Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

நயன்தாராவுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!

செகண்ட் இன்னிங்சில் அஜீத், ஆர்யா போன்ற நடிகர்களுடன் நடித்தபோது நயன்தாரா அவர்களுக்கு பொருத்தமாக இருந்தார். ஆனால், அதற்கடுத்து இப்போது சிம்பு, ஜெயம்ரவி, தனுஷ், உதயநிதி என நடிப்பதால், அவர்களுடன் நின்று நடிக்கும்போது நயன்தாராவின் உடம்பிலும், முகத்திலும் முதிர்ச்சி தெரிகிறதாம். இதை சம்பந்தப்பட்ட நடிகர்களோ, இயக்குனர்களோ சொல்லாதபோதும், நயன்தாராவின் அபிமானிகளான சில கேமராமேன்கள் அவரது காது கடிக்கிறார்களாம்.


அதனால், இந்த முதிர்ச்சியை விரட்டியடிக்க என்ன செய்யலாம் என்று யோசித்த நயன்தாரா, சிலரது அட்வைஸ்படி உடல் எடையை குறைத்துப்பார்த்தாராம். ஆனால் அப்படி செய்கிறபோது அவரது முக அழகு போய் விடுகிறதாம். இதுவா நயன்தாரா வ்வே... என்று ஓடும் அளவுக்கு ஒரு மார்க்கமாக இருக்கிறாராம். அதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியை தற்போது கிடப்பில் போட்டு விட்டார் நயன்தாரா.


அதனால், தனது இளமையை பாதுகாக்கும் உணவுகள், இயற்கை மருத்துவங்களில் கவனத்தை திருப்பியிருக்கும் நயன்தாரா, முகத்தில் பூசிக்கொள்ளும் மேக்கப் பொருட்களை முகத்தை பாதிக்காத வகையிலான பிராண்டுகளை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். கூடவே, மேக்கப்பை கலைத்ததும் முதல் வேளையாக ஸ்கின்னை பாதுகாக்கக்கூடிய சில ஆயுர்வேத கிரீம்களை போட்டுக்கொள்கிறாராம்.


அதோடு, இப்படி வீட்டில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் முகத்தில் எதையாவது பூசிக்கொண்டேயிருக்கிறார். யாராவது சினிமாக்காரர்கள் பட விசயமாக சந்திக்க சென்றாலும், தனது நிஜமுகத்தை காண்பிக்காமல், ஆயுர்வேத கிரீம் தடவிய முகத்தோடுதான் காட்சி கொடுக்கிறாராம் நயன்தாரா.

0 comments:

Post a Comment