Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

முகத்திற்கு அழகைத் தருவது கண்கள் என்றால், அந்த கண்களுக்கு அழகைத் தருவது புருவங்கள். அத்தகைய புருவங்கள் சிலருக்கு மிகவும் குறைவாக இருக்கும். சொல்லப்போனால் சிலருக்கு புருவம் இருக்கும் இடமே தெரியாது. அதனால் அவர்கள் வெளியே செல்லும் போது புருவங்களுக்கு பென்சிலை வைத்து வரைந்து கொண்டு செல்லும் நிலையில் உள்ளனர். பெண்களுக்கு கண்கள் அழகாக இருந்தால், அவர்கள் மிகவும் அழகாக தெரிவார்கள். ஆனால் அந்த கண்களை நன்கு எடுத்துக் காட்டுவது புருவங்கள் தான். கண்கள் எப்படி பேசுமோ, அப்படி தான் புருவங்களும் நன்கு பேசும்.

அதிலும் ஒரு பெண்ணை வர்ணிக்க வேண்டுமென்றால் முதலில் கண்கள், புருவங்கள் என்று தான் ஆரம்பிப்பார்கள் கவிஞர்கள். அத்தகைய புருவங்கள் நன்கு இல்லையென்றால், அழகான பெண் கூட அசிங்கமாக, ஏதோ ஒரு குறை இருப்பது போல் தெரிவாள். மேலும் இந்த புருவங்கள் சரியாக வளராமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில தான் உடலில் சரியான ஹார்மோன் சுரப்பி சுரக்காமல் இருப்பது, போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் அளவுக்கு அதிகமாக அழகு நிலையங்களுக்குச் சென்று புருவத்தை வடிவமைத்தல் காரணமாக, அந்த இடத்தில் முடி வளர்ச்சி தடைபடுகிறது.

ஆகவே அத்தகைய புருவத்தில் உள்ள வளர்ச்சியை இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி வளர்ப்பது என்று பார்ப்போமா!!!

ஆமணக்கெண்ணெய்

ஆமணக்கெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமான அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த எண்ணெய். இதற்கு இந்த எண்ணெயை புருவத்தில் தடவி, 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் அரை மணிநேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில், கிளின்சரைப் பயன்படுத்தி கழுவிட வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், புருவம் நன்கு வளரும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

புருவம் குறைவாக இருப்பவர்கள், எலுமிச்சையின் தோலை தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுத்து, மறுநாள் காலையில் கழுவிட வேண்டும். சிலருக்கு எலுமிச்சையினால் எரிச்சல் ஏற்பட்டால், அதனை காலையில் சிறிது நேரம் செய்தால் போதுமானது. முக்கியமாக இதனை செய்யும் 2 மணிநேரத்திற்கு முன் வெயிலானது சருமத்தில் படக்கூடாது.

கற்றாழை

புருவம் மிகவும் மெல்லியதாக இருந்தால், அப்போது கற்றாழையின் ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், புருவத்தில் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் சருமத்தில் ஏதேனும் புண் இருந்தாலும் சரியாகிவிடும்.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள சல்பர் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, வேகமாக வளரச் செய்யும். ஆகவே வெங்காயச் சாற்றை காட்டனில் நனைத்து தடவிக் கொள்ள வேண்டும். முக்கியமாக இதனை தடவியதும் கழுவிடக் கூடாது. கழுவாமல் இருந்தால் தான், இதன் முழு பயனை அடைய முடியும்.

வெந்தயம்

வெந்தயத்தை நன்கு அரைத்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு, மறுநாள் காலையில் எழுந்து கழுவிட வேண்டும். வேண்டுமென்றால் இதனுடன் சிறிது பாதாம் எண்ணெயையும் சேர்த்து செய்யலாம். இதனால் புருவம் நன்கு எண்ணெய் பசையோடு, சற்று அடர்த்தியாக இருப்பது போல் தோன்றும்.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன. ஆகவே இரவில் தூங்குவதற்கு முன்பு, பாலை புருவத்தில் தடவி படுக்க வேண்டும். இதனால் பாலில் உள்ள இயற்கைப் பொருள் முடியின் வேர்களுக்கு ஒரு நல்ல ஈரப்பசையைத் தந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

0 comments:

Post a Comment