Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

இயக்குநர் காரசாரம் - நயனுக்காக நான் ஏன்? என் கதையை மாற்றனும்!

நடிகை வித்யா பாலன் இந்தியில் நடித்த படம் கஹானி. இதில் காணாமல் போன கணவனைத் தேடி அலையும் கர்ப்பிணி மனைவியாக நடித்திருந்தார். படம் ஹிட்டானது. வித்யா பாலனுக்கு விருதுகள் குவிந்தது. தற்போது இந்தப் படத்தை தெலுங்கு மற்றும், தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். தெலுங்கில் அனாமிகா என்றும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்றும் டைட்டில் வைத்திருக்கிறார்கள். தெலுங்கின் முன்னணி இயக்குனர் சேகர் காமுலா படத்தை இயக்குகிறார்.


இதுபற்றி அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:


நம் சமூகத்தில் ஒரு பெண்ணால் தனியாக எந்த அளவுக்கு போராட முடியும் என்பதை காட்ட நானே ஒரு கதை தயார் செய்து அதனை படமாக்கும் திட்டத்தில் இருந்தபோதுதான் கஹானியை ரீமேக் செய்து தரும்படி தயாரிப்பாளர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கு ரீமேக் படங்கள் செய்வதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் நான் மனதில் நினைத்திருந்த ஒரு விஷயம் தேடி வந்தபோது ஒத்துக் கொண்டேன்.


கணவனைத் தேடி அலையும் ஒரு தனிப்பெண் என்ற கருவை மட்டும் எடுத்துக் கொண்டேன்.


அதுகூட புதிதில்லை, ரோஜா படத்தில் மணிரத்னம் சார் கையாண்ட விஷயம்தான். என்றாலும் அதை புதிய களத்தில் சொல்ல நினைத்தேன். பழைய ஐதராபாத்தில் தசரா பண்டிகை ரொம்ப பேமஸ். லட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்கள். அந்த பேக்டிராப்பில் கணவனைத் தேடும் மனைவி கதையை படமாக்க முடிவு செய்து அதற்கேற்ப கதையில் மாறுதல் செய்தேன்.


முதலில் கர்ப்பிணி என்கிற கான்செப்டை நீக்கினேன். அதன் மூலம் கிடைக்கும் அனுதாபத்தை விட அந்த பெண்ணின் கோபம்தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். நயன்தாரா கர்ப்பினியாக நடிக்க மறுத்ததால்தான் கதையை மாற்றினேன் என்று வந்த செய்திகள் தவறானது. அவர் கதை விஷயத்தில் தலையிடவே இல்லை. வித்யாபாலனை விட ஒரு மடங்கு கூடுதலாகவே நடித்துக் கொடுத்தார். கிளாமர் நடிகையாகவும், கமர்ஷியல் ஹீரோயினாகவும் நயன்தாராவை பார்த்த நமக்கு இந்தப் படத்தில் அவரின் இன்னொரு பரிமாணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

0 comments:

Post a Comment