கூடிய வேலைகளை செய்யக்கூடாது.

முதுகு வலியை குணப்படுத்த வெறும் தரையில் மல்லாக்கப் படுத்து, முழங்கால் மற்றும் மூட்டுகளைச் சற்று மடக்கி, பாதங்களைச் சற்று உயர்த்தி வைத்துக் கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் முதுகு வலி குணமாகும்.

ஐஸ் கட்டியைப் பிளாஸ்டிக் பையில் போட்டு, அந்தப் பையால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் தரலாம். பொருள்களை இழுப்பது, தள்ளுவது தூக்குவது கூடாது. அடிக்கடி குனிதல் கூடாது.

ஒவ்வொருமுறையும் 15 நிமிடங்களுக்குக் குறையாமல் ஐஸ்கட்டி ஒத்தடம் தரலாம்.. இப்படி 3 மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நாட்களுக்குத் தரலாம். வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம். வலிநிவாரணி களிம்பை வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீர் ஒத்தடம் தரலாம்.

முதுகுவலி நீடிக்குமானால், மருத்துவர் உதவியை நாடவும். முதுகுப்பிடிப்பை எடுக்க முயலாதீர்கள். முதுகுப்பிடிப்பைத் தவறாக எடுத்துவிடும்போது கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நடப்பதில் சிரமம் உண்டாகும்.

முதுகுவலி குறைந்த பின்னர், முதுகுத் தசைகளுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். வயிற்றுத் தசைகளுக்கும் கால் தசைகளுக்கும் சேர்த்து உடற்பயிற்சிகள் செய்வது மிக நல்லது. முறையான யோகாசனப் பயிற்சிகளும் உதவும்.

அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதா?

அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி..

ஈரமான கூந்தல்

காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

வாசனை திரவியங்கள்

உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

கம்ப்யூட்டர் திரை/தொலைக்காட்சி திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

படுக்கையில் படித்தல்

படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்கள்

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

ஆல்கஹால்

ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

சரியான தூக்கம்

தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நீண்ட தூர பயணம்

பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.

குறட்டையை நிறுத்த வழி இருக்கு !

இந்த வேலை சீராக நடந்துகொண்டு இருந்தால்தான் நாம் ‘இருக்கிறோம்’ என்று அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான காற்று, நம் உடலுக்குள் ஊடுருவி உலாவுவதும் பின் வெளிவருவதும் மிகமிக சிக்கலான - லாவகமான தொழில்நுட்பம். உணவின்றி, நீரின்றி சில பல நாட்கள் வரை வாழலாம். காற்றின்றி சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்க முடியுமா? மனித உடலில் காற்றைக் கையாள்வது நுரையீரலே. காற்றின் உதவியோடு ரத்தத்தைச் சுத்திகரித்து அனுப்பும் நுரையீரலின் ஆரோக்கியமும் சுவாசப் பிரச்னைகளுக்குத் தீர்வு!

ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸோடு நாம் அம்மாவின் வயிற்றிலிருந்து பிறக்கிறோம். அவற்றில் முதன்முதலாக இயங்கத் தொடங்குபவை சுவாச உறுப்புகள்தான். அதுவரையில் தாயிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை தொப்புள் கொடி மூலமாகப் பெற்று வந்த குழந்தை, தானே சுயமாக மூக்கு வழியே சுவாசித்து, நுரையீரலால் ரத்தத்தை சுத்திகரிக்கத் தொடங்கும்போதுதான் அது தனி மனிதனாகிறது.

உள்ளே நுழைவது ஒரே காற்றுதான். அதில் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, அவசியமானது, வெளியேற்றப்பட வேண்டியது எனப் பிரித்துப் போட்டு வேலை பார்க்கிறது நம் நுரையீரல். மூக்கில் காற்று நுழைந்தவுடன் அங்குள்ள ரத்தத் தந்துகிகள் காற்றிலுள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி, கார்பன் டை ஆக்ஸைடு போன்ற மாசுகளை வெளியேற்றுகின்றன. காற்று உள்ளே நுழைகிற பாதை, மற்றும் மாசுகள் வெளியேறுகிற பாதை என அந்த இருவழிப்பாதை சீராக இருக்க வேண்டியது அவசியம். அது பாதிப்புக்கு உள்ளாகிறபோதே மூக்கடைப்பு ஏற்படுகிறது. சுவாசப் பாதையில் ஏற்படும் இந்தத் தொற்று, நாள்பட்ட பாதிப்பாகி நுரையீரலை அடையும்போது ஆஸ்துமாவாக மாறுகிறது.

சுவாசக் கோளாறுகள் பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுவது சகஜம். வெளிக்காற்றில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் திறன் குழந்தைகளிடம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் மோதிரத்தால் தேனைத் தொட்டு நாக்கில் தடவும் பழக்கம் இருந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீருக்குள் தள்ளி விட்டால்தான் நீச்சல் வரும் என்பது போல, பாக்டீரியாக்களை அறிமுகம் செய்தே நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் முறை இது. வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் தேனுடன் சேர்ந்து பல்கிப் பெருகி குழந்தையின் ரத்தத்தில் கலக்கும்போது, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டிவிடப் படுகிறது.

அந்நியர்களை எதிர்க்கும் படைவீரர்கள் போல இந்த சக்தி அணிவகுத்து நிற்கிறது. இப்படி அடிக்கடி வெளிக்கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், அவற்றுக்கு உடல் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளே குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வீரியம் மிகுந்ததாக ஆக்குகிறது. இப்படி அடிக்கடி என்ட்ரி கொடுக்கும் கிருமிகளை ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ என்றே சொல்லலாம். அவைதானே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் காரணம்! இன்றோ, பிறந்தவுடனேயே ஆன்டிபயாடிக் மருந்துகளைச் செலுத்துவதால் இந்த ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ அழிக்கப்பட்டு விடுகின்றன. விளைவு... சளி, இருமல், ஜுரம் என்று அடிக்கடி அவதிப்படுவதுதான்.

இதைத் தடுக்க குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை பலமாக்க வேண்டியது அவசியம். எதிர்ப்பு சக்தி இல்லாத மனிதர்கள் எறும்புக்கடிக்குக் கூட பயந்துதான் ஆக வேண்டும். நம் முன்னோர்கள் இயற்கையோடு கை குலுக்கி வாழ்ந்த வாழ்க்கைக்குக் காரணம் அவர்களின் மிதமிஞ்சிய எதிர்ப்பு சக்திதான். நம் உடலில் எதிர்ப்பு சக்திக்காகவே இயங்கும் ‘நல்ல’ உறுப்பு ஒன்று உண்டு. தைமஸ் சுரப்பி என்பார்கள் அதை. நோய்க்கிருமிகள் என்னும் தீவிரவாதிகளுக்கு எதிராக வெள்ளையணுக்களை அனுப்பி போர் செய்யும் கேப்டன் இந்த தைமஸ்தான்.

24 மணிநேரமும் இடை விடாமல் வெளிக்காற்றை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் நுரையீரலுக்குத்தானே கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம். அதை உணர்ந்துதானோ என்னவோ இயற்கையே இந்த தைமஸ் கேப்டனை நுரையீரலுக்கு அருகே அமைத்துள்ளது. இந்த தைமஸ் சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறது அக்கு மருத்துவம். பிற்காலத்தில் ஆஸ்துமா தாக்காத வண்ணம் இன்றைக்கே நம் குழந்தைகளிடம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும் முறை இது.

குழந்தைகளின் உள்ளங்கை, உள்ளங்கால்களில் நடு விரல் மற்றும் மோதிர விரல்களுக்குக் கீழே உள்ள அக்கு புள்ளிகள், தைமஸ் சுரப்பியைத் தூண்டக் கூடியவை. இந்தப் புள்ளிகளில் தினமும் லேசான அழுத்தம் கொடுத்துவந்தால், பின்னாளில் ஆஸ்துமா தொல்லை ஏற் படாமல் நம் குழந்தைகளை முழுவதுமாகக் காக்கலாம். ஏற்கனவே ஆஸ்துமாவால் அவதிப்படுகிற பெரியவர்களுக்கு உள்ளங்கையிலுள்ள நுரையீரல் புள்ளிகளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால், கொஞ்ச நாளில் காணாமல் போகும் பிரச்னை.

சுவாசம் தொடர்பான மற்றொரு பரவலான பிரச்னை, குறட்டை. கணவர் குறட்டை விடுகிறார் என்பதற்காக மனைவி விவாகரத்து வாங்குவதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது. நுரையீரலின் இயக்க சக்தி குறைவதே குறட்டைக்கான முக்கியக் காரணம். அக்குபிரஷரில் நிமிடங்களில் குறட்டையை நிறுத்தி விடலாம். குறட்டை விடுபவர் தூங்கும்போது அவருடைய மூக்கின் கீழுள்ள அக்குப் புள்ளியை லேசாக அழுத்தினால் போதும்... சட்டென நிற்கும் குறட்டை. தொடர்ச்சியாக இப்படிச் செய்து வந்தால் நிரந்தரமாகவே குறட்டையை விரட்டி விடலாம்!

பெண்களின் கருவுறுதலை அதிகரிக்க செய்யும் விடயங்கள்!

இன்றைய காலத்தில் நிறைய பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. அதிலும் அவ்வாறு கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்பட்டால், தம்பதிகளுக்குள் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதற்காக எத்தனையோ சிகிச்சைகள் இருந்தாலும், சில நேரங்களில் அவை சரியான பலனைத் தருவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

அக்காலத்தில் உள்ள பெண்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சந்தோஷமான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய பெண்கள் உண்ணும் உணவில் எந்த ஒரு சத்துக்களும் இல்லாமல், வரக்கூடாத வியாதிகள் அனைத்தும் வந்து, உடலில் குடிபுகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஃபேஷன் என்ற பெயரில் வாழ்க்கை முறை கூட மாறிவிட்டன. எனவே இத்தகைய காரணங்களால் பெண்களின் கருவுறுதலில் பிரச்சனைகள் எழுகின்றன.

ஆகவே அந்த பிரச்சனைகளுக்காக சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருவுறுதலை அதிகரிக்கும் ஒருசில இயற்கை வழிகளையும் மேற்கொண்டு பார்க்கலாம் அல்லவா? சரி, அது என்ன வழிகள் என்று பார்ப்போமா!!!

ஊட்டச்சத்துள்ள உணவுகள்

பெண்களுக்கு கருவுறுதலை அதிகரிக்க நல்ல ஆரோக்கியத்தை தரும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அந்த உணவுகளான சோயா பொருட்கள், முட்டை மஞ்சள் கரு, உருளைக்கிழங்கு, கோதுமை, முட்டைகோஸ், பீட்ரூட், வாழைப்பழம், ப்ராக்கோலி மற்றும் முளைக்கட்டிய பயிர் போன்றவற்றை சாப்பிட்டால், இனப்பெருக்க மண்டலம் நன்கு செயல்பட்டு, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.

மன அழுத்தத்தை தவிர்த்தல்

மன அழுத்தம் கூட கருவுறுதலுக்கு ஒருவித தடையை ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை தவிர்க்க, அடிக்கடி யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும். இவை கூட விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும்.

உடல் எடையை கவனித்தல்

உடல் எடை எப்போதும் சரியாக இருக்க வேண்டும். அதாவது அதிக குண்டாகவோ அல்லது உடலுக்கு வேண்டிய எடை இல்லாமலோ இருந்தாலும், கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும். ஆகவே சரியான எடையைப் பெறுவதற்கு வேண்டிய டயட்டை மேற்கொண்டு, பின் சரியான எடை இருந்தும் கர்ப்பம் ஆவதில் பிரச்சனை இருந்தால், பின்னர் மருத்துவரை அணுகி அவரிடம் சரியான விடையை பெற்றுக் கொண்டு செயல்படுங்கள்.


ஆரோக்கியமான காதல் வாழ்க்கை

உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் சரியான காதல் வாழ்க்கை இல்லையென்றாலும் கர்ப்பமாக முடியாது. ஏனெனில் இன்றைய அவசர உலகில் அனைத்துமே அவசரமாகத் தான் நடைபெறுகிறது. அந்த அவசரத்தில் தம்பதிகளினால் சரியாக தனிமையில் பேசக் கூட முடியவில்லை. பின் எவ்வாறு நடக்கும்? ஆகவே சரியான காதல் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.
வேறு என்னவெல்லாம் செய்தால் பெண்கள் எளிதில் கர்ப்பமாக முடியும் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...


சரியான நேரம்

கர்ப்பம் ஆவதற்கு சரியான நேரம் என்றால் அது மாதவிடாய் முடிந்து ஏழு நாட்களுக்குப் பிறகு தான். இந்த நாட்களில் உறவு கொண்டால், நிச்சயம் கர்ப்பம் ஆக முடியும். இதனை பின்பற்றி வந்தால், விரைவில் கர்ப்பம் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது

‘பிரம்மன்’ நட்பின் இலக்கணம் - அருமையான விமர்சனம்!

சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகின்றனர் சசிகுமாரும், அவருடைய நெருங்கிய நண்பரான நவீன் சந்திராவும். இதில் நவீன் சந்திரா மட்டும் சென்னையில் சென்று பெரிய இயக்குனராகிவிடுகிறார்.

சசிகுமார் கோயம்புத்தூரிலேயே ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதே தியேட்டரில் இவருடைய நண்பன் சந்தானமும் ஆபரேட்டராக பணிபுரிகிறார். நஷ்டத்துடன் இயங்கும் அந்த தியேட்டரை கஷ்டப்பட்டு நடத்தி வரும் சசிகுமார், ஒருநாள் நாயகி லாவண்யா பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். இந்நிலையில், நாயகியின் அண்ணனையே தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால், இருவரும் நெருங்கி பழக வாய்ப்பு அதிகமாகிறது.

இருவரும் காதலித்து வரும் நிலையில், ஒருநாள் தியேட்டருக்கு வரிகட்ட வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதை கட்ட சசிகுமாரிடம் பணம் இல்லை. அதனால், சென்னையில் பெரிய இயக்குனராக இருக்கும் தனது நண்பனிடம் சென்று உதவி கேட்கலாம் என்று சென்னை கிளம்பி வருகிறார்.

சென்னைக்கு வரும் சசிகுமாருக்கு எதிர்பாராத விதமாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. முற்றிலும் அனுபவமே இல்லாத சசிகுமாருக்கு சூரி உதவி செய்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய நண்பனான நவீன் சந்திரா தன்னுடைய கதையை படமாக எடுக்க விரும்புகிறான் என்று தெரிந்ததும் தனது நண்பனுக்காக அந்த கதையை விட்டுக் கொடுக்கிறார் சசி.

நண்பனுக்காக விட்டுக்கொடுத்த மகிழ்ச்சியில் சொந்த ஊர் திரும்பும் சசிகுமாருக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. தனது காதலியான லாவண்யாவுக்கும், நண்பன் நவீன் சந்திராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விடுகிறது. நட்புக்காக தனது காதலையும் துறக்கிறார் சசி.

நட்புக்காக இயக்குனர் கனவு, காதல், தியேட்டர் என எல்லாவற்றையும் இழந்த சசிகுமாரின் வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

இதுவரையிலான படங்களில் கிராமத்துப் பாணியில் நடித்து வந்த சசிகுமார் இந்த படத்தில் நகரத்துவாசியாக வருகிறார். படம் முழுக்க துறுதுறுவென நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, அடாவடி என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக செய்திருக்கிறார். தனது முந்தைய படங்களைப்போல இப்படத்திலும் நட்புக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். ஆனால், நட்புக்காக கிடைக்கிற பணத்தையெல்லாம் விட்டுக்கொடுப்பது கொஞ்சம் ஓவர்தான்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியில் இன்றைய இளைஞர்கள் விழுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். நடிப்பிலும் ஓகேதான். தமிழில் ஒரு ரவுண்டு வரலாம்.

முதல்பாதியை கலகலப்பாக நகர்த்தத சந்தானம் மிகவும் உதவியிருக்கிறார். இவரது ஒன்லைன் காமெடி சூப்பர். இரண்டாம் பாதியில் சென்னை வரும் சசியுடன் சூரி சேர்ந்துவிடுகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடுபவராக வரும் சூரியும், சசியும் சேர்ந்து செய்யும் அலப்பறை இரண்டாம் பாதியை கலகலக்க வைக்கிறது.

ஒரே படத்தில் ஆசை, காதல், நட்பு, தியாகம் என எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சாக்ரடீஸ். ஆனால், அதை திரைக்கதையில் சரியாக சொல்ல தடுமாறியிருக்கிறார். இன்றைய தியேட்டர்களின் நிலைமையை அழகாக எடுத்துக் கூறியதற்காக பாராட்டலாம். அதேபோல், சசிக்கும், தியேட்டருக்கும் உண்டான பிணைப்பை அழகாக காட்டியிருக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் ஓகே ரகம்தான். ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.

ஆண்களின் அழகினைக் கெடுக்கும் விடயங்கள்!

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதால், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏனெனில் ஆண்களுக்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பலர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, அழகை கண்டு கொள்ளாமல் விடுகின்றனர்.


அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பதற்காக சிகரெட் பிடிப்பது, தூங்குகிறேன் என்ற பெயரில் அழகை கெடுக்கும் வகையில் தூங்குவது மற்றும் பல செயல்களாலும், ஆண்களின் அழகானது பாதிக்கப்படுகிறது. இவையே நீண்ட நாட்கள் தொடர்ந்தால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைத் தான் பெற நேரிடும். இதற்காக அடிக்கடி மேக்-கப் போட சொல்லவில்லை. அழகைக் கெடுக்கும் செயல்களை தவிர்த்து, அழகுப் பொருட்களில் சிலவற்றை மட்டும் பயன்படுத்தினாலே போதுமானது. சரி, இப்போது அத்தகைய அழகைக் கெடுக்கும் செயல்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அவற்றை சரிசெய்து, பெண்களின் முன் அழகாகக் காட்சியளியுங்கள்.

மாய்ச்சுரைசரை தவிர்ப்பது

மேலும் ஆண்கள் மாய்ச்சுரைசரை பயன்படுத்தாமல் இருப்பார்கள். ஏனெனில் அதைப் பயன்படுத்துவதை சிலர் விரும்பமாட்டார்கள். விருப்பமில்லை என்பதற்காக அதை தவிர்த்தால், பின் சருமம் மென்மையிழந்து, வறட்சியடைந்துவிடும். எனவே தினமும் படுக்கும் முன்னும், குளித்தப் பின்னரும் மாய்ச்சுரைசரை தடவுவது நல்லது.

சோப்பு

ஆண்கள் அழகுப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்பதற்காக எப்போதும் முகத்திற்கு சோப்பை மட்டுமே பயன்படுத்துவர். இவ்வாறு எப்போதும் சோப்பை பயன்படுத்தினால், சருமம் வறட்சியடைந்துவிடுவதோடு, நாளடைவில் சுருக்கங்களும் வந்துவிடும். ஆகவே சோப்பைத் தவிர்த்து, ஆண்களுக்கென்று கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ்ஷை வாங்கி, பயன்படுத்துவது நல்லது.


குப்புற தூங்குவது

தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவதால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதும் முகத்தை அழுத்தும்படியாக தூங்காமல் இருக்க வேண்டும்.


புகைப்பிடித்தல்

அனைவருக்குமே புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது நன்கு தெரியும். அதிலும் இவற்றை பிடிப்பதால், புற்றுநோய் வரும் என்பதும் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சிகரெட்டை அதிகம் பிடிப்பதால், உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, அழகும் தான் பாதிக்கப்படும். அதாவது சருமத்தில் கோடுகள் மற்றும் வாயைச் சுற்றிலும் சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே அழகாக காணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

மொபைல்

மொபைலானது வீட்டில் இருக்கும் டாய்லெட்டை விட மிகவும் அசுத்தமானது. ஏனெனில் அந்த மொபைலை பாக்டீரியாவின் இருப்பிடம் என்று சொல்லலாம். அந்த அளவு அவற்றை பல இடங்களில் வைப்பதோடு, நிறைய பேரின் கைகளுக்கு சென்று, எண்ணற்ற பாக்டீரியாவை அதில் வைத்திருக்கும். அத்தகைய பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ள மொபைலை காதுகளில் வைத்து பேசும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு வந்து, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல தொற்றுநோய்களை சருமத்தில் வரவழைக்கின்றன. ஆகவே மொபைலை எப்போதும் கண்ட இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பொடுகு

ஆண்கள் பல இடங்களுக்கு சுற்றுவதால், தலையில் பொடுகு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு வரும் பொடுகு அரிப்பை மட்டும் உண்டாக்குவதில்லை. சருமத்தையும் பாதிக்கிறது. அதுவும் எப்படியெனில், தலை அரிக்கும் போது கைகளை தலையில் வைக்கிறோம், பின் அதேக் கைகளை முகத்திலும் வைக்கிறோம். இதனால் பல சருமப் பிரச்சனைகள் வருகின்றன. ஆகவே நல்ல ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை பயன்படுத்தி, தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சூரியஒளி

ஆண்கள் ஒரு புல்லட் ப்ரூஃப் இல்லை. எப்படி பெண்களின் மீது சூரிய கதிர்கள் பட்டால் பிரச்சனைகள் வருகிறதோ. அதேப் போல் ஆண்களின் மீது பட்டாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அளவுக்கு அதிகமாக வெளியே சுற்றுவது ஆண்கள் தான். அவ்வாறு சுற்றும் போது அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதால், சரும புற்றுநோய்கள் வருவதோடு, பல தொற்றுநோய்களும் வரும். ஆகவே எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது, அரை மணிநேரத்திற்கு முன்னரே சன் ஸ்கிரீன் லோசனை தடவி, பின்னர் செல்ல வேண்டும். இதனால் சருமமானது பாதுகாக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர்.

ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.


எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:

* சிறுநீர் பாதை தொற்றுநோய்

* உடலில் நீர் வறட்சி

* சிறுநீரக கற்கள்

* கல்லீரல் பிரச்சனை

* அல்சர்

* பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது

* விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்

* பால்வினை நோய்

* பெரிதான புரோஸ்டேட்

* நீரிழிவு

* ஊட்டச்சத்துக் குறைவு

* குறுகிய சிறுநீர் பாதை

எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்:

* அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

* குருதிநெல்லிக் கனியின் (cranberry) ஜூஸை சாப்பிட வேண்டும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் குறுகிய சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.

* நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.

* தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். வேண்டுமென்றால் அத்துடன் வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிக்கலாம். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

* ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.
* எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம்.

* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேறும். ஆகவே பீர் குடித்தால், அந்த கற்கள் கரைந்துவிடும். அதையே காலையில் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படும். ஆகவே அப்போது அத்துடன் தேங்காய் நீர் மற்றும் அதிக தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.

மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும். வேறு என்னவெல்லாம் செய்தால், சரியாகும் என்பது உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

‘சித்திரை திங்கள்’ திரைவிமர்சனம்! கொண்டாட முடியவில்லை.!

விருதுநகர் மாவட்டத்தில் வெங்கிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவராக தீரன். இவருக்கு மனைவி கிடையாது. ஆனால், அஸ்வந்த் தத்துப் பிள்ளையாக வளர்த்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் ஸ்வாதியும், அஸ்வந்தும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர்.

இவர்கள் காதலுக்கு ஸ்வாதியின் தாய்மாமா ராஜானந்த் எதிர்ப்பாக இருக்கிறார். இருந்தும் அவருக்குத் தெரியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒருநாள் இந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிவிட திட்டமிடுகிறது. அந்த வேளையில்தான் தன்னுடைய அம்மா யார் என்பது நாயகன் அஸ்வந்துக்கு தெரிய வருகிறது. அவள் யார் என்பது தெரிந்திருந்தும் அஸ்வந்திடம் தீரன் மறைக்க காரணம் என்ன?
அஸ்வந்துடைய அம்மாவுக்கும், தீரனுக்கும் என்ன தொடர்பு? என்பதை இறுதியில் சொல்கிறார்கள்.

நாயகன் அஸ்வந்த், கதாநாயகனுக்கு சற்றும் பொருந்தாத முகம். நாயகியை காதலிப்பது, வில்லன்களுடன் சண்டை போடுவது, டூயட் பாடுவது என எந்தவொரு இடத்திலும் இவருக்கு நடிப்பு என்பது கொஞ்சம்கூட வரவில்லை. டான்ஸ் மட்டும் கொஞ்சம் நன்றாக ஆடுகிறார்.

நாயகி ஸ்வாதி, பாவடை தாவணியில் அழகாக இருக்கிறார். அழுகை, காதல் எல்லாம் இவருடைய முகத்தில் எல்லா நடிப்பும் நன்றாக வருகிறது. ராஜானந்த் வில்லனாக மிரட்டியிருக்கிறார். தீரன் இரு கெட்டப்புகளில் வந்தாலும் இரண்டிலும் தோற்றத்தில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. நடிப்பு என்பது இவருக்கு சுத்தமாக வரவில்லை. இவர் கோபப்படும்போது நம்மை சிரிக்க வைக்கிறார். டீச்சராக வரும் ஸ்ரீரேகாவும் செயற்கைத்தனமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகருக்கும், நடிகைக்கும் காதல், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறைமாமன், நாயகியை அடையத் துடிக்கும் வில்லன் என தமிழ் சினிமாவில் நரநரத்த கதையையே இயக்குனர் மாணிக்கமும் எடுத்திருக்கிறார். மற்றபடி இந்த கதையில் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. கதாபாத்திரங்கள் தேர்வில் கோட்டை விட்டுவிட்டார். காட்சியமைக்கும் விதத்திலும் நிறைய சொதப்பல் செய்திருக்கிறார்.

ஏ.எம்.அருண் ஒளிப்பதிவு படத்தின் தொய்வுக்கு மேலும் ஒரு காரணம். சரத் பிரிய தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘சித்திரை திங்கள்’  கொண்டாட முடியவில்லை.

வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் உணவுகள்!

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள்.


மேலும் சிலர் இந்த தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றிவார்கள். என்னதான் டயட் கடுமையாக இருந்தாலும், அப்போது உடல் வேண்டுமானால் பலவீனமடையுமே தவிர, தொப்பை மட்டும் குறையாமல் இருக்கும். ஆகவே "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப தொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம் எந்த ஒரு செயலுக்கு தீர்வு இல்லாமல் இருக்காது. அதுப்போல் தான் வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், கொழுப்புகள் கரைந்து, அழகான ஸ்லிம்மான தோற்றத்தைப் பெறலாம். சரி, அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!


கறுப்பு  பீன்ஸ்

பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கறுப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


பேரிக்காய் பேரிக்காயில்

குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும். ஏனெனில் ஆய்வு ஒன்றில், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


பாப்கார்ன்

 ஸ்நாக்ஸிலேயே தானியங்களால் ஆன பாப்கார்ன் மிகவும் சிறந்தது. ஏனெனில் ஆய்வு ஒன்றில் தானியங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அந்த தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தனர். அதில் தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களை விட, அதை அப்படியே சாப்பிடுபவர்களின் எடை குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸ்களில் பாப்கார்ன்னை சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பையும் வராமல் தடுக்கலாம்.


உருளைக்கிழங்கு

அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.


வேர்க்கடலை

 நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும், அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.


சூரியகாந்தி விதைகள்

கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது. அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.


வெள்ளை டீ

(White Tea) நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள் !

எவ்வளவு தான் உடற்பயிற்சியை சரியாக செய்தாலும், சாப்பிடுவதில் தவறு செய்கிறோம். அதாவது நாம் உணவை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கென்று நேரம் உள்ளது. அந்த நேரத்தை சரியாக பின்பற்றி சாப்பிடாமல் இருந்தால், அதற்கான விளைவுகளை நேரிடக் கூடும். அதிலும் மற்ற நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் தான் மிகவும் ஆபத்தானது.


 அதுமட்டுமின்றி நிபுணர்கள் பலர், உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் தான் என்று கூறுகின்றனர். ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக்கோஸானது எரிபொருளாக மாறுகிறது. எனவே இந்த நேரம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். இப்போது அவ்வாறு உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சீஸ்

நீண்ட தூரம் ஓடியப் பின்பு, சீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

உடற்பயிற்சி செய்தப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.

நவதானிய உணவுகள்

நவதானிய உணவுகள் எனப்படும் செரியல் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், பாக்கெட்டுகளில் விற்கப்படும் நவதானிய உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் சர்க்கரை அதிகமாக இருக்கும். வேண்டுமெனில், உடற்பயிற்சிக்குப் பின் சர்க்கரை குறைவாக உள்ள கிரனோலாவுடன், பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து, சிறிது ஸ்கிம் மில்க் ஊற்றி சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பிரட்

வெள்ளை பிரட் எனப்படும் மைதாவால் ஆன பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்குப் பின், இந்த பிரட் சாப்பிட்டால், அவை உடலில் செல்லும் போது மிகவும் எளிதில் சர்க்கரையாக மாறிவிடும். எனவே அப்போது வேண்டுமெனில் நவதானியங்களால் ஆன பிரட்டை(கோதுமை பிரட்) சாப்பிடலாம்.

பழ ஜூஸ்

 எவ்வளவு தான் பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சிப் பின்னர் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது.

முட்டை

முட்டையானது உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் தான். ஏனெனில் அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கோலைன் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றை பொரியல் செய்து சாப்பிட கூடாது. அப்போது அதில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அதனை வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது

மில்க் ஷேக்

பொதுவாக மில்க் ஷேக் உடலுக்கு நல்லது தான். ஆனால் அந்த மில்க் ஷேக்கை பழங்களால் செய்து சாப்பிடும் போது, அதில் சர்க்கரை அதிகமாகிவிடும். எனவே அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, பழங்களுக்குப் பதிலாக பாதாம் சேர்த்து செய்யலாம் அல்லது சாதாரண பாலாக குடிக்கலாம்.

காய்கறிகள்

காய்கறிகளை வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அப்படியே வரும். ஆனால் அவற்றையே உடற்பயிற்சிக்குப் பின்னர் உடனே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்ததே வீணாகிவிடும்.

‘வெண்மேகம்’ திரைவிமர்சனம்! பிரகாசம்.

கருவால் உருவான கதையே வெண்மேகத்தின் கரு.

சென்னையில் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியாராக இருக்கும் ரோகிணி, தனது கணவரை பிரிந்து தனது மகளான ஜெயஸ்ரீ சிவதாசுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரே ஆதரவு ஜெயஸ்ரீ மட்டும்தான். தனது கணவர் மாதிரியான ஆண்களிடம் ஏமாந்து போய்விடக்கூடாது என்பதற்காக அவளை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்.

தன்னுடைய விருப்பத்துடன் வாழ தடையாக இருக்கும் அம்மா மீது ஜெயஸ்ரீ வெறுப்புடனே இருக்கிறாள். இந்நிலையில், இவரது வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் விதார்த் மற்றும் ஜெகன் ஆகியோர் ஜெயஸ்ரீக்கு ஆறுதலாக இருக்கின்றனர். இதனால், அவர்களிடம் நெருங்கி பழகி வருகிறார் ஜெயஸ்ரீ.

