பாலா படத்தில் விஷாலின் சிபாரிசு நடிகை!
மனிதர்களின் பசுமையான வாழ்க்கையை மட்டும் வெள்ளித்திரையில் பூசி ரசிகர்களை மகிழ்விக்காமல், அவர்களது கருப்பு பக்கங்களையும் திரையில் அழுத்தமாய் பதிவுசெய்து வரும் பாலா இம்முறை கையிலெடுத்திருப்பது கரகாட்டக் கலைஞர்கள் சம்மந்தமாக ஒரு கதையைத்தான்.
பாலாவின் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களைப் பார்த்து முதலில் ‘பாவம் அந்த பொண்ணு’ என்று தான் சொல்வார்கள்(ஆனால் படம் வெளியானபிறகு அந்த ஹீரோயினுக்கு கிடைக்கும் பாராட்டும் புகழும் தெரியாது).
தற்போது அந்த லிஸ்டில் சேர்ந்திருப்பவர் நடிகை வரலக்ஷ்மி. கரகாட்ட நடனமாடும் கலைஞர்களுக்கு பொதுவாகவே தொப்பை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் தொப்பையுடன் இருக்கும் நடிகையை தேடிவந்திருக்கிறார் இயக்குனர் பாலா. நடிகைகள் பூர்ணா, ஸ்ரீரம்யா உட்பட பல நடிகைகளை அழைத்துப் பார்த்த பாலா அவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு ஒத்துப்போகாததால் ரிஜக்ட் செய்துவிட்டாராம்.
பாலாவின் தேடுதல் வேட்டையைப் பற்றி அறிந்த நடிகர் விஷால், தன்னுடன் மதகஜராஜா படத்தில் நடித்திருக்கும் வரலக்ஷ்மியை(சரத்குமாரின் மகளே தான்) பாலாவிடம் பரிந்துரை செய்திருக்கிறார். வரலக்ஷ்மியை அழைத்து தன் திரைப்பட கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பார்த்த பாலா அவரை ஓகே செய்துவிட்டாராம். எனவே பாலா இயக்கத்தில் வரலக்ஷ்மி ‘நடிக்க’ப்போகிறார் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
0 comments:
Post a Comment