பாட்டு எழுதுவது கஷ்டமே இல்லை - தனுஷ் விளக்கம்!
சொந்தத் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் பாடல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அனிருத்-தனுஷ் கூட்டணியில் உருவான பாடல்கள் எல்லாமே மெகாவெற்றி என்பதால், வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் பாடல்களும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரிலீஸாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவிட்டன.
இத்திரைப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து சமீபத்தில் நடந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது பேசிய தனுஷ் “பாட்டு எழுதுவதற்காக நாங்கள் பெரிய ரிஸ்க் எல்லாம் எடுப்பதில்லை.
மொத்தமாக இரண்டு மணிநேரத்தில் பாடல் எழுதி இசையமைத்துவிடுவோம். ரெகார்டிங் பணி மட்டும் தான் நேரம் எடுத்துக்கொள்ளும்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அம்மாவைப் பற்றிய பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பாடல் எழுதுவதிலேயே சுலபமானது அம்மவைப் பற்றி எழுதுவது தான். எல்லோருக்கும் அம்மாவை பிடிக்கும். அம்மவைப் பற்றி புகழ்ந்து எழுதிக்கொண்டே இருக்கலாம்.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தை நான் தயாரிப்பதற்கு காரணம், இது எனது 25-வது திரைப்படம் என்பது தான். என் 25-வது திரைப்படம் என் பேனரில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment