Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 7 March 2014

பிக்பாஸில் ஷாருக்கான்!

கலர்ஸ் டிவியின் ஹிட் தொடர் 'பிக் பாஸ்'. பாலிவுட் பிரபலங்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியின் ஏழாம் பாகத்தினை 'சல்மான் கான்' தொகுத்து வழங்கினார்.


தற்போது அதன் 8ம் பாகத்தினை தொகுத்து வழங்கப்போவது 'ஷாரூக்கான்' என வெளியாகியிருக்கும் தகவலே இப்போதைய பாலிவுட் பரபரப்பு!


ஷாரூக் - சல்மான் இடையே நிலவும் போட்டிக்கிடையே இந்த செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தவிர இதற்கு முன் பலமுறை அந்த நிகழ்ச்சியில் சல்மான்  நடந்து கொண்ட விதமும் இந்த மாற்றத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.


ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், ஹிருத்திக் ரோஷன் என பல பிரபலங்கள் சல்மானிற்கு மாற்றாக வருவார்கள் என கூறப்பட்டு இப்போது ஷாரூக்கான் தான் அந்த இடத்தை நிரப்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.


பிக் பாஸ் தொடரின் எட்டாம் பாகம் யாருக்கு எட்டும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

அஜீத் விஜய் மோதல் உறுதி!

பொங்கல் பண்டிகையில் அஜித்தின் 'வீரம்'படமும் , விஜய்யின் 'ஜில்லா' படமும் ரிலீஸ் ஆனது.


தற்போது விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். 'எதிர்நீச்சல்' சதீஷ் காமெடி கேரக்டரில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.


படத்துக்கு 'தீரன்' என்று டைட்டில் வைத்ததாக சொல்லப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை தீபாவளியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.


அஜித் நடிக்கும் கௌதம் மேனன் படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். அஜித் இதில் போலீஸாக நடிக்கிறார்.


இந்தப் படமும் தீபாவளி ரேஸில் குதிக்கிறது. இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு கை பார்க்கலாம் வாங்க... விஷால்!

விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தை ஏப்ரல் 11-ம் தேதி வெளியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.


 விஷால் தனது சொந்தப் பட நிறுவனம் சார்பில், யுடிவியுடன் இணைந்து தயாரிக்கும் படம் நான் சிகப்பு மனிதன். திரு இயக்க, விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். தள்ளிப் போடத் திட்டமில்லை...


ஏப்ரல் 11-ல் நான் சிகப்பு மனிதன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. கூடவே போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் நடந்து வருகின்றன. படத்தின் இசை வெளியீடு வரும் மார்ச் 13-ம் தேதி நடக்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.


இதற்கிடையில், தேர்தல் அறிவிப்பு காரணமாக படத்தை ஒரு மாதம் தள்ளிப் போட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே வெளியாகத் தயாராக இருந்த சில பெரிய படங்களும் தள்ளிப் போடப்படுவதால், இந்தப் படமும் அதே பாணியில் தள்ளிப் போகும் என்றனர்.


ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் நான் சிகப்பு மனிதன் வெளியாவது உறுதி என நான் சிகப்பு மனிதன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுந்தர்யாஜி.. சென்னைக்கு வர்றேன்.. லுங்கி டான்ஸ் ஆடறேன்!' - ஷாரூக்!

தன் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வகையில் ரஜினியின் பெயரை, படத்தை அல்லது காட்சியை வைப்பது ஷாரூக்கானின் சமீபத்திய வழக்கம். இதை ரஜினிக்கு தான் செலுத்தும் மரியாதை என அவர் கூறினாலும், மற்றவர்கள் அதை பப்ளிசிட்டி என்று கூறி வருகின்றனர்.



ரா ஒன்னில் ரஜினியை ஒரு காட்சியில் இடம் பெற வைத்தவர், அடுத்த படமான சென்னை எக்ஸ்பிரஸில் ரஜினிக்கு மரியாதை என்ற தலைப்பில் லுங்கி டான்ஸ் பாடலை இடம்பெற வைத்தார். அந்தப் பாடலுக்கு நாடு முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்தது.



இந்த நிலையில் ஷாரூக்கானை கோச்சடையான் இசைவெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார் சவுந்தர்யா. தமிழகத்தில் பெரிய வரவேற்புள்ள இந்தி நடிகர்களில் முதலிடம் ஷாரூக்கானுக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.



அதற்கு உடனே பதிலளித்த ஷாரூக்கான், "சவுந்தர்யா ஜி, உங்களுக்காக நிச்சயம் நான் சென்னை வருகிறேன். லுங்கி டான்ஸ் ஆடுகிறேன் ஹாஹா.. அப்பாவிடம் என் அன்பையும் விசாரிப்புகளையும் தெரிவிக்கவும்," என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

வதந்திக்கு ஒரு அளவில்லையா....? என்ன கொடுமையா இது?

சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகராகவும், நாடோடிகள், போராளிகள் போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குநராகவும் நிரூபித்தவர் சமுத்திரகனி. நடிகர், இயக்குநர் என மாறி மாறி பயணிக்கும் சமுத்திரகனியின் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் நிமிர்ந்து நில்.


 ஜெயம் ரவி, அமலாபால், சரத்குமார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று(மார்ச் 7ம் தேதி) ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி சிக்கலால் இப்படம் இன்று வெளியாகவில்லை.


இந்நிலையில், நிமிர்ந்து நில் படம் வெளியாகததால் மனமுடைந்து இயக்குநர் சமுத்திரகனி தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுக்க செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இதையடுத்து அவருக்கு ஏராளமானபேர் போன் செய்துள்ளனர். ஆனால் சமுத்திரகனி எப்பவும் போல் கூலாக பேசியுள்ளார். இதனையடுத்து அவர் இறந்ததாக வந்த செய்தி வதந்தி என்று தெரிந்தது.


இதுப்பற்றி சமுத்திரகனியிடம் போன் மூலம் தினமலர் நிருபர் விசாரித்தபோது அவர் அளித்த பதில், நான் தற்கொலை முயற்சி செய்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானவை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நபர்கள் உங்களைப்போன்று எனக்கு போன் செய்துள்ளனர். அவர்கள் எல்லோரிடத்திலும் நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி வருகிறேன்.


 நிமிர்ந்து நில் படத்தை நான் நல்லபடியாக எடுத்து முடித்துவிட்டேன். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில நிதி சிக்கலால் படம் ரிலீஸாகவில்லை. இதற்காக எல்லாம் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். படத்தின் தலைப்பையே நிமிர்ந்து நில் என்று வைத்துள்ளேன். அப்படியொரு தலைப்பை வைத்துவிட்டு கோழைத்தனமாக நான் அந்த வேலையை செய்ய மாட்டேன். நான் தற்போது எனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார். 

மச்சி...! இது சூர்யாவோட பீலிங்ஸ்...!

சிங்கம்-2 படத்திற்கு பிறகு எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பது என்பது சூர்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது. அதற்கு முன்பே 3 இயக்குனர்களிடம் கதை கேட்டிருநதார்.


அதில் கெளதம்மேனன், லிங்குசாமி இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள. இதில் கெளதம்மேனன் படத்தில் முதலில் நடிக்க தயாரானபோது, அவர் சொன்ன கதையில் சூர்யாவுக்கு திருப்தி ஏற்படவில்லை.



ஏற்கனவே மாற்றான் தோல்வியில் இருந்தவர், மீண்டும் அந்த தோல்வி தன்னை தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக, அடுத்து லிங்குசாமி சொன்ன கதையில் நடிக்க முடிவெடுத்தார்.



இதனால், கெளதம்மேனனுக்கும், சூர்யாவுக்கும் இடையிலான நட்பில் கீறல் விழுந்தது. என்றாலும், கேரியர் முக்கியமாச்சே என்று லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா.



இதற்கிடையே அடுத்தடுத்து அவரை சந்தித்து சில பிரபல டைரக்டர்கள் கதை சொல்லி வருகிறார்களாம். ஆனால், அப்படி அவர் கேட்ட கதைகளில் ஒன்றுகூட தேறவில்லையாம். அதனால், எவ்வளவு வித்தியாசமான கதையாக இருந்தாலும் அதற்கேற்ப முழுசாக என்னை மாற்றிக்கொண்டு என் உழைப்பை நூறு சதகிவிதம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.



ஆனால், நல்ல தரமான கதைகள் கிடைக்கவில்லையே என்று கூறிவரும் சூர்யா, மேலும் பல இயக்குனர்களிடம் கதை கேட்கும் படலத்தை முடுக்கி விட்டுள்ளார்.

மிளகு பாசிப்பருப்பு சூப்!

தேவையானவை:


ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம்

மிளகு – ஒரு டீஸ்பூன்

பிரியாணி இலை – 2

வெங்காயம் – 2

நறுக்கிய கேரட் – கால் கப்                                                          

சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – 1 ஸ்பூன்


செய்முறை:


* கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும்.


* நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.


* கடைசியாக இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.


குறிப்பு:

வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.

உலர் சருமத்திற்கு உகந்த பழங்கள்!

பட்டர் ஃப்ரூட் உலர் சருமத்திற்கு மிகவும் உகந்தது. இது வெளியில் பச்சை நிறமாகவும் உள்ளே வெண்ணெய் போலவும் இருக்கும். இந்த வெண்ணெய் மாதிரி இருக்கும் கூழை எடுத்து முகத்தில் தேய்த்துக் கழுவவும். இந்தப் பழதை உபயோகித்துத்தான் அழகு நிலையங்களில் ஸ்பெஷல் ஃபேஷியல் செய்யப்படுகிறது. இது உலர் சருமத்திற்கு மிகவும் உகந்தது.


பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு இவைகளைக்கூட முகத்தில் தடவ உபயோகிக்கலாம். இவற்றை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். உடனடியாக முகத்திற்குப் போட வேண்டுமென நினைத்தால் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். இவற்றை நன்றாக அரைத்துப் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் ஊறவைக்கவும். 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை ஊற வைத்துக் கழுவலாம்.


ஒரு முட்டையை உடைத்துப் பால் சிறிதளவு, ரோஜா ஆயில், அல்லது லாவண்டர் ஆயில் (கடைகளில் கிடைக்கும்) இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் சேர்த்து முகத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவினால் உலர் சருமத்திற்கான ஊட்டச்சத்து முட்டையின் மூலம் கிடைக்கும். முட்டை உபயோகிக்க முடியாதவர்கள் புரொட்டீன் கலந்த பொடியை உபயோகிக்கலாம்.


லெஸிதின் பவுடர் என்று புரொட்டீன் பவுடர் மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்துப் பால் கலந்து முகத்தில் தடவிக் கழுவினால் வறண்ட சருமம் நார்மலாகும். இதை ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்து வந்தால் இயற்கையிலேயே அழகாகி விடுவீர்கள். இவற்றில் ரசாயனக்கலவை எதுவும் இல்லாததால் துணிந்து பயன்படுத்தலாம். பொதுவாக உலர் சருமம் உடையவர்கள் குளிர்ந்த நீரில், சாதாரண நீரில் முகம் கழுவுதல் நல்லது. முகத்துக்குப் பேக் போட, காய்ச்சிய பாலைப் பயன்படுத்த வேண்டும்.

நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு ?

முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும்.


ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. வெளியிடம் செல்கையில்


1. லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை உபயோகிப்பது.


2. பேருந்திலிருந்து வழக்கமான இறங்கும் இடத்திற்கு முன்பாகவே இறங்கி நடந்து செல்வது.


3. இருந்த இருக்கையிலேயே தொலைபேசியில் தொடர்ந்து பேசுவதை தவிர்த்து அவ்வப்போது நின்ற நிலையில் பேச்சை தொடரலாம்.


4. சக பணியாளர்களை, மதிய உணவிற்கு பின்பு மேற்கொள்ளும் சிறிய உடற்பயிற்சி முறைகளில் கூட்டு சேர்த்து கொள்ளலாம்.


5. தொலைக் காட்சியில் விளம்பர இடைவேளைகளின் போது கை கால்களை நீட்டியோ உட்கார்ந்து எழுந்தோ தசைகளை தளர்வடையச் செய்யலாம்.


6. பணி முடிந்த பிறகு குழந்தைகளுடன் மைதானத்தில் விளையாடலாம்


7. இரவு உணவிற்கு பிறகு தொலை காட்சி பார்ப்பதை தவிர்த்து விட்டு சற்றேனும் குடும்பத்தினருடன் நடை பழகலாம்.

சரும பாதுகாப்பில் இயற்கை எண்ணெயின் பங்களிப்பு!

ஓசோன் மண்டலம் ஓட்டையாகி விட்டதால், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் நேரடிய சருமத்தில் தாக்கம்  செய்து பெரும் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. குறிப்பாக வெயிலின்  தாக்கம் சருமத்தில் அதிகம் படுவதால் சருமத்தின் நிறம், பழுப்பு நிறமாகவோ அல்லது கருப்பு நிறமாகவோ மாறுகின்றது.


இதனால் வெயிலில் சென்றாலே சருமம் பொலிவிழந்து போகக்கூடிய நிலைக்கு ஆளாகுகிறது. எனவே சருமம் நன்கு பொலிவோடு எந்த ஒரு நோயும் இல்லாமல் இருப்பதற்கு சிறந்த்த பராமரிப்பு தேவை. எனவே அந்த பராமரிப்புக்கு சில இயற்கை எண்ணைகள் சிறந்ததாய் அமைகின்றன. இந்த எண்ணெய்களை உபயோகப்படுத்தினால் சருமம் வறட்சியின்றி, நிறம் மாறாமல் பொலிவோடு இருக்கும்.


கடுகு எண்ணெய்


கருமை நிற சருமத்தை போக்க கடுகு என்னை சிறந்ததாக அமையும். காலையில் கடு எண்ணையை வைத்து மசாஜ் செய்து, சூரிய வெளிச்சத்தில் படுத்தால், சூரியனிடமிருந்து வரும் விட்டமின் டி சத்தானது உடம்பில் எளிதில் ஊடுருவி எலும்புகளை வலுவாக்கும்.


சூரியகாந்தி எண்ணெய்


சூரியகாந்திப் பூ சூரியனுடன் ஒரு இணக்கத்தை கொண்டுள்ளது. இத்தகைய பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணையை வைத்து மசாஜ் செய்யும் போது, சருமத்தின் நிறம் மாறாமல், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமலும் இருக்கும். மேலும் இந்த எண்ணெய் சருமத்தில் உள்ள நெகிழ்ச்சி தன்மையை பராமரிக்கிறது.


ஓலிவ எண்ணெய்


இதில் விட்டமின்  ஈ அதிகம் நிறைந்துள்ளது, எனவே இது சரும செதில்களை புதுபிக்கும்.அதே சமயம், சூரியக்கதிர்களால் சருமத்தின் நிறம் பலுப்பாக மாறாமலிருக்க உதவும். ஒலிவ எண்ணெயில் சிறிதளவு அயடின்(உப்பு) சேர்த்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும்.


கோதுமை எண்ணெய்


இது மிகவும் ஆரோக்கியமான எண்ணெய். இதில் வைட்டமின் ஈ, டீ, ஏ போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்தால், சருமம் மேன்மயாவதோடு, சூரியக்கதிர்களால் சருமம் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.

நாளாந்த வாழ்வில் உணவின் முக்கியத்துவம்!

உணவு சாப்பிடுவதை தள்ளிப் போட வேண்டாம். இது உங்கள் பசியை அதிகரிப்பதோடு,தேவையற்ற நேரங்களிலும் உணவு உண்ணத் தூண்டும்.


அந்தந்தப் பருவகாலங்களில் அந்தந்தப் பருவகாலங்களுக்குரிய பழங்களை உண்பது இலாபகரமானதாக அமைவதோடு வித்தியாசமான சுவைகளை அனுபவிக்கக் கூடியதாகவும் இருக்கும்.


காய்கறிகள் சுகாதாரமான உடலைப் பேண உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளை தருகிறது.


ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் வரையிலான நடை / மெது நடை அவசியம்.


ஆராய்ச்சிகள் கூறுகின்றன, நீல நிறம் பசியை அடக்கும் என்று. எனவே உங்களது சாப்பாட்டுத் தட்டு, சாப்பாட்டு மேசை, சாப்பாட்டு மேசைவிரிப்பு போன்றவற்றை வேறு நிறங்களில் வைத்திருப்பதை விடவும் நீல நிறத்தில் பேணுவது ஆரோக்கியமான விடயம் ஆகும்.


உணவு உண்ணும் போது நன்றாக நேரம் எடுத்து, உணவை ரசித்து, ருசித்து, மென்று மெதுவாக உண்ண வேண்டும்.


நார்ச்சத்து மிகஅதிகம் காணப்படுகிற காய்கறி மற்றும் பழ வகைகள் உண்பதால் இரத்த குழாய் சார்ந்த இருதய நோய்களைக் குறைக்கும்.