ஒருநாள் விதார்த் கடைக்கு ஸ்டிக்கர் ஒட்ட வரும் இஷாராவை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார் விதார்த். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களுடைய காதல் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் வேளையில், விதார்த்துடன் ஜெயஸ்ரீ நெருங்கி பழகுவது நாயகிக்கு பிடிக்கவில்லை. இதை ஒருநாள் ஜெயஸ்ரீயை அழைத்து கண்டித்தும் விடுகிறாள். பதிலுக்கு ஜெயஸ்ரீ தான் பத்து வருடமாக விதார்த்துடன் நெருங்கி பழகி வருவதாகவும், அவர்மீது அளவு கடந்த ஆசை வைத்திருப்பதாகவும் கூறுகிறாள். இதனால் கோபமடைந்த இஷாரா இந்த விஷயத்தை ஜெயஸ்ரீயின் அம்மாவிடம் சென்று முறையிடுகிறாள்.

கோபமடைந்த ரோகிணி, ஜெயஸ்ரீயை அழைத்து கண்டிக்கிறாள். கோபத்தில் வீட்டில் இருந்து வெளியேறுகிறாள் ஜெயஸ்ரீ. வெளியே செல்லும் நாயகி, விதார்த்துக்கு போன் செய்கிறாள். ஆனால், அந்த போனை விதார்த்தின் நண்பன் ஜெகன் எடுக்கிறார். வேலை விஷயமாக இருவரும் விசாகப்பட்டினம் சென்றிருப்பதாகவும், இங்கேயே செட்டிலாகிவிடப் போகிறோம் என்று கிண்டலுக்கு ஒரு வார்த்தையும் விட்டுவிட்டு போனை துண்டித்து விடுகிறான்.

இதை உண்மை என நம்பி, ஜெயஸ்ரீ விசாகப்பட்டினத்துக்கு பயணமாகிறாள். அங்கு விதார்த்தை தேடி அலைகிறாள். எங்கு தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல் தனிமையில் தவிக்கிறார். அப்போது, அங்கே லோக்கல் லேடி தாதாவான கல்யாணியின் கண்ணில் படுகிறார். அவர் விசாகப்பட்டினத்தில் குழந்தை இல்லாத பணக்காரர்களுக்கு ஏழை பெண்களை வாடகை தாயாக அனுப்பும் வேலையை நிழல் உலகில் செய்து வருகிறார்.

அவரிடம் தஞ்சம் புகும் ஜெயஸ்ரீயையும் இந்த வேலையில் ஈடுபடுத்தி விடுகிறார். இதற்கிடையில், விசாகப்பட்டினத்தில் வேலை தேடி சென்ற விதார்த் மீது ஜெயஸ்ரீயின் அம்மா ரோகிணி தனது பெண்ணை கடத்தி சென்றுவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்கிறார். சென்னை திரும்பும் விதார்த்தை போலீஸ் விசாரிக்கிறது. போலீஸ் விசாரணையில் விதார்த் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.

ஜெகன் விதார்த்திடம் ஜெயஸ்ரீ தன்னிடம் பேசியதாகவும், விசாகப்பட்டினத்தில் செட்டிலாகிவிடுவோம் என்று பொய்யை சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டதாகவும் கூறுகிறான். அப்படியென்றால் தன்னைத் தேடி விசாகப்பட்டினம்தான் அவள் சென்றிருக்கவேண்டும் என்று எண்ணி, தேடும் முயற்சியில் விதார்த்தும், ஜெகனும் விசாகபட்டினம் பயணமாகிறார்கள். இறுதியில், ஜெயஸ்ரீயை கண்டுபிடித்து சென்னைக்கு திரும்ப அழைத்து வந்தார்களா? விதார்த், இஷாரா காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

விதார்த் இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, ஜெயஸ்ரீ கர்ப்பமாக இருப்பதை கண்டு கலங்கும் காட்சிகள் ரசிகர்களின் கண்களை கலங்க வைக்கிறது. நாயகி இஷாரா குறைவான காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெயஸ்ரீ, படத்தின் முழு கதையையும் இவரே தாங்கிச் செல்கிறார். முதல் பாதியில் மிகவும் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

பிற்பாதியில் கனமான கதாபாத்திரத்தை தனது திறமையான நடிப்பால் அசத்தியிருக்கிறார். கண்டிப்பான அம்மாவாக வரும் ரோகிணி தனது அனுபவ நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. ராம்-லஷ்மண் என்ற இரட்டை சகோதரர்கள் இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இயக்கியதோடு மட்டுமல்லாமல் இவர்களே தயாரித்தும் உள்ளார்கள்.

தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறார்கள். கதைக்கு ஒத்த கதாபாத்திரங்களை தேர்வு செய்திருப்பது அற்புதம். ஒரு குழந்தை வளரும்பொழுது அக்குழந்தையின் எண்ணங்களை சரிவர புரிந்து, அன்பால் அரவணைத்து சென்றால் அந்த குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை பெற்றோருக்கு சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஜித்து தாமேதரின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் கூடுதல் பலம். பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. ஜாபர்கனி இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘வெண்மேகம்’ பிரகாசம்.

எந்திரன் - 2க்கு முக்கியத்துவம் கொடுக்கும் - சங்கர்!

ரஜினி, கமலுக்கு எந்திரன், இந்தியன் படங்கள் மெகா ஹட் படங்களாக அமைந்தன. இருவருமே இப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தனர். ஷங்கர் இயக்கினார்.

இந்தியன் படம் 1996–ல் ரிலீசானது. சுமார் ரூ.12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.30 கோடி வசூல் ஈட்டியது. இப்படத்துக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.

எந்திரன் படம் 2010–ல் ரிலீசானது. ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இவ்விரு படங்களின் 2–ம் பாகத்துக்கான கதையை ஷங்கர் தயார் செய்துள்ளார்.

தற்போது, விக்ரமை வைத்து ‘ஐ’ படத்தை இயக்கி வருகிறார். இது முடிந்ததும் இந்தியன், எந்திரன் படங்களின் 2–ம் பாகத்துக்கான பட வேலைகளை முழு வீச்சில் துவங்குகிறார்.

கோச்சடையான் படத்தை முடித்து விட்டு ரஜினி ஓய்வில் இருக்கிறார். அடுத்த படத்துக்கான கதையை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. கமல், விஸ்வரூபம் 2 படத்தை முடித்துள்ளார். அடுத்து உத்தமவில்லன் படத்தில் நடிக்க தயாராகிறார். மலையாளத்தில் ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

கமல் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பதால் ரஜினியை வைத்து எந்திரன் 2 படங்களை முதலில் துவங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு இந்தியன் 2–ம் பாகம் படப்பிடிப்பை துவக்குகிறார்.

திருமணத்திற்கு பின்னர் பெண்களின் எடை அதிகரிப்பது ஏன் ?

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள். ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும்.

இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் முன்றுவேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.

விஜய்யை ஒரு மாதம் சென்னை பக்கமே பார்க்க முடியாது!

இளையதளபதி விஜய்யை இன்னும் ஒரு மாதத்திற்கு சென்னை பக்கம் பாா்க்க முடியாது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. திட்டமிட்ட காட்சிகளை திட்டமிட்ட நேரத்திற்குள் முடித்து வருகின்றனர். அதனால் 2 வாரத்திற்குள் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.


கொல்கத்தாவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து சென்னைக்கு வந்த படக்குழு ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளது.


சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்பட்ட பாடல் காட்சியில் விஜய்யுடன் 100 டான்ஸர்கள் ஆடியுள்ளனர். தற்போது விஜய் படங்கள் என்றால் பிரமாண்டத்திற்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.


சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து படக்குழு ஹைதராபாத் கிளம்பிச் சென்றுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தீரன் படக்குழு ஹைதராபாத்தில் ஒரு மாத காலம் தங்கி சில காட்சிகளை படமாக்குகிறதாம். இதனால் இன்னும் ஒரு மாதத்திற்கு விஜய்யை சென்னையில் பார்க்க முடியாது.

இது ஐஸ்வர்யா வீட்டுக் கலாட்டா!

அனில் அம்பானி கொடுத்த பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் தனது மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே செல்லவில்லையாம். அனில் அம்பானி தனது தாய் கோகிலாபென் அம்பானியின் 80வது பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார்.


அந்த பார்ட்டிக்கு தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷன் அம்பானி தனது குடும்பத்துடன் பார்ட்டிக்கு வந்திருந்தார்


பச்சன்கள் அம்பானி வீட்டு பார்ட்டி என்றால் பச்சன்கள் இல்லாமல் இருக்காது. அனில் அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் வந்திருந்தனர்.


பார்ட்டி முழுவதும் ஐஸ்வர்யா ராய் மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே போகாமல் இருந்துள்ளார். அவர் பொது இடத்தில் மாமியாரை தவிர்த்ததை பலரும் கவனித்துவிட்டனர்.


 ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியாருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை என்று அண்மையில் செய்திகள் வெளியாகின. ஜெயா ஐஸ்வர்யாவின் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது அவருக்கு பிடிக்கவில்லையாம்.


 ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியாருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை என்று அண்மையில் செய்திகள் வெளியாகின. ஜெயா ஐஸ்வர்யாவின் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது அவருக்கு பிடிக்கவில்லையாம்.


 இத்தனை நாட்களாக நான்கு சுவருக்கு உள்ளே நடந்த மாமியார், மருமகள் பிரச்சனை தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் அனைவர் முன்பும் நடந்துள்ளது.

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்! ஒரு பார்வை!

அருள்நிதி, பிந்துமாதவி, அஷ்ரிதா ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் திரைப்படம் வருகிற
மார்ச் 28ல் வெளியாகவுள்ளது.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி பலரையும் வெகுவாகச் சிரிக்க வைத்த சிம்பு தேவன் இயக்கியிருக்கும் திரைப்படம் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்.


மோஹானா மூவீஸ் சார்பில் மு.க.தமிழரசு தயாரித்திருக்கும் இப்படத்தினை ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் வெளியிடுகிறது. நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியிருக்கும் திரைப்படமான இப்படம் வழக்கம்போலவே நகைச்சுவைத் திரைப்படமாகும்.


 இம்சை அரசன் படத்தின் இயக்குனர் என்பதாலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரும் மிகவும் ரசிக்கத்தக்கதாய் இருப்பதாலும் இப்படம் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.


நாசர், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, டெல்லி கணேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டராகிறார் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமா என்றில்லாமல் எல்லா மொழித் திரைப்படங்களிலுமே எந்த ஒரு மாஸ் ஹீரோவும் நிச்சயமாக ஒருமுறையேனும் போலீசாக நடித்திருப்பர். அந்தவகையில் சிவகார்த்திகேயனும் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கவுள்ளதாகப் பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


சிவகார்த்திகேயனின் வளர்ச்சில் நடிகர் தனுஷிற்கு மிக முக்கியப் பங்குண்டு. மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன்.


அதன் பிறகு தனுஷ் தயாரித்த தனது முதல் திரைப்படமான 3 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பளித்தார். அதன் பிறகு தனுஷ் தயாரித்த
இரண்டாவது படமான எதிர் நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ வாய்ப்புக்கொடுத்தார். எதிர் நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிக முக்கியப் படமாக அமைந்தது.


தற்பொழுது மீண்டும் தனுஷ் தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தினை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தற்பொழுது சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதையில், திருக்குமரன் இயக்கிவரும் மான் கராத்தே திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

தெகிடி Vs வல்லினம்!

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வல்லினம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 28ல் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ஈரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அறிவழகன் இயக்கத்தில் நகுல் மற்றும் அறிமுக நாயகியான மிருதுளா பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் வல்லினம்.


இப்படம் கடந்த 2013 ஆண்டே தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டிற்குத் தயாரானது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டுவந்தது. குறைந்தபட்சம் 500 திரையரங்குகளிலாவது இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் தரப்பு விரும்புவதாகவும், அதனாலேயே வெளியீட்டில் தாமதமாகிவருவதாகவும் கூறப்பட்டது.


பேஸ்கட் பால் வீரராக நகுல் நடித்திருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.


இப்படம் வெளியாகவுள்ள வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி அஷோக் செல்வன் மற்றும் ஜனனி நடிப்பில் உருவாகியிருக்கும் தெகிடி திரைப்படமும் வெளியாகவுள்ளது.

தன் இசைக்குத்தான் புரோபசல் வருவது! எனக்கு வரவில்லை..... புலம்பும் அனிருத் !

கோலிவுட்டில் மிக வேகமாக வளர்ந்துவரும் இசையமைப்பாளரான கொலவெறி புகழ் அனிருத் பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவைக் காதலித்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.


சமீபமாக குமுதம் வார இதழுக்கு அனிருத் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அனிருத்தின் திருமணம் பற்றிக் கேட்டபோது தனக்கு தற்பொழுது அந்த எண்ணமே இல்லையென்றும், முப்பது வயதிற்கு மேல்தான் திருமணப் பேச்சே எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.


பின்னர் ஆண்ட்ரியாவுடனான காதலைப் பற்றிக் கேட்டபோது, “ ஆண்ட்ரியாவை லவ் பண்ணினது உண்மைதான். அது ஒரு காலம். அது முடிஞ்சு போச்சு. அதப்பத்தி இனிமேலாவது பேசறதை விடுங்க” என்று கூறியுள்ளார். மேலும் தற்பொழுது தனக்கு நிறையப் புரோபசல் வருவதாகவும், அவை அனைத்தும் அவரது இசைக்குத்தான் வருகின்றன என்றும், தனக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.


அனிருத் தற்பொழுது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துவரும் படத்திற்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள படத்திற்கும் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

எனக்கு அதிகமாக பிடித்த ஒரே நடிகர் விஜயசேதுபதிதான்!

தற்போதைய புது வரவு நடிகர்களில் எனக்கு அதிகமாக பிடித்த ஒரே நடிகர் விஜயசேதுபதிதான் என்கிறார் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார். புதுமுகங்கள் நடித்த அலையே அலையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் வி.சி.குகநாதன், கேயார், சீனுராமசாமி, விஜயசேதுபதி, இசையமைப்பாளர் இமான், ஞானவேல்ராஜா, டி.சிவா, ஜாகுவார் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இவ்விழாவில் பேசிய ஞானவேல்ராஜா, டி.சிவா ஆகியோர், தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்றோடு முடிவுக்கு வந்தது. அந்த வகையில், நேற்றோடு தமிழ் சினிமாவை பிடித்திருந்த சனியன் விலகியது. அதனால் இதுவரை எந்த விசயத்தையும செயல்படுத்த முடியாமல் இருந்த நாங்கள் இனி அதிரடியாக செயல்படப்போகிறோம் என்று காரசாரமாக பேசினார்கள்.


அதையடுத்து கேயார் பேசுகையில், தயாரிப்பாளர் சங்கம் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது. அதனால் இனி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடப்போகிறோம் என்று ஆரம்பித்தவர், ஈகோ இல்லாமல் சினிமா வளர அனைவருமே பாடுபடுவோம் என்றார். பின்னர், விழாவுக்கு வந்திருந்த விஜயசேதுபதியை உயர்வாக பேசினார். குறிப்பாக, இன்றைய புதுவரவு நடிகர்களில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் அவர் மட்டுமே. அவர் இப்போதே பெரிய அளவில் வளர்ந்து விட்டார். ஆனால் அவரது நல்ல மனதுக்கு அவர் இன்னும் வளர்ந்து கொண்டேயிருப்பார்.


மேலும்,. இன்றைய நிலையில், ஒரு ஆடியோ விழாவுக்கு கமல், சூர்யா போன்ற நடிகர்கள் வருவது அந்த படங்களுக்கு கோடிக்கணக்கான பப்ளிசிட்டிக்கு சமமாகிறது. அந்த வகையில், இந்த விழாவுக்கு விஜயசேதுபதி வந்திருப்பதும் படத்திற்கு பெரிய பப்ளிசிட்டிதான். இந்த மாதிரி நல்ல மனம் கொண்ட நடிகர்களால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி எதிர்காலத்தில் மிகப்பெரிய உயரத்துக்கு செல்லப்போகிறது என்றார்.

3டியில் கவர்ச்சி காட்டுகிறார்கள்!

தமிழ் சினிமாவில் 3டி படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிஜிட்டில் 3டி தொழில்நுட்பம் வந்துவிட்டதே இதற்கு காரணம்.


அம்புலி படம் இந்த தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றது. இப்போது மந்திரக்கன்னி என்ற படத்தை சவுமியா ரஞ்சன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.


இயக்குனரே ஹீரோவாக நடிக்க காவியா, பாயல், பிரகதி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தாகூர் காந்த் ஒளிப்பதிவு செய்கிறார், கே.ராஜ் பாஸ்கர், மிதுன் சத்யா இசை அமைக்கிறார்கள்.

ஒரு காதல் ஜோடியை மந்திரவாதி ஒருவன் பழி சொல்லி பிரிக்கிறான். பின்னர் காதலன் கண் எதிரிலேயே காதலியை கற்பழித்து எரித்துக் கொல்கிறான். பிறகு காதலன் மந்திர சக்தியை பெற்று மந்திரவாதியை எப்படி பழிவாங்குகிறான் என்பது கதை.


அந்தக் காலத்து கதைதான். ஆனால் 3டியில் கவர்ச்சி கலந்து தரும்போது புதுசாத்தானே இருக்கும். மூன்று ஹீரோயின்களும் தங்கள் அழகை கண்ணுக்கு அருகில் வந்து காட்டினால் ரசிகன் மிரண்டுதானே போவான்.

கானா பாலாவுக்கு வேட்டுவைத்த சந்தானம்!

சென்னை மாநகரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று கானா பாடல், இசை அமைப்பாளர் தேவா கானா பாடல்களை சினிமாவில் புகுத்தி பிரபலமாக்கினார்.


 அதன் பிறகு கானா உலகநாதன், மரண கானா விஜி, கானா பாலா என பல கானா பாடகர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது கானா பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது கானா பாலா, அவரது சமீபத்திய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி உள்ளன. சிறு சிறு வேடங்களில் நடித்தும் வருகிறார்.


முதன் முறையாக கானா பாடல்களையே கிண்டல் செய்து ஒரு கானா பாடலை பாடுகிறார் கானா பாலா. கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம் எடுத்து வரும் வாலிபராஜா படத்தில்தான் இந்த பாடலை பாடுகிறார். "கானா நல்ல கானா அதை கேட்டு நீ போகாதே வீணா..." என்று தொடங்குகிறதாம் அந்த பாடல்.


வாலிபராஜாவில் சந்தானம், சேது, நுஷ்ரத், நடிக்கிறார்கள். சாய் கோகுல்ராம் நாத் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டாலும் இப்போது இந்த புதிய கானா பாடலை உருவாக்கி அதை கானா பாலாவை பாடவைத்து படம்பிடிக்க இருக்கிறார்கள். இதற்கு ஐடியா கொடுத்தவர் சந்தானம்

சாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத செயல்கள்!

இந்த உலகில் உடலில் வரும் நோய்களுக்கு பெரும் காரணம் கிருமிகள் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் உடலில் நோய் வருவதற்கு நாம் தான் காரணம். ஆம், என்ன நம்பமுடியவில்லையா? உண்மை தான். எப்படியெனில், நாம் எந்த செயலை சரியாக முறையாக செய்கிறோம். யாருக்கும் எந்த செயலை எப்போது செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவ்வாறு தெரியாததாலேயே, பல நோய்கள் உடலில் வந்து தங்கி, விளையாடிக் கொண்டிருக்கின்றன. அது என்ன செயல்கள் என்று கேட்கலாம்.

உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் தான் மாற்றங்கள் என்று நினைத்தால், தற்போது உண்ட பின்பு கூட செய்யும் செயல்களில் வரவர மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலர் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று சாப்பிடப் பிறகு நடப்பது, சிகரெட் பிடிப்பது என்றெல்லாம் செய்வார்கள். இது மட்டுமின்றி, இதுபோன்று இன்னும் பல செயல்கள் இருக்கின்றன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அந்த செயல்களை இனிமேல் உண்ட பின்பு செய்யாமல், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகளை பின்பற்றி வாழுங்கள்.

புகைப்பிடிப்பது

 பெரும்பாலான ஆண்கள் சாப்பிட்டதும், ரிலாக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் சிகரெட் பிடிப்பார்கள். அவ்வாறு சாப்பிட்டு முடித்ததும் ஒரு சிகரெட் பிடித்தால், அது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலானது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

பழங்களை சாப்பிடுவது

 உணவை குறைவாக சாப்பிட வேண்டும் என்று சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவோம். ஆனால் உணவு உண்ட பின்பு உடனே பழங்களை சாப்பிட்டால், வயிற்றில் காற்றானது நிறைந்து, மிகுந்த உப்புசத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே பழங்களை சாப்பிட வேண்டுமெனில், உண்ட பிறகு 1-2 மணிநேரத்திற்கு பின்னர் சாப்பிட வேண்டும். அதுவே உணவுக்கு முன் என்றால், 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

டீ குடிப்பது

சிலர் உணவுக்குப் பின் டீ குடிப்பார்கள். ஆனால் அவ்வாறு குடிப்பது தவறு. ஏனெனில் டீயில் அமிலங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே அப்போது உணவில் உள்ள புரோட்டீனானது, அளவிக்கு அதிகமாகி, பின் செரிமானமடையாமல் வயிற்றில் சிரமத்தை ஏற்படுத்தும்.

பெல்ட்டை கழற்றி வைப்பது

உணவு உண்ட பின்பு, வயிறு இறுக்குவது போல் உள்ளது என்று சிலர் பெல்ட்டை கழற்றுதல் அல்லது தளர்த்துதல் என்று செய்வார்கள். இவ்வாறு உடனே கழற்றி வைத்தால், குடலானது சில நேரங்களில் திசை திரும்பி, அடைப்பு கூட ஏற்படும்.

குளிப்பது

உண்டவுடன் குளிப்பது என்பது ஒரு தவறான பழக்கம். ஏனெனில் இந்த செயலால் இரத்த ஓட்டமானது சீராக கைகள், கால்கள் மற்றும் இதர உறுப்புகளுக்குச் செல்லுமே தவிர, வயிற்றில் இரத்தமானது இல்லாமல் பலவீனமடைந்து செரிமானத்தின் இயக்கமானது பாதிக்கப்பட்டு, உணவு செரிமானமடையாமல் இருக்கும்.

நடப்பது

பொதுவாக மக்கள் உணவை உண்டப் பின் சிறிது தூரம் நடந்தால், 99 வயது வரை வாழலாம் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான கருத்து. அவ்வாறு நடக்கும் போது ஏற்படும் செரிமானமானது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சாமல் முற்றிலும் வெளியேற்றிவிடும்.

தூங்குவது

 சாப்பிட்டதும் தூங்கினால், உணவானது சரியாக செரிமானமடையாமல் இருக்கும். மேலும் இந்த செயலால், வாயுத் தொல்லை மற்றும் குடலில் ஏதேனும் தொற்றுநோய் வந்து, பின் வயிற்றில் பிரச்சனை ஏற்படும்.

அஜீத் வெளிய வருவியா மாட்டியாப்பா…..!!!

லேட்டஸ்ட்டா வர்ற எந்தப்படமா இருந்தாலும் அதுல டாஸ்மாக் சீன் இல்லாம வர்றதில்லை. குறிப்பா விஜய் அஜித் ரெண்டு பேரோட படங்களேயும் இது அதிகமா இருக்கு. ரெண்டு பேருமே அநியாயத்துக்கு குடிக்கிறதையே படத்துல காட்டுறாய்ங்க..


 பிரபல ஹீரோக்களை இளைஞர்கள் எல்லா விஷயத்திலேயும் பாலோ பண்றாங்க. ஒரு ஹீரோ தலையை தூக்கி நிப்பாட்டுனா இவனும் நிப்பாட்டுறான். ஒருத்தன் கத்தியை வெச்சு பேண்ட்டை கிழிச்சி விட்டுக்கிட்ட இவனும் கிழிச்சி விட்டுக்குறான்.


அப்படி இருக்கும் போது விஜய் அஜித் மாதிரியான ஹீரோக்கள் எல்லாரும் நல்ல சீன்கள்ல நடிக்க வேண்டியது தானே? எதுக்கு டாஸ்மாக் சீன்கள்ல நடிக்கிறாங்க? அஜித் வீட்டை விட்டு வெளியில வர்றதே கெடையாது. ரசிகர்களை சந்திக்கிறதும் கெடையாது. அப்படிப்பட்ட அவரோட படத்தை ரசிகர்கள் தேடிப்போய் தியேட்டர்ல கூட்டம் கூட்டமா பார்க்குறாங்க.


ஹீரோ படத்துல காலேஜ் முடிஞ்ச உடனே நேரா டாஸ்மாக் கடைக்கு போனா அதைப் பார்க்குற ரசிகனும் அப்படியே காலேஜ் முடிஞ்ச உடனே டாஸ்மாக் கடைக்கு போறான். சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு மாதிரியான நல்ல படங்கள் வருது. அந்த மாதிரி படங்களை நாம வரவேற்கணும். என்றார் கே.ராஜன்.

தமிழக மாணவரின் கண்டுபிடிப்பு - அமெரிக்க மாநாட்டில் விவாதம்!

தமிழக மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க பல்கலை மாநாட்டில் விவாதம்

அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்பு குறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு, அம்மாணவர், "டெலி கான்பரன்சிங்' மூலமாக விளக்கம் கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பிளஸ் 1 மாணவர் டெனித்ஆதித்யா,16. தொடர்ந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகிறார் இவர், கடந்த இரண்டு ஆண்டிற்கு முன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக, வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு, வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்.

இதற்காக, பல்வேறு மாநில விருதுகளையும், மத்திய அரசின் தங்கப்பதக்கம், விருது பெற்றுள்ளார். தனது கண்டுபிடிப்பிற்காக, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். மே மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் மாநாட்டில்,
இந்தியாவிற்கான கண்டுபிடிப்பை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள, லாங்வுட் பல்கலைக்கழகத்தின், ஏழாவது ஆண்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கற்கும் உச்சிமாநாடு நடந்தது. அதன் இயக்குனர் மனோரமா நிகழ்ச்சியை துவக்கினார். கல்வித் துறையின் டீன் பால்சாப்மேன் தலைமை வகித்தார். அமெரிக் காவில் உள்ள கல்வித்துறை நிபுணர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராமப்புற மேல்நிலை, துவக்கப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், முதலாவதாக இந்தியாவின் சார்பில் தமிழக மாணவர் டெனித் ஆதித்யாவின், வாழை இலை பதப்படுத்தும் தொழில்நுட்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது குறித்து மாநாட்டில் டிஜிட்டல் டிஸ்பிளே போர்டில் அனைவ ருக்கும் விவரித்து காட்டப்பட்டது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் டெனித் ஆதித்யா, திருவனந்தபுரத்தில் இருந்து, "டெலிகான்பரன்சிங்' மூலம் பதிலளித்தும், தனது கண்டுபிடிப்பின் பயன்கள் குறித்தும் விவரித்து பேசினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், அடுத்த உச்சி மாநாட்டின்போது, நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

இவரைப்போல, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் இன்ஜினியர் ஜாபர்அலியின் "மேத்டிஸ்க்' கணித உபகரணம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உங்களுக்குத் தெரியுமா? மிக முக்கிய தகவல்!

உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் இணைய உலாவி மூலம் இணையத்தை பயன்படுத்துகையில் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட இணைய உலாவியில் சேமிக்கப்படுகின்றது. அதாவதுநீங்கள் செல்லும் தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் முகவரிகள் என அனைத்தும் சேமிக்கப்படும்.

எனவே பொது இடங்களில் பயன்படுத்தும் கணனிகளில் அல்லது உங்கள் தனிப்பட்ட கணணி அல்லாத வேறு கணனிகளில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்திய பின் நீங்கள் எந்த எந்த தளத்துக்கெளலாம் சென்றுள்ளீர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்றவைகளை இன்னுமொருவரால் குறிப்பிட்ட கணனியை பயன்படுத்தி அறிந்து கொள்ளவும் முடியும்.

எனவே இது போன்ற சிக்கல்களை தவிர்த்து பாதுகாப்பான இணைய உலாவலை மேற்கொள்ள, அதாவது நாம் இணையத்தினை பயன்படுத்தும் போது எமது எவ்வித நடவடிக்கைகளையும் சேமிக்காமல் இணையத்தினை உலாவருவதற்கு ஏராளமான இணைய உலாவிகள் தன்னகத்தே வசதிகளை கொண்டுள்ளது.

அந்த வகையில் மிகவும் பிரதான இணைய உலாவிகளான Google Chrome, மற்றும் Mozilla Firefox போன்றவைகளும் இந்த வசதியினை தன்னகத்தே கொண்டுள்ளது.

இது Google Chrome இணைய உலாவியில் "incognito" Mode எனவும் Mozilla Firefox இல் "Private" Mode எனவும் அழைக்கப்படுகின்றது.

எனவே நீங்கள் இதனை Google Chrome இணைய உலாவியில் பயன்படுத்திக் கொள்ள Google Chrome இணைய உலாவியின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Customize and control எனும் Menu இனை சுட்டி New incognito window என்பதனை சுட்டுக (Ctrl+Shift+N).

இனி தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் இணைய உலாவலை மேற்கொள்ளுங்கள். இதில் உங்கள் எவ்வித இணைய நடவடிக்கைகளும் சேமிக்கப் பட மாட்டாது.

இதனை Mozilla Firefox இணைய உலாவியில் பயன்படுத்திக் கொள்ள குறிப்பிட்ட இணைய உலாவியின் இடது மூலையில் தரப்பட்டிருக்கும் Firefox Menu ஐ சுட்டி New Private Window என்பதனை சுட்டுக (Ctrl+Shift+P).

நீங்கள் இணையத்தினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போதும் உங்கள் வங்கிக் கணக்குகளை இணையத்தின் ஊடாக பயன்படுத்தும் போதும் மேற்கூறிய முறையை பின்பற்றுங்கள். அதுவே மிகவும் பாதுகாப்பானது.

இளமையா இருக்க எளிய யோசனை!

இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும்.

சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!

சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது

மொபைலின் முழு வரலாறு இதுதான்...!

மொபைலின் முழு வரலாறு இதுதான்...!

இன்றைக்கு மொபைல் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் அனைவரும் லேன்ட்லைன் போனில் ஹலோ ஹலோனு கத்திக் கொண்டு இருந்திருப்போம்.

மேலும் லேன்ட்லைன் போனின் பில்லை பார்த்து மயக்கம் அடைந்தவர்கள் ஏராளம் உண்டு தமிழ்நாட்டில்.

அவையனைத்தையும் இன்று உடைத்து லேன்ட்லைன் என்றால் என்ன என்று கேட்கப் போகும் தலைமுறை வர இன்னும் தூரமில்லை எனலாம் இதற்கு முதற்காரணம் மொபைல் தான்.

இன்று ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920
இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது

1947
ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1955
காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1969
பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973
மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979
ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983
டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984
விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989
மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990
2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991
அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992
மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996
மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997
எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000
இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001
வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002
டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004
மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006
மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007
ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2008
டச் ஸ்கிரின் மொபைல் வந்து கலக்கியது.

2010
ஆண்ட்ராய்டு மொபைல் உலகை தனதாக்கியது.

2014
எதிர்கால தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு மொபைல் தயாரிக்கப்பட்டு வருகிறது.