Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள்!

இன்றைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனையானது பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றங்கள் தான் முக்கிய காரணமாகின்றன. மேலும் பெண்களை விட ஆண்களுக்கு நிறைய கெட்ட பழக்கவழக்கங்கள் இருப்பதால், அந்த பழக்கவழக்கங்களால் மலட்டுத்தன்மையானது ஏற்படுகிறது.

 எனவே அத்தகைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு, வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால், நிச்சயம் மலட்டுத்தன்மையில் இருந்து விடுபடலாம். இப்போது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் என்னவென்று ஒருசிலவற்றைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மாற்றி வந்தால், மலட்டுத்தன்மை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

புகைப்பிடித்தல்

பெரும்பாலான ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பிடிப்பது தான் முக்கிய காரணம். ஏனெனில் சிகரெட்டில் நிக்கோட்டின் மற்றும் புகையிலை இருப்பதால், அது விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, அதன் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உடல் எடை 

உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்திவிடும். எப்படியெனில், உடல் எடை அதிகமானால், ஹார்மோன்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, அது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

மன அழுத்தம்

தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் வேலைப்பளுவினால் ஆண்கள் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு மன அழுத்தம் அதிகமானால், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஏனென்றால், மன அழுத்தத்தினால் விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடுகிறது.

லேப்டாப் 

தற்போது லேப்டாப் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அவ்வாறு ஆண்கள் லேப்டாப்பை உபயோகிக்கும் போது, மடியில் வைத்துக் கொண்டு வேலை செய்வதால், அதிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

ஸ்டெராய்டுகள் 

நடிகர்கள் போன்று உடல் வடிவமைப்பை கொண்டு வருவதற்கு பெரும்பாலான ஆண்கள் ஸ்டெய்டுகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு ஸ்டெய்டுகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.

சுடுநீர் குளியல்

உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு, ஆண்கள் சுடுநீர் குளியலை மேற்கொள்வார்கள். ஆனால் அவ்வாறு சூடான நீரில் குளியலை மேற்கொண்டால், அது விந்தணுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, நாளடைவில் மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

மொபைல் 

மொபைல் இல்லாதோரை இவ்வுலகில் காண இயலாது. அந்த வகையில் ஆண்கள் அந்த மொபைல் போனை பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்வதால், அதிலிருந்து வெளிவரும் அதிர்வுகள் மற்றும் கதிர்களால், விதைப்பையில் அதிர்ச்சி ஏற்பட்டு, மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

ஆல்கஹால் 

ஆல்கஹாலை அதிகம் குடித்தால், டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தியானது குறைந்து, விந்தணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இந்த நிலை நீடித்தால், நாளடைவில் மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிடும்.

இறுக்கமான உள்ளாடை

எப்போதும் இறுக்கமான உள்ளாடையை அணியக்கூடாது. அவ்வாறு அணிந்தால், விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுவின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

போதைப் பொருட்கள் 

மரிஜுவானா என்னும் போதைப்பொருள் இளைஞர்களை எளிதில் அடிமையாக்கிவிடும். இதனை ஒருமுறை எடுத்துக் கொண்டால், அதிலிருந்து வெளிவருவது கடினம். மேலும் இந்த மரிஜுவானா விந்தணுவின் உற்பத்தியை குறைத்துவிடும்.

பொது இடங்களில் காற்றுப்பிரிவதை நிறுத்த முடியவில்லையா?

கும்பலாக ஆட்கள் நிறைந்துள்ள இடத்தில் பலமான சத்தத்துடன் வாயுவை வெளியேற்றுவது தர்மசங்கடமாக தானே இருக்கும். இந்த சூழ்நிலை யாருக்கு வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஏற்படலாம். இது முக்கியமான தொழில் சந்திப்பிலும் நடக்கலாம் அல்லது காதல் பொங்கும் டேடிங்கிலும் நடக்கலாம். பொது இடத்தில் வாயுவை வெளியேற்றினால் அது மதிப்பு குறைவாக கருதப்படும். அப்படி வாயுவை வெளியேற்றிய பின் அந்த வாடை போக அந்நேரத்தில் அருகில் இருப்பவர்கள் நற்பதமான காற்றை தேடி அவர்கள் முகத்தை சுருக்கினால், அது இன்னமும் தர்மசங்கடமாக இருக்கும்.

ஒழுங்கில்லா உணவு செரிமானமின்மை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் நேரத்திற்கு உண்ணாமல் இருப்பது போன்றவைகள் தான் வாயு விட காரணமாக அமைகிறது. அது தப்பாக இருந்தாலும் கூட அதை யாரும் வேண்டுமென்றே செய்வதில்லை.இயற்கையான அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் முடிந்த வரை வாயு வெளியேற்றுவதை தவிர்க்க சில வழிகள் உள்ளது. அதில் சிலவற்றை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்:

இனிப்பு பண்டங்கள் 

தவறான நேரத்தில் கெட்ட வாடை அடிக்கும் வாயு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் உண்ணும் இனிப்பு பண்டங்களே. பலரின் முன்னிலையில் பலத்த சத்தத்துடன் வாயு விடுவதை தவிர்க்க இனிப்பு உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரையை பாக்டீரியாக்கள் எளிதில் உடைத்து, கெட்ட வாடை அடிக்கும் வாயுவை வெளியேற்றும். அதனால் வாயு விடுவதை தவிர்க்க இனிப்பு பலகாரங்கள் உண்ணுவதை குறைத்து கொள்வது ஒரு வழியாகும். நாம் உண்ணும் பல உணவுகளில் சர்க்கரை அடங்கியுள்ளது. அதனால் உண்ணும் போது கவனத்துடன் இருங்கள். முக்கியமான பொது கூட்டங்களுக்கு செல்லும் முன் இனிப்புகளை உண்ணாதீர்கள்.

கார்போஹைட்ரேட்ஸ்

 பாக்டீரியாக்களால் செரிமானம் ஆகும் போது, கார்போஹைட்ரேட்ஸில் இருந்து கார்பன் டைஆக்சைட் உருவாகும். இந்த வாய்வு மிகுந்த வாடையுடன் இருக்கும். அதே போல் அது நம் உடலை விட்டு வெளியேறும் போது அதிக சத்தத்துடன் வெளி வரும். இதனை தவிர்க்க கார்போஹைட்ரேட்ஸை தவிர்க்கவும். வாயு ஏற்பட முக்கியமான கார்போஹைட்ரேட் மூலமாக விளங்குவது சோடா. அதனால் பொது இடங்களுக்கு செல்வதற்கு முன், சோடா மற்றும் சோடா அடங்கியுள்ள பானங்களை தவிர்க்கவும்.

ஸ்டார்ச் 

உருளைக்கிழங்கு, தானியங்கள் என பல வகையான உணவுகளில் ஸ்டார்ச் அடங்கியுள்ளது. இவைகளை உட்கொள்ளும் போது அதிக அளவில் வாயு உருவாகி அதிகமாக வாயு விடுவீர்கள். அதனால் பொது இடங்களில் பல பேருக்கு மத்தியில் கெட்ட வாடையுடன் வாயு விடுவதை தவிர்க்க அங்கே செல்வதற்கு முன் இவ்வகை உணவுகளை தவிர்க்கவும். வயிற்றில் வாயு உருவாக, அதற்கான குணங்கள் அதிகளவில் அரிசி சாதத்தில் தான் உள்ளது. அதனால் சில சந்தர்ப்பங்களில் அதை தவிர்ப்பதும் நல்லது.

புகைப்பிடித்தல்

வாயு வெளியேறுவதற்கு புகைப்பிடிக்கும் பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. புகைப்பிடிப்பதால், வாயு வெளியேறுவதை தவிர, எண்ணிலடங்கா உடல்நல கோளாறுகளும் ஏற்படும். புகைப்பிடிப்பதால் உங்கள் உடலில் தேவையற்ற வாயுக்கள் சேர்ந்து கொண்டே போகும். இது வாயுவாக வெளியேறும். அதனால் முடிந்த வரையில் புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்.

வயிறு உப்புச்சத்தை தவிர்க்கும் மருந்துகள் 

வயிறு உப்புச்சத்தை தவிர்க்கும் சிரப், மாத்திரைகள், பவுடர்கள் என பல வகையில் சந்தையில் கிடைக்கிறது. வயிற்றில் ஏற்பட்டுள்ள அனைத்து வாயுக்களையும் நீக்கி வயிற்றை சுத்தமாக வைக்க உதவும். இவ்வகை மருந்துகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு வாய்வு மற்றும் வயிறூதுதல் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டால், இவ்வகை மருந்துகளை எப்போதும் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். செயல்படுத்தப்பட்டுள்ள கார்பன் அடிப்படை மாத்திரைகள் வாயு விடுவதை தவிர்ப்பதால் அதுவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேற்கூறிய டிப்ஸ் எதையாவது அல்லது அனைத்தையுமே பின்பற்றி பொது இடங்களில் வாயு விடுவதை தவிர்த்திடுங்கள். பொது இடத்தில் வாயு விட்டால் அசிங்கமாகத் தானே இருக்கும்.

புகைத்தல் பழக்கத்தால் உங்கள் உதடுகள் கறுத்து விட்டதா?

புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலும் எப்போதும் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது கருமையான உதட்டைப் பார்த்து கவலைப்படுகிறீர்களா? அப்படியெனில் முதலில் சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

 ஏனெனில் கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிகரெட் தான். அதிலும் இத்தகைய கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம். ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன. அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, இரத்தக் குழாய்கள் கடினமாகி, ஆக்ஸிஜனை எடுத்துத் செல்லும் இரத்த அணுக்களின் அளவும், இரத்த ஓட்டமும் குறைந்து, முகம் மற்றும் உதட்டிற்கு செல்லும் சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, நிறமானது மங்கிவிடுகிறது.

 மேலும் சிலருக்கு முகத்தில் வறட்சியுடன், சருமமானது வெளுத்து, ஆங்காங்கு ஒருவித புள்ளிகளுடன் இருக்கும். இதற்கு சிகரெட்டின் இருக்கும் நிக்கோட்டின் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சுவதை தடுத்து, சருமத்தின் இயற்கையான நிறத்தை இழக்கச் செய்கிறது. எனவே இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தடுப்பதற்கு முதலில் சிகரெட் பிடிப்பதை தவிர்த்து, உதட்டின் கருமையைப் போக்கும் ஒருசில நல்ல பலனைத் தரும் இயற்கைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அந்த பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதனை தவறாமல் பின்பற்றி வந்தால், உதட்டில் உள்ள கருமை நீங்கி, உங்கள் துணையிடம் நீங்கள் போய் முத்தம் கேட்பது போய், அவர்களே வந்து முத்த மழையைப் பொழிவார்கள்.

தேன்

 மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேனும் உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். அதற்கு பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.

பாதாம் பால்/பாதாம் எண்ணெய் 

தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.

மாதுளை 

மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.


எலுமிச்சை

 ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்-பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.

தயிர்

 பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.

வெண்ணெய்

 கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம். எனவே வறட்சியைப் போக்குவதற்கு உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.

கிளிசரின்

 கிளிசரின் ஒரு லிப்-பாம் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், கிளிசரின் உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, உதட்டின் கருமையையும் போக்கும்.

சர்க்கரை

 உதட்டிற்கு ஸ்கரப் செய்வதற்கு சர்க்கரை சிறந்த பொருள். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.

பீட்ரூட் 

பீட்ரூட் உதட்டில் உள்ள கருமையை தற்காலிகமாக மறைக்கவும், நிரந்தரமாக போக்கவும் உதவும் ஒரு பொருள். அதற்கு தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், உதடு நாளடைவில் அழகான நிறத்தை பெறும்.

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்

 உதட்டின் கருமையைப் போக்குவதற்கு இருக்கும் சிறந்த வழிகளுள் ஒன்று, எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரினை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை நன்கு கலந்து, ஒரு வாரத்திற்கு தொடர்ந்து தினமும் தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமை நீங்கி, உதடு மென்மையாகும். மேலும் இந்த கலவையை முகத்திற்கும் பயன்படுத்தலாம்.

ரோஜாப்பூ

ரோஜாப்பூவின் இதழை அரைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, குளிர வைத்து, பின் அதனை தினமும் உதட்டிற்கு தடவி வந்தால், இது உதட்டிற்கு லிப்-பாம் போன்று இருப்பதோடு, நல்ல தீர்வையும் தரும்

உடல் துர்நாற்றத்தை போக்குவது எப்படி?

பெரும்பாலும் கோடையில் வியர்வையானது அதிகம் வெளியேறும். ஆகவே பலர் அந்த துர்நாற்றத்தைத் தடுக்க டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் சில சமயங்களில், அந்த பொருட்களை உபயோகிப்பதற்கு பின்னும் துர்நாற்றம் வெளியேறுகிறது. இதனால் பலர் தன்னம்பிக்கை இழந்துவிடுகின்றனர். இத்தகைய வியர்வை நாற்றம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஹார்மோன்களின் மாற்றங்கள், உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை போன்றவை முக்கியமானவை.

வியர்ப்பது என்பது ஒரு இயற்கை செயல் என்பதால், அதனை நிறுத்த முடியாது. வியர்வை வெளியேறாமல் இருந்தாலும், அது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சொல்லப்போனால் வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தான் அத்தகைய துர்நாற்றத்தை ஏற்படுத்துவின்றன.

எனவே இத்தகைய வியர்வையினால் ஏற்படும் நாற்றத்தைப் போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. இவற்றை பின்பற்றி வந்தால் நிச்சயம், உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம்.

சோப்பு

 வியர்வை துர்நாற்றத்தைப் போக்குவதற்கு சிறந்த வழியென்றால், துர்நாற்றம் வரும் இடங்களை சோப்பு பயன்படுத்தி, நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வியர்க்கும் போது வெளிவரும் நீர் பாக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்தும் நாற்றத்தைப் போக்கலாம்.

சுத்தமான ஆடைகள்

தினமும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அதிகமான அளவில் வியர்த்தால், அவர்கள் காட்டன் ஆடைகளை அணிவது சிறந்தது. ஏனெனில் காட்டன் வியர்வையை எளிதில் உறிஞ்சி, அதிலிருந்து வெளியேறும் நாற்றத்தை விரைவில் வெளியேற்றிவிடும்.

தேன் 

குளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

அருகம்புல் சாறு

 தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.

பேக்கிங் சோடா 

குளித்த பின், சிறிது பேக்கிங் சோடாவை அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.

வெள்ளை வினிகர் 

குளிக்கும் போது, வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு அக்குளை கழுவினால், உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ரோஸ் வாட்டர்

 உடல் துர்நற்றத்தைப் போக்குவதில் ஒரு சிறந்த வழியென்றால், அது ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது தான். அதிலும் குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் 

ஆப்பிள் சீடர் வினிகரை குளிக்கும் போது, இறுதியில் ஒரு கப் நீரில் கலந்து, அக்குளைக் கழுவினால், அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழிப்பதோடு, அதிகப்படியான வியர்வையையும் தடுக்கும்.

தக்காளி சாறு 

தக்காளி சாறும் உடல் துர்நாற்றத்தை தடுக்கும். அதற்கு ஒரு கப் தக்காளி சாற்றினை குளிக்கும் தொட்டியில் ஊற்றி, அதில் நீரை நிரப்பி, அதனுள் 15 நிமிடம் உட்கார்ந்தால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

 8 டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் கலந்து, ஒரு நாளைக்கு பல முறை துர்நாற்றம் வரும் இடத்தில் ஊற்றிக் கழுவி வந்தால், வியர்வையானது கட்டுப்படுவதோடு, துர்நாற்றமும் நீங்கும்.

புதினா

 குளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.

தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்க!

உடல் அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும்.


இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.


அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.


இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.


ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.


அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.


* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது.
அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால் நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.


* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.


* பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது.


எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


* ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது.

எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.


* தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி தழும்புகளை மறைய வைக்கும்.


அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.


* டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு அதன் இலைகளை தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?


காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.


பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.


ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தை குலத்தில் பிறந்தவன் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டான். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டான். கலிங்கம் என்றால் அணை என்று பொருள். அதனால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டு பின்னாளில் காலிங்கராயன் என மருவியதாக வரலாறு. வாய்க்கால் நேராக கொண்டு சென்றால் அதிகமான வயலுக்கு பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும்.


எனவே நீர் தேங்கி நின்று வயலுக்கு பாய்ந்து நிலம் வளப்படுத்துவதற்காகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவும், மேட்டுபாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. பாய்ந்தோடும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த காலிங்கராயன் கையாண்ட யுக்தி இப்போதைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.

பிள்ளையார் சுழி! காரணம்!

எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில் லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் சரி, கடை சாமான் லிஸ்டானாலும் சரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம்.  எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்து தான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது  Written proof எழுத்து மூல நிரூபணமாகவே பிள்ளையார் சுழியில் தெரிகிறது.

பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம். பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’ போடு கிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே? சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே  அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும்,  நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வ ட்ட வடிவந்தானே?

இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீக்ஷையில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன் யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’ என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸைஃபர் பண் ணிக்கொண்டு வருகிறவனை, ‘‘என்னடா சுழி!’’ என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப்  பூர்ணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’ பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.

வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இர ண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு  நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight   forward என்கிறார்கள். குணம், குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான். ‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ, உ, ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்‘காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள்  இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம  ஸம்ஹாரம்; ஈஸ்வரன்.

த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம்  என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ, உ, ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உமஅ என்று இருக்கின்றன  அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’ என்பது முதல் எழுத்தாயிரு ப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல் லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ, உ, ம வில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது.  ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன் றுகிறது. அதாவது, அவர் ‘’தாயைப் போலப் பிள்ளை’’ மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற  ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’இவற்றையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எ ல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்து கொண்டு ‘உ’ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

ப்ரணவத்தில் ‘உ’விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’என்றே  பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப் பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ‘‘சுக்லாம்பரதரம்  விஷ்ணும்’’ என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’என்பது சிவசக்தி புத்ரனை விஷ்ணுவோடும்  ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ண வத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது! வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத் தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக (axis ஆக) நேரான (straight ஆன) ஒன்று இருந்தாக வேண்டும்.

விஷ்ணு தன் விரலையே நேராக  நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயு தத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப்  பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் சரி (இது ஒளி)  விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட் டியானாலும் சரி (இது ஒலி), இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியி ருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக் கொண்டிருக் கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line  ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும்.

