Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

20கிலோ எடையை அதிகரிக்க ஒன்றரை கோடி செலவு!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்டமான படம் ‘பாகுபலி’. பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.


‘நான் ஈ’ படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, கோபிசந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில் இப்போது தமன்னாவும் அவந்திகா கேரக்டரில் நடிக்கப் போகிறார்.


இரு வேடங்களில் பிரபாஸ் நடிக்கிறார். பாகுபலி கேரக்டருக்கு அனுஷ்காவும், இன்னொரு கேரக்டருக்கு தமன்னாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதில் ஒரு கேரக்டருக்காகத்தான் 20 கிலோ எடையை கூட்டியிருக்கிறார் பிரபாஸ். இதற்காக அவர் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். WWF வீரர்கள் பயிற்சிபெறும் ஜிம் உபகரணங்களை அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வந்து தனது வீட்டில் இறக்கி இருக்கிறார். அதோடு நில்லாமல் அந்த உபகரணங்களை எல்லாம் வைத்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஜிம் ஒன்றை ஸ்பெஷலாக நிர்மாணித்திருக்கிறார்.


மகேஷ்பாபு, ரித்திக் ரோஷன் போன்று வெளிநாட்டு பயிற்சியாளரை வைத்துக்கொள்ளாமல் உள்ளூர் பயிற்சியாளரை கொண்டே எடைகூட்டும் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் பிரபாஸ். மேலும் உணவு வகைகளிலும் கடுமையான மாற்றம் செய்திருக்கிறார். ஒரு தெலுங்கு நடிகர் 20கிலோ வரை தனது உடல் எடையை கூட்டியிருக்கிறார் என்றால் அது பிரபாஸ் தான் என்று ஆச்சர்யப்படுகிறார்கள் தெலுங்கு திரையுலகினர். 3டி டெக்னிக்கில் மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார்கள். 3டி வேலைகளை முடிப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால், 2015ல் தான் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment