Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 11 February 2014

கண் இமைகள் அடர்த்தியாக வழிகள் !!

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள்.  அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும்.

அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடிமனாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக்கிறது. அதை பார்க்கலாம்…

• பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ்களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா.   நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள்.

• கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துடன் வைக்க வாஸ்லின் பயன்படுத்துங்கள். இதனால் அவைகள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக் அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோமங்களை தடியாக்கும்.

• ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமைகளுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமைகளில் உள்ள நரம்பிழைகளை தூண்டி விடும். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும்.

அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமுறையாகும்.

சருமத்திற்கு தேவையான பேஷியலின் வகைகள்!

பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தை குறைத்து விடுகின்றனர். இதனால் அழகும், பொலிவும் தொய்ந்து போகும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே பேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் 25 வயது முதல் பேஷியல் செய்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பத்தினாலும், தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பேஷியல் செய்ய வேண்டியது அவசியம். முதலில் பேஷியல் செய்வதற்கு முன்பு என்னென்ன பேஷியலில் பல வகைகள் உள்ளன எந்த எந்த சருமத்தற்கு எந்த வகையான பேஷியல் செய்வது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் மட்டுமே பேஷியல் செய்ய வேண்டும்.

இதில் பல வகை உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உள்ளன. பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், ஹெர்பல் பேஷியல், கால்வானிக் பேஷியல், பேர்ல் பேஷியல், கோல்டு பேஷியல், அரோமா பேஷியல் என பல வகை உண்டு.

கோல்டன் பேஷியல்

இம்முறை பேஷியல் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சருமம் நிறும் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுகள், சுருக்கங்கள் நீக்கப்படும். இதில் முதலில் ஷாதானியம், முட்டை, பன்னீர், முதலிய கலவையை முகத்தில் 10 நிமிடம் தடவ வேண்டும். பிறது அதன் மேல் பால் தெளித்து மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கோல்ட்ஜெல் (அழகு சாதனங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்) தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தினை துடைத்து கோல்ட் பாக் தடவி கண்களை சுற்றி ஷாவீட் என்ற லோஷனை தடவ வேண்டும். கண்களின் மேல் குளிர்ச்சியான பன்னீரை காட்டனில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து துடைத்துவிட்டு ஷா பேஸ் என்ற க்ரீம் தடவ வேண்டும். இதுவே கோல்டன் பேஷியல். இது நன்றாக மாநிலம் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

பேர்ல் பேஷியல்

மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு கோல்டன் பேஷியல் அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பேர்ல் பேஷியல் கிட் என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். அதில் நான்கு வகையாக கிரீம்கள் உள்ளன. அம்முறைபடி செய்தால் முக பொலிவாக மாறும்.

கால்வானிக் பேஷியல்
உலர்ந்த சருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் பேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத்திட்டுகள் டபுள்ஸ்கின், தொங்கு கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

கோபிநாத் - டி.வி.நிருபராக நடிக்கும் கெட்டப் எப்படி இருக்குது...நிமிர்ந்து நில்!

டாப் கீயரில் போய்க்கொண்டிருந்த ஜெயம்ரவியின் கேரியருக்கு ஸ்பீட் பிரேக் போட்டது ஆதிபகவன். அமீரை முழுசா நம்பி இரண்டு வருடத்தை அவரிடம் கொடுத்ததில் கழண்டு போனது கேரியர் சக்கரம். பூலோகம் பூமியை விட மெதுவாக சுற்றிக் கொண்டிருப்பதால் ஜெயம்ரவியின் இப்போதைய ஒரே நம்பிக்கை நிமிர்ந்து நில். பாதி பூலோகம் கடந்து கொண்டிருந்தபோதே இது கரைசேர நாளாகும் என்று கருதி சமுத்திரக்கனியை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரே வீச்சில் படத்தை முடித்து விட்டார்.

நாடோடிகள் படத்துக்கு பிறகு அப்படி ஒரு ஹிட் அமையவில்லை சமுத்திரகனிக்கு, அதன் தெலுங்கு ரீமேக், அடுத்து தமிழில் டைரக்ட் செய்த போராளி. அதன் கன்னட ரீமேக் என எல்லாமே ஆவரேஜ் ரிசல்ட்டையே கொடுத்தது. என்றாலும் சில மலையாளப் படங்கள், சாட்டை ஆகியவை ஒரு நடிகராக அவருக்கு கைகொடுத்தது. எனவே வெற்றி இயக்குனராக நிமிர்ந்து நிற்க சமுத்திரகனிக்கும் இது முக்கியமான படம்.

வருகிற 14ந் தேதி ரிலீஸ். படம் பற்றிய ஒரு பைனல் ரவுண்ட் அப் பார்த்து விடலாம்.

* தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது. தெலுங்கு டைட்டில் ஜண்டாபாய் கபிராஜு. ஜெயம்ரவி கேரக்டரில் தெலுங்கில் நடித்திருப்பவர் நானி. ஹீரோயின்கள் அமலாபாலும், ராகிணி திவிதேதியும் இரண்டு மொழியிலும் அதே கேரக்டரில் நடித்துள்ளனர்.

* ஜெயம்ரவிக்கு இரட்டை வேடம். ஒரு வேடம் சென்னை இளைஞன் அரவிந்த் சிவசாமி. மற்றொரு வேடம் ஆந்திரத்து நரம்சிம்ம ரெட்டி. அரவிந்த் சிவசாமி போராட்ட குணமிக்க ஐ.டி இளைஞர். நரசிம்ம ரெட்டி 45 வயதை தாண்டிய ஐதராபாத் ஆள். நானி ஐதராபாத் இளைஞராகவும் சென்னை நடுத்தர வயதுக்காரராகவும் நடித்திருக்கிறார்.

* சரத்குமார் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தில் அவர் வரும் 23 நிமிடங்களும் பரபர ஆக்ஷன் பகுதி.

* நீயா நானா புகழ் கோபிநாத் முதன் முறையாக நடித்திருக்கிறார். டி.வி.நிருபராகவே வருகிறார். மீடியாவின் சக்தியை உணர்த்துமாம் அவரது கேரக்டர்

* சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டிருக்கும் சேசிக் காட்சி செம திரிலிங்காக இருக்குமாம். ஒரு கோடி ரூபாய் செலவில் இதனை எடுத்திருக்கிறார்கள்.

* அமலாபால் கிராமத்திலிருந்து சென்னை வந்து குடியேறிய நடுத்தர குடும்பத்து பெண். பெயர் பூமாரி. அவருக்கு டுவின் சிஸ்டர் இருப்பார்கள் அவர்கள் பெயர் தங்க மாரி, செல்ல மாரி, அப்பா பெயர் மாரியப்பன், அம்மா கருமாரி. மொத்தத்துல மாரி குடும்பம்.

* ராகினி திவிவேதி நரசிம்ம ரெட்டியின் மனைவி. ஜாலியா கலகலன்னு இருக்குற மனைவி.

* படம் ரிலீசாவதற்கு முன்பே பல பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கைதட்டல்களையும் அள்ளி வந்திருக்கிறது.

* "நம்மை நாமே சரிப்படுத்திக்கிட்டா உலகம் தன்னால சரியாகிடும்" என்பது படம் சொல்லும் மேசேஜ்.