Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 28 February 2014

தியாகிகள் ஆஃப் தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவில் தியாகம் செய்வதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்களின் பரிதாப மைண்ட் வாய்ஸ்.


உச்சி வெயில் மண்டையைப் பிளந்தாலும் நாங்க மட்டும் கூடுவாஞ்சேரி ஹைவேயில் 'நீயா நானா’ கோபிநாத் மாதிரி கோட் சூட்லேயே திரியணுமுங்க.


எல்லாப் படத்துலேயும் கிட்டத்தட்ட ரெண்டே கெட்டப்தான். ஃபுல் ஷேவ் பண்ணின, மாட்டுக்கு ஊசி போடுற டாக்டர் கெட்டப், இல்லைனா பிரெஞ்ச் பியர்டு வெச்ச சயின்டிஸ்ட் கெட்டப். இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமோ, முடிவு காலமோ இல்லையா பாஸ்?


இந்த ஹீரோக்கள் எல்லாம் மனப்பாடம் செஞ்ச திருக்குறள் மாதிரி கடகடனு ஈஸியா டயலாக்கை ஒப்பிச்சிட்டுப் போய்டுவாங்க. நாங்க மட்டும் நுனிநாக்குல இங்கிலீஷ் பேசணுமாம். அடிநாக்கில் சூடென்ன, அடுப்பையே வெச்சாலும் நுனிநாக்குல இங்கிலீஷ் வராதுனு நமக்குத்தானே தெரியும்.


படத்துல 21/4 மணி நேரமும் உனக்குத்தான் அந்தப் பொண்ணுனு ஆசை வார்த்தை காட்டி ட்ரீம்ல மிதக்க விட்டுட்டு கடைசிக் கால் மணி நேரத்துல வழக்கம்போல் எல்லா ஹீரோயின்ஸோட அப்பாவும் அந்த ஹீரோ கையில் பெண்ணைக் கொடுத்து ரெடிமேட் வசனம் பேசறீங்களே... இதுக்கு என்னாத்துக்கு நாங்க அமெரிக்காவில் இருந்து வரணும்?


ஹீரோயினுக்கும் எங்களுக்குமான கல்யாண அறிவிப்பை ஹீரோயினோட அப்பா எங்கே அறிவிப்பார் தெரியுமா? மற்றும் நம் உறவினர்களும் நண்பர்களும் கூடியிருக்கிற பார்ட்டியில் பந்தாவா மைக்கைப் பிடிச்சுட்டு, 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன். என் மகள் பிரியாவைக் கல்யாணம் பண்ணப்போற மாப்பிள்ளை இவர்தான்’னு அறிவிப்பாங்க. படபடன்னு கை தட்டுற அத்தனைப் பக்கிகளும் நாங்க தியாகம் பண்ற க்ளைமாக்ஸ்ல எங்கே போறாய்ங்கனே தெரியலை.


கடைசியில் கல்யாணம்தான் ஆகப்போறதில்லை. ஹீரோயினோட ஒரு கனவு டூயட்டாவது கொடுக்கலாம்ல? ஏம்பா, எங்களுக்கெல்லாம் கனவே வராதா?


எல்லாப் படத்திலேயும் காதலுக்காகப் பெத்தவங்களைத் தியாகம் பண்றீங்க, சில படங்கள்ல பெத்தவங்களுக்காகக் காதலையே தியாகம் பண்றீங்க, இந்தப் பாவப்பட்ட அமெரிக்க மாப்பிள்ளைகளுக்காவும் உங்க காதலைத் தியாகம் பண்ணித்தான் பாருங்களேன் ஹீரோயின்ஸ்!

பனிவிழும் மலர்வனமும் - லைப் ஆப் பையும் - திரைவிமர்சனம்!

நடிகர் : உதய்
நடிகை : காயத்திரி
இயக்குனர் : ஜேம்ஸ் டேவிட்
இசை : ரஜின்
ஓளிப்பதிவு : ராகவ்

நாயகன் அபிலாஷும், நாயகி சானியாதாராவும் பேஸ்புக் மூலம் காதல் செய்கிறார்கள். இருவரும் ஒருநாள் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதனால், ஊரைவிட்டு செல்ல முடிவெடுத்து அதன்படி வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வதென்று முழித்துக் கொண்டிருக்கும் வேளையில், முதலில் வரும் பஸ்ஸில் ஏறி  தேனிக்கு செல்கிறார்கள். தேனி வந்து சேர்ந்த பின் காதல் ஜோடி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து செல்லும் போது மர்ம கும்பல் ஒன்று இவர்களை தாக்குகிறது.

அப்போது அங்கு வரும் வர்ஷா, அந்த கும்பலிடமிருந்து இவர்களை காப்பாற்றி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். மர்ம கும்பலுடனான மோதலில் தன் மகனின் வைத்திய செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை வர்ஷா பறிகொடுக்கிறார். தங்களை காப்பாற்றிய வர்ஷாவுக்கு நாயகனும், நாயகியும் உதவ முன்வருகிறார்கள்.

தாங்கள் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் விற்று அவருக்கு பணத்தை கொடுக்கின்றனர். ஒருவழியாக பணத்தை எடுத்துக்கொண்டு காட்டு வழியாக அனைவரும் பயணிக்கிறார்கள். அப்போது ஒரு புலியின் கண்ணில் இவர்கள் அனைவரும் பட்டுவிடுகிறார்கள்.

புலி அவர்களை துரத்த அனைவரும் ஓடிச்சென்று ஒரு மரத்தின் மேலே உட்கார்ந்து விடுகிறார்கள். புலி அவர்களை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது. மறுபுறம், வர்ஷாவின் மகன் நோயின் தாக்கத்தால் ரொம்பவும் அவதிப்படுகிறான். இறுதியில் புலியை விரட்டி அந்த சிறுவனை காப்பாற்றினார்களா? அல்லது புலிக்கு இரையானார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் அபிலாஷ் புதுமுகம் என்றாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடும் காட்சியில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். நாயகி சானியதாராவும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வர்ஷா அஸ்வதி, ஒரு குழந்தையின் தாயாக பாசம் காட்டுவதில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இறுதியில், தனது மகனின் உயிரை காப்பாற்ற தன்னையே பலியாக்கிக் கொள்வது தாய்மையின் உச்சக்கட்டம்.

வர்ஷாவின் குழந்தையாக நடித்திருக்கும் சிறுவனும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் தலைப்பை பார்த்து காதல் படம் என்று திரையரங்குக்குள் வருபவர்களுக்கு படம் தொடங்கிய சிறிதுநேரம் வரை தான் அந்த உணர்வை கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்னர் படம் வேறு திசையில் நகர்கிறது.

பெற்றோர்களின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து கதையை சொல்லவரும் இயக்குனர் ஜேம்ஸ் டேவிட், இத்தனை கொடூரத்தை காட்டவேண்டுமா? என்று நினைக்கத் தோன்றுகிறது. படத்தில் இயற்கையை மையப்படுத்தி வரும் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.

ரஜின் இசையில் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் திகிலை ஏற்படுத்தியுள்ளன. பாடல்கள் கேட்கும் ரகம். ராகவ் தனது கேமரா கண்களால் தேனி மாவட்டத்தின் இயற்கை அழகை அழகாக படம் பிடித்திருக்கிறார்.

புலியிடம் மாட்டிக்கொண்டு 4 பேரும் தவிக்கும் தவிப்பை திறமையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பனி விழும் மலர் வனம்’ பூஞ்சோலை. 

டோட்டாவின் அடிதடி அட்டகாசம் - விஜய், முருகதாஸ் படக்குழுவினர் அதிர்ச்சி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிறையை உடைத்துக்கொண்டு வில்லன் டோட்டா வெளியே வருவது போன்ற ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ராஜமுந்திரி சிறை போன்று செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தின் கதைப்படி சிறையில் இருந்து தப்பித்து செல்லும் அன்னிய நாட்டு உளவாளியை விஜய் எப்படி பிடிக்கிறார் என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களோடு முருகதாஸ் இயக்கி வருகிறார்.

நேற்றைய படப்பிடிப்பில் சிறையில் இருந்து வில்லன் நடிகர் டோட்டா தப்பிக்கும் காட்சிக்கும் படமாக்கப்பட்டன. அதன்பின்னர் விஜய் மற்றும் டோட்டா ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சிகளும் சிறை வளாகத்தில் நடப்பது போன்றும் படமாக்கபட்டது.

இந்த சண்டைக்காட்சியில் நடிக்கும்போது டோட்டா ஒரு ஷாட்டில் விஜய்யின் கன்னத்தில் நிஜமாகவே குத்திவிட்டார்.

இதனால் விஜய் உதட்டோரத்தில் இரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் பரபரப்பு அடைந்தனர். விஜய் முகத்தில் லேசாக பஞ்ச் வைப்பது போல் நடிப்பதற்கு தனது கை தவறி நிஜமாக குத்திவிட்டதாக கூறி விஜய்யிடம் வில்லன் நடிகர் மன்னிப்பு கேட்டதை அடுத்து பரபரப்பு அடங்கியது.

விஜய்யின் காயத்திற்கு முதலுதவி செய்த பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது

கமல் பட வாய்ப்பை மறுத்தேன்!

கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தேன் என கூறினார் காஜல் அகர்வால்.

இளம் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு மட்டுமே காஜல் அகர்வால் முன்னுரிமை தருவதாக அவர்மீது விமர்சனம் இருந்தது.


இந்நிலையில் உத்தம வில்லன் படத்தில் கமல் ஜோடியாக நடிக்க அவரை அணுகினர். அந்த வாய்ப்பை காஜல் அகர்வால் ஏற்றுக் கொள்ளவில்லை. கமலுடன் நடிக்க அவர் மறுத்தார்.


இதுவரை வதந்தியாக உலவிய இந்த செய்தியை தற்போது காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தினார். கமல் படத்தில் அவருடன் நடிக்கக் கேட்டு தன்னை அணுகியதாகவும், கால்ஷீட் இல்லாததால் நடிக்க மறுத்ததாகவும் தெரிவித்தார்.


அதேநேரம் உதயநிதியின் நண்பேன்டா படத்தில் அவருடன் நடிக்க காஜல் அகர்வாலுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் காஜலை கழற்றிவிட்டு நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி.


விரைவில் தமிழ், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடிக்க உள்ளார் காஜல் அகர்வால்.

அஜித் - போலீஸ் - கௌதம் - தீபாவளி !

அஜித்தின் 55 வது படத்தை கௌதம் இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். அஜித்தின் புதிய படம் குறித்து இதற்கு மேல் அதிக தகவலில்லை.


இத்தனைக்கும் இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு செல்கிறார்கள்.


சமீபத்தில் கசிந்த செய்தி, அஜித் இதில் இளம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இளம் என்பதில் கோடிட்டுக் கொள்ளுங்கள். மங்காத்தா, ஆரம்பம், வீரம் என தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் தலையுடன் நடித்த அஜித் இதில் டை அடித்து இளமையாக மாறுகிறார்.


உடம்பை குறைக்கும் பொருட்டு உடற்பயிற்சியையும் முடுக்கிவிட்டுள்ளார்.


கௌதமின் போலீஸ் கதைகளான காக்க, காக்க, வேட்டையாடு விளையாடு இரண்டுமே ஹிட். அந்த வரிசையில் இதுவும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் அஜித்துக்கு முழு நம்பிக்கை. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என தெரிகிறது.


ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.

இந்த மாதம் தொடங்கும் சண்முக பாண்டியனின் சகாப்தம்!

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனின் சகாப்தம் படம் இந்த மாதம் தொடங்குகிறது.

சண்முக பாண்டியனுக்கு தந்தையைப் போல் நடிகராக வேண்டும் என்று ஆசை. மகனின் அறிமுகப் படத்துக்கு கதை தேர்வு செய்ய ஒரு குழுவை விஜயகாந்த் நியமித்தார்.


பலநூறு கதைகள் கேட்டு கடைசியில் ஒரு கதை அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. அந்தக் கதையை இயக்கும் பொறுப்பை விஜயகாந்த் சந்தோஷ் குமாரிடம் ஒப்படைத்தார்.


சந்தோஷ் குமார் வல்லரசு படத்தில் பணியாற்றியிருக்கிறார். பெரிய அனுபவம் கிடையாது. தன்னையே சுற்றிக் கொண்டிருந்தவரை நம்பி இந்தப் படத்தை விஜயகாந்த் ஒப்படைத்தார். பிரமாண்டமாக படத்தொடக்கவிழாவும் நடந்தது.


இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்துக்காக 85 கிலோவாக இருந்த உடம்பை 65 கிலோவாக குறைத்துள்ளார் சண்முக பாண்டியன். தொழில் மீதான ஈடுபாட்டிற்கு இந்த 20 கிலோ எடை குறைத்தல் நல்ல சான்று.


அப்பாவிடமிருந்து பேக் கிக் கற்றுக் கொள்ளுங்கள். பத்து பதினைந்து வருடங்கள் விஜயகாந்த் பீல்டில் பிடித்து நின்றது அதை வைத்துதான்.

ஆட்டோவில் வர்றோம் பரிசுகளை தர்றோம்!

சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் புதிய படம் நெடுஞ்சாலை. ஆரி, ஷிவதா நடித்திருக்கும் இதன் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது. மார்ச் 28 படத்தை வெளியிடுவதாக திட்டம்.


சாலையோரம் வசிக்கும் ஜனங்களை பற்றிய கதையிது. 1960 களிலிருந்து இந்த காலகட்டம்வரை நீளக்கூடியதாக கதை எழுதப்பட்டுள்ளது. படத்தில் முக்கால்வாசிக்கு மேல் நெடுஞ்சாலைகளில் படமாக்கப்பட்டுள்ளது.


படத்தில் 1960 களில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஒன்று வருகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அந்த ஆட்டோவை தமிழகம் முழுக்க ஓட்டயிருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் ஆரியும் கலந்து கொள்வார்.


இந்த விளம்பரப் பயணத்தை சாலை பாதுகாப்பு பிரச்சாரப் பயணமாக நடத்த திட்டமிட்டுள்ளது பட யூனிட். சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், சாலை பாதுகாப்பு குறித்த கேள்விகள் கேட்டு பரிசு வழங்குதல், சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் உள்ள டி ஷர்ட்கள் விநியோகித்தல் என்று பல்வேறு ஐடியாக்கள் வைத்துள்ளனர்.


இந்தப் படத்தில் வில்லனாக இந்திப்படவுலகைச் சேர்ந்த பிரசாந்த் நாராயணன் நடித்துள்ளார்.

லூசுப் பெண்ணாக நடிக்கும் ப்ரியா ஆனந்த்!

தமிழ் சினிமா கதாநாயகிகள் பெரும்பாலும் லூசுப் பெண்ணாகவே சித்தரிக்கப்படுவார்கள். ஹீரோவின் ஆண்மையை நிரூபிக்க வில்லனை மொக்கை செய்து போல், ஹீரோயினை லூசுப் பெண்ணாக்குவது காலங்காலமாக நடப்பதுதான். துப்பாக்கி காஜல் அகர்வால் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.


ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ப்ரியா ஆனந்தின் கதாபாத்திரத்தை லூசுப் பெண்ணாக அமைத்திருக்கிறாராம் கண்ணன். கதைப்படி ப்ரியா ஆனந்த் மெடிக்கல் ஸ்டுடிண்ட். தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் அவரும் விமல், சூரியும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது நடக்கும் சம்பவம் காரணமாக மூவரும் ஓட வேண்டி வருகிறது.


முதல்கட்ட படப்பிடிப்பை மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் நடத்துகின்றனர். காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லாம் சேர்ந்த கலவையாக படம் தயாராகிறது. டி.இமான் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.


இரண்டு தினங்களில் நடக்கும் கதையிது. தொழிலதிபராக வரும் நாசர்தான் வில்லன். இவர்கள் தவிர சிங்கம்புலி, சாஷா, ஜோஸ்னா, தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.


குளோபல் இன்போடெய்ன்மெண்ட் மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்கிறார்.

மான் கராத்தே ஆடியோ வெளியீடு திடீர் ஒத்திவைப்பு! - ரசிகர்களை குழப்பும் விளம்பரம்!

மான் கராத்தே படத்தின் ஆடியோ வெளியீடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மான் கராத்தே. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். முருகதாஸின் முன்னாள் உதவி இயக்குனர் திருக்குமரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


படத்தின் கதை, திரைக்கதை முருகதாஸ். எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் தயாரிப்பு. இசை அனிருத். படத்தில் இசையமைப்பாளர் தேவாவும், நடிகை ஸ்ருதி ஹாசனும் தலா ஒரு பாடலை பாடியுள்ளனர். இதில் தேவா பாடிய பாடலுக்கு சிவகார்த்திகேயனும், அனிருத்தும் இணைந்தும் ஆட்டம் போட்டுள்ளனர்.


இந்நிலையில் படத்தின் ஆடியோ மார்ச் 1ம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஆடியோ வெளியீட்டை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.


பாடல்களை மெருகேற்றும் பணிக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதால் இந்த ஒத்திவைப்பு என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதே செய்தியை ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்தது. ஆனால் ரசிகர்களை குழப்பும் வகையில் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்திருக்கும் ‘மான் கராத்தே’ விளம்பரத்தில் ‘அனிருத் இசை நாளைமுதல்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கோலங்கள் தொடரில் நடித்த ஆதி ஹீரோவானார்!

கோலங்கள் தொடரில் நடித்த ஆதியை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த தொடரில் தேவயானிக்கு எதிராக வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பவர்தான் ‘கோலங்கள் ஆதி’ என்று அழைக்கப்படும் அஜய்.


தற்போது இவர் ஆதியும் அந்தமும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். முற்றிலும் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை கௌஷிக் இயக்கியுள்ளார். படத்திற்கு எல். வீ.கணேசன் இசையமைக்கிறார். வாசன் ஒளிப்பதிவு செய்கிறார். என்.கே கிராப்ட்-ஆர். எஸ். ஆர் ஸ்க்ரீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் பபடத்துக்கு திரை அரங்கு உரிமையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை சொல்லி பூரிப்பு அடைகிறார் நாயகன் அஜய் .


‘எனக்கு கிடைத்த ஊக்கம் தரும் வார்த்தைகளும் , திரை அரங்கு குறித்த உத்திரவாதமும் என்னை மிகவும் பெருமைக்குரியவன் ஆக்குகிறது . திரை அரங்கு உரிமையாளர்கள் தான் முதல் ரசிகர்கள் . அவர்களின் சினிமா குறித்த அனுபவம் என்னை போன்ற புதியவர்களுக்கு மிகவும் தேவை என்று கூறினார்.

‘வல்லினம்’ - அருமை! - திரைவிமர்சனம்!

நடிகர் : நகுல்

நடிகை : மிருதுலா பாஸ்கர்

இயக்குனர் : அறிவழகன்

இசை : தமன்

ஓளிப்பதிவு : பாஸ்கர்

திருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம்.

இந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில் பட்டுவிட அந்த இடத்திலேயே கிருஷ்ணா இறந்து விடுகிறார். தன் நண்பன் மரணத்தை தாங்க முடியாத நகுல், அந்த கல்லூரியில் இருந்தே விலகுகிறார். மேலும், தன் நண்பன் சாவுக்கு காரணமான கூடைப் பந்தை இனிமேல் விளையாடக்கூடாது என்றும் முடிவெடுக்கிறார்.

அதன்படி, சென்னைக்கு வந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இதே கல்லூரியில் படிக்கும் மிருதுளா, சந்துரு ஆகியோர் நகுலுடன் நட்பு கொள்கிறார்கள். நாளடைவில் நகுலின் நடவடிக்கைகள் நாயகி மிருதுளாவிற்கு பிடித்துப்போக அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். நகுலும் அவளை காதலிக்கிறார்.

சந்துரு அந்த கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இருந்தும் தன்னுடைய அணியால் கல்லூரிக்கு இதுவரை ஒரு கோப்பைகூட பெற்றுத்தர முடியாத ஆதங்கத்தில் இருந்து வருகிறார்.

அதே கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் கல்லூரியின் பெயரை நிலைநிறுத்திய தலைக்கணத்தில் இவர்களைப் பார்த்து கிண்டலடிக்கின்றனர். மேலும், கூடைப்பந்து விளையாட்டை தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.

இதனால் வெகுண்டெழும் நகுல், சந்துருவுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட்டின் மகத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில், கூடைபந்து விளையாட்டில் நகுல் தன்னுடைய முழு திறமையைப் பயன்படுத்தி கல்லூரிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தின் நாயகன் நகுல், ஒரு கூடைப்பந்து வீரருக்குண்டான எல்லா தகுதியும் இவருக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாறுபட்ட நடிப்பில் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கூடைப்பந்து விளையாடும்போது ஒரு அனுபவ வீரரைப் போலவே விளையாடியிருக்கிறார். கதை முழுவதும் இவரை மையப்படுத்தியே நகர்வதால், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகி மிருதுளாவுக்கு நாயகனை காதலிப்பது மட்டுமே வேலை என்பதால், இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே. இருந்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். திருச்சியில் நண்பராக வரும் கிருஷ்ணா, அங்கு பயிற்சியாளராக வரும் நடிகர் ஆதி ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கின்றனர். சென்னையில் நண்பராக வரும் சந்துருவும், நடிப்பில் நகுலுக்கு போட்டி போட்டிருக்கிறார்.

கல்லூரி முதல்வராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், பயிற்சியாளராக வரும் அதுல் குல்கர்னி, கதாநாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிப்பில் மிளிர்கின்றனர்.

தமிழில் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுக்களை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கிறன. ஆனால், கூடைப்பந்து விளையாட்டை வைத்து தமிழில் இதுவரை ஒரு படம்கூட வந்ததில்லை. அதை இயக்குனர் அறிவழகன் சரியாக புரிந்துகொண்டு, அழகாக படமாக்கியதற்காக பாராட்டலாம். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

கே.எஸ்.பிரபாகரன் ஒளிப்பதிவில் கூடைப்பந்து விளையாட்டை அழகாக படமாக்கியிருக்கிறார். இவருடைய கேமரா கண்கள் படத்தின் காட்சிகள் நம் கண்களை உறுத்தாமல் இருக்க ரொம்பவும் விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான்.

மொத்தத்தில் ‘வல்லினம்’ மெல்லினம். 

இன்றைய படங்களின் - திரைவிமர்சனம்!

ஹைவே (2014) திரைவிமர்சனம்

டெல்லியைச் சேர்ந்த பணக்காரரின் மகள், ஹீரோயின் அலியா பட். விடிந்தால் திருமணம் நடக்கும் சூழலில், தன் வருங்காலக் கணவனோடு காரில் ஹைவேஸில் செல்லும் ஆசையைச் சொல்லி இருவரும் கிளம்புகிறார்கள். ஒரு பெட்ரோல் பங்கில் வைத்து அவளைக் கடத்திச் செல்கிறது ஒரு கும்பல். கடத்தல் கும்பலில் இருக்கும் ரன்தீப் ஹூடா, அவளை வெவ்வேறு இடங்களுக்குத் தன்னுடைய டிரக்கில் வைத்து போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து அழைத்துச் செல்கிறார்.


ஒரு கட்டத்தில் முதல்முறையாகத் தன் வாழ்க்கையில் முழு சுதந்திரத்தை உணர்கிறார் அலியா. பயணத்தின் நடுவே போலீஸ் செக்போஸ்ட்டில்கூட டிரக்குக்குள் ஒளிந்துகொண்டு ரன்தீப்பையும் அவர் சகாவையும் காப்பாற்றுகிறார் ஆலியா. சிடுமூஞ்சியான ரன்தீப்பிற்கு மோசமான இளம்பிராயம் இருப்பதை உணர்ந்து அன்பு காட்டுகிறார்.


ராஜஸ்தானின் பாலைவன மணல் வழி நெடுஞ்சாலையில் விரைந்த டிரக், உலகின் கூரையாய் இருக்கும் இமயமலைக்குச் செல்கிறது. அங்கே அலியாவை இறக்கிவிட்டு ஓடிப்போகிறார் ரன்தீப். அவரை விடாமல் துரத்தி முதன்முறையாக ரன்தீப்பை சிரிக்கவைக்கிறார் அலியா. முடிவில் பனி படர்ந்த மலை உச்சியில் ஓர் அழகான வீட்டில் இருவரும் தங்குகிறார்கள். தாயன்பை அவள் மூலம் முதல்முறையாக உணர்கிறார் ரன்தீப். அழகான காதல் உருவாகிறது. மறுநாள் நாம் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.


‘ஹைவே’ படம் இதுவரை காட்டாத அற்புதமான கேமரா கோணங்களைக்கொண்ட படம். ‘லகான்’ கேமராமேன் அனில் மேத்தாதான் படத்தின் ப்ளஸ். அலியா பட், ரன்தீப் ஹூடாவின் நடிப்பு அபாரம். அழுக்கு உடையோடு படம் நெடுகிலும் குழந்தைத்தனமான எக்ஸ்பிரஷனோடு வளையவரும் அலியா நம் எல்லோருக்கும் நெருக்கமானவராக மாறிவிடுகிறார். இந்த அலியா பட், பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் கடைசி மகள். படத்தில் கரை புரண்டு ஓடும் இமயமலை நதி நீரலைகளுக்கு நடுவே பாறையில் அமர்ந்துகொண்டு சந்தோஷத்தில் வெடித்து அழுவார் பாருங்கள். செம செம எக்ஸ்பிரஷன்.


இசை நம்ம ரஹ்மான். ஏற்கெனவே பாடல்கள் ஹிட். படத்தில் அவரின் பின்னணி இசை பிரமிக்கவைக்கிறது. ஆங்காங்கே ‘இம்ப்ளோசிவ் சைலன்ஸ்’-ஆக வரும் அந்த சாலைப் பயணப் பின்னணி இசை வேறு உலகிற்கு நம்மைக் கடத்திச் செல்கிறது. அலியா பட்டையும் ஒரு தாலாட்டுப் பாடலைப் பாடவைத்து அப்ளாஸ் அள்ளுகிறார் ரஹ்மான்.


கேமராவுக்கு முன் துருப்பிடித்த கம்பி போல நீண்டுகிடக்கும் சாலை. திரும்பத் திரும்ப சாலைப் பயணம் என அலுப்புத் தட்டாமல் இருக்க, ஆங்காங்கே ‘ஹால்ட்’ அடித்துச் செல்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதியில் அந்தப் பயணம் இலக்கில்லாமல் போனாலும் இமயமலையில் முடிவடையும்போது இன்னும் கொஞ்ச நேரம் டிரக்கில் பயணித்திருக்கலாமோ என நம்மை நினைக்கவைக்கிறது. வழக்கமான கதைதான். அதைச் சொன்னவிதத்திலும் காட்சிப்படுத்திய விதத்திலும் ‘ஹைவே’ நம்மை ஒரு ஜாலி ட்ரிப் போய் வந்த உணர்வைத் தருகிறது.

மொத்தத்தில் ‘ஹைவே’ நாமும் ஹைவேயில் செல்லலாம்….

சோக கதை கேட்டால் அழுது விடுவேன்: அமீர்கான்

இந்தி நடிகர் அமீர்கான் அரசியலில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்து அமீர்கான் கூறியதாவது:–


நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க வில்லை. யாருடனும் கூட்டு சேரவும் இல்லை. அரசியலை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன்.


பிரச்சினைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு என் சப்போர்ட் இருக்கும்.


 ஆனால் எந்த கட்சியோடும் சேர மாட்டேன். நான் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். நெஞ்சை நெகிழ வைக்கும் சோகமான கதைகள் கேட்டால் நான் அழுது விடுவேன்.


டி.வி. நிகழ்ச்சியில் கூட நிறைய சோக கதைகள் கேட்டுள்ளேன். அப்போதெல்லாம் எனக்கு அழுகை வந்தது.


இவ்வாறு அமீர்கான் கூறினார்.

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும். நான் சொல்லக்கூடிய பெரும்பாலான வைத்தியம் எனக்கு நானே செஞ்சு பார்த்துட்டு அதுக்கு அப்புறமாதான் மத்தவங்களுக்கு சொல்லுவேன்.


சில நோய்கள்... தெரிஞ்சவங்களுக்கு வந்து செஞ்சு பார்த்துட்டு சொல்லிட்டு இருக்கேன். சமீபத்துல எனக்கு கழுத்து வலி வந்தது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் பின்னோக்கி போவோமா?


பத்து, பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி கழுத்து வலி வந்திச்சி. தெரிஞ்ச டாக்டர்கிட்ட போய் பார்த்தேன். கழுத்து எலும்பு தேஞ்சிருக்கு. சில எக்சசைஸ் பண்ணினா சரியாயிடும்னு சொன்னார். எலும்பு தேயுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய வேலை பார்க்கல.


ஆனா அடுத்து வந்த நாட்கள்ல இதே கழுத்து வலி வந்திச்சி. அதை இப்போ புரிஞ்சிகிட்டேன். தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க.


அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளியுங்க. ஒருநாள் நொச்சி இலை குளியல்னா மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வச்சி குளியுங்க, அடுத்த நாள் வாதமடக்கி (வாத நாராயணன்) இலையை கொதிக்க வச்சி உடம்புக்கு ஊத்துங்க.


காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவுல கலந்து சாப்பிடுங்க. மத்தியான வேளையில மிளகு ரசம் இல்லன்னா கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்க. முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சா இஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடுங்க.


ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேக வச்சி பனங்கல்கண்டு இல்லைன்னா சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. கழுத்து வலி வந்த வழியை பார்த்து ஓடிப்போயிரும். இதே வைத்தியத்த உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும் செய்யலாம் என்கிறார் மூலிகை வைத்தியர் தமிழ்குமரன் (9551486617)

'கண்காட்சி' படத்தில் 9 வேடங்களில் நடித்தார், மனோரமா!

சிறந்த நகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமா, 1964-ம் ஆண்டு 'வேட்டைக்காரன்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நாகேசுடன் மனோரமா நடித்த 'காமெடி' காட்சிகள் அற்புதமாக அமைந்தன.

1966-ம் ஆண்டு, `அன்பே வா' படத்தில் நாகேஷின் ஜோடியாக மனோரமா நடித்தார். நகைச்சுவை நடிப்பில் அவருக்குப் புகழ் தேடித்தந்த படங்களில் இதுவும் ஒன்று. நாகேசுடன் நடித்தது பற்றி மனோரமா கூறும்போது, 'நானும் நாகேசும் அனுபவிராஜா அனுபவி', 'சரஸ்வதி சபதம்' என்று அதிகமான படங்களில் இணைந்து நடித்து உள்ளோம். எங்கள் காமெடி மிகவும் நன்றாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்' என்றார்.

தேவர் பிலிம்ஸ் படத்திற்காக ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அதில் மனோரமா குதிரையில் வருவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. குதிரை சவாரியே தெரியாத மனோரமா அந்த காட்சியில் சிரமப்பட்டு நடித்தார்.

குதிரை திடீரென்று வெகு வேகமாக ஓடியது. அப்போது குதிரை சரிந்து விழுந்ததால் மனோரமாவும் தூக்கி வீசப்பட்டார். அந்த சமயத்திலும், குதிரையின் கடிவாளத்தை மனோரமா கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தார். மீண்டும் குதிரை எழுந்து ஓடத்தொடங்கியதால், கடிவாளம் இழுபட்ட வேகத்தில் மனோரமா கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மனோரமா சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு அக்காட்சி மீண்டும் படமாக்கப்பட்டு, படம் வெளிவந்தது.

மனோரமா நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தபோது, கதாநாயகிகளின் பொறாமை குணத்தால், சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

இதுகுறித்து மனோரமா கூறியதாவது:-

'பொதுவாக எல்லா நடிகர் - நடிகைகளும் என்னிடம் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்வார்கள்.

அந்தக் காலத்தில் ஒருசில கதாநாயகிகள், தங்களை மிகப்பெரிய நட்சத்திரங்களாக கருதிக் கொண்டு, மற்றவர்களை அடிமைபோல் நடத்துவார்கள். குறிப்பாக, சிரிப்பு நடிகை என்றால் அவர்களுக்கு கிள்ளுக்கீரை என்ற நினைப்பு.

ஒரு சமயம் என்னுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்த ஒரு கதாநாயகி, நான் தலையில் அழகாக பூவும், அதற்கு ஏற்றாற்போல கழுத்தில் நகையும் அணிநëதிருந்ததை பார்த்தார்.

உடனே தயாரிப்பாளரை கூப்பிட்டு, 'மனோரமா தலையில் உள்ள பூவையும், கழுத்தில் உள்ள நகையையும் எடுத்துவிடச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் இனி உங்கள் படத்திற்கு என் கால்ஷீட் கிடையாது' என்று பயமுறுத்தினார். அதன் காரணமாக, நான் பூவை எடுத்துவிட்டு நடித்தேன்.

இவ்வளவுக்கும், எனது கதாபாத்திரத்திற்கு அந்த மேக்கப் அவசியம் என்றுதான் பூவும், நகையும் தரப்பட்டன. அது அந்த கதாநாயகிக்குப் பொறுக்கவில்லை.'

இவ்வாறு மனோரமா கூறினார்.

1971-ம் ஆண்டு 'கண்காட்சி' என்ற படத்தில் மனோரமா 9 வேடங்களில் நடித்தார். நகைச்சுவை கலந்த படம் அது.

'கல்யாணராமன்' படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடநëதது. விழாவில் கலந்து கொண்டு கவிஞர் கண்ணதாசன் பேசும்போது, 'டைரக்டர் கே.பாலசந்தர் எத்தனையோ, நடிகர் - நடிகைகளை அறிமுகப்படுத்தி பெருமை பெற்றிருக்கிறார். ஆனால், என்னால் ஒரே ஒரு மனோரமாவை மட்டும்தான் அறிமுகப்படுத்த முடிந்தது' என்றார்.

உடனே கே.பாலசந்தர், 'கவிஞர் கண்ணதாசன் நான் நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், அவர் மனோரமாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் 100 பேர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை அறிமுகப்படுத்தியதும், இரண்டும் சரி சமமானதுதான். அந்த நூறு பேருக்கு சமமான திறமைசாலி மனோரமா' என்று குறிப்பிட்டார்.

நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த மனோரமா பிற்காலத்தில் தாயாராக நடித்து முத்திரை பதித்தார்.

'பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்தில் வயதான வேடத்தில் நடித்த மனோரமா, சிலம்பம் சுற்றி ரவுடிகளை விரட்டுவது போன்ற சாகசங்களை செய்து நடித்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

'சின்னக்கவுண்டர்' படத்தில் விஜயகாந்தின் தாயாராகவும், 'கிழக்குவாசல்' படத்தில் கார்த்திக்கின் தாயாராகவும், 'அண்ணாமலை'யில் ரஜினியின் தாயாராகவும், 'அபூர்வசகோதரர்கள்' படத்தில் கமலின் தாயாராகவும் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.

மனோரமா நிறைய படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும், தனக்குப் பிடிக்காத கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை.

`ஆசை மனைவி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, தனது கேரக்டர் பிடிக்காததால் 'நடிக்க முடியாது' என்று கூறிவிட்டார்.

அதுபற்றிய மனோரமா கூறியதாவது:-

'ஒரு குடும்ப தலைவியே தனது மகளை வைத்து விபசார தொழில் நடத்துவது போல கதை அமைத்திருந்தார்கள். இதில் ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா? என்று கேட்டேன். 'முடியாது' என்றார்கள்.

'அப்படியானால் என்னை விட்டு விடுங்கள். நான் விபசார விடுதி தலைவியாகவும், விபசாரியாகவும் நடித்து இருக்கிறேன். ஆனால் தன் மகளை விபசாரம் செய்ய வைக்கும் குடும்ப தலைவியாக நடித்ததில்லை. குடும்ப தலைவி, மானத்தை காக்க வேண்டியவள். விபசாரம் செய்வதுபோல நடிக்க மாட்டேன். தப்பாக நினைக்காதீர்கள்' என்று சொல்லிவிட்டு, உடனடியாக முன்பணத்தையும் கம்பெனி உடைகளையும் திருப்பி அனுப்பிவிட்டேன்.'

இவ்வாறு மனோரமா கூறினார். 

எப்படி தொலைபேசியில் பெண்களை துரத்தும் தொல்லைகளில் இருந்து மீள்வது ?

எப்பிடி சாப்பிட்டிங்களா?’என்று கேட்பதில் தொடங்கி, ‘குட் நைட் டியர்’ என்று வழிவது வரை, செல்போன் வழியே குறுஞ்செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புகிறார்கள்.


இதுபோலவே படங்கள், வீடி யோக்கள், ரெக்கார்டிங் தகவல்களை எம். எம்.எஸ். என்ற முறையில் அனுப்புகிறார்கள். அறிவியல் நவீன தொழில்நுட்பமான எம்.எம்.எஸ்., தகவல் தொடர்புக்கு அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை.

ஆனால் அவற்றால் எல்லையற்ற பிரச்சினைகள் முளைத்திருப்பதால் குற்றம் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. படம்பிடிக்கவும், பிறகு பயமுறுத்தவும் பயன்படும் ‘எம்.எம்.எஸ்’கள் பல பெண்களின் வாழ்க்கையை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்னொருபுறத்தில் எம்.எம்.எஸ். ஆபாசக் காட்சிகள் இளைஞர்களை செக்ஸ் போதை அடிமைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான் அதிகம். அதனால் பெண்கள் இதில் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும். பெண்கள் இந்த தொந்தரவில் இருந்து தப்பிக்க இதோ சில ஆலோசனைகள்:

01-பெண்கள் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது தங்கள் கௌரவத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்து என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களது குடும்ப கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படக்கூடும். சமூக நெருக்கடிகளையும் அது உருவாக்கும். ஆகவே இத்தகைய இழப்புகளை எல்லாம் நினைவில்கொண்டு, வெளிவட்டார தொடர்புகளை பெண்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

02-பெற்றோரின் கண்காணிப்பைத்தாண்டி, நகரங்களில் தங்கி படிக்கும்- வேலைபார்க்கும் பெண்கள்தான் அதிகமாக ‘எம்.எம்.எஸ்’ வலையில் விழுகிறார்கள். கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவர்களை கட்டவிழ்த்து விடுகிறது. தனிமையும், நகரச்சூழலும் யாருடனாவது நட்பு கொள்ளத் தூண்டுகிறது.

03-பெண்களின் பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் இளைஞர்கள் தங்கள் வலையில் அவர்களை எளிதில் வீழ்த்திவிடுகிறார்கள். கண்டகண்ட புகைப்படங்கள், இரட்டை அர்த்த எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வைப்பார்கள். ‘இதிலெல்லாம் தவறு இல்லை, இதெல்லாம் சாதாரண விஷயம்’ என்று மூளைச்சலவை செய்வார்கள்.

04-அவர்களை நம்பியோ அல்லது பதிலுக்குப் பதிலாகவோ பெண்களும் அதே பாணியில் ஏதாவது எஸ்.எம்.எஸ். செய்துவிட்டால் போதும். அந்த சிறு துரும்பை வைத்துக் கொண்டு ‘பிளாக்மெயில்’ செய்தே தங்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள்.

05-பணம் தேவைப்பட்டால் பணம் பறிப்பார்கள். ஊர் சுற்ற, உல்லாசம் அனுபவிக்க என்று தாங்கள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் அந்த பெண்களை வளைத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.

06-இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் அவமானத்திற்குப் பயந்து மீள முடியாமல் தவிப்பார்கள். தவறான முடிவுகளும் எடுத்துவிடுவார்கள்.

07-பெண்கள் ஒருபோதும் வலைவீசும் எஸ்.எம்.எஸ்.களுக்கு பதிலளிக்கக் கூடாது. செல்போனிலும் தேவையின்றி பேசக்கூடாது. பெண்களின் ஆபாசம் கலந்த பேச்சு பெரும்பாலும் ஆண்களால் பதிவு செய்யப்படுகிறது. எனவே இத்தகைய பேச்சுக்களை பெண்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பாதிப்பு ஆண்களுக்கு இல்லை பெண்களுக்கு தான். கவனமாக இருங்கள்.

விளாம்பழத்தின் நன்மைகள்!

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.


இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.


பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.


விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.


அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

வசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்!

பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மூலிகைகள் என சிலவற்றை கூறலாம். இளமையாக அழகாக பார்ப்போரை கவரும் தன்மையைக் கொடுக்கும் செயல்பாடுகள் அதிகம் கொண்ட மூலிகைகள்.இந்த மூலிகைகளுக்கு எடுத்துக்காட்டாக நன்னாரிக் கொடியைச் சொல்லலாம்.

நன்னாரிக் கொடியின் வேர்:

நன்னாரிக் கொடியில் முக்கியமானது வேர். இதை சேகரித்து முறைப்படி சுத்தம் செய்து சூரணமாக மாற்ற வேண்டும்.பின்னர் ஆவின் பாலோடு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும் . இதனால்தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. இதனுடன் சீரகம் , மல்லி சக்கரை கலந்து சாப்பிட்டால் மேகச்சூடு, நீர்க்கடுப்பு, மேக வெட்டை, வறட்டு இருமல், கண் வளையம், தேமல், படை ஆகியவைவிலகுகின்றன.

எட்டுவிதமான செய்கைகளை கொண்ட எட்டுவித மூலிகைகள் முதலில் நோயை தம்பணப்படுத்தி பரவவிடாமல் வசியபடுத்தி, மாராண மூலிகைகள் அக்கிருமிகளை அழித்து, பேதண மூலிகைகள் பேதப்படுத்தி வித்துவேஷன் மூலிகைகள் அவற்றை உடலிருந்து வெளியேற்றுகின்றன.

இதன்படி பார்த்தால் முதல் இரண்டு வகை மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும். தம்பனம், வசியம் மற்ற 6 வகைகளில் வைத்தியர் எதை சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து சேர்க்க வேண்டும். கடைசியில் கட்டாயம், மாரணம்,வித்வேசனம் , பேதணம், இதில் ஏதாவது ஒரு மூலிகை இருக்க வேண்டும்.

எட்டுவித மூலிகைகளில் எதுவும் இல்லையெனில் மருந்தினால் பயன் இல்லை. இவ்வாறு அஷ்ட கர்ம முறைப்படி சேர்க்காததால் மருந்துகள் தோல்வியடைகின்றன என்பது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் :

பத்தியம்

இந்திய வைத்தியத்தில் அன்று மருந்துடன் கட்டாயம் ஏதாவது ஒரு பத்தியம் வைத்தனர். பத்தியம் தான் நோயாளிக்கு முதல் மருந்து, இரண்டாவது தான்மூலிகைகள். பத்தியம் இல்லாவிட்டால் மருந்துகளினால் பயன் இல்லை. இதனால் நல்ல மருந்துகள் கூட தோல்வியடைகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பக்க தலைவலி தலையில் நீரேற்றம், கண்களில் இருந்து சதா நீர் வருதல், தலைக்குத்தல், என்னும் நோய்களை 3 நாட்களில் பரிபூரண குணமடையச் செய்யலாம். முதல் நாள் காலை தலையில் பீனிச தைலம், அல்லது மிளகாய் தைலம் அல்லது சீரக தைலம் இதில் எதாவது 1 தைலத்தை வைத்து தலை முழுகிபின்பு கடுக்காய் 10கிராம், 10 மிளகு, வைத்து கஷாயம் செய்து சாப்பிட, 1 அல்லது 2 தடவை பேதியாகும். இவ்வாறு 3 நாள் செய்தால் பரிபூரண குணமாகும். ஆனால் இதில் பத்தியம் முக்கியம். பகலில் தூங்க கூடாது. படித்தல், டி.வி. பார்த்தல், வெயிலில் உலாவுதல் கூடாது.

பச்சரிசி கஞ்சியும், பருப்பும் மட்டும்தான் உணவாக கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் 3 நாளில் குணப்படும். பத்தியம் இல்லாமல் 30 நாள் செய்தாலும் குணப்படுவதில்லை. பத்தியம் 3 நாட்கள் வரைதான் இருக்க வேண்டும் என்பதுவிதி. எனவே பத்தியம் இரண்டாவது காரணமாகின்றது.

3-வது காரணம்:

விதிகள் மாற்றப்படுகின்றன:

சரக்கு சுத்திகள்:

சுக்கு, மிளகு,திப்பிலி முதல் வீரபாஷாணம், வரை எல்லா மூலிகைகளும், கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சத்தி செய்யப்பட வேண்டும் என்பது விதி.

“சுத்தி என்பது அதிலுள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களைநீக்குவது” அன்றுபோல் எல்லா மருந்துகளும் சுத்தி செய்யப்பட்டு தயாரிக்கும் முறைகளை கையாளும் நிறுவனங்கள், மருத்துவர்கள் குறைவே”.

எல்லா மருந்துகளிலும் முக்கியமாக இடம் பெறும் மருந்துகள் ஆடாதொடை, தண்ணீர்விட்டான்கிழங்கு, கீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு, அமுக்கிறா கிழங்கு, நன்னாரி வேர், நிலவேம்பு முதலியன. இவைகளை எப்போதும் பச்சையாக சேர்க்க வேண்டும். ஆனால் இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே சேர்க்கப்படுகின்றது. இதனால் இவைகள் சேர்க்கப்பட்ட மருந்துகள் தோல்வியடைகின்றன.

இதே போல் வாய்விளங்கம்திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி ஆகியவைகள்1 வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால் இன்று தேன் உடனடியாக சேர்க்கப்படுவதால் லேகிய முறைகள் யாவும் எதிர்பார்த்த அளவு வேலை செய்யாமல் தோல்வியடைகின்றன. இதே போல் மாசிக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்புமூலிகைகளை, பதார்த்தங்களை இரும்பில் அறைக்கக் கூடாது என்பதும் விதி.

இப்படி மருந்து தயாரிப்பதிலே அன்றும் இன்றும் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன. மேலும் இன்று நவீன வடிவில் தயாரிக்கப்படுவது மருந்துகளின் வீரியத்தை குறைக்கத்தான் செய்கிறது. அன்று எல்லா மருந்துகளுக்கு கவசம் போடப்பட்டதில்லை. அப்படியே சாப்பிடலாம். மருந்து நாக்கில் பட்டவுடனேயே உமிழ் நீரில் கலக்கும். எல்லா பாகங்களுக்கும் சென்றடைந்து, வயிற்றை அடைந்து ரத்தத்தில் கலந்து வேலை செய்தது.

இன்று கேப்சூல் மூலம் தரப்படுவதால் உமிழ்நீரோடு கலப்பதில்லை. எனவே இதனாலும் மருந்தின் வீரியம் குறையலாம். இவை பொதுவான காரணங்கள். இவைகளை கண்டு இக்குறைகளை களைந்தால் நிச்சயமாக நோயைவிரட்டலாம்.