Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 13 February 2014

காஜல், தமன்னா, திரிஷா மூன்று ஜோடிகள் - கமலுக்கு!

உத்தமவில்லன் படத்தில் கமல்ஹாசனுடன் மூன்று கதாநாயகிகள் டூயட் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


விஸ்வரூபம் 2 படத்திற்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் அடுத்து ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார்.


 இப்படத்தில் 4 டீன் ஏஜ் வயது பெண்களின் தகப்பனாராக நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல்.


காஜல் அகர்வால், தமன்னா மற்றும் திரிஷா என மூன்று பேர் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம்.

100 கோடி பட்ஜெட்டில் விஜய் படம்!

ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் படத்தின் படப்பிடிப்பு  வேகமாக நடைபெற்று வருகிறது.


விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.



பெரிய அளவிலான டெக்னிக்கல் டீமுடம் முருகதாஸ் களம் இறங்கி இருப்பதால், படத்தின் பட்ஜெட் 100கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்தப் படத்தில் நடிக்க விஜய்க்கு 22கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.



 இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 18 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

கௌதம் மேனன் படத்துக்குபின் - அஜித்!

ஆரம்பம் படத்தில் நடித்தபோது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அஜீத் குமார் வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.


அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்தபோது ஆக்ஷன் காட்சி ஒன்றில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து தானே நடித்தார்.


ஆர்யா காரை ஓட்ட அஜீத் காரின் முன்பகுதியில் நின்று செல்லும் காட்சியை படமாக்கியபோது விபத்து ஏற்பட்டது.


அந்த ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் அஜீத்தின் காலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி பெற்ற பிறகு அவர் நடிப்பை தொடர்ந்தார்.


இத்தனை மாதங்களாக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்ட அஜீத் ஒரு வழியாக கௌதம் மேனன் படத்தை முடித்துவிட்டு வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறாராம்.

த்ரிஷ்யத்திற்கு மீனா வேண்டாம் - கமல்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த மலையாள படமான த்ரிஷ்யம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.



இதையடுத்து இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.



மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை எடுத்த ஜீத்து ஜோசபே அதை தமிழில் கமலை வைத்து ரீமேக் செய்கிறார்.



மலையாளத்தை அடுத்து தமிழ் ரீமேக்கிலும் மீனாவே கதாநாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின.


ஆனால் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் மீனா வேண்டாம் என்று கமல் தெரிவித்துவிட்டாராம். இதையடுத்து அவருக்கு வேறு ஒருவரை ஜோடியாகப் போடுகிறார்களாம்.

ஐ படமும் எமிஜாக்சனும்!

மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்தவர் இங்கிலாந்து நடிகை எமிஜாக்சன். அழகில் முத்திரை பதித்த அளவுக்கு அவர் நடிப்பில் முத்திரை பதிக்காதபோதும், அவரையும் நமது தமிழ் கலாசாரத்திற்கேற்ற நடிகையாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் ஐ படத்திற்கு புக் பண்ணினார் டைரக்டர் ஷங்கர்.

அதையடுத்து, பக்கா தமிழ் பெண்ணாகவே அவரது கெட்டப்பை மாற்றி நடிக்க வைத்தவர், எமிக்குள் இருக்கும் நடிப்பாற்றலை நூறு சதவிகிதம் வெளியே கொண்டு வரும் வகையில், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில காட்சிகளிலும் நடிக்க வைத்திருக்கிறாராம். கதை மற்றும் காட்சியின் ஆழத்தினை புரிந்து கொண்ட எமியும், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினாராம்.

அதனால், ஒருநாள் மொத்த யூனிட் முன்பு, எமியின் நடிப்பைப்பற்றி பெருமையாக பேசினாராம் ஷங்கர். அதைக்கேட்டு பூரித்துப்போன எமிஜாக்சன், அதன்பிறகு தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சிகளிலும் இன்னும் ஈடுபாடு காட்டி நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாராம். குறிப்பாக, சில ஆவேசமான காட்சிகளில் நடிப்பில் விஸ்வரூபமே எடுத்திருக்கிறாராம் எமிஜாக்சன். அதனால் ஐ படம் திரைக்கு வரும்போது, எமி மீதுள்ள ஹாலிவுட் நடிகை என்ற முத்திரை மறைந்து தமிழ் நடிகை என்ற இமேஜ் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் கலாசாரத்தையும், தமிழ் உணர்வுகளையும் அழுத்தம் திருத்தமாக தனது நடிப்பில் அவுட்புட் கொடுத்திருக்கிறாராம் எமி

மறுபடியும் களத்தில் கோலிசோடா டீம்.. புதுதகவல்!

ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் 6 வருடங்களுக்கு முன்பு அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று ஒரு படம் இயக்கினார். அது வெற்றிகரகமாக அமையவில்லை. அதன்பிறகு படம் இயக்குவதை விட்டுவிட்டு ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றினார். என்றாலும் இயக்குனராக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற லட்சியத்தோடு கோலிசோடா கதையை உருவாக்கினார். கதையை கேட்ட யாரும் தயாரிக்க முன்வரவில்லை. வேறு வழியில்லாமல் தனது சொத்து ஒன்றை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் கோலிசோடாவை எடுத்தார்.

சுமார் ஒரு வருடம் இதன் படப்பிடிப்பு கோயம்பேடு மார்க்கெட்டிலேயே நடந்தது. படம் முடிந்ததும் அதனைப் பார்த்த இயக்குனர் லிங்குசாமி தனது திருப்தி பிரதர்சுக்காக வாங்கினார்.

சுமார் 70 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட படத்தை லிங்குசாமி ஒன்றரை கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. படம் இப்போது 8 கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. இதில் தயாரிப்பாளர் பங்காக 5 கோடி கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 15 கோடி வரை வசூலிக்கும் என்கிறார்கள்.

இதனால் உற்சாகத்தில் இருக்கும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விஜய் மில்டனின் கோலிசோடா டீமின் அடுத்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை விஜய் மில்டன் துவங்கி விட்டார். இசை அமைப்பாளர் உள்ளிட்ட டெக்னிக்கல் டீம் அப்படியே அடுத்த படத்திலும் இருக்கிறது. தற்போது பாப்புலராக இருக்கும் ஹீரோவும் முன்னணி ஹீரோயினும் நடிக்க இருக்கிறார்கள்.