Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 9 March 2014

"நிமிர்ந்து நில்" - பக்காவான திரைவிமர்சனம்!

இந்த உலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களில் மனித உயிரினம் மட்டும் தான் லஞ்சம் என்கிற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சமுதாயம் இப்படி மாற இப்படி சீரழிய இந்த லஞ்சம் ஏய்ட்ஸை விட கொடூரமாக மனிதர்களை தாக்கியிருக்கிறது. இதில் பணம் இருப்பவன் வாழ்கிறான் பணம் இல்லாதவன் போராடி வீழ்கிறான். சமுத்திரகனியின் இந்த நிமிர்ந்து நில் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை கொண்டு சேர்க்கட்டும்....


சிலையும் நீயோ சிற்பியும் நீயே முதலில் நீ உன்னை சரி செய்துக்கொள் உலகம் தானாக திருந்திவிடும் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து இவ்வளவு அற்புதமான படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. தனது சிறு வயதிலிருந்தே அறவழிக்கல்வியை பயின்று ஒழுக்கத்தையும், நேர்மையை கற்றுக் கொண்ட ஜெயம் ரவி. வெளியுலகம் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்று நேரில் பார்க்கும்போது அவருக்கு கண்களில் கண்ணீர் வருகிறது.


 ரோட்டில் எவனோ ஒருவன் சண்டைபோட அதை ஏன் என்று தட்டிக்கேட்காமல் ஓரமாய் நின்று வேடிக்கைப்பார்க்கும் மனிதர்கள் மத்தியில் துணிந்து சென்று கேள்வி கேட்கிறார் ஜெயம் ரவி. விளைவு அவரின் சட்டைப் பை கிழிந்தது தான் மிச்சம். இப்படி நமக்கென்ன என்று ஒதுங்கும் மக்களிடையே வாழ முடியாமல் துடியாய் துடிக்கிறார் ஜெயம் ரவி.


சிக்னல் சரியாக வேலை செய்யாமல் திடீர் போக்குவரத்து ஏற்பட அங்கே எற்படுகிறது ரவியின் வாழ்க்கையில் திருப்பம். இவரை பிரச்சனையில் தள்ளி விட்டு தனது கருத்தை ஆழ பதித்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. சிக்னலில் தொடங்கி கோர்ட் வரைக்கும் ரவிக்கு ஏற்படும் அநியாயங்களை பார்க்கும்போது நம்மை அறியாமலே நமக்குள் ஒரு கோபம் வந்துவிடுகிறது. சுதந்திரம் வாங்கி இத்தனை வருடங்கள் ஆகியும் 50 சதவீதத்திற்கும் மேல் இளைஞர்கள் இருக்கும் இந்திய நாட்டில் இன்னும் வருமை ஒழிந்தபாடில்லை.


இதற்கு காரணம் லஞ்சம் என்று உணரும் ஜெயம் ரவி. இதற்கு காரணமான அரசாங்க ஊழியர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க எடுக்கும் முயற்சிகள், நிச்சயம் யாரும் நினைத்து பார்க்காத ஒரு திருப்பம். படத்தில் ஜெயம் ரவிக்கு இரண்டு வேடம் அந்த இரண்டாவது வேடத்தில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசம் ரசிக்க வைக்கிறது.இயக்குநர் சசிகுமார் ஒரு முக்கியமான இடத்தில் குரல் கொடுத்திருக்கிறார். ரவி பேசும் வசனங்கள் அனைத்தும் நடு மண்டையில் ஆண்யை வைத்து அடித்தது போல இருக்கிறது. குறிப்பாக ஒரு வசனம் உங்களுக்காக “அங்க நம்ம அண்ணன் தம்பியை சுட்டுக் தள்ளினாங்க ,நம்ம அக்கா, தங்கச்சிய கற்பழிச்சாங்க நாம என்ன செய்தோம் இங்க உட்கார்ந்துட்டு ஐ.பி.எல் பார்த்துட்டு இருந்தோம்” என்று சொல்லும்போது மனம் கொந்தளிக்கிறது.


ஜெயம் ரவியின் நேர்மையே அமலா பாலுக்கு இவர் மேல் காதல் வர காரணமாகிறது. ஆனால் இந்த காதலை அலசி ஆராய நேரமில்லாததால் அதை சும்மா லைட்டா காட்டியிருக்கிறார்கள். முன்பிருந்த அழகைவிட அமலா பால் இந்த படத்தில் மிக அழகாக தெரிகிறார்.


சூரி கதையுடன் செல்லக்கூடிய காமெடியை மட்டும் செய்திருப்பதால் பாராட்டு பெறுகிறார். இதற்கு முன் படத்தில் இவருக்கு பட்டம் இருந்ததா என்று தெரியவில்லை ஆனால் இந்த படத்தின் டைட்டில் கார்ட் போடும் போது சூரி என்ற பெயருக்கு மேல் ஒரு பட்டப்பெயரும் வந்தது. பரவாயில்ல புயல், சூறாவளி என பெயர் வைக்கும் இந்த காலத்துலயும் தனக்கு “கருப்பு தங்கம்” என்று பெயர் வைத்திருக்கிறார். இது கண்டிப்பா அவரு வச்சிருக்க மாட்டாரு அவரது ரசிகர்கள் தான் வச்சிருப்பாங்க. அட நம்புங்கப்பா....!. ராஹினி திவேதி இவர் கன்னடத்தில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் இவருக்கு இது இரண்டாவது படம் இதற்கு முன் அறியான் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.


கோபிநாத் படத்திற்கு பெரிய ப்ளஸ்ஸாக வருகிறார். விஜய் டிவியின் நீயா நானாவில் என்ன செய்தாரோ அதை அப்படியே பெரிய திரையிலும் செய்திருக்கிறார். என்ன மனதுக்குள் கொட்டிக்கிடந்த வசனங்களை அப்படியே சமுத்திரக்கனி அவரிடம் கொடுத்ததுபோல அப்படி ஒரு யதார்த்தம் நல்லாயிருக்கு அண்ணே. சரத்குமார் கொஞ்ச நேரமே திரையில் தோன்றினாலும் இவர் வரும் காட்சிகளில் அனல் பறக்கிறது அப்படி ஒரு சூடு, ஆட்டோ மீட்டர் கூட வேஸ்ட் தான்...


ஒளிப்பதிவு சுகுமார்-ஜீவன் கலக்கியிருக்கிறார்கள். இசை ஜி.வி.பிரகாஷ் குமார் இரண்டே பாடல்கள் தான் மனதில் நிற்கின்றன. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக வருகிறது. இதற்கு முன் எத்தனையோ அறிவுரைகளை சொன்ன சமுத்திரகனி, இதற்கு முன் அரசியல்வாதிகளுடன், ரவுடிகளுடனும் மோதிக் கொண்டிருந்த சமுத்திரகனி இம்முறை கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பழையதாக இருந்தாலும் சொல்லியிருக்கும் விதமும் அந்த தவறுக்கான தண்டனையையும் சொல்லியிருக்கிறார்.


 கண்டிப்பாக இந்நாட்டில் குற்றங்கள் குறைய வேண்டுமானால் தண்டனைகள் கடுமையாக வேண்டும் இதுதான் சரியான தீர்ப்பு. மற்றபடி படத்தின் வேகம் எப்போதும் சமுத்திரகனி பார்ப்பதுபோல படுவேகமாக நகர்கிறது. விமர்சனம் முடிக்க மனம் இல்லை இருந்தாலும் நானும் ஒரு சராசரி மனிதன் என்பதால் என் மனதிலும் நான் செய்த குற்றம் என்னை தொற்றிக் கொண்டது.

நிமிர்ந்து நில் - இனி நீ துணிந்து நில்...!

மார்ச் 21ல் வெளியாகும் அஜித் படம்!

அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் ‘வீரு டொக்கடே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.



‘வீரம்’ ரிலீசான அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகவிருந்தது.



ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 21ம் திகதி படம் ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.



‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.



அஜித் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதாலும், அஜித்துடன் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தமன்னா, சிறுத்தை சிவா, தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதாலும் இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை தமிழகத்திற்கு கொண்டு வந்த படக்குழுவினர்!

சாகச வித்தைகளுக்கு கமர்ஷியல் சினிமா, ரசனைப் பதிவுகளுக்கு கிளாசிக் சினிமா என படம் இயக்கி வரும் சந்தோஷ் சிவன் இப்பொழுது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இனம் படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.


ஈழத்தில் சிக்கி தன் குடும்பத்தை பறிகொடுத்த ஒரு சிறுமியை சந்தித்துள்ளார், அவரை பற்றி கேட்டதும் அதிர்ச்சியில் மூழ்கியதாகவும் அதன் பரதிபலிப்பாக தான் இனம் திரைப்படம் உருவாகியுள்ளாதாகவும் கூறியிருக்கிறார்.


அத்திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் சிவம் ஈனப்போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன நிலையை விவரிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


இக்கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி மற்றும் சரிதா நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.


இலங்கை சென்று எடுத்திருந்தால் தன் கதைக்கு சில முட்டுகட்டைகள் கண்டிப்பாக வந்திருக்கும் என்பதால் ஈழக்கதை கேற்க சூழல் இங்கேயே கிரியேட் பண்ணிவிட்டதாகவும் சில காட்சிகள் ராமேஸ்வரம் சென்று எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


 உலகம் அறிந்த இந்திய ஒளிப்பதிவாளர்
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களை வைத்து உருவாக்கிய இக்கதை கண்டிப்பாக வெற்றியை எட்டும் என மக்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சினிமா என்று வந்துவிட்டால் இது எல்லாம் சகஜம்...!

 ஐ ஆம் ரெட் மேன் படத்தில் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் மங்களகரமான மேனன் நடிகையை உயர்ந்த நடிகர் மிரட்டி நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.


மங்களகரமான மேனன் நடிகை உயர்ந்த நடிகருடன் சேர்ந்து நடித்த நாடு படம் ஹிட்டானது. இதையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்து ஐ ஆம் ரெட் மேன் படத்தில் நடித்து வருகிறது.


கவர்ச்சிக்கு நோ சொல்லியுள்ள நடிகை இந்த படத்தில் நடிகருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார்.


இந்த காட்சியில் நடிக்க அவர் மறுத்தாராம். நடிகர் தான் நம் நட்பு நீடிக்க வேண்டும் என்றால் இந்த காட்சியில் நீ நடித்தே ஆக வேண்டும் என்று நடிகையை மிரட்டி நடிக்க வைத்தாராம்.


காட்சி முடிந்த பிறகு நடிகை ஓரமாய் உட்கார்ந்து அழுதுவிட்டாராம். அதன் பிறகு நடிகர் தான் அவரை சமாதானப்படுத்தினாராம். சினிமா என்று வந்துவிட்டால் இது எல்லாம் சகஜம் என்று கூறினாராம் நடிகர்.

திருமண வாழ்வு சிறப்பாக அமைவதுக்கு செய்ய வேண்டியவை!

திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும். வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும்போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும்.


அதை சரி செய்து ஒத்துப் போவது நல்லது. வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய துணைவரிடம் நல்ல குணங்கள் இருக்கும்போது அதை கண்டுகொள்ளாமல், குறைபாடுகளை மட்டும் பெரிதாக்குவதை தவிர்க்க வேண்டும்.


இருவரது குறைபாடுகளையும் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு அதற்கு நல்லதோர் தீர்வு காணலாம். வரவுக்கேற்றபடி செலவு செய்ய இருவரும் முன்வர வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும். மாதந்தோறும் பட்ஜெட் தயார் செய்து தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.


பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாக பெரியவர்களும் முக்கிய காரணம். சுதந்திரமாக இருக்கும் இன்றைய தலைமுறையை… பெரியவர்கள் சிலர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்படுத்த நினைப்பதை தவிர்க்க வேண்டும்.


பெற்றோர் மற்றும் உறவினர்கள் குதர்க்கமான பேச்சு மூலம் தம்பதிகளுக்குள் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. சந்தேகம், முன் கோபம், மது அருந்துதல் போன்றவை பிரச்சினை என்ற தீயில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிவிடும். இதற்கு கவுன்சிலிங் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.


எந்த செயலாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி, அதை செயல்படுத்தினால் பிரச்சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினையை சமாளிக்க முடியும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேஷ அக்கறை, தம்பதிகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை எற்படுத்தும்.


முக்கியமாக… குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் அதை இருவருமாக பேசி முடிக்க வேண்டும். அதைவிடுத்து மூன்றாவது மனிதரை இந்த விஷயத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். அதேபோல், திருமணத்திற்கு பிறகு மனைவியை கவனிக்கும் பொறுப்பை பெற்றோரிடம் ஒப்படைப்பதும் தவறு.


இதனால் பிரச்சினைகள்தான் தோன்றும். தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதை கனிவான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். இந்த நேரங்களில் பொறுமையான மனநிலையும் முக்கியம்.

முந்திரி தக்காளி மசாலா!

பொதுவாக முந்திரியை கேசரி போன்ற இனிப்பு வகைகளில் தான் சேர்த்து சமைப்போம்.      

ஆனால் தற்போது அந்த முந்திரியையும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும், நன்மைகள் பலவற்றை உள்ளடக்கிய தக்காளியையும் வைத்து ஒரு மசாலா செய்தால் சூடபராக இருக்கும்.

இப்போது அந்த முந்திரி தக்காளி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/2 கிலோ

(நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1

டீஸ்பூன் ஏலக்காய் - 1 பட்டை - 1

இன்ச் கிராம்பு - 1

முந்திரி - 8

தேங்காய் - 1

கப் (துருவியது) கரம் மசாலா - 1

டீஸ்பூன் மிளகாய் தூள் - 1

டீஸ்பூன் சர்க்கரை - 1

சிட்டிகை கடுகு - 1

டீஸ்பூன் சீரகம் - 1

டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை:

முதலில் தக்காளியில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மீதமுள்ளதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் 4 முந்திரி மற்றும் தேங்காய் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கியதும், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா, சர்க்கரை, உப்பு போட்டு, தேவையான அளவில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

மசாலா கொதித்ததும், அதில் கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, மீதமுள்ள முந்திரியை போட்டு 1 நிமிடம் அடுப்பில் வைத்து, இறக்கி விட வேண்டும்.

இப்போது முந்திரி தக்காளி மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

எப்படி ஆண்களை தங்கள் பின்னால் இந்த பெண்கள் அலைய வைக்கிறார்கள் ?

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். 

இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலையா அப்ப புரிய முயற்சி பண்ணுங்க !

இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை. ஒருசமயம் ஆசையா பேசுறாங்க. அப்புறம் முகத்தை தூக்கி வச்சிக்கிறாங்க என்று புலம்பும் ஆண்கள் அதிகம். ஆழ்கடல் ரகசியத்தைக்கூட அறிந்துவிடலாம் ஆனால் மங்கையரின் மன ஆழத்தை அறிவது இயலாத காரியம் என்று தத்துவம் பேசும் ஆண்கள் ஒரு ரகம்.

காதலியின் மனதை அறிந்து கொண்டு அவர்களை கவர நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.

காதலில் வெற்றிபெறவும், மகிழ்ச்சிக்கான திறவு கோலாகவும் திகழ்வது நம்பிக்கை. உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்புறம் உங்க காதலியைப் பத்தி முழுவதுமா தெரிந்து கொள்வது அவசியம். அதனால் வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க…

01-பெண்கள் பலவிதம்

ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் “நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள். அதனால எந்த நேரத்திலும் இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்து உங்க காதலியை முழுமையாக தெரிஞ்சு வையுங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. அவங்க சொல்றதை பொறுமையா காதில வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்சு கொண்டு அதை செயல்படுத்துறதுக்கு ஆரம்பியுங்க.

02-ரொமான்ஸ் அவசியம்

அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது “டேட்டிங்” போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.ஏன்னா பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க உங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க.

இன்னொரு விஷயம்… தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல என்றால், அவங்க ரொம்பவே “டல்” ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க.

03-தலைமைப் பண்பு

என்ன செஞ்சாலும் சில பெண்களை கவரவே முடியாதுங்க. அப்படிப்பட்ட விதிவிலக்கான பெண்களை அறிவுப்பூர்வமாக பேசி அசத்தலாம். தன்னம்பிக்கை நிறைந்த, தலைமைப் பண்பு கொண்ட ஆண்களை சிலர் விரும்புவாங்க. அப்படிப்பட்ட பெண்களை அவங்களுக்கு ஏற்றார்போல பேசி கவரலாம். ஒருசிலர் சமூக ஆர்வலரா இருப்பாங்க, சமுதாய சேவை செய்வது அவங்களுக்குப் பிடிக்கும். அந்த மாதிரி பெண்களை அவங்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொண்டு அசத்தலாம்.

உங்க காதலி எப்படிப்பட்டவங்க அதை தெரிந்து கொண்டு அசத்துங்கள்

முடி உதிர்வதைத் தடுக்க...?

சில பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்தல் இருக்கும். அவர்கள் நெல்லிக்கனிகளை அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து தலையில் ஊறும்படி தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்தல் நின்றுவிடும்.


தலையில் முடி உதிர்ந்து சொட்டையாதலுக்கு வெள்ளைப்பூண்டுப் பற்களைத் தேனில் ஊரவைத்து சொட்டை விழுந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தேய்த்து வரவேண்டும். அவ்வாறு தொடர்ந்து இருபது நாட்கள் செய்ய முடி வளரும்.


தலை முடி வளர, எலுமிச்சம் பழவிதைகளுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நீர் விட்டு அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால் சிறிது நாளில் முடி வளரும். உடல் சூட்டினால் சிலருக்கு முடி கொட்டி விடுவதுண்டு.


அதற்கு வெந்தயத்தை நீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தப்பின் குளிக்கவேண்டும். உஷ்ணம் கட்டுப்படுவதோடு, முடி கொட்டுவதும் நிற்கும். 

ஒவ்வொரு ஆணின் பலமும் பலவீனமும் அவன் மனைவிதானா ?

ஒருவனுடைய வாழ்க்கையை இரண்டா பிரிக்கலாம். கிறிஸ்து பிறப்பதுக்கு முன் கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்றமாதிரி திருமணத்துக்கு முன் திருமணத்துக்கு பின். எதனால அப்படிஎன்றால் ஒருவன் என்னதான் சல்லித்தனம் பண்ணினாலும் கல்யாணம் ஆயிருச்சி என்றால் அவ்வளவுதான் பொட்டிப்பாம்பா அடங்கிருவான்.

நேத்துவரைக்கும் காடுமேடெல்லாம் சுத்தித்திரிஞ்சவனை இன்னைக்கி காணோமென்று கேட்டால் அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சிப்பா என்பார்கள். அந்தளவுக்கு ஒருவனுடைய வாழ்க்கையில் ஒரு பெண் வந்துட்டான்னா கேட்கவே வேண்டாம் அவனோட வாழ்க்கை டோட்டல் சேஞ்ச்தான். அந்தளவுக்கு மனைவியோட முக்கியத்துவம்.

மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்ன்னு சும்மாவா சொன்னாங்க.. ஆமா கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்துப்பயிர்தான். ஒருவனுக்கு அவனோட டேஸ்ட்டுக்கு தகுந்தமாதிரி அவனது பெற்றோர், தன்பிள்ளைக்கு ஏத்த மனைவியை எவ்வளோ கஷ்டப்பட்டு தேடி அவனுக்கு கல்யாணம் செய்துவைக்கிறாங்க. காதல் கல்யாணங்களில் இந்த நிலை மாறலாம். அவனே/அவளே அவன்/அவள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறாங்க. இந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவன், பெற்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருககிறோம்.