வட்டமாகச் சுற்றுகிற  ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும்  போடுகிறோம். எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட் ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்சாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார்  சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவசக்தி ஸ்வரூபமான நாதபிந்துக்களாகக்கூடச் சொல் லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸூக்ஷ்மமான விஷயம்.

ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு,  அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று  என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம  பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்து தான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.

கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ‘‘பெரும்பாரக்கோடும்’’, ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே’’ என்றெல்லாம் அவ்வைப் பாட்டி  சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக் கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில்  கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப்  பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத் தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!’’

காஞ்சி பரமாச்சார்யார் என்ற ‘தெய்வத்தின் குரல்’  

நன்மை தரக்கூடிய தெருக்குத்து...


நாம் வாஸ்து படி ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.


அதில் முக்கியமாக, ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தில் ஏதேனும் தெருக்குத்து இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும்.


தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும்.


தெருக்குத்து இரண்டு வகைப்படும். 

அவை,

நன்மை தரக்கூடிய தெருக்குத்து,


நன்மை தராத தவறான தெருக்குத்து.


நன்மை தரக்கூடிய தெருக்குத்து,


வடகிழக்கு(வடக்கு) தெருக்குத்து.


வடகிழக்கு(கிழக்கு) தெருக்குத்து.


வடமேற்கு (மேற்கு) தெருக்குத்து.


தென்கிழக்கு(தெற்கு) தெருக்குத்து.

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி தேடி வருகிறார் பி.வாசு!

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி தேடி வருகிறார் பி.வாசு

        ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்தை இயக்கியவர் பி.வாசு. அதன் பிறகு அஜித்துடன் பரமசிவன், ரஜினி நடிப்பில் குசேலன் என சில தோல்விப் படங்களையும் கொடுத்தார். தெலுங்கிலும் கன்னடத்திலும் சந்திரமுகி பார்ட்-2 வை எடுத்து வெற்றிகண்ட பி.வாசு, அதை தமிழில் ரீமேக் செய்யப்போகிறார் என்றும் அதில் ரஜினி நடிப்பார் என்றும் பேசப்பட்டது.


அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், இயக்குனர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். இந்த கதையை  பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். “ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள்.



இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை நடித்திருக்காத ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.



பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இப்படத்திற்கான அதிகப்படியான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் இப்படத்திற்காக பிரத்தியேகப் பணியாற்ற உள்ளனர்.



இப்படத்தின் கதையை இயக்குனர் பி.வாசுவிடம் கேட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரே வார்த்தையில் ‘வாவ்’ என சொல்லி  அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த சிறந்த மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இசையமைப்பாளராக, ஒளிப்பதிவாளராக, படத்தொகுப்பாளராக, கலை இயக்குனராக, சண்டைப் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளனர்.



வட இந்தியாவில் உள்ள பிரபலமான மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும், பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ள அரங்குகளிலும் இப்படம் படமாக்கப்பட உள்ளது. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளதால் ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக சிறப்புப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.



பிரியாமணி நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘சாருலதா’  படத்தைத் தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் சார்பாக கே.ரமேஷ் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

சிம்பு - தனுஷின் ’காதலர் தின’ பரிசு!


சிம்பு - தனுஷின் ’காதலர் தின’ பரிசு!


தமிழ்த்திரையுலகில் தற்போதைய காதல் மன்னன் ஆர்யா தான் என்றாலும் சிம்புவுக்கு என்று தனி மார்கெட் இருப்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை.


அதுமட்டுமில்லாமல் ஹன்சிகாவுடன் காதலில் விழுந்து திருமணத்திற்காக காத்திருக்கும் சிம்பு காதலர் தினத்தை எப்படி கொண்டாடப்போகிறார் என்பதைப் பார்க்க திரையுலகம் ஆவலாக இருந்தது.


தமிழ்த்திரையுலகில் தற்போதைய காதல் மன்னன் ஆர்யா தான் என்றாலும் சிம்புவுக்கு என்று தனி மார்கெட் இருப்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை.


அதுமட்டுமில்லாமல் ஹன்சிகாவுடன் காதலில் விழுந்து திருமணத்திற்காக காத்திருக்கும் சிம்பு காதலர் தினத்தை எப்படி கொண்டாடப்போகிறார் என்பதைப் பார்க்க திரையுலகம் ஆவலாக இருந்தது.

தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் பல டயட்களை பின்பற்ற வேண்டியுள்ளது. குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் மட்டும் ஒரு தாயின் பெரிய கடமை முடிந்துவிட்டது என்பதில்லை.

அதற்கு பின்னர் தான் அந்த கடமையே ஆரம்பிக்கிறது.ஆம், குழந்தை பிறந்த பின் அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே அவர்களுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் தான் அளிக்கும். ஆனால் அதே நேரம் தாயின் உடலும் மிகவும் வலுவின்றி இருக்கும்.

அதனால் அவர்கள் நிறைய சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் சத்தான உணவுகள் என்றதும், அனைத்து உணவுகளையுமே சாப்பிட்டுவிட முடியாது.குழந்தைகளுக்கு பிரச்சனை வராமல் இருக்க எந்த வகை உணவுகளை தாய்மார்கள் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

வெங்காயம், மிளகாய் மற்றும் மிளகு போன்ற காரமான உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றிற்கு உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் சில நேரங்களில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றை கூட ஏற்பட நேரிடும்.

ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது மிகவும் சென்சிட்டிவ்வானது. ஆகவே இத்தகைய காரமான பொருட்களை அவர்களது உடல் ஏற்றுக் கொள்ளாது.அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பலவற்றை தாய்மார்கள் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது. பிரசவத்திற்கு பின் பெண்கள் உடலை தேற்றுவதற்கு நன்கு காய்கறிகளை சாப்பிட வேண்டியது தான். ஆனால் அவற்றில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமான அளவில் பால் பொருட்களை சாப்பிட்டால், அவை குழந்தைக்கு பெருங்குடலில் பெரும் வலி ஏற்படும்.

ஆகவே அந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல்ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவில் மெர்குரி உள்ளது.

இது குழந்தைக்கு மிகவும் பாதிப்பானது. ஆகவே மெர்குரியின் குறைவாக உள்ள மீன்களான டூனா, கெளுத்தி, சாலமன் மற்றும் பல மீன்களை குறைந்த அளவில் சாப்பிடலாம்.காப்பியை குறைந்த அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு ஒரு வித நடுக்கம் மற்றும் உடலில் எரிச்சலை உண்டாக்கும்.

சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்?

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ,  பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம்  காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபல பெண்களே சுகப்பிரசவத்தை விரும்பி, அதற்காக மெனக்கெட்டு, முயற்சியில்  வெற்றியும் பெறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் சாமானியப் பெண்களுக்கும் அது சாத்தியம்தானே? மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதமிடம்  பேசினோம்...

பிரசவம் என்பதே செத்துப் பிழைக்கிற சம்பவம்தான். அப்படியிருக்கையில் அதென்ன சுகப்பிரசவம்?
தானாக வலியெடுத்து, பெரிய மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாமல், பத்து மாதக் கர்ப்பம் முடிவுக்கு வந்து, கர்ப்பப்பை வாய் திறந்து, குழந்தை  வெளியில் வருவதையே சுகப்பிரசவம் என்கிறோம். இதில் மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியே தேவையிருக்காது. இந்த சுகப்பிரசவத்திலேயே  இன்னொரு வகை உண்டு, ‘அசிஸ்டெட் நார்மல் டெலிவரி’ எனப்படுகிற அதில், மருத்துவரின் உதவியோடு, கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் நிகழும்.  ‘ஃபோர்செப்ஸ்’ முறையிலும், ‘வாக்குவம்’ முறையிலும் நிகழ்கிற சுகப்பிரசவங்கள் இந்த ரகம்,

ஃபோர்செப்ஸ் என்பது, குழந்தையின் தலையின் இரண்டு பக்கங்களிலும் ராடு போன்ற ஒரு கருவியை வைத்து, குழந்தையை வெளியே இழுக்கும்  முறை, இது குழந்தை, தாய் என இருவரையும் அதிகம் பாதிப்பதால், இப்போதெல்லாம் அவ்வளவாக செய்யப்படுவதில்லை, குழந்தையின் இதயத்  துடிப்பு குறைந்தாலோ, தாயின் உடல் பலவீனமாக இருந்தாலோ ‘வாக்குவம்’ முறையில் பிரசவம் பார்க்கப்படும், குழாய் போன்ற ஒரு பகுதியைக்  குழந்தையின் தலையில் பொருத்தி, ஒருவித அழுத்தம் உண்டாக்கி, குழந்தையை வெளியே எடுப்பது. ‘நண்பன்’ படத்தில், இலியானாவின் அக்காவுக்கு  விஜய் பிரசவம் பார்த்த காட்சி நினைவிருக்கிறதா? இது கிட்டத்தட்ட அப்படியானதுதான்!

யாருக்கெல்லாம் சுகப்பிரசவம் நிகழும்?

பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் சுகப்பிரசவம் நிகழும். ரொம்பவும் குள்ளமாக - அதாவது, 145 செ.மீக்கும் குறைவாக - உள்ள பெண்களுக்கு மட்டும்  சுகப்பிரசவம் நிகழும் எனக் காத்திருக்கக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். போலியோ தாக்கியவர்கள், இடுப்பெலும்பில் பாதிப்புள்ளவர்கள்,  முதுகெலும்பு வளைந்து, கூன் விழுந்தவர்களுக்கும் சுகப்பிரசவம் அனுமதிக்கப்படுவதில்லை. சாதாரணமாக ரத்த அழுத்தம் 120/80 என்றிருந்தால்,  சிலருக்கு பிரசவத்தின் போது அது 160/100 அல்லது 160/120 என எக்குத் தப்பாக எகிறும்.

அதன் விளைவாக அவர்களுக்கு வலிப்பு வரலாம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்கலாம் என்பதால், அவர்களுக்கும் சுகப்பிரசவம்  அனுமதிக்கப்படுவதில்லை.அளவுக்கதிக குண்டாக இருந்தாலும்  - அதாவது 100 கிலோ, 120 கிலோ எடை இருக்கும் பெண்களுக்கும் - சுகப்பிரசவம்  நிகழும் வாய்ப்புகள் குறைவு.

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்னதான் காரணம்?

சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள்.  கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள். இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து  விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை  பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை.

கிராமங்களில் பிரசவ நாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய்  மாதிரிப் பார்க்கிறார்கள். நின்றால் ஆகாது... நடந்தால் ஆகாது... இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி  இருக்கிறது,உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். இடுப்பெலும்பு விரிய  ஆரம்பிக்கும்.

பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன்  சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும். சிலருக்கு பிரசவ தேதி  நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய்  விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும்.

இதெல்லாமும் முக்கியம்...

கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம்1கிலோ எடை கூட வேண்டும். இன்றைய பெண்களுக்கோ சர்வசாதாரணமாக  2 முதல் 3 கிலோ எடை எகிறுகிறது. மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும். 15 - 20 எனத்  தாண்டும்போதும் அதன் விளைவால் பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம். எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, கோதுமை, கீரை,  காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, சின்னச் சின்ன எளிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம் . உடம்புக்கு அசைவே கொடுக்கக் கூடாது என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் இன்றைய பெண்கள். ‘குனியலாமா டாக்டர்? அதனால்  ஒன்றும் ஆகாதே’ எனக் கேட்கிறவர்களும் உண்டு. இடுப்பெலும்பு விரிய, உட்கார்ந்து, எழுந்திருக்க வேண்டியது மிக முக்கியம். மருத்துவரின்  ஆலோசனையின் பேரில் அதற்கான பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு, தினம் அரை மணி நேரம் வீட்டிலேயே செய்யலாம். அப்படிச் செய்ததன்  பலனாக, 4.5 கிலோ உள்ள குழந்தையைக் கூட, சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார் ஒரு பெண்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலி, கால் வலியெல்லாம் வரும். அதில் எது நார்மல், எது பிரச்னைக்குரியது என்பதை மருத்துவரிடம் கேட்கலாம்.  வேலைக்குச் செல்கிற பெண்கள், எப்படி உட்கார்வது சரி எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இருக்கையில், முதுகுக்குப் பின்னால் தலையணை  வைத்துக் கொள்ளலாம்.

ஒருக்களித்துதான் படுக்க வேண்டும்.
அப்படிப் படுக்கும்போதும், முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்துக் கொள்ளலாம்.

தினம் அரை மணி நேரம் மெதுவாக நடக்கலாம்.

முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா?

இந்தச் சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக்  கருவுற்றால், அதை ‘வி பேக் ஆப்ஷன்’ என்போம். 2வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க  வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம்.

தலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி,  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன்  செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் தொடர்புண்டா?
வெண்ணெய் சாப்பிட்டால் சுகப்பிரசவம் நிகழுமா, பப்பாளி சாப்பிடலாமா? மாம்பழம் சாப்பிடலாமா என்கிற மாதிரியான கேள்விகள் பலருக்கும் உண்டு.  உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த உணவையுமே அளவோடு எடுத்துக் கொள்கிறவரை பிரச்னையும் இல்லை!

பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முடியாது ஏன்?

 பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான்.


 இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர்.


 இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும்.


அடுத்து பெட்ரோல் இயந்திரத்தில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி ஆகும்.


மேலும், இவற்றில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் குறைவு.


இந்நிலையில், பெட்ரோல் இயந்திரத்தில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது.


அடுத்து டீசல் இயந்திரத்தில், பெட்ரோல் இயந்திரத்தில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது.


இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் இயந்திரங்களுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.


பனியில் இருந்து குழந்தைகளை காக்க, உதடுகளை பாதுகாக்க, பாத வெடிப்பு நீங்க - டிப்ஸ்

சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழையையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும்.

உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும்.  இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான். வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும்.

அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது.

துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.

சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல்வதும் அவசியம்.

எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயத்தம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து. சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

உதடுகளை பாதுகாப்பது எப்படி

சோற்றுக் கற்றாழை சாரையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காமல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் உதடுகள் வெடிக்கும். அதனால் குளிர் காலங்களில் தாகம் எடுக்கவில்லையென்றாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து, வெடித்துப் புண்ணாகும். அதனால் சத்துள்ள பழங்கள்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இளநரையை தடுப்பது எப்படி இதை ட்ரை பண்ணுங்க...!

எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.


முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.


அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.


பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும். அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களை பயன்படுத்தினால் போதும். நிச்சயம் நரை முடி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்னையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.


வாரத்துக்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும். சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.


விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு
நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.  நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் கூந்தலை அலச வேண்டும்.


தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.


நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் ஊற்றி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும். கூந்தலை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணையை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம்.


ப்ளாக் டீ/காபி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி. அதற்கு ப்ளாக் டீ/காபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.பெண்களுக்கு முதலில் நரைக்குமா?


தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்னை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்ய வேண்டும்.


தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம்.


இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது.
இரும்புச்சத்து அவசியம்?


தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர புரோட்டீன், இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் ஏ, ஒமேகா, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. ஆனால் உணவில் கஞ்சத்தனம் காட்டினால், இச்சத்துகள் உணவின் வழியாக கிடைக்காமல் போய் விடும்.


ஊட்டச்சத்துகள் குறைந் தாலோ, உணவு முறையில் குறை இருந்தாலோ, அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும். ஆம், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கிவிடும். 

பிரசவத்துக்குப் பிறகு வயிறு குறைய… எளிய தகவல்கள்!

முன்பு வரை இடுப்பும், வயிறும் மெலிந்திருக்கிற பெண்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு இரண்டும் பெருத்து விடுகிறது. அதன் விளைவாக வயது கூடின தோற்றமும் வருகிறது. வயிற்றைக் கட்டுவது, பிரசவமான பெண்ணின் வயிற்றில் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற அந்தக் காலத்து சிகிச்சைகளை இன்று யாரும் பின்பற்றுவதில்லை. அதெல்லாம் சரியா, தவறா என்கிற குழப்பம் இந்தக் காலத்துப் பெண்களுக்கு அதிகம்.

பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன வயிற்றைக் குறைக்க என்னதான் வழி? ஆலோசனைகள் சொல்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி. ‘‘சுகப்பிரசவமோ, சிசேரியனோ… எதுவானாலும், பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு 6 வார கால ஓய்வு அவசியம். சிசேரியன் செய்தவர்கள், மாதக் கணக்கில் ஓய்வெடுக்க வேண்டும், எந்த வேலை களையும் செய்யக் கூடாது என்பதெல்லாம் இன்று மாறி விட்டது.

இவர்களும் 6 வாரங்களுக்குப் பிறகு வழக்கமான வேலைகளைச் செய்யலாம். படி ஏறலாம். எடை தூக்கலாம். எல்லாம் செய்யலாம். பிரசவித்த பெண்களின் கர்ப்பப் பை சுருங்கத்தான் அந்த 6 மாத கால ஓய்வு. எனவே சிசேரியன் செய்தவர்களுக்குத்தான் வயிறு பெரிதாகும் என்கிற எண்ணமும் யாருக்கும் வேண்டாம். குழந்தை வளர, வளர வயிற்றுத் தசைகள் விரிகின்றன. இடுப்பளவும் மாறுகிறது. பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன அந்த வயிற்றையும், இடுப்பையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.

ஆனால், பெரும்பாலான பெண்கள் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இரண்டும் இதற்கு முக்கியம். பிரசவத்துக்குப் பிறகான 6 வார கால ஓய்வைத் தொடர்ந்து, வயிற்றுத் தசைகளை இறுகச் செய்கிற பயிற்சிகளை மருத்துவரிடம் கேட்டுச் செய்யலாம். உட்கார்ந்து எழுந்திருக்கும் பயிற்சி, நடைப் பயிற்சி போன்றவை பெரிதும் உதவும். வயிற்றைக் குறைக்க பெல்ட் அணியலாமா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு.

பெல்ட் என்பது கர்ப்பத்தின் போது பெருத்து, பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்து, தொய்வடைந்த வயிற்றுக்கு ஒருவித சப்போர்ட் தருமே தவிர, தொப்பையைக் குறைக்காது. அந்தக் காலத்து வழக்கப்படி வயிற்றில் துணியை இறுகக் கட்டுவதைத் தவிர்க்கவும். அதன் விளைவால் முதுகுவலி வரலாம். பிரசவத்துக்குப் பிறகு விரிந்த தசைகளில் எலாஸ்டிக் தன்மை போய் விடும். அதைத் திரும்ப டைட்டாக்க பயிற்சிகளும், கொழுப்பில்லாத உணவுகளுமே உதவும். குழந்தையின் பெயரைச் சொல்லி, காலத்துக்கும் அதிகம் சாப்பிடுவதும், பிரசவமான உடம்பு என மாதக் கணக்கில்
ஓய்வெடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

சிலர் தொய்வடைந்த வயிற்றுக்கு மசாஜ் செய்து கொள்வதுண்டு. அழுத்தப் புள்ளிகள் தெரியாமல் தவறாக மசாஜ் செய்தால், தேவையற்ற சிக்கல்கள் வரலாம். வயிற்றுவலி, குடல் இறக்கம், கர்ப்பப் பை இறக்கம் என பெரிய பிரச்னைகள்கூட வரலாம். எனவே அதைத் தவிர்க்கவும்.பிரசவமான உடனேயே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் பயிற்சிகளையும் உணவுக்கட்டுப்பாட்டுக்கான ஆலோசனைகளையும் கேட்டுப் பின்பற்றுவதே பலன் தரும். தேவைப்பட்டால் யோகாவும் செய்யலாம்…’’ என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.

‘வை ராஜா வை’யும் ஐஸ்வர்யா தனுஷும் - ஒரு சந்திப்பு!

ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம், ‘வை ராஜா வை’.


கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்துவிட்ட ஐஸ்வர்யா, அடுத்ததாக சிங்கப்பூருக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார்.


சிங்கப்பூரில் உள்ள ஏழு நட்சத்திர சொகுசுக்கப்பல் ஒன்றில் சில காட்சிகளையும், ஒரு பாடல் காட்சியையும் படமாக்க இருக்கிறார். இதை முடித்துவிட்டால் கிட்டத்தட்ட முழு படப்பிடிப்பும் முடிந்த மாதிரித்தானாம். அனேகமாக ஒரு வார காலம் அங்கே தங்க இருக்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர்.


படத்தில் இயக்குனர் வசந்த் முதன்முறையாக ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், டேனியல் பாலாஜி சதீஷ், காயத்ரி ரகுராம், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் டாப்ஸியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது.

‘அங்குசம்’ பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் - முழு தகவல் இங்கே!

‘அங்குசம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.


ஸ்கந்தா – ஜெயந்தி குஹா நடிப்பில் துபாய் தொழிலதிபர் மனுகண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் அங்குசம். தகவல் அறியும் சட்டம் என்கிற மகத்தான அங்குசத்தை நம் கையில் வைத்திருந்தாலும், ஊழல் யானைகளை ஒழிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் அறியாமையைப் போக்கும் எண்ணத்துடன் , அரசாங்கமே செய்யவேண்டிய வேலையை தனிமனிதனாக தனது படம் மூலம் செய்ய முயன்றிருக்கிறார் மனுகண்ணன்.


ஸ்ரீகாந்த்தேவா இசையில் உருவான அங்குசம் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்தப் படம் ஒவ்வொரு குடிமகனும் மட்டுமல்ல ஒவ்வொரு பள்ளிமாணவர்களும் பார்க்கவேண்டிய படம் என்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் U சான்றிதழும் வழங்கியிருக்கிறார்கள்.


அங்குசம் படத்தினை பிப்ரவரி 21 இல் ஆரூர் சுந்தரம் வெளியிடுகிறார்.

‘திரைப்பட நகரம்’ - - எக்ஸ்க்ளுசிவ் தகவல்!

திரைப்படத் துறையை மையமாக வைத்து உருவாகும் படம் ‘திரைப்பட நகரம்’.

இப்படத்தை எஸ்.பி. ஞானமொழி இயக்குகிறார். படத்துக்கு கே. நித்யா ஒளிப்பதிவு செய்ய நித்யன் கார்த்திக் இசையமைக்கிறார்.


கதைப்படி, செந்தில், முத்து, ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய 6 நண்பர்களும் சென்னையில் ஒரு அறையில் தங்கி சினிமா வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவதர்ஷினி, நண்பர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வாடகை கூட வாங்காமல் அவ்வப்பொழுது அவர்களுக்கு உணவும் தந்து உதவுகிறார்.


புரொடக்ஷன் மேனே4ர் தம்பி ராமையாவும் அவர்களுக்கு பல இடங்களில் சிபாரிசு செய்கிறார். அவரின் சிபாரிசின் பேரில் நண்பர்களுக்கு ஒரு பட வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களும் நல்லபடியாக அந்த படத்தை உருவாக்குகிறார்கள்.


அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இசையமைப்பாளராக வரும் ஆசிம் தொலைக்காட்சி பேட்டியில் தன்னைப் பற்றி உயர்வாக சொல்ல, இயக்குனராக வரும் செந்திலுக்கு அது பிடிக்காமல் போகிறது. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு நண்பர்கள் மூன்று, மூன்று பேராக பிரிந்து விடுகிறார்கள்.


படம் பாதியிலேயே நின்று விடுமோ என்ற பயத்தில் தம்பி ராமையா அவர்களை அழைத்து சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கிறார்.


சமீபத்தில் வெளியான ‘உ’ என்ற படத்தில் இளைஞர்களுக்கு பக்கபலமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடித்திருந்தார். தற்போது அதே பாணியில், மீண்டும் ஒரு படத்தில் இளைஞர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.

நிமிர்ந்து நில் பிப்ரவரி 28ல் வெளியீடு!

வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் நிமிர்ந்து நில்.


இதில் தமிழில் ஜெயம் ரவி – அமலா பால் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சரத்குமார், சூரி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் ”நான் ஈ” திரைப்படத்தின் நாயகன் நானி நடித்துள்ளார்.


சமுத்திரகனி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற பொருள்படும் படி வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகியுள்ள படமாம் இது.


படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் நிமிர்ந்து நில் படம் தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இந்தப் படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இப்படம் வருகிற பிப்ரவரி 28ல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை அர்ச்சனா தியேட்டரில் நடிகர் விஜய் சேதுபதி !

பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படம் கோவை அர்ச்சனா தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதி, தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அவர் பேசும்போது, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் எனது 6-வது படமாகும்.


ரசிகர்கள் இந்த படத்துக்கு அமோக ஆதரவு அளித்து இருப்பது உற்சாகம் அளிக்கிறது. எனது அடுத்த படம் மெல்லிசை. இந்த படமும் வித்தியாசமானதாக இருக்கும். திரைப்படத்தில் முன்னேறுவது என்பது மிகவும் சிரமமானது. திருமணம் செய்து, மனைவி, மக்களுடன் சிறப்பாக குடும்பம் நடத்துபவரையே நான் உண்மையான ஹீரோ என்று கூறுவேன். காதல் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வாகும்.


இதில் அடுத்தவர்களின் கருத்துக்கு இடமில்லை என்று கூறினார்.இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெயப்பிரகாஷ், பாலசரவணன் ஆகியோரும் ரசிகர்கள் முன்னிலையில் பேசினார்கள்.இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா தியேட்டர் நிர்வாகி ராமன் உண்ணி, காஸ்மா வில்லேஜ் பிக்சர் சிவக்குமார், வாசன் மூவிஸ் வாசன், சுப்பிரமணி, மற்றும் ரங்கசாமி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சித்ராவை சிரிக்க வைத்த சிறுவர்கள்..

பிரபல பின்னணி பாடகி சித்ராவை, குட்டி பாடகர்கள் சிலர் சந்தித்து கேள்விகள் கேட்டார்கள். சிரிக்கவைத்த அந்த கேள்விகளுக்கு ரசித்தபடியே சித்ரா பதிலளித்தார்.

சித்ரா ஆன்டி நீங்கள் போலீஸ் அதிகாரி ஆகியிருந்தால்..?

“நான் போலீஸ் அதிகாரியாகியிருந்தால் அதிரடியாக, நேர்மையுடன் இருந்திருப்பேன். திருடர்களையும், மது அருந்துபவர்களையும் பிடித்து கடுந்தண்டனை கொடுப்பேன். சும்மா சண்டைபோடும் சிறுவர்களுக்கும் சூடாக அடிகொடுக்கும் இந்த சித்ரா போலீஸ்..”

நீங்க சிறுமியாக இருந்தபோது உங்கள் அக்காள், தம்பியோடு சண்டை போட்டுருப்பீங்கதானே..?

“என் அக்காள் பெயர் பீனா. நாங்கள் மிகுந்த தோழமையுடன் இருந்தோம். எங்கள் தம்பிதான் பெரிய வால். என் அக்காளும் நன்றாக பாடுவார். நாங்கள் தினமும் கீர்த்தனைகள் பாடவேண்டும் என்று அம்மா ஆசைப்படுவார். நாங்களும் கண்களை மூடிக்கொண்டு கீர்த்தனைகள் பாடத் தொடங்கும்போது தம்பி மகேஷ் எங்கிருந்தாவது வருவான். அவனுக்கு ஓரளவு தபேலா வாசிக்க தெரியும். கண்களை மூடிக்கொண்டிருக்கும் எங்கள் நடுவில் தபேலாவுடன்  அமர்ந்து தப்புத் தப்பாக வாசித்து எங்கள் கீர்த்தனைக்கு இடையூறு செய்வான். எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் எழுந்திருக்கமாட்டான். இப்போது அப்படி அல்ல ரொம்ப நல்ல தம்பி”

உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?  பிடித்த உணவு எது?

“குழந்தைகளே எனக்கு சமைக்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் பெரிதாக சமைக்கத் தெரியாது. வேறு வழியே இல்லாவிட்டால் புத்தகத்தைப் பார்த்து சாம்பார் வைப்பேன். பிடித்த உணவு பயறு சேர்த்த கஞ்சியும், துவையலும்..”

அப்படின்னா உங்களுக்கு அப்பளம் பிடிக்காதா?

“பிடிக்கும். வறுத்த உணவுகள் சாப்பிட நான் ஆசைப்படுவேன். இனிப்பும் ரொம்ப பிடிக்கும். நான் குண்டாக இருப்பதன் ரகசியம் அதுதான். உணவு கட்டுப்பாடு பிடிக்கும். ஆனால் இந்த சாதத்துக்கு பதில் சப்பாத்தி சாப்பிடச் சொல்கிறார்கள். எனக்கு தினமும் கொஞ்சம் சோறு வேணும்..”

நீங்கள் ஸ்கூலில் படிக்கும்போது நிறைய மார்க் வாங்கினீர்களா?

“நான் படிப்பில் சராசரிதான். என் அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்பதால் வீட்டில் ரொம்ப கண்டிப்பு உண்டு. அம்மா அதிகாலை ஐந்து மணிக்கே கட்டாயப்படுத்தி எழுப்பிவிடுவார். உட்கார்ந்து படித்தால் தூங்கிவிடுவாய் என்றுகூறி, நடந்துகொண்டே படிக்கச் சொல்வார். புத்தகத்தோடு நான் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருக்கும்போது பக்கத்து கோவிலில் பாட்டு போடுவார்கள். அப்போது என் கவனம் அந்த பாட்டை நோக்கித்திரும்பும். ஆங்கிலமும், இசையும் எனக்கு பிடிக்கும். கணக்கு என்றாலே என் தலை சுற்றும்..”

நீங்க சும்மா இருக்கும்போது என்ன பண்ணுவீங்க?

“சினிமா பார்ப்பேன். திகில் சினிமா நிறைய பார்ப்பேன். பயப்படவும் செய்வேன். மலையாள சினிமாக்களை பார்த்துவிட்டு, சோக காட்சிகளில் அழவும் செய்வேன்..”

நீங்கள் காதல் திருமணம்தானே செய்துகொண்டீர்கள்?

“அய்யோ.. இல்லை! பக்கா அரேஞ்ச்டு மேரேஜ். என் கணவரின் சகோதரி ராஜியும், நானும் ஸ்கூலில் ஒன்றாக படித்தோம். அவள் நன்றாக நடனம் ஆடுவாள். ஒரே வகுப்பு என்பதால் கலை போட்டிகளுக்கு நாங்கள் இருவரும் ஒன்றாக செல்வோம்.  அதனால் எங்கள் பெற்றோருக்கு, அவரது பெற்றோரை தெரியும். ஆனாலும் ராஜிக்கு ஒரு அண்ணன் இருப்பது எனக்கு தெரியாது. ரொம்ப காலத்திற்கு பிறகு, பெற்றோர்கள்தான் எங்கள் திருமண பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். வழக்கம்போல் பெண் பார்க்கவந்தார்கள். திருமணமும் நடந்தது”

உங்கள் வயது எத்தனை? உண்மையை சொல்வீர்களா?

“உங்களுக்கு நான் ஒரு கணக்கு போடுகிறேன். அதைவைத்து என் வயதை கண்டுபிடியுங்கள். நான் முதன் முதலாக சினிமாவில் பாடும்போது என் வயது 16. அது 1979–ம் வருடம்..! என் வயது எத்தனை என்பதை இனி நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்..”

இப்படி கலகலப்பாக அந்த உரையாடல் நடந்தது.

வறட்டு இருமல் குணமாக...!

மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல.

மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப் புண் குணமாக மஞ்சள் தூளுடன் தேனைக் கலந்து களிம்பு போல பூசலாம். இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து 9 நாள் குடித்து வர நோய் குணமாகும்.

தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகி வர முடி நன்றாக வளரும். முடி உதிர்வது நிற்கும். பதினைந்து வில்வ இலையை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும். மோரில் இஞ்சியை நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப் பருக்கள் நீங்கி புத்துணர்ச்சி பொங்கும்.  தண்டுக்கீரைச் சாற்றைத் தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்; முடி உதிர்வதும் குறையும். மன அழுத்தத்துக்கு மக்னீசியம் சத்து குறைபாடும் ஒரு காரணம். பசலைக்கீரையில் அதிக மக்னீசிய சத்து உண்டு. வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்தால் மன அழுத்தம் போயே போச்சு.

மாதுளை ஜூஸை 40 நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்னைகள் நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பேரீச்சம்பழம் நகங்களுக்கு வலு தரும். தினமும் இரண்டு பேரீச்சம்பழமும் ஒரு கப் பாலும் சாப்பிட்டால் அழகிய நகம் வளரும்.

டூத் பேஸ்ட்-டில் உள்ள கெமிக்கல் குழந்தைகளின் மூளையை பாதிக்கும்!

 டூத் பேஸ்ட் உள்பட பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் பிலிப்பி கிரேண்ட்ஜீன், கேன் ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் பணிபுரியும் ஆய்வாளர் பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர், நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.


 தங்களது ஆய்வில் தெரிய வந்த உண்மைகள் குறித்து இருவரும் கூறியதாவது:குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ரசாயன பொருட்களின் எண்ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 6 ஆக இருந்தது. இப்போது 12 ஆகியுள்ளது. டூத் பேஸ்ட்டில் உள்ள புளோரிட் உள்பட பல்வேறு ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன.


கடந்த 2006ம் ஆண்டு எத்தனால், லெட், மெத்தில்மெர்க்குரி, பைபெனில்ஸ், ஆர்செனிக் மற்றும் டோலின் ஆகிய ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பதாக கண்டறியப்பட்டன. இப்போது மெக்னீசியம், புளோரிட், குளோர்பைரிபோஸ், டெட்ராகுளோரோ எத்திலீன் உள்பட மேலும் 6 ரசாயன பொருட்கள் சேர்ந்துள்ளன.


இந்த ரசாயனங்கள் எல்லாம் பூச்சி கொல்லி மருந்தாகவும், டிரை கிளீனிங் போன்றவற்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் டூத் பேஸ்ட் உள்பட பல பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம், கவனக் குறைபாடு, கற்றலில் குறைபாடு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகிறது என்று தெரிய வந்துள்ளது.


இந்த ரசாயன பொருட்கள் குழந்தைகளின் அறிவு திறனை சிதைத்து விடுகின்றன. அவர்களுடைய நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க வளர்ந்து வரும் நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயன பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்து கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டியது அவசியம். அத்துடன், மார்க்கெட்டில் புதிய பொருட்கள் அறிமுகமாகும் போது அதில் உள்ள ரசாயனங்கள் குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு பிலிப்பி கிரேண்ட்ஜீன், பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர் கூறியுள்ளனர். 

“ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ - எக்ஸ்க்ளுசிவ் தகவல் - பி.வாசு !

ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார்.


உணர்வுபூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குனர் பி.வாசு இந்த கதையை  பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார்.


“ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள்.


இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை நடித்திருக்காத ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.


பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இப்படத்திற்கான அதிகப்படியான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் இப்படத்திற்காக பிரத்தியேகப் பணியாற்ற உள்ளனர்.


இப்படத்தின் கதையை இயக்குனர் பி.வாசுவிடம் கேட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரே வார்த்தையில் ‘வாவ்’ என சொல்லி  அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.


இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த சிறந்த மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இசையமைப்பாளராக, ஒளிப்பதிவாளராக, படத்தொகுப்பாளராக, கலை இயக்குனராக, சண்டைப் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளனர்.


வட இந்தியாவில் உள்ள பிரபலமான மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும், பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ள அரங்குகளிலும் இப்படம் படமாக்கப்பட உள்ளது.


படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளதால் ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக சிறப்புப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்.


ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


பிரியாமணி நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘சாருலதா’  படத்தைத் தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் சார்பாக கே.ரமேஷ் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

நைசாக நழுவிய ஸ்ரேயா - கடுப்பில் இயக்குனர்!


நைசாக நழுவிய ஸ்ரேயா - கடுப்பில் இயக்குனர்

‘அன்னயும் ரசூலும்’ படத்துக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க, வாய்ப்புகள் தேடி வந்தும் கூட நடிக்க மறுத்து வந்தார் ஆண்ட்ரியா.


காரணம் அந்தப்படத்தில் ஜோடியாக நடித்த பஹத் பாஸில் அவர் மீது வீசிய காதல் அம்பு தான்.


இப்போது தான் பஹத் பாஸில்ன் அம்பு நஸ்ரியா பக்கம் போனதே நமக்கு என்ன கவலை என்று கே.எஸ்.உன்னி என்பவர் இயக்கும் மலையாளப் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.


இது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் இன்னொரு ஹீரோயினாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தார்கள்.


முதலில் ஒத்துக்கொண்ட ஸ்ரேயா, தன்னைவிட ஆண்ட்ரியாவுக்குத்தான் அதிக வாய்ப்பு உள்ள கேரக்டர் என்பது தெரிய வந்ததால் நான் விலகிக்கொள்கிறேன் என கிளம்பிவிட்டாராம்.


இப்போது அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஹீரோயினை தேடி வருகிறார் படத்தின் இயக்குனர் உன்னி.


என்ன புலப்பு டா இது என்று மறுபடியும் கடுப்பில் ஹீரோயனே  தேடி வருகிறாராம் உன்னி.

இயக்குனர் அட்லிக்கு கிடைத்த ‘ராஜாவும் ராணி’யும்!

இரண்டு விருதுகள் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார் இயக்குனர் அட்லி. ‘ராஜா ராணி’ என்ற தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் அட்லி.


ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிய படம் இது.


இந்தப் படத்தை சிறந்த முறையில் இயக்கியமைக்காக அண்ணாமலை யூனிவர்சிட்டி சார்பில் நடந்த ஒரு விழாவில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும், சென்ற ஆண்டின் கண்டெடுக்கப்பட்டவருக்கான விருதையும் அட்லிக்கு வழங்கியுள்ளனர்.


அட்லி, ஒரு படத்தை தான் இயக்கியிருக்கிறார், ஆனால் இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.


இதுக்கு பேர் தான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

‘டி-டே’ நடுங்க வைக்கும் திரில்லர் டே. - திரைவிமர்சனம்!

ஹோ', 'சாந்தினி சவுக் டு சைனா' போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காத படங்களை கொடுத்து வந்த நிகில் அத்வானி இத்திரைப்படத்தில் மிகவும் ரிஸ்க்கான கருவை தேர்ந்தெடுத்து அதை ஆக்ஷன் த்ரில்லராக தந்திருக்கிறார்.

இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான இக்பால் சேத்தை (ரிஷி கபூர்) கைது செய்ய முடிவெடுத்த இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் தலைவர் அஸ்வினி ராவ் (நஸ்ஸார்), ரகசிய உளவாளியாக நாயகன் வாலிகானை (இர்பான் கான்) கராச்சிக்கு அனுப்புகிறது.

தங்க வியாபாரம் செய்பவராக வெளி உலகத்தில் உலா வரும் இக்பால் சேத் நிழல் உலகில் இந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தும் சதி வேலை செய்து வருகிறார்.

இந்த உண்மைகள் தெரிந்தும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல், அந்த அமைப்பு அவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வளையமாக விளங்குகிறது. இதனால் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற விவரம் கூட தெரியாமல் தடுக்கப்படுகிறது.

ஆனால் ஒரு சமயத்தில் ஐ.எஸ்.ஐயின் எதிர்ப்பையும் மீறி இக்பால் சேத் தனது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள முடிவெடுக்கிறார். இதை தெரிந்து கொண்ட நாயகன் வாலி கான் தனது தலைவரான அஸ்வினி ராவிடம் இந்த தகவலை தெரிவிக்கிறார்.

உடனடியாக இருவரும் சேர்ந்து ஆபரேஷன் கோல்டுமேன் என்ற திட்டத்தை தீட்டுகிறார்கள். இத்திட்டத்தில் பெண் வெடிகுண்டு நிபுணரான சோயா ரஹ்மான் (ஹுமா குரேஷி), மும்பையை சேர்ந்த கேடியான அஸ்லாம் (ஆகாஷ் தாஹியா) மற்றும் இந்திய ஆயுதப்படை அதிகாரியான கேப்டன் ருத்ரபிரதாப் சிங் (அர்ஜுன் ராம்பால்) ஆகிய மூன்று பேரை இணைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் திட்டமிட்டபடி இக்பால் சேத்தை கைது செய்தார்களா? அல்லது என்கவுண்டர் செய்தார்களா என்பதே மீதி கதை.

நாயகனான இர்பான் கான் அதிரடியாகவும், இயல்பாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தனது மனைவிக்கும், மகனுக்கும் பாசத்தை காண்பிக்கும் அவர், இந்திய தேசத்தை நேசிப்பதிலும், நாட்டை காப்பதில் உறுதியோடு இருப்பதிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

ஹுமா குரேஷி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்வதற்காக அஸ்வினி ராவின் திட்டத்தில் பங்கு கொள்ளும் ஆகாஷ் தாகியாவும் நன்றாக நடித்துள்ளார்.

இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள ரிஷி கபூர் வியப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அவருடைய பார்வை, பேசும் வசனம் மற்றும் டென்ஷனான சூழலில் மராத்தி மொழியில் பேசிக்கொள்வதிலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கராச்சி நகரில் விபச்சாரியாக வரும் ஸ்ருதிஹாசன் உயிரோட்டமாக நடித்து அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட வலியை வெளிப்படுத்துவதில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதி அருமையான சோகப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இப்பாடலில் அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்பது நிஜம். இப்படத்தின் மறக்க முடியாத பாடலாக இந்த பாடல் என்றும் நெஞ்சில் நின்று ரீங்காரமிடும் பாடலாக விளங்கும்.

இரும்பு கவசம் போன்ற கதை, வலுவான பாத்திரங்கள், நம்பக்கூடிய நிகழ்வுகள், சிறப்பான இசை ஆகியவற்றை கொண்ட ஆக்ஷன் திரில்லராக டி டே அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘டி-டே’  நடுங்க வைக்கும் திரில்லர் டே. 

நேரடி இந்திப் படத்தில் விஜய் - அடுத்தப்படம் இந்தியில் தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் விஜய் நடித்த துப்பாக்கி தமிழில் பெரிய ஹிட். இப்போது முருகதாஸ் துப்பாக்கியை, ஹாலிடே என்ற டைட்டிலில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். விஜய் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கிறார். காஜல் அகர்வால் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்.


இந்தப் படத்தில் விஜய்யை கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்க அக்ஷய் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். காரணம் அவரின் ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டில் அக்ஷய் குமாருடன் ஆடினார். அதேபோல இந்தப் படத்திலும் ஒரு காட்சியிலாவது அவர் நடிக்க வேண்டும் என்று அக்ஷய் விரும்புகிறார்.


அதேப்போல ஏ.ஆர்.முருகதாசும் விஜய்யை வைத்து நேரடி இந்திப் படம் ஒன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார். இதனால் விஜய்யை மெல்ல மெல்ல இந்தி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அவரை இதில் நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜய்யிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், பாடல் காட்சி வேண்டாம் புதிதாக ஒரு கேரக்டர் உருவாக்கினால் அதில் ஓரிரு காட்சிகளில் நடிக்க தயாராக இருப்பதாகவும் விஜய் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.


சிலிப்பர் செல்லை கூண்டோடு அழிக்கும் அக்ஷய் குமார் டீமை பாராட்டி அவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் உயர் ராணுவ அதிகாரியாக விஜய் நடிக்கலாம் என்றும், இந்த காட்சி படத்தின் இறுதி காட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வித்யா பாலன் கிசு கிசு முடிவுக்கு வந்த்து!

நடிகை வித்யாபாலன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வடநாட்டு மீடியாக்கள் செய்தியை அள்ளிவிட அவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் அலறி துடித்து ஓடினார்கள்.


அதைப் புரிந்து கொண்ட வித்யாபாலன் தான் கர்ப்பமாக இல்லை என்று அறிவித்து அவர்கள் வயிற்றில் பால் வார்த்தார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் இல்லை.


நான் கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்திகள் தவறானது. எனக்கு தெரியாத ஒரு செய்தி மீடியாக்களுக்கு எப்படித் தெரியும். அதேமாதிரி திருமணத்துக்கு பிறகு நெருக்கமான காட்சிகளில் வித்யாபாலன் நடிக்க மறுக்கிறார் என்று பரப்புகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. முன்பு எப்படி நடித்தேனோ அதேபோன்றுதான் இப்போதும் நடிக்கிறேன்.


நெருக்கமான காட்சிகளில் நடிப்பதாக இருந்தால் முன்பு பெற்றோரிடம் அந்த காட்சி பற்றி கூறி அனுமதி வாங்குவேன். இப்போது கணவர் சித்தார்த்திடம் கூறி அனுமதி வாங்கிக் கொள்கிறேன். அவர் என் நடிப்புக்கு எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. இருந்தாலும் மனைவி என்கிற முறையில் அவரிடம் அனுமதி பெற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறு வித்யா பாலன் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்!

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1974ல் உருவான ‘அன்புத் தங்கை’ படத்தில் முத்துராமன், ஜெயலலிதா நடித்தனர். இதில் மேடை நாடகம் நடப்பது போன்ற ஒரு காட்சியில் ஜெயலலிதாவுடன் புத்த பிஷு வேடத்தில் கமல்ஹாசன் நடித்தது சிறப்பு. ஜெயலலிதா, கமல்ஹாசன் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான்.


தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி, பெங்காலியிலும் ரீமேக் ஆக காரணமாக இருந்த சூப்பர் ஹிட் படம் ‘அவள் ஒரு தொடர்கதை’. கே.பாலசந்தருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்த இப்படத்தில் ஜெய்கணேஷ், விஜயகுமார், கமல்ஹாசன் நடித்திருந்தனர். நடிகை சுஜாதா அறிமுகமானது இப்படத்தில்தான் என்பது சிறப்பு.


ஜெமினி கணேசன் தயாரித்த ‘நான் அவன் இல்லை’ படத்தை கே.பாலசந்தர் இயக்கினார். பணத்துக்காக 5 பெண்களை ஏமாற்றும் மன்மதனின் கதை. படம் ஓடவில்லை. ஆனால், இதே படம் ஜீவன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரீமேக் ஆகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா எடுக்கிறோம் எனக் கூறிக் கொண்டு திரையுலகில் பலர் பூச்சாண¢டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவில் 1970களின் கடைசியில் உலக தரமான படங்களை தந்து அந்த வேலையை சத்தம் இல்லாமல் செய்து காட்டியவர் மகேந்திரன். அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த படம் ‘தங்கப் பதக்கம்’. மேடை நாடகத்துக்காக இந்த கதையை அவர் தயார் செய்தார். மேடையில் வெற்றி பெற்ற இக்கதையை படமாக தயாரிக்க சிவாஜி முடிவு செய்தார். மேடையில் வில்லன் நடிகர் செந்தாமரை ஏற்ற வேடத்தில்தான் சிவாஜி நடித்திருந்தார். படத்துக்கு கதை, திரைக்கதையுடன் வசனங்களை மகேந்திரன் எழுத, மாதவன் இயக்கினார். வெள்ளி விழா கண்ட படம் இது.


‘அன்றே சிந்திய ரத்தம்’ படத்தில் எம்ஜிஆரும் ஸ்ரீதரும் இணைய இருந்தனர். சில காரணங்களால் ஷூட்டிங் தொடங்கி, படம் நின்றுபோனது. அவர்கள் இணைய மாட்டார்களா என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கியது ‘உரிமைக் குரல்’. எம்ஜிஆருக்கு மாபெரும் வெற்றியை தந்த இப்படத்தில் லதா, புஷ்பலதா, சச்சு, நம்பியார், நாகேஷ் நடித்தனர். நடிகர் அசோகன் தயாரிப்பில் எம்ஜிஆர், மஞ்சுளா நடித்த படம் ‘நேற்று இன்று நாளை’.


நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். இந்தியில் ஹேமமாலினி இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘சீதா அவுர் கீதா’. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பாணி கதைதான். அதே படத்தை தமிழ், தெலுங்கில் நாகிரெட்டி தயாரித்தார். தமிழில் ‘வாணி ராணி’ என்றும் தெலுங்கில் ‘கங்கா மங்கா’ என்றும் தயாரானது. தர்மேந்திரா வேடத்தில் தமிழில் சிவாஜி நடித்தார். வாணிஸ்ரீ டபுள் ரோலில் நடித்தார். சி.வி.ராஜேந்திரன் இயக்கத¢தில் 100 நாள் கொண்டாடிய படம் இது.


1941ல் டிகேஎஸ் சகோதரர்கள் நடத்திய நாடகம் ‘குமாஸ்தாவின் பெண்’. அதையே டிகேஎஸ் சகோதரர்கள் பின்பு படமாகவும் தயாரித்து, நடித்தனர். ஒரிஜினல் நாடகத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் நடித்திருந்தார். எனவே இப்போது அதே படத்தை ‘குமாஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் எடுக்க ஏ.பி.என். முடிவு செய்தார். அவரே இயக்கிய இப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன் நடித்தனர். கன்னட நடிகை ஆர்த்தி நாயகியாக அறிமுகமானார். ஜெயலலிதாவின் 100வது படம் ‘திருமாங்கல்யம்’. கேமராமேன் வின்சென்ட் இயக்கி இப்படத்தில் முத்துராமன், லட்சுமி, பண்டரிபாய், ஸ்ரீதேவி, சச்சு, சுகுமாரி நடித்தனர்.


மேஜர் சுந்தர்ராஜனின் மேடை நாடகம் ‘டைகர் சாத்தாச்சாரி’, அதே பெயரில் படமானது. வி.டி.அரசு தயாரித்து இயக்கினார். சிவகுமார், சசிகுமார், பி.ஆர்.வரலட்சுமி, சுகுமாரி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜனே ஹீரோ. கவிஞர் வாலியின் மேடை நாடகமான ‘கலியுக கண்ணன்’, படமானது. கிருஷ்ணன், பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் ஜெய்சங்கருடன் ஜெயசித்ரா நடித்திருந்தார். அசோகனும் வாசுவும் ஹீரோவாக நடித்த படம் ‘வைரம்’.


இந்தியில் வெளியான ‘விக்டோரியா 203’ படத்தின் ரீமேக் ஆன இப்படத்தை ராமண்ணா இயக்கியிருந்தார். ஜெய்சங்கர், ஜெயலலிதா ஜோடியுடன் சச்சு, கே.எஸ்.ஜெயலட்சுமி, மனோகர் ஆகியோரும் நடித்திருந்தனர். தெலுங்கில் லட்சுமி நடிப்பில் இதே படம் வெளியானது. இந்தி சூப்பர் ஸ்டாராக அமிதாப் பச்சன் உயர காரணமாக அமைந்த படம் ‘ஜன்ஜீர்’. இந்த படத்தின் ரீமேக்கில் அமிதாப் வேடத்தில் புரட்சித் தலைவர் நடித்தார். எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கினார். லதா ஹீரோயின். 

வீட்டில் உள்ள தூசிகளை நீக்கும் அலங்கார செடிகள்!!!

தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச் சுற்றி அழகான தோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக்கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதாரண செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை அத்தகையவை முறையாக கிடைக்காவிட்டால், செடிகள் வாடிவிடும். இப்படி சாதாரண செடிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளதே, அப்படியெனில் வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் இல்லாமல் வளரக்கூடிய செடிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

மேலும் வீட்டின் உள்ளே செடிகளை வளர்த்தால், ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், வீட்டின் உள்ளே செடிகளை வளர்த்தால், வீட்டில் தூசிகள் இல்லாமல் இருக்கும். ஏனெனில் வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தையும் செடிகள் உறிஞ்சிவிடும். அதுமட்டுமல்லாமல், இத்தகைய செயலை அனைத்து செடிகளும் முறையாக செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் வீட்டில் தூசிகள் படிவதை தடுக்கும் படியான சில செடிகள் உள்ளன. மேலும் இத்தகைய செடிகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாதவாறு இருக்கும்.

இப்போது வீட்டில் தூசிகள் படியாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் சில செடிகளைப் பார்ப்போமா!!!


ஸ்பைடர் பிளாண்ட் (Spider Plant)

வீட்டில் உள்ள மாசுக்களை சுத்தமாக வெளியேற்றும் செடிகளில் முக்கியமானது ஸ்பைடர் பிளாண்ட் ஆகும். இந்த செடி தூசிகளை மட்டும் போக்குவதோடு, வீட்டிற்கு அழகையும் கொடுக்கும்.

ஃபேர்ன்ஸ் (Ferns)

இந்த செடியின் இலைகள் மிகவும் அழகாக ப்ரில் போன்று காணப்படும். அதிலும் பாஸ்டன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றி, தூசிகளை நீக்கும். மேலும் இது பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் இலை போன்று க்யூட்டாக இருக்கும்.

ஐவி (Ivy)

இது ஒருவகையான படர்க்கொடி. இந்த கொடியும் வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்கார செடிகளில் மிகவும் பிரபலமானது. அதிலும் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், வீட்டில் இதனை வளர்ப்பது நல்லது.

கமுகு மரம் (Areca Palm)

இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு தென்னை மரத்தின் இலைகளைப் போன்று காணப்படும். ஆனால் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டில் நல்ல குளிர்ச்சியான காற்று வீசுவதோடு, தூசிகளும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்.

கோல்டன் போதோஸ் (Golden Pothos)

இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போன்ற தூசிகளை முற்றிலும் வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.


கற்றாழை

பெரும்பாலான வீடுகளில், வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் செடிகளில் கற்றாழையும் ஒன்று. நிறைய பேர் இந்த செடியை ஒரு குழந்தை போன்றும், தெய்வம் போன்றும் நினைத்து பாதுகாப்புடன் வளர்ப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டினுள் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

சைனீஸ் எவர்க்ரீன் (Chinese Evergreen)

இந்த செடியானது வீட்டினுள் வரும் காற்றை சுத்தப்படுத்துவதில் சிறந்தது. மேலும் தற்போது நிறைய பேர், இந்த செடியைத் தான் வீட்டில் வளர்க்கின்றனர்.

ஸ்நேக் பிளாண்ட் (Snake Plant)

உள் அலங்காரச் செடிகளுள் ஸ்நேக் பிளாண்ட் முக்கியமானது. இந்த செடி வீட்டிற்கு அழகை மட்டும் தருவதோடு, வீட்டில் சுத்தமான காற்றினை தருகிறது.

மார்ஜினட்டா (Marginata)

செடி வளர்க்க விரும்புவோர், இந்த செடியின் அழகை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். இந்த செடியானது அந்த அளவில் அழகாக இருப்பதோடு, அசுத்தக் காற்றினை சுத்தப்படுத்தி வீட்டினுள் நுழையவிடுகிறது. மேலும் வீட்டில் இருக்கும் தூசிகளையும் நீக்குகிறது.

பீஸ் லில்லி (Peace lilly)

வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்பட்டால், பீஸ் லில்லியை வளர்த்து வாருங்கள். இது அழகுடன், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.