Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

ஷாரூக்கான் வாய்ப்பைத் தட்டிப்பறித்த தனுஷ்!

இந்தியில் ராஞ்சனா படத்தில் நடித்து பெயர் வாங்கிய தனுஷ், அதன்பிறகு அங்குள்ள முக்கிய இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.


என்றபோதும், உடனடியாக இந்தியில் அதிகமான படங்களில் நடிக்க விரும்பாத தனுஷ், தமிழில் தனக்கென இருக்கிற இடத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக, அதற்கடுத்து தமிழில் மூன்று படங்களில் கமிட்டாகி விட்டார்.


இந்தநிலையில்தான், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த சீனிகம், பா படங்களை இயக்கிய பால்கி, அமிதாப்புடன் நடிப்பதற்கு தனுசுக்கு அழைப்பு விடுத்தார். அமிதாப்புடன் நடிக்கும் வாய்ப்பு என்பது மட்டுமின்றி, வாய் பேசாத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். அதனால் நடிப்பில் தனது இன்னொரு முகத்தை காண்பிக்க சரியான சான்ஸ் என்று இந்த படத்திற்கு கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் தனுஷ்.


இதற்கிடையே, இப்படத்தில் முதலில் அமிதாப்புடன், ஷாரூக்கான்தான் நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், ராஞ்சனாவில் தனுஷின் நடிப்பையும் அவருக்கு பாலிவுட்டில் இருக்கிற வரவேற்பையும் பார்த்த பிறகுதான் ஷாரூக்கானை விட தனுஷையே நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாராம் பால்கி.


ஆக, ஷாரூக்கான் வேடத்தில் தனுஷ் நடித்து வருவதால், தனுஷ் பற்றிய பேச்சும், எதிர்பார்ப்புகளும் பாலிவுட்டில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாம்.

0 comments:

Post a Comment