ஒரு பெண்ணுக்கு என்னதான் பெற்றோர்கள் வளர்ப்பில் இருந்தாலும் கல்யாணம் பண்ணிகொடுத்ததும்தான் முழு அந்தஸ்து பெறுகிறாள். அதேமாதிரி ஆணுக்கும் நேத்துவரைக்கும் அலட்சியமா நினைத்தவர்கள் இன்னக்கி ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. ஏ அவன் குடும்பஸ்தன் அவனுக்கு எல்லா முன்னுரிமையும் கொடுங்கப்பா என்று கொண்டாடுவாங்க. மனைவிதான் ஒருவனுக்கு வாழ்க்கையோட அர்த்தத்தை புரியவைக்கிறாள். அதேமாதிரி ஒருவனுக்கு பாதிபலம் அவனோட மனைவிதான்.

ஆணுக்கு இரவில் மட்டும் சுகத்தை கொடுப்பது மட்டுமல்ல பெண்ணோட வாழ்க்கை. அவனுக்கு துணையாக இருந்து அவனோட கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து அவனுக்கு நேரான வழி இதுதான் என்று சுட்டிக்காட்டிபவ‌ளும் அவனோட மனைவிதான்.

கணவன் எதாவது கோல்மால் பண்ணினானென்றால் அவன மண்டையில தட்டி திருத்துபவளும் அவன் மனைவிதான். கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த வீட்டையும் தன் புத்தியால் திறமையால் முன்னுக்கு கொண்டுவருவது அவன் மனைவிதான்.

கணவன் இதயத்தில் மட்டும் இடம்பிடிப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள மாமனார் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் இவர்களின் மனதிலும் இடம் பிடிக்கும் பெண் ஒரு புத்திசாலி என்றால் அது மிகையாகாது. தன் புகுந்த வீட்டில் எத்தனை குறையிருந்தாலும் அதனை மறைத்து தன் குடும்பத்துக்காக வாழும் ஒரே ஜீவன் மனைவிதான். இதே நகரத்தில் வாழும் பெண்கள் தன் கணவனுக்காக கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று குடும்ப கஷ்டத்தை தீர்க்க பாடுபடுகின்றனர். கணவனை ஊதாரித்தனமாக செலவு செய்யவிடாமல் கட்டுக்கோப்பாக வைத்து சிக்கனமாக்கி குடும்பத்தை முன்னேற்றுகிறாள்.

ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னால் ஒவ்வொரு பெண்தான் அடித்து சொல்லலாம். ஒவ்வொரு ஆணின் பலமும் பலவீனமும் அவன் மனைவிதான். புகுந்தவீட்டில் தான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் இல்லாததால் கல்யாணம் முடித்த இரண்டே நாளில் தனிகுடித்தனம் அமைக்க காரணமும் இதே மனைவிதான். மனைவி சொல்வதை கேட்டு குடும்பத்தை பிரிக்கும் ஆண்கள் தங்கள் பெற்றோர்கள் எவ்வளவு மனம் குமுறுவர், வேதனைக்குள்ளாவர் என்பதை அறிய வாய்ப்பில்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று வாழும் ஆண்களும், கணவனுக்கு தலையணை மந்திரம் போட்டு தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் பெண்களும் நல்லாவே வாழ்ந்ததா சரித்திரம் இல்லையெனலாம்.

அதேபோல குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டை மூட்டிவிட்டு குடும்பத்தை இரண்டாக பிரித்து தான்மட்டும் நல்லா வாழணும் என்று நினைக்கும் சுயநலமிக்க மனைவிகள் நிறைய பேர் உண்டு. மனைவி சொல்வதை கேட்கலாம் தப்பில்லை. ஆனால் அது நன்மைபயக்கும் விஷயமாக இருக்கவேண்டும். சில குடும்பங்களில் கணவனை தன் கட்டுக்கோப்பில் வைத்து மாமியார், மாமனாரை கொடுமைப்படுத்தும் மருமகள்கள் பலேபலே.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தன் பெற்றோர் பேச்சை கேட்கும் பெண்கள் ஏன் தன்கணவன் மாமியார், மாமனாருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பது இன்றுவரை விடை தெரியாமலே உள்ளது. அதேமாதிரி தன் பெற்றோர் பேச்சை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தும் ஆண்கள் நிறைய பேர் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் துணையாக வரும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது ஏனென்றே தெரியல.

இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்துவரை சென்று பிரிந்துவாழும் தம்பதிகள் நிலைமை வருத்தத்துக்கு உரியது. ஈகோவை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி என்ற தூண்கள்தான் தாங்கி நிற்கிறது. அதில் ஒன்று சரிந்தாலும் அவ்வளோதான். நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. இதில் பெரிய கஷ்டம் குழந்தைகள்பாடு திண்டாட்டம். குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

எனவே இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் ஒரு குடும்பம் ஒரு இனிய இல்லறமாகும். 

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியயை உண்ணச் சொல்லுவதன் ரகசியம் ....

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?


அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.


முன்பெல்லாம் சமையலுக்குப் பாவிக்கப்படும் மூலப்போருட்கள் அனைத்தும் கலப்படம் அன்றியும் சுத்தமாகவும் கிடைப்பதில்லை.அத்தோடு முன்பு நீத்துப்பெட்டியிலும் புட்டு அவிப்பார்கள் அந்தப்புட்டில் அடிப்புட்டையும், சோற்றில் மேல் சோற்றையும் கணவனுக்கு கொடுப்பார்கள்.


ஏனென்றால் அடிப்புட்டு நன்றாக அவிந்திருக்கும், சோற்றின் மேற்பகுதியில் அரிசியில் கலப்படம் செய்யப்பட்ட அடர்த்தி கூடியவை சோற்றின் கீழ்ப்பகுதியில் அடைந்து போயிருக்கும் என்பதாலும்.


ஆனால் இப்போது அப்படியில்லை ஏனென்றால் கலப்படமற்ற உணவுப்பொருட்கள் வாங்கலாம், உணவைத் தயாரிப்பதற்கு ஏற்ப பலவகைப் பாத்திரங்களும் இருப்பதால் தரமான உணவை கணவன் மனைவி இருவருமே மகிழ்ச்சியாக உண்ணலாம்.இப்போதெல்லாம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வோருக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வோரிற்கும் இது சாத்தியமாகுமா..?


குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும்போதும், கணவனின் உணவு இரசனையைப் புரிந்த மனைவியாலும் மனைவியின் உணவு இரசனையைப் புரிந்த கணவனாலும் சாத்தியமாக்கலாம்.


இப்பயெல்லாம்  கணவன் தானே  சாப்பிட்டு பார்கிறங்க..  ஹி  ஹி ஹி .....

உலகில் மனைவியை ஏமாற்றுவதில் எந்த நாட்டுகாரர் கில்லாடிகள் ?

பிரான்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் குறித்த கருத்து கணிப்பை பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடத்தியது.


4500 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து மனைவிக்கு துரோகம் செய்வதில் முதலிடத்தில் இருப்பவர்கள் பிரான்ஸ், இத்தாலி ஆண்கள்தான்.


இரு நாடுகளிலும் 55 சதவீதம் பேர், மனைவிக்கு துரோகம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே, நடிகையும் காதலியுமான ஜுலி கயாத்துடன் இருப்பது போன்ற படங்கள் வெளியாயின.


இந்த படங்களால் ஹோலண்டேவுக்கும் அவரது மனைவி வலாரிக்கும் இடையிலான உறவு முறிந்தது. இந்த சூழ்நிலையில் வெளியாகி உள்ள கருத்து கணிப்பு முடிவு அதிபரும் விதிவிலக்கு அல்ல என்பதையே காட்டுகிறது.


இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமரும் அரசியல் தலைவருமான பெர்லுஸ்கோனியும் பல பெண்களுடன் தொடர்பு வைத்து புகாரில் சிக்கியவர்தான். சிறுமிகளுடன் உறவு வைத்ததாக கடந்த ஆண்டு அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பெண்களை காதலிப்பது, உண்மையாக நடந்து கொள்வதில் இங்கிலாந்து ஆண்கள் முதலிடத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


எனினும் 42 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெர்மனியில் 46 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கை ஆண்களின் ஆயுளை அதிகரிக்குமாம் !

தமது பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் செய்த பரிசோதனைகளின் முடிவில், பாலியல் இச்சை தூண்டப்பட்டு, ஆனால் பாலியல் கலவியில் ஈடுபடமுடியாமல்போன ஆண் ஈக்களின் ஆயுள்காலம் 40 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது.

மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆப் சயன்ஸ் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக வீடுகளில் காணப்படும் வீட்டு ஈக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களை செயற்கையாக ஆண் ஈக்கள் மத்தியில் பரவச்செய்தனர். அந்த ஹார்மோன்களால் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் கலவிக்காக முயன்றபோது அவற்றின் அருகே பெண் ஈக்கள் இல்லாமையால் அவற்றால் கலவியில் ஈடுபட முடியவில்லை.

இதனால் அந்த ஆண் ஈக்களிடம் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகரித்ததையும் இந்த ஆய்வாளர்கள் அதற்கான பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்தனர்.

இப்படி தொடர்ந்து மன அழுத்தம் அதிகரித்த ஆண் ஈக்கள், கலவியில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட மற்ற ஆண் ஈக்களைவிட விரைவாக இறந்து போயின.

இதில் கலவியில் ஈடுபட்ட சாதாரண ஆண் ஈக்களுடன் ஒப்பிடும்போது, கலவியில் ஈடுபட அனுமதிக்கப்படாத ஆண் ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 40 சதவீதம் குறைவதை கவனித்த இந்த ஆய்வாளர்கள், ஆண் ஈக்களின் ஆரோக்கியமான நீடித்த ஆயுளுக்கும் அவற்றின் பாலியல் திருப்திக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
 "செக்ஸில் ஈடுபடாத ஆண் ஈக்களின் ஆயுள் குறைவதாக கூறும் ஆய்வின் முடிவு ஆண்களுக்கும் பொருந்தும்"

"செக்ஸில் ஈடுபடாத ஆண் ஈக்களின் ஆயுள் குறைவதாக கூறும் ஆய்வின் முடிவு ஆண்களுக்கும் பொருந்தும்"

ஈக்கள் மட்டுமல்ல, புழுக்கள் மத்தியில் செய்யப்பட்ட வேறொரு ஆய்விலும், அவற்றின் ஆயுள்காலத்திற்கும் அவற்றின் பாலியல் செயற்பாட்டு திருப்திக்கும் தொடர்பு இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறாரகள்.

ஈக்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இது பொருந்தும்!
இந்த இரு ஆய்வு முடிவுகளும் ஒரு சேர பார்க்கப்படவேண்டும் என்று கூறும் விஞ்ஞானிகள், விலங்குகளின் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, ஆயுளிலும் அவற்றின் பாலியல் செயற்பாடும், அதில் அவற்றுக்கு கிடைக்கும் நிறைவும் நேரடியான பங்கு வகிக்கிறது என்பதை இந்த ஆய்வுகள் மீண்டும் உறுதி செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதேசமயம், ஆண் ஈக்களின் ஆயுளை பாதிக்கும் இந்த பாலியல் கலவியால் கிடைக்கும் திருப்தி என்பது மனிதர்களுக்கும் அப்படியே பொருந்தும் என்கிறார் சென்னையிலுள்ள பிரபல பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.

ஆரோக்கியமான பாலியல் உறவும், அதன் மூலம் ஆண்களுக்கு கிடைக்கும் உடல்ரீதியான மற்றும் உளரீதியிலான திருப்தியும் சேர்ந்து ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், அது அவர்களின் ஆயுளை நீட்டிப்பதாகவும், இதற்கான மருத்துவ காரணிகள் அறிவியல் ரீதியிலான ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.