தமிழில் பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். திருட்டுப்பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக மும்பை சென்றவர் அதன் பிறகு சென்னை திரும்பவே இல்லை. அங்கேயே செட்டிலாகிவிட்டார். தென்னிந்தியாவில் ஹிட்டாகும் படங்களை ரீமேக் உரிமையை வாங்கி மற்ற மொழிகளில் தயாரிப்பதுதான் இப்போது அவரின் முக்கிய வேலை.
மலையாளத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்த ஏபிசிடி படத்தை தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார். தமிழில் விமல், ஓவியா நடித்த களவாணி படத்தை மராட்டிய மொழியில் ரீமேக் செய்கிறார். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கிடையில் த்ரிஷியத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெறவும் முயற்சி செய்து வருகிறார்.
"தென்னிந்தியாபோல வட இந்தியாவிலும் காமெடி படங்களுக்கு மவுசு இருக்கிறது. அதனால் காமெடி படங்களை வட இந்திய மொழியில் ரீமேக் செய்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில், அமிதாப்பை நடிக்க வைக்க பேசி வருகிறேன். இந்த ரீமேக் படங்கள் தவிர கிங் ஜோ என்ற நேரடி இந்திப் படத்தை இயக்குகிறேன். அதில் ஒரு பெரிய இந்தி நடிகர் நடிக்கிறார், ரீமேக் படங்களை இந்த ஆண்டு முடித்து விட்டு கிங் ஜோவை அடுத்த ஆண்டு வெளியிடுகிறேன்" என்கிறார் சுசி.கணேசன்.

0 comments:
Post a Comment