நான் செய்த துரோகம்... - சீமான் வருத்தம்!
சமீபத்தில் நடந்த ‘சினேகாவின் காதலர்கள்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சீமான் ‘நான் தயாரிப்பாளர் T.சிவாவிற்கு துரோகம் செய்துவிட்டேன்’ என்று கூறி நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.
தொடர்ந்து அதுபற்றி விளக்கிப் பேசிய சீமான் “நான் ‘அம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் தயாரிப்பில் ‘வாழ்த்துக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினேன். அந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இதனால் T.சிவாவிற்கு மிகப்பெரிய பணநஷ்டம் ஏற்பட்டது. ஆனால், வாழ்த்துக்கள் திரைப்படம் ஏன் தோல்வியுற்றது என்று யோசித்துப்பார்க்கும்போது தான்...
அந்த திரைப்படத்தின் வசனங்கள் முழுவதும் தமிழ் மொழியிலேயே இருந்தது தான் காரணம் என்று. பலர் என்னை வேண்டிக் கேட்டுக்கொண்ட போதும் பிடிவாதமாக ஆங்கிலம் கலக்காமல் எல்லா வசனங்களும் முழுக்க முழுக்க தமிழில் அமைத்தேன். தமிழ்நாட்டில் தமிழில் படம் எடுத்தால் தோல்வியுறுவது வறுத்தப்படக்கூடிய விஷயம்” என்று கூறினார்.
0 comments:
Post a Comment