Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள்!

இன்றைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனையானது பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றங்கள் தான் முக்கிய காரணமாகின்றன. மேலும் பெண்களை விட ஆண்களுக்கு நிறைய கெட்ட பழக்கவழக்கங்கள் இருப்பதால், அந்த பழக்கவழக்கங்களால் மலட்டுத்தன்மையானது ஏற்படுகிறது.

 எனவே அத்தகைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு, வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால், நிச்சயம் மலட்டுத்தன்மையில் இருந்து விடுபடலாம். இப்போது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் என்னவென்று ஒருசிலவற்றைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மாற்றி வந்தால், மலட்டுத்தன்மை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

புகைப்பிடித்தல்

பெரும்பாலான ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பிடிப்பது தான் முக்கிய காரணம். ஏனெனில் சிகரெட்டில் நிக்கோட்டின் மற்றும் புகையிலை இருப்பதால், அது விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, அதன் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உடல் எடை 

உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்திவிடும். எப்படியெனில், உடல் எடை அதிகமானால், ஹார்மோன்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, அது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

மன அழுத்தம்

தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் வேலைப்பளுவினால் ஆண்கள் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு மன அழுத்தம் அதிகமானால், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஏனென்றால், மன அழுத்தத்தினால் விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடுகிறது.

லேப்டாப் 

தற்போது லேப்டாப் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அவ்வாறு ஆண்கள் லேப்டாப்பை உபயோகிக்கும் போது, மடியில் வைத்துக் கொண்டு வேலை செய்வதால், அதிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

ஸ்டெராய்டுகள் 

நடிகர்கள் போன்று உடல் வடிவமைப்பை கொண்டு வருவதற்கு பெரும்பாலான ஆண்கள் ஸ்டெய்டுகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு ஸ்டெய்டுகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.

சுடுநீர் குளியல்

உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு, ஆண்கள் சுடுநீர் குளியலை மேற்கொள்வார்கள். ஆனால் அவ்வாறு சூடான நீரில் குளியலை மேற்கொண்டால், அது விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, நாளடைவில் மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

மொபைல் 

மொபைல் இல்லாதோரை இவ்வுலகில் காண இயலாது. அந்த வகையில் ஆண்கள் அந்த மொபைல் போனை பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்வதால், அதிலிருந்து வெளிவரும் அதிர்வுகள் மற்றும் கதிர்களால், விதைப்பையில் அதிர்ச்சி ஏற்பட்டு, மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

ஆல்கஹால் 

ஆல்கஹாலை அதிகம் குடித்தால், டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தியானது குறைந்து, விந்தணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இந்த நிலை நீடித்தால், நாளடைவில் மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிடும்.

இறுக்கமான உள்ளாடை

எப்போதும் இறுக்கமான உள்ளாடையை அணியக்கூடாது. அவ்வாறு அணிந்தால், விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுவின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

போதைப் பொருட்கள் 

மரிஜுவானா என்னும் போதைப்பொருள் இளைஞர்களை எளிதில் அடிமையாக்கிவிடும். இதனை ஒருமுறை எடுத்துக் கொண்டால், அதிலிருந்து வெளிவருவது கடினம். மேலும் இந்த மரிஜுவானா விந்தணுவின் உற்பத்தியை குறைத்துவிடும்.

0 comments:

Post a Comment