Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

வைபவ்வுக்கு வாழ்வு கொடுத்த வெங்கட்பிரபு!

சென்னை- 28 படம் மூலம் இயக்குனரானவர் வெங்கட்பிரபு. எந்த இயக்குனரிடமும் உதவியாளராக பணியாற்றாமல், உன்னை சரணடைந்தேன் உள்பட சில படங்களில் நடித்த அனுபவத்தைக்கொண்டு அந்த படத்தை இயக்கினார் அவர். அப்போது படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க மங்காத்தா உள்பட சில படஙக்ளில் நடித்த வைபவ்வைத்தான் அழைத்தாராம் வெங்கட்பிரபு.


ஆனால், அவரோ, தனது தந்தை தெலுங்கில் பெரிய இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு அவர் படத்தில் தான் அறிமுகமாகப்போவதாக சென்று விட்டாராம். அப்படி அவர் மறுத்ததால்தான் அப்படத்திறகு ஜெய்யை நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. ஆனால், அந்த படமே ஜெய்க்கு பெரிய என்ட்ரியாகி விட்டது.


அதன் பிறகுதான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்க்கு சான்ஸ் கொடுத்தார் சசிகுமார். ஆக, இப்போது வைபவ்வை விட தமிழில் பெரிய நடிகராகியிருக்கிறார் ஜெய். இதை சமீபத்தில் வைபவ் நடித்து வெளிவரவிருக்கும் டமால் டுமீல் படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்த வெங்கட்பிரபு. இந்த படத்தில்தான் ஒரு முழுநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் வைபவ்.


ஆனால், என் படத்தில் நடித்திருந்தால் அவர் எப்போதோ தமிழில் பெரிய நடிகராகியிருப்பார். என்னதான் வாய்ப்புகள் அமைந்தாலும் நேரம் கைகூடும்போதுதான் எதுவும் நடக்கும் என்பது இதிலிருநது தெரிகிறது என்று சொன்ன வெங்கட்பிரபு, இப்போதும் எனது மங்காத்தா படத்தில் அவருக்கு நான் வெயிட்டான வேடம் கொடுத்ததைப் பார்த்துதான் இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவரை கமிட் பண்ணியிருக்கிறார்கள். ஆக, இப்போதும் நானே வைபவ் ஹீரோவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறேன் என்கிறார்.

0 comments:

Post a Comment