Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

தன்னுடைய பழைய பெயரை கேட்டாலே எரிந்துவிழும் ஏ.ஆர்.ரகுமான் !

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். "ஸ்லம் டாக் மில்லினர்" என்ற இந்தி படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

 அவரது புகழை குறிக்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற இசை சாதனையாளர்கள் மொசார்த், பீதோவன் ஆகியோர்களின் பெயரை ரகுமான் பெயருடன் இணைத்து மொசார்த் ஆப் மெட்ராஸ், பீதோவன் ஆப் பாலிவுட் என வர்ணிக்கிறார்கள். ஆனால் அந்த பட்டங்கள் பிடிக்கவில்லை என்று ரகுமான் கூறி இருக்கிறார்.


இது பற்றி அவர் தனது இணைய தள பக்கத்தில் கூறி இருப்பதாவது: மொசார்த், பீதோவன் போன்றவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள் அவர்களுடன் என்னை ஒப்பிடாதீர்கள். அது எனக்கு வருத்தம் தருகிறது. இசை புயல் என்ற அடைமொழியே எனக்கு போதும். அப்படி அழைப்பதையே சந்தோஷமாக எண்ணுகிறேன்.


எனது பழைய பெயர் திலீப்குமார். அந்த பெயரில் வாழ்ந்தபோது வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் பெற்றேன். இதையடுத்து தான் ஏ.ஆர்.ரகுமான் ஆனேன். பழைய கசப்பான அனுபவங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர விரும்பவில்லை. அதனால் திலீப்குமார் என்றும் என்னை குறிப்பிடுவதும் பிடிக்கவில்லை என்றார்.

0 comments:

Post a Comment