Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

அட்வான்சைத் திருப்பித் தரமறுக்க்கும் காஜல் அகர்வால்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் நண்பேன்டா திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் காஜல் அகர்வால்.
அதன்பிறகே நயன்தாரா தேர்வு செய்யப்பட்டார்.


நண்பேன்டா படத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட காஜல் அகர்வாலுக்கு உதயநிதி ஸ்டாலின் முன்பணம் கொடுத்திருப்பதாகவும், அப்பணத்தை காஜல் அகர்வால் இன்னும் திருப்பித் தரவில்லை என்றும் கிசுகிசுக்கள்
பரவிவருகின்றன.


இதுபற்றிய மற்றொரு கிசுகிசுவும் பரவிவருகிறது. உதயநிதி தயாரிக்கவுள்ள அடுத்தபடத்தில் காஜல் அகர்வால் நடிப்பார் என்றும் அதனாலேயே அவர்
அட்வான்ஸ் பணத்தினைத் திருப்பித்தரவில்லை என்றும் பேசப்படுகிறது.


உதயநிதி நடித்த இது கதிர்வேலன்காதல் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் உதயநிதி ஆகிய இருவருக்குமான கெமிஸ்ட்ரி ரொம்ப சூப்பரா
இருந்துச்சுன்னும்,அதனாலதான் நண்பேன்டா படத்துக்கும் நயன்தாராவே ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டதாகவும் ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

0 comments:

Post a Comment