Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 10 February 2014

நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?


நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது அதிகமான சூடு வைத்து பயன்படுத்த தேவையில்லை. குறைந்த மிதமான சூடு போதுமானது. சமைக்கும்  பொருட்கள் ஏதுமின்றி தீயின் மேல் நான்ஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால் நான்ஸ்டிக் பொருட்களில் பூசப்பட்ட  கோட்டிங் பாழாகிவிடும்.


நான்ஸடிக் பொருட்களை துடைக்கும் போது மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைத்தால் போதுமானது. உபயோகிக்கும்  முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும் போது சோப்புத்தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.  கிளீனிங் பவுடர் பயன்படுத்தக்கூடாது.


கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை நான்ஸ்டிக் பாத்திரத்தில் பயன்படுத்தக்கூடாது. மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக்  கரண்டியோ பயன்படுத்துவது நல்லது. நான்ஸ்டிக் பாத்திரங்களை மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல் அதற்கென்று உள்ள ஆணியிலோ  அல்லது தகுந்த இடங்களிலோ மாட்டி பயன்படுத்த வேண்டும்.


பலமுறை உபயோகித்த பின்னர் சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம் பாத்திரத்தின் பாதி  அளவிற்கு நீர் ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் ப்ளீச்சிங்பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும் பிறகு மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள்  சூடேற்றவும். கொதிவரும் நிலையில் மரக்கரண்டி கொண்டு கறை போக அழுத்தமில்லாமல் தேய்த்தால் சுத்தமாகிவிடும். பின் சோப்பு நீரில் கழுவி  சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.  

குட்டீஸ்களுக்கான உணவு முறைகள்!


இபோதைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும்.

பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.
                                   

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் “கொஞ்சமாக கொடுங்கள்” என்பார்கள், சிலர் “எல்லாமே கொடுக்கலாம்” என்பார்கள். ‘கொஞ்சமாக’ என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது ந்மது விருப்பம்.


இது குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும் என்று உலக அளவில் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பு (UNICEF) தெளிவாக வெளியிட்டிருக்கும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஏழைத் தாய்மாரும் செயல்படுத்தக் கூடிய வழி முறைகள்தான் இது என்பது கூடுதல் சிறப்பு. என்றாலும் குடும்ப மருத்துவருடன் கலந்தாலோசித்து இதை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது


முதல் ஆறு மாதங்கள் வரை:


குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம், அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது 8 முறை கொடுக்க வேண்டும். மற்ற உணவுகள் அல்லது திரவ உணவுகள் – ஏன் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. கோடைக்காலம் என்றாலும் தண்ணீர் அவசியமில்லை. குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது.


ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை:


குழந்தை எப்பொழுதெல்லாம் விரும்புகிறதோ அப்பொழுது தாய்ப்பால் கொடுத்தால் போதும். மற்ற நேரங்களில் ஒரு கிண்ணம் உணவு, ஒரு முறை கொடுக்கலாம். நெய், எண்ணெய் கலந்த பருப்பு சாதம், கேழ்வரகு கஞ்சி, அரிசி கஞ்சி, பொட்டுக் கடலை கஞ்சி, உப்புமா, கிச்சடி, பொங்கல், மசித்த இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, வேக வைத்த மசித்த காய்கறிகள் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட்) ஆகியவற்றை கொடுக்கவும். வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, சப்போட்டா ஆகிய பழங்களையும் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஒரு நாளைக்கு மூன்று முறையும், தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையும் உணவு கொடுக்க வேண்டும்.இந்த உணவையும் குழந்தையை மடியில் வைத்து தாய் தன் கையால் ஊட்ட வேண்டும். ஸ்பூன் அவசியமில்லை அல்லது தேவையில்லை. ஒவ்வொரு முறை ஊட்டும்போது தாய் தன் கை மற்றும் குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.


ஒரு வயது முதல் இரண்டு வயது வரை:


குழந்தை விரும்பும்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் உண்ணும் உணவையே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஒரு வேளைக்கு ஒன்றரை கிண்ணம் உணவு என்ற அளவில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை கொடுக்க வேண்டும். குழந்தை சாப்பிடும் வரை பக்கத்தில் அமர்ந்திருப்பது நல்லது. அப்போதுதான் தேவைப்படும்போது உதவ முடியும். ஏனெனில் இந்த வயதில், தன் உணவை தானே எடுத்து சாப்பிட குழந்தையை பழக்கப்படுத்த வேண்டும். முடிந்தவரை ஊட்டக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ பழக்கப்படுத்துங்கள்.


இரண்டு வயதுக்கு மேல்:


குழந்தை விரும்பினால் தாய்ப்பால் கொடுக்கலாம். என்றாலும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாட்டுக்கு முன் ஊட்டச்சத்து நிரம்பிய உணவான வாழைப்பழம், மாம்பழம், முட்டை மற்றும் தின்பண்டங்களை கொடுக்கலாம். இத்துடன் பணி முடிந்தது என்று நினைக்காமல் குழந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை உடனிருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கை கழுவ பழக்க வேண்டும்.


மூடநம்பிக்கை:


வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும்போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம். குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் சீம்பால், குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும், அதிக அளவில் நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொடுக்கக் கூடியது. இது குழந்தைக்கு செரிக்காது, வயிற்றுக்கு போதாது என்று சிலர் நினைக்கிறார்கள்.



அதனாலேயே சீம்பால் தருவதை தவிர்க்கிறார்கள். இது தவறு. அவசியம் சீம்பால் தர வேண்டும். தாய்ப்பால் தரும் தாய்க்கு வரும் பொதுவான நோய்களால் தாய்ப்பாலின் தரம் மாறாது. அவர்கள் உட்கொள்ளும் பொது வான மருந்துகளாலும் குழந்தைக்கு பாதிப்பில்லை. காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய் வந்த தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு பாலூட்டலாம். மிக அரிதான சில நோய்களாலும், மருந்துகளாலும் மட்டுமே குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகுதான் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதே போல் தாயின் உணவுப் பழக்கங்களால் தாய்ப்பாலின் தரம் மாறுவதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய, எளிய சத்தான எல்லா உணவு வகைகளையும் தாய் உட்கொள்ளலாம்.


பழங்கள் மற்றும் பழச்சாறு உட்கொண்டால் தாய்க்கு சளி பிடிக்கும்; பலாப்பழம், மாம்பழம் மற்றும் முட்டையை பாலூட்டும் தாய் உட்கொண்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்… என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எளிதில் செரிக்கக் கூடிய எல்லா உணவுகளையும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்தபடி தாய் சாப்பிடலாம்.


வேலைக்கு செல்லும் தாய், சிலமணி நேரத்துக்கு மேல் பாலூட்டவில்லையெனில் அது கெட்டு புளித்திருக்கும், குழந்தைக்கு செரிக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. இப்படி எண்ணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். குழந்தை மார்பகத்தை சப்பிக் குடிக்கும்போது பால் சுரக்கிறது. சாதாரணமாக மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. பால் நாளங்களில் 10 – 20 மி.லி. பால் இருக்கும். அவ்வளவுதான். எனவே, தாய்ப்பால் புளித்துப் போக வாய்ப்பில்லை. இரு மாதங்கள் வரை பால் கொடுக்காமல் இருந்து, பிறகு கூட தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.


பொதுவாக் குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள்:


முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று பார்த்தோம். அதன் பிறகு வீட்டில் தயாராகும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்த உணவை பழக்கலாம்.காலை 8 – 9 மணிக்குள் காலை உணவை கொடுக்க வேண்டும். சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு பால் தரலாம்.


மொத்தத்தில் பசியுடன் இருந்தால்தான் உணவு உணபதில் குழந்தை ஆர்வம் காட்டும். மசித்த இட்லி, இடியாப்பம், மூடி வைக்கப்பட்ட ஆப்பம், மிருதுவான ஊத்தப்பம் போன்றவற்றை கைகளால் மசித்து சிறு சிறு கவளமாக தர வேண்டும். பருப்பு வேகவைத்த நீர், ரசம், புளிக்காத தயிர், பால் பயன்படுத்தி மசிக்கலாம். சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இனிப்பு சுவைதான் குழந்தைக்கு முதலில் புரியும்.


அதை ருசி பார்த்துவிட்டால் பிறகு காரம், உப்பு வகைகளை விரும்பாது. பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். காலை 11 – 12 மணியளவில் புதிதாக வீட்டில் ஆப்பிள், திராட்சை, மாதுளை ஆகியவற்றிலிருந்து தயாரான பழச்சாறை கொடுக்கலாம். திட உணவு பழகும்போது படிப்படியாக நிதானமாக செயல்பட வேண்டும். முதலில் 2 – 3 வாரங்களுக்கு காலை உணவு, பிறகு 2 – 3 வாரங்களுக்கு மதிய உணவு, பின்னர் 2 – 3 வாரங்களுக்கு மாலை உணவு…


கடைசியாக இரவு உணவு. ஒவ்வொரு முறையும் புதிதாக சமைத்த உணவையே குழந்தைக்கு தர வேண்டும். ஆறிய உணவுகளை சுட வைத்து கொடுக்கக் கூடாது. ஊட்டும்போதும் உணவை வாங்கிக் கொள்ள, வாயைக் கூட்டி நாக்கை மடித்து விழுங்க… என்று படிப்படியாக பழக்கப்படுத்த வேண்டும்.


மதிய உணவில் சாதத்தை கையால் மசித்து சிறிது உப்பு, ஆறிய வெந்நீர் சேர்த்து ஊட்டலாம். பிறகு துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, சாம்பார், ரசம், கீரைச் சாறு என மாற்றி மாற்றி ஊட்டலாம். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பரங்கி, பூசணி போன்றவற்றை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து கொடுக்கலாம்.


புளிக்காத தயிரும், மோரும் குழந்தைக்கு நல்ல பயனளிக்கும். கடையில் விற்கும் இணை உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள். அதே போல் பிஸ்கெட், ரொட்டி, கேக், சாக்லெட், நூடுல்ஸ், வறுவல்கள் (சிப்ஸ்) மாதிரியான ஜங்க் ஃபுட்டுக்கும் பழக்கப் படுத்தாதீர்கள். முடிந்தவரை இவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது.
 காரணம், அதிலுள்ள காரம் மற்றும் வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். உடல் எடை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும். முக்கியமாக துரித உணவுகள் (ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) பக்கம் செல்லவே செல்லாதீர்கள்.

மூலிகை மருத்துவத்தில் நீரிழிவுக்கு தீர்வு!


கள்ளிமுடையான்

கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு  வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

இன்சுலின் செடி

இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த  இலையைத்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க  விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை  சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ்  எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என  அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி  கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

சர்க்கரைக்கொல்லி

கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை.  இலையை உலர  வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.

சிறியாநங்கை

கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.

ஸ்டீவியா என்னும் சீனித்துளசி

தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து  பொடியாக்கி,  டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ  சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது.   அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும்  இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது.   இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல்,  வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என  நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.

காய்கறிகளின் பயன்களும், பக்க விளைவுகளும்!


 காய்கறிகளின் பயன்களும், பக்க விளைவுகளும்

உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இருந்தபோதிலும் ஒரு சில காய்கறிகள் சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் குணநலன்களை கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்களை கீழே காண்போம்.

கத்தரிக்காய் என்ன இருக்கு:


விட்டமின் `சி', மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: 

ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்கவைக்கும்.

யாருக்கு வேண்டாம்: 

சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்:

 நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.


முருங்கைக்காய் என்ன இருக்கு:


 கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் `ஏ', `சி'.

யாருக்கு நல்லது: 

குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்: 

முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப்பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: 

நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.


அவரைக்காய் என்ன இருக்கு: 


உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

யாருக்கு நல்லது: 

நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: 

யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

பலன்கள்: 

உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.


பீர்க்கங்காய் என்ன இருக்கு :


 நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

யாருக்கு வேண்டாம்: 

யாரும் இரவில் சாப்பிடக்கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக் கூடாது. தலையில் நீர்க் கோத்துக்கொள்ளும்.

பலன்கள்:

 உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.


புடலங்காய் என்ன இருக்கு: 


உயர்நிலை புரதம், விட்டமின் `ஏ', சுண் ணாம்புச்சத்து, கந்தகச்சத்து.

யாருக்கு நல்லது : 

மூலநோய் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: 

ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.


பாகற்காய் என்ன இருக்கு:


 பாலிபெப்டு டைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது

யாருக்கு நல்லது: 

சர்க்கரை நோயாளிகளுக்கு

யாருக்கு வேண்டாம்: 

வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படும்.

பலன்கள்:

 தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

சுரைக்காய் என்ன இருக்கு:

 நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: 

எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்

யாருக்கு வேண்டாம்:

 சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு

பலன்கள்:

 இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீத ளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.

பூசணிக்காய் என்ன இருக்கு: 

புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்: 

ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக்கூடாது

யாருக்கு நல்லது:

 குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது

பலன்கள்:

 நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூச ணியே நல்லது.

கொத்தவரைக்காய் என்ன இருக்கு: 

நார்ச்சத்து

யாருக்கு நல்லது:

 நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: 

சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.

பலன்கள்: 

ருசி மட்டுமே .


வாழைக்காய்.


என்ன இருக்கு: 

கொழுப்புச் சத்து, விட்டமின் `இ'.

யாருக்கு நல்லது:

 வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்

யாருக்கு வேண்டாம்:

 வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

பலன்கள்: 

உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.

காரட் என்ன இருக்கு : 

விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.

யாருக்கு நல்லது : 

அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: 

குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: 

கண் பார்வைக்கு உகந்தது. உடல் பரும னாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.

பீன்ஸ் என்ன இருக்கு: 

புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.

யாருக்கு நல்லது: 

ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

யாருக்கு வேண்டாம்:

 குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.

பலன்கள் : 

பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பள பளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.

பீட்ரூட் என்ன இருக்கு: 

க்ளூ கோஸ்

யாருக்கு நல்லது: 

ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.

யாருக்கு வேண்டாம்: 

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது.

பலன்கள்: 

ரத்தத்தை வளப் படுத்தும். சுறுசுறுப்பை அளிக் கும். மேனி நிறம் பெறும்.


முள்ளங்கி (வெள்ளை) என்ன இருக்கு :


நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து. யாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்: 

ஆஸ்துமா நோயாளிகளுக்கு.

பலன்கள்: 

அதிகம் குளிர்ச் சியை தரும். வாயுவை வெளியேற்றும்.

காலிஃபிளவர் என்ன இருக்கு: 

பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ் பரஸ், மெக்னீசியம், விட்ட மின் ஏ, இ.

யாருக்கு நல்லது: 

புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.

பலன்கள்: 

மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.

முட்டைக்கோஸ் என்ன இருக்கு : 

சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.

யாருக்கு நல்லது : 

சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.

யாருக்கு வேண்டாம்:

பனி காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: 

ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.

மணி பிளாண்ட் பற்றிய சில தகவல்கள்!


அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது. மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள்.


மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட். இது பண வளத்தை பெருகச் செய்து நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். இருப்பினும் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வகையில் இதனை வீட்டிற்கு உள்ளேயும் வளர்க்கலாம். வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் அதனைப் பற்றி கூறப்போகும் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.

1. வனப்பகுதியில் வளரும் மணி பிளாண்ட் 50-60 அடி உயர மரமாக வளரக் கூடும். இருப்பினும் ஒரு சின்ன தொட்டியில் வளர்க்கும் போது 10-15 அடி உயரத்தை தான் அதனால் எட்ட முடியும். மணி பிளாண்ட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் இது முக்கியமான ஒன்றாகும்.

2. மணி பிளாண்ட்டின் ஒவ்வொரு கிளைகளிலும், 12 இன்ச் நீளம் வரை வளரக் கூடிய 5 இலைகள் இருக்கும். அவைகள் பளிச்சென்ற பச்சை நிறத்தில் பளபளவென இருக்கும்.

3. மணி பிளாண்ட்டில் உள்ள க்ரீமி வெண்ணிற பூக்கள் வீரியமிக்க வாசனையை பரப்புவதால், அவை தேனீக்கள், வௌவால்கள் மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும்.

4. இன்னொரு ஆச்சரியமான தகவல் – மணி பிளாண்ட்டில் விதைகள் இருப்பது. நமக்கு தெரிந்த வரை மணி பிளாண்ட்டை சுற்றி எந்த விதைகளையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் செடியின் விதைப்பையில் விதைகள் இருக்கும். இந்த விதைகள் மெதுவாக பெரிதாகி, பின் வெடித்து கீழே விழும்.

5. மணி பிளாண்ட் கிளைகளில் காணப்படும் 5 இலைகள் ஐந்து சின்னங்களை குறிக்கும். ஃபெங் சூய் சாஸ்திரப்படி, ஒரு கிளையில் காணப்படும் ஐந்து இலைகள் ஐந்து பொருட்களை குறிக்கிறது: உலோகம், கட்டை, நீர், நெருப்பு மற்றும் பூமி. இந்த ஐந்து சின்னங்கள் செடி வைத்திருப்பவருக்கு நல்ல வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

6. மணி பிளாண்ட்டின் நற்பதமான இலையை உட்கொள்ள பயன்படுத்தலாம் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமே. அதன் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறியாக சமைக்கலாம் அல்லது வேறு பொருட்கள் சமைக்கும் போது இதனை சேர்த்து கொள்ளவும் செய்யலாம்.

7. மணி பிளாண்ட்டின் விதைகளையும் கூட உண்ணலாம். மணி பிளாண்ட்டின் விதைகள் கடலை பருப்பு சுவையை போல் இருக்குமாம். இந்த விதைகளை ரோஸ்ட் செய்து, நொறுக்குத் தீனியாகவும் சிலர் சாப்பிடுவார்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடத் தோன்றும் உணவுகள்!


கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அதில் அனைவருக்கும் தெரிந்தது, மாங்காய், சாம்பல் போன்றவை தான். ஆனால் அதுமட்டுமின்றி, இன்னும் நிறைய உணவுப் பொருட்களின் மீது கர்ப்பிணிகளுக்கு ஆசையானது அதிகரிக்கும். மேலும் அக்காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஆசைப்படும் உணவுப்பொருட்களை எல்லாம் சாப்பிட வாங்கிக் கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று சொல்வார்கள்.

ஏனெனில் அவ்வாறு கர்ப்பிணிகளுக்கு சாப்பிட வேண்டுமென்று தோன்றும் உணவுப்பொருட்கள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை. ஆனால் அந்த உணவுப்பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்து ஏற்படும்.

மாங்காய்

மாங்காயிலும் புளிப்புச் சுவை இருப்பதால் தான், கர்ப்பிணிகளுக்கு முதலில் மாங்காய் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.

சோடா

காலையில் சோர்வு, மயக்கம் போன்றவற்றை அதிகம் உணர்ந்தால், அப்போது கார்போனேட்டட் பானங்களை குடித்தால் சரியாகிவிடும். ஏனெனில் கார்போனேட்டட் பானங்கள் வயிற்று பிரட்டலை சரிசெய்து விடுவதால், இதனை அளவாக குடிப்பது நல்லது. அதிலும் ஸ்ப்ரைட் போன்றவற்றை குடிப்பது தான் சிறந்தது. குறிப்பாக காப்ஃபைன் கலந்த சோடாவான கோலா, தம்ஸ் அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

காபி

சில பெண்களுக்கு காபி குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன் தலைவலி, மன இறுக்கம் போன்றவற்றை குறைப்பதால், இதனை அளவாக குடித்து வருவது நல்லது.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம் கூட சாக்லெட் போன்று உடலை குளிர்ச்சியடைய செய்வதோடு, சுவையுடன் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு இதை சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சையின் மீது கர்ப்பிணிகளுக்கு நாட்டம் எழ, அதில் உள்ள புளிப்புச் சுவை தான். ஏற்கனவே சொன்னது போல், புளிப்புச்சுவையானது குமட்டலை தடுக்கக்கூடிய சக்தி கொண்டவை.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

சிலருக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மீது விருப்பம் அதிகம் இருக்கும். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் எழும். அதே சமயம் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதனை தவிர்த்து பாப்-கார்ன் சாப்பிடுவது நல்லது.

ஊறுகாய்

கர்ப்பமாக இருக்கும் போது ஊறுகாயை பார்த்தால் என்ன நினைத்தாலே, ஆசை அதிகரிக்கும். இவ்வாறு ஊறுகாயின் மீது நாட்டம் எழுவதற்கு காரணம், அதில் உள்ள புளிப்புச் சுவை தான். ஏனெனில் இந்த புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும். அதுமட்டுமின்றி, உடலில் சோடியம் குறைவாக இருந்தாலும், ஊறுகாயின் மீது நாட்டம் அதிரிக்கும்.

காரமான உணவுகள்

சிலருக்கு காரமான உணவுகளின் மீது விருப்பம் அதிகம் இருக்கும். ஏனெனில் காரமான உணவுகள் வியர்வையை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால் தான். ஆகவே அடுத்த முறை உணவு உட்கொள்ளும் போது, சற்று காரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள். அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஐஸ் கட்டிகள்

கர்ப்பிணிகளுக்கு ஐஸ் கட்டியை சாப்பிட வேண்டுமென்ற ஆசை அதிகம் எழும். ஏனெனில் ஐஸ் கட்டியானது உடலில் ஏற்படும் பிடிப்புக்களை சரிசெய்வதால், கர்ப்பிணிகளுக்கு இதை சாப்பிட ஆவல் எழுகிறது. குறிப்பாக அதிகப்படியான குளிர்ச்சியானது வளரும் சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சாக்லெட்

சில கர்ப்பிணிகளுக்கு சாக்லெட் சாப்பிட பிடிக்கும். பொதுவாக கர்ப்பத்தின் போது சாக்லெட் சாப்பிடுவது நல்லது. இத்தகைய உணர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், சாக்லெட் மனதை அமைதிப்படுத்தி, சந்தோஷமாக இருக்க உதவி புரிவதால் தான். மேலும் அக்காலத்தில் இனிப்புக்களை அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை உள்ளது என்று அர்த்தம் என்று சொல்வார்கள்.

நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்!

நாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணூம் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? ஆம், என்கிறார்கள் பெரியவர்கள்.

கனவு எப்படி வருகிறது?


அறிவியல் முறைப்படி:



நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனக்குழப்பம் அதிகமாக இருந்தாலோ நமக்கு அடிக்கடி கனவு வரும்.


நினைவுகளே கனவு:



சிலருக்கு தாங்கள் பார்த்த திரைப் படங்கள் அப்படியே கனவாக வரும். நாம் என்ன நினைத்துக்கொண்டு தூங்குகிறோமோ அதுவே கனவாகவும் வரலாம். உதாரணத்திற்கு, ஒரு மாணவன் "நாளைக்கு தேர்வுக்குப் படிக்கவில்லையே, எப்படி எழுத்தப்போகிறோமோ" என்று எண்ணிக்கொண்டு தூங்கினால், அவனுக்கு தேர்வு எழுதுவது போன்றும், அதில் தேர்ச்சி பெறாதது போன்றும் கனவு வரலாம். இந்த மாதிரி கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இல்லை.


மத நம்பிக்கையின் படி:



கடவுள், அவரை வேண்டிக்கொள்பவர்களுக்கு கனவு மூலமாக சிலவற்றை தெளிவுபடுத்துவார். பிரியமானவர்களிடம் கனவு மூலம் பேசுவார். பிற்காலத்தில் நடக்கப் போகும் தீங்கை காட்டி எச்சரிப்பார்.
உதாரணமாக, பைபிளில் ஏரோது என்னும் மன்னன் குழந்தை ஏசுவை கொள்ள தேடிக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை சூசைக்கு கனவில் தேவ தூதன் தோன்றி எச்சரித்து எகிப்துக்குச் தப்பிச் செல்லும்படி கூறினான். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் அந்த மன்னன் இறந்த பிறகு மீண்டும் அதே தேவ தூதன் சூசையின் கனவில் வந்து, ஏரோது இறந்துவிட்டான் என்பதையும் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம் என்பதையும் கூறினான். அவர்களும் அவ்வாறே செய்தனர்.


சில கனவுகள் மற்றும் அதன் அர்த்தங்கள்:



பெரியவர்கள் சிலர் ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தம் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். அவற்றை தொகுக்க எடுக்கப்பட முயற்சிதான் இக்கட்டுரை.
சில வயதானவர்களிடம் கேட்டறிந்து பின்வரும் சில கனவுகளையும் அதன் அர்த்தங்களையும் எழுதுகிறேன்.


நல்ல கனவுகள்:


· பால் வாங்குவது போன்று கனவு கண்டால், நமக்கு வரவு, நல்ல சம்பவம், மன மகிழ்ச்சியான நிகழ்ச்சி அல்லது வாழ்கையில் முன்னேற்றம் நடப்போகிறது என்று அர்த்தம்.

· தலையில் பூச்சூடுவது போன்ற கனவு-குடும்பத்தில் அமைதி மற்றும் நிம்மதி.

· பழம் சாப்பிடுவது- ஒரு செயலின் வெற்றியை குறிக்கிறது.

· கனவில் சாவு விழுந்தால் சுப நிகழ்ச்சி (திருமணம் போன்றது) நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

· நம் கையில் உள்ள பணத்தை யாருக்காவது கொடுத்துவிட்டால், நம்மிடம் உள்ள வியாதிகள் நீங்குகிறது என்று அர்த்தம்.

· நம் தலை முடி நிறைய இருப்பது போன்ற கனவு- நாம் சந்தோஷமாக இருப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.

· கனவில் பூ வாங்கினாலும் நல்லது. நமக்கு வரவு இருக்கிறது என்று அர்த்தம்.

· நாம் உயரப் பறப்பது போன்று இருந்தால், நமது வாழ்கையில் பிரச்சினைகளில் இருந்து துரிதமான முன்னேற்றம் அடையப் போகிறோம் என்று பொருள்.

· படிக்கட்டு ஏறினாலோ அல்லது உயரமான பகுதிகளுக்கு ஏறினாலோ, நாம் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக முன்னேறி வருகிறோம் என்று அர்த்தம்.

· கனவில் யாரேனும் இறந்தால், அவர்களுக்கு ஆயுள் கெட்டி என்று அர்த்தம்.

· வீட்டில் விளக்கு எறிதல் - குடும்பம் என்ற விளக்கு நன்றாக இருக்கிறது.

· பேருந்தில் அல்லது ஏதேனும் ஒரு வாகனத்தில் பயணம் செய்யும்போது, வழியில் இறங்கிவிட்டதைப் போன்று கனவு வந்தால், நாம் ஏதோ ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்துவிட்டோம் என்று அர்த்தம்.
கெட்ட கனவுகள்:

· கனவில் பணம் வாங்கினால் துன்பத்திற்கு உள்ளாக நேரிடும் அல்லது நோய் வாய்ப்பட நேரிடும் என்று அர்த்தம்.

· வீட்டில் விறகு அடிக்கியிருப்பது போன்றோ அல்லது விறகு சம்பந்தமான கனவு வந்தால், வீட்டில் அல்லது வெளியில் சண்டை வரும்.

· தண்ணீரில் நீந்துவது போன்ற கனவு - வாழ்கையில் இன்னும் போராட வேண்டியிருக்கிறது அல்லது ஏதோ ஒரு போராட்டத்தில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

· பெரிய பள்ளத்தில் அல்லது குழியில் இருப்பது போன்றும் எப்படி வெளியில் வரப்போகிறோம் என்று எண்ணினால், சிக்கலான பிரச்சினையில் இருக்கிறோம் சமாளிப்பது சற்று கடினம் என்று அர்த்தம்.

· மேட்டுப் பகுதியில் இருந்து பள்ளத்தில் விழுந்தால், படு தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று அர்த்தம்.

· சாப்பிடுவது போன்ற அல்லது தலை குளிப்பது போன்ற கனவு - நாம் நோய் வாய்ப் பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

· வாந்தியெடுப்பது அல்லது வாயிலிருந்து ஏதோ எடுத்தல் – அதிகமான துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது.

· நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் நமது வீட்டில் சாப்பிடுவது போன்ற கனவு - அவர்களுக்கும் நமக்கும் விரோதம் ஏற்படும்.

· அரிசி வீட்டில் கொட்டிக் கிடத்தல் - கெட்ட செய்தி வரப்போவதற்கான அறிகுறி.

· தேர்வு எழுதுவது போன்ற கனவு - பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் வலுக்கிறது.

· கனவில் திருமணம் நடந்தால்- துயர செய்தி, துயர சம்பவம்.

· கனவில் அடுத்தவர்களுக்கு நமது கையில் உள்ள பாலைக் கொடுத்தால், நமது வீட்டுச் செல்வம் நம்மை விட்டுப் போகிறது என்று அர்த்தம்.

· கனவில் அடுப்பு எறிந்தால், வீட்டில் சண்டை.

· புது வீடு கட்டுதல், மரம் சாய்தல் மற்றும் வீடு இடிதல் - இழப்பிற்கு அறிகுறி.

· கனவில் தலை முடி கொட்டுதல் அல்லது வழுக்கைத் தலை - நமக்கு மிகப்பெரும் அவமானம் மற்றும் நஷ்டம் வரப்போகிறது.

· கனவில் இனிப்பு, வேர்கடலை மற்றும் மீன் சாப்பிடுவது அல்லது இவைகள் கண்ணுக்குத் தென்படல் - நோய்க்கு அறிகுறி.

· தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருள் இருந்தால், கொடிய நோய்கள் வரப்போகிறது என்று அர்த்தம்.

· பல் அடி படுவது, மற்றும் மலம் அல்லது சிறு நீர் கழிப்பது - அவமானங்கள் மற்றும் துன்பங்கள் வருகிறது.

· கனவில் கையெழுத்து போடுவது - பெரிய துன்பம் வரும்.

· இறந்தவர்கள் நம்மை அழைத்து, நாம் வருகிறோம் என்று சொன்னால், நமது உயிருக்கு ஆபத்து.

· வாகனங்களில் ஏறுவது போன்ற கனவு - நோயின் வழியில் பயணம் செய்கிறோம்.

· காட்டில் இருப்பது போன்று கனவு வந்தால், பிரச்சினைகள் மத்தியில் வாழ்கிறோம் என்று அர்த்தம்.

· தேரை அல்லது ஆமை வீட்டில் நுழைதல் - தொடர்ச்சியான கொடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.


சில உண்மைக் கனவுகளும் அதன் பிறகு நடந்த சம்பவங்களும்:



எனது பாட்டியிடம் இந்த கனவுகளுக்கு அர்த்தம் கூறுவது பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது. “நாம் பல கனவுகளைக் காண்கிறோம். ஆனால் தூங்கி எழுந்தவுடன் அனைத்தும் ஞாபகம் இருப்பதில்லை. ஒரு சிலது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது. அதுவும் நமது வாழ்க்கைக்குத் தொடர்புடையதாகவும் இருக்கிறது. அந்த கனவு தொடர்பான சம்பவங்கள் பல வருடங்கள் கழித்து நடந்தாலும் அந்த கனவிற்கான அர்த்தம்தான் அந்த சம்பவம் என்றும் தெரிகிறது. அது போலத்தான் என் தோழி, கனவில் யாரோ ஒருவர் அவளிடம் வீட்டில் எரியும் ராந்தல் விளக்கைக் கேட்டதற்கு தர மறுத்திருக்கிறாள்.


ஆனால் அவர் வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். அவள் விழித்து எழுந்த பிறகு ‘ஐயோ ! விளக்க கொடுத்திட்டேனே, என்ன நடக்கப் போகப்போகுதோ !‘ என்று புலம்பினாள். நாங்கள் எல்லாரும் அவளிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னோம்.


ஆனாலும் அவள் பயந்ததுபோலவே நடந்தது. அவர்களது தோட்டத்தில் மோட்டார் திருட வந்தவனை அவளது மகன்கள் அடிக்கபோய் எதிர்பாராத விதமாக அவன் இறந்துவிட்டான்.அதனால் அவளது மகன்கள், சிறை தண்டனை பெற்றனர். அவர்களது குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது. இப்போது அவர்கள் விடுதலை பெற்றாலும், அவரவர்கள் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். கனவில் எரியும் விளக்கைக் கொடுத்தால் குடும்பம் இருட்டாகும். இப்போது அதுதான் நடந்துள்ளது.” என்று ஒரு உண்மைக் கதையைக் கூறினார். மேலும் பல உண்மைச் சம்பவங்களைக் கூறினார்.


எனது அம்மாவும், தான் கண்ட பல கனவுகளுக்கு அர்த்தங்கள் கூறுவார். அது நடந்தும் இருக்கிறது. அவற்றில் ஒன்றை சொல்கிறேன். என் அம்மாவின் உடன் பணியாற்றிய ஒரு ஆசிரியையின் தலையில் இரும்பு கிரீடம் வைத்து இருப்பது போன்று கனவு கண்டார். காலையில் எழுந்தவுடன் என்னிடம் தான் கண்ட கனவைக் கூறி அவர்களுக்கு ஏதோ கொடிய நோய் வரப்போவதாகத் தெரிகிறது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். நான் அதை ஏதோ உளறுகிறார்கள் என்று விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். ஆனால், சில நாட்களில் அந்த ஆசிரியை மிகுந்த தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதித்தபோது அவருக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்தார்கள். அவர் ஒரளவு குணமடைய ஐந்து வருடம் ஆனது.


ஒரு புறம் சிலருக்கு மறைமுகமாக கனவுகள் வரும்போது, சிலருக்கு நேரடியாக நடக்கப் போகும் நிகழ்வுகள் அப்படியே கனவில் வந்துகொண்டிருக்கிறது. என் அப்பா நான் பத்தாம் வகுப்புத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுப்பதுபோல் கனவு கண்டதாக தேர்வு முடிவுகள் வரும் நாளன்று கூறினார். முடிவுகளைப் பார்த்தப் பிறகு எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அவர் கண்டது போலவே நானும் 430 மதிப்பெண்கள் பெற்றேன். மேலும் பனிரெண்டாம் வகுப்பிலும் 1090 மதிப்பெண்கள் பெருவதுபோல் கனவு கண்டதாக கூறினார். அதுவும் நடந்தது. இதைப் போல் எனது வாழ்க்கையிலேயே பல கனவுகள் உண்மையாக நடந்துள்ளன.


நான் கூற வருவது:



என்னதான் கனவு கண்டாலும், அதுவே நடக்கும் என்பது நிச்சயமில்லை. அதனால் மோசமான கனவுகள் வந்தால் அதை நினைத்து பயப்படாமல் துணிந்து நின்று வாழ்க்கையை எதிர் கொள்ளவேண்டும். இந்த கட்டுரை இப்படிபட்ட கனவுகளுக்கு, இப்படிப்பட்ட அர்த்தங்களைக் கூறிவருகிறார்கள் என்று சொல்ல எழுதப்பட்டதே தவிர யாரையும் பயமுறுத்துவதற்காக எழுத்தப்பட்டது அல்ல. மேலும் இதில் உள்ள கனவுகள் கண்டால் அதில் உள்ள அர்த்ததைப் போன்றே வாழ்கையில் நடக்கும் என்று கூறி உங்களை அச்சுறுத்தவும் இந்த கட்டுரையை நான் எழுதவில்லை.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்!

 இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.


இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.


 இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

 தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.

சீரகம் – 1 ஸ்பூன்

 சோம்பு – 1/2 ஸ்பூன்

 சின்ன வெங்காயம் – 3

கறிவேப்பிலை – 2 இணுக்கு

 கொத்தமல்லலி – சிறிதளவு


 நெல்லி வற்றல் – 10 கிராம்

 வெட்டிவேர் – 5 கிராம்

 இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.