Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 19 February 2014

டாக்டர் எம்.ஜி.ஆரின் முக்கிய திரை உலக குறிப்புகள்!

டாக்டர் எம்.ஜி.ஆரின் முக்கிய திரை உலக குறிப்புகள்

திரு.எம்.ஜி.ஆர்.இயக்கிய படங்கள்

1) நாடோடி மன்னன்,
2) உலகம் சுற்றும் வாலிபன்,
3) மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்


திரு.எம்.ஜி.ஆர். நடித்த இரட்டை வேடங்கள் 17 படங்கள்


அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்

செல்வி ஜெ.ஜெயலலிதா-28 படங்கள்,
திருமதி. சரோஜாதேவி - 26 படங்கள்


அதிகப்படங்கள் இயக்கியவர்

திரு. ப. நீலகண்டன்-17 படங்கள்,
திரு. எம்.ஏ. திருமுகம்-16 படங்கள்.

அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ்-16 படங்கள்


அதிக படங்கள் இசை அமைத்தவர்

திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்-49 படங்கள்,
திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்


அதிக பாடல்கள் பாடியவர்கள் திரு. டி.எம். சௌந்தரராஜன்,திருமதி. பி. சுசீலா.


100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிகண்டவை 86 படங்கள்

வெள்ளி விழா கண்டவை 12 படங்கள்

வண்ணப் படங்கள் (கலர்) 40 படங்கள்

300 நாட்களுக்கு மேல் ஓடியது என் தங்கைஉலகம் சுற்றும் வாலிபன்.

தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருதுபெற்ற முதல் தமிழ் படம் மலைக்கள்ளன்

தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்

தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை60 படங்கள்

இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை 9 படங்கள் 

அஜீத்துக்கு வேறு ஹீரோயின் - அனுஷ்கா அஜீத்தைவிட முதிர்ச்சியாகத் தெரிகிறாராம்.!


கவுதம் மேனன் படத்தில் அஜீத்தும் அனுஷ்காவும் முதல் முறையாக ஜோடி சேரப் போவதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, 'இருங்க... அவசரப்பட வேணாம்.. அஜீத்துக்கு வேறு ஜோடி தேடிக்கிட்டிருக்கோம்," என்று அதே யூனிட்டிலிருந்து அவசரக் குரல் கேட்கிறது.


மார்ச் மூன்றாம் வாரத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. ஆனால் அதற்குள் அனுஷ்காவால் வரமுடியுமா என்று தெரியவில்லை. காரணம் அவர் ருத்ரமா தேவி, பாஹூபலி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.


இரண்டுமே சரித்திரப் படங்கள். நல்ல சம்பளம் வேறு. அன்லிமிடட் கால்ஷீட்டை அள்ளி வழங்கியிருக்கிறார் இரு படங்களுக்கும். 'ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களின் சண்டைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதால் அனுஷ்கா இன்னும் கொஞ்சம்


ஆனால், ஹீரோயின் அஜித்தை விட படத்தில் கொஞ்சம் இளமையாகத் தெரிய வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார் இயக்குநர் (அஜீத் இந்தப் படத்தில் டை வேறு அடிக்கிறார்... !). இத்தனை சிக்கல் இருப்பதால் அனுஷ்கா இப்படத்தில் நடிப்பாரா?


என்ற கேள்விக்குறி எழுந்துவிட்டது. 'வீரம்' படத்தில் அஜித்துடன் நடிக்க அனுஷ்காவைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தனர். கால்ஷீட் பிரச்னையால் அனுஷ்கா நடிக்க முடியவில்லை. இப்போதும் அதே சிக்கல். எதற்கும் இருக்கட்டுமே என இன்னொரு ஹீரோயினைத் தேடி வருகிறார்கள்.

தனுஷுடன் + அமலாபால் + வெற்றிமாறன் !

தேசிய விருது பெற்ற தனுஷ் - வெற்றிமாறன் வெற்றிக் கூட்டணியில் மூன்றாவது படம் உருவாகவிருக்கிறது.'பொல்லாதவன்', 'ஆடுகளம்' என்று தனுஷை வைத்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தவர் வெற்றிமாறன்.


ஆடுகளம்' படத்துக்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது. திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன.


'ஆடுகளம்' படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து 'வடசென்னை' படத்தை இயக்குவதாகக் கூறினார் வெற்றிமாறன்.ஆனால், சில காரணங்களால் அப்படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது.


இந்நிலையில் மூன்றாவது முறையாக தனுஷுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் வெற்றிமாறன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை மீகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.


ஏற்கனவே 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷுடன் அமலாபால் நடித்திருக்கிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் தனுஷுடன் நடிக்கிறார்.


மிகப் பெரிய மலை உச்சிகளில் இருக்கும் தேனை சேகரிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. தனுஷ் ஆபத்தான மலைப்பகுதிகளில், உயிரைப் பணயம் வைத்து தேன் எடுக்கும் ரிஸ்க்கான கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார்.

தடை செய்யப் பட்ட இணையத்தளங்களை எவ்வாறு பார்வை இடலாம்?

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது.


ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்க முடியாது.


அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.


டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா? டிவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர்.


சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.


இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.

விஜய் - அஜித் படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத்!

இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளரான அனிருத், கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் துவங்கவுள்ளன. இயக்குனர் மணி ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்.


சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துவருவதால், தல படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமானே இசையமைக்கலாம் என்று கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்பொழுது அனிருத் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


அதே சமயம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துவரும் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைத்துவருகிறார். மேலும் விஜய் படமும், அஜித் படமும் வருகிற தீபாவளிக்கு வெளியாகலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களின் படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத்.

விஜய் படத்தின் டைட்டில் - “தீரன்” Hot News...

துப்பாக்கி படத்தின் வெற்றிக் கூட்டணியான இளைய தளபதி விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிவரும் புதிய படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்துவருகிறது.


 இதனால் இப்படத்தின் டைட்டில் குறித்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதே சமயம் இப்படத்திற்குப் பரிசீலிக்கப்பட்டுவரும் தலைப்புகளைக் குறித்த செய்திகள் பரபரப்பூட்டிவருகின்றன.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்திற்கு “வாள்” என்ற தலைப்பு பரிசீலனையில் இருந்துவருவதாகக் கூறப்பட்டது. தற்பொழுது “தீரன்” என்ற
தலைப்பு பரிசீலிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் உறுதியான டைட்டிலை அறிய ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.


ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றிவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சமந்தா ஹீரோயினாக நடித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்கத்தாவில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் பின்னர் சென்னை விமான நிலையத்திலும் படமாக்கப்பட்டன. வருகிற தீபாவளி ரிலீசாக இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீட்சா இயக்குனரின் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி!

ரம்மி படத்திற்குப் பிறகு கௌரவத் தோற்றத்தில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த விஜய் சேதுபதி மீண்டும் கௌரவ வேடத்தில்
நடிக்கவுள்ளார்.


தனது திரைப்பயணத்தில் பீட்சா படத்தின் மூலம் மாபெரும் மைல்கல்லை நிறுவிய இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் ஜிகர்தண்டா படத்தில் கௌரவ வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் லக்‌ஷ்மிமேனன் இணைந்து நடித்துவரும் திரைப்படம் ஜிகர்தண்டா. குரூப்ஸ் கம்பெனி மற்றும் ஸ்ரீ மீனாட்சி கிரியேசன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


தற்பொழுது விஜய் சேதுபதியும் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளதால் இப்படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறிவருகிறது.


சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு நடிகராகவே ( விஜய் சேதுபதியாகவே) தோன்றவுள்ளதாகவும், சித்தார்த் விஜய் சேதுபதியை இயக்குவது போன்ற காட்சி படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - எக்ஸ்க்ளுசிவ் தகவல்!

டில்லி பெல்லியின் ரீமேக்கான சேட்டை படத்துக்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. விமல், ப்ரியா ஆனந்த், சூரி நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் இன்று (பிப்ரவரி 19) காலை ஏவிஎம் பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.


24ந் தேதி முதல் ஒரு வாரம் பின்னி மில்லில் ஷூட்டிங் நடக்கிறது. அதன் பிறகு ஒரு மாதம் தொடர்ச்சியாக தூத்துக்குடி பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது.


விமல், சூரி காமெடி காமினேஷன், விமல், ப்ரியா ஆனந்த் ரொமான்ஸ் ஆகியவை படத்தின் முக்கிய பகுதி. நண்பர்கள் இருவரும் ஒரு இடத்தை பிடிக்க ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் எப்படி காய் நகர்த்துகிறார்கள் என்பதை காமெடியாக காட்டப்போகிற படம்.


ஆர்.கண்ணன் ஒரு சொந்த கதையை படமாக எடுத்தால் ஒரு ரீமேக் படம் செய்வார். ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் ஆகியவை சொந்த கதை. கண்டேன் காதலை, சேட்டை ரீமேக் படங்கள். இப்போது மீண்டும் சொந்த கதையை படமாக்குகிறார்.


குளோபல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பனின் மகன் எம்.செராஃபின் சேவியர்தான் தயாரிப்பாளர். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் டைரக்டர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துக் கொடுக்கிறார். இமான் இசை அமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

இளையராஜா சொன்னதை மறந்த நடிகர்!

வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரிக்கூட்டம் உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் அப்புக்குட்டி. அந்த வகையில் அப்புக்குட்டியை சினிமாவுக்கு அறிமுகம் செய்த சுசீந்திரன், தான் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் அவரை குதிரைக்காரன் வேடத்தில் நடிக்க வைத்தார். கதைப்படி அது கதாநாயகன் வேடம் என்பதால் ஒரே படத்தில் ஓகோவென்று பேசப்பட்டார் அப்புக்குட்டி.


மேலும், அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தபோது, அப்புக்குட்டியைப்பார்த்து, இந்த கதைக்குத்தான் நீ நாயகன். உனக்கு பொருத்தமான கதை என்பதால் உன்னை கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், இதையே மனதில் கொண்டு தொடர்ந்து நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் எனறு அடம் பிடிக்கக்கூடாது என்று அப்புக்குட்டிக்கு அன்பாக அட்வைஸ் செய்தார் இளையராஜா.


ஆனால், அப்போது அதற்கு தலையை ஆட்டிய அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை ஓரளவு பேசப்பட்டதால் தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகளாக தேடினார். அந்த சமயம்தான் மன்னாரு என்றொரு படம் கிடைத்தது. ஆனால் அது சொதப்பிய பிறகு இப்போது இனி ஹீரோ வேசமே வேண்டாம் என்று முடிவுக்கு வந்துள்ளார். குறிப்பாக குள்ளநரிக்கூட்டம் படத்தை இயக்கிய பாலாஜி இயக்கும் புதிய படத்தில் முழுநீள காமெடியனாக நடித்து வருகிறார்.


இந்த சமயத்தில் பழைய கதைகளை அசைபோடும் அப்புக்குட்டி, அன்றைக்கே இளையராஜா, ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காதே என்று சொன்னார். நான்தான் கேட்கவில்லை. அதனால் ஹீரோ வேசத்துக்காக பல வருடங்களை வீணடித்து விட்டேன். அப்போதே காமெடியனாக மாறியிருந்தால் இப்போது மார்க்கெட்டில் எனக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும் என்று பீல் பண்ணிக்கொண்டிருப்பவர், மூத்தோர் சொல் கேள் என்பது இப்போதுதான் எனக்கு உரைத்திருக்கிறது என்கிறார்.

ஜீவா - நடிகர் to இயக்குனர் பதவி உயர்வு!

சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமே இல்லாமல், முன்னதாக நடிப்பு, டைரக்ஷன் என தொழில்நுட்பம் குறித்த பல விசயங்களை படித்த பின்னரே சிலர், நடிகர்களாக என்ட்ரி கொடுக்கிறார்கள்.


நடிப்பு தவிர இதர விசயங்களையும் தெரிந்து கொண்டால் அது நடிப்புக்கு பெரிய உதவியாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள். அதோடு, எதிர்காலத்தில் தேவைப்படுகிறபோதும் இயக்குனர் அவதாரமும் எடுக்கலாம் என்ற நோக்கம் இதற்குள் அடங்கியிருக்கிறது.


அந்த வகையில், பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு மணிரத்னத்திடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் சித்தார்த். அதேப்போல் விஷால் நடிக்க வருவதற்கு முன்பு டைரக்டராக வேண்டும் என்றுதான் அர்ஜூன் இயக்கிய ஏழுமலை உள்பட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தார். மேலும், கும்கி படத்தில அறிமுகமான விக்ரம் பிரபு வெளிநாட்டில் டைரக்ஷன் படித்தவர்.


இந்த நிலையில், இதுவரை டைரக்ஷன் துறைக்குள் வராமல் இருந்த ஜீவாவும் இப்போது யான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு மொராக்கோவில் நடைபெற்றபோது உதவி இயக்குனர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், தானே பேடு, டயலாக் பேப்பரை கையில் எடுத்தவர், சிலருக்கு டயலாக்கூட சொல்லிக்கொடுத்தாராம்.


மற்ற உதவி இயக்குனர்களுக்கு இணையாக அத்தனை வேலைகளையும் அவர் செய்ததை யான் யூனிட்டே ஆச்சர்யமாக சொல்லிக்கொண்டிருக்கிறது

மோகன்லாலுக்கு அறிவுரைக் கூறிய கமல்!

மலையாள படங்களில் மட்டும் அதிகமாக நடிப்பதால் தான் நடிக்கும் கதை விசயத்திலும், உடல் எடை விசயத்திலும் அதிக கவலை கொள்ளாமல் இருந்தார் மோகன்லால். அதோடு, உடல் எடையை கதைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளவதில்லை. அதனால் படத்துக்குப்படம் மோகன்லாலின் உடல் பெருத்து எடை அதிகரித்துக்கொண்டே வந்தது.


இந்நிலையில், சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட கமலுக்கு வாழ்த்து சொல்ல சந்தித்தவர், அவர் உடம்பை இளவட்டமாக பராமரித்து வைத்திருப்பதைப்பார்த்து அசந்து விட்டாராம். எனக்கு வயிற்றிலும், முகத்திலும் சதை தொங்குகிறது. ஆனால் நீங்கள் அப்படி எதுவும் இல்லாமல் யூத்தாகவே இருக்கிறீர்களே எப்படி என்று வியப்புடன் கேட்டாராம்.


மேலும், தற்போது எனக்கு வயது 53, ஆனால் உங்களுக்கு 59. அனால் நீங்கள்தான் தம்பி மாதிரியும், நான் அண்ணன் மாதிரியும் இருக்கிறேனே. அதனால் நானும் உங்களை மாதிரி இளமையாக வேண்டும் என்று சொன்ன மோகன்லால், கமலிடம் இளமையின் ரகசியம் பற்றி கேட்டாராம். அதையடுத்து அவர் சொன்ன அட்வைஸ்படி இப்போது உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று தீவிரப்படுத்தியுள்ளாராம் மோகன்லால்.


அதோடு கேரளாவில் உள்ள பெரிங்கோடு என்ற இடத்துக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துள்ளாராம். அதையடுத்து ஒரே மாதத்தில் 7 கிலோ எடை குறைந்து விட்டாராம். இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில், தனது புதிய போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மோகன்லால்.

சிவகார்த்திகேயன் - தனுஷ் ... அப்படி என்ன உறவுதான் இவர்களுக்குள்!

தனுஷ் மார்க்கெட்டில் இருக்கும்போதே அடுத்த தனுஷ் நான்தான் என்று ஒரே மேடையில் தனுஷ் முன்னிலையிலேயே மார்தட்டினார் சிவகார்த்திகேயன்.


அதைப்பார்த்து ஆடிப்போனார் தனுஷ். அடுத்து அவர் மைக் முன்பு பேசவந்தபோது, என் இடத்தையெல்லாம் இப்போதைக்கு யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் அதைப்பற்றி யோசிக்கலாம் என்று சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுத்தார்.


ஆனபோதும், சிவகார்த்திகேயனை அந்த இடத்தில் விட்டுக்கொடுக்கவில்லை தனுஷ், என் தம்பி, தம்பி என்று வார்த்தைக்கு வார்த்தை சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து தான் தயாரிக்கும் படங்களிலும் அவரை நடிக்க வைத்து வளர்த்து விட்டு வருகிறார்.


இதனால் சிம்பு எப்படி தான் அஜீத்தின் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு வருவதோடு, அவரது அடுத்து வாரிசு நான்தான் என்று கூறிக்கெணர்டு வருகிறாரோ, அதேபோல், தனுஷின் இதயத்தில் தனக்கு தனி இடம் உள்ளது என்பதால் சிவகார்த்திகேயனும் தனுஷின் அடுத்த வாரிசு நான்தான் என்று கம்பீரமாக சொல்கிறார். அதோடு, மற்றவர்களெல்லாம் எப்படியோ, ஆனால் தனுஷை பொறுத்தமட்டில் எனது ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்.


நான் செய்கிற நிறைகுறைகளை நேரடியாக சொல்லி எனக்கு நல்லதொரு நடிப்பு ஆசானாகவும் இருந்து வருகிறார் என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

அலுவலகம் செல்வோர் அவசியம் படிக்கவும்!

நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள் தருவது நல்லதென்று கருதுகிறேன்.

காலை உணவைத் தவிர்க்காதீர்!

பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, தேநீர்  குறையுங்கள்!

காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்

வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

விஜயை வளைத்துப்போட திட்டம் தீட்டும் - உதயநிதி!

பிரபல தயாரிப்பாளரும், வளர்ந்துவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இளையதளபதி விஜய் நடிக்கும் படத்தினைத் தயாரிக்க விருப்பம்
தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம் வெளியான இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் பிரபல ஹீரோக்களை வைத்துப் படம் தயாரிக்க முடிவெடுத்தால் முதலில் எந்த ஹீரோ நடிக்கும் படங்களைத் தயாரிப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் விஜய், சூர்யா, அஜித், சிம்பு மற்றும் தனுஷ் என்று கூறியுள்ளார்.


இளையதளபதி விஜயின் ரசிகரான உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே தரணி இயக்கத்தில் விஜய் நடித்த குருவி திரைப்படத்தினைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான இது கதிர்வேலன் காதல் திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது.


உதயநிதி நடிப்பில் உருவாகவுள்ள மூன்றாவது திரைப்படமான நண்பேன்டா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று துவங்கவுள்ளன.

குக்கூ - படத்தின் இசை தூள்பறக்கிறது!

ராஜா ராணி திரைப்படத்தைத் தயாரித்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ மற்றும் தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படமான குக்கூ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகியது.


இயக்குனர் லிங்குசாமியின் இயக்கிய பீமா மற்றும் பையா ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் மாற்றுத் திறனாளிகளுக்கிடையேயான அழகான காதல் கதையினை மையப்படுத்து உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் ட்ரெய்லரில் வரும் ”நல்லா இருக்கிற ஆம்பள எங்க வேணாலும் இருக்கறான், மனசு இருக்கிற ஆம்பள எல்லா எடத்திலயுமா இருக்கறான்?” என்ற வசனம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.


அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மாளவிகா இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே மக்களிடம் பிரபலமடைந்திருப்பதைப் போலவே, இப்படத்தின் ட்ரெய்லரும் அழகான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

கமல்ஹாசனின் மருதநாயகம் - விரைவில் திரைக்கு வரும்! நம்பிக்கைப் பிறந்தது!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் குக்கூ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உலக நாயகன் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தை தயாரிக்க ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் எண்ணற்ற வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு எங்கேயும் எப்போதும் திரைப்படத்தினைத் தயாரித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தது. அதைத் தொடர்ந்து வத்திக்குச்சி , ராஜா ராணி ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த இந்நிறுவனம் தற்பொழுது குக்கூ மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய படங்களைத் தயாரித்துவருகிறது.


இன்று சென்னையில் நடைபெற்ற குக்கூ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கேயார் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தைத் தயாரிக்க ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து பட்ஜெட் பற்றாக்குறையால் நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்துவருகிறது மருதநாயகம் திரைப்படம். கடந்த 1997 ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் படப்பிடிப்புகள் துவக்கின என்பது குறிப்பிடத்தக்கது.


ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் போன்ற உலக அளவில் பிரசித்தி பெற்ற பெரிய படத்தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தால் விரைவில் இப்படம் வெளியாக ஏதுவாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு தாடி!

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி பெண் ஹர்னாம் கவுர் என்பவருக்கு பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற நோய் தாக்கியுள்ளது.


இதனால் 23 வயது பெண் கவுருக்கு முகம், மார்பு, கை என உடலின் பல பகுதிகளில் ஆண்கள் போல முடி முளைத்துள்ளது. இதனால் அவர் உண்மையாகவே ஆள் அடையாளம் மாறிவிட்டார். கவுருக்கு இந்த நோய் அவரது 11 வயதில் தாக்கியுள்ளது.

அப்போதே முடிகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் ஆண் போல் தோற்றம் அளிப்பதாக கருதி வெளியே தலையே காட்டாமல் இருந்துள்ளார். மேலும் தனது முகம் மற்றும் மற்ற பகுதிகளில் வளரும் முடியினை அவ்வபோது சேவிங் செய்து வந்துள்ளார். இதே தொடர்ந்துள்ளது. முடி முளைத்ததால் பெரும் அவதிக்குள்ளானார்.


பின்னர் தனது 16 வயதில் சேவிங் செய்வதை நிறுத்திவிட்டார். அவர் தனக்கு கடவுள் அளித்த வரம் இது என்று தொடர்ந்து சீக்கியர்கள் போல் முடியினை வளர்க்க தொடங்கிவிட்டார். தற்போது சாலையில் சாதரணமாக நடந்து செல்கிறார். தற்போது கவுர் பெரிய தாடி, மீசையுடன் காட்சி அளிக்கிறார்.


கவுரின் முடிவுக்கு முதலில் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது முடிவை ஏற்றுக்  கொண்டனர். இதனால் கவுர் எந்த ஒரு பயமும் இன்றி தனது மனது படி முடியை வளர்க்க தொடங்கிவிட்டார்.

ஹாலிவுட்டை தொடர்ந்து நமது திறமை உலகை நோக்கி பயணப்படுகிறது - கமல்ஹாசன் பேச்சு

’’தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும்’’ என்று கமல்ஹாசன் கூறினார்.

சினிமா படவிழா

எழுத்தாளர் ராஜு முருகன் முதன்முதலாக டைரக்டு செய்துள்ள ’குக்கூ’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.

விழாவில் சூர்யா பேசும்போது, ’’நான் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்றால் அது, கமல்ஹாசன் போட்டுக் கொடுத்த பாதைதான். அவரை நான் சித்தப்பா என்றும் அழைத்து இருக்கிறேன். அண்ணன் என்றும் அழைத்து இருக்கிறேன். சித்தப்பா என்பதை விட, அண்ணன் என்றால் இன்னும் நெருக்கம் வருவதால், அண்ணன் என்றே அழைக்கிறேன்’’ என்றார்.

கமல்ஹாசன் பேச்சு

விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:-

’’எனக்கு வழக்கமான சினிமா மூட நம்பிக்கைகள் கிடையாது. இருந்தாலும், நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பார்கள். இன்று காலை நரி முகத்தில் விழித்து இருக்கிறேன். இந்த படத்தை தயாரித்த "பாக்ஸ்" நிறுவனத்தைத்தான் சொல்கிறேன். ஹாலிவுட்டில், பாக்ஸ் ஸ்டார் இருபதாம் நூற்றாண்டை கடந்து இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறது.

நான், அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்பை நம்புபவன். 'குக்கூ' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, இந்த படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் புலப்படுகிறது.

நாவல்கள்

சிறந்த நாவல்களை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று 35 வருடங்களாக சொல்லி வருகிற கூட்டத்தை சேர்ந்தவன், நான். வைக்கம் முகமது பஷீர் , ராஜுமுருகனுக்கு மட்டுமல்ல. எனக்கும் கதாநாயகன் தான். அங்கிருந்துதான் வேர் தொடங்குகிறது. சேரன் சொன்ன பொறாமை எனக்கும் உண்டு. என் ஊரில், என் தம்பிமார்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார்கள் என்று பெருமைப்படுகிறபோது, பொறாமை காணாமல் போய்விடுகிறது. என் பொறாமை,
ஆரோக்கியமான பொறாமை.

படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் ரெயிலில் பயணித்தபடி, காற்றை தொட்டு செல்வது போல் காட்சி வருகிறது. இதைத்தான் நண்பர் வைரமுத்து பார்வையற்றவர்களை பற்றி சொல்லும்போது, ’’உங்களுக்கு இரண்டு கண்கள். எங்களுக்கு இருபது கண்கள், நகக்கண்கள்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நட்சத்திரம்

சினிமா, வர்த்தகம் சார்ந்தது. அதுவே நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானவர்கள்தான் எங்களைப் போன்றவர்கள். திறமைக்கு தலைவணங்க வேண்டும். நான் சொல்லாலும்,  சூர்யா செயலாலும் அதை செய்து காட்டியிருக்கிறோம்.

எனக்கு இரட்டை வேடம் பிடிக்கும். சூர்யாவுக்கு சித்தப்பாவும் நான்தான். அண்ணனும் நான்தான். சிவகுமார் அருகில் இருக்கும்போது சூர்யாவுக்கு நான் சித்தப்பா. அவர் அருகில் இல்லாதபோது, அண்ணன். இப்படி சொல்வதால், நீ எனக்கு மகனா? என்று சிவகுமார் கோபித்துக் கொள்வார். சூர்யா சொன்னது போல், அவருடைய திறமையை நான் கண்காணித்து கொண்டிருக்கிறேன்.

செழுமையான பாதை

சமீபத்தில், நான் மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, ’’இப்போதெல்லாம் தமிழில் நல்ல நல்ல படங்கள் வருகிறதாமே?’’ என்று கேட்டார்கள். அதில், உங்களுக்கும் பங்கு உண்டு. தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும்.


ஹாலிவுட்டை தொடர்ந்து தென்னகத்தின் திறமை உலகை நோக்கி பயணப்படுவதாக நான் நினைக்கிறேன்.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கேயார்

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா, டைரக்டர்கள் சேரன், லிங்குசாமி, பாண்டிராஜ், வெற்றிமாறன், அட்லீ, பட அதிபர்கள் யு.டி.வி. தனஞ்செயன், கதிரேசன், மதன், நடிகர்கள் விஜய்சேதுபதி, தினேஷ், நடிகை மாளவிகா, ஒளிப்பதிவாளர் வர்மா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எழுத்தாளர் வண்ணதாசன், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், பாடல் ஆசிரியர் யுகபாரதி மற்றும் பலர் பேசினார்கள்.

படத்தின் டைரக்டர் ராஜுமுருகன் நன்றி கூறினார்.

புதிதாக டிஜிட்டல் கேமரா வாங்கப் போறீங்களா?

 படச்சுருள் இணைந்த கேமராக்களின் காலம் மலையேறிப் போய் இன்று மின்னணு ஒளிப்படக் கருவி என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமராக்களின் காலம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைபேசியுடன் இணைந்த கேமராக்கள் வந்தபிறகு மக்களிடையே ஒளிப்படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது.


ஆனால், கேமரா என்பது கைபேசிக்கு கூடுதல் வசதி மட்டுமே. படத்தின் தரம் குறைவாகவே இருக்கும்.6X4 என்ற  Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும்.


பிக்சல் மற்றும் லென்ஸ் அளவு

பொழுதுபோக்கிற்கு என்றால் லென்ஸ் 18-55 எம்.எம் அளவும் 8 முதல் 14 மெகாபிக்சல்களும் (Mega Pixel) , தொழில் முறைக்காக எனில் 18-135 எம்.எம் அளவும் 12 முதல் 21 மெகாபிக்சல்களும் கொண்ட கேமராக்களை தேர்வு செய்யலாம்.


ஆப்டிகல் ஜூம்

தூரத்தில் உள்ளவற்றை படம்பிடிக்க உதவும் வசதி. இது 3x, 4x, 6x, 8x  என்று பலவகை இருக்கும். இதில் எது உங்களுக்குப் போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும்.


பேட்டரி

அல்கலைன் பேட்டரிகள் என்றால் நீங்கள் 30 அல்லது 40 ஒளிப்படங்கள் எடுத்த பிறகு புதிய பேட்டரியை வாங்க வேண்டியதிருக்கும். அதுவே நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். செல்போன் பேட்டரிகளைப் உள்ள லித்தியம் அயர்ன் பேட்டரிகள் நிக்கல் பேட்டரிகளைவிட அதிகத் திறன் உள்ளவை. பேட்டரிக்கான சார்ஜர்களிலும் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவும்.


கொள்ளளவு

கேமராக்களின் உள் நினைவகம் குறைவாகவே இருக்கும். மெமரி கார்டுகள் குறைந்தது 2 ஜிபி அளவாவது இருக்க வேண்டும். கூடுதலாக எத்தனை ஜிபி வரை பயன்படுத்த முடியும் என்ற விவரத்தையும் பார்க்கவும்.


எஸ் எல் ஆர் வகை

பொழுதுபோக்கிற்காக உபயோகிக்க கையடக்க கேமராக்கள் (Point and Shoot) போதுமானவை. தொழில்முறை கலைஞர்களுக்கு நல்ல தரமான படங்கள் எடுக்க எஸ்எல்ஆர் (Single Lens Reflex)வகைக் கேமராக்களே சிறந்தவை.


பிற கூடுதல் வசதிகள்

பொதுவாக ஒளிப்படக் கேமராக்களில் வீடியோ எடுக்கும் வசதி என்பது பெயரளவில்தானே தவிர முழுமையானதாக இருக்காது. தற்போது வரும் சில வகை கேமிராக்களில் உயர் தர வீடியோ (HD Video) பதிவு வசதி உள்ளது. இதுபோலவே எல்ஈடி, எல்சிடி டிவியில் இணைத்துப் படங்களைப் பார்க்க உதவும் HDMI அவுட்புட், தொடுதிரை வசதி ஆகியவற்றுடனும் கேமராக்கள் கிடைக்கின்றன.

கூடுதல் வசதிகள், தேவையைப் பொறுத்து விலையும் மாறுபடும்.

தரமற்ற ஆடைகள் உடலுக்கு தீங்கு தரும்!

எமது அழகையும், கம்பீரத்தையு ம் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங் கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியா மலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயே யும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதாரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின் பற்றுங்களேன்.


தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால் சாதாரண cotton துணிகளை உடுத் தினால் கூட நேர்த்தி யாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது ரிச்சாக தெரியும். எனவே பேஷன் என்ற பெயரில் கண்டதையும் உடுத்தாமல் நமக்கு வசதியான ஆடைகளை அணிவதே நம் அழகை அதிகரித்துக் காட்டும்.ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. காலத்திற்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் cotton  ஆடை  அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப் படுத்தும்.


ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்ல து. கறுப்பு, சிவப்பு மற்றும், பிரகாசமான வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். என வே கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.


எந்த ஒரு ஆடை அணிந்த உடன் அது நமக்கு ஏற்றதாக இருக்கிறதா? இது பொருந்துகிறதா? என்று கண்ணாடியின் முன் நின்று உங்களுக்கு நீங்களே சுய விமரிசனம் செய்துகொள்ளுங்கள். சரியான உள்ளாடைகள் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.


அதேபோல் பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற நகைகள், அணியவேண் டும். இருக்கிறது என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டாம். அதிகமாக போட்டால் அழகு கூடாது ஆபத்துதான் அதிகமாகும். ஹேர்பேண்ட், காதணி, காலணி போன்றவை பொருத்தமாக  இருந்தால் கூடுதல் அழகுதான். அதற்கேற்ப பொரு ட்களை நாம் தேர்வு செய்ய வேண்டும்.


ஆடைகள் என்பது நம் மதிப்போடு தொடர்புடையது. ஏனோதானோ என்று உடுத்துவதை விட நமக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே அழகையும், மதிப் பையும் அதிகரிக்கும்.

ஏன் விஜய் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது.. விளக்கம் இது தான்!

நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் மோதல் முற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் விளைவாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்திய விஜய், இனி மன்றம் குறித்து தன் தந்தை எஸ்ஏசியிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

இனி எங்கப்பா படத்தை போட்டு கிங்மேக்கர்னெல்லாம் எழுதக்கூடாது.. புரிஞ்சுதா?- விஜய்

கஷ்டப்பட்டு சினிமாவில் பெரிய இடத்தைப் பெற்றுள்ள விஜய்யை அரசியலில் பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்பது அவர் தந்தை எஸ் ஏ சியின் கனவு.

அதற்காக மெல்ல மெல்ல காய் நகர்த்தி வந்த அவருக்கு பெரும் அடியாக விழுந்தது தலைவா விவகாரத்தில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு.

அரசியல் பற்றிய பேச்சை எடுப்பதையே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் விஜய்.

தலைவாவுக்குப் பிறகு விஜய்யின் சினிமா மற்றும் ரசிகர் மன்ற நடிவடிக்கைகள் அனைத்திலும் ஒதுங்கியே நிற்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.

இந்த நிலையில் சமீபத்தில் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது நீலாங்கரை இல்லத்துக்கு அழைத்த விஜய், 'இனி மன்றத்தின் பேனர்கள், போஸ்டர்களில் எஸ்ஏசி பெயரை, படத்தைப் போடக்கூடாது.. குறிப்பாக கிங்மேக்கர் என்றெல்லாம் எழுதக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளாராம்.

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்கள், விஜய்யின் வடபழனி கல்யாண மண்டபத்தில்தான் நடக்கும். ஆனால் இனி அங்கு யாரும் போக வேண்டாம்... நீலாங்கரை வீட்டுக்கே வந்துவிடுங்கள் என்று விஜய் கூறிவிட்டாராம்.

தந்தையும் மகனும் இப்படி மோதிக் கொள்ளக் காரணம் என்று மன்றத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்தைக் குறிப்பிடுகிறார்கள். இவர் புதுவை மாநில புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ.

அவரோ, இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையுமே விஜய்தான் எடுத்தார். ஒருவேளை அவர் தன் தந்தையுடன் கலந்து பேசிக்கூட இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம், என்கிறார் ஒரேயடியாக‍!
- See more at: http://www.tamil.thecinemanews.com/2014/02/blog-post_1623.html#sthash.9NMnjZWM.dpuf

கமல் ரசிகர்களைக் கடுப்பேற்றும் - தங்கர் பச்சான்!

காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் கமல் ஹாஸனுக்கு எதற்கு பத்மபூஷண் பட்டம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தங்கர் பச்சான்.

பரபர பேச்சுக்கு பெயர் 'போனவர்' இயக்குநர் தங்கர் பச்சான். கொஞ்சநாள் மவுன விரதம் மாதிரி இருப்பார். அப்புறம் 'என்னங்க நடக்குது இந்த நாட்ல?' என்று பேச ஆரம்பித்துவிடுவார். சகட்டு மேனிக்கு அத்தனை பேரையும் காய்ச்சி எடுப்பார்.

இப்போது கமல் ஹாஸன் மீது பாய்ந்திருக்கிறார்.. அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்காக.

காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு பத்மபூஷணா? - கமல் ரசிகர்களைக் கடுப்பேற்றும் தங்கர் பச்சான்

அவர் கூறுகையில், "கமல் திறமையான நடிகர்தான். அவருக்கு கொடுக்கட்டும். வேணாங்கல. ஆனால் அவர் ஒண்ணும் சேவை செய்யலையே. காசு வாங்கிட்டுதானே நடிக்கிறார். அவருக்கு இருக்கிற வசதிக்கு உலகம் முழுக்க கூட சுத்தலாம்.

ஆனால் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அப்படியொரு விருதை கொடுக்கலாமே? 92 வயசிலேயும் மக்களுக்காக மொழிக்காக எழுதிகிட்டு இருக்கிற அவருக்கு கலைமாமணி விருது கூட கொடுக்கலையே?

இவரைப்போல இங்கு எல்லா துறைகளிலும் ஏராளமானவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பத்ம விருதுகள் கொடுக்கப்படணும். ஆனால் இப்போதெல்லாம் இந்த விருதுகள் கொடுக்கப்படறதை விட வாங்கப்படுதுன்னுதான் சொல்லணும்..." என்று பேசி வைத்திருக்கிறார்.

இந்தாளுக்கு என்ன தெரியும் கமல் அருமை என்று அவர் ரசிகர்களும், அவர் பேசியதில் என்ன தவறு என்று கேட்டு ஒரு கூட்டமும் கிளம்பியிருக்கிறது. தங்கர் நினைத்தது நடந்துவிட்டது!

ஹன்சிகா திடீர் விலகல் சிம்பு கப்சிப்!

சிம்புவை விட்டு ஹன்சிகா விலகிச் செல்கிறார். இதை அவர் நாசுக்காக டுவிட்டரில் குறிப்பிட்டு விட்டார். ஆனால் இதற்கு பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார்


சிம்பு.ஒருவரையொருவர் காதலிப்பதாக சிம்பு, ஹன்சிகா இருவருமே டுவிட்டரில் அறிவித்தார்கள். சில மாதங்களிலேயே இவர்கள் காதல் முறிந்ததாக சொல்லப்பட்டது.


 இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாகவும் அவருடன் எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறியிருந்தார்.


இந்நிலையில் டுவிட்டரில் காதலர் தினத்தன்று ஒரு கருத்து வெளியிட்டார் ஹன்சிகா. அதில், அனைவருக்கும் காதலர்கள் தின வாழ்த்துகள். காதலர் தினம் என்றாலும் நான் இப்போது சிங்கிள்தான் என ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை படித்து சிம்பு ஷாக் ஆகிவிட்டாராம்.


திடீரென, ஹன்சிகா எனது காதலிதான் என மீடியாவிடம் சிம்பு கூறியது ஹன்சிகா தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். அதை வெளிப்படுத்தவே டுவிட்டரில் நான் சிங்கிள்தான் என ஹன்சிகா விளக்கம் அளித்திருக்கிறாராம். இது குறித்து பதில் ஏதும் சொல்லாமல் சிம்பு அமைதி காத்து வருகிறார். 

ஆண்கள் பெண்களிடம் சொல்லத்தயங்கும் விசயங்கள்!

மனதில் வார்த்தைகள் தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.

பெண்களிடம் ஆண்கள் பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் எங்கே பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்திலேயே சொல்ல மாட்டார்கள்.

அவ்வாறு ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 9 விஷயங்களைப் பார்ப்போம்.

1. கை நிறைய சம்பாதித்தாலும் அதை ஆண்கள் தங்கள் காதலியிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே வற்புறுத்திக் கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவார்கள். எங்கே சம்பளத்தை வைத்து தன்னை காதலி மதிப்பிட்டுவிடுவாளோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.

2. என்ன கன்ட்ராவி புத்தகத்தை படிக்கிறாய். உனக்கு வேறு புத்தகமே கிடைக்காதா என்று கேட்கத் தோன்றினாலும் நல்ல புத்தகம் படி என்றே கூறுவார்கள்.

3.ஒரு பெண்ணுடன் இருக்கும்போது மனதில் வேறு ஒரு பெண்ணை நினைத்துக் கொள்வதை ஆண்கள் ஒரு நாளும் வெளியே சொல்வதில்லை. உண்மையைச் சொல்லி யார் அடி வாங்குவது.

4. என்ன டிரெஸ் போட்டிருக்க, நீயும் உன் ரசனையும். மேக்கப்பை பார் பேய் மாதிரி இருக்கு என்று சொல்லத் தோன்றினாலும் வாவ் டிரெஸ் சூப்பர், மேக்கப் கூட கரெக்டா இருக்கு என்பார்கள்.

5. 5 நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து உயிரை வாங்காதே என்று பல ஆண்களுக்கு கத்தணும் போல இருக்கும். ஆனால் போன் பணணவில்லையென்றால் உறவு கட்டாகிவிடுமே என்ற பயத்தில் கூற மாட்டார்கள்.

6. முன்னாள் காதலியைப் பற்றி இந்நாள் காதலி பேசுவது ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அவள் தான் இப்போ என் வாழ்க்கையில் இல்லையே வேறு ஏன் அவளைப் பற்றியே பேசுகிறாய், உனக்கு வேற பேச்சே கிடைக்காத என்று கேட்கத் தோன்றினாலும் அதை கூறத் தயங்குவார்கள்.

7. இந்த காரியத்தை இப்படி செய், அந்த சூழ்நிலையில் இப்படி நடந்துகொள் என்று காதலி அறிவுரை கூறும்போது உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ, எனக்கு எப்போ என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று கூற நினைத்தாலும் மௌனமாக இருப்பார்கள்.

8. ஆண்கள் தங்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்போது நண்பர்களை வீட்டு்ககு அழைப்பார்கள். அதை கடைசி நிமிடத்தில் தான் மனைவி அல்லது காதலியிடம் தெரிவிப்பார்கள். அதை கேட்டு பெண்கள் இப்படி கடைசி நிமிடத்தில் சொல்றதே உங்களுக்கு வேலையாப் போச்சு என்று சாமியாடுவார்கள். அப்போது என் நண்பர்கள், நான் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவேன் என்று நச்சென்று பதில் கூற விரும்பினாலும் அதை மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்வார்கள்.

9. நீ கூப்பிட்ட உடனே அந்த இடத்திற்கு வர எனக்கு வேறு வேலையே இல்லையா என்று பெண்களிடம் கேட்க நினைத்தாலும் அதை கேட்கும் துணிச்சல் பெரும்பாலான ஆண்களுக்கு வருவதில்லை.

வாகனங்களுக்கான ரயர்களை வாங்கும்போது கவனிக்கவேண்டியவைகள்!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.


ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம். டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம்.


உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது.


அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது. அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும்.


14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.


உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.


மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம்.


இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது. டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம்.


மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:

M- 130 Kmph
P-150 Kmph
Q-160 Kmph
R-170 Kmph
S-180 Kmph
T - 190 Kmph
H - 210 Kmph
V - 240 Kmph
W - 270 Kmph
Y - 300 Kmph
ZR - over 240 Kmph

வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இதோ தீர்வு!

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது,  வாசகர்களுக்காக  ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன? 

வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் "சுர்ர்" என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?

வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்? 

மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.

பரம்பரை / மரபு நோய்:

 பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.

ஹார்மோன் மாற்றங்கள்: 

ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.

உணவு ஒவ்வாமை (அலர்ஜி): 

உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.

காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: 

வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை:

 அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்):

 முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

பற்பசை (டூத் பேஸ்ட்):

Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

மாற்றங்கள்:

 திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

தடுக்க வழியுண்டா?

அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:

- நல்ல உணவுப் பழக்க வழக்கம்
- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது

இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் :

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.

மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது: 

வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

‘உஸ்தாத் ஹோட்டல்’ என்கிற ’தலப்பாகட்டி’க்கு ஹீரோயின் கிடைச்சாச்சி...!

விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரவிருக்கிறார் நஸ்ரியா நசீம்.


கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘உஸ்தாத் ஹோட்டல்’. இந்தப்படத்தில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பையும் அதற்கிடையே அழகான ஒரு காதலையும் வைத்து சூப்பர்ஹிட் படமாக இயக்கியிருந்தார் அன்வர் ரஷீத். இதனை தமிழில் ‘தலப்பாகட்டி’ என்ற பெயரில் ரீ செய்ய இருக்கிறார்கள்.


மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் தமிழில் விக்ரம் பிரபு நடிக்க, நித்யா மேனன் நடித்த கேரக்டருக்கான நடிகை முடிவாகாமல் இருந்தது. லேட்டஸ்ட் தகவலின்படி அந்த கேரக்டரில் நஸ்ரியா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். உஸ்தாத் ஹோட்டலில் நித்யா மேனனுக்கு சிறிய கேரக்டர் என்பதால், முதலில் அந்த கேரக்டரில் நடிக்க தயக்கம் காட்டினாராம் நஸ்ரியா.


அதன் பிறகு, ’தலப்பாகட்டி’யை இயக்கும் சத்யசிவா, மலையாளத்தை விட தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்தும் இருப்பது மாதிரி ஸ்கிரிப்ட்டை மாற்றி அமைத்திருப்பதாகவும், அதில் ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இருப்பதாகவும் என எடுத்துக் கூறிய பிறகே நஸ்ரியா நடிக்க ஒப்புக் கொண்டாராம்.


தமிழில் தாத்தாவாக ராஜ்கிரணும் பேரனாக விக்ரம்பிரபுவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர, சூரி, சார்லி, தம்பிராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மார்ச்-31ல் கோழிக்கோட்டில் ஆரம்பிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.

சுருண்டு விழுந்த விஷால்! கண்ணீர் சிந்திய வரலட்சுமி!

திரைக்குப் பின்னால் ஹீரோவும், ஹீரோயினும் நிஜமாக காதலிப்பது ஒன்றும் புதிதில்லை.

ஆனால் அதை அவர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. யாராவது கேட்டால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என்று சொல்வார்கள். இதற்கு விஷாலும் வரலட்சுமியும் ஒன்றும் விதிவிலக்கல்ல. இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அவர்கள் இதைப் பற்றி இதுவரை வாய் திறந்ததே கிடையாது. இருப்பினும் அதைனையும் தாண்டி சில ஆதாரங்கள் விஷால்-வரலட்சுமி காதலை உறுதிபடுத்தியுள்ளன.


கடந்த வாரம் கர்நாடகா புல்டோசர் அணியுடன் சென்னை ரைனோஸ் அணி விளையாடிய போது விஷால் ஒரு விக்கெட்டை வீழ்த்தியபோது வரலட்சுமி ஐ லவ் யூ என்று கத்திக்கொண்டே மைதானத்தில் ஓடினார். அதில் உச்சமாக நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் விஷால் வீசிய ஓவர் ஒன்றில் எதிர் அணியின் பேட்ஸ் மேன் ஓங்கி அடித்தார்.


உடனே அதை விஷால் பிடிக்க முயன்ற போது, அந்த பந்து வயிற்றை பதம் பார்த்தது. இதில் சுருண்டு விழுந்தார் விஷால். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகை வரலட்சுமி பதறிப் போனார். அவர், கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.


இவைதவிர, விஷால் இப்போது நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவ்வப்போது வரலட்சுமி வந்து போகிறார் என்று சொல்கிறார்கள். இப்படி விஷால்- வரலட்சுமியின் நெருங்கிய காதலுக்கு பல ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளி வருவதால் சீக்கிரமே இருவரும்  திருமண பந்தந்துக்குள் நுழைந்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயமாம்.


பல முன்னணி ஹீரோக்களும் முதலில் தங்கள் காதலை மறுத்து பிறகு அவர்களாகவே ஒருநாள் தங்கள் திருமண தேதியை மீடியாக்கள் முன்னிலையில் அறிவிப்பது வாடிக்கையான ஒன்று.

காதலுக்காக எதையும் செய்ய துணிவு!


காதலுக்காக மேனஜர்களை நீக்கிய அதர்வா?

நடிகர் அதர்வா தனது அப்பாக்காலத்தில் இருந்து தற்போது வரை மேனஜராக வேலைபார்த்து வந்த சம்பத்தை நீக்கியுள்ளார். மேலும் அவருடன் பணியாற்றி வந்த வெங்கட் என்பவரையும் நீக்கியுள்ளார்.


 இதற்கான காரணம் குறித்து  கோடம்பாக்கத்தில் வரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.


அதர்வாவுக்கும் ப்ரியா ஆனந்துக்கும் காதல்வயப்பட்டிருப்பதாக கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


இந்நிலையில் மேனஜர்கள் இரண்டு பேரும் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.


சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மேனேஜராக இருந்தவரை மேனேஜராக அதர்வாக நியமித்துளளார்.


 அவர் வந்த ராசியும  அவரது விவேகமான செயல்பாடுகளும் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டுபோகும் என்று நம்புகிறாராம் அதர்வா.

அஜித்துடன் அதிக பழக்கம் இல்லை: உதயநிதி ஸ்டாலின்!

அஜித்துடன் தனக்கு அதிக பழக்கம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார்.


அதில், தன்னுடைய தயாரிப்பு அனுபவம் குறித்து குறிப்பிட்டபோது, நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணமே விஜய்தான். விஜய் கால்ஷீட் கொடுக்காவிட்டால் படமே தயாரிக்க முன்வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.


கில்லி படம் பார்த்தபிறகு  நான் தயாரிக்கும் முதல் படம் விஜய் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, விஜய் பிசியாக இருந்தபோதிலு, காத்திருந்து அடம்பிடித்து அவரிடம் கால்ஷீட் வாங்கி ‘குருவி’ படத்தை தயாரித்ததாக கூறினார். தயாரிப்பாளர் என்ற முறையில் நான் முதலில் தேர்வு செய்யும் ஹீரோ விஜய்தான். இரண்டாவது சூர்யா, அடுத்துதான் அஜித். தனுஷ், சிம்பு படங்களையும் தயாரிக்க ஆசை என்று அப்போது கூறினார்.


மேலும், அஜித்துடன் தனக்கு அதிக பழக்கம் இல்லை என கூறி அஜித்தை கூறிப்பிட்டிருக்கிறார் உதயநிதி.