Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 17 February 2014

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த நடிகை..?

மணிரத்னம் அடுத்து தெலுங்கு, இந்தியில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இதில் மூன்று பிரபல ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பிறகு ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யா பச்சனை சந்தித்து கதை சொல்லி நடிக்க சம்மதம் வாங்கி விட்டார் மணிரத்னம்.


அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதால் தயக்கமே இல்லாமல் ஓகே சொல்லிவிட்டார். இன்னொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அவரும் ஒகே சொல்லிவிட்டார். அடுத்து மூன்றாவது ஹீரோயினாக சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்க விரும்பினார் மணிரத்னம்.


இதற்காக சோனாக்ஷியின் தந்தையும் மணிரத்தினத்தின் நண்பருமான சத்ருஹன் சின்காவை சந்தித்து கதை சொல்லி கால்ஷீட் கேட்டிருக்கிறார். கதையை கேட்டு ஒப்புக் கொண்ட சத்ருஹன் சின்ஹா இப்போது சோனாக்ஷியிடம் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்து விட்டார்.


இதுகுறித்து சத்ருகன் சின்ஹா கூறியிருப்பதாவது: "சோனாக்ஷிக்கு கதையும், கதாபாத்திரமும் பிடித்திருக்கிறது. ஆனால் மணி கேட்ட தேதிகள் ஏற்கெனவே வேறொரு படத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரால் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிற்காலத்தில் அவர் மணியின் இயக்கத்தில் நிச்சயம் நடிப்பார்" என்று கூறியிருக்கிறார்.


சமீபகாலமாக மணிரத்தினத்தின் படங்கள் தோல்வி அடைந்து வருவதாலும், அவர் படத்துக்கு நீண்ட நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதாலும் சோனாக்ஷி ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment