Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

பாண்டியராஜன் அசத்தப்போகும் வித்தியாசமான வேடம்!

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரிக்கும் படம் “ஆய்வுக்கூடம்”.

புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சத்யஸ்ரீ அறிமுகமாகிறார். படத்தின் மிக முக்கிய வேடமாக விஞ்ஞானி மார்ட்டின் லியோ என்ற ஆராய்ச்சியாளர் வேடத்தில் ஆர்.பாண்டியராஜன் நடிக்கிறார். மற்றும் ப்ரீத்தி, சொந்தர், பிரபுராஜ், ரியாஸ், பவுனிஜெய்சன், நெல்லைசிவா, செம்புலி ஜெகன், ராஜராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எஸ்.மோகன் (இவர் ஒளிப்பதிவாளர் வி.செல்வாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்). அனந்தபுரத்து வீடு படத்திற்கு இசையமைத்த ரமேஷ்கிருஷ்ணா இசையமைக்கிறார். கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் அன்பரசன்.(இவர் திரைப்பட கல்லூரி மாணவர்)

படம் பற்றி இயக்குனர்….

மருத்துவ விஞ்ஞானியாக பாண்டியராஜன் மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் நன்மைகளை கூறி அரசிடம் அனுமதி கேட்கிறார்.

ஆனால் அரசு குழு அதற்கு அனுமதி தராததால் திருட்டுத்தனமாக இரு மனிதர்களை பிடித்து அவர்களது மூளையை அவர்களுக்கு தெரியாமல் மாற்றி விடுகிறார்.

மூளை மாற்றப்பட்ட அவர்கள் இருவரும் எப்படி நடந்து கொள்கிறார்கள்..இது தெரிந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? மூளை மாற்று திட்டத்தால் விஞ்ஞானி வெற்றி பெற்றாரா என்பதே கதை.

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக ஆய்வுக்கூடம் தயாராகிறது என்றார்.

0 comments:

Post a Comment