Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரஜினியின் கோச்சடையான்!

ஷங்கர் இயக்கத்தில் நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடித்துள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். உலக அளவில் புகழ்பெற்ற அவதார் பாணியில் மெகா பட்ஜெட்டில் ஹாலிவுட் தொழில் நுட்ப நேர்த்தியுடன் தயாராகியிருக்கும் இப்படத்தை ஏப்ரல் 11-ந்தேதி வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்.


அதையடுத்து, படத்தின் வெள்ளோட்டம் காணும் வகையில், சமீபத்தில் கோச்சடையான் ட்ரெய்லரை வெளியிட்டனர். இதனால் ஏப்ரலில் படம் கண்டிப்பாக வெளிவந்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள். அதோடு, யு டியூப்பில் வெளியிடப்பட்ட அந்த ட்ரெய்லரை இதுவரை 40 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்துள்ளார்களாம்.


இது இதற்கு முன்பு வெளியான விஜய்யின் தலைவா படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட 20 லட்சம் அதிகமாகும். ஆக, 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் ரஜினி படம் என்பதால் கோச்சடையானுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


இதற்கிடையே கோச்சடையானின் ஆடியோ வெளியீடு எப்போது என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. ஆனால், பிப்ரவரி 28-ந்தேதி என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது மார்ச் மாதத்துக்கு தள்ளி வைத்து விட்டனர். இப்படி கோச்சடையான் விவகாரத்தில் அடிக்கடி தேதி மாற்றம ஏற்படுவது ஒன்றும் புதிய விசயமில்லை என்றாலும், ரிலீஸ் தேதி ஏப்ரல் 11-ந்தேதி என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார்கள்.

0 comments:

Post a Comment