Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 20 February 2014

ஒற்றைத் தலைவலிக்கான தீர்வுகள் !

ஒற்றை தலைவலி என்பது தலைவலியின் ஒரு கடுமையான வகை. இது சாதாரண மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை சீர்குலைக்கிறது. இந்த குறைபாட்டின் அறிகுறிகளாவன: குமட்டல், கண் கூசுதல், குருட்டு புள்ளிகள், ஒளி சிதறடிப்பு மற்றும் கழுத்து வலி. ஒற்றை தலைவலி தீவிர நோய் என்றாலும், சில எளிய தீர்வுகள் உதவியுடன், அதற்கு திறம்பட சிகிச்சையளிக்க முடியும். ஒற்றை தலைவலியை சமாளிக்க மிகவும் செயல்திறன் மிக்க வழிகள் அவசியம்.


அத்தகைய சில செயல்திறம் மிக்க வழிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். ஒற்றை தலைவலி ஒரு குறைபாடு ஆகும். ஆனால் அது எளிதாக வீட்டு வைத்தியம், சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தால், எளிதில் குணப்படுத்த முடியும். ஒருவேளை சில சிகிச்சை முறைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக ஒரு மருத்துவரிடம் ஆலோசிக்கவும். சரி, இப்போது அந்த சிகிச்சை முறைகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, ஒற்றை தலைவலியிலிருந்து விடுபடுங்கள்.

ஐஸ் கட்டி

ஒற்றை தலைவலியை எளிமையாக்கும் எளிய வைத்தியங்களுள் ஒன்று தலைக்கு மேல் ஐஸ் கட்டி பை வைப்பது. இவ்வாறு வைப்பதால், ஐஸ் கட்டி பை மூளையில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி வலியை குறைக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் கட்டி பையை மெதுவாக தேய்க்க வேண்டும். உடனடி நிவாரணத்திற்கு நெற்றி பொட்டிலும் கழுத்திலும் மெதுவாக தேய்ப்பது பலன் தரும்.

தண்ணீர் மருத்துவம்

 தண்ணீர் மருத்துவம் மிகவும் எளிதானது. இது உடலின் இரத்த ஓட்டத்தை திறம்பட சீராக வைக்கிறது. தலைக்கு வெளியே இரத்த ஓட்டத்தை சீராக இயக்குவதின் மூலம் வலியை சற்று குணப்படுத்த உதவுகிறது. குளிர்ந்த நீரில் கால்களை வைத்து, சூடான பாட்டில் நீரை தலைக்கு பின்புறம் வைப்பதின் மூலம், தலைவலியை கட்டுப்படுத்த முடியும்.

ஓடிசி மருந்துகள்

 தலைவலியை குணப்படுத்த பரவலான தன்னிச்சை மருந்துகளை பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபன் தலைவலிக்கு பயன்படுத்தபடும் பொதுவான மருந்துகள். எனினும், இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது

அரோமாதெரபி

அரோமாதெரபி ஒற்றை தலைவலி தாக்குதல்களை குணப்படுத்த உதவும். ஒற்றை தலைவலியோடு போராடி கொண்டிருக்கும் போது பல்வேறு நறுமணங்கள் உடலில் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்தி ஓய்வை அளிக்கும். சாமந்தி, துளசி, யூக்கலிப்டஸ் போன்றவை தலைவலியை குணப்படுத்தும் பொதுவான நறுமண மூலிகைகளில் சில. ஆகவே பல்வேறு மூலிகைகளை சோதனை செய்து தங்களுக்கு மிக சிறந்த பொருத்தமான மூலிகை ஒன்றை கண்டுபிடிக்க முடியும்.

இனிமையான மசாஜ்

 எப்போதாவது, கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் ஏற்படும் தசை பிடிப்பு, தலைவலி தாக்குதலை தூண்ட முடியும். ஆகவே அப்போது ஒரு நல்ல மசாஜை தசைகளுக்கு செய்தால், தசைகள் ஓய்வு எடுப்பதோடு ஒரு சுகமான அனுபவத்தையும் ஏற்படுத்தும்

மக்னீசியத்தின் ஆற்றல்

 மக்னீசியம் தலைவலி நோயாளிகளுக்கு அடிக்கடி பரிந்துரைக்கும் சஞ்சீவியாக கருதப்படுகிறது. மக்னீசியம் திறம்பட பல்வேறு தலைவலி தூண்டல்களை எதிர்கொள்கிறது மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளை ஒழுங்குபடுத்தும். உணவில் 500 மில்லி கிராம் டோஸ் மக்னீசியம் எடுத்துக் கொண்டால், திறம்பட தலைவலி தாக்குதல்களில் இருந்து விடுபட முடியும். அதிலும் பால்

யோகா,

ஒற்றை தலைவலிக்கான சிறந்த மாற்று சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். யோகா உடலின் உயிர்வேதியியல் மற்றும் ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்க முடியும். மூச்சு பயிற்சிகள் மற்றும் பிற யோகா நிலைகள், ஒற்றை தலைவலி தாக்குதல்களின் நிகழ்வுகளை குறைக்க உதவும்

கானக் குரல் வேந்தன் மலேசியா வாசுதேவன்!

சென்னை:கானக் குரல் வேந்தன் மலேசியா வாசுதேவன் அவர்களது நினைவு தினம் இன்று.அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு உங்களுக்காக...

10000க்குஅதிகமான திரைப்பாடல்களைப் பாடிய அருமையான பாடகரும், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து மலேசியாவில் வசித்து வந்த சத்து நாயர்-அம்மாளு தம்பதிக்கு 8ஆவது மகனாய் பிறந்தவர் இவர்.

கானக் குரல் வேந்தன் மலேசியா வாசுதேவன்

மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கி வந்தார்.

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.

ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்று அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.

அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.

அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள அவர் ‘சிலந்தி வலை' என்ற தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளார்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார்.அவருடைய மகன் யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். அவரது மகள் பிரசாந்தினியும் இப்போது பின்னணி பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள்!

ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.


அதனால் தங்களின் கண்களை சிறந்த முறையில் பாதுகாக்க விரும்புவர். "நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று பலரும் உங்களிடம் கேட்பதை விரும்ப மாட்டீர்கள் அல்லவா? ஆனால் பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும்.


அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் அல்லது பரம்பரை காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம். அதனால் முகமும் கலையிழந்து போகும். மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்கள் வீங்கிய நிலைக்கு போகும். மேலும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும்.


 வாழ்க்கை முறை போதிய தூக்கத்தை அளிக்கவில்லை என்றால் இதற்கு வேறு சில எளிய வைத்தியங்களும் உள்ளன. இந்த பாட்டி வைத்தியங்களை கடைப்பிடித்தால் கண் அயர்ச்சியும், கருவளையமும் ஓடியே போகும்.


வெள்ளரிக்காய்கள்:

கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது மிகவும் குளிர்ந்த வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து வீங்கிய கண் பட்டைகளுக்கு எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும். இது கண் வீக்கத்தை குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும்.


 அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த


குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரி:


குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும். அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது.


ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரியின் தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள்.


ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்த குளிர்ந்த தேநீர் பை:

இது மிகவும் எளிய முறை என்றாலும் கூட, கண்களின் கருவளையம், வீங்கிய கண் பட்டைகள் மற்றும் கண் அயர்ச்சி போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. ஈரமான தேநீர் பையை குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவைகள் நன்கு குளிர்ந்த நிலைக்கு வந்த பின்பு, சிறிய அளவிலான பஞ்சு உருண்டையை ஆலிவ் எண்ணெயில் நனைத்து, அந்த எண்ணெய்யை கண் பட்டையில் தடவிக் கொள்ள வேண்டும்.


பின்னர் ஃப்ரீசரில் இருந்து தேநீர் பையை எடுத்து கொண்டு, ஓய்வெடுக்கும் போது தலையை நன்கு பின்புறம் சாய்த்து, கண்களின் இமைகளின் மேல் இந்த தேநீர் பையை ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பின் அதனை எடுத்துவிட்டு, மாய்ஸ்சரைசரை தடவிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா? அப்படியானால்...

 நிறைய மக்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சந்திக்கின்றனர். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு, உடலில் உள்ள சில பிரச்சனைகளே காரணமாகும்.

சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீர்ப்பையானது சிறிதாக இருக்கும். அதனால் அத்தகையவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் சாதாரணமானவர்களுக்கு, இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதிலும் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு முறை சிறுநீர் கழித்தால், அத்தகையவர்களின் உடலில் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம். இருப்பினும், இத்தகைய நிலைமை ஒருவருக்குகொருவர் மாறுபடும். உதாரணமாக, அதிகமாக தண்ணீர் குடித்தால், அடிக்கடி சிறுநீர் வருவதில் பிரச்சனை இல்லை. ஆனால் தண்ணீரே பருகாமல், அடிக்கடி சிறுநீர் வந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல், எதற்காக என்று நிச்சயம் ஆராய வேண்டும்.

ஏனெனில் இவ்வாறு அடிக்கடி சிறுநீர் வெளியேறினால், சிலசமயங்களில் உடலில் ஒருசில நோய்கள் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும். உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இதுப் போன்று வேறு சில நோய்கள் உடலில் இருந்தாலும், அடிக்கடி சிறுநீரானது வெளியேறும். இப்போது எதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது என்று ஒருசிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

நீரிழிவு

நீரிழிவு நோய் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஏனெனில் உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகமாகி, ஒரு நாளைக்கு 20 முறை சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம் மற்றும் பயம், சிறுநீர் அவசரமாக வருவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். பெரும்பாலும் பரீட்சை எழுதும் போது இந்த மாதிரியான உணர்வு ஏற்படும். ஏனென்றால், மனமானது ஒருவித அழுத்தத்துடன் இருக்கும் போது, அதனால் மைய நரம்பு மண்டலம் சிறுநீர்ப்பையில் ஒருவித தூண்டலை ஏற்படுத்தி, சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

தைராய்டு

உடலில் தைராய்டு இருந்தால், அப்போது ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால், அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.

சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று

 சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் வரும். ஆனால் இந்த பிரச்சனை இருந்தால், சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுவதுமாக நிரம்பியிருக்காது, இருப்பினும் ஒருசில துளிகள் மட்டும் எரிச்சலுடன் வெளியேறும்.

சிறுநீரகப் பிரச்சனை

சிறுநீரகத்தில் தான் இரத்தமானது சுத்திகரிக்கப்பட்டு, இரத்தத்தில் உள்ள கெட்ட நீரான சிறுநீரை பிரித்தெடுக்கும். சில நேரங்களில், சிறுநீரகத்தில் நோய்த்தொற்று இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும்.

அதிகமான கால்சியம்

 அதிகமான கால்சியம் உடலில் இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஏனெனில் உடலில் இருக்கும் அதிகப்படியான கால்சியமானது சிறுநீரகத்தில் தங்குவதால், சிறுநீரகத்தில் தங்கும் சிறுநீரின் அளவு குறைந்து, அடிக்கடி சிறுநீரை வெளியேற்ற நேரிடும்.

நரம்பு பக்கவாதம்

சில நேரங்களில் நரம்பு பக்கவாதத்தினாலும், எல்லையின்றி அடிக்கடி சிறுநீரானது வெளியேறும். ஏனெனில் சிறுநீரகத்துடன் நரம்பு தொடர்புடையதால், பக்கவாதம் ஏற்படும் போது அதிர்வானது அதிகரித்து, அடிக்கடி சிறுநீரானது வெளிவரும். மேலும் சில சமயங்களில் சிறுநீரப்பையே பாதிப்படையும்.

அதிகப்படியான ஆல்கஹால்

அதிகப்படியாக ஆல்கஹால் பருகினால், அதுவும் பீரை பருகினால் சிறுநீர் அடிக்கடி வெளியேறும். ஏனெனில் ஆல்கஹால் DNH என்னும் அமிலம் வெளியீட்டின் போது இடையூறை ஏற்படுத்தி, அதனால் அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இறுதி மாதவிடாய் அறிகுறிகள்

இறுதி மாதவிடாயின் போது தான், பெண்களின் உடலிலேயே மிகப் பெரிய ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இதனால் மனநிலை மாறுவதோடு, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றமும் இருக்கும்.

கர்ப்பம்

கருப்பையில் குழந்தையானது வளர்வதால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, அடிக்கடி சிறுநீரானது வெளியேறுகிறது. இது இயற்கையானது என்பதால் பயம் தேவையில்லை.

நான் சிகப்பு மனிதன் டீசர்!

விஷால்- லக்‌ஷ்மிமேனன் இணைந்து நடித்துவரும் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதிகமான சந்தோஷம், துக்கம், கோபம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டால் உடனே தூங்கிவிழுந்துவிடும் நோய் கொண்டவராக விஷால் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் பயணிப்பதால் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துவருகின்றன.


 விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் திரு இப்படத்தை இயக்கிவருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


 புதுவகை இசைக்கோர்ப்பில் இப்படத்தின் இசை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் இசை வெளியீடும், ஏப்ரலில் திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் சென்றது விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் - சமந்தா இணைந்து நடித்துவரும் புதிய திரைப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளன.


துப்பாக்கி படத்திற்குப் பிறகு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கல்கத்தாவில் துவங்கின. அதன்பிறகு இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் கடந்த வாரத்தில் சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புகளுடன் நடைபெற்றன.


இப்படத்தின் படப்பிடிப்புக்களை ஐந்தே மாதத்தில் நிறைவு செய்யப் படக்குழு தீர்மானித்திருப்பதால், இதன் மூன்றாம் கட்டப் படப்பிடிப்புகள் தற்பொழுது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கியுள்ளன. சுமார் ஒரு மாத காலம் ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்களை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், “வாள்” அல்லது “ தீரன்” என்று தலைப்பிடப்படலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது. இப்படம் இளைய தளபதி நடிக்கும் 57 ஆவது திரைப்படமாகும்.

பிப்ரவரி 28 ல் வெளியாகிறது தெகிடி!

அறிமுகக் கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் திறமையை உலகறியச் செய்யும் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய் திரைப்படமான தெகிடி திரைப்படம் வருகிற பிப்ரவரி 28ல் வெளியாகவுள்ளது. மேலும் இன்று தணிக்கை செய்யப்பட்ட இப்படம் U சான்றிதழ் பெற்றுள்ளது.


அஷோக் செல்வன் மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகியிருக்கும் தெகிடி திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ரமேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளரான நிவாஸ்.கே.பிரசன்னாவிற்கும் இதுவே முதல் திரைப்படமாகும்.


இப்படம் தெலுங்கில் பாத்ரம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. தெலுங்குப் படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற பிப்ரவரி 24ல் நடைபெறவுள்ளது.


திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகவிருப்பதால் இப்படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. பீட்சா, சூதுகவ்வும் வரிசையில் இப்படமும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்களிடம் பெரும்
வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாய்தான் ஹீரோ, சிபிராஜ் இரண்டாவது ஹீரோ.தான்!

வாரிசு நடிகர்களில் சிபிராஜூம் ஒருவர். ஸ்டூடன்ட் நம்பர்-1, லீ, நாணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் சிபி ராஜால் நிலைத்து நிற்க முடியவில்லை. இப்போது சிபி, 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாய்தான் ஹீரோ, சிபிராஜ் இரண்டாவது ஹீரோ. படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. நாயுடன் நடித்த அனுபவம் பற்றி சிபிராஜ் கூறியிருப்பதாவது:


நாயை வைத்து எனக்கு ஒரு காரியம் ஆகணும். அதனால அந்த நாய் எனக்கு முக்கியம். இதுதான் படத்தோட ஒண்லைன் ஸ்டோரி. முதல்ல நான்தான் ஹீரோவா நடிக்கிறதா இருந்தது. திரைக்கதையை எழுதி முடித்த பிறகு காட்சிகளை எண்ணிப் பார்த்தால் என்னை விட நாய்க்குதான் அதிக சீன் இருந்தது. அப்போ அதுதானே ஹீரோ. நான் செகண்ட் ஹீரோ.


படத்துல நடிச்சிருக்கிறது பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஷெப்பர்ட் வகை நாய். பெயர் இடோ. ராணுவ பணிகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தாக்கினால் தாக்கியவனை கடிக்கும், முன்னால் யார் ஓடினாலும் அதற்கு அவன் எதிரி. இதுதான் இந்த நாய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி. கொஞ்சம் ஆபத்தான நாய்தான். ஆனாலும் தைரியாமா நடிச்சேன். இதுவரைக்கும் 12 முறை அது என்னை கடிச்சிருக்கு. உடனே சிகிச்சை அளிக்க டாக்டர் அருகிலேயே இருப்பார். ஆன்டி வைரஸ் ஊசி போட்டுகிட்டுதான் நடிக்கவே ஆரம்பிப்பேன்.


இடோவும் நானும் இப்போ பிரண்ட். இன்னும் கொஞ்ச நாள்ல ஷூட்டிங் முடிஞ்சிடும். இடோவ அதோட இடத்துல கொண்டுபோய் விடணும். இப்போ நினைச்சாலும் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. எத்தனை லட்சம்னாலும் இடோவ வாங்கிடலாமுன்னு நினைச்சேன். "சாரி இது ராணுவத்துக்கு பழக்கப்படுத்தின நாய் தனி நபருக்கு தர முடியாது"ன்னு சொல்லிடாங்க என்கிறார் சிபி.

பி.வாசு யார் என்றே தெரியாது - ஐஸ்வர்யாராய்!

தமிழின் பிரபல இயக்குனர் பி.வாசு. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் டைரக்ட் செய்ய இருப்பதாகவும். இது அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகிறது என்றும். இதில் நடிக்க ஐஸ்வர்யாராய் சம்மதித்துவிட்டார் என்றும் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டார். அது தொடர்பான படம் ஒன்றையும் வெளியிட்டார். இதனை இப்போது ஐஸ்வர்யாராய் மறுத்திருப்பதோடு பி.வாசு யார் என்றே தனக்கு தெரியாது எனவும் கூறியிருக்கிறார்.


மும்பை நிருபர்கள் ஐஸ்வர்யாராயை நேற்று சந்தித்து பேட்டி எடுத்தனர். அப்போது இதுபற்றி அவரிடம் கேட்டபோது சற்று கோபமாகவே பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது: நான் அப்படி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நடிக்க ஒப்புக் கொள்ளவும் இல்லை. நீங்கள் குறிப்பிடும் இயக்குனர் யாரென்றே எனக்குத் தெரியாது. தினம் நாற்பது ஐம்பது பேர் என்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார்கள். சிலரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்திக்கிறேன். அதையே அட்வான்சாக எடுத்துக் கொண்டு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது சரியல்ல. என்று கூறியிருக்கிறார்.


ஆனால் ஐஸ்வர்யராயை சந்தித்தது உண்மை. அவர் எனது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதும் உண்மை என்று தெரிவித்திருக்கிறார் பி.வாசு. அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஐஸ்வர்யாராயை சந்தித்ததும், கதை சொன்னதும் 100 சதவிகிதம் உண்மை. நான் ரஜினி படங்களை இயக்கியவன். ஐஸ்வர்யாராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. ஐஸ்வர்யா, பி.வாசு யார் என்று கேட்கவில்லை. பி.வாசு, மணிரத்தினம் உள்ளிட்ட பலரிடம் கதை கேட்டுள்ளேன் எந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றுதான் கூறியுள்ளார்.


எனது படத்தின் கதை ஐஸ்வர்யாராயை சுற்றித்தான் நடக்கும், ஹீரோவையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்யும்போது ஹீரோயின் யார் என்று கேட்பார்கள் அதற்காகத்தான் அவர் நடிக்கும் தகவலை வெளியிட்டேன். படப்பிடிப்புக்கு இன்னும் 8 மாதம் இருக்கும்போது இப்போதே ஏன் செய்தி கொடுத்தார் என்கிற வருத்தம் வேண்டுமானால் என்மீது இருக்கலாம். அதற்குரிய காரணங்களை அவரிடம் நான் தெரிவித்து விட்டேன். எனது படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது முழு உண்மை.


இவ்வாறு பி.வாசு கூறியிருக்கிறார்.

கமல், விக்ரம் வரிசையில் அட்டகத்தி தினேஷ்!

ராஜபார்வை படத்தில் கண் பார்வை இல்லாதவராக கமல் நடித்திருந்தார். அதற்கடுத்த காசியில் விக்ரம் நடித்தார். அவதாரம் படத்தில் ரேவதி நடித்தார், பேரழகனில் ஜோதிகா நடித்தார். நான் கடவுளில் பூஜா நடித்தார். இப்படி நடித்த அத்தனை பேருக்குமே அந்த கதாபாத்திரம் பேரும் புகழையும் வாங்கிக்கொடுத்துள்ளது. அந்த வகையில், இப்போது குக்கூ படம் மூலம், அட்டகத்தி தினேசும், மாளவிகா நாயரும் அந்த பட்டியலில் இடம்பிடிக்கிறார்.


கண்பார்வை இல்லாத நாயகனாக தினேசும், கண் பார்வையில்லாத நாயகியாக மாளவிகா நாயரும் நடித்துள்ள இந்த குக்கூ படத்தை எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த கமல், சூர்யா என அத்தனை சினிமா ஜாம்பவான்களுமே ஒருகணம் ஸ்தம்பித்து போனார்கள். அந்த அளவுக்கு படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் அவர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்தன.


இந்த படத்தில் நடித்தது பற்றி தினேஷ் கூறுகையில், கண் பார்வையில்லாதவர்களின் காதல் கதை என்று என்னிடம் கதையை சொன்னதுமே நெகிழ்ந்து போனேன். மேலும், இந்த மாதிரி கதையில் நடிப்பது அத்தனை எளிதல்ல. ரொம்ப கடினமானது என்பதும் தெரியும். அதனால், கண் பார்வை இல்லாதவர்கள் கண்களை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து பயிற்சி எடுத்தேன். அதற்காக மாதக்கணக்கில் செலவு செய்தேன்.


அதையடுத்து, படப்பிடிப்பில் நடித்தபோது ஒரு திசையிலேயே பார்த்தபடி இருந்ததால் கண்களில் வலி ஏற்பட்டது. இருப்பினும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதால் எதையும கருத்தில் கொள்ளாமல் நடித்தேன். இப்போது படத்தைப்பார்த்துவிட்டு அனைவரும பாராட்டுகிறார்கள். ரொம்ப சந்தோசமாக உள்ளது என்கிறார்.

ரஜினியிடம் போய் நான் சான்ஸ் கேட்கமாட்டேன்! -கொலவெறி அனிருத்

ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் ரஜினிக்கு நெருங்கிய உறவினர். மேலும், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம் என சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் இவர் தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.


இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதனால் யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் பின் தள்ளிவிட்டு முன்னுக்கு சென்றிருக்கிறார் அனிருத்.


அதனால், இப்படி குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்ட அனிருத், அடுத்தபடியாக ரஜினியின் புதிய படத்திற்கு இசையமைப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி அவரைக்கேட்டால், ரஜினி சார் படத்தில் இசையமைக்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோசப்படுவேன்.


ஆனால், அவர் உறவினர் என்பதற்காக நான் போய் சான்ஸ் கேட்க மாட்டேன. அடுத்து அவர் படத்தை இயக்குபவர் என்னை அழைத்தால் மட்டுமே செல்வேன். அப்படி அவர்கள் என்னை அழைத்து நான் இசையமைத்தால்தான் அது சரியாக இருக்கும். சந்தோசமாகவும இருக்கும் என்கிறார் அனிருத்.

ஆண்களே! முடி உதிர்தலை இயற்கை முறையில் தடுக்க விரும்புகிறீர்களா?

சிக்குப்பிடித்த முடி, உடைகின்ற முடி, முடி வளராமை, முடி உதிர்தல், இளநரை, அதிகமான எண்ணெய் பசை உள்ள தலை ஆகியவை ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும் பிரச்சனைகளாகும். பெண்களைப் போல ஆண்களும் தமது தலைமுடியைக் கவனத்துடன் பராமரித்து வந்தால் தான், அவர்களது தலைமுடியும் வளர ஏதுவாக இருக்கும்.

எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்' என்பார்கள். ஆனால் அந்த சிரசில் முடியில்லாமலும், அடர்த்தியில்லாமலும் இருந்தால் ஆண்களுக்குக் கிடைக்க வேண்டிய எடுப்பான தோற்றத்தினை இழக்க வேண்டியிருக்கும்.


எனவே தலைமுடி பராமரிப்பில் ,ஆண்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.சுற்றுப்புறச் சூழல் மாசடைந்துள்ள இக்காலத்தில் தூசுகளால் தலையானது எளிதில் அழுக்கடைகிறது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருப்பதால், அதிக வியர்வை மற்றும் வெப்பம்ஆகியவற்றால் தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

 எனவே இம்மாதிரியான சூழ்நிலைகளில் தலைமுடியினைப் பராமரித்து, ஆரோக்கியமான அழகான தலைமுடியினைப் பெறுவதற்கு 20 வீட்டுக் குறிப்புகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பயன் பெறுங்கள்.

கற்றாழை

lதலைமுடிக்கு வலிமையும் பளபளப்பும் பெற கற்றாழையை பயன்படுத்தலாம். அதற்கு கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் போன்ற பசையை ஸ்கால்ப்பில் அழுத்தித் தேய்த்துக் கழுவ வேண்டும். இவ்வாறு கற்றாழை ஜெல் கொண்டு வாரம் இருமுறை தலையினை மசாஜ் செய்தால், முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

ஆரஞ்சு பழத் தோல் 

ஆரஞ்சு பழத்தோல்களை மிக்ஸியில் போட்டு அரைத்து, தலைமுடியில் வாரமொருமுறை தடவிக் குளித்தால், பொடுகும் தொல்லை நீங்கும்.

எண்ணெய் மசாஜ் 

எண்ணெயைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்வதால், தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களானது கிடைக்கும். அத்தகைய எண்ணெய் மசாஜ் செய்வதற்கு பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை மிகவும் ஏற்றவை. அதிலும் வாரம் இருமுறையாவது எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.

மருதாணி இலை 

வலிமையான தலைமுடி வேண்டுமெனில், மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலையில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

வினிகர் 

வினிகரில் பொட்டாசியமும், நொதிகளும் அதிகம் உள்ளதால், தலையில் உள்ள பொடுகை நீக்க இது பெரிதும் உதவுகிறது. அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு, தலையில் தேய்த்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.

தேங்காய்ப் பால் 

தேங்காய்ப் பால் தலைமுடியில் ஏற்படும் வறட்சியை தடுத்து மென்மையாக்குகிறது. மேலும் முடி வளரவும் உதவுகிறது. எனவே தலைக்கு தேங்காய்ப் பால் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

முட்டை

 தலைமுடிப் பராமரிப்பிற்கு புரதம் மிக அவசியம். தலைமுடி வலிமையுடனும், அடர்த்தியாகவும் திகழ வேண்டுமெனில், வாரத்திற்கு 3 அல்லது 4 முறை புரதப் பராமரிப்பு செய்ய வேண்டும். புரதப் பராமரிப்பு என்பது முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். பின் அதனை தலையில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீர் கொண்டு தலையினை நன்கு அலச வேண்டும்.

தேன் 

பளபளப்பான கேசத்திற்கு தேனை பயன்படுத்தலாம். தேனும், ஆலிவ் எண்ணெயும் கலந்து தலைமுடியில் தேய்த்து, அரை மணிநேரத்திற்குப் பிறகு நன்கு அலசி குளிக்கவும்.

வேப்பிலை

 வேப்பிலையை அரைத்து பசை போலாக்கி, அதனைத் தலையில் தடவி குளித்தால், ஸ்கால்ப்பில் அல்கலைன் தன்மையை நிலைநிறுத்த முடியும். மேலும் இது முடி உதிர்வதையும் தடுக்கிறது. இன்னும் சிறந்த பலனைப் பெறுவதற்கு, வேப்பிலைப் பசையுடன், சிறிது தேனும், ஆலிவ் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஜொஜோபா எண்ணெய்

 ஜொஜோபா எண்ணெய் முடி சீரான முறையில் வளர்வதற்கும், மென்மையாகவும் வளர இது உதவுகிறது. மேலும் சிக்குப்பிடித்த வறண்ட கேசத்துக்கு மிகச்சிறந்த தீர்வாக இது விளங்குகிறது

தயிரும் மிளகும் 

பொடுகுத் தொல்லையை போக்க மூன்று ஸ்பூன் தயிருடன், 2 தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள் கலந்து, அக்கலவையை, தலையில் அழுத்தித் தேய்க்கவும். ஒரு மணிநேரத்திற்கு பிறகு மென்மையான ஷாம்பு தேய்த்து நன்கு அலச வேண்டும்.

அவகேடோ /அலிபெர 

வெண்ணெய் பழம் என்று தமிழில் அழைக்கப்படும் அவகேடோவை வாழைப்பழத்துடன் சேர்த்து பசை போல அரைத்துக் கொண்டு, இப்பசையை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரைமணிநேரத்திற்குப் பிறகு, இளஞ்சூடான நீரை கொண்டு தலையினை அலச வேண்டும். இதனால் தலைமுடி வலுவுடனும், அடர்த்தியாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

ஆளி விதைகள் (Flax Seed) 

2 அல்லது 3 மேசைக்கண்டி ஆளிவிதைகளை எடுத்துக் கொண்டு, தண்ணீரில் 5 நாட்களுக்கு ஊற விடுங்கள். நன்றாக ஊறிய பிறகு அது பசை போல் ஆகிவிடும். அதனை பஞ்சு உருண்டைகள் கொண்டு தலையில் அழுத்தித் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து, வெந்நீரில் தலையை நன்கு அலச வேண்டும்.

எலுமிச்சைச் சாறு 

எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை 1: 2 விகிதத்தில் கலந்து கொண்டு. பின் இதனை மயிர்க்கால்களில் படும் வண்ணம் அழுத்தித் தேய்க்க வேண்டும். 3-4 மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.

முட்டை மற்றும் மயோனைஸ் 

இத்தகைய கலவையானது, தலைமுடியை பளபளப்பாகவும், பட்டுப்போல் மிருதுவாகவும் திகழ உதவும். அதற்கு இந்த கலவையை தலைமுடியில் தேய்த்து, அரை மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டு

தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி + கறிவேப்பிலை

 தேங்காய் எண்ணெய், செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரவு தூங்கும் போது தலையில் தடவி, காலையில் நீரில் நன்கு அலசினால், வலிமையான தலைமுடியைப் பெறலாம். இதனை வாரமொரு முறை செய்யலாம்.

நெல்லிக்காய் 

நெல்லிக்காய், சீகைக்காய், கரிசலாங்கண்ணி மற்றும் பூந்திக்கொட்டை ஆகியவற்றைக் காய வைத்துப் பொடியாக்கி, அவற்றில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் திகழும்.

சமையல் சோடா 

தலையிலிருந்து பொடுகுகளை அகற்ற சமையல் சோடா பெரிதுவும் உதவியாக இருக்கும். அதற்கு கையளவு ஷாம்புவில், ஒரு மேசைக்கரண்டி சமையல் சோடா சேர்த்து கலந்து குளித்து வந்தால், பொடுகு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகு

மயோனைஸ்

 வறண்ட தலைமுடியில் மயோனைஸை தடவி, தலையினை ஒரு பிளாஸ்டிக் உறை கொண்டு மூடி, அரை மணிநேரத்திற்கு பிறகு நன்கு அலசி விட வேண்டும்.

ஆண்களுக்கான தலை முடி பராமரிப்பு!

தலை முடி பராமரிப்பு என்றாலே பொதுவாக அது பெரும்பாலும் பெண்களுக்கே பொருந்தும். அப்படி இருந்தும், ஆண்கள் கூட தங்கள் தலை முடி ஆரோக்கியமாகவும் பார்க்க அழகாகவும் காட்சி அளிக்க அதன் மீது கூடுதல் அக்கறை எடுக்கத் தான் செய்கிறார்கள். பல நேரங்களில் ஆண்கள் தங்கள் தலை முடியை குட்டையாக ட்ரிம் செய்யவே விரும்புவார்கள். அப்படியிருந்தும் கூட அதனை மினுமினுப்பாக, நல்ல வண்ணத்தில், அடர்த்தியாக வைத்திருக்க சில அழகு குறிப்புகளை பின்பற்ற வேண்டி வரும். ஆண்கள் ஆரோக்கியமான மினுமினுப்பான தலைமுடியை பெற சீரான முறையில் ஷாம்பு போட்டால் மட்டும் பத்தாது.


தலை முடி பராமரிப்பு என்றால் அதன் மீது அடிக்கடி கவனம் செலுத்தியாக வேண்டும். மேலும் சீரான முறையில் பராமரித்தால் தான் அதன் முன்னேற்றத்தை உங்களால் கணக்கிட முடியும். ஷாம்பு தடவிய தலை முடியை பல வழிகளில் கண்டிஷனிங் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த முறை ஷாம்பு போடும் வரை தலை முடி பளபளப்பாக இருக்கும். தலை முடி திடமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமானால் தலைக்கு சீரான முறையில் எண்ணெய் தேய்ப்பது என்பது அவசியமான ஒன்றாகும். வெதுவெதுப்பான எண்ணெயை கொண்டு உங்கள் தலைக்கு மசாஜ் செய்தால் அது முடிகளின் வேர் வரை ஊடுருவி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் மசாஜ் செய்வதால் உங்கள் தலையின் இரத்த ஓட்டமும் சீராகும். அதனால் வளரும் முடி திடமாகவும் இருக்கும்.


தலைமுடியை அதன் வகையை பொறுத்து பிரிக்கலாம் - எண்ணெய் பதமுள்ள, வறண்ட மற்றும் இயல்பு. உங்கள் ஷாம்பு, எண்ணெய், கண்டிஷனர் மற்றும் தலை முடி பராமரிப்பு பொருட்களை உங்கள் முடியின் வகையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும். பொதுவாக வறண்ட தலைமுடி என்றால் ஜொஜோபா, கற்றாழை போன்ற மாய்ஸ்சரைஸிங் பொருட்கள் கலந்துள்ள ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். இதுவே எண்ணெய் பதமுள்ள முடியை கொண்டிருந்தால் அதற்காக விற்கப்படும் பொருட்களை வாங்கி தலையை சீரான முறையில் கழுவ வேண்டும்.
ஆண்களுக்கான புகழ்பெற்ற தலை முடி பராமரிப்பு டிப்ஸ் சிலவற்றை தெரிந்து கொண்டு அவைகளை பின்பற்றுங்கள்...


சீரான முறையில் முடியை அலசுதல்
நீங்கள் எவ்வகை முடியை கொண்டிருந்தாலும் பரவாயில்லை. உங்கள் தலை முடி வகைக்கேற்ப நீங்கள் வாங்கிய ஷாம்புவை கொண்டு தலை முடியை சீரான முறையில் அலச வேண்டும். ஷாம்புவை தீர்மானிப்பதில் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், நல்ல சரும மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

ஷாம்பு

ஷாம்புவை தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்த ஆரம்பித்த பின், வேறு ஷம்பூவிற்கு கண்டிப்பாக மாறக் கூடாது. ஒவ்வொரு ஷாம்புவும் தன் பயனை காட்ட சில நாட்கள் எடுக்கும். ஒரு வேளை அந்த ஷாம்புவால் நீங்கள் பயனை பெற்று விட்டால் அதன் பின் வேறு ஷாம்புவை நீங்கள் மாற்றலாம்.

எண்ணெய் தேய்த்தல்

தலை முடிக்கு சீரான முறையில் எண்ணெய் தேய்த்தல் என்பது முடி பராமரிப்பில் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வருகிறது. எண்ணெய் தேய்த்தல் என்பது பன்முக பயனை கொண்டுள்ளது. அது ஆரோக்கியமான தலைமுடி வளர உறுதுணையாக இருக்கும். வெதுவெதுப்பான எண்ணெய்யை கொண்டு உங்கள் தலைக்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். அல்லது குறைந்தது 3 மணி நேரமாவது அது உங்கள் தலைமுடியில் செயலாற்ற விடுங்கள்.

கண்டிஷனிங்

தலைமுடியை கண்டிஷனிங் செய்தால் உங்கள் தலைமுடியின் அமைப்பு நயம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இதற்கு கத்தாழை, ட்ரீ டீ எண்ணெய், ஜோஜோபா எண்ணெய் போன்ற பல இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். சந்தையிலும் கூட பல கண்டிஷனர்கள் கிடைக்கிறது. அதுவும் கூட உங்கள் தலைமுடியை வழுவழுப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.

காய வைத்தல்

ஷாம்பு போட்டு குளித்த பின் தலை முடியை காய வைக்க பல வழிகள் உள்ளது. சில நேரம் கண்டிஷனர் போட்டு குளித்த பின் தலையை சுற்றி துண்டை கட்டி அப்படியே விட்டு விட வேண்டும். ட்ரையரை பயன்படுத்தியும் கூட உங்கள் தலை முடியை காய வைக்கலாம். ஆனால் ட்ரையர் பயன்படுத்தும் போது தலை முடி கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சீர்ப்படுத்தல் மற்றும் அளவு

ஷாம்பு போட்டு குளித்த பின்பு தலைமுடியை சீர்ப்படுத்தி மென்மையாக்க வேண்டும். அப்பது தான் முடி உதிர்வு ஏற்படாது. அதே போல் தலை முடியை நீண்ட நேரமும் சீர்படுத்த கூடாது. மேலும் கைக்கு வந்த திசையில் சகட்டு மேனிக்கு வேகமாகவும் செய்யக் கூடாது. அப்படி செய்தால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். உங்கள் தலை முடியை மென்மையாக கையாளுங்கள். குளித்த பின்பு போட வேண்டிய கண்டிஷனரை பயன்படுத்தி முடியை காத்திடுங்கள்.

பாதுகாப்பான ஹேர் டை

பல ஆண்களுக்கு தலை முடி நரைக்க ஆரம்பித்தால் வயது ஏறுகிறது என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும். அதனால் அவர்கள் மனம் உடைந்து தன்னம்பிக்கையை இழந்து விடுவார்கள். அப்படி நரை ஏற்பட்டால் முடிந்த வரை மூலிகை தன்மையுள்ள ஹேர் டை அல்லது ஆர்கானிக் ஹேர் கலரிங்கயே பயன்படுத்துங்கள். அம்மோனியா போன்ற ரசாயனங்கள் கலக்காத இயற்கை ஹேர் கலரிங்கை பயன்படுத்துங்கள். உங்கள் தலை முடி வகைக்கு எந்த ஹேர் டை ஒத்துப் போகும் என்று வல்லுனரிடம் கூட கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இல்லம் அழகுபடுத்த டிப்s !

ப்ளாட்டில் வசிப்பவரா நீங்கள்? அதையே அழகாக வைத்துக் கொள்ளப் பிரியப்படுகிறீர்களா?


அதற்கு கூடுமான வரையில் தரையில் எந்தப் பொருளையும் வைக்காமல் இருக்கவேண்டும்.

வீட்டின் நுழைவு வாயிலின் வலது மூலையில், டெரகோட்டா உருளியிலோ அல்லது வெண்கலத்தில் சற்றே அகன்ற ஏந்தலான பாத்திரத்திலோ, தண்ணீர் நிரப்பி, சிறு பூக்களை அடர்த்தியாய் பரப்பி விடவும். இந்த மலர் அலங்காரம் பார்க்கும் போதே புத்துணர்வூட்டும் மனதிற்கு சக்தியையும் அளிக்கும்.
தரையில் வட்ட வடிவ கார்பெட் போடுவதால் சிறு ஹாலின் அழகு பரிணமிக்கும்.

சின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம்.

உங்கள் ஹாலில் நுழைந்தவுடன் கண்ணில் படும் இடத்தில் சுவரில் இயற்கைக் காட்சிப்படமோ அல்லது குழந்தையின் படமோ மாட்டலாம். இரண்டு பெரிய விசிறிகளை (சிங்கப்பூரில் இது பிரபலம்) அரை வட்ட வடிவில் மாட்டினாலும் அழகாயிருக்கும்.


ஹாலின் டீபாய் மீது மடித்து வைத்த பேப்பர்கள், போன் அருகே சிரிக்கும் புத்தர் அல்லது பிள்ளையார்
தாமிரத்திலான பொம்மை ஒன்றை வைக்கலாம். அல்லது மெழுகுவர்த்தியை ஸ்டாண்டுடன் வைக்கலாம்.

டைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர் வேஸோ, அல்லது கட்லரி செட்டோ விருப்பப்படி ஒழுங்காய் அமைக்கலாம். டேபிளும் மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும். இடத்தை அடைக்காது.

சமையலறை அலமாரியில் ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் வாங்கி தேவையான சாமான்களை நிரப்புங்கள்.

மிக்சி க்ரைண்டருக்கு மேடை மூலையில் இடம் கொடுங்கள். க்ரைண்டருக்குக் கீழே புஷ் கொடுத்து விட்டால் அதை டேபிளீன் கீழே இழுத்துத் தள்ளி விடலாம்.

இன்பில்ட்காட் என்னும் மேற்புறம் திறந்தால் உள்ளே அதிக இடம் கொண்ட கட்டில்களை படுக்கை அறையில் போட்டு விட்டால் அதிகப்படி தலையணை போர்வைகளை அதில் ஒளிக்கலாம்.

பவர் ஸ்டாருக்கு சம்பள பாக்கியா? : விஜய் மில்டன் மறுப்பு!

கோலிசோடா’ படத்தில் நடித் ததற்கு சம்பளம் தர மறுக்கிறார்கள் என்று ‘பவர்ஸ்டார்’சீனிவாசன் கூறியுள்ளதை ‘கோலிசோடா’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்கு நருமான விஜய் மில்டன் மறுத் துள்ளார்.


‘லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். ‘இன்றைய சினிமா’ என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது :-


சமீபத்தில் வெளியான ‘கோலிசோடா’ படத்தில் நடிக்க என்னிடம் 6 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். மூன்று நாட்களில் நடித்து முடித்தேன். படப்பிடிப்பின் தொடக்கத்தில் நடிப்பதற்காக ஒரு சிறிய தொகையை என்னிடம் கொடுத்தார்கள். மீதி தொகையை பின்னர் தருவதாக கூறினார்கள். அப்போதிலிருந்து பலமுறை கேட்டுள்ளேன். சரியான பதில் எதுவும் இல்லை. ஒருகட்டத்தில் பணத்தை தரமுடியாது யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்துகொள் என்கிறார்கள். உழைப்புக்கான சம்பளத்தை தராமல் ஏமாற்றுவது வருத்தம் அளிக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


இது குறித்து ‘கோலிசோடா’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான விஜய்மில்டன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:


கோலிசோடா படத்துக்கு 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்த ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தார். அந்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வரவும் மறுத்துவிட்டார். பின்னர், வேறொருத்தரை வைத்து டப்பிங் முடித்திருக்கிறோம். அவர் நடித்த மூன்று நாட்களுக்காக பேசிய தொகையை கொடுத்துவிட்டோம். நடிக்க வராத மூன்று நாட்களுக்கு பணம் கேட்டால் எப்படி கொடுக்க முடியும். இப்போது பரப்பி வரும் புகாரை நடிகர் சங்கம் மூலமாக கொடுத்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. அப்படியே நடிகர் சங்கம் வழியே வந்தாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

பொன்னான வரிகள்!


 செல்லச்செல்ல தோல் சுருங்கி விடுகிறது.-ஆனால்
மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடும்.

**********

சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம்.

**********

நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.

**********

மீனுக்குக்கூடத் தொல்லை வராது-அதுதன்
வாயை மூடிக் கொண்டிருந்தால்.

**********

சின்னக் கவலைகள் என்பது கொசு போல:
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.

**********

மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு.
ஒன்று திறமையானவர்கள்.
இரண்டு,திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.

**********

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள
செலவில்லாத ஒப்பனை புன்னகை.

**********

ஆசைப்படுவது மனம்.
ஆசைப்பட வைப்பது புத்தி.
அவதிப்படுவதோ உடல்.

**********

உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் உள்ளது.

**********

இவ்வளவு நீண்ட வாழ்வில் ஒரே ஒரு முறைதான் சாகிறோம்.

**********

கோபத்தில் ஆரம்பமாவது எல்லாம்
இறுதியில் வெட்கப்படும்படி முடியும்.

**********

ஆபத்து பயத்தையும்,பயம் அதைவிடப் பெரிய ஆபத்தையும் தருகிறது.

**********
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்,தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல:மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்றுதான்.

விஜய்யை பக்காவாக மாற்றிய‌ முருகதாஸ்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய், இதுவரை தான் நடிக்காத புதிய பாணிக்கு மாற்றியிருக்கிறார்.

சமீப காலங்களாக முன்னணி நாயகர்கள் சிலர் கெட்டப் சேஞ்ச் என்று உடலை வருத்திக் கொள்வது அல்லது ஹேர் ஸ்டைல் மாற்றிக் கொண்டு தன்னை வித்தியாசப்படுத்திக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


அந்த வகையில், மங்காத்தா தொடங்கி வீரம் வரைக்கும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்து அசத்தியிருந்தார் தல அஜித்.


இதையடுத்து கௌதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில், தனக்கு சீரியல் கில்லர் கதாபாத்திரம் என்பதால் தனது தோற்றத்தையும், இதுவரை இல்லாத அளவிற்கு தனது ஹேர் ஸ்டைலையும் அதிரடியாக மாற்றி வருகிறார் அஜித்.


இவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் விஜய்யும் தனது ஹேர் ஸ்டைலை இதுவரை தான் நடிக்காத புதிய பாணிக்கு மாற்றியிருக்கிறார்.


அப்படத்தில் இரண்டு வேடம் என்பதால் அழகிய தமிழ் மகனைப் போன்று சாதாரணமாக இல்லாமல், தன்னை முற்றிலுமாக வேறுபடுத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக உடற்கட்டு மட்டுமின்றி, ஹேர் ஸ்டைலை அதிக வித்தியாசப் படுத்திக் காட்டுகிறாராம்.


முன்னதாக, பாலிவுட்டில் இருந்து ஒரு ஹேர் டிரஸ்ஸரை வரவைத்து அவர் கொடுத்த சில கருத்துக்களைக் கொண்டு விஜய்யை பக்காவாக மாற்றியிருக்கிறார் முருகதாஸ்.


தற்போது முதல் கெட்டப்பில் நடித்து வரும் விஜய், அடுத்து இன்னொரு கெட்டப்பிற்காகவும் வேறொரு பாணியில் ஹேர் ஸ்டைலை மாற்றி நடிக்கிறாராம்.

விரைவில்... குலாப் கேங் !

மாஜி கனவு கன்னி, மாதுரி தீட்ஷித், ஆக் ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் இது.


 நளினமான நடனம், கொள்ளை கொள்ளும் புன்சிரிப்பு, போன்ற காட்சிகளில் மட்டுமே, நாம் பார்த்து ரசித்த மாதுரி, இந்த படத்தில், பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆண்களை, பெண்டெடுக்கும், குலாப் கேங் தலைவியாக அதிரடி காட்டியுள்ளார்.


 உ.பி.,யில், பெண்களுக்கு எதிரான, கொடுமைகளை தட்டி கேட்பதற்காக, குலாப் கேங் என்ற, பெண்கள் அமைப்பு செயல்படுகிறது.


இந்த உண்மை கதைக்கு பாலிவுட் முலாம் பூசி, அதிரடி படமாக இயக்கியுள்ளார், இயக்குனர் சவுமிக் சென்.


 மற்றொரு மாஜி நடிகையான, ஜூகி சாவ்லாவும் இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பாலியல் குற்றம் என்பது என்ன?


கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது.


மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.


பொது மக்கள், மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சட்ட வல்லுனர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் என பல தரபட்டவர்களையும் விசாரித்து, கலந்தாலோசித்து தனக்கு கொடுக்கப்பட்ட கெடுவுக்கள் வர்மா குழு தன்னுடைய பரிந்துரையை அரசாங்கத்திற்கு வழங்கியது.


நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. பின்னர் அரசாங்கம் பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 வருடம் The Criminal Law (Amendment) Act, 2013 என்ற சட்ட வடிவத்தை பெற்றது.


மேற்சொன்ன சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே இருக்கும் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ள சில சட்ட பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் சில சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.


இந்த சட்ட திருத்தத்தால் இதுகாரும் குற்றமாக பார்க்கப்படாத சில விவகாரங்கள் குற்றமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருத்தம் செய்யப்பட்ட சில குற்றங்களுக்கு தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


சட்டத்தில் புதிதாக புகுத்தப்பட்ட சில குற்றங்கள்


திராவகம் வீசுதல்


மற்றவர்கள் மீது திராவகம் வீசினால் இ.த.ச 326 ஏ பிரிவின் படி 10 ஆண்டுகள் சிறையில் தொடங்கி ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். கூடவே 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


மற்றவர்கள் மீது திராவகம் வீச முயற்சித்தால் இ.த.ச 326 பி பிரிவின் படி 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்


பாலியல் தொந்தரவு செய்தல் (ntc forumual Harassment)- இ.த.ச 354 ஏ


    தவறான நோக்கத்தாடு ஒருவரை தீண்டுதல் மற்றும் வெளிப்படையாக வன்புணர்ச்சிக்கு அழைத்தல்


    வன்புணர்ச்சி வைத்துக்கொள்ள மற்றவரை அழைத்தல் அல்லது வேண்டுதல்


    மேற்சொன்ன குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை உறுதி


    பாலியில் ரீதியாக மற்றவர்கள் மீது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல் அல்லது குறிப்பிடுதல்


    வலுக்கட்டாயமாக ஒருவரை ஆபாச படங்களை பார்க்கச் செய்தல்


    மற்றவர்கள் மீது பாலியில் ரீதியாக தேவையற்ற செய்கைகளில், வார்த்தைகளில் ஈடுபடுதல்


3 முதல் 5 வரை குறிப்பிடப்பட்ட குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படும்.


பொது இடங்களில் பெண்களை மானபங்க படுத்தல் (ஆடைகளை களைய செய்தல் – Public Disrobing of Women)- இ.த.ச 354 பி


மேற்சொன்ன குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.


பெண்களின் அந்தரங்கத்துக்கு குந்தகம்/ பாதிப்பு / ஊறு விளைவிப்பது/ பங்கம் ஏற்படுத்துவது (Voyeurism) இ.த.ச 354 சி


ஒரு பெண் தனிமையில் இருக்கும் (பொது இடங்களில் இல்லாத போது) போது அவளுடைய அந்தரங்கங்களை பார்ப்பது அல்லது படம்பிடிப்பது குற்றமாகும்.


இதற்கு தண்டனை – முதல் முறை இந்த குற்றத்தை நிகழ்த்தினால் ஓர் ஆண்டுக்கு குறையாமல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை, கூடவே அபராதமும் விதிக்கப்படும். இரண்டாம் முறையாக மேற்சொன்ன குற்றத்தை ஒருவர் செய்தார் என்றால் அவருக்கு மூன்றாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

மொபைல் பாவனையாளர்களுக்கான பயனுள்ள ஆலோசனைகள்!

இன்று எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?

 ***

 பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.

 ***

 `புளூடூத்’ மெனு உள்ள செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். எனவே தேவையான நேரங்களில் பயன்படுத்திவிட்டு இணைப்பை துண்டிப்பது பேட்டரி சார்ஜை சேமிக்கும். புளூடூத் வழியாக வைரஸ்களும் பரவ வாய்ப்பிருப்பதால் அதை ஆப் செய்து வைத்திருப்பது செல்போனுக்கும் நல்லது.

 ***

 தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்’, `ஸ்டார்ட் அப் டோன்’ ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம். அதேபோல வைப்ரேஷன் அதிர்வு மீட்டிங் நேரத்திலும், சத்தம் நிறைந்த தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய வசதி. இதை எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருப்பது பேட்டரி சார்ஜை வீணாக்கும்.

 ***

`பவர் சேவர் லைட்’, `பேக் லைட்` ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்தும். `பேக் லைட்’ என்பது கீபோர்டின் பின்புறம் ஒளிரும் லைட் ஆகும். `டோன்’கள் உபயோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற `லைட்’கள் அவசியமில்லைதான். இரவு நேரத்தில் மட்டும் தேவைப்படுபவர்கள் `ஆன்’ செய்து பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை காக்கலாம். `டிஸ்பிளே செட்டிங்ஸ்’-இல் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.

 ***

 உபயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்’-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்’ செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும். இது செல்போனுக்கு மட்டுமல்லாது அனைத்துவிதமான எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் பொருந்தும்.

 ***

 கம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள வேடிக்கை நிறைந்த எலக்ட்ரானிக் விளையாட்டுகள் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதனால்தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் `கேம்ஸ்`களில் மூழ்கி விடுகிறார்கள். நிஜத்தில் விளையாடுவது எப்படி உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்குமோ, அதுபோலவே செல்போனில் விளையாடுவது அதிக அளவில் பேட்டரி சார்ஜை காலியாக்கி விடும். பேட்டரி நலன் கருதினால் குறைவாக விளையாடுங்கள்.

 ***

 தேவையற்ற ஆப்ஷன்களை எப்படி `ஆன்’ செய்து வைக்கக்கூடாதோ, அதுபோலவே பயன்படுத்தாத நேரங்களில் செல்போன்களையும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் செல்போன்களை அணைத்து வைப்பதே கிடையாது. அவசர உதவி எண்கள் போல எல்லா நேரத்திலும் ஆனிலேயே இருக்கிறது. இதுவும் பேட்டரி சார்ஜை வீணாக்கும் செயல் தான். குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது அணைத்து வைக்கலாமே!

 ***

 கவர்ச்சிகரமாக தோன்றுவதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்துவதை பலரும் விரும்புகிறார்கள். இவை அதிகமாக சார்ஜ் உறிஞ்சுபவை. சாதாரண படங்களை வால்பேப்பருக்கு பயன்படுத்துவதன் மூலம் அதிக சார்ஜை மிச்சப்படுத்தலாம். அதேபோல `டவர்’ குறைவாக உள்ள இடங்களில் போன்களை உபயோகித்தால் நிறைய பேட்டரி ஆற்றல் வீணாகும். அப்போது `ஆப்’ செய்து வைக்கலாம்.

 ***

நீண்ட நேரம் நிலைத்து நிற்கக்கூடிய பேட்டரிகள் கொண்ட நவீன செல்போன்கள் நிறையவே கிடைக்கின்றன. எளிதாக சார்ஜ் செய்யும் வசதிகளுடைய போன்களும், பயன்படுத்தாத, தேவையற்ற ஆப்ஷன்களை தானாக ஆப் செய்துகொள்ளும் நவீன மொபைல்களும் கூட விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே விலை குறைவாக இருக்கிறது என்று எண்ணி தரமற்ற செல்போன், பேட்டரிகளை வாங்கி விட்டு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.

சிந்திப்போம் சாதிப்போம்!


ஒவ்வொரு நாளையும் நாம் வேகவேகமாய் இயக்குகின்றோம். அல்லது இயக்கப்படுகின்றோம். அன்றைய பணிகளை செய்து முடிப்பதற்கே நேரம் போதாமல் நாளையோ, நாளை மறுநாளோ செய்துக் கொள்ளலாம் என பல பணிகளை ஒதுக்கிவைத்து விடுகிறோம்.


ஒவ்வொரு நாளின் பணிகளை செய்து முடிக்கவே நேரமில்லை எனும்போது முந்தைய நாட்களின் பணிகளும் சேர்ந்து கொண்டால் எப்படிச் செய்ய முடியும்?

தொழில்ரீதியாகவும், குடும்பரீதியாகவும் நமக்காக காத்திருக்கும் பணிகளை செய்வதற்கு தாமதமாகிக் கொண்டே போனால் இரண்டு இடத்திலும் உறவுகள் சீர் குலைந்து போகிறது.

என்னதான் சரியான காரணங்களை நாம் வைத்திருந்தாலும், எடுத்துக் கூறினாலும் அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறும்போது நம்மைச் சார்ந்தவர்கள் மற்றும் நாம் சார்ந்திருக்க வேண்டியவர்களால் நாம் குறைத்து மதிப்பிடப்படுகிறோம்.

ஒருமுறை நம்மீது விழப்படும் முத்திரையானது நாம் என்னதான் சரிப்படுத்திக் கொண்டாலும் அகலுவதில்லை. மற்றவர்கள் நினைவில் நம்மைப் பற்றிய நல்ல விஷயங்கள் தங்குவதைக் காட்டிலும், குறைகள்தான் நிலையாய் தங்கி விடுகிறது.

நாம் அதிக பணிச்சுமையால்தான் எதையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய முடியாமல் திணறுகிறோம் என்பது உண்மையாய் இருக்கலாம். ஆனால் அதற்கும் தீர்வு நம் வசமே இருக்கிறது. பணிச் சுமையைக் குறைக்கவும், பளு தெரியாமல் பணியாற்றவும் வழிகள் உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு முன் அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது எனப் பார்ப்போம்.

அதிக பணிச்சுமையானது அழுத்தத்திற்கு (ள்ற்ழ்ங்ள்ள்) வழி வகுத்துவிடுகிறது. அழுத்தம் எனப்படும் இடர்ப்பாடு அதிகமானால் அது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடுகிறது.

வெளிப்படையான உண்மையென்ன வென்றால் அழுத்தத்திற்கு ஆளாகியிருப்போர், தான் அழுத்தத்தால் (ஆஹக் ள்ற்ழ்ங்ள்ள்) பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதையே அறிவதில்லை. அதனால்தான் தனக்கு உடல்நலம் கெட்டுள்ளது என்பதையும் உணருவதில்லை.

நம்முடைய உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளது என்றால் உடனே நாம் அன்றைய தினமோ அல்லது முந்தைய தினமோ என்ன உணவு எடுத்துக்கொண்டோம்? மாசடைந்த குடிநீரை எடுத்துக்கொண்டோமா? அல்லது சுத்த மில்லாத வெளி உணவுகளை சாப்பிட்டோமா? என்றெல்லாம்தான் ஆராய்கிறோமோ தவிர அதீதமான பணிச்சுமையால் அழுத்தம் ஏற்பட்டு அதுதான் நோயை வரவழைத்துள்ளது என்பதை உணர மறுக்கிறோம்.

நாம் ஏன் அதிகமான பணிச்சுமைக்கு ஆளாகிறோம்?

அவரவர் சூழலுக்கு ஏற்றாற்போல் பல்வேறு காரணங்களை நாம் கூறலாம்.

ஆனால் பொதுவான, மிகப் பொருத்தமான காரணம் என்னவென்றால் சிந்தித்து திட்டம் வகுத்து செயல்படாததுதான் என்பதை கண்டிப்பாக ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை குறைந்தபட்சம் ஒருமுறையாவது ஆழ்ந்த சிந்தனைக்கு நேரம் ஒதுக்கவேண்டும்.

காலை விழித்தெழுந்து அரைமணிநேரம் கழிந்தபின் கண்களை மூடியபடி குறைந்தது இருபது நிமிடங்களாவது சிந்திப்பதை மட்டும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இது தியானத்திற்கோ, பிரார்த்தனைக்கோ அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். கண்கள்தான் மூடியபடி இருக்கவேண்டுமேயன்றி நம்முடைய ஆழ்மனம் முற்றிலும் விழிப்பாய் இருந்து சிந்தித்தல் வேண்டும். சற்று விளக்கமாய் சொல்வ தென்றால் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும்.

எதைப்பற்றி சிந்திப்பது?

நம் முன் உள்ள போட்டிகளை, சவால்களைப் பற்றிச் சிந்திக்கலாம்.

அவற்றை திறமையாய் எதிர்கொண்டு மேலேறுவது எப்படியென சிந்திக்கலாம்.

புதுமைகளை, புதியவைகளை அறிமுகப் படுத்துவது பற்றிச் சிந்திக்கலாம்.

இப்போதிருக்கும் வரையறைகளை தாண்டி விரிவாக்கம் செய்வது குறித்துச் சிந்திக்கலாம்.

நம்மை மேம்படுத்திக் கொள்வது, நம்முடன் அல்லது நம்மிடம் பணியாற்றுவோரை மேம்படுத்துவதுப் பற்றி சிந்திக்கலாம்.

குடும்பத்தினரின் நலன்கள் குறித்துச் சிந்திக்கலாம்.

நமக்கு முன் காத்திருக்கும் கடமைகளை வகைப்படுத்தி விரைந்து முடிப்பது தொடர்பாய் சிந்திக்கலாம்.

நீண்ட நாட்களாக தள்ளிப்போட்டுவரும் செயல்களை செய்வதற்கு கால வரையறை செய்வதைச் சிந்திக்கலாம்.

வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறை களைச் சிந்திக்கலாம்.

எதிர்காலத்திற்கான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி சிந்திக்கலாம்.

உடல்நலத்தைப் பரிசோதிப்பதற்கு நேரம் ஒதுக்கிச் செல்லவேண்டுமென்பதைச் சிந்திக்கலாம்.

வீடுகட்டுதல், மறுசீரமைத்தல், தொழில் நிறுவனத்திற்குத் தேவைப்படும் புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது, பழுது பார்ப்பது பற்றிச் சிந்திக்கலாம்.

நம் வாழ்க்கைக்கான அர்த்தத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.

வாழ்ந்த நாட்கள் பாராட்டும்படி, பேசப்படும்படி அமைந்திருக்கவில்லையெனில் வாழ்கின்ற நாட்களையும், இனி வாழும் காலத்தையுமாவது அவ்வாறு மாற்றுவது குறித்துச் சிந்திக்கலாம்.

பரவலாய் சமுதாயத்தால் நாம் அடையாளம் காணப்படுவதற்கான வழிமுறைகளையும், செயல்பாடுகளையும் சிந்திக்கலாம்.

நட்புவட்டத்தையும், உறவுகளையும் வலுப் படுத்திக் கொள்வது குறித்துச் சிந்திக்கலாம்.

வந்திருக்கும் அழைப்புகளுக்கு ஏற்ப நாம் கண்டிப்பாக செல்லவேண்டிய நிகழ்வுகளை வகைப்படுத்துவதைச் சிந்திக்கலாம்.

அவரவர் சூழலுக்கு ஏற்றவாறு அன்றாடப் பொறுப்புகளை செம்மையாய் நிறைவேற்றுவது பற்றிச் சிந்திக்கலாம்.

சரி. எல்லாவற்றையும் ஒரே நாளில், ஒரே நேரத்திலா சிந்திக்க வேண்டும்?

அப்படிச் செய்ய வேண்டியதில்லை.

அது சாத்தியமுமில்லை.

ஒவ்வொரு நாளும் சிந்தனைக்கென நேரம் ஒதுக்கி சிந்திக்கத் தொடங்கினாலே தானாய் முன்னுரிமைப்படுத்தும் வழிகள் கிடைத்துவிடும். நாம் செய்யவேண்டியதெல்லாம் சிந்திப்பதை ஒரு நாளின் முதன்மைப்பணியாய் வைத்துக் கொள்வது தான்.

நம்மை ஒருமுகப்படுத்தி சிந்திக்க உட்காருவதே மிகப்பெரும் செயல்தான். ஏனெனில் ஒன்றைப்பற்றி சிந்திக்கும் போதே உடனே செய்ய வேண்டிய வேலைகள் நினைவுக்கு வந்து சிந்திப்பதிலிருந்தேகூட எழுந்துவிட நேரலாம்.

அவ்வாறு செய்வதிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் மாற்றத்தை கொண்டுவருதல் வேண்டும்.

சிந்திப்பதற்கான நேரம் என்பது வெறும் அன்றையப் பணிகளுக்கானது மட்டுமல்ல என்பதில் தெளிவு இருத்தல் அவசியமாகும்.

சிந்திக்க நேரம் ஒதுக்குதலானது தலைமைப் பண்பின் வெற்றிபெறும் தந்திரங்களில் ஒன்றாகும்.

எங்களின் மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளின் போது பங்கேற்பாளர்கள் அவர்களின் பணிச்சுமையால் அழுத்தம் ஏற்பட்டு மிகச் சலிப்பாய் எங்களிடம் பல்வேறு விஷயங்களைச் சொல்வதுண்டு.

“விழித்திருக்கும் நேரம் முழுவதையுமே பணிச்சுமை ஆக்கிரமித்துக் கொள்கிறது.”

“எப்போதும் ஓட்டமும் நடையுமுமாகவே உள்ளது வாழ்க்கை”.

“எதற்காக ஓடுகிறோம் என்பதையே அனுபவிக்க முடியாமல் ஓட வேண்டி உள்ளது.”

மேற்கண்டவை உள்ளிட்ட இன்னும் பல்வேறு விமர்சனங்களை வைப்பார்கள்.

இதற்கெல்லாம் தீர்வு பல் தேய்ப்பது, குளிப்பது எப்படி அன்றாடத்தின் அவசியப் பணிகளோ அதே போல் நேரம் ஒதுக்கிக் கொண்டு சிந்திப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

சிந்தனை தெளிவை ஏற்படுத்துகிறது.

தெளிவுதான் வெற்றிக்கான பாதையை அமைக்கிறது.

ஆழ்ந்து சிந்திப்பது நம் பணிகளை வகைப்படுத்த உதவுகிறது. எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதற்கு பதில்கள் கிடைக்கிறது. செயல்களில் நேர்த்தியை அமைத்துத் தருகிறது.

தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமும் சரியான முடிவெடுக்கும் திறனும் வசப்படுகிறது. நம் பணிச்சுமைகளை, பளுவைக் குறைத்து சுலபமாக்கி விடுகிறது.

சிந்தித்துச் செயல்பட்டால் சுடர்விட்டு பிரகாசிப்போம். சிந்திப்போமா !

இராகம் !


இராகம் என்பது இந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று பலர் கூறுகின்றனர்.


 இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்.


"இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகனத்தில்) கீழே செல்லும்போதும் (அவரோகனத்தில்) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.


ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம்.


ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு.


எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும்.


கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு

மதுரை பெயர்க்காரணம் வரலாறு!

மதுரை பெயர்க்காரணம் வரலாறு

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும்.

"மதுரை"

இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில..

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.

பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்புறங்களில் குலதெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகும்.

குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.

காலையில் மூன்று வகையான உணவுகள்!

காலையில் மூன்று வகையான உணவுகள்

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பது முதல் விதி. இரண்டாவது விதி அது சரியான உணவாக இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் அபாரமாக இருக்குமாம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சத்துணவு நிபுணர்கள் 18 வயதுக்கு உட்பட்ட 800 மாணவ, மாணவிகளின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தனர். மூளை சிறப்பாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள் உற்சாகமாகப் பாடங்களில் உள்ள பெரிய பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க வேண்டும். கல்வி கற்பதில் எரிச்சல் வந்துவிடக்கூடாது. இதற்கு எளிய வழி காலையில் முழுத்தானியம் + பழம் அல்லது காய்கறி + பால் சம்பந்தப்பட்ட உணவு என இந்த மூன்றும் இடம் பெற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் மூளை ஆற்றலுடன் நாள் முழுவதும் செயல்படுவார்கள் என்பதைக் கண்டுபிடித்து, பரிசோதித்தும் வெற்றியும் பெற்றனர், ஆஸ்திரேலிய சத்துணவு நிபுணர்கள்.

சரி, உணவுகள்?

1. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது

2. தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது

3. கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள்

என்று எளிமையாக இருந்தால் போதும். பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் வைட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்யவும். ஏனென்றால், வைட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கும் ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் வைட்டமின் சி தாராளமாக இருக்கிறது.

இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் கிடைக்கும் மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் வைட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.

பழத்துண்டுகளைக் காலை உணவின் போது இறுதியில் சாப்பிடுவது என்றால் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச் சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது.

காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம்.

பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம். அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம்.

சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

அடுத்தடுத்து பணிகளை சுறுசுறுப்பாகச் செய்யவும், மூளையும் மனமும் துடிப்புடன் விளங்கவும் காலை உணவை சரியான உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவதே நல்லது.

பயனுள்ள சமையல் குறிப்புக்கள்!

பயனுள்ள சமையல் குறிப்புக்கள் ;

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

காய்கறிகளை வேகவைக்கும் போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்."

அம்மா திரையரங்கம் - முதல்வர்!

தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். அவருடைய இந்த திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.


இந்நிலையில் சினிமா ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று வெளியாகி உள்ளது. அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.


அத்தியாசவசியப் பொருட்களை மலிவு விலையில் கொடுத்த தமிழக அரசு, மக்களின் பொழுதுபோக்கு ஊடகமான திரையரங்குகளையும் அரசே அமைத்து, குறைந்த கட்டணங்களில் படங்களைத் திரையிட உள்ளதாம். மேலும் இந்த திரையரங்கங்களில் சிறுமுதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஊர் ஊராக சுற்றி வரும் உலகநாயகன் !!

நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும் படம் உத்தம வில்லன் இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியாவிலுள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் நடக்கிறதாம் இதற்காக அந்தந்த ஊர்களுக்கு சென்று லொகேஷன் பார்த்து வருகிறார் கமல்ஹாசன்.


 அவருடன் ரமேஷ் அரவிந்த் மற்றும் படக்குழுவினர் சென்று வருகின்றனர்.


பீகார், டெல்லி நகரங்களுக்கு சென்றவர்கள், சமீபத்தில் மத்திய பிரதேசத்துக்கு சென்று வந்தனர். இந்த படத்தில் மூன்று மகள்களுக்கு அப்பாவாக கமல் நடிக்கிறார்.


 இதில் ஒரு மகளின் வேடத்தில் நடிக்கத்தான் ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் கால்ஷீட் இல்லை என நடிக்க மறுத்துவிட்டார். படத்தில் 3 ஹீரோயின்கள் கேரக்டர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.


கமலுடன் முதல்முறையாக சந்தானம் இதில் நடிக்கிறார். இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜாதான் முதலில் இசையமைக்க இருந்தார்.


இதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமன் அல்லது அனிரூத் இசையமைப்பார்கள் என கூறப்படுகிறது 

கார்த்திக் படத்திற்கு புது டைட்டில் ! காளியும் இல்லையாம், கபாலியும் இல்லையாம்!

அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க நடிப்பு முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார் கார்த்தி.

இந்த படத்துக்கு முதலில் காளி என பெயர் சூட்டப்பட்டது. பிறகு கபாலி என மாற்றினார்கள். இப்போது வேறு பெயர் வைக்க யோசித்து வருகிறார்கள்.


இதில் கார்த்தி ஜோடியாக கேத்ரின் தெரஸா நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன் நடிப்பு பயிற்சி முகாம் வைக்கலாம் என டைரக்டர் ரஞ்சித் சொல்லிவிட்டாராம். கடந்த சில வாரங்களாக இந்த முகாமில் துணை நடிகர்களுடன் கார்த்தியும் பங்கேற்று வருகிறார்.


இது பற்றி கார்த்தி கூறியது: படப்பிடிப்பு தொடங்கும் முன் இதுபோல் பயிற்சி முகாம் வைத்தால் அது நமக்கு தான் நல்லது. கேரக்டரை நன்றாக புரிந்துகொள்ள முடியும்.


இந்த கேரக்டர் எப்படி டயலாக் டெலிவரி செய்யும், பாடிலாங்குவேஜ் எப்படி காட்டும் என்பதை அறிய முடியும். வடசென்னையில் குப்பத்து ஏரியாவில் வசிக்கும் இளைஞன் வேடம். என்னுடன் இளைஞர்கள் சிலர் நடிக்கிறார்கள். அவர்களும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற¢றார்கள்.


இந்த முகாம் செம ஜாலியாகவும் அதே சமயம் எனக்கு அதிக பயனுள்ளதாகவும் அமைந்தது. இதனால் ஷூட்டிங்கில் ரீடேக் வாங்குவதை தவிர்கலாம். அதுமட்டும் அல்லாமல் படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடிக்கலாம்

மடிக்கணினிகளில் ஏற்படும் வெப்பத்தை இப்படி குறைக்கலாம்!

மடிக்கணினிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது. மடிக்கணினியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.

சில இடங்களில் மடிக்கணினிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. Dell, Sony, Acer போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணினிகளில் உள்ள battery அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால் அவற்றை வாங்கிக் கொண்டு புதிய battery-களைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

மோசமான battery-களைத் தவிர்த்து மடிக்கணினிகள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.

Desktop கணினிகளைக் காட்டிலும் மடிக்கணினிகள் இடம் மிகக் குறைவு. இதனால் அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால் இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.

அடுத்த பிரச்னை இயக்க திறன். மடிக்கணினிகளில் அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் இயங்குதளங்களும் அவை வேகமாக இயங்க இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.

மடிக்கணினிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான் வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால் வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக மடிக்கணணியில் வன்தட்டில் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும் அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால் பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

விசிறிகள் சோதனை: மடிக்கணினியில் வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால் உடனே திறந்து இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.

காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

BIOS சோதனை: நம் BIOS settings மாற்றி அமைப்பதன் மூலம் வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு உங்கள் மடிக்கணணி தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள் இந்த BIOS அமைப்பினையும் update செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.


பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால் வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம்.


வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து மடிக்கணினியை இயக்கக்கூடாது. அதே போல மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே கணினியை வைத்திருக்கக்கூடாது.

இதை மடிக்கணினி என அழைத்தாலும் நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால் வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

மடிக்கணினியில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும்.

மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால் வெப்பமானது கணினியின் மற்ற பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்

மற்றொரு உண்மைச் சம்பவம் படமாகிறது...!

கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு”.

இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார்.

மற்றும் ஷண்முகராஜன், ஆடுகளம் நரேன்,நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் சி.ராஜசேகர். படத்திற்கு எஸ்.வி.ஜி இசையமைக்கிறார்.


படம்பற்றி இயக்குனர்……

மலையூர் மம்பட்டியான்,சீவலப்பேரி பாண்டி,போன்ற வட்டார மக்களிடம் பேரும், புகழும் பெற்ற நிஜ ஹீரோக்களின் வரிசையில் வீரன் முத்துராக்குவும் ஒருவன். சிவகங்கை மாவட்டத்தில் ஆவாரங்காடு பகுதியில் வாழ்ந்த ஒருவனின் கதையை அடிப்படையாக வைத்து கொஞ்சம் காதலை கலந்தேன். கதாநாயகனின் சிலம்பாட்ட கலையை சேர்த்து காதல் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்.


அச்சன்குளம் – ஆலங்குளம் என்ற இரண்டு கிராமத்து மக்களிடையே உள்ள ஆக்ரோஷமான கோபம் எப்படிப்பட்டது என்பது தான் “வீரன்முத்துராக்கு”. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்து என்கிறார் இயக்குனர் சி.ராஜசேகர்.

கஸ்தூரிராஜா இயக்கும் ஒயிலா ! ஒரு பார்வை!

மனுநீதி, காசு இருக்கணும்,எங்க ராசி நல்ல ராசி உட்பட பல படங்களை தயாரித்த ஜி.ஆரின் ஜி.ஆர் கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து இரண்டு படங்களை தயாரிக்க உள்ளன.


இதில் ஒரு படத்தை கஸ்தூரிராஜாவும் மற்றொரு படத்தை ரவிராஜாவும் இயக்குகிறார்கள். கஸ்தூரிராஜா இயக்கும் படத்திற்கு ஒயிலா என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாயகன், நாயகி முற்றிலும் புதுமுகம். முக்கிய கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஆர் நடிக்கிறார். ஜி.ஆர் ஏற்கெனவே, கஸ்தூரிராஜாவின் காசு பணம் துட்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.


இவைதவிர, மற்றொரு படமான ரவிராஜா இயக்கும் படத்திற்கு ஓ.கே.ஓ.கே என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில் கிஷோர் – ஹார்திகா, ஜி.ஆர் ஆகியோருடன் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். ரவிராஜா, தமிழில் பல படங்களை இயக்கி இருக்கிறார்.


இவ்விரு படங்களும் தமிழ் மட்டுமின்றி கன்னடத்திலும் தயாராக உள்ளன. ஜி.ஆர் தயாரிப்பில் ரவிராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர்சாஸ்திரி அங்கே அமோக வெற்றிபெற்றதையடுத்து ஜி.ஆருக்கு கர்நாடகாவில் நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருகிறது.

அட்டகாசமான ஆந்திரா மெஸ்..!

பாலிவுட்டில் பல விளம்பர படங்களை தயாரித்த ஷோ போட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’ . கலை ஓவியர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் முதன் முறையாக நடித்திருக்கிறார். ஜெய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இவர், பல்வேறு விளம்பர நிறுவனங்களில் பணியாற்றிய விளம்பரப் பட இயக்குனர். பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத்திடம் உதவியாளராக இருந்த முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். “சைத்தான், டேவிட்” ஆகிய ஹிந்திப் படங்களுக்கும், ‘ஆமென்’ மலையாளத் திரைப்படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஜெய் கூறியதாவது,

“இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவைக் கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவுக்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன்.

இது முழுக்க முழுக்க எப்படி ஒரு கதையைச் சொல்லி கேட்பவர்களுக்கு சுவைபட சொல்வார்களோ அப்படிப்பட்ட ஒரு முயற்சி. இந்த படத்தில் வரும் இடங்கள் புதிதானவை, உடைகள் புதிதானவை, சம்பவங்கள, கதாபாத்திரங்கள் புதிதானவர்கள். ஆனால், இவர்களின் வாழ்வு நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.

இந்த மாறுபட்ட முயற்சி படத்தின் உருவாக்கத்திலும் பிரதிபலிக்கும்.

‘ஸ்நூக்கர்’ விளையாட்டு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த விளையாட்டில் எப்படி மேஜையில் உள்ள ஒரு பந்தினை குறி வைத்து தள்ளும் போது, அது வேறொரு பந்தை மோதி, அது சம்பந்தமே இல்லாத மற்றொரு பந்தை இடித்து, அதன் மூலம் வேறு ஒரு பந்து பள்ளத்தில் சென்று விழுகிறதோ அதைப் போலவே, ‘ஆந்திரா மெஸ்’ கதை சொல்லும் முறையும் இருக்கும் என்றார்.

பல விளம்பரப் படங்களைத் தயாரித்து வரும் ஷோ போட் ஸ்டுடியோஸ் நிறுவனம் முதன் முறையாக திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. திரைப்படத்துறை சக்தி வாய்ந்த ஊடகத்துறை என்பதால் தொடர்ந்து நல்ல கதைகளையும், சமூகத்தை பிரதிபலிக்கக் கூடிய படங்களையும் எடுக்க முடிவு செய்துள்ளது. அதோடு, வினியோகத் துறையிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் திரைப்படங்களைக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' !

வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

'அடிமைப்பெண்' படத்துக்காக, 'அம்மா என்றால் அன்பு' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

'வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

'ரொம்ப சந்தோஷம்' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

'அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது' என்றேன்.

'எப்படி? எப்படி?' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

`அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

`என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

- இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, 'வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்' என்றார்.

'அம்மா என்றால் அன்பு' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, 'அடிமைப்பெண்' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.'

இவ்வாறு வாலி கூறினார்.

ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

'என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?' என்று கேட்டார், வாலி.

'நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

'என்ன சந்தோஷ சமாசாரம்?' என்று வாலி கேட்டார்.

'நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!' என்று கூறிய எம்.ஜி.ஆர்., 'உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை' என்றார்.

கண் கலங்கி விட்டார், வாலி.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, 'கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?' என்ற கேள்வி எழுந்தது.

கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

'உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

'நினைத்தேன் வந்தாய், நூறு வயது!' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...' என்று 'எங்க வீட்டு பிள்ளை'யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

'அன்னமிட்ட கை' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.'

- இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

'அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது' என்றார்.

அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., 'என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை' என்றார்.

எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

'எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது' என்று கூறினார்.

மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.