Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 9 February 2014

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!



காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


 நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்
 நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

பிரஸ்ஸல்ஸ்

 முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

சோளம்

 சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

ப்ரோக்கோலி

 முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

முட்டைக்கோஸ்

 முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

பீன்ஸ்

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

பீட்ரூட்


 சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

அம்மா-பாசத்தின் தெய்வம் - அவசியம் படிக்கவும்!


இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது.

பெண்-ஒற்றைக் கண்ணுடன்ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அவளுக்கு ஒரு கண் இல்லை. அவளைப் பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். வகுப்பு ஆசிரியர் கூட பயந்தவராய் அவளைப் பார்த்து,

“யாரும்மா நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.


“ஐயா, என் மகன் ராமு மதிய சாப்பாட்டை மறந்து விட்டு வந்து விட்டான். அவனிடம் கொடுக்கத்தான் இந்த சாப்பாடுக் கூடையை எடுத்து வந்துள்ளேன். இதை அவனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன்.” என்றாள்.
“ராமு! உங்க அம்மாகிட்ட போய் அந்த கூடையை வாங்கிட்டு வா.”

ராமு எழுந்து சென்று வாங்கி வந்து ஆசிரியரிடம் நன்றி கூறி அமர்ந்தான். அவனது அம்மாவும் சென்றுவிட்டாள். ஆனால் வகுப்பறையில் உள்ள மாணவர்கள்தான் ராமுவை ஓட்டித்தள்ளிவிட்டனர்.

“ஏய்....... ஒத்த கண்ணு அம்மா!”

“டேய்! அதுதான் உங்க அம்மாவா? பேய் மாதிரி இருக்காங்க...”

“ராமு அம்மா, ஒத்த கண்ணு அம்மா”

என்றெல்லாம் அவனை ஏளனம் செய்தனர். ராமுவிற்கு அழுகையே வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர்களை அதட்டி அமைதிபடுத்தினார்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற ராமு, தனது புத்தகப்பையை வீட்டினுள் ஒரு மூலையில் தூக்கி எறிந்தான். அவன் அவ்வளவு கடுப்பாக இருப்பதைப் பார்த்த அவன் அம்மா வள்ளி “என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கே?” என்று கேட்டாள்.

“எல்லாம் உன்னாலதான். நான் எத்தனை முறை சொல்றது, என்ன பார்க்க பள்ளிக்கூடம் வராதேனு? நீ இன்னைக்கு வந்ததால எல்லாரும் என்ன ‘ராமு அம்மாவுக்கு ஒத்த கண்ணு’ அப்படினு எவ்வளவு கேலி கிண்டல் பண்ணினாங்க தெரியுமா? நான் அழுதே விட்டேன்.”

“நீ சாப்பாட்டை மறந்து விட்டு போயிட்டே. சாப்படலனா உடம்பு கெட்டுடும். அதனாலதான் எடுத்துக்கிட்டு வந்தேன்.”

“நான் சாப்பிடாம செத்தா உனக்கு என்ன? என்னையை அசிங்கப்படுதுவதே உனக்கு வேலையாப்போச்சி. நீ இனிமே பள்ளிக்கூடம் வந்த, நான் பள்ளிக்கு போகவே மாட்டேன்.”.

“சரிப்பா, என்ன மன்னிச்சிடு. இனிமே உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன்.” என்று கூறியவள் சாமியறைக்குள் சென்று குமுறிக் குமுறி அழுதாள். தன் மகனே தன்னை கேவலமாக பார்க்கிறானே என்று சாமியிடம் முறையிட்டாள்.

ராமுவின் அப்பா அவன் பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார். அவனுடைய ராசிதான் அவரை கொன்றுவிட்டது என்று அனைவரும் கூறினர். ஆனால் அவனது அம்மா வள்ளி, “என் புருஷன் குடிகாரன். குடிச்சி, குடிச்சியே செத்து போய்ட்டான். அதுக்கு என் புள்ள ராசியை தப்பா சொல்லாதீங்க” என்று அவனை மெச்சிக்கொள்வாள். புருஷன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல், கூலி வேலை செய்து அவனை காப்பாற்றி வருகிறாள்.

ராமு தன் உயர் கல்விக்கு சென்னை செல்லவேண்டிய சூழ்நிலை. அதனால் தன் தாயிடம் விடைபெற்று சென்று அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் படிக்கும் காலக்கட்டத்தில் விடுமுறைக்கு கூட அவன் அம்மாவை பார்பதற்கென்று வந்தது கிடையாது. இதை நினைத்து வள்ளி வருந்தாத நாளே இல்லை. பெத்த மனம் தன் பிள்ளையை பார்க்க ஏங்கியது. அதனால் அவள் ஒருநாள் ராமுவின் கல்லூரிக்கே சென்றுவிட்டாள். இப்போதும் ராமு தனது அம்மாவை மிகவும் அசிங்கப்படுத்தி அனுப்பினான். அதனால் நொந்துபோய் வீட்டிற்கு சென்ற அவள் ராமுவை பார்க்கச்செல்லாமல் அவனுக்குத் தேவையான பணம் மட்டும் அனுப்பி வந்தாள். ராமுவிடமிருந்து கடிதம் வரும். ஆனால், வள்ளி எப்படி இருக்கிறாள் என்று கேட்டிருக்கமாட்டான். “எனக்கு ஐயிந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும்” என்று மொட்டையாக இருக்கும். அவளும் தன் மகன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறானே என்று அழுதுகொண்டே பணத்தை அனுப்புவாள்.

ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவனிடமிருந்து வரும் கடிதம் கூட வருவதில்லை. தன் மகனுக்கு என்ன ஆயிற்றோ என்று அவன் தன்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லையென்று அவனது கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில், அவனது படிப்பு முடிந்து வேலை கிடைத்துச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. அவளும் தன்னை தன் மகன் அடியோடு மறந்துவிட்டானே என்று தினமும் அழுதுகொண்டே இருப்பாள். அதனால் அவளது உடல்நிலை மோசமானது. சில வருடங்கள் கழிந்தன. ராமு நல்ல வேலையில் உள்ளதாகவும், அவனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தான் அவனைப் பார்த்ததாகவும் ஒருவர் வந்து வள்ளியிடம் கூறினார். இந்த செய்தி அவளுக்குப் புத்துயிர் அளித்தது.

அவர் மூலம் அவன் விலாசத்தை அறிந்து அவனை பார்க்கச் சென்றாள். சென்னையில் அவனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அவன் வீட்டைக் கண்டுபிடித்தாள். அங்கு ராமுவின் பிள்ளைகள் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தவறவிட்ட பந்து வள்ளிக்கு அருகில் வந்தது. அதை எடுத்துக்கொண்டு தன் பேரப்பிள்ளைகளை கொஞ்ச அவள் சென்றபோது அவளது ஒற்றைக்கண்ணைப் பார்த்து பயந்துபோய் பிள்ளைகள் அழ ஆரம்பித்தன.

குழந்தைகளின் அழுகை சத்தத்தை கேட்டு ராமு வெளியில் வந்தான். அம்மாவை பார்த்த ராமு ஏதோ பிச்சைக்காரியைப்போல் போல் “நீ எதுக்கு இங்க வந்த, நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலயா? உன் மூஞ்சிலேயே படக்கூடாதுன்னுதான நான் எங்க இருக்கிறேன்னு சொல்லவேயில்ல, இப்ப என் பிள்ளைகல பயம்புறுத்த வந்துட்டியா? முதல வெளிய போ”, என்றான் ராமு.

“இத்தனை வருடங்கள் கழித்து நான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் இவன் நம்மை அம்மா என்று கடுகளவு கூட பாராமல் இப்படி சொல்லிவிட்டானே! இனிமேல் இவனிடம் பாசத்தை எதிபார்ப்பது தவறு” என்று எண்ணிய வள்ளி அங்கிருந்து வந்துவிட்டாள்.

சில நாட்கள் கழித்து ராமுவிற்கு ஒரு கடிதம் வந்தது. அது அவன் அம்மாவின் அண்டை வீட்டுக்காரர் எழுதியது. அதில் “ராமு உங்க அம்மா இறந்துவிட்டார். அவங்க உன்னிடம் தருமாறு கொடுத்தக் கடிதத்தை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். தயவு செய்து படிக்காமல் விட்டுவிடாதே. இருக்குபோதுதான் அவர்களை மதிக்கவில்லை. இறந்தபிறகாவது இந்த கடிதத்தை படித்து அவருடைய ஆத்துமாவை சாந்தியடைய வை!” என்று இருந்தது. ராமு தன் அம்மா இறந்துவிட்டாளே என்று சிறு கவலைகூட இல்லாமல் இன்னொரு கடிதத்தை எடுத்துப் படித்தான்.

“ராமு! என் மகனே! உன்னைப் பெற்றெடுக்க மறு பிறவி எடுத்தேன். என் ரத்தத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுத்தேன். என் உடலையே உருக்கி கூலி வேலை செய்து உன்னைப் படிக்கவைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் நீ கொடுத்த கைமாறு எந்தவொரு தாய்க்கும் கிடைக்கக்கூடாது. சரி, ஏன் என்னை நீ வெறுக்கிறாய்? நான் ஒற்றைக் கண் கொண்டவள் என்பதால்தானே? நீ குழந்தையாய் இருந்தபோது ஒரு விபத்தில் உன்னோட ஒரு கண்ணை இழந்துவிட்டாய். உன்னை ஒரு கண்ணோடு பார்ப்பதற்கு என் இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. அதனால் என் ஒரு கண்ணை கொடுத்து உன் கண்ணைக் காப்பாற்றினேன், என் அழகை இழந்தேன். ஆனால் எனக்கு அப்போது அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை உனக்கு கூறி வளர்த்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், நீ ஒருவித மன உறுத்தலுடன் வாழ்ந்துவந்திருப்பாய்.” இதைப் படித்தவுடன் ராமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மேலும் படித்தான்.

“அழாதே மகனே, எனக்காக அழாதே. உன் பிள்ளைகளுக்காக அழு. அவர்களை வளர்க்கும்போதே நீ படும் கஷ்டங்களை சொல்லி வள. இல்லையென்றால் என் கதிதான் உனக்கும்.”

இதை படித்ததும் ராமு தன் தவறை உணர்ந்தான். அவனது கண்ணில் தாரை தரையாய் நீர் வழிந்தது. தரையில் புரண்டு புரண்டு அழுதான்.

வாழும்போதே தன் தாயின் தியாகத்தை உணராமல், அவள் இறந்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?.

அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?

தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.


போன், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?


சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.


இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது.


ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 இந்த சேவையின் பெயர் Seven. இதனை  http://www.seven.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.


இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.


இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்!

      ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

    *

      அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

    *

      புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

    *

      ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.

    *

      சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

    *

      மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

    *

      ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

    *

      ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?

    *

      ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு!


கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வான நீர்த்தாரை எனப்படும் ‘டோர்னடோ'வை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார் தமிழக மீனவர் ஒருவர்.


கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர்களான மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய விசைப்படகில் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.


அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியும், கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்படும் அதிசய காட்சியை அவர்கள் கண்டுள்ளனர்.


சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த அதிசய நிகழ்வை உடனடியாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார் மதியழகன். மதியழகனின் படகிற்கு மிக அருகில் இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.


மீனவர்கள் மொழியில் இந்த நிகழ்வை ‘யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது' எனச் சொல்வார்களாம்.ஆனால், அறிவியல் மொழியில் இதனை ‘டோர்னடோ' என பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது தமிழில் நீர்த்தாரை.


மீனவர்கள் கண்ட இந்த டோர்னடோ குறித்து, கடலூர் துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன் கூறுகையில், ‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும்.


பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.


இதற்கு ஆங்கிலத்தில் "டோர்னடோ" என்று பெயர். இவைகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை அனைத்தும் பருவகாலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்..!


சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.


ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.


1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இதே போல, முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேக வைக்க வேண்டும். கீரையை 2 முறையாவது கழுவ வேண்டும்.


2. கோழிக்கறியை சமைக்கும் முன்பு அலசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, கோழிக்கறியில் தண்ணீரை ஊற்றும் போது அதில் இருந்து தெளிக்கும் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம் பாக்டீரியாக்கள் பரவும் என்பதை மறக்கக் கூடாது. மேலும், கோழிக்கறியை அலசி கீழே விடும் தண்ணீர் நேராக வெளியேற்றப்பட வேண்டும். அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் கவனமாக அந்த நீரை வெளியேற்ற வேண்டும்.


3. எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக வைக்கவோ கூடாது. எல்லோருக்குமே உணவு பொருள் என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அது உடல் நலனுக்கு தீமையை ஏற்படுத்தும். எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவு பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும்.


4. காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும். வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும் குணம் உள்ளது. அதனால், வெங்காயத்தை நறுக்கியதும், அது காற்றில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ளும். கிருமிகள் நிறைந்த வெங்காயத்தைத் தான் நாம் மறுநாள் உணவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர்.


5. மேலும், இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக் கூடாது. கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள் சாப்பிடக் கூடாது. நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக் கூடாது. விரத நாட்களை தவிர்த்து, சமைத்து ருசி பார்த்துவிட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.

மனைவிக்கு முக்கியமாக தெரிய வேண்டியது!

கணவனுடைய சுபாவங்கள், அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை குறித்து மனைவிக்கு திட்டமான கருத்து இருக்க வேண்டும். உணவு வகைகளில் மட்டுமல்ல எந்த விஷயத்திலுமே கணவனுக்கு எது பிடிக்கும். அவனுடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதைச் செய்தால் அவன் மகிழ்ச்சி அடைவான். என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது போதாது. அவனுக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷயங்களை வெறுக்கிறான், எதைச் செய்யும் போது அவனுடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயந்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


கணவன் தவறு செய்தால்...


சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும். சில விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டும். பெற்ற பிள்ளையோ, கணவனோ தவறு செய்து விட்டால் அதை ஜீரணித்து அவர்களை திருத்த வேண்டும். அடுத்தவர்கள் உங்களைப்பற்றி அவதூறு பேசினால் அலட்சியப்படுத்துங்கள். கத்தரிக்காயை ஜீரணியுங்கள் அதன் காம்பை அலட்சியப்படுத்துங்கள்.


குற்றங்குறைகள் இருந்தால்...


உண்மையாக இருந்தாலும், பிறர் உள்ளம் வருந்துமாறு எதையும் சொல்லாதீர்கள். ஒரு முடவனைப் பார்த்து நீ ஏன் முடவன் ஆனாய் என்று கேட்காதீர்கள். எவரும் தம் குற்றங்குறைகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவதை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது இதயம் நிதானமாய் துடிக்கிறது. இதனால் உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அதிக இரத்தம் கிடைக்கிறது. அதிக அளவு பிராணவாயு கிடைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு ஏற்படும். உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சியை தினசரி செய்ய பழக்குங்கள். சிறுமிகள் கீழ்கண்டவற்றை செய்யலாம்.


தசைகள் இயக்கும் பயிற்சி...


சம தரையில் கைகளை பின்னால் நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்பு தலையையும், கைகளையும் உயர்த்தி, உட்காரும் நிலைக்கு வந்து கால் விரல்களை கை விரல்களால் தொட வேண்டும். இவ்வாறு 5 தடவை செய்யலாம்.


தோள் பயிற்சி...


கால்களை அகல வைத்தபடி கைகளால் கால்களுக்கு இடையில் தரையைத் தொட வேண்டும். இடது கை கீழே இருக்கும் போது வலது கையையும் உயர்த்தி பயிற்சியை செய்ய வேண்டும்.


மார்பகப் பயிற்சி...


மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி மார்புக்கு நேராக கொண்டுவர வேண்டும். பின்பு கைகளை தாழ்த்தும்போது உள்மூச்சு வாங்க வேண்டும். கைகளை பழையபடி மார்புக்கு மேலே வருமளவும் மூச்சிவிடக் கூடாது. நான்கு தடவைகள் செய்யவும் மார்பகம் நன்றாக வளர்ச்சி பெறும்.


கால்கள் மெல்லியதாக இருக்க பயிற்சி...


ஒரு வாசற்படியின் மேலே ஏறி ஏறி இறங்க வேண்டும். ஒரு காலை மேலே வைத்து இன்னொரு காலை கீழே வைத்து மாறி மாறி ஏறி இறங்க வேண்டும். சைக்கிள் கூட விடலாம்.


இருதயநோய் ஆபத்தை தடுக்க...


ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை சாதாரணமாக நடந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் இருதய நோய், மற்றும் புற்று நோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்தில் கண்டு பிடித்துள்ளார்கள். நடை பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன் படுகிறது.


உடலழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க...


உடலழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது மிக எளிது. இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும். அன்றாட வேலைகளில் ஒன்றாக உடற் பயிற்சியை கருதினால் நாம் வாழ்வில் வளமாக வாழலாம். நோய்கள் நிச்சயம் நம்மை நெருங்காது.


தோள்கள் வலிமை பெற...


கைகளை மாற்றி, மாற்றி மேலே உயரத் தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சி செய்தாள் தோள்கள் வலிமை பெறும்.


வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் மறைய...


மல்லாந்து படுத்துக் கொண்டு வலது காலையும் இடது காலையும் மாற்றி மாற்றி மேலே உயர்த்தி இறக்கி பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவது போலவும் கால்களை இயக்கலாம். இப்படிச் செய்வதால் வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் குறைந்து அழகிய தோற்றம் ஏற்படும்.


கழுத்து வலிமை பெற...


தலைப்பகுதியை மட்டும் பக்கவாட்டில் அசைக்க வேண்டும். இப்படிச் செய்தால் கழுத்துப்புறம் வலிமை பெறும்.

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.


Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும்


 சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்


1.முதலில் இங்கு சென்று Virtual Router http://virtualrouter.codeplex.com/  என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.


2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்


 அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்


3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?



கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.


அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.


சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.



வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும்.

காதலர் தினத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!


காதலர் தினத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!

பிப்ரவரி 7:

 ரோஸ் டே காதலர் வாரத்தின் முதல் நாள் தான் 'ரோஸ் டே'. இந்நாளில் காதலர்கள் ரோஜாப் பூக்களை, அதிலும் காதலின் சின்னமான சிவப்பு நிற ரோஜாப் பூக்களை கொடுத்துக் கொள்வார்கள்.


பிப்ரவரி 8: 

ப்ரப்போஸ் டே காதல் வாரத்தின் இரண்டாம் நாளன்று காதலர்கள் 'ஐ லவ் யூ' என்று தங்கள் காதலை வித்தியாசமான முறையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் ப்ரப்போஸ் செய்வார்கள்.


பிப்ரவரி 9:

 சாக்லெட் டே காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் தான் 'சாக்லெட் டே'. இந்நாளில் தங்கள் துணைக்கு அவர்களுக்கு பிடித்த சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுப்பார்கள்.


பிப்ரவரி 10: 

டெடி டே இந்நாள் பெண்களுக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். ஏனெனில் இந்நாள் தான் டெடி டே. பொதுவாக பெண்களுக்கு டெடி பியர் என்றால் கொள்ளை பிரியம். இந்த நாளில் காதலன் காதலிக்கு அழகான டெடி பியர் கொடுப்பார்கள்.


பிப்ரவரி 11: 

ப்ராமிஸ் டே இது ஒவ்வொரு காதலர்களுக்கும் மிகவும் முக்கியமான மற்றும் ஸ்பெஷலான நாள். ஏனென்றால் இந்நாளில் காதலர்கள் இருவரும் தங்கள் உறவை சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் வளர்க்கும் வகையில் சத்தியம் செய்து கொள்வார்கள்.


பிப்ரவரி 12:

 ஹக் டே ஹக் டே என்பது காதலர்கள் இருவரும் அனைத்தையும் மறந்து, நாம் இருவரும் எப்போதும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டுமென்று கட்டிப்பிடித்து கொண்டாடும் நாள்.



பிப்ரவரி 13: 

கிஸ் டே காதலர் வாரத்தின் ஏழாம் நாள் தான் கிஸ் டே எனப்படும் முத்த மழை பொழியும் நாள். இந்த நாளன்று காதலர்கள் தங்கள் அன்பை முத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்துவார்கள். நீங்கள் எப்படி?


பிப்ரவரி 14: 

வேலன்டைன்ஸ் டே இறுதியில் தான் வேலன்டைன்ஸ் டே என்னும் காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள். இந்நாளில் காதலர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவழித்து, அந்நாளை மறக்க முடியாத ரொமான்டிக் நாளாக கழிப்பார்கள்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் முதல் நாள் வசூல்


விஜய் சேதுபதி நடிப்பில் வெள்ளியன்று வெளியான பண்ணையாரும் பத்மினியும் முதல் நாளில் சென்னையில் மட்டும் 42 லட்சங்களை வசூல் செய்துள்ளது.


 தமிழ்நாடு முழுவதுமாக சேர்த்து ஒரு கோடியே  இருபத்தி இரண்டு லசங்களை வசூல் செய்துள்ளது.


இப்படத்தில் ஜெயப்பிரகாஷ், துளசி, ஐஸ்வர்யா, பாலசரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குனர் அருண்.

விஸ்வரூபம் ll-ல் செண்டிமென்டுக்கு முக்கியத்துவம்!

விஸ்வரூபம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தை இயக்குவதற்கான பணிகளை துரிதமாக துவங்கிவிட்டார் கமல்ஹாசன். விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதைக்களம் இந்தியா தான் என்று கமல் முதல் பாகத்திலேயே கூறிவிட்டார்.

இந்தியாவில் நடக்கும் இரண்டாவது பாகத்தில் முதல் பாகத்தில் இல்லாத சிலவற்றை சேர்க்கும் நோக்கத்தில் இருக்கிறாராம் கமல். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய கமல் “ இரண்டாம் பாகத்தில் செண்டிமெண்ட் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக தாய்-மகன் செண்டிமென்ட் இருக்கும். விஸ்வரூபம் படத்தில் முதல் அரைமணி நேரம் இருந்த செண்டிமெண்ட் காட்சிகள் அதன்பிறகு காணாமல் அடிக்கப்பட்டுவிட்டன.

ஆனால் இரண்டாம் பாகத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் படம் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும். என் ரசிகர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை என் திரையுலக வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கல்லாக மாற்றி, என் அண்ணனும் விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளருமான சந்திரஹாசன் என்னை கேள்வி கேட்கும்படியாக வைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.