Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

சிங்கப்பூரில் - "வை ராஜா வை" படக்குழு என்ன செய்கிறது?


"3" படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம், ‘வை ராஜா வை’. இப்படத்தை ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிக்கின்றனர்.


 கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்துவிட்ட ஐஸ்வர்யா, அடுத்ததாக சிங்கப்பூருக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார்.


சிங்கப்பூரில் உள்ள ஏழு நட்சத்திர சொகுசுக்கப்பல் ஒன்றில் சில காட்சிகளையும், ஒரு பாடல் காட்சியையும் படமாக்க இருக்கிறார். இதை முடித்துவிட்டால் கிட்டத்தட்ட முழு படப்பிடிப்பும் முடிந்த மாதிரித்தானாம். அனேகமாக ஒரு வார காலம் அங்கே தங்க இருக்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர்.


படத்தில் இயக்குனர் வசந்த் முதன்முறையாக ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், டேனியல் பாலாஜி சதீஷ், காயத்ரி ரகுராம், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


 இவர்களுடன் டாப்ஸியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது.

0 comments:

Post a Comment