Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 14 February 2014

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...!

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...!

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்..!

ஆரோக்கியமான உணவுகள் அனைத்தையும் எப்போதுமே நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்ற நினைத்தால் அது தவறு. ஏனெனில் சில உணவுகள் உயிர் போகும் அளவிலான தீமையை கூட விளைவிக்கலாம்.

எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அந்த உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு:-

பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.

மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும்.

அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.

ஆப்பிள்:-

என்ன அதிர்ச்சியாக உள்ளதா? தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.

ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.

ருபார்ப்:-

இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும்.

பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.

செர்ரி:-

பெரும்பாலான மருத்துவர்கள் செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த பழங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் தான் விஷம் உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.

பாதாம்:-

பாதாம் ஆபத்தான உணவுப் பொருள் என்று சொன்னால், பலரும் நம்ப மாட்டார்கள்.

ஆனால் உண்மையில் கசப்பாக இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம்.

ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.

ப்பர் மீன் (Puffer Fish):-

மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படின்னா பஃப்பர் மீன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

ஏனெனில் இந்த மீனின் கல்லீரலில் மிகவும் கொடிய விஷம் உள்ளது. இதனை ஈரலுடன் எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த விஷம் மீனில் பரவி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

காளான்:-

காளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன.

அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது.

ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்

தொப்பை குறைய 5 பயிற்சிகள் !

 தொப்பை குறைய 5 பயிற்சிகள் :

கொடி போன்ற இடை என்பது பலரின் கனவு முக்கியமாக பெண்கள் இடை சிறுத்து இருக்க ஆசை கொள்கின்றனர்..

வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருத்தல்
அழகான உருவமைப்பிற்கு வெகு முக்கியமானது..

தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் அவசியம் ... வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவதால் ஏற்படும் தொந்தியை வயிற்று தசைகளுக்கான பிரத்யேகமான பயிற்சிகளால் மட்டுமே சரி செய்யவியலும்....
அவை

பயிற்சி -1 முதலில் வார்ம் அப் பயிற்சியும் அதை தொடர்ந்து ஸ்டெரச் பயிற்சியும் செய்த பின் மூச்சுப்பயிற்சியை செய்ய வேண்டும் முதலில் வயிற்றை உள் இழுத்து கொண்டு மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளி விட வேண்டும் இவ்வாறு பத்து முறை செய்தல் வேண்டும்

பயிற்சி - 2 நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைத்து கொள்ள வேண்டும் பின் பக்கவாட்டு புறமாக காலை மட்டும் கொண்டு செல்லவேண்டும் வலது புறமும் இடது புறமுமாக மாற்றி மாற்றி செய்ய வேண்டும் இவ்வாறு பத்து முறை செய்து விட்டு இருபது நொடிகள் ஓய்வு தரவேண்டும் பின் மீண்டும் ஒருமுறை வலது புறமாகவும் இடது புறமாகவும் காலை கொண்டு செல்லவேண்டும் இதை ஹிப்ரோல் என்று கூறுவர் இதன் மூலம் வயிற்றில் உள்ள கொழுப்பு கரையும்

பயிற்சி - 3 நேராக நின்று கொண்டு ஒரு காலை மட்டும் மடக்கி மெதுவாக சுழற்ற வேண்டும் 30 முதல் 45 நொடிகள் சுழற்றிவிட்டு பின் காலை மாற்றி சுழற்றல் அவசியம்...இதன் மூலம் இடுப்பில் உள்ள தசைகள் வலுவடையும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்

பயிற்சி - 4 நேராக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி சற்று விரித்து வைத்துக் கொண்டு கைகளை முட்டியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் .. பத்து முறை இவ்வாறு செய்துவிட்டு 20 நொடி ஓய்வு பின் மீண்டும் ஒரு செட் என பயிற்சியை தொடரவும் ...

பயிற்சி - 5 உட்கார்ந்து கொண்டு கைகளை பக்கவாட்டில் இருத்திக்கொள்ள வேண்டும் ...கால்களை மட்டும் முன் கொண்டு செல்ல வேண்டும் பின்பு பின் இழுத்துக்கொள்ள வேண்டும்...இது போல 6 முதல் 10 முறை செய்து விட்டு 20 நொடிகள் ஓய்வு கொள்ள வேண்டும் பின் ஒரு செட் என பயிற்சி செய்ய வேண்டும் ....

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பயிற்சிகளுக்கும் ஒரு செட்க்கும் அடுத்த செட்க்கும் இடையில் ஓய்வு கண்டிப்பாக தேவை இது ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கான பயிற்சிகள் மட்டுமே.

மின்சேமிப்பில் சிறந்த வழி.....

மின்சேமிப்பில் சிறந்த வழி.....

1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின்சேமிப்பில் சிறந்த வழி.

2) எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் சூரிய ஒளி கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம் உபயோகிக்கவும்.

3) வீடுகட்டும் போதே போதிய வெளிச்சமும் காற்றும் வீட்டிற்கு கிடைக்குமாறு வடிவமைக்கவும்.

4) அனைத்து சுவர்களுக்கும் அடர்த்தியற்ற வண்ணம் பூசப்பட வேண்டும்.

5) வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே வெளிச்சம் தரக்கூடிய வகையில்மின்விளக்குகளை பொருத்தி பயன்படுத்தலாம்.

6) சாதாரண குமிழி விளக்குகளுக்குப் பதிலாக கச்சிதமான சிறுகுழல் விளக்குகளைப் பயன்படுத்தவும்.

7) சாதாரண 40 வாட்ஸ் குழல் விளக்குகளை மாற்றிவிட்டு அதேபோல் ஒளி வழங்கும் 36 வாட்ஸ் மெல்லிய குழல் விளக்குகளைப் பொறுத்தவும்.

குழல் விளக்குகளில் சாதாரண சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக்சோக்குகளை உபயோகிக்கவும்.

9) பூச்சியம் வாட்ஸ் விளக்குகளில் கூட 10 முதல் 12 வாட்ஸ் வரை மின்சாரம்செலவாகிறது. அதற்கு பதிலாக அதைவிட அதிக வெளிச்சம் தரக்கூடிய 5/7/9/11 வாட் சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தவும்.

10) அகச்சிவப்பு கதிர் மின்விளக்குகள், இயக்க உணர் கருவிகள், நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மின்னமைப்புகள், ஒளியின் அளவினை
முறைப்படுத்திடும் மின்னமைப்புகள் மற்றும் சூரிய மின்கலம் ஆகியவைகளின்மூலமாக தானே இயங்குகிற மின்கருவிகளை பயன்படுத்தினால் அவைமின்னமைப்புகளை தேவைக்கேற்ப இயங்கச் செய்து மின்சேமிப்பிற்கு பெரிதும்உதவுகின்றன.

11) தூசு படிந்த பல்புகள் மற்றும் குழல் விளக்குகளை அவ்வப்போது நன்றாக சுத்தம்செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதை தவிர்க்கலாம்.

மின்விசிறி:

1) குறைந்த எடையுடைய மின்திறன் மிக்க மின்விசிறிகளை உபயோகிக்கவும்.

2) மின்விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைஉபயோகிக்கப்பதால் மின்செலவு குறைகிறது.

3) மோட்டர்களை ரீவைண்ட் செய்வதை தவிர்க்கவும்.

4) மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.

5) மின்விசிறியிலுள்ள பேரிங்குகளுக்கு அவ்வப்போது எண்ணெய் விடவேண்டும்.

கிரைண்டர்:

1) மின்திறன் மிக்க மோட்டார்களையே கிரைண்டர்களில் பயன்படுத்தவும்.

2) கிரைண்டர்களில் நைலான் பெல்ட்களையே எப்பொழுதும் உபயோகிக்கவும்.

3) கிரைண்டர்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும்.

4) கிரைண்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தேவையான பகுதிகளில்அவ்வப்போது எண்ணெய் விட வேண்டும்.

வாஷிங் மெஷின்:

1) வாஷிங் மெஷின்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும்.

2) வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவையானால் மட்டுமே உபயோகிக்கவும்.

குளிர்சாதனக் கருவி:

1) அறையின் பரப்பளவுக்கேற்ப சரியான அளவிலான குளிர்சாதனக் கருவியைதேர்ந்தெடுத்து உபயோகிக்கவும்.

2) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையின் கதவுகளை கூடிய வரையில் திறந்தவுடன் மூடிவிட வேண்டும்.

3) குளிர்சாதனக் கருவிகளின் வடிகட்டும் அமைப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

4) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை காற்று வெளியேறாத வண்ணம்அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

5) மின்செலவினை குறைத்திட தேவையான வெப்பம், 25 டிகிரி சென்டிகிரேடு அளவில் அறையின் குளிர்சாதனக் கருவி இயங்கும் வகையில் அதன்
தெர்மோஸ்டேட் அமைக்கப்பட வேண்டும்.

6) பழுதடைந்த பழைய குளிர்சாதனக் கருவியை சரி செய்வதற்கு பதிலாக, மிகுந்தஎரிசக்தி செயல்திறன் (நட்சத்திர குறியீடு) கொண்ட குளிர்சாதனக் கருவியை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.
அயன் பாக்ஸ்

1) தினமும் ஒன்றிரண்டு துணிகளை “அயர்ன்” செய்வதை தவிர்த்து, ஒரே நேரத்தில் மொத்த துணிகளை “அயர்ன்” செய்யவும்.

குளிர்பதனப் பெட்டி:

1) குளிர்பதனப் பெட்டியினை, சுவற்றில் இருந்து சற்று தள்ளி நல்ல காற்றோட்டம் ஏற்படும் வண்ணம் அமைக்க வேண்டும்.

2) குளிர்பதனப் பெட்டியின் கதவினை அடிக்கடிதிறந்து, மூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3) சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப்பொருட்களை அறையின் வெப்ப நிலைக்கு கொண்டு வந்து, அவற்றை நன்கு மூடி குளிர்பதன பெட்டியினுள் வைத்திட வேண்டும்.

4) குளிர்பதனப் பெட்டியின் உள்ளே படியும் உறைபனி அவ்வப்போது நீக்கப்பட வேண்டும்.

5) மின்சேமிப்பு நட்சத்திர குறியீடு அதிகமுள்ள குளிர்பதனப் பெட்டியை வாங்கிபயன்படுத்துதல் வேண்டும்.

6) குளிர்பதனப் பெட்டியிலுள்ள தெர்மோஸ்டாட் கருவியை சீதோஷ்ண நிலைக்குஏற்றவாறு தேவையான அளவில் வைக்க வேண்டும்.

நீர் ஏற்றும் பம்பு

1) மின்திறன் மிக்க பம்புகளையே நீரேற்றத்திற்கு உபயோகிக்கவும்.

2) சரியான அளவிலான பி.வி.சி பைப்புகளையே உபயோகிக்கவும், ஜி.ஐ பைப்புகளை தவிர்க்கவும்.

3) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும்.

4) நீர் ஏற்றும் பம்பு செட் மோட்டார்களில் கெபாசிட்டர்களை இணைக்கவும்.

5) தண்ணீர் தொட்டி நீர் நிரம்பி வழிவதை தவிர்க்க, தண்ணீர் அளவை தெரிவிக்கும்/கட்டுப்படுத்தும் கருவியை பொருத்தவும்.

நீர் சூடேற்றி (ஹீட்டர்):

1) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும்.

2) தேவையான இடங்களில் மின்சார நீர் சூடேற்றிக்கு பதிலாக சூரியசக்தி நீர் சூடேற்றியை பயன்படுத்தவும்.

3) வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்பபாதுகாப்பு உறை அமைக்கப்பட வேண்டும்.

கணினி:

1) பயன்பாடு இல்லையெனில் வீடு மற்றும் அலுவலக கணினிகளின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். மாறாக 24 மணி நேரம் ஒரு கணினி இயங்கினால், அது ஒரு திறன் மிக்க குளிர்பதனப் பெட்டியினை விட அதிக மின் சக்தியினைவீணடிக்கிறது.

2) கணினியின் மானிட்டர் தேவைக்குப்பின் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், ஏனெனில் அது கணினி பயன்படுத்தும் மின்சக்தி அளவில் பாதி அளவினை செலவழிக்கிறது.

3) தூங்கும் நிலையில் கணினிகள், மானிட்டர் மற்றும் நகலெடுக்கும் கருவி போன்றவை நாற்பது சதவிகித மின் செலவினை மிச்சப்படுத்த உதவி புரிகின்றன.

4) திரைகாப்பவை கணினியின் திரைகளை பாதுகாக்க மட்டுமே பயன்படுகின்றன. அவை மின்சக்தியினை சேமித்திட உதவுவதில்லை. மாறாக கணினியினை தேவைக்கேற்ப இயக்கியும் நிறுத்தியும் பயன்படுத்தினால் அவை மின்சக்தியினை வீணாக்காமல் மின்சேமிப்பிற்கு உதவுவதோடு கணினிகளுக்கு நீண்ட பாதுகாப்பு அளிக்கிறது.
மின் சேமிப்பு வீட்டிற்கும் நாட்டிற்கும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்து செயலாற்றுவோம்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்!

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த இந்தியன்!!

ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த இந்தியன் ஏ.டி.எமை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”.


இந்த ஏ.டி.எம் இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது. 


ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன். வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.குளித்துகொண்டிருந்த பாரனுக்கு,இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.


 அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.


1967-ம் ஆண்டு ஜூன் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல் முதலில் நிறுவப்பட்டது. ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” எண்ணையும் கொண்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற முடிந்தது.


ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி ”கரோலின்” கூறியதை ஏற்று,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன்.


இத்தனைக்கும் சொந்தக்காரரான ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு.

குட்டி பாப்பா பிறந்ததும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்!

குட்டி பாப்பா பிறந்ததும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.

குறை தைராய்டு (Congenital Hypothyroidism) : பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும். குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அட்ரீனல் கோளாறு (Congenital Adrenal Hyperplasia) : பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும்.

என்சைம் குறைபாடு (Galactosemia) : என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும்.

இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.

பல்லிடுக்கு நூலை எதற்கு அவசியம் பயன்படுத்த வேண்டும்?

பல்லிடுக்கு நூலை எதற்கு அவசியம் பயன்படுத்த வேண்டும்?

படர்ந்து இருக்கும் பற்காறையினால் உண்டாகும், பல் ஈறு வீக்கம் மற்றும் பசை நோய் போன்றவற்றை நீக்குகிறது. ஒரு பல் மருத்துவர் அல்லது உடல் நலவியல் வல்லுநர் உதவியுடன் பற்காறையை வழக்கமாக தூய்மைப்படுத்துதலால், அது மேலும் பற்காறை உண்டாவதை தடுக்கிறது. பல்லிடுக்கு நூலை பயன்படுத்துவதால் கூட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வருவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் பல்லிடுக்கி நூலை பயன்படுத்தி ஒருவருடைய ஆரோக்கியத்தையும் மற்றும் புன்னகையையும் மேம்படுத்த முடியும்.

முக்கியத்துவம்:

மக்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பல்லிடுக்கு நூலை பயன்படுத்தி, பற்களில் இருக்கும் உணவு துகள்கள் மற்றும் பற்காறையையும் நீக்கலாம். மேலும் பல் துலக்கி சென்றடைய முடியாத இடங்களிலும் கூட இதனை உபயோகப்படுத்த முடியும். பற்காறை என்பது பொருட்களில் ஒட்டக்கூடிய படலம் ஆகும். அதில் பற்சிதைவுக்கு காரணமான பாக்டீரியாவை கொண்டிருக்கிறது. மேலும் பல்லைச் சுற்றி உண்டாக்கும் ஈறுகளின் (பல் ஈறு வீக்கம்) அழற்சியையும் , பின்னர் பல்லைச் சுற்றி நோய்களையும் ஏற்படுத்துகிறது.

எச்சரிக்கை:

அதிக ஆபத்தான பாக்டீரியாக்கள் பற்காறையில் ஒட்டிக் கொண்டு நச்சுகளை உற்பத்தி செய்ய தொடங்குகிறது. நச்சுகள் ஈறுகளில் எரிச்சல், பல் ஈறு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இந்த பல் ஈறு வீக்கத்தினால், நச்சுகள் பற்களுக்கு ஆதரவு கொடுக்கும் எலும்புகளையும் தாக்குகிறது. இதனால் எலும்புகள் வலிமையை இழப்பதோடு, தளர்வான பற்கள் கொண்டிருப்பதோடு, பற்களையும் இழக்கின்றோம்.

பரிசீலனைகள்:

பல்லிடுக்கு நூலை பயன்படுத்துவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்லைச் சுற்றி வீக்கம் மற்றும் பல் ஈறு வீக்கத்தினாலும் கூட இதயகுழலிய நோய் ஏற்படுகிறது. ஏனெனில் இது உடலில் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுத்துகிறது. பக்கவாதம் நோயாளிகளின் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில், பல்லைச் சுற்றிய கடுமையான வீக்கத்தினால் குறிப்பிடத்தக்க பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தடுப்புகள்:

பல்லிடுக்கு நூல் அழகு தருவதிலும் உதவியாக உள்ளது. அதுவும் இதனைப் பயன்படுத்துவதால், அசிங்கமான பற்காறை ஏற்படுவதை தடுக்க முடியும் மற்றும் வாயில் ஏற்படும் தூர்நாற்றத்தையும் தடுக்க முடியும்.

வகைகள்:

பல்வேறு வடிவங்களில் பல்லிடுக்கு நூல்கள் கிடைக்கின்றன. அதுவும் மெழுகினால் பூசப்பட்ட மற்றும் மெழுகினால் பூசப்படாத, பரவலான மற்றும் வழக்கமான வடிவங்களிலும் காணப்படுகிறது. மேலும் புதினா மற்றும் இலவங்கப்பட்டை என்ற சுவைகளிலும் கிடைக்கிறது. இவை அனைத்தும் ஒரே வேலையைத் தான் செய்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒருவரின் பற்களுக்கு இடையிலான இடைவெளி பரந்து இருந்தால், அதற்கேற்றால் போல் பல்லிடுக்கு நூலை பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமான விஷயம் என்னவெனில் பொருட்களை தேர்வுச் செய்து அதை தினசரி பயன்படுத்த வேண்டும்.

நீர் எடுப்பான்கள் பல்லிடுக்கு நூலைகள் போன்று திறமையாக இருப்பதில்லை. ஏனெனில் அவை பற்காறைகளை நீக்குவதில்லை.

குறிப்பு:

பல்லிடுக்கு நூலை மிக மெதுவாக பற்கள் மற்றும் ஈறுகளுக்கிடையிலும் தேய்க்கப்பட வேண்டும்.

காதல் குறித்து உதிர்ந்த பொன் கருத்துகள்..

காதல் கவிதைகள், காதல் பாடல்கள் போல காதல் பொன்மொழிகளும் நிறைய உள்ளன. சில காதலர்களும், கவிஞர்களும்,
காதலில் தோற்றவர்களும், ஜெயித்தவர்களும் என காதலைப் பற்றி கூறியிருப்பதை இங்கு பார்க்கலாம்.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும்.. கண்களில் இருந்து அல்ல.

காதல் இதயத்தை கனமாக்கிவிடும், மூளையை காலியாக்கிவிடும்.

காதலில் விழுவதற்கு, புவிஈர்ப்பு சக்தியின் சதி வேலை எதுவும் இல்லை.

காதலை விட சிறந்த விஷயம் ஒன்று உண்டு..அது தான் காதலிக்கப்படுவது.

காதல் என்பது குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகை.

காதல் மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால், மகிழ்ச்சியாகவே இருக்க விடாது.

காதல் என்பது போதைப் போன்றது.. துவக்குவது எளிது, முடிப்பது கடினம்.

காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காணலாம்.

காதல் என்பது தானாகக் கொடுப்பது, வாங்கப்படுவதில்லை.

கண்ணாடி குவளையைப் போன்றது காதல், இறுக்கினால் உடைந்துவிடும், மெதுவாக பிடித்தால் கை நழுவி விடும்.

காதல் என்பது மனநோய், திருமணம் செய்தால் அந்த நோய் குணமாகிவிடும்.

தீயை நீரால் அணைக்கலாம், காதலை திருமணத்தால் அணைக்கலாம்.

பிரபலங்களின் வாழ்க்கையில் காதல்..

பிப்ரவரி 14 – காதலர் தினம். உலகம் முழுவதும் இளம் காதலர்களால் மிகவும் குதூகலமாகக் கொண்டாடப்படும் நாள். காதல் என்பது பலரது வாழ்க்கையை பிரகாசமாக்கியிருக்கும். சிலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கும்.

சரி சில மூத்த காவியக் காதலர்களை இங்கு நினைவு கூருவோம் :

ஜான்சனின் காதல்

ஆங்கில அகராதியை தயாரித்து அளித்தவர் சாமுவேல் ஜான்சன். அவர் தன் இருபத்தைந்து வயதில் நாற்பத்தாறு வயது நிரம்பிய விதவைப் பெண்ணான டெட்டி போர்ட்டர் என்பவரைப் காதலித்து மணந்துகொண்டார்.

தாந்தேயின் காதல்

புகழ்பெற்ற இத்தாலிய நாட்டுக் கவிஞர் தாந்தே. தனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது தன் வயதையொத்த பேட்ரிக் என்ற சிறுமியிடம் மனதைப் பறிகொடுத்தார்(!). ஆனால் துரதிர்ஷ்டவசமாக பன்னிரெண்டு வயதில் அந்தச் சிறுமி இறந்து போய்விட காலமெல்லாம் அந்தப் பெண்ணை நினைத்து காதல் கவிதைகளை வடித்தார்.

நெப்போலியனும் ஜோசப்பைனும்

மாவீரன் நெப்போலியன் தன் காதலி ஜோசப்பைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை. திருமணத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார் நெப்போலியன். திருமணம் முடிந்து முப்பந்தைந்து மணி நேரம் மட்டுமே மனைவியுடன் இருந்துவிட்டு போர் முனைக்குச் சென்றுவிட்டார் நெப்போலியன். போர் முனையிலிருந்து நெப்போலியன் தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஐயாயிரம்.

காரல் மார்க்ஸ்-ஜென்னி

கம்யூனிச சித்தாந்தத்தின் தந்தை காரல் மார்க்ஸ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எழுத்தாளர். ஆனால் அவரது காதலி ஜென்னி, பிரபுக்கள் வம்சத்தவர். தன் காதல் கணவருக்காக தன் சுகங்களை எல்லாம் துறந்து வறுமையில் வாடினார் ஜென்னி. தன் கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன்னைத் தியாகம் செய்தார். ஜென்னியை போன்ற பெண் மனைவியாய் கிடைப்பது காலத்தின் கொடை என்றுதான் கூற வேண்டும்.

காதல் மலர்!

இத்தாலியில் வாழ்ந்த ரோபக்டோ என்பவர் அலெக்ஸாண்ரா என்ற பெண்ணை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப்போகும் நேரம் அலெக்ஸாண்ட்ராவுக்கு ரோபக்டோ மீது திடீரென்று கோபம் ஏற்பட நிச்சயதார்த்தம் நின்றது. அன்றைய தினத்திலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு நாள் கூடத் தவறாமல் ரோஜா மலரை 1,480 நாட்களுக்கு அனுப்பினார் ரோபக்டோ.

அப்படியிருந்தும் கோபம் தணியவில்லை. ரோபக்டோ இத்தாலியின் பிரதான நகரமான கின்னெட் வால்நகரின் மையப் பகுதியில் தனது காதலிக்காக 80 அடி அளவில், இதய வடிவிலான காதல் சிற்பத்தை பளிங்கு கற்களால் அமைத்தார். 200 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சிற்பம் எழுப்பப்பட்டது.

ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்!

1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது

குறுந்தகவல்களை உளவு பார்க்கும் பேஸ்புக்!!


சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது மொபைல் பயனாளர்களின் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.களை உளவு பார்ப்பதாக பிரபல கணிப்பொறி பாதுகாப்பு நிறுவனமான கஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 8.3 கோடி பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதாகவும், அவர்களில் 7.5 கோடி பேர் மொபைல் மூலமாக பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் பெருமிதம் கொண்டு வருகிறது.

மொபைல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் சட் என்ற சேவையும் வழங்கப்படுகிறது. இந்த சேவையில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். வசதி போன்றே ஃபேஸ்புக்கில் சட் செய்யும் வசதி அளிக்கப்படுகிறது. பதிவு செய்த அலைபேசி எண், வலைத்தளத்தில் தங்கி விடுகிறது. அதை அழிப்பதற்குரிய வசதிகள் இல்லை.

இந்நிலையில் ஃபேஸ்புக் வலைத்தளம், தனது வாடிக்கையாளர்களின் அலைபேசிக்கு வரும் குறுந்தகவல்களையும், கருவியில் உள்ள கலண்டர் முதலான தனிப்பட்டத் தகவல்களையும் உளவு பார்ப்பதாக பிரபல இணைய கண்காணிப்பு நிறுவனமான கஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு இதுவரை ஃபேஸ்புக் பதில் எதுவும் தரவில்லை.

கடந்த அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட அதன் முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடன், உளவு ரகசியங்களை அறிவதற்கு ஃபேஸ்புக் வலைத்தளம் பயன்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் கேப்டன் பட்டத்திற்கு ஆபத்து!!

விஜயகாந்தின் அடைமொழியான கேப்டன் என்ற பெயருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது தேமுதிக என்ற கட்சியை துவக்கி நடத்தி வருபவர் விஜயகாந்த். இயக்குனர், ஆர்.கே.செல்வமணி இயக்கிய, கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படம், நடிகர் விஜயகாந்துக்கு, அவரின் திரைஉலக வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதனால் விஜயகாந்தின் ரசிகர்கள் அவரை கேப்டன் என்ற, அடைமொழியுடன் அழைத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நடிகர் சங்க தலைவராக, விஜயகாந்த் பொறுப்பேற்ற போது மரியாதை அடிப்படையில், நடிகர்களும், அவரை கேப்டன் என்றே அழைக்கத் துவங்கினர்.

நாளடைவில் விஜயகாந்த் என்பதை விட கேப்டன் என்ற அடைமொழியைச் சொன்னாலே எல்லாரும் புரிந்து கொள்ளும் நிலைமை உருவானது. அதனால் போஸ்டர்கள், கட்சி பேனர்கள், அறிக்கைகள் என அனைத்திலும் கேப்டன் என்ற பெயரே, மேலோங்கியது.

தேமுதிகவின் இணையதளம், விஜயகாந்தின் பேஸ்புக் போன்றவற்றிலும் கேப்டன் என்ற, அடைமொழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கேப்டன் பதவி பெயரை அரசியல்வாதியான, விஜயகாந்த் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ் தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பிஉள்ளார்.

இதுகுறித்து கண்ணன் கோவிந்தராஜ் கூறுகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கேப்டன் என்ற அடைமொழியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இது அரசியல் சட்டத்துக்கு முரணானது.

1950ல் இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடை செய்யும் பிரிவின் படி ராணுவ அதிகாரிகளே, கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும். சாதாரண குடிமக்கள் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அரசியல் கட்சித் தலைவரான விஜயகாந்த் கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவது, சட்டத்துக்கு முரணானது. எனவே, விஜயகாந்த் கேப்டன் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அதே போல், விஜயகாந்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

என் கடிதத்திற்கு விஜயகாந்திடம்இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் இன்னும் ஒரு மாதத்துக்குள் கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

பெண்கள் செய்யக் கூடாதவை…

பெண்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் என சில நியமனங்களை நமது சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அவை அனைத்துமே, குடும்ப நலன் கருதி கூறப்பட்ட விஷயங்கள்தான்.

* சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.

* பெண்கள் இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.

* அடிக்கடி வீட்டில் அழக்கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும்.

*  வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும்.

* பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது.

*  கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

*  வேலைக்காரர்களை வைத்து கோலமிடக் கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

* கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது.

* பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக் கூடாது

* அம்மி, உரல் மீது அமரக் கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது.

* பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக் கூடாது.

* கோயில் மற்றும் பெரியவர்கள் முன்பு, பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்ய வேண்டும்.

கோலிவுட்டில் மேலும் ஒரு பரபரப்பு! T.R. குடும்பமே மதம் மாறியது!

யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் நியூஸ்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பரபரப்பு செய்தி கிளம்பியுள்ளது. சிம்பு உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். சிம்பு, குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மதம் மாறிவிட்டார்களாம். இதனால்தான் டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவில் கூட சிலுவைக் குறியீடு இடம்பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 10ம் தேதி டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவிற்கு திருமணம் நடைபெற்றது நினைவிருக்கலாம். இந்த திருமணத்தின் போதுதான் டி.ஆர். குடும்பம் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியது அம்பலத்துக்கு வந்துவிட்டது. முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இலக்கியாவின் திருமணம் நடந்தது. டி.ராஜேந்தர் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி சில வருடங்களாகிவிட்டதாம். இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியதற்கு ஆதரது தெரிவித்து சிம்பு டுவிட் செய்திருந்தார். நண்பன் என்ற முறையில் யுவனுக்கு ஆதரவாக டுவிட் செய்திருப்பார் என்று அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் இப்போதுதான் அதற்கான காரணம் என்ன என்று பலருக்கு தெரியவந்திருக்கும்.

சுகப்பிரசவத்திற்கு தேவை சரியான எடையும், உடல் உழைப்பும்!



சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும்.

பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.

மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்.

இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும்.

அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம். 

உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பி விட்டதா? எளிய தீர்வு..!

உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது” என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.

முதலில், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.

உங்கள் கணினியில் நீங்கள் எப்பொழுதாவது பயன்படுத்தவென பதிந்திருக்கும் மென்பொருள்களை நீக்குங்கள். அடுத்து temp கோப்புகளை நீக்குங்கள்.

அப்படி நீக்கியும் கூட, உங்களுடைய கணினியில் மீண்டும் ‘ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லை. கோப்புகளை நீக்குங்கள்’ என்ற எச்சரிக்கை செய்தியைக் காட்டினால், கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு உதவும்.

இம்மென்பொருள் எதற்காக என்றால், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ட்ரைவ்களில் (அதாவது C:, D:, E:, F:, என ஹார்ட் டிஸ்க் பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கும் இல்லையா? )ஒவ்வொரு டிரைவும் எந்தளவிற்கு கோப்புகளை கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு டிரைவின் கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது, அந்த டிரைவில் எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்துள்ளன என்பதை நமக்கு சரியாக காட்ட இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.

டிரீ சைஸ் ஃபீரீ மென்பொருள் -(TREE SIZE FREE)

இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் ஒவ்வொன்றும் எவ்வளவு இடத்தை பெற்றுள்ளது? ஒவ்வொரு டிரைவில் எந்த கோப்புகள் அதிகமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை துல்லியமாக ஒரு சில வினாடிகள் உங்களுக்கு காட்டும்.

கிராஃபிக்ஸ் பார் மூலம் ஒவ்வொரு கோப்பும் அந்த டிரைவில் எடுத்துள்ள இடத்தை காட்டும். இந்த கிராஃபிக்ஸ் பார் மற்றும் வரைபட வடிவில் உள்ள இந்த அளவீடுகளில் உள்ள வண்ணங்களை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.

இதன் அடிப்படையில் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை நீக்குவது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: http://www.jamsoftware.com/treesize_free
இதனை போன்றே ஹார்ட் டிஸ்க்கில் அதிக அளவு இடம்பெற்றுள்ள கோப்புகள் மற்றும் டிரைவ்களை கண்டறிய உதவும் மற்ற மென்பொருள்:

2. WINDIRSTAT

தறவிக்கம் செய்ய: http://windirstat.info/download.html

3. XINORBIS

தறவிக்கம் செய்ய:  http://windirstat.info/download.html

4. RIDNACS

தறவிக்கம் செய்ய: http://www.splashsoft.de/Freeware/ridnacs-disk-space-usage-analyzer.html

5. SPACE SNIFFER
http://www.uderzo.it/main_products/space_sniffer/

குறிப்பு:

டிஸ்க் ஃபைட்டர் என்ற இந்த மென்பொருளும் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி, உங்கள் Hard Disk -ல் உள்ள இடத்தை மீட்டுக்கொடுக்கிறது.

நம்மை உயர்த்தும் ஏமாற்றங்கள்!

நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றவர் ஆர்பர்ட் எயின்ஸ்டின்!

தன் முதல் ஊடகத் துறை வேலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர் வால்ட் டிஸ்னி!!

பள்ளியில் கூடைப்பந்தாட்டக் குழுவிலிருந்து ஒதுக்கப்பட்டவர் மைக்கேல் ஜார்டன்!!!

எதற்காக இந்தப் பட்டியல் என்று யோசிக்கிறீர்களா? ஏமாற்றங்களை அனுமதித்தால் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் என்று உணர்த்திக் காட்டிய சாதனையாளர்களின் வெற்றிப் பட்டியல் இது. கடற்கரை மணலின் உறுத்தலை உள் வாங்குகிற “சிப்பி”கள்தான் விலைமதிக்க முடியாத முத்துக்களைத் தருகின்றன. அது போலவே கவலைகளின் உறுத்தல்களை அனுமதிக்கிற மனிதர்கள் அதை சாதகமாகக் கொண்டு சரித்திரம் படைக்கிறார்கள்.

மேலை நாட்டின் புகழ் பெற்ற நாளிதழ் எழுத்தாளர் “ஏன் லாண்டர்ஸ்” சொல்கிறார், “உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்பார்த்து காத்திருங்கள். ஏமாற்றங்களை சந்திக்கிற அந்தநொடி உங்கள் துயரங்கள் உயர்வதற்குள் உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொண்டு, ‘துயரமே..!!! உன்னைக் காட்டிலும் நான் பெரியவன். உன்னால் என்னை வீழ்த்த முடியாது’ என்று உரக்கச் சொல்லுவீர் களேயானால் நீங்கள்தான் வெற்றியாளர்” என்று.

அமெரிக்காவின் மனநல நிபுணர் திரு. ஜேம்ஸ் பென்னி பெக்கர் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில், நம் மனதை அழுத்துகிற துயரங்களையும் நம் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படுகிற மனச்சுமையையும் சரியான முறைகளில் அணுகினால் அவையே நம் உத்வேகத்தை அதிகரித்து நம்மை மாபெரும் உயரத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்கிறார்.

ஓர் அழகான ஓவியத்தை நம் கண்களின் மிக நெருக்கமாக வைத்துப் பார்த்தால் அதில் மிஞ்சப்போவது வெறும் புள்ளிகளும் கோடுகளும் மட்டும்தான். சற்று தொலைவில் வைத்துப் பார்க்கிறபோது அது நம்மை அதிசயிக்க வைக்கிற வண்ணமயமான ஓவியமாகத் தெரியும். அதுபோலத்தான் வாழ்வின் பிரச்சனைகளை சற்று தொலைவில் வைத்துப் பார்க்கிறபோதுதான் வெற்றிகள் நம்மை நெருங்குகின்றன.

ஒவ்வோர் ஏமாற்றமும் ஏதோவொரு மாற்றத்திற்கான துவக்கமாகவே இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துவதில் புகழ் பெற்ற ஓப்ரா, ” வாழ்வில் தோல்விகளை சந்திக்கிற போது, இது சரியான பாதை அல்ல என்று இறைவன் என்னை வழிநடத்துவதாகவே உணர்கிறேன். பல தவறான வழிகளில் பயணப்பட்ட அனுபவத்தில் இன்று சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன். இந்த கற்றலே என்னை எண்ணற்ற சாதனைகளைச் செய்ய வைத்தது” என்கிறார். ஓப்ராவுக்கு மட்டுமல்ல.

 நம் ஒவ்வொருவருக்குமே வெற்றியின் ரகசியமே ஒரு சதவீத திறமையும், 99 சதவீத கடின உழைப்பும்தான். உதாரணமாக, உலகிலேயே மிக சீக்கிரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று மூங்கில். ஆனால் அவை மண்ணில் விதைக்கப் பட்ட நாள் முதல் சோம்பலின் அடையாளமாகவே நம் கண்களுக்குத் தெரிகிறது. கிளைகள் இல்லாத மரங்களாகவே இவை வளர்கின்றன.

ஆனால் மண்ணில் வேர் ஊன்றிய நாள் முதல், 24 மணி நேரத்திற்குள் 48 அடி நீளம் வளர்ந்து விடுகிறது. சிறிது தாமதமாக துவங்கினாலும் அடித்தளம் வலுவாக இருப்பதன் உறுதியில், உலகில் வேகமாக வளரும் மரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தன் வெற்றியில் அம்மரத்திற்கு இருக்கிற தெளிவு மனிதர்களில் பலருக்கு இருப்பதில்லை.

தான் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறோமோ, அந்தத் துறையின் அடிப்படைகளை தெரிந்துகொண்டு நம் வெற்றி இலக்கை தெளிவுடன் நிச்சயித்து செயல்பட்டால் உலகில் மிக வேகமாக வளர்கிற சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயரும் சீக்கிரம் இடம் பெறும். 

ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

பெஸ்ட் அம்மா...!

இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

தாய்க்குப் பின் தாரம்!

நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

காபியை உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

அம்மாவின் கட்டளைகள் ஆறு!

உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

1. அம்மா புராணம் பாடாதே!

2. அம்மாவோடு ஒப்பிடாதே!

3. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

4. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி...

நீடூழிவாழ வாழ்த்துக்கள்...!

பி.கு.

மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது!

இப்படி இருந்தால் எப்படி?

இந்தக் கேள்வி, எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது. யோசிக்கும் சக்தி, செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும், ஓர் எல்லைக்கு மேல் போகாமல் இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை. இருக்கும் நிலையில் நிறைவு


பெற்றுவிடாமல், “இப்படியே இருந்தால் எப்படி’ என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு இன்னும் புதிய உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே போட்டிருக்கும் வட்டத்தை “வசதி வட்டம்”, “பாதுகாப்பு வட்டம்” என்று விதம் விதமான வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். அப்பட்டமாய் சொல்வதென்றால், அவையெல்லாம் அச்சத்தின் வட்டங்கள். இருப்பது போதும் என்ற எண்ணம், மனிதனின் இருப்புக்குத் துணை செய்யுமே தவிர வாழ்க்கையை வாழ்வதற்கல்ல. வாழ்க்கை தந்திருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள் எவ்வளவு, அப்படித் திறப்பதால் ஏற்படும் மனநிறைவு எவ்வளவு மகத்தானது என்பதையெல்லாம் இந்த அச்ச வட்டத்திற்குள் இருக்கும் வரை அணுவளவும் அனுபவிக்க முடியாது.

நிம்மதியான வாழ்க்கை என்ற பெயரில் பலரும் நின்றுவிடுகிற எல்லையில்தான், நிறைவான வாழ்க்கைக்கான தேடல் தொடங்குகிறது.

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், செல்வந்தர்கள் சொகுசாக வாழ்வார்கள். ஏழைகள் எப்போதும் சிரமப்படுபவர்கள் என்பதுதான். ஆனால் பெரும் பாலான செல்வந்தர்கள், தங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்ததால் வளர்ந்தவர்கள்.

ஒரே மாதிரியான சராசரி வாழ்க்கையில் சலிப்படைந்து மாற்றங்களை விரும்பியவர்கள், வசதி குறைந்தவர் களில் பலர் பெரும்பாலும், வாடகைக்கு, வீட்டு செலவுகளுக்கு, குழந்தைகளின் கல்விக்கு என்று மட்டும் சம்பாதித்து அதிலேயே சமாதானமாகி விடுவார்கள். இதற்காகவே “பொறுப்பான குடும்பத் தலைவர்” என்ற பெயரும் அவர்களுக்குக் கிடைக்கும். இந்த வட்டத்திற்குள் இறுதிவரை உழன்று கொண்டிருந்தால் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து வெளியே வந்தவர்களே வெற்றியாளர்கள்.

பொருளாதார வெற்றியைப் பெற்றவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள். பொருளாதார வெற்றி பெறாதவர்களும் கடைசிவரை உழைக் கிறார்கள். இதில் என்ன வேறுபாடென்றால், பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவர்கள் திறமையாக உழைக்கிறார்கள். தங்கள் திறமையை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே முழுமையான வெற்றி சாத்தியப் படுகிறது.

இப்படியே இருந்தால் எப்படி என்கிற எண்ணம் எப்போது உங்களுக்கு ஏற்படுகிறதோ, அப்போதே நீங்கள் வளரத்தொடங்கி விட்டதாக அர்த்தம். வட்டங்களை விட்டு வெளியே வர சில வழிகளும் இருக்கின்றன.

1. இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

2. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் குறுக்கு வழியில் சம்பாதித்த வர்கள் என்ற தவறான முடிவுக்குத் தள்ளப் படாதீர்கள்.

3. புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் தீவிரமாக இருந்தால் அதைத் தடுக்காதீர்கள்.

4. புதிய முயற்சிகளில் ஏற்படும் சின்னச் சின்ன நஷ்டங்களையோ தோல்விகளையோ பொருட் படுத்தாதீர்கள்.

இப்படியே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல நாம். எப்படியாவது முன்னேறப் பிறந்தவர்கள் நாம். இந்த எண்ணத்தில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.

எதையும் கொறிக்கும் எலிகள்!

அண்டார்ட்டிகா தவிர உலகின் எல்லா இடங்களிலும் எலிகள் வாழ்கின்றன. சில இனங்கள் தரையிலும், சில பூமிக்கடியில் வளைகளிலும் மற்றும் சில மரங்களிலும் வாழ்கின்றன. சில எலிகள் குளிர்காலம் முழுவதும் தூங்காமல் வாழ்கின்றன. பூமிக்குள் உணவைச் சேமித்து வைக்கும் எலிகளில் முதன்மையானது பெருச்சாளி. Jerboas வகை எலிகள் மணல் குன்றுகளின் மீது ஓடுவதற்கு ஏதுவான நீளமான கால்களைக் கொண்டுள்ளன.

எலிகள் சுண்டெலியைவிடப் பெரியவை. எலிகளின் கால்களில் ஐந்து விரல்கள் உண்டு. உடலில் முடி நிறைந்திருக்கும், மீசை உண்டு, கடினமான வால் உள்ளது. சுமாரான பார்வைத்திறன் உண்டு. மரம், பிளாஸ்டிக், அலுமினியம், காரீயம், தாமிரம் போன்றவற்றைக் கடிக்கும் அளவுக்குக் கூர்மையான பற்கள் உண்டு. தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு எலிகளின் நிறமும் எடையும் வேறுபடும். எலிகள் தினந்தோறும் அவற்றின் எடையில் ஐந்து முதல் இருபது சதவீதம் வரை சாப்பிடுகின்றன. கருவுற்ற பெண் எலிகள் மனஅழுத்தம் அல்லது உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாகத் தனது கருவைத் திரும்ப உறிஞ்சும் (reabsorb) அசாதாரணத் தன்மையைப் பெற்றிருக்கின்றன.

எலிகளுக்கு வலிமையான தாடைத் தசை உள்ளது. ஒரு ஜோடி வெட்டும் பற்கள் உள்ளன. வருடத்திற்கு 12 சென்டிமீட்டர் வீதம் வாழ்நாள் முழுதும் அவற்றின் பற்கள் வளர்த்துக்கொண்டே இருக்கும். பற்களின் மேல் உள்ள பற்பூச்சு (Enamel) வலிமையானது. அதனால்தான் உலோகம் போன்ற கடினப் பொருள்களையும் எலியால் எளிதாகக் கடிக்க முடிகிறது.

உலகின் பல பகுதிகளில் எலிகளைச் சாப்பிடுகிறார்கள். பெருச்சாளியில் புரதச்சத்து இருப்பதால் விரும்பி உண்கிறார்கள். வயல் பக்கம் கிடைக்கும் வெள்ளை எலி அநேக மக்களால் உண்ணப்படுகிறது. இந்திய 'மிஸ்மி' கலாசாரத்தில் எலிகள் பாரம்பரிய உணவாக உள்ளன. வட இந்தியாவில் முசாகர் இனத்தவர் எலியை உணவுக்காக வியாபாரரீதியாக வளர்கின்றனர். கானா, பிலிப்பைன்ஸ், வியத்நாம், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் எலியை உண்கின்றனர். வளர்ப்பு பிராணிகளுக்கும் எலி உணவாகக் கொடுக்கப்படுகிறது.

நீங்களே செய்யலாம்- கூழாங்கல் ஆமை!

 தேவையான பொருட்கள்:

ஒரு பெரிய கூழாங்கல் மற்றும் ஆறு சிறிய கூழாங்கற்கள், பெயிண்ட், பசை மற்றும் கெட்டி அட்டை.

செய்முறை:

1. சோப்புத் தண்ணீரில் கூழாங்கற்களை கழுவிக்கொள்ளவும். வெயிலில் நன்கு காயவைக்கவும்.

2. பெரிய கூழாங்கல்லுக்குப் பச்சை வண்ணம் பூசவும். சிறிய கூழாங்கற்களுக்குப் பிரவுன் வண்ணம் பூசவும்.

3. பச்சை மற்றும் பிரவுன் வண்ணங்களைச் சேர்த்து பெரிய கூழாங்கல்லில் குட்டிக்குட்டி வட்டங்களை வரையவும்.

4. நீங்கள் விரும்பிய வண்ணத்தை எடுத்து கெட்டி அட்டையில் அடியுங்கள். பெரிய கூழாங்கல்லை எடுத்து அட்டையின் நடுவில் ஒட்டுங்கள். ஆமையின் தலைக்கு சிறிய கூழாங்கல் ஒன்றை எடுத்துப் பொருத்துங்கள். அத்துடன் கால் மற்றும் வாலுக்கும் மீதியிருக்கும் ஐந்து சிறிய கூழாங்கற்களை ஒட்டுங்கள்.

5. ஆமையின் தலையில் இரண்டு கண்களை வரைந்துகொள்ளுங்கள்

மொழுமொழுவென்ற ஆமை உருவாகிவிடும். இதை உங்கள் நண்பர்களுக்குப் பரிசளித்து மகிழுங்கள். 

ஏன் உடல் எடையை குறைத்தார் - ஜீ.வி.பிரகாஷ்..?

இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் ‘மதயானைக்கூட்டம்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.


இதைத் தொடர்ந்து ‘பென்சில்’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தில் நடித்தபோது ஜீ.வி.பிரகாஷ் தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். மேலும், இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.


படத்தில் பள்ளி மாணவன் தோற்றத்தில் தெரிவதற்காக இந்த எடை குறைப்பு செய்துள்ளாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.


இதனால் படம் ஆரம்பிக்கும் முன் 69 கிலோவாக இருந்த இவரது உடல் எடை தற்போது 60 கிலோவாக குறைந்துள்ளதாம். இப்படத்தை மணி நாகராஜ் என்பவர் இயக்குகிறார்.


இப்படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் இசைப் பணியையும் ஜீ.வி.பிரகாஷே கவனிக்கிறார்.

காதலர்களுக்கு விருந்து அசத்தும் நயன்தாரா!

பில்லாவில் நீச்சல் உடையணிந்து, இளம் ரசிகர்களை துவம்சம் செய்த நயன்தாரா.

 தற்போது,குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து,பாராட்டுகளை அள்ளுகிறார்.


இந்தியில், வித்யா பாலன் நடித்த, கஹானி படத்தின் ரீ-மேக்கான, அனாமிகா படம் இப்போது, தமிழுக்கு ரீ-மேக்காகியுள்ளது.


 வித்யா பாலன் ரோலில், நயன்தாரா நடித்துள்ள இந்த படம், காதலர் தினத்தன்று (இன்று) திரைக்கு வருகிறது.


மேலும், இது கதிர்வேலன் காதல் படமும், இதே நாளில் திரைக்கு வருகிறது. இதையடுத்து, காதலர் தினத்தில், நான் நடித்த இரண்டு படங்கள் வருகின்றன.


காதலர்களுக்கு இந்த படங்கள் விருந்தாக இருக்கும் என, பெருமையுடன் கூறுகிறார், நயன்தாரா.

ஆண்ட்ரியாவின் புது அவதாரம் இசையமைப்பாளரானார்!

அவ்வப்போது, சர்ச்சையில் சிக்கினாலும்,விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்து, தன் நடிப்பு முத்திரையை அழுத்தமாக பதித்து வருகிறார், ஆண்ட்ரியா.


ஆனாலும், அவருக்கு, நடிக்க வரும் வாய்ப்பை விட, பின்னணி பாடல் பாடுவதற்கு தான், அதிக வாய்ப்புகள் வருகின்றன.


ஆண்ட்ரியாவின் ஹஸ்கி வாய்சுக்கு,ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.



அடுத்த கட்டமாக, தற்போது, தான் நாயகியாக நடித்துள்ள, தரமணி படத்தில், ஒரு ஆங்கில பாடலை எழுதி, இசையமைத்து,பாடி,தானே நடித்தும் உள்ளார்.



ஆண்ட்ரியா கம்போஸ் செய்து, மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்த சில டியூன்களை கேட்ட டைரக்டர், அதில், ஒரு பாடலை, படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்துகிறாராம்.

வயதை பற்றி சொல்ல வேண்டாமே - கமல் கெஞ்சினார்!

ஆறு வயதிலேயே, களத்தூர் கண்ணம்மா படத்தில்,அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடியபடி, சினிமாவில் அறிமுகமானவர் கமலஹாசன்.


 விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இயக்கி, நடித்து, மிகச்சிறந்த இயக்குனராகவும் உயர்ந்து நிற்கிறார்.


 அத்துடன், இளம் ஹீரோயின்களுடன் தொடர்ந்து டூயட்டும் பாடிவருகிறார்.சமீபத்தில், ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற, இயக்குனர் பாரதிராஜா, ஆரம்ப காலத்தில் இருந்தே, நானும், கமலும் நண்பர்கள். இருவரும், ஒரே வயதுடையவர்கள்என, பெருமையுடன் கூறினார்.


அடுத்து பேசவந்த கமல்,நானும், நீங்களும், நண்பர்கள் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்காக, ஆண்ட்ரியா போன்ற இளம் நடிகைகளுடன், டூயட் பாடி வரும் நேரத்தில், என் வயதை மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக பேச வேண்டுமா என, சிரித்தபடியே, கேள்விக் கணையை வீசினார